ஜெய்க்கு ரிச்சா 'சூட்' ஆகலையாம்!

Jai Wants Heroine

இயக்குநர் கவுதம் மேனன் தயாரிக்கும் "தமிழ்செல்வனும், தனியார் அஞ்சலும்!" திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெய் நடித்து வருகிறார். இது தெலுங்கில் "கூரியர் பாய் கல்யாண்" என்ற பெயரில் தயாராகிவருகிறது.

தமிழ் படத்தில் ஜெய்க்கு ஏற்ற ஜோடி கிடைக்கவில்லையாம். முதலில் அபிநயாவிடம் பேசியிருக்கின்றனர் ஆனால் அவரால் கவுதம் கேட்ட தேதியில் நடிக்க முடியவில்லை. ஒஸ்தி நாயகி ரிச்சாவை வைத்து போட்டோ செஷன் எடுத்துள்ளனர். ஆனால் நாயகனை விட நாயகி கொஞ்சம் மெச்சூரிட்டியாக தெரிந்ததால் வேண்டாம் என்று கவுதம் ஒதுக்கிவிட்டார். அதனால், இப்போது, ஜெய்க்கு பொருத்தமான வேறு நடிகையை தேடி வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஐந்து நாட்கள் மட்டும் ஐதராபாத்தில் நடந்தது. திடீரென மழை கொட்டியதால், மூன்று நாட்கள், சில காட்சிகளை மட்டும் எடுத்துவிட்டு, சென்னை திரும்பிவிட்டனராம்.

இந்தப் படம் நிச்சயம் தன்னை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று படத்தின் நாயகன் ஜெய் கூறிவருகிறார். மேலும், எப்படியெல்லாம் நடிக்க வேண்டும்; எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்ய வேண்டும் என, படம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும், கவுதம்மேனன் ஆலோசனை சொல்கிறார் என்றார் ஜெய்.

அதெல்லாம் சரிதான் வேட்டையாடு விளையாடு, நடுநிசி நாய்கள், விண்ணைத்தாண்டி வருவாயா? நீதானே என் பொன் வசந்தம், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் என்று எல்லமே வித்தியாசமான நீண்ட தலைப்பாக இருக்கிறதே படத்திற்கு தலைப்பு வைப்பதற்கு என்றே தனியாக ரூம் போட்டு யோசிப்பாரோ கவுதம் மேனன்.

பேசாம, ஜெய்க்கு ஜோடியாக நடிக்க அஞ்சலி கால்ஷீட் கிடைக்குமா என்று கேட்டுப்பாக்கலாமே கவுதம்?

 

முழு நீளக் கவர்ச்சிக்கு மாறுகிறார் நந்தகி என்கிற மனுமிகா!

Nandagi Becomes Manumika Don Glamour Roles Too   

நடிகை நந்தகி தனது பெயரை மனுமிகா என்று மாற்றிக்கொண்டு விட்டார். இனிமேல் கவர்ச்சிகரமாகவும் நடிக்கப் போவதாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார்.

முதலில் நந்தகியின் பெயரே கூட ஒரிஜினல் கிடையாது. மாறாக மனோசித்ராதான் அவரது பூர்வீகப் பெயர். அந்தப் பெயரை நந்தகி என்று மாற்றிக் கொண்டு அவள் பெயர் தமிழரசி மூலம் தமிழுக்கு வந்தார்.

அப்படத்திற்குப் பின்னர் நந்தகிக்கு தமிழில் பெரிய அளவில் பிரேக் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று யோசித்துப் பார்த்த அவருக்கு பெயர் மாற்ற யோசனை பிறந்தது. இதையடுத்து தற்போது தனது பெயரை மனுமிகா என்று மாற்றி விட்டார்.

மேலும், கவர்ச்சி காட்டவும் ரெடி என்றும் அறிக்கை விட்டு விட்டார். இதனால் அவரைத் தேடி பட வாய்ப்புகள் வரும் அறிகுறிகள் தெரிகிறதாம். தற்போது விமலுடன் இணைந்து கூத்து என்ற படத்தில் நடித்து வரும் நந்தகி இதிலும் கூட கிளாமரான சில சீன்களில் நடித்துள்ளாராம்.

இனிமேலும் கூட அறுவெறுப்பு இல்லாத கவர்ச்சி காட்டப் போவதாகவும் அறிவித்துள்ள மனுமிகா, தானே கதைகளைக் கேட்கவும் ஆரம்பித்துள்ளாராம்.

 

600 பேரில் நான் தேர்ந்தெடுந்த நாயகி அதிதி : இயக்குநர் வெங்கி

Konjam Koffee Konjam Kaadhal   

கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் அதிதி டெல்லி மாடல் அழகியாம். இந்த திரைப்படத்திற்காக 600 பேரை நடிக்க வைத்து அதில் சிறப்பாக நடித்த அதிதியை தேர்வு செய்திருக்கிறாராம் இயக்குநர் வெங்கி.

‘கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்' படம் ஐன்ஸ்டீன் தத்துவத்தை மையமாக வைத்து உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் வெங்கி கூறியதாவது: ‘பம்பாய்' படத்தில் அரவிந்த்சாமியின் மகன்களாக வரும் இரண்டு சிறுவர்களில் ஒருவரான ஹிருதய் ராஜ் இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். டெல்லி மாடல் அழகி அதிதி செங்கப்பா ஹீரோயின். இப்படத்துக்காக 600 பேரை ஆடிசன் செய்ததில் தேர்வானவர்தான் அதித்தி.

அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் பல்வேறு தத்துவங்களையும் கூறியிருக்கிறார். வாழ்க்கையில் எதெல்லாம் நடக்கிறதோ அவை முன்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கருத்துகுறித்து பல்வேறு சர்ச்சைகள் இன்னும் நிலவுகிறது.

இந்த கருத்தை மையமாக வைத்துதான் கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் படத்தின் ஸ்கிரிப்ட் உருவாக்கி இருக்கிறேன். இதில் காதலையும் சேர்த்திருக்கிறேன். வழக்கமாக தமிழில் முக்கோண காதல் கதை, ஆக்ஷன் கதை என்றுதான் படங்கள் வருகிறது. அதுபோல் இல்லாமல் இது வித்தியாசமான அனுபவம் தரும் படமாக இருக்கும். இதில் வரும் சம்பவங்கள் நிஜவாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டது என்றார் வெங்கி.

 

ராஜஸ்தானில் சுட சுட படமாக உள்ள ஆதிபகவன் பைட்

Aadhi Bhagavan Rajasthan   

அமீரின் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஆதிபகவன் திரைப்படத்தின் சண்டை காட்சிக்கள் ராஜஸ்தானில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயம்ரவி, நீது சந்திரா நடிக்கும் திரைப்படம் ஆதி பகவன். படத்தில் படப்பிடிப்புகள் இறுதிகட்டம் கோவாவில் நடைபெற்றன. தற்போது சண்டைகாட்சிகள் ராஜஸ்தானில் சுடச்சுட படமாக்கப்பட உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி திரைப்படத்தின் இயக்குநர் அமீர் கூறியதாவது, கோவாவில் கடைசியாக நடந்த ஆதிபகவன் ஷூட்டிங்கே இறுதிகட்டமாக நடந்து முடிவதாக இருந்தது. ஆனால் படத்தில் சண்டை காட்சி ஒன்று இடம்பெறுவது கதைக்கு அவசியம் என கருதினேன். இதற்கிடையே ஹீரோயின் நீது சந்திரா ஏற்கனவே கிரேக்க படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்ததால் அதில் நடிக்க சைப்ரஸ் சென்றுவிட்டார்.

மேலும் ஜெயம் ரவியும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் ஷூட்டிங்கில் நடிக்க சென்றார். இதனால் இருவரது கால்ஷீட் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. வரும் ஜூலை மாதம் 6ம் தேதி ஜெய்சல்மர் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரு சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் ஷூட்டிங் முடிகிறது. ஏற்கனவே பட ரிலீஸுக்கான மற்ற பணிகள் நடந்து வருகிறது. விரைவில் படம் ரிலீஸ் ஆகும். இவ்வாறு அமீர் கூறினார்.

 

நட்சத்திர கொண்டாட்டம் .. சன் டிவி VS விஜய் டிவி

Suntv S Retelecast War Against Vijay Tv

தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போக்கினை சன் தொலைக்காட்சி எப்பொழுதுதான் மாற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை. தனது சேனலைத் தவிர பிற சேனல்களை மக்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பகீரதப் பிரயத்தனம் செய்து அரதப் பழசாக இருந்தாலும் அதேபோன்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி மக்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொள்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக ஜூன் 29,30 தேதிகளில் விஜய் விருது வழங்கும் விழா நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. நட்சத்திரப் பட்டாளங்கள் குவிந்து கிடந்த இந்த நிகழ்ச்சிக்கு டி ஆர் பி கிடைத்து விடக்கூடாதே என்ற போட்டி மனப்பான்மையில் சன் குழுமத் தொலைக்காட்சிகளில் ஒன்றான கே டிவியில் இயக்குநர் சங்கத்தின் 40 ம் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் ஒளிபரப்பப்பட்டன.

இந்த நிகழ்ச்சி ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் வேறொரு நாளில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த அரதப் பழசான இந்த நிகழ்ச்சியை மறு ஒளிபரப்பு செய்ததன் மூலம் ரசிகர்களின் வெறுப்பினை சம்பாதித்துக் கொண்டது சன் குழுமம்.

கலர்ஃபுல் நடனம், அட்டகாசமான பாடல்கள் என களை கட்டிய விஜய் டிவி விருது நிகழ்ச்சிக்கே ரசிகர்களின் பேராதரவு கிடைக்கும் என்று தெரிந்தும் டி 40 நிகழ்ச்சியை கேடிவியில் ஒளிபரப்ப காரணம் என்ன என்பதுதான் பெரும்பாலோனோர் கேள்வியாகும்.

வெள்ளிக்கிழமை சன் டிவியில் சீரியலுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மாற்ற முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கேடிவியில் ஒளிபரப்பானது டி 40 நிகழ்ச்சி என்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனத்தினர். எது எப்படியோ ஆளே இல்லாத டீ கடைக்கு எதுக்குடா டீ ஆத்துறீங்க? என்று விவேக் கேட்பதைப் போல மக்களே பார்க்க விரும்பாத ஒரு நிகழ்ச்சியை ஏன் மறுபடி மறுபடி சன் குழுமத்தில் ஒளிபரப்பு செய்கின்றனர்? என்பதே தொலைக்காட்சி ரசிகர்களின் கேள்வியாகும்.

 

குழந்தையைக் கவனித்துக் கொண்டே சினிமாவில் நடிக்கும் லாரா தத்தா!

Lara Dutta Set Make Comeback K Wood   

தமிழ், இந்தி, தெலுங்கு என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகும் டேவிட் திரைப்படத்தில் நடிக்க லாராதத்தா ஒப்பந்தமாகியுள்ளார். 13 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நடிக்கும் படம் என்பதால் குழந்தையை கவனித்துக் கொண்டே ஓய்வு நேரத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று கூறியுள்ளாராம்.

தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் உருவாகும் ‘டேவிட்' என்ற படத்தை பிஜாய் நம்பியார் இயக்குகிறார். விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்க லாரா தத்தாவிடம் கால்ஷீட் கேட்டார் இயக்குனர்.

கடந்த ஜனவரி மாதம்தான் லாரா தத்தாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை அதிகமாக இருப்பதால் பட வாய்ப்பை ஏற்க தயங்கினார். ‘குழந்தையை கவனித்த நேரம் போக மீதி நேரத்தில் கால்ஷீட் தருகிறேன். இதை ஏற்றுக்கொண்டால் நடிக்க தயார்' என்று லாரா கூறினார். அதை இயக்குனர் ஏற்றுக்கொண்டார். பாலிவுட் ஹீரோயின் லாரா தத்தா ‘அரசாட்சி' என்ற படத்தில் தமிழில் நடித்தார். 13 வருடத்துக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் பிஜாய் நம்பியார், இது லாராவுக்கு சிறப்பான வேடமாக அமையும். சமீபத்தில் அவரை சந்தித்து இதுகுறித்து பேசினேன். குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்றேன். அப்போது குழந்தையை கவனித்துக்கொள்ளும் வேலை இருப்பதால் நடிக்க தயங்கினார். பின்னர் அவர் ஓய்வு நேரத்தில் நடித்துக்கொடுக்க தயார் என்றார். அதை ஏற்றுக்கொண்டேன்.

நாசர், ரோகிணி ஹட்டாங்காடி, தபு, இஷா ஷர்வானி உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் என்றார் இயக்குநர்.

 

என் பையன் நிச்சயம் நடிகனாக வருவான்: நடிகர் விக்ரம்

Vikram Gears Up Action

விஜய் உடன் தாண்டவம், ஷங்கரின் ‘ஐ', இந்தியில் டேவிட் என மீண்டும் பிஸியாகிவிட்டார் விக்ரம். லண்டனின் தாண்டவம் சூட்டிங் முடிந்து களைப்பில் இருந்த விக்ரமிடம் பேசிய போதுதான் சினிமாவைத் தவிர வேறு எதைப்பற்றியும் அவருக்கு ஆர்வம் இல்லை என்பது தெரிந்தது.

நான் சினிமாவிற்குள் வரும் போது வசந்தம் என்னை வரவேற்கலை. சினிமா உலகின் போட்டி ரேஸில் என்றைக்கும் நான் இருந்ததில்லை. ஏனெனில் ஹிட் என்பதை விட திறமைதான் காலத்திற்கு அப்புறம் நிற்கும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது. நான் நடிக்க வந்தப்ப முதல் வரிசையும் இல்லாம கடைசி வரிசையும் இல்லாம இருந்தேன்.

நானே கையை, காலை ஊன்றி எழுந்திருச்சி நடந்தேன். ஆனால் என் பையனுக்கு அந்த கஷ்டம் இருக்காது. அவனுக்கு என்ன வேணுமோ அந்த சுதந்திரம் இருக்கும். என் பையன் துருவ் என்னை மாதிரியே இருக்கான்னு சொல்றாங்க. அவன் இயக்குநராகவோ, நடிகராகவோ நிச்சயம் வருவான்னு தோணுது.

இப்போ இருக்கிற ஹீரோக்களில் ஆர்யா, ஜீவா, சிம்பு, தனுஷ், கார்த்தி என அடுத்த செட் தயாராகிட்டாங்க. எனக்கு கார்த்தியோட மேனரிஸம் பிடிக்கும். நடிப்பு, சிரிப்பு எல்லாமே புதுசா இருக்கும். என்னைக் கேட்டா அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்னு சொல்லுவேன்.

தெய்வத்திருமகள் டீம் அப்படியே தாண்டவம்ல வர்றோம். அமலாவுக்கு பதிலா இதில எமி ஜாக்சன். படம் ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அந்நியன் படத்துக்கு அப்புறம் ஷங்கரோட ஐ படத்துல இணையிறேன். அநேகமாக தலைப்பு மாறினாலும் மாறலாம். கதையை கேட்ட உடனே ஒரு எபிக் மாதிரி இருக்குன்னு ரஹ்மான் சொல்லியிருக்கார்.

அந்நியன் படத்தை விட பத்து மடங்கு அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். இந்தியில டேவிட் படத்துல எனக்கு மீனவன் கதாபாத்திரம். ஒரு ஹீரோ எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அப்படி எல்லாம் இருப்பேன். மணிசார், ஷங்கர், பாலா இவங்ககிட்ட எவ்வளவு படங்கள்னாலும் நடிக்கலாம்.

எனக்கு டிவியை விட சினிமாதான் செட் ஆகும். அதனாலதான் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை நிதானமா யோசிச்சு வேண்டாம்னு சொல்லிட்டேன். டிவியில தினமும் நம்ம முகம் வரும் அதனால் மக்கள் நாளைக்கு பாத்துக்கலாம்னு போயிடுவாங்க. ஆனா சினிமா 6 மாசத்துக்கு அப்புறம்தான் வரும் அதனால் மக்கள் ஆர்வமா நான் நடிச்ச படத்தை பார்க்க வருவாங்க. என் நண்பர்களும் டிவி எனக்கு வேண்டாம்னு சொன்னாங்க அதான் அவங்க சொன்னதை கேட்டுக்கிட்டேன் என்று சந்தோசமாய் கூறி விடை பெற்றார் விக்ரம்.