சிவகார்த்திகேயனுடன் நெருக்கமா? - மறுக்கிறார் அஞ்சலி

சிவகார்த்திகேயனுடன் காதல் வயப்பட்டுள்ளதாக வரும் செய்திகளை மறுத்துள்ளார் நடிகை அஞ்சலி.

சிவகார்த்திகேயனும் அஞ்சலியும் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த சில நாட்களாக ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல் பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக எடுத்துக் கொண்ட செல்பி படமும் இணையத்தில் உலா வருகிறது.

Anjali denies affair with Sivakarthikeyan

ஏற்கெனவே திருமணம் ஆனவர் சிவகார்த்திகேயன். அஞ்சலி ஏற்கெனவே சித்தியுடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறியவர்.

சிவகார்த்திகேயன் இப்போது பாக்ஸ் ஆபீசில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அஞ்சலி சிறிய இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையில்தான் இருவருக்கும் திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்திகளை அஞ்சலியின் மேனேஜர் மறுத்துள்ளார்.

அவர் கூறுகையில், "அஞ்சலி சமீபத்தில் சென்னைக்கு வரவே இல்லை. படப்பிடிப்புகளில் பங்கேற்பதோடு சரி. சிவகார்த்திகேயனை சமீபத்தில் அவர் சந்திக்கவே இல்லை. கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடிகர்- நடிகைகள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் பங்கேற்றார்கள். அப்போதுதான் இருவரும் சந்தித்தார்கள். சிவகார்த்திகேயனையும், அஞ்சலியையும் இணைத்து வெளியான செய்தியில் உண்மை இல்லை. தவறானவை,'' என்றார்.

ஆனால் சிவகார்த்திகேயன் இதுகுறித்து எதுவும் கூறவில்லை.

 

டெர்மினேட்டர் 5 - மீண்டு(ம்) வருகிறார் அர்னால்ட்

லாஸ் ஏஞ்செல்ஸ்: ஹாலிவுட் படங்களில் ஏதாவது ஒருபடம் வெற்றியடைந்து விட்டால் போதும் உடனே ரீபூட் முறையைப் பயன்படுத்தி அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் தொடங்கி விடுவார்கள். அதென்ன ரீபூட் எனக் கேட்கிறீர்களா ஒரு படம் வெற்றியடைந்து விட்டால் அதன் கதைக் கருவை மட்டும் வைத்துக் கொண்டு அடுத்தடுத்த பாகங்களை உருவாகுவது.

ஹாலிவுட்டில் ஏற்கனவே ஹல்க், சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இந்த வரிசையில் டெர்மினேட்டர் படங்களும் இணைந்துவிட்டன. எல்லாப் படங்களிலும் கதை ஒரே மாதிரித்தான் இருக்கும் திரைக்கதை, நடிகர், நடிகைகள் மற்றும் காட்சிகள் போன்றவை காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி இருப்பார்கள். டெர்மினேட்டர் படங்கள் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்து முறையே வெற்றிபெற்றுவிட்டதால் தற்போது 5 வது பாகத்தை மீண்டும் ஆக்க்ஷன் நடிகர் அர்னால்டை வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Arnold Schwarzenegger and Terminator Genisys: he's back, again

டெர்மினேட்டர் முதல் பாகம் 1984 ல் வெளிவந்து வெற்றி பெற்றது, தொடர்ந்து இந்த 30 வருடங்களில் இதுவரை ஜட்ஜ்மென்ட் டே , ரைஸ் ஆப் தி மெசின் மற்றும் டெர்மினேட்டர் 4 சால்வேசன் ஆகிய மூன்று டெர்மினேட்டர் சீரீஸ் படங்கள் வந்து வசூலில் குறைவைக்காமல் ஓடியதால் தற்போது இந்த வருடம் அதன் 5 ம் பாகமான டெர்மினேட்டர் ஜெனிசிஸ் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

அர்னால்ட்

ஹாலிவுட் நடிகர் அர்னால்டைப் பற்றி நமது தாய்த்திரு தமிழ்நாட்டில் அறியாதவர்கள் குறைவே நேற்று முளைத்த பொடிசுகள் முதல் பிரபல நடிகர்கள் வரை அர்னால்டை தங்கள் ரோல் மாடலாக எடுத்துக் கொள்ளாதவர்கள் இங்கு குறைவுதான் நீங்கள் எந்த ஜிம்மிற்கு சென்றாலும் அங்கு அர்னால்டின் புகைப் படத்தைதான் முதலில் ஒட்டியிருப்பார்கள். அவரை மாதிரி உடற்கட்டு வேண்டும் என்று தினசரி உடற்பயிற்சியில் தங்களை வருத்திக் கொல்லும் இளைஞர்களை நீங்கள் எங்கெங்கு சென்றாலும் காணலாம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அர்னால்ட் டெர்மினேட்டர் படங்களின் மூலம் உலக அளவில் புகழ் பெற்றவர் அந்தக் கதையை இவரை மனதில் வைத்தே எழுதி இருப்பார்கள் போல.

டெர்மினேட்டர் படங்களின் கதை என்ன

இயந்திரங்களிடம் இருந்து மனிதர்களை காப்பாற்றுவது தான் டெர்மினேட்டர் படங்களின் கதை இதைக் காலத்திற்கு தகுந்தவாறு மாற்றி இயந்திரங்களில் நல்ல இயந்திரம் கெட்ட இயந்திரம் மற்றும் எதிர்கால உலகில் இயந்திரங்களின் பங்கு எப்படி இருக்கும் போன்றவற்றை கொஞ்சம் மசாலா கலந்து அழகிய படமாக மாற்றி நம்மை யோசிக்க விடாமல் செய்து படத்தைப் பார்க்க வைப்பதில் அடங்கியிருக்கிறது படத்தை தொடர்ந்து இயக்கிவரும் இயக்குனர்களின் மூளை.

டெர்மினேட்டர்

டெர்மினேட்டர் படத்தின் முதல் பாகம் அக்டோபர் மாதம் 1984ம் ஆண்டு ஒரு சுபயோக சுபதினத்தில் வெளிவந்தது, அர்னால்டுடன் மைகேல் பீன், லிண்டா ஹாமில்டன் மற்றும் பால் வின்பீல்ட் நடித்து இருந்த இந்தப் படத்தை இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி இருந்தார். கதை 2029 ல் நடகிறது அப்போது இந்த உலகத்தை இயந்திரங்கள் ஆளுகின்றன 1984ம் வருடம் ஒரு மனிதக் குழந்தை பிறக்க இருக்கிறது அந்தக் குழந்தை பிறந்தால் ஆபத்து என்பதால் ஒரு இயந்திரத்தை அனுப்பி (அர்னால்ட்) அந்தக் குழந்தையின் தாயைக் கொல்ல சொல்லுகின்றன இயந்திரங்கள். அதே நேரம் மனிதர்களும் கைல் ரீஸ் என்னும் ஒரு மனிதரை அனுப்பி அந்தக் குழந்தையை காப்பாற்ற சொல்கின்றனர், கைல் ரீஸ் இயந்திர மனிதரிடம் இருந்து அந்தக் குழந்தையைக் காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை. 6.4 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 78.4 மில்லியன்களை வசூலித்து சாதனை புரிந்தது படம்.

டெர்மினேட்டர் 2 தி ஜட்ஜ்மென்ட் டே

டெர்மினேட்டர் படத்தின் இரண்டாம் பாகமான தி ஜட்ஜ்மென்ட் டே சுமார் ஏழு வருடங்கள் கழித்து வெளிவந்தது, ஒருசில நடிகர்கள் மட்டும் படத்தில் மாறியிருந்தனர் படத்தின் கதை இதுதான் மனிதர்கள் வாழும் இந்தப் பூமியில் இரண்டு வகையான இயந்திரங்கள் தோன்றுகின்றன, ஒன்று நல்ல இயந்திரம் மற்றொன்று நல்ல மனிதர்களை அழிக்கத் துடிக்கும் கெட்ட இயந்திரம். நல்ல இயந்திரமாக வரும் அர்னால்ட் கெட்ட இயந்திரத்திடம் இருந்து மனிதர்களைக் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் கிளைமாக்ஸ். படம் ஏழு வருடங்கள் கழித்து வந்ததினாலோ என்னவோ பேய் ஓட்டம் ஓடி வசூலை வாரிக் குவித்தது 100 மில்லியன் செலவில் எடுக்கப் பட்ட இந்தப் படம் சுமார் 520 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

டெர்மினேட்டர் 3 ரைஸ் ஆப் தி மெசின்ஸ்

1997 ல் நிறுத்தப் பட்ட ஜட்ஜ்மென்ட் டே நிறைவேற்றப் படுகிறது இந்தப் பாகத்தில் 2004 ல் முதல் பாகத்தில் பார்த்த அந்தக் குழந்தை பிறந்து தற்போது இளைஞனாக மாறி விடுகிறான் (ஜான் கானர் ) அவனது அம்மா இறந்து விடுகிறார். இயந்திரங்களுக்குப் பயந்து தலைமறைவு வாழக்கை வாழும் ஜானை கொள்ள ஒரு அழகான இயந்திரத்தை பெண்ணாக மாற்றி அனுப்புகிறது ஸ்கைநெட் குழு. அந்த இளைஞனக் காப்பாற்றும் நல்ல இயந்திரமாக அர்னால்ட். இருவருக்கும் இடையேயான சண்டையில் ஜானைக் காப்பாற்றப் போராடும் அர்னால்ட் அந்தப் போராட்டத்தில் வென்றாரா இல்லையா என்பதுதான் கதை. அதிரடியான ஆக்சன்களுடன்2003ல் வெளிவந்த இந்தப் படம் 188 மில்லியன் செலவில் எடுக்கப் பட்டு 433 மில்லியன் வசூலைக் குவித்தது. ஒரே ஒரு மாற்றமாக இந்தப் படத்தின் இயக்குனராக ஜோனாதன் மாஸ்டோ படத்தை இயக்கியிருந்தார்.

டெர்மினேட்டர் 4 சால்வேசன்

டெர்மினேட்டர் படங்கள் என்றாலே அர்னால்ட் தான் ஹீரோ என்னும் மக்களின் நம்பிக்கையை உடைத்தெறிந்து 2009ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அதன் விளைவை படத்தின் வசூலில் தெரிந்து கொண்டது. படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் எம்சிஜி, இந்தக் கதை கொஞ்சம் குழப்பமானது தான் இந்த முறை ஜான் கானர் ஸ்கைநெட்டுடன் போராட நட்சத்திரமாக மாறிவிடுகிறான், அத்துடன் ஒரு போரை ஸ்கைநெட்டுடன் அரங்கேற்றி வெற்றி பெறுகிறான், ஆனால் கதையில் ஒரு ட்விஸ்ட் இந்த முறை ஜான் கானரை அழிப்பதற்குப் பதிலாக அவனுடைய அப்பாவை (முதல் பாகத்தில் ஒரு மனிதன் வந்து அந்தக் குழந்தையை காப்பாற்றுவாரே) அழிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது ஸ்கைநெட். ஆனால் அந்த இயந்திரம் தன்னை மனிதன் என்று நம்பிக் கொண்டு ஜானுடன் சேர்ந்து பணிபுரியும் ஒரு கட்டத்தில் போரினால் ஜான் இறந்து போகும் சூழல் ஏற்பட தனது இதயத்தை ஜானுக்கு கொடுத்து பார்ப்பவர்களின் கண்ணில் நீரை வரவழைத்து இறந்து விடும் அந்த இயந்திரம். கதையை படிக்க முடியல தானே அர்னால்ட் இல்லாத குறை படத்துல பெரிசா தெரிஞ்சிடக் கூடாதுன்னு இந்த மாதிரி கதையைச் சொதப்பி இருந்தாங்க. படத்தோட வசூல் என்னவோ சும்மார் தான் 200 மில்லியன் செலவில எடுத்த இந்தப் படம்  71 மில்லியனோட வசூல முடிச்சிக்கிருச்சி.

டெர்மினேட்டர் ஜெனிசிஸ்

மீண்டும் நம்ம அர்னால்டைக் கொண்டுவந்து விட்டார்கள் படத்தில் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது படம் மூன்ற பாகங்களாக எடுக்கப் படுகிறது என்றும் முதல் பாகம் 2016 இரண்டாம் பாகம் 2017 மூன்றாம் பாகம் 2018 லும் வெளியாக இருக்கிறதாம் மூன்றிலும் அர்னால்ட் தான் ஹீரோ மூன்று பாகங்களையும் இயக்குபவர் இயக்குனர் ஆலன் டெய்லர், கிட்டத்தட்ட சுமார் 520 கோடியில் மூன்று பாகங்களும் வெளிவர இருக்கிறது. டிரைலர் வெளியான சிலமணி நேரங்களுக்குள்ளேயே 30 லட்சம் பேர் டிரைலரைக் கண்டு களித்திருக்கிறார்கள், அர்னால்டின் ஆதிக்கம் இந்தப் படத்தில் மிகவும் கம்மியாக உள்ளதாக டிரைலரைப் பார்த்தவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். அடுத்த மாதம் ஜூன் 25 அன்று வெளியாகும் இந்தப் படத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது, எதிர்பார்ப்பைப் படம் பூர்த்தி செய்யுமா பார்க்கலாம்.

ஒரு மெஷின வச்சே படத்த இன்னும் எத்தன காலத்துக்குத் தான் ஓட்டுவீங்க...

 

கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம்.. இயக்குநர் சங்கத்தில் திறப்பு

தமிழ் நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் கே பாலச்சந்தர் பெயரில் திரையரங்கம் இன்று திறக்கப்பட்டது.

உதவி இயக்குநர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரையிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

New theater in the name of K Balachander

இந்த திரையரங்கிற்கு இயக்குநர் பாலச்சந்தரின் நினைவாக 'இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் அரங்கம்' என்று பெயர் சூட்டப் பட்டு. இயக்குனர் பாரதிராஜாவால் இன்று திறக்கப்பட்டது.

நாற்பது உதவி இயக்குநர்கள் குறும்படங்களை இயக்கி உள்ளார்கள். அதில் இரண்டு குறும்படங்கள் இன்று திரையிடப்பட்டன. இரண்டு படங்களும் சிறந்த படங்கள் என்று அவற்றின் இயக்குநர்களை பாரதிராஜா பாராட்டினார்.

New theater in the name of K Balachander

'பாலசந்தர் தமிழ் திரையுலகில் பல வெற்றிகளைக் கண்டவர். பல சாதனைகளைப் பதிவு செய்தவர். அவரைப் போலவே இளம் இயக்குநர்களும், நாளைய இயக்குநர்களும் தங்களது சாதனைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்பது எனது ஆசை' என்றார் பாரதிராஜா.

விழாவில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பி .வாசு,கே. பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டு குறும்படங்களை இயக்கிய உதவி இயக்குநர்களை பாராட்டிப் பேசினார்கள்.

New theater in the name of K Balachander

சங்கத்தின் தமிழ் வெள்ளித் திரை என்ற இணையதளத்தை கே.பாக்யராஜ் துவைக்கி வைத்தார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைபுலி. எஸ்.தாணு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலச்சந்தர், பாரதிராஜா இருவரை பற்றிய குறும்படங்களை துவைக்கி வைத்தார்.

சங்கத்தின் தலைவர் விக்ரமன் எல்லோரையும் வரவேற்றுப் பேசினார்.

 

துடி... காலை 6 முதல் மாலை 6 மணிக்குள் நடக்கும் விறுவிறு சம்பவங்கள்!

மைன்டிராமா என்ற பட நிறுவனம் சார்பாக ரிதுன் சாகர், ஜி.லஷ்மி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் துடி.

இந்த படத்தில் அபிநயா நாயகியாக நடிக்கிறார். சுமன், பிரமானந்தம், சூது கவ்வும் ரமேஷ், நளினி நடிக்கின்றனர். படத்தின் இன்னொரு நாயகியாக பிரேர்னா நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் முன்னணி நடிகர் ஒருவரும் நடிக்கிறார்.

Thudi, a new thriller on terrorist attack

கமலா தியேட்டரின் அதிபர் சிதம்பரத்தின் மகன் கணேஷ் அமைச்சர் வேடத்தில் நடிக்கிறார்.

நடாஷா ஆதித்யா இசையமைக்கிறார். ரிதுன் சாகர் எழுதி இயக்குகிறார். இவர் யாரிடமும் உதவியாளராக பணியாற்றவில்லை. விஷுவல் படித்து விட்டு நிறைய குறும்படங்கள் இயக்கி, அந்த அனுபவத்தைக் கொண்டு இந்த துடியை உருவாக்கியுள்ளார்.

Thudi, a new thriller on terrorist attack

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் நடக்கும் டெரரிஸ்ட் அட்டாக் தான் கதை. மாலை 6 மணிக்கு துவங்கி காலை 6 மணிக்குள் நடக்கும் சம்பவங்களைத் திரைக்கதையாக்கியிருக்கிறோம். இந்த 12 மணி நேரத்தில் ஏற்படும் மிஸ் கம்யூனிகேசன்தான் கதையின் மையக் கரு.

Thudi, a new thriller on terrorist attack

ஹோட்டல் ரிசப்சனிஸ்ட் ஆக அபிநயா நடிக்கிறார். படம் ஆரம்பித்தவுடன் முடியும் வரை ரசிகர்களை சீட் நுனியில் அமர் வைக்கும் மன நிலையில் இருக்க வைக்கும் இந்தக் கதை. இதற்காக சென்னையில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் இண்டீரியர் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

சென்னை, ஹைதராபாத், மூணார் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறோம்," என்றார் ரிதுன் சாகர்.

 

படுக்கையில் கிடந்த வினு சக்கரவர்த்தியை நடக்க வைத்த அபூர்வ மகான்!

சீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அபூர்வ மகான் என்ற படம் உருவாகிறது. இதில் சாய்பாபாவாக நடிக்கிறார் தலைவாசல் விஜய்.

டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக டிஎன்எஸ் செல்லத்துரை தேவர் தயாரிக்க கே.பி.செல்வம் இணை தயாரிப்பில் உருவாகிறது இந்தப் படம்.

Aboorva Mahan based on Shirdi Saibaba

இளம் நாயகனாக சாய்முரளியும், நாயகியாக ரஞ்சனியும் நடிக்கிறார்கள். சுமன், பவர்ஸ்டார், சத்யபிரகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், டெல்லிகணேஷ், பிரேம்குமார், அஜெய்ரத்னம், பாண்டு, சிசர் மனோகர், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணன், அவன் இவன் ராமராஜன், நெல்லை சிவா, போண்டா மணி, ஜோதி முருகன், விஜய் கணேஷ் ஆகியோரும் படத்தில் நடிக்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வினுசக்கரவர்த்தி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வி தஷி இசையமைக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ஆர்.மணிமுத்து.

படம் குறித்து மணிமுத்து கூறுகையில், "சீரடி பாபாவின் அபூர்வ செயல்களை பற்றி நிறைய பேர் நிறைய சம்பவங்களை சொல்வார்கள். அவர் வாழ்கையையும், இன்றைய காலகட்டத்தையும் இணைத்து கதை உருவாக்கப் பட்டுள்ளது.

படத்தை பார்க்கிற யாருமே உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியாது. ஒரு கதாப்பாத்திரத்திற்காக வினு சக்கரவர்த்தியைப் பார்க்க போனோம். அவரால் நடக்கவே முடியாது எப்படி நடிக்க வைப்பீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள். நான் போனபோது அவர் படுக்கையில் படுத்திருந்தார். நான் கதாப்பாத்திரத்தைச் சொல்லி விட்டு, பாபா உங்களுக்கு நல்லதே செய்வார் என கூறிவிட்டு வந்தேன்.

சில நாட்கள் கழித்து அவரே போன் செய்து படப்பிடிப்பு தேதியையும், இடத்தையும் கேட்டார். சொன்னேன் அந்த தேதியில் அவரே காரை விட்டு இறங்கி நடந்து வந்து நடித்துக் கொடுத்தார். டப்பிங்கும் அவரே பேசினார். நடக்கவே முடியாதவர் பாபாவின் ஆசியால் நடித்தது அபூர்வம்தானே. அதுமட்டுமல்ல, நடித்ததற்காக பணம் எதுவுமே வாங்கவில்லை அவர். நிஜமாய் நடந்த அந்த சம்பவம் எங்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தித் தந்தது," என்றார்.

 

விக்ரம் - கவுதம் மேனன் படம் கைவிடப்பட்டது!

விக்ரமை வைத்து கவுதம் மேனன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட படம் கைவிடப்பட்டது.

என்னை அறிந்தால் படம் வெளியானதும், கவுதம் மேனனும் விக்ரமும் ஒரு புதிய படத்தில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநர் கவுதம் மேனனும் ஒப்புக் கொண்டார்.

அய்ங்கரன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கப் போவதாகக் கூறப்பட்டது.

Vikram - Goutham Menon project dropped

ஆனால் அரிமா நம்பி படம் தந்த ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விக்ரம் ஒப்புக் கொண்டிருந்தார். இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது.

இப்போது அந்தப் படத்தை அய்ங்கரன் நிறுவனத்துக்கு கைமாற்றிவிட்டார் தாணு.

இதனைத் தொடர்ந்து, கவுதம் மேனன் - விக்ரம் படத்தை தயாரிப்பதை கைவிட்டுள்ளது அய்ங்கரன் நிறுவனம். மேலும் இளம் இயக்குநர்களிடம் தொடர்ந்து கதை கேட்டு வரும் விக்ரமுக்கு, கவுதம் மேனன் சொன்ன கதையில் அவ்வளவு உடன்பாடு இல்லையாம்.

இப்போதைக்கு ஆனந்த் சங்கர் படம் மற்றும் இளம் இயக்குநர் ஒருவரின் படங்களில் மட்டுமே நடிக்கிறாராம். விஜய் மில்டன் இயக்கத்தில் பத்து எண்றதுக்குள்ள படம் நடித்து வரும் விக்ரம், மீண்டும் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம்.

 

ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை

சென்னை: வரும் ஜூன் இரண்டாம் வாரம் வரை கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தின் பிற மொழி உரிமைகளை விற்கவோ, ரீமேக் செய்யவே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

Interim stay to remake Jigarthanda in any language

'ஜிகர்தண்டா 'திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன்.

இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதத்தை எனக்கு தரவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபத்தில் கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்தப் பிரச்சினையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சினையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமூக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.

தற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்குத் தடை விதித்துள்ளது.''

கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய, சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த, பல கோடி வசூல் செய்த 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிப்பு வந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.

இந்த தடை 11, ஜூன் 2015 வரை, பைவ் ஸ்டார் திரைப்பட நிறுவன உரிமையாளர் கதிரேசன் மீது கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஒப்பந்த மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்த மீறல் காரணமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி ர.மாதவன் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

 

என்னது அனுஷ்கா சர்மாவை ஏமாத்திட்டாங்களா

மும்பை: பாம்பே வெல்வெட் படத்தில உயிரக் கொடுத்து நடிச்ச நம்ம அனுஷ்காவுக்கு பேசினபடி பணம் இன்னும் கொடுக்கலையாம், படத்துல நடிக்கிறதுக்காக கொஞ்சம் அட்வான்ஸ் மட்டும் கொடுத்ததோட அதுக்கு அப்புறம் பணத்தைப் பத்தி மூச்சே விடலையாம் படக்குழு , ஆனா படத்தோட ஹீரோ ரன்பீருக்கு மட்டும் பேசின தொகையில ஒரு பைசா மிச்சம் வைக்காம செட்டில் பண்ணியிருக்காங்க.

Is Anushka Sharma not yet paid for ‘Bombay Velvet’?

பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் அனுராக் காஷ்யப் படம்னு பொண்ணு உயிரைக் கொடுத்து நடிச்சது, அனுராக் கூட ஒரு பேட்டியில நான் பார்த்ததிலே அனுஷ்கா ஒரு மாதிரி ஒரு ஹீரோயின்ன பார்த்ததே இல்ல, பொண்ணு இந்தப் படத்துக்காக ஒரு நாளைக்கு பல கிலோ எடையுள்ள உடைகளை சுமந்து கிட்டு நடிச்சுக் கொடுத்தாங்க நான் பார்த்ததிலே அனுஷ்காவை தான் நல்ல உழைப்பாளி என்பேன்னு பாட்டு மட்டும் தான் பாடல அந்த அளவுக்கு மனுஷன் புகழ்ந்து தள்ளியிருந்தாரு. ஆனா இப்போ சார் எங்க இருக்காரு தெரியுமா பாரிஸ்ல கோடை சுற்றுலாவ குடும்பத்தோட என்ஜாய் பண்ணிட்டு இருக்காரு.

பாம்பே வெல்வெட் படத்த எல்லாரும் ஆர்வமா எதிர்பார்த்தாங்க ஆனா 110 கோடியில பாண்டம் பிலிம்ஸ் தயாரிச்ச இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ்ல பயங்கரமா சொதப்பிடுச்சு படம் இதுவரைக்கும் வசூலிச்ச மொத்த பணமே 22.7 கோடி தான், இதனால பயங்கரமா நொந்து போன ப்ரோடியுசெர்ஸ் இந்தப் படத்தில நடிச்சவங்களுக்கு மட்டும் இல்லாம மத்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் பணம் கொடுக்காம இருக்காங்க. நீங்க யாருக்கு வேணாலும் பணம் கொடுக்காம இருக்கலாம் ஆனா படத்துக்கு தன்னோட உழைப்பைக் கொடுத்து முழுமூச்சா நடிச்சுக் கொடுத்த அனுஷ்காவுக்கு இப்படி பண்ணலாமா?

நீங்க பேசாம விராட் கோலியக் கூப்பிட்டு வந்து நியாயம் கேளுங்க அனுஷ்கா...

 

உண்மைக்குப் புறம்பாகப் பேச வேண்டாம்! - விஷாலுக்கு சரத்குமார் எச்சரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர் பாக நடிகர் விஷால் தவறான கருத்துகளை தெரிவித்து வருவ தாக ஆர்.சரத்குமார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

Sarath Kumar's warning to actor Vishal

தென்னிந்திய நடிகர் சங்கம் புதிய கட்டிடம் கட்டுவது குறித்து நடிகர் விஷால் ஊடகங்களுக்கு பல்வேறு தவறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார். புதுக்கோட்டையிலும் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது குறித்து சங்கத்தின் செயற்குழு, பொதுக்குழுவில் முடிவெடுத்தப்படி கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து சிலருக்கு ஏற்பட்ட சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. நடிகர் விஷால் மற்றும் சிலரை சிறப்பு செயற்குழுவிற்கு வரவழைத்து அவர்களுக்கும் தேவையான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கட்டிட பணிகள் தொடங்காததற்கு காரணம் பூச்சி முருகன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குத்தான் என்பதை விஷால் உள்பட அனைத்து உறுப்பினர்களும் நன்கு அறிவார்கள்.

சங்கக் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று எங்களை போலவே ஆர்வமுடன் இருக்கும் விஷாலின் எண்ணத்தை வரவேற்கிறேன். கலைத்துறையின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் நடிகர் சங்கம் எத்தகைய ஈடுபாட்டோடு செயல்பட்டு வருகிறது என்பதை தமிழ் திரைப்படத்துறை நன்கு அறியும்.

தமிழ் திரையுலகில் ஏற்படும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்ப்பதற்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குனர்கள் சங்கம், பெப்சி போன்ற அமைப்புகள் உடனுக்குடன் கலந்துபேசி ஒன்றுபட்ட முடிவுகளை எடுத்து வருவதையும் அனைவரும் அறிவார்கள். கொம்பன், லிங்கா, உத்தமவில்லன் உட்பட பல்வேறு திரைப்படங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடிகர் சங்கம் முழுமனதுடன் பாடுபட்டது அனைவருக்கும் தெரியும்.

தலைவரை எதிர்க்கவில்லை, ஆனால் சங்கக்கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்று அடிக்கடி விஷால் தெரிவித்து வருகிறார். கட்டிடம் கட்ட வேண்டும் என்பது அவரது ஆசையாக இருக்கலாம். ஆனால் அது எங்கள் லட்சியம். கட்டிடம் கட்ட போட்ட ஒப்பந்தத்தை அந்த பொதுக்குழுவில் கைதட்டி வரவேற்றவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வழக்குப் போடுகிறார்கள்.

அவர்களுடன் இணைந்து விஷால் செயல்படுகிறார். இது எந்தவகையில் நியாயம்? நேற்று முன்தினம் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்துக்கு பூச்சிமுருகனை அழைத்து சென்ற விஷாலை, தலைவர் எஸ்.எம்.இசையரசன், செயலாளர் எம்.பி.சுப்பிரமணியன், பொருளாளர் டி.வி.ராஜேந்திரன் சங்க நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட உரிமை பெற்ற புதுக்கோட்டை உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நடிகர் சங்கத்தில் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பது போல, அவ்வப்போது பேட்டி கொடுத்துக்கொண்டு உண்மைக்கு புறம்பாக பேசிவருவது வேதனை அளிக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த இனியாவது விஷால் இத்தகைய செயல்களில் மீண்டும் ஈடுபட வேண்டாம் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

 

மாசு படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு.. காசியில் 8 மணி காட்சி ரத்து!

சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.

வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தில் முதல்நாள் முதல் காட்சிக்காக அனுமதி கேட்டிருந்தனர்.

No special shows for Massu

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்காக அப்படத்தை நள்ளிரவிலிருந்தே திரையிடுவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் லிங்காவுக்கு நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடந்தன.

விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால், சூர்யாவின் மாஸ் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சென்னையில் காலை 8 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை காசி தியேட்டரில் மாசு படத்தின் சிறப்புக் காட்சிக்கு ரசிகர்கள் குறைவாக வந்ததால், ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

 

ஆட்டோ ஜானி இன்னொரு பாட்ஷாவா அலறும் ஆந்திரா

ஹைதராபாத்: இன்னைக்கு நம்ம மெகா ஸ்டார் சிரஞ்சீவி பத்தி எதுவுமே விஷயம் இல்லன்னு சொல்லிட்டு இருக்கும்போதே அடுத்த ஒரு திரிய கிள்ளிப் போட்டு அதில குளிர்காய அரம்பிசிட்டங்க நம்ம மெகா ஸ்டார் ரசிகர்கள், விஷயம் இதுதான் சிரஞ்சீவியோட 150 வது படத்துல நம்ம தலைவர் ஆட்டோ ஜானியா வாரார் இது பத்தாதா அவரப் பத்தி பக்கம்பக்கமா எழுதற அளவுக்கு அந்தப் படத்தோட கதை இதுதான்னு ஆளாளுக்கு ஒரு கதைய சொல்றாங்க.

Chiranjeevi’s auto jaani another  baasha  movie

நம்ம ரஜினி சார் பாட்ஷா படத்தில ஆட்டோ டிரைவரா வருவார் ஆனா பிளாஷ்பேக்ல ஒரு டானா வருவார், அதே மாதிரி மெகா ஸ்டாரும் டானா நடிக்கிறாருன்னு யாரோ ஒருத்தர் சொல்லிட்டுப் போக அட உண்மையிலே அப்படித் தான்னு சொல்றாங்க. படத்தோட டைட்டில் சிரஞ்சீவியோட காஸ்ட்யூம் எல்லாமே பாட்ஷா மாதிரி இருக்கே இது நிஜமாவே பாட்ஷா பட ரீமேக்கான்னு நெட்டில கும்மியடிக்குது இன்னொரு குரூப்.

நீண்ட நாள் கழிச்சு நம்ம தலைவரு நடிக்க வராரு ரீமேக் படத்துல நடிச்சு நம்மள ஏமாத்திடுவாரோன்னு அவரது ரசிகர்கள் பயந்து போய் இருக்காங்க, பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் படம் அப்படில்லாம் ஆண்டவன் நம்மளக் கைவிட்டுட மாட்டாருன்னு இன்னொரு பக்கம் அவரது ரசிகர்கள் கடவுள வேண்டிட்டு இருக்காங்க.கதை இதுதான்னு முறைப்படி இயக்குனர் சொல்ற வரைக்கும் ஆளாளுக்கு ஒரு கதைய சொல்லிட்டு திரிய வேண்டியதுதான்.

இவங்க சொல்ற கதைய வச்சி இன்னும் 10 பத்து படம் எடுக்கலாம் போல..

 

ஜான் நாஷ் மரணத்தைத் தாளாமல் பதறிக் கதறியவர்கள்

லாஸ் ஏஞ்செல்ஸ்: எ பியூட்டிபுல் மைன்ட் படத்தின் இன்ஸ்பிரேசன் ஆக விளங்கிய அமெரிக்கக் கணித மேதை ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவுடன் கடந்த வாரம் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். 86 வயதான ஜான் நாஷ் தனது மனைவி அலிசியாவை (82) மரணத்திலும் விட்டுப் பிரியவில்லையே என்று அனைவரும் ஆச்சரியப் பட்டனர். இந்த மேதையின் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து உலகெங்கும் பலபேர் வருத்தம் தெரிவித்து இருக்கின்றனர். அவற்றில் சில முக்கியமான ட்விட்டர் பதிவுகளை இங்கு பார்க்கலாம்.

RIP 'beautiful minds': Russell Crowe mourns the death of John and Alicia Nash

இறப்பிலும் ஒரு சுவாரசியம் என்னவென்றால் தனது மனைவியையும் சேர்த்து தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் என்பதுதான். தனது மனைவி அலிசியாவை திருமணம் செய்த சிறிது வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் அவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் ஜான் நாஷ். இருவருமே சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை எனவே இந்த மோசமான விபத்தில் இருந்து இருவரையும் உயிருடன் மீட்க முடியவில்லை என்று அமெரிக்காவின் காவல்துறை அதிகாரி பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

எ பியுட்டிபுல் மைன்ட் படத்தில் ஜான் நாஷ் பாத்திரத்தில் நடித்து இருந்தவர் ரஸில் க்ரோ நியூசிலாந்த்தைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகரான ரஸில் க்ரோ ஜான் நாஷ் மற்றும் அவரோட மனைவி அலிசியாவோட மரணத்தை தன்னால தாங்கிக்கொள்ள முடியல என்னோட இதயம் துடிக்கிறத நிறுத்திட்டு வெளில போன மாதிரி இருக்கு இறப்பிலும் பிரிவில்லைன்னு நிரூபிச்சிட்டாங்க ஜான் நாஷ் மற்றும் அலிசியா தம்பதி அப்படினு சமூக வலைதளத்தில ரொம்பவே கதறி இருக்காரு.

எ பியுட்டிபுல் மைன்ட் படத்தோட இயக்குனர் ரோன் ஹாவர்ட் ( இந்தப் படத்துக்காக சிறந்த இயக்குனர் விருது வாங்கியிருக்காரு) நோபல்பரிசு வாங்கிய ஒரு மனிதர் இறந்து விட்டார், படத்தின் கதை அந்தத் தம்பதிகள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது என்று கூறியிருக்கிறார்.

நமது பிரதமர் மோடி அவர்களும் ஜான் நாஷ் இறப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில பின்வருமாறு சொல்லியிருக்காரு கணிதத்திற்கு நீண்ட காலம் பணியாற்றிய ஒரு அறிவுஜீவி இறந்துவிட்டார் எனினும் அவர் ஆற்றிய தொண்டுகளின் மூலம் மக்களின் மனதில் அவர் என்றென்றும் நினைவில் இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

காலத்தால் அழியாத கணித மேதை ஜான் நாஷ்...

 

இன்டெர்நெட்டில் வெளியாகிய “மாசு” திரைப்படம் – அதிர்ச்சியில் படக்குழு

சென்னை: சூர்யா நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகியிருக்கும் படம் "மாசு என்கிற மாசிலாமணிa". இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். நயன்தாரா, சமுத்திரகனி, பார்த்திபன், பிரேம்ஜி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் இன்றுதான் இந்தியாவில் வெளியாகிறது. இருப்பினும், வெளிநாடுகளில் இப்படம் நேற்றே திரையிடப்பட்டது. இந்நிலையில் "மாசு" முழுப்படத்தையும் திருட்டுத்தனமாக சிலர் இணைய தளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

MASU film illegally released in Online before official release

தியேட்டரில் இருந்து படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்து இணையதளத்தில் உலாவ விட்டுள்ளனர்.

இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளிவந்துள்ளது குறித்து மாசு படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த இணையதளங்களை முடக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 

நானும் ரெடி… நானும் ரெடி… தயாரான மந்திரம்!

அந்தமாதிரி விசயங்களை கூச்சப்படாமல் பேசி வாசகர்களைக் கவர்ந்தவர் அந்த தொகுப்பாளின். சமையலில் மந்திரம் செய்த அவருக்கு பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பது என்றால் பாயாசம் சாப்பிடுவது போல. தயக்கமே இல்லாமல் பதில் சொல்லுவார். இவரது பேச்சுக்கும், தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்களே இருக்கிறார்களாம். இது ஒருவிதமான மருத்துவ நிகழ்ச்சி என்று கூறும் மந்திரத்திற்கு தயாரின் ஆதரவு அமோகமாக உண்டாம்.

மந்திர நிகழ்ச்சிக்கு புகழை விட விமர்சனம்தான் அதிகம் என்றாலும் அதைப்பற்றி எல்லாம் கவலையில்லையாம் மந்திரத்திற்கு. காரணம் அம்மாவின் ஆதரவு இருக்கும் போது எதற்கு கவலைப்படவேண்டும் என்று கேட்கும் மந்திரத்திற்கு சினிமா ஆசை அதிகமாக இருக்கிறதாம். நடிக்க நானும் ரெடி என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார் மந்திரம். ஆனால் சினிமா இயக்குநர்கள் தயாராக இருக்கணுமே என்கின்றனர் சின்னத்திரை ரசிகர்கள்.

பட்ஜெட் குறைஞ்சாலும் தரம் குறையாதாம்

நட்சத்திர டிவி சேனலின் சீரியல்களுக்கு தனி வரவேற்பு உண்டு. காரணம், கதை, திரைக்கதை அசத்தும் ட்விஸ்ட்கள். அழுகை,ஆர்ப்பாட்டம் என்று எதுவும் இருக்காது.

ஸ்டெடி காமராதானாம், ஒரே இடத்திலேயே காட்சிகளை அமைத்து படமாக்கி விடுகின்றனர். இதனால் செலவு கம்மியாம். ஒரே இடத்தில் படமாக்கினாலும் கதையில் கவனம் செலுத்தினால் சீரியல் ஜெயிக்கும் என்கின்றனர் நட்சத்திர சேனல்காரர்கள்.

 

சிங்கிள் கவிதைக்கு 1 கோடியா

மும்பை: அமிதாப் சார் எனக்கு ஒரு 1 கோடி ரூபாய கொடுத்திட்டு நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க இப்படி ஸ்டிரைட்டா அவர்ட்ட கேட்டா கொடுப்பாரா ஆனா வேறு வழியில்ல இப்போ கொடுத்து தான் ஆகணும் எனக்கு இல்லைங்க அமிதாப் மேல கேஸ் ஒன்னு போட்டு நஷ்ட ஈடு கேட்டவருக்கு, என்னது அமிதாப் மேல கேசான்னு மெர்சலாகாம மேல படிங்க அவரோட பேரு ஜக்பீர் ரதி டாக்டருன்னு சொல்றாங்க அதைப் பத்தி நமக்கெதுக்கு.

Amitabh Bachchan in trouble over 'poem', slapped Rs 1 crore notice

நான் பல தடவ அவரைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்து பலன் இல்லை எனவேதான் தற்போது வக்கீல் நோட்டிஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்னு கேஸ் போட்டவாறு சொல்லி இருக்காரு , விஷயம் இதுதான் ஜக்பீர் ரதி ஒரு கவிதைய எழுதி அதை சமூக வலைத்தளத்தில (அதாவது இது நடந்தது 2006 வது வருசத்தில) அமிதாப்போட பேன்ஸ் ஒருத்தருக்கு போஸ்ட் பண்ணியிருக்காரு அவர் பேரு விகாஸ் துபே.

நம்ம அமிதாப் சார் சும்மா இல்லாம அந்த உலகப் புகழ் பெற்ற கவிதைய தன்னோட பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கத்துல போட்டு அந்தக் கவிதையால பேரும் புகழும் அடைஞ்சிட்டாருன்னு இந்த ஜக்பீர் ரதி கேஸ் ஒன்னு போட்டு இன்னும் 15 நாளைக்குள்ள எனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரணும்னு அவரோட கன்னத்தில அறைஞ்ச மாதிரி கேட்டு இருக்காரு இதுக்கு அமிதாப்போட ரியாக்சன் என்னன்னு தெரியல பாக்கலாம்.

நமக்கெதுக்குப்பா இந்த இந்த கவிஞர் ஆசையெல்லாம்...