1/3/2011 2:23:11 PM
நடிகை மீனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
1/3/2011 2:23:11 PM
டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல்
1/3/2011 2:57:31 PM
மேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.
கிசு கிசு -இயக்குனரின் அன்பு பார்வையில் நடிகை
1/3/2011 2:15:38 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
லவ் படத்துக்கு இசை அமைச்சவருக்கு நிறைய படங்கள் வரலையாம்… வரலையாம்… அது பற்றி யாராவது கேட்டா, 'நல்ல படங்களை மட்டும்தான் ஒத்துக்கிறேன்Õனு சொல்லி, நிறைய படங்களுக்கு இசை அமைக்க¤ற ஆசை இல்லாத மாதிரி காட்டிக்கிறாராம்… காட்டிக்கிறாராம்… உண்மை அது இல்லையாம். வாய்ப்பு வந்தா, சம்பளம் எக்கச்சக்கமா கேட்கிறாராம். அதனால தயாரிப்புங்க அலறியடிச்சி ஓடுறாங்களாம்… ஓடுறாங்களாம்…
இதனாலதான் இசைக்கு படங்கள் வரமாட்டேங்குதாம்… வரமாட்டேங்குதாம்…
மணியான இயக்குனரோட வாரிசுக்கு அரசியல் ஆசை குறைஞ்சி போச்சாம். சினிமாவை பத்தி ஏ டு இசட் படிக்கிறாராம்… படிக்கிறாராம்… 'இண்டஸ்ரியோட பைனான்ஸ் நிலவரத்தை அவன் அலசி வச்சிருக்கான். சீக்கிரமே பீல்டுக்கு வருவான்னுÕ தாய்க்குலம் சொல்றாராம்… சொல்றாராம்…
ஜுரத்துடன் நடித்த அசின்
1/3/2011 2:19:03 PM
இலங்கை சென்ற விவகாரம் காரணமாக, நடிகை அசின் நடித்துள்ள 'ரெடி' என்ற இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிடுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு படு வேகமாக நடந்து வருகிறது. இதனையடுத்து 'ரெடிÕ இந்தி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஜுரத்துடன் நடித்தார் அசின். அவரை தொந்தரவு செய்யாமல் காட்சிகளை சீக்கிரம் படமாக்கும்படி டைரக்டரிடம் கூறினாராம் சல்மான் கான்.
ரஜினி படங்களுக்கு மவுசு
1/3/2011 3:33:00 PM
எம்ஜிஆருக்கு அடுத்தபடி ரஜினி நடித்தப் படங்களின் தலைப்புக்குதான் தமிழ் சினிமாவில் அதிக மவுசு. ரஜினியின் தில்லு முல்லு, கழுகு படப்பெயர்களில் படங்கள் தற்போது தயாராகி வருகின்றன.
தில்லு முல்லு படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். சத்யசிவா என்பவர் இயக்கம். தில்லு முல்லு டைட்டிலை பயன்படுத்த முறைப்படி அனுமதி வாங்கியுள்ளார்கள்.
அதேபோல் ரஜினியின் பழைய படமான கழுகு தலைப்பிலும் ஒரு படம் உருவாகி வருகிறது. பட்டியல் சேகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் அவரது மகன் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார்.
இதேபோல் மேலும் சில ரஜினிப்பட டைட்டில்கள் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
கொய்யாப் பழத்திற்கு ஐஸ்வர்யா ராய் பெயர்
1/3/2011 2:48:17 PM
உ.பி. மாநிலத்தில் மாம்பழத்திற்குப் பெயர் போன மளிஹாபாத் என்ற பகுதியைச் சேர்ந்தவர் கலிமுல்லா கான். இவர் உருவாக்கியுள்ள இந்த புதிய வகை கொய்யாப் பழம், ஆப்பிளைப் போல இருக்கிறது பார்ப்பதற்கு. ஆனால் ஒரு சாதாரண கொய்யாப் பழத்தில் இருக்கும் சுவையை விட அதில் அதிக சுவை உள்ளது. படு தித்திப்பாக இருக்கிறதாம்.
இந்த கொய்யாப் பழத்திற்கு ஐஸ்வர்யாவின் பெயரைச் சூட்டியுள்ளார் கான்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மற்ற கொய்யாப் பழங்களை விட இது வித்தியாசமானு. பார்ப்பதற்கு சிறிதாக இருக்கும். வழக்கமான கொய்யாப் பழங்களை விட அதிக சுவையானது. இதன் விதைகள் மிகவும் மென்மையானவை.
இந்த வித்தியாசமான கொய்யாப் பழத்தை உருவாக்க எனக்கு எட்டு ஆண்டுகள் பிடித்தது. இதை எந்தவகையான உரமோ அல்லது பூச்சிக் கொல்லியோ பயன்படுத்தாமல் வளர்த்தேன். ரசாயாண பூச்சிக் கொல்லிகளுக்குப் பதில் சாதாரண வேப்ப எண்ணையைத்தான் நான் பூச்சிக் கொல்லியாக பயன்படுத்தினேன் என்கிறார்.
விரைவில் இந்த ஐஸ்வர்யா கொய்யாப் பழத்தை விற்பனைக்கு விடப் போகிறாராம் கலிமுல்லா கான்.