கிசு கிசு - ஏமாற்றும் கும்பல் ஒதுங்கும் ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்லகாலம் பொறக்குது...
நல்லகாலம் பொறக்குது...

டாப் ஹீரோ, ஹீரோயின்களை வைச்சி படம் இயக்கின பிரகாசமான இயக்கம் நொந்துபோய் இருக்காராம்... இருக்காராம்... புது படத்துக்கு ஹீரோயின தேடும் இவருக்கு டாப் ஹீரோயினுங்க கால்ஷீட் தர தயங்கறாங்களாம். சமீபமா டோலிவுட், கோலிவுட் எதிலயும் ஹிட்டும் கொடுக்காம, பரபரப்புலயும் இல்லாம காணாமபோயிருக்கும் இவரது பேரு புது ஹீரோயின்களுக்கு தெரியவே மாட்டேங்குதாம். இதுக்கு ஒரே வழி பழைய டிரண்டுல ஏதாவது ஏடாகூட கூத்தை அரங்கேத்துனாதான் சரியா வரும்ன்னு கூட இருக்கிறவங்க ஐடியா கொடுக்கிறாங்களாம்... இருக்காங்களாம்...

தல ஹீரோவோட செகண்ட் பார்ட் படத்த அவரது பர்த்டே கிப்டா தரப்போறாருன்னு கிளப்பிவிட்றாங்களாம்... விட்றாங்களாம்... ஆனா படத்தை முடிக்கறதுக்கு இன்னும் நெறய சீன் பாக்கி இருக்காம். இதுபத்தி இயக்கத்துக்கிட்ட கேட்டா, சொல்றவங்க சொல்வாங்க. படத்தோட ரிலீஸவிட அது ஜெயிக்கணும்ன்றது முக்கியம். அதுக்கு உருப்படியான சீனுங்க தேவை அதுலதான் எங்க கவனம்னு  எஸ்ஸாகறாராம்... ஆகறாராம்...

பாவமான ஹீரோயின  வெச்சி ஒரு கும்பல் பிராடு செய்ய ஆரம்பிச்சிருக்காம்... இருக்காம்... சமீபத்துல பேஸ்புக்ல அவரோ உடலையும் இன்னொரு பெண்ணோட உருவத்தையும் வெட்டிஒட்டி வெளிநாட்டு ஆசாமிக்கு ஆசைகாட்டி பணம் கறந்துச்சாம் கும்பல். பணத்தை கொடுத்தவரு எங்க அந்த லேடின்னு வந்து நிக்க அவ திடீர்ன்னு ஓடிப்போயிட்டான்னு சொல்லி காதுல பூ சுத்திடுச்சாம். ஏமாந்த எலிமாதிரி எதுவும் சொல்ல முடியாம வெ.வாலிபர் கப்சிப்னு கிளம்பிட்டாராம்... கிளம்பிட்டாராம்...


 

தெலுங்கு ரீமேக் படம் கிரிக்கெட் வீரர் கங்குலி ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வங்காள மொழியில் ரீமேக் ஆகும் தெலுங்கு படத்தை கிரிக்கெட் வீரர் கங்குலி தயாரித்து நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. கிரிக்கெட் பின்னணியில் அமைந்த படம் 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்'. இப்படம் வங்க மொழியில் ரீமேக் ஆகிறது. இதில் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி 'கோல்கொண்டா ஹை ஸ்கூல்' பட தயாரிப்பாளர் ராம் மோகன் பருவு கூறும்போது,''கொல்கத்தாவில் இருந்து ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தினர் என்னை அணுகினர். அப்போது கோல்கொண்டா... படத்தை வங்க மொழியில் ரீமேக் செய்ய விரும்புவதாகவும் அதற்கான உரிமை வேண்டும் என்றும் கேட்டனர். அவர்களிடம் இதை தயாரிக்கப்போவது யார், நடிக்கப்போவது யார் என்று கேட்டேன். அவர்கள்தான் கிரிக்கெட் பின்னணியிலான கதை என்பதால் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலி தயாரித்து கிரிக்கெட் கோச்சாக நடிக்க உள்ளார் என்றனர். இதையடுத்து வங்க மொழி உரிமையை விற்றேன். மற்ற எந்த மொழியிலும் ரீமேக் செய்ய உரிமை தரவில்லை. இப்படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்ய முடிவு செய்துள்ளோம்'' என்றார். இதுபற்றி கங்குலி தனது நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கூறும்போது,''கோல்கொண்டா... படத்தை நான் பார்க்கவில்லை. இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னிடம் யாரும் கேட்கவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


 

சூர்யாவுடன் நடிக்க மறுப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க மறுத்தது ஏன்?' என்று டாப்ஸி விளக்கினார். 'ஆடுகளம்' படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் கூறியதாவது: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'மாற்றான்' படத்தில் நடிக்க முதலில் என்னை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர். நானும் காத்திருந்தேன். ஆனால் என்ன காரணத்தாலே அந்த வாய்ப்பு வரவே இல்லை. எனவே சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க மறுக்கவும் இல்லை, அதை ஏற்பதற்கான வாய்ப்பும் வரவில்லை என்பதுதான் நிஜம். 'கோலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வராதது ஏன்?' என்கிறார்கள். தெலுங்கு, இந்தி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். அதில்கூட ஒரே நாளில் நான் பெரிய ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுவிடவில்லை. படிப்படியாகவே எனது வளர்ச்சி அமைந்திருக்கிறது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது. சினிமாவுலகை விட்டு இப்போதைக்கு விலகிவிடப்போவதில்லை. எனக்கென்று ஒரு நேரம் வரும் அப்போது நல்ல இடத்தை பிடிப்பேன். இந்தியில் 'சாஸ்மி பத்தூர்' என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தி எனது தாய்மொழி என்பதால் இப்படத்தில் நடிக்கும்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடிக்கிறேன். தெலுங்கில் 'குண்டல்லோ கோதாரி' படத்தில் நடிக்கிறேன். 1980களில் நடக்கும் கதை. அதற்கு ஏற்ப எனது காஸ்ட்யூம், நடிப்பு அமைந்திருக்கும். கிராமத்து பெண்ணாக நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத வேடம். இதில் எனது கதாபாத்திரத்தை நடித்து முடித்துள்ளேன். தமிழிலும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.


 

புதிய இயக்கம்: அஜீத் அதிரடி முடிவு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்ட அஜீத் விரைவில் புதிய இயக்கம் தொடங்க திட்டமிட்டுள்ளார்.  ரசிகர்களால் 'தல' என்று பட்டப்பெயருடன் அழைக்கப்படுகிறார் அஜீத். கடந்த பிறந்த தினத்தின்போது தன் பெயரில் இயங்கி வந்த ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் தொடர் ந்து மன்றங்களை நடத்தி வந்தனர். மன்றங்களை கலைத்தபிறகு ரிலீஸ் ஆன 'மங்காத்தா' படம் வெற்றிகரமாக ஓடியது. இதற்கிடையில் மன்றங்கள் மூலம் ஏழை மாணவ, மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவிகள் தொடர்ந்து வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் அஜீத்திடம் உதவிகேட்டு அடிக்கடி ரசிகர் மன்றங்கள் சார்பில் பலர் கடிதம் அனுப்பி வருகின்றனர். உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்று அஜீத் எண்ணி உள்ளாராம். அதற்காக அரசியல் தொடர்பில்லாத ஒரு இயக்கத்தை தொடங்க அஜீத் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை அவர் விரைவில் வெளியிடுவார் என்றும், அப்போது அதன் செயல்பாடுகள் பற்றியும் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. 'பில்லா 2' படத்தில் அஜீத் பிஸியாக இருப்பதால் அதன் ஷூட்டிங் முடிந்த பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.


 

மே 11ம் தேதி பிரசன்னா, சினேகா திருமணம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பிரசன்னா, சினேகா காதல் ஜோடியின் திருமணம் வருகிற மே 11ம் தேதி நடைபெற இருக்கிறது. நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாக தொடர்பில் இருந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன.  இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. பின்னர், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். பொது நிகழ்ச்சிகளில் ஜோடியாக வலம் வர தொடங்கினர். விரைவில் திருமணம் தேதியை அறிவிக்கிறோம் என்று இருவரும் கூறி வந்தனர். இதனிடையே சமீபத்தில் இருவரது வீட்டாரும் சந்தித்து திருமணம் தேதியை முடிவு செய்து இருக்கின்றனர். அதன்படி சினேகா-பிரசன்னா திருமணம் வருகிற மே-11ம் தேதி, சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் விமரிசையாக நடக்க இருக்கிறது.