கிசு கிசு - டுவிட்டரில் வளரும் ஹீரோ-ஹீரோயின் நட்பு

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

அமலமான மில்க் நடிகைக்கு இப்போ சித்தார்த்த ஹீரோதான் அட்வைஸராம்... அட்வைஸராம்... ரசிகர்களோட கருத்தை அறிய டுவிட்டர் பக்கம் தொடங்க ந¤னைச்சாராம் நடிகை. பிஸியா நடிக்க¤றதால அந்த ஐடியாவை டிராப் பண்ணிட்டாராம். உடனே சித்தார்த்த ஹீரோ போன்ல கூப்பிட்டு அட்வைஸ் பண்ண¤னதும் நடிகையும் டுவிட்டர் பக்கத்தை தொடங்கிட்டாராம்... தொடங்கிட்டாராம்... இவங்க நட்பு இப்போ டுவிட்டர் பக்கம் மூலமா வளருதாம். நட்பு லவ்வா மாறாம இருந்தா சரிதான்னு பீல்டுல பேசிக்கிறாங்களாம்... பேசிக்கிறாங்களாம்...

செல்வராகவ இயக்கம் பண்ண¤ன சேட்டை, புதுநடிகர் ஒருத்தரை தூங்கவிடாம பண்ணிடுச்சாம்... பண்ணிடுச்சாம்... மயங்குற படத்துல அந்த புதுநடிகரோட நிஜமான செல் நம்பரை ஹீரோயின் ரிச்சா பயன்படுத்துற மாதிரி சீன¢ வச்சிருந்தாரு. இதை நோட் பண்ணின ரசிகருங்க, நேரம் காலம் தெரியாம போன் பண்ணி நடிகருக்கு தொல்லை தர்றாங்களாம்... தர்றாங்களாம்...

காட்டன் வீர ஹீரோ நடிக்கிற மூணெழுத்து பட ஷூட்டிங் லேட்டாகுதாம்... லேட்டாகுதாம்... காரணம் கேட்டா, பட ஹீரோயின் கால்ஷீட் சொதப்புறாருன்னு சொல்றாங்களாம். உண்மை காரணம் அது இல்லையாம்... இல்லையாம்... படத்துல வச்ச சில சீன்ஸ் சமீபத்துல ஒரு படத்துல வந்துருச்சாம். அதனால அந்த காட்சிகளை திரும்ப ரீஷூட் பண்றாங்களாம்... பண்றாங்களாம்...


 

காதலனுடன் புத்தாண்டு கொண்டாடும் ஹீரோயின்கள்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காதலனுடன் புத்தாண்டு கொண்டாட  கோலிவுட் ஹீரோயின்கள் திட்டமிட்டுள்ளனர். 2012ம் ஆண்டின் முதல் நாளை ஜாலியாக கொண்டாட கோலிவுட் நட்சத்திரங்கள் வெவ்வேறு திட்டங்கள் போட்டுள்ளனர். நடிகை த்ரிஷா தோழிகளுடன் சிட்னி பறக்கிறார். அவரது காதலரும் தனியே சென்று, பிறகு சிட்னியில் புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் முகாமிடுகிறார்.

காதலனுடன் ஜாலியாக புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் கலந்துகொள்கிறார். அங்கேயே தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம். ஜெனிலியா, தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கோலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும் சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட பிளான் போட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் ஷூட்டிங்கிற்கு செல்லும் சிம்பு, அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் 'இரண்டாம் உலகம்Õ பட ஷூட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் தேதி அவரது மனைவி கீதாஞ்சலி ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் 'துப்பாக்கிÕ பட ஷூட்டிங்கில் நடித்து வரும் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார்.

மனைவி சங்கீதா, குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். அஜீத், தனது மனைவி ஷாலினி, குழந்தையுடன் ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்கு பறந்துவிட்டார். குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி., குழந்தைகளுடன் கோலாலம்பூர் செல்கிறார். ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா, தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடுகிறார். அதே போல் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தியுடன் கோவா செல்கிறார்.


 

தினமும் 20 சிகரெட் பிடிக்கிறேன் : மது ஷாலினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நாள் ஒன்றுக்கு 20 சிகரெட் பிடிக்கிறேன் என்றார் நடிகை மது ஷாலினி. அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் 'டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது. அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன்.

வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன். பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.


 

தமிழ் ரசிகரை மணப்பேன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கும் படம், 'அபாயம்'. கிருஷ்ண வம்சி 'டேஞ்சர்' என்ற பெயரில் தெலுங்கில் இயக்கிய இப்படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி நிருபர்களிடம் ஷெரீன் கூறியதாவது: ஒரு காட்டுக்குள் நான், நரேஷ், ஸ்வாதி உட்பட 5 பேர் அடைக்கலமாகிறோம். அப்போது ஒரு குழந்தையின் நரபலி காட்சியை வீடியோவில் படமாக்குகிறோம். அமைச்சர் ஒருவர் அதை செய்கிறார். வீடியோவைக் கைப்பற்ற அமைச்சர் எடுக்கும் முடிவுதான் கதை. தமிழில் ஏன் இடைவெளி என்கிறார்கள். ஆஸ்திரேலியாவில் பெயின்டிங் சம்பந்தமான படிப்பை தொடர்ந்தேன். பெங்களூரிலுள்ள வீட்டில் ஓவியங்கள் வரைந்து வைத்திருக்கிறேன். விரைவில் கண்காட்சி நடத்த உள்ளேன். படம் இயக்கும் ஆசை இருக்கிறது. இதற்காக வெளிநாடு சென்று படிக்க திட்டமிட்டுள்ளேன். எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவரையும் காதலிக்கவில்லை. இதுவரை யாரை பார்த்தும் காதல் எண்ணம் வரவில்லை. தமிழ் ரசிகரை திருமணம் செய்வீர்களா என்கிறார்கள். அதில் என்ன தவறு? தமிழ் ரசிகரை மணப்பேன்.


 

புது வீட்டில் புத்தாண்டு : சமீரா பூரிப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நான் கட்டியுள்ள புதிய வீட்டில் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட இருக்கிறேன்' என்று சமீரா ரெட்டி கூறினார். இது பற்றி சமீரா கூறியதாவது: சினிமாவில் நடிப்பதை தாண்டி, வேறு சில சந்தோஷங்களும் எனக்கு இருக்கிறது. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக நடன நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நான் நடத்திவரும் அனாதை இல்ல சிறுவர்களுக்காகச் செலவழித்து வருகிறேன். நடிக்க வருவதற்கு முன்பே இதை செய்து வருகிறேன். இந்த மாதம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனென்றால் இந்த மாதத்தில்தான் எனது பிறந்தநாள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களும் இந்த மாதம் இருக்கிறது. இந்த வருட புத்தாண்டை எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கிறேன். இப்போதே எனக்கு அதிக சந்தோஷத்தை அது தருகிறது. இதற்கு சினிமா நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் எனக்காக வீட்டை அலங்கரிப்பதில் பிசியாக இருக்கிறார்கள்.


 

ஒரே மாதிரியாக நடிக்க விருப்பம் இல்லை : அமலா பால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று அமலா பால் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'மைனா'வுக்கு பிறகு அதே மாதிரியான பாவாடை தாவணி கேரக்டர்கள்தான் வரும் என்று பயந்தேன். 'தெய்வத்திருமகள்' படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. ஆனாலும் கிளாமராக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் 'வேட்டை' கிடைத்தது. 'மைனா' அமலாவா என்று வியக்கிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் வேறு மாதிரி இருக்கும். நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல வேடம் அதில் கிடைத்திருக்கிறது. ஒரு படத்தில் நடித்தது போன்று அடுத்து படத்தில் நடிக்கக் கூடாது என்று விரும்புகிறேன். சவாலான கேரக்டரில் நடிக்க வேண்டும், ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் கேரக்டரிலும் நடிக்க வேண்டும்.
இவ்வாறு அமலா பால் கூறினார்.


 

ஆண்டு இறுதியை குறிவைக்கும் படங்கள்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆண்டு இறுதியை குறி வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆண்டின் இறுதி வெள்ளிக்கிழமையில் ஏராளமான படங்கள் வெளிவரும், அந்த ஆண்டின் விருது, மற்றும் மானியப் பட்டியலில் சேர்வதற்காகவும், பொங்கலுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் என்பதாலும் சிறிய படங்கள் வெளியாகும். அந்த வகையில் வரும் வெள்ளிக்கிழமை பதினெட்டான்குடி, அன்புள்ள துரோகி, மகாராஜா, காற்றாய் வருவேன், கருத்த கண்ணன் கேர் ஆப் ரேக்ளா ரேஸ், வழிவிடு கண்ணே வழிவிடு, தப்பு கணக்கு, மகான் கணக்கு ஆகிய 8 படங்கள் வெளிவர இருப்பதாக அறிவித்துள்ளன. இது தவிர 'ஸ்பீட் 2012', 'புயல்வீரன்' என்ற ஆங்கில படங்களும், 'அபாயம்' என்ற தெலுங்கு மொழிமாற்று திரைப்படமும் வெளிவருகிறது. கடைசி நேரத்தில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். 10 நேரடி தமிழ்ப் படங்களும் 5 மொழிமாற்று படங்களும்  வெள்ளிக்கிழமை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


 

ஐஸ் மலையில் தவித்த இஷ்டம் டீம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரமேஷ் தான்ட்ரா தயாரிக்கும் படம், 'இஷ்டம்'. விமல், நிஷா அகர்வால் ஜோடி. பிரேம் நிஸார் இயக்குகிறார். அவர் கூறியதாவது: சுவிட்சர்லாந்தில் விமல், நிஷா பங்கேற்ற 'நானின்று நானாய் இல்லை' பாடல் காட்சியைப் படமாக்கினோம். கீழே இருந்து ஐஸ் மலைக்குச் செல்ல, 60 கி.மீ பயணித்தோம். 4 ரோப் கார்களில் சென்று வந்த அனுபவம் த்ரிலிங்காக இருந்தது. ஜேம்ஸ்பாண்ட் படமான 'டுமாரோ நெவர் டைஸ்' ஷூட்டிங் ஏற்கனவே இங்கு நடந்திருக்கிறது. ஐஸ் மலையின் உச்சிக்குச் சென்ற நாங்கள், கடுங்குளிரில் ஷூட்டிங் நடத்தினோம். ஐஸ் மலையில் மூவாயிரம் அடி ஆழத்தில் ஒரு மரண பள்ளத்தைப் பார்த்து விமல், நான், நிஷா மற்றும் பட யூனிட் அதிர்ந்தோம். ஒருபுறம் ஐஸ் உருகி வழிய, நாங்கள் நின்ற இடம் முழுவதும் அப்படியே சரிந்தது. இடுப்பளவு வரை புதைந்தோம். இனி மீள முடியுமா என்று நினைக்கும்போது, அதிர்ஷ்டவசமாக ஐஸ் உருகுவது நின்றது. இதையடுத்து வேகவேகமாக தப்பி வந்தோம்.


 

இந்திப் படத்துக்கு இசை அமைக்கிறாரா அனிருத்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்துள்ள படம் '3'. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் கூறியதாவது: 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் என்னை அறிய வைத்திருக்கிறது. இந்தப் பாடல் ஹிட்டானதை அடுத்து, நிறைய வாய்ப்புகள் வருகிறது. இந்தி உட்பட பிற மொழிகளிலிருந்தும் அழைப்பு வருவது உண்மைதான். ஆனால் எதுவும் முடிவாகவில்லை. சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுக்கலாம் என நினைக்கிறேன். '3' படத்தின் அனைத்துப் பாடல்களும் சிறப்பாக இருப்பதாகக் கூறுகின்றனர். இதனால் எனக்கு பொறுப்பு கூடியிருப்பதாக நினைக்கிறேன். இந்த எதிர்பார்ப்பை மற்றப் படங்களிலும் ஈடுசெய்வேன். இவ்வாறு அனிருத் கூறினார்.


 

கருவாச்சிக்காக கறுத்தார் பூர்ணா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'கருவாச்சி'யில் நடிப்பதற்காக, வெயிலில் நின்று நிறம் கறுத்திருக்கிறார் பூர்ணா. இதுகுறித்து அவர் கூறியதாவது: இதுவரை நடித்த படங்களில், மேக்கப்போடு நடித்திருப்பேன். 'கருவாச்சி' படத்தில், விருதுக்குரிய வேடம் கிடைத்துள்ளது. இதற்காக எடையைக் குறைத்தேன். மேலும், கறுப்பாக மாற தினமும் வெயிலில் நின்றேன். கேரக்டருக்காக இப்படி மாறுவது முதல்முறை. இதுவும் வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது. படம் முழுக்க மேக்கப் அணியாமல் நடிக்கிறேன். அகில் ஹீரோ. சேலம், திருச்சியில் ஷூட்டிங் நடக்கிறது.


 

பாலிவுட் செல்லும் கே.எஸ்.ரவிக்குமார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் வைத்து படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விரைவில் பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிக்கயிருக்கிறார். தமிழில் ஹரி இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'சாமி'-யை இந்தியில் ரீமேக செய்ய இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் இந்த ரீமேக் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. அப்படி ரீமேக் செய்தால், சஞ்சய் தட் ஹீரோவாக நடிக்கலாம் என தெரிகிறது.


 

ரகுமான் இசையில் பாடுகிறார் தனுஷ்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை இசைப்புயல் விரும்பி கேட்டாராம், 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்க போகும் பரத் பாலா இந்த ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஒப்புக் கொண்டாராம். முதலில் உலக நாயகன் கமலஹாசனை பாட வைக்க திட்டமிட்டு இருந்த ரகுமான், கமல் 'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம் ரகுமான். 'இசைப்புயலின் தீவிர ரசிகனாகிய எனக்கு அவருடைய இசையில் அதுவும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் பாட இருப்பது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்' என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.


 

பாலிவுட் செல்லும் கே.எஸ்.ரவிக்குமார்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கோலிவுட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமலஹாசன் வைத்து படங்களை இயக்கிய வெற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் விரைவில் பாலிவுட்டிலும் தனது முத்திரையை பதிக்கயிருக்கிறார். தமிழில் ஹரி இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'சாமி'-யை இந்தியில் ரீமேக செய்ய இருக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனால் இந்த ரீமேக் குறித்து கே.எஸ்.ரவிக்குமார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. அப்படி ரீமேக் செய்தால், சஞ்சய் தட் ஹீரோவாக நடிக்கலாம் என தெரிகிறது.