ஐஸ்வர்யா ராயின் லேட்டஸ்ட் விளம்பரம் - 'போட்டோஷாப்' வேலை என பரபரப்பு!

Are Aishwarya Rai Bachchan S Latest

மும்பை: கல்யாண் ஜூவல்லரி நிறுவன விளம்பரத்தில் ஐஸ்வர்யா முற்றிலும் புத்தம் புதிய பொலிவுடன் தோன்றும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அவை போட்டோஷாப் வேலை என தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரவசத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணும் சற்று உடல் பருமானவது வழக்கம்தான். அதே போலத்தான் ஐஸ்வர்யா ராயும் குண்டானார். அவர் உண்டானபோது எப்படி செய்தியாயிற்றோ, அதேபோல அவர் குண்டானதும் கூட பெரும் செய்தியாகிப் போனது.

சமீபத்தில் நடந்த கேன்ஸ் பட விழாவின்போதும் கூட பருமான தோற்றத்துடன்தான் ஐஸ்வர்யா காணப்பட்டார். இந்த நிலையில் தற்போது கல்யாண் ஜூவல்லரி நிறுவன விளம்பரத்தில் ஐஸ்வர்யா நடித்துள்ளதாகவும், அதில் முற்றிலும் எடை குறைந்து படு அழகாக காட்சி தருவதாகவும் செய்திகள் வெளியாகின. அதுதொடர்பான படமும் கூட வெளியாகியது. அதில் உண்மையிலேயே ஐஸ்வர்யா படு க்யூட்டான அழகுடன் காணப்பட்டார்.

ஆனால் அந்தப் படம் போட்டோஷாப் வேலை என்று இப்போது ஒரு தகவல் பரவத் தொடங்கியுள்ளது.

அவரது முகத்தையும், உடல் பகுதியையும் போட்டோஷாப் மூலம் ஏகப்பட்ட நகாசு வேலைகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே உண்மையான ஐஸ்வர்யா ராயா அல்லது ஐஸ்வர்யா ராய் படத்தை போட்டோஷாப் செய்து வெளியிட்டுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் கடந்த ஜூன் மாதம் தானத் தனது மகள் ஆரத்யாவுடன் வெளியுலகில் தலை காட்டினார் ஐஸ்வர்யா. அப்போது அவர் குண்டாகத்தான் இருந்தார். ஆனால் ஒரே மாதத்தில் அவருடைய எடை இந்த அளவுக்காக குறையும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்தப் புதிய சலசலப்பால் ஐஸ்வர்யா ராய் மறுபடியும் செய்தியாகி விட்டார்....!

 

பசுபதிக்கு ஜோடியா நடிக்கமாட்டேன் - நயன்தாரா கோபம்

Nayanthaara Refused Act With Pasupathy   

சென்னை: பசுபதிக்கு ஜோடியாக நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துவிட்டார் நடிகை நயன்தாரா.

பிரபுதேவா விவகாரம் முடிந்த ஒன்றாகிவிட்டதால், மீண்டும் முழுவீச்சில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நயன்தாரா.

விஷ்ணுவர்த்தன் இயக்கும் படத்தில் அஜீத் ஜோடியாக நடித்து வருகிறார். புது இயக்குனர் மோகன் தனது படத்தில் மம்முட்டி-நயன்தாராவை ஜோடியாக நடிக்க வைக்க முயற்சித்தார். நயன்தாராவுக்கு கதை பிடித்ததாகவும் மம்முட்டியுடன் நடிக்க சம்மதம் என்று கூறிவிட்டாராம். ஆனால் மம்முட்டி இப்படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது.

ஒரு கோடி சம்பளம், கேரள வெளியீட்டு உரிமை... இதுதான் மம்முட்டி போட்ட நிபந்தனை. அதற்கு இயக்குனர் மோகன் சம்மதிக்கவில்லை. மம்முட்டிக்கு பதில் நடிகர் பசுபதியை கதாநாயகனாக தேர்வு செய்தார்.

ஆனால் பசுபதி ஜோடியாக நடிக்குமாறு நயன்தாராவைக் கேட்டபோது, ஒருபோதும் முடியாது என கோபத்துடன் கூறிவிட்டாராம். நயன்தாராவுக்கு பிடித்தமாதிரி ஒரு நடிகரைத் தேடி வருகிறாராம் இயக்குநர்.

 

தாண்டவம் இசை - ஆகஸ்ட் 15 ல் பிரமாண்ட வெளியீடு!

Thaandavam Audion On Aug 15   

விக்ரம் நடிக்கும் தாண்டவம் படத்தின் இசை வெளியீடு வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னையில் பிரமாண்டமான முறையில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்துகின்றனர்.

யுடிவி தயாரிக்க, ஏஎல் விஜய் இயக்கும் படம் தாண்டவம். விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக அனுஷ்காவும் எமி ஜாக்சனும் நடித்துள்ளனர்.

முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடித்துள்ளார்.

ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க, பாடல்களை நா முத்துகுமார் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் காட்சிகளைப் பார்த்த திரையுலகின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் விஜய்யை பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் படம் பார்த்த நடிகர் விஜய்யும் பாராட்டியுள்ளார்.

இப்போது ஆடியோ வெளியீட்டை பிரமாண்டமாக நடத்துகிறார்கள். இயக்குநர்கள் பாலா, லிங்குசாமி உள்பட தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

 

சுவாமி சத்யானந்தா படத்தை வெளியிட தடை கோரி நித்யானந்தா வழக்கு!

Nithyananda Seeks Ban On Telugu Movie

ஹைதராபாத்: தன்னை விமர்சிக்கும் வகையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் சுவாமி சத்தியானந்தா என்ற கன்னட - தெலுங்கு படத்தை தடை செய்யுமாறு நித்தியானந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.

நித்தியானந்தா சார்பில் அவரது வக்கீல், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், "நித்தியானந்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு கன்னடத்தில் 'சுவாமி சத்தியானந்தா` என்ற பெயரில் சினிமா படம் தயாரிக்கப்பட்டு அது தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அந்த மொழி மாற்று படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

அந்தப் படத்தில் நித்தியானந்தாவை தவறாக சித்தரித்து இருப்பது அவருடைய பக்தர்களின் மனதை புண்படுத்துவது போல் உள்ளது என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அந்த மனு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

 

சினிமா தயாரிக்க போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கிய தயாரிப்பாளர் கைது!

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி சினிமா தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.

கைதானவர் பெயர் முத்துரங்கன் (வயது 56). இவர் சென்னை வானகரத்தில் வசிக்கிறார்.

மருந்து கம்பெனி ஒன்றில் பங்குதாரரான இவர் மீது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அடையாறு கிளை சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

போலியான ஆவணங்கள் மூலம் இந்த வங்கி கிளையில் ரூ.8.86 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்து விட்டதாக புகாரில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது.

இந்த புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் முத்துரங்கன், இது போல் போலி ஆவணங்கள் மூலம் நிறைய வங்கிகளில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன் பேரில் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

சினிமா தயாரிக்க...

தான் வங்கி கடன் வாங்கி மோசடி எதுவும் செய்யவில்லை என்றும், கடன் வாங்கிய பணத்தில் சினிமா தயாரிப்பில் ஈடுபட்டதாகவும், படம் வெளிவராததால், கடும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை என்றும் முத்துரங்கன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

பாலாவின் பரதேசி... 90 நாளில் படப்பிடிப்பு ஓவர்... லண்டனில் இசை வெளியீடு!

Bala S Paradesi Shooting Completed

சென்னை: யாரும் எதிர்ப்பாராத திட்டமிடல், விறுவிறு வேகத்துடன் தனது அடுத்த படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் பாலா. படத்தின் பெயர் நாம் முதலில் சொன்னது போல பரதேசிதான்.

சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள், அவன் இவனுக்குப் பிறகு பாலா எழுதி இயக்கும் படம் இந்த பரதேசி. இந்தப் படத்தின் தயாரிப்பும் பாலாதான்!

1930-களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன் இந்த முறை கூட்டணி அமைத்துள்ளார் பாலா.

கதாநாயகனாக அதர்வாமுரளி மற்றும் கதாநாயகிகளாக வேதிகா தன்ஷிகா நடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாலூர், மானாமதுரை மற்றும் கேரள மாநிலம் மூணார், தலையார், தேனி மாவட்ட கண்ணக்கரை வனப்பகுதிகளில் இடைவிடாது நடந்தது.

சரியாக 90 நாட்களில் படப்பிடிப்பு முடந்துவிட்டது.

இயக்குனர்பாலா இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார், ஒளிப்பதிவாளர் செழியன், எழுத்தாளர் நாஞ்சில்நாடன், படத்தொகுப்பாளர் கிஷோர் ஆகியோருடன் என புதிய கூட்டணியில் களம் கண்டுள்ளார் பாலா.

செப்டம்பர் 19 -ம் தேதி லண்டனில் இசை மற்றும் முன்னோட்டக் காட்சிகளை வெளியிடுகிறார் பாலா.

 

இனிய தமிழிசை தரும் மக்கள் இசை

Folk Song Musical Show Makkal Isai

தொலைக்காட்சிகளில் இசை சேனல்களை திருப்பினால் திரைஇசைப் பாடல்கள்தான் à®'ளிபரப்பாகின்றன. மெல்லிசைக் கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கூட திரைப்படப் பாடல்கள்தான் பாடப்படுகின்றன. ஆனால் பொதிகைத் தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக நாட்டுப்புறப் பாடல்களுக்கும் தமிழிசைப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ‘மக்கள் இசை' நிகழ்ச்சி à®'ளிபரப்பாகிறது.

மக்கள் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு à®'ளிபரப்பாகும் `மக்கள் இசை' நிகழ்ச்சியை ஆர்த்தி தொகுத்து வழங்குகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று திருக்குறளில் இடம் பெறும் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்துப் பாடல், புத்தர் கலைக்குழு மணிமாறன் இயற்றிய பாடல், பாவலர் பரிணாமன் பாடல் மற்றும் பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய பாடல்கள் இடம் பெற்றன. ஞாயிறன்று à®'ளிபரப்பான நிகழ்ச்சியில் தென்கச்சி சுவாமிநாதன், பாவலர் காசி ஆனந்தன், முனைவர் குணசேகரன் மற்றும் கல்கி இயற்றிய பாடல்கள் இடம் பெற்றன. பாடகர்கள் சித்தன் ஜெயமூர்த்தி, கற்பகம் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பாடல்களை பாடினார்கள்.

தமிழிசை பாடல்களை இசையோடு கேட்பதே இன்பம்தான். திரைப்பாடல்களைக் கேட்டு சலித்துப்போன ரசிகர்கள் கொஞ்சம் மக்கள் இசையை கேட்டு மகிழலாமே.

 

'ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படியா மானத்தை வாங்கறது?' - விஜயலட்சுமியின் செல்லச் சிணுங்கல்

Actress Vijayalakshmi Kabbadi Promotions

ஜெயா தொலைக்காட்சியில் வருகிற ஆகஸ்ட் 15 ந் தேதி முதல் கலக்கல் கபடி கே.பி.எல் என்ற மாபெரும் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைந்த ரியாலிடி ஷோ ஒளிபரப்பாகவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் கபடி அணியினர் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும் இந்த விளையாட்டு நிகழ்ச்சி சுமார் 120 வாரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது.

பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டு வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி வருகிறார்கள். அண்மையில் இந்த படப்பிடிப்பில் நடிகை விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

சென்னை 60028, அஞ்சாதே, சரோஜா, கற்றது களவு, ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்ற விஜயலட்சுமி தற்போது 'வனயுத்தம்' படத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி கேரக்டரில் நடித்து வருகிறார்.

கபடி பெண்கள் மத்தியில் கலகலவென பேச ஆரம்பித்த விஜயலட்சுமியை விடாமல் கேள்விகளால் துளைத்தெடுத்தார்கள் வீராங்கனைகள்.

ரஜினியுடன் சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்தது பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்ப, அதெல்லாம் சீக்ரெட். சொல்ல மாட்டேன் என்று நழுவினார் விஜயலட்சுமி. அந்த படம் எப்போது வரும்? வருமா வராதா? இன்னும் எத்தனை நாட்கள் ஷூட்டிங் இருக்கு என்று விடாமல் கேள்வி கேட்ட கபடி வீராங்கனைகளிடம் ஒருவழியாக சரணடைந்தார் விஜயலட்சுமி.

"நான் ரஜினி சாரோடு பக்கத்தில் நின்றதே பெரிய பாக்யமாக கருதுகிறேன். அவரோடு சில நாட்கள் நடிக்கவும் செய்திருக்கிறேன் என்றால் அது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்? மீண்டும் அழைப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்காகதான் நானும் காத்திருக்கிறேன்," என்றார் விஜயலட்சுமி.

இதற்கு முன்பு இதே போன்றதொரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை அஞ்சலியை கபடி ஆடச்சொல்லி அதில் வெற்றியும் கண்ட கபடிப் பெண்கள், விஜயலட்சுமியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன?

வலுக்கட்டாயமாக அவரை கபடி ஆட அழைத்தார்கள். கூந்தலை ஒதுக்கிக் கொண்டு கூலிங்கிளாசையும் இறுக்கி அணிந்து கொண்டு களத்தில் குதித்த விஜயலட்சுமியை அத்தனைபேரும் சேர்ந்து பிடித்து அமுக்க, அழாத குறையாக அவுட் ஆனார் அவர். ஏம்ப்பா... உங்களை நம்பி இறங்குனா இப்படிதான் மானத்தை வாங்கறதா? என்று செல்லமாக அவர்களிடம் கோபிக்கவும் செய்தார் விஜயலட்சுமி.

நடிகர் கார்த்தி, விவேக், அஞ்சலி, கஸ்து£ரி, என்று திரையுலகம் சார்பில் கபடிக்காக ஒத்துழைப்பு கொடுத்து வரும் இவர்களை கபடி வீரர்களும் வீராங்கனைகளும் கொண்டாடி வருகிறார்கள்.

நடிகர் நடிகைகள் கலந்து கொண்ட இந்த கலக்கல் கபடி கே.பி.எல் நிகழ்ச்சியின் சிறப்பு முன்னோட்டம் ஆகஸ்ட் 15 ந் தேதி சுதந்திர தினந்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இந்த போட்டி, தொடர் நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரம் சனி கிழமை இரவு 8 மணியிலிருந்து 9 மணி வரையிலும், ஞாயிறன்று மதியம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரையிலும் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

நிகழ்ச்சி தயாரிப்பு- பைரவா கிரியேஷன்ஸ், ஜெயம் விஷன்ஸ்

 

நடிப்பு ஆசை எட்டிப் பார்க்க... ராதாவும் செட்டைப் பார்க்க... தெறித்து ஓடும் இயக்குநர்கள்!

Radha Wishes Start Second Innings

முன்னாள் நடிகைகள் தங்கள் வாரிசு மகள் அல்லது மகள்களுடன் செட்டுக்கள் வந்து போவதையே தாங்க முடியாது இயக்குநர்களுக்கு. இதில், மீண்டும் மேக்கப் போட வேண்டும் என நச்சரிக்க ஆரம்பித்தால்...?

முன்னாள் கனவுக் கன்னி ராதா மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்....

-இப்படியொரு செய்தி அண்மைக் காலமாக கோலிவுட்டை பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

நடிகைகள் கார்த்திகா- துளசியின் அம்மா என்ற முறையில் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போய் வரும் ராதாவைப் பார்த்த, அவரது முன்னாள் ரசிகர்கள், 'இன்னும் இளமை மாறாம அப்படியேதான் இருக்கீங்க... இன்னொரு ரவுண்டு வரலாமே' என்று படுபயங்கர பொய்யைச் சொல்லி வைக்க, ஒரு பிரஸ் மீட் வைத்து, நடிக்க ரெடி என அறிவிக்கலாமா? என ஆலோசனை கேட்டு வருகிறாராம்.

அத்துடன் சும்மா சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கிற சின்னப்பசங்க படமெல்லாம் வேணாம்... கே வி ஆனந்த் மாதிரி இயக்குநர்கள் படங்கள்ல வாய்ப்பு வந்தா, செகன்ட் இன்னிங்ஸை ஸ்டார்ட் பண்ண தோதா இருக்கும் என்று வேறு கூறி வைத்துள்ளாராம்.

என்னது.. கேவி ஆனந்த் சார்... அதுக்குள்ள நார்வே கிளம்பிட்டீங்களா!

 

விஜய்யின் 'யோஹன் அத்தியாயம் ஒன்று' - வரூம், ஆனா...!

Vijay S Yoham Postponed Indefinitel

சென்னை: விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்குவதாக இருந்த யோஹன் அத்தியாயம் ஒன்று, காலவரையின்றி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் அக்டோபரில் இந்தப் படம் தொடங்கும் என இயக்குநர் கவுதம் மேனன் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலாக, ஏ எல் விஜய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து, கால்ஷீட்டும் ஒதுக்கிக் கொடுத்துள்ளாராம் விஜய். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் பிரபல பைனான்ஸியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பதை ஏற்கெனவே 'ஒன்இந்தியா தமிழ்' தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

சமீபத்தில் ஏஎல் விஜய் தான் இயக்கிய தாண்டவம் படத்தை விஜய்க்குப் போட்டுக் காட்டியுள்ளார். அதைப் பார்த்துப் பாராட்டிய விஜய், 'அடுத்து நம்ம படம்தான். நவம்பரில் ஸ்டார்ட் பண்ணலாம்' என கூறியுள்ளதாகத் தெரிகிறது.

துப்பாக்கி பட வேலைகள் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிகிறதாம். அதற்கு அடுத்த மாதம் விஜய் ஒரு மாதம் வெளிநாட்டில் ஓய்வெடுக்கப் போகிறாராம்!

ஏற்கெனவே பகலவன் படத்தில் விஜய் நடிப்பார் என சீமான் அறிவித்து, அந்தப் படம் அப்படியே நின்றுபோனது நினைவிருக்கலாம்!

 

துப்பாக்கி படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கியது விஜய் டிவி!

Vijay Tv Grabs Thuppakki Rights   

சென்னை: விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் துப்பாக்கி படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெரும் விலை கொடுத்து விஜய் டிவி வாங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

பெரிய பட்ஜெட் படங்களை வாங்க, பெரும் பட்ஜெட் போட்டு களத்தில் இறங்கியுள்ளன ஜெயா டிவியும் விஜய் டிவியும். சன் டிவி இந்த விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறது.

கோச்சடையான், மாற்றான், விஸ்வரூபம் போன்ற படங்களின் ஒளிபரப்பு உரிமையை இதுவரை இல்லாத அளவு பெரிய விலைக்கு வாங்கியது ஜெயா டிவி.

தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று களத்தில் குதித்துள்ள விஜய் டிவி, துப்பாக்கி படத்தின் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனாலும் இது குறித்த விவரங்களை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவும் சரி, விஜய் டிவி தரப்பும் சரி ரகசியமாகவே வைத்துள்ளது.

எப்படியும் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆகணும்!

 

'வரூம்‌ ஆனா‌ வரா‌து...' என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா‌ மரணம்!

Popular Comedian Ennathe Kannayya Passes Away

பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ என்‌னத்‌தே‌ கண்ணையா நேற்று மாலை திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

1950ம்‌ ஆண்‌டி‌ல்‌ வெ‌ளி‌யா‌ன நா‌கை‌யா‌ நடி‌த்‌த 'ஏழை‌படும்‌ பா‌டு' படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ நடி‌கரா‌க அறி‌முகமா‌னவர்‌ என்‌னத்‌தே‌ கண்‌ணை‌யா. தொ‌டர்‌ந்‌து எம்ஜிஆருடன் நம்‌நா‌டு படத்தில் ரங்காராவின் உதவியாளராக நடித்திருந்தார்.

நா‌ன்‌, முன்‌றெ‌ழுத்‌து உட்‌பட 250க்‌கும்‌ மே‌ற்‌பட்‌ட படங்‌களி‌ல்‌ நடி‌த்‌தவருக்கு, பெரும் புகழ் கிடைத்தது ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தில். யானைப்பாகனாக அவர் நடித்த காட்சிகள் எண்பதுகளில் பிரபலம்.

தொடர்ந்து ரஜினி, கவுண்டமனியுடன் மன்னன் படத்தில் நடித்தார்.

வடிவேலுவுடன் அவர் நடித்த தொட்டால் பூ மலரும் படத்தின் 'வரூம் ஆனா வராது' நகைச்சுவை காட்சி மிகப் பிரபலமானது.

'தம்பி நீங்க எம்ஜிஆர் மாதிரியே தகதகன்னு மின்றீங்க', என அவர் வடிவேலுவைப் பார்த்து சொல்லும் வசனம் இன்றும் பலரால் பல அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது.

வயதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உழைத்து வந்தார் கண்ணையா. தனது தள்ளாத வயதிலும் கூட, பல படங்களில் நடித்து வந்தார். சமீப வருடங்களில் வந்த வேதம், படிக்காதவன், எம்டன் மகன் போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

வசனம் பேசும்போது, அடிக்கடி என்னத்தே என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது இவரது பாணி. அதனால் இவர் பெயருடன் அந்த என்னத்தே-வும் ஒட்டிக் கொண்டது.

இந்‌த வயதி‌லும்‌ நகை‌ச்‌சுவை‌யா‌க பே‌சி‌ சி‌ரி‌க்‌க வை‌த்‌துக்‌ கொ‌ண்‌டி‌ருந்‌தார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் சா‌ப்‌பி‌ட்‌டு படுத்‌தவர் மா‌லை‌‌ 4 மணி‌க்‌கு காலமாகிவிட்டார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.

கடந்‌த நா‌ன்‌கு வருடத்‌தி‌ற்‌கு முன்‌பு‌ அவரது மனை‌வி‌ ரா‌ஜம்‌ கா‌லமா‌னா‌ர். இவர்‌களுக்‌கு அசோ‌கன்‌, சா‌ய்‌கணே‌ஷ்‌ என இரு மகன்‌களும்‌, அமுதா‌, தனலட்‌சுமி‌, மகே‌ஸ்‌வரி‌, சண்‌முகப்‌பி‌ரி‌யா‌ என நா‌ன்‌கு மகள்களும்‌ உள்‌ளனர். அனை‌வருக்‌கும்‌ தி‌ருமணம்‌ செய்து வைத்துவிட்டார்.

ரா‌யப்‌பே‌ட்‌டை‌ ரா‌யி‌ட்‌ கா‌லனி‌யி‌ல்‌ உள்‌ள அவர் வீ‌ட்‌டி‌ல்‌ உடல் வை‌க்‌கப்‌பட்‌டுள்‌ளது. புதன்கிழமை மா‌லை‌ 4 மணி‌க்‌கு அவரது இறுதி‌ ஊர்‌வலம்‌ நடை‌பெ‌றுகி‌றது.

மே‌லும்‌ வி‌பரங்‌களுக்‌கு அவரது மகன்‌ சா‌ய்‌கணே‌ஷ்‌ அலைபேசி எண் - 80156 15535

 

விஜய் படம்.... 'கன்னித்தீவு கதை'யாய் தொடரும் தடை!!

Chennai Court Extends The Ban On Thuppakki

சென்னை: விஜய் நடிக்கும் படத்துக்கு வைக்கப்பட்டுள்ள 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்துத்துள்ளது சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம்.

சென்னை பெருநகர 2-வது துணை உரிமையியல் நீதிமன்றத்தில், விருகம்பாக்கத்தை சேர்ந்த ரவிதேவன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், 'கள்ளத்துப்பாக்கி என்ற படத்தை தயாரித்து வருகிறேன். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும், துப்பாக்கி என்ற படத்தை கலைபுலி தாணு தயாரிக்கிறார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், 'துப்பாக்கி' என்ற தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில், எதிர்மனுதாரர்களான கலைபுலி தாணு, தென்னிந்திய திரைப்படம் வர்த்தக சபை ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி திருமகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலைபுலி தாணு உள்ளிட்டோர் தாக்கல் செய்த பதில் மனுவுக்கு மனுதாரர் ரவிதேவன் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து இந்த வழக்கு வரும் 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி திருமகள் உத்தரவிட்டார்.

துப்பாக்கிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்படுவது இது நான்காவது முறையாகும். இதனால் இந்தத் தலைப்பு கிடைக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு.

 

நல்ல வாய்ப்புக்கள் வந்தால் நடிப்பேன் – நடிகர் ரிஷி

Waiting A Good Character Actor Rishi

நிமிடத்திற்கு நிமிடம் கலாட்டா, பங்கேற்பாளர்கள், பார்வையாளர்களிடம் காட்டும் குறும்பு, காலில் சக்கரம் கட்டியதுபோல செட்டின் நாலா பக்கமும் ஓடி ஓடி பேசுவது என ‘கையில் ஒரு கோடி ஆர் யூ ரெடி' நிகழ்சியை கலக்கலாக நடத்திசென்றுக்கொண்டிருக்கிறார் ரிஷி.சினி

கேரளாவும் குஜராத்தும் இணைந்த கலவை ரிஷி. அப்பா மலையாளி, அம்மா குஜராத்தி. ப்ளஸ்டூ படித்து முடித்ததும் எஞ்ஜினியரிங் படிக்கவேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம். ஆனால் அதற்கு கட்டுப்படாமல் லயோலாவில் விஸ்காம் படித்திருக்கிறார். 19 வயதில் ரிஷி இயக்கிய சன்ஷைன் பாய்ஸ் படம் பல பாராட்டுகளை பெற்றுள்ளதாம்.

விஸ்காம் படிக்கும்போது மீடியா வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. விஜய் டி.வி.யில் வெளியான இது ஒரு காதல் கதை தொடரில் நடித்த ரிஷி, தெலுங்கு தொடர்களிலும் நடித்திருக்கிறார். விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் வேலை பார்த்த அனுபவம், டீலா நோ டீலா நிகழ்ச்சியாக தொடர்ந்தது. ரிஷிக்கு மிகப்பெரிய பிரேக் அது. அதைத் தொடர்ந்து வந்ததுதான் கையில் ஒரு கோடி நிகழ்ச்சி இது பட்டி தொட்டி எங்கும் பாப்புலர் ஆக்கியுள்ளது.

ரிஷியின் சினிமா பயணம் இன்னும் சரியான தொடங்கவில்லை. தொடக்கம், ஆனந்த தாண்டவம், மந்திரப்புன்னகை, பயணம், மிரட்டல் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். சில விளம்பரப்படங்களிலும் நடித்து வருகிறார் ரிஷி.