வீரம் பொங்கலுக்கு ஆனால் விஜய்யின் ஜில்லா இல்லை

வீரம் பொங்கலுக்கு ஆனால் விஜய்யின் ஜில்லா இல்லை  

சென்னை: விஜய்யின் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகாதாம்.

நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அஜீத்தின் வீரம் பொங்கல் அன்று ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜில்லாவின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாம்.

அஜீத், விஜய் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் திரையரங்குகள் ஒதுக்குவதில் சிக்கலாகிவிடும் என்பதால் ஜில்லா ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜில்லா பட வேலைகளை பொங்கலுக்குள் முடிப்பது கடினம் என்பதால் தான் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது.

ஜில்லா பொங்கலுக்கு பிறகு ஒரு தேதியில் வெளியிடப்படுமாம். ஜில்லாவின் ஃபர்ஸ்ட் லுக் வரும் 9ம் தேதி அதாவது விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் செய்யப்படுகிறது. அதே தினத்தில் கோச்சடையான் டீஸரும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீபாவளியும், பொங்கலும் அஜீத் ரசிகர்களுக்கு குஷியான பண்டிகைகளாகிவிட்டது.

 

விஷாலின் மதகஜராஜாவுக்கு 800 பிரிண்டுகள்!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்துக்கு 800 பிரிண்டுகள் வரை போட்டுள்ளனர்.

'தீயா வேலை செய்யனும் குமாரு' படத்துக்கு முன்பே தொடர்ந்து சுந்தர் சி. இயக்கிய படம் 'மத கஜ ராஜா'. இதில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்துள்ளனர்.

விஷாலின் மதகஜராஜாவுக்கு 800 பிரிண்டுகள்!

விஜய் ஆண்டனி இந்தப் படத்துக்கு இசை அமைத்துள்ளார். நீண்ட நாளுக்குப் பிறகு சதாவும் இதில் தோன்றியுள்ளார். ஜெமினி நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை விஷால் சொந்தமாக வாங்கி வினியோகம் செய்கிறார்.

இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது. இதற்காக 800-க்கும் மேற்பட்ட பிரிண்டுகள் போடப்பட்டுள்ளன. இந்தப் படம் வெளியாகும் தியேட்டர்களில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் அடுத்த படமான பாண்டிய நாடு டீஸரையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

பாண்டிய நாடும் விஷாலின் சொந்தப் படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஆடியோ நிறுவனம் ஆரம்பித்த சேரன்!

ஆடியோ நிறுவனம் ஆரம்பித்த சேரன்!

பிரபல இயக்குநர் சேரன் சொந்தமாக ஆடியோ நிறுவனம் ஆரம்பித்துள்ளார்.

இயக்குநர் சேரன் ட்ரீம் ஒர்க்ஸ் எனும் பெயரில் படங்கள் தயாரித்து வருகிறார் சேரன். இப்போது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் சர்வானந்த், நித்யா மேனன், சந்தானம் நடிக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் இசையை ட்ரீம் சவுண்ட்ஸ் எனும் தன் சொந்த நிறுவனம் மூலம் வெளியிடுகிறார்.

சொந்தப் படம் தவிர, வெளிப்படங்களின் இசையையும் ட்ரீம் சவுண்ட்ஸ் மூலம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

நடிகை ரோகிணி இயக்கி வரும் அப்பாவின் மீசை படத்தின் இசையை ட்ரீம் சவுண்ட்ஸ் வெளியிடும் என அறிவித்துள்ளார் சேரன்.

ஏற்கெனவே புத்தகங்களை வெளியிட ஒரு பதிப்பகத்தையும் சேரன் ஆரம்பித்திருப்பது நினைவிருக்கலாம்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'உயிருக்கு உயிராக!'

மதர்லேண்ட் பிக்சர்ஸ் படங்களுக்கு தமிழ் குடும்பங்கள் மத்தியில் பெரும் மதிப்பு உண்டு. இனிய இசை, தரமான காட்சிகள் கொண்ட படங்களுக்காக பெயர் பெற்ற இந்த நிறுவனம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்கிறது.

படத்தின் தலைப்பு உயிருக்கு உயிராக. இயக்குபவர் விஜய மனோஜ்குமார்.

இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் விஜய மனோஜ் குமார், "பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த எனக்கு, 1987 இல் எனது முதலாவது படமான மண்ணுக்குள் வைரம் இயக்க வாய்ப்பளித்தார் கோவைத்தம்பி...25 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த விஜய வருடத்தில் எனது பெயருடன் விஜய சேர்த்து, விஜய மனோஜ்குமாராக எனது 25 ஆவது படமாக உயிருக்கு உயிராக படத்தை இயக்கும் வாய்ப்பினையும் அளித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'உயிருக்கு உயிராக!'

தங்கள் குழந்தைகளுக்குக் கல்வியும் நல்ல வாழ்க்கையும் அமைத்துக் கொடுக்கும் பெற்றோர்களே, தங்களது குழந்தைகள் படிக்கும் காலத்தில் காதல் வயப்பட்டுத் தடம் மாறும் வேளைகளில் ஆறுதலாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். இந்தப் படத்தில் அப்படி ஒரு பொறுப்பான தந்தையாக பிரபு நடித்திருக்கிறார்.

படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியுடன் கிளைமாக்ஸில் புதிதாக ஒன்றைச் சொல்லியிருக்கிறேன்...

படம் வந்தபிறகு நிச்சயம் அந்த விஷயம் உங்களை பிரமிக்க வைக்கும்... என் வயது என்ன என்று எல்லோரும் கேட்பார்கள்.. அந்த அளவிற்கு இளமையாகவும் புதுமையாகவும் கிளைமாக்ஸினை அமைத்திருக்கிறேன்... இந்த நகரமே, இந்த மாநிலமே ஏன் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு அது இருக்கும்..." என்றார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'உயிருக்கு உயிராக!'  

உயிருக்கு உயிராக படத்தில் சஞ்சீவ்- நந்தனா, சரண்குமார்-பிரீத்திதாஸ் ஆகியோர் நாயக, நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் முக்கியமான கவர்னர் கதாபாத்திரத்தில் ரங்கபாஷ்யம் நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் உதவியாளர் ஆனந்த்குமார் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார். கவிஞர் நந்தலாலா, சினேகன் மற்றும் இயக்குனர் விஜய் மனோஜ்குமார் ஆகியோர் தலா இரண்டு பாடல்களை எழுத இசையமைக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சாந்தகுமார்.

முத்தாய்ப்பாகப் பேசிய தயாரிப்பாளர் கோவைத்தம்பி, "படத்திற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒரு பெண்பார்க்கும் படலம் மாதிரி... பிரிவியூ ஷோ போடும் நாள் நிச்சயதார்த்த நாள்... அதன் பிறகு நீங்கள் பெண்ணிடம் குறைகண்டுபிடித்து மக்களிடத்தில் சொல்லிவிடக்கூடாது... அவளின் நிறைகளைத் தான் சொல்லவேண்டும்...அப்பொழுது தான் படத்தின் வெற்றி என்னும் திருமணம் இனிதே நடைபெறும் .." என்று கலகலக்க வைத்தார்.

இந்தச் சந்திப்பில் கதாநாயகர்கள் சஞ்சீவ், சரண்குமார் கதாநாயகிகள் பிரீத்திதாஸ், நந்தனா, ஒளிப்பதிவாளர் ஆனந்தகுமார், இசையமைபபாளர் சாந்தகுமார், மென்பொருள் நிபுணராக இருந்து தற்பொழுது நடிக்க வந்திருக்கும் ரங்கபாஷ்யம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

ஒல்லிப்பாச்சான் நடிகரும், மனைவியும் ஒழுங்காக பேசிய பல நாளாச்சாம்

சென்னை: பெரிய இடத்து மாப்பிள்ளையான ஒல்லிப்பாச்சான் நடிகருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை பெரிதாகிவிட்டதாம்.

பெரிய இடத்து மாப்பிள்ளையான ஒல்லிப்பாச்சான் நடிகருக்கு என்ன ராசியோ, என்னவோ ஆள் சுமாராக இருந்தாலும் அவருடன் நடிக்கும் நடிகைகள் அவரை மிகவும் இனிமையானவர், அப்படி இப்படி என்று கூறுகிறார்கள். இதை கேட்டும் கேட்காத மாதிரி அவரது மனைவி இருந்து வந்தார்.

ஒல்லிப்பாச்சானுக்கும் மன்மதனின் மகளுக்கும் ஒரு படத்தில் நடிக்கையில் நெருக்கமாகிவிட்டதாம். இதையடுத்து மன்மதன் தனது மகளை வேறு மாநிலத்தில் செட்டிலாக்கிவிட்டுவிட்டாராம். இந்த விவகாரத்தால் நடிகரும், அவரது மனைவியும் முகம் கொடுத்து பேசிய பல நாளாகிவிட்டதாம்.

இந்நிலையில் ஒல்லிப்பாச்சானுக்கும் மற்றொரு நடிகைக்கும் நெருக்கமாகிவிட்டது என்று செய்திகள் வர மனைவி டென்ஷனாகிவிட்டாராம். இதனால் ஏற்கனவே உள்ள பிரச்சனை பெரிதாகியுள்ளதாம்.

 

தீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: அஜீத் நடித்த ஆரம்பம் படம் வரும் தீபாவளிக்கும், வீரம் படம் பொங்கலுக்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஆரம்பம்' தலைப்பு அறிவிக்கபட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒரு புறம் அதிகரிக்க அதிகரிக்க, படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளிவந்தது.

இன்று படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ .எம் .ரத்னம் இதை பற்றி வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில், 'ஆரம்பம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும் , படபிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதி கட்ட வேலைகள் தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

தீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை , மிக பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டை குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்,' என்றார்.

பொங்கலுக்கு வீரம் ...

சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் வீரம் படத்தை பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக அஜீத்தின் பிஆர்ஓ அறிவித்துள்ளார்.

தீபாவளிக்கு ஆரம்பம்... பொங்கலுக்கு வீரம்! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 

7 ஆண்டுகளாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை விற்கும் நட்சத்திர தம்பதி

7 ஆண்டுகளாக பார்த்து பார்த்து கட்டிய வீட்டை விற்கும் நட்சத்திர தம்பதி

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது கனவு இல்லத்தை விற்கப் போகிறாராம்.

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் தனது மனைவி ஜேடா பிங்கடெ் ஸ்மித்துடன் சேர்ந்து கலிபோர்னியாவின் கலாபஸாஸ் பகுதியில் 25,000 சதுர அடியில் கனவு இல்லத்தை கட்டினார். இந்த வீட்டை கட்டி முடிக்க மட்டுமே 7 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள். அந்த வீட்டில் அவர்கள் இரண்டு ஆண்டுகள் வசித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வீட்டை அவர்கள் ரூ.281.4 கோடிக்கு விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்துள்ளனர். மேலும் அவர்கள் ஹவாயில் தங்களுக்கு சொந்தமான மற்றும் ஒரு வீட்டையும் விற்கின்றனர்.

அண்மையில் வில் ஸ்மித் தனது மகன் ஜேடன் ஸ்மித்துடன் சேர்ந்து நடித்த ஆப்டர் எர்த் ஓடவில்லை. வில் ஸ்மித் இந்த படத்தை பெரும் தொகையை போட்டு தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.