பேர்தானே... வெச்சுக்கங்க! - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தில் தன் பெயரை பயன்படுத்திக் கொள்ள எந்தத் தடையும் இல்லை என்று ஜிவி பிரகாஷுக்கு நயன்தாரா அனுமதிக் கடிதம் அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா.

பேர்தானே... வெச்சுக்கங்க! - ஜிவி பிரகாஷுக்கு ஓகே சொன்ன நயன்தாரா

இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆனந்தி. கயல் படத்தில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் தலைப்பு, உயிருடன் இருக்கும் நடிகைகளின் பெயர்களை உள்ளடக்கியிருப்பதால், அவர்களின் அனுமதி வேண்டும் என்பது தயாரிப்பாளர் சங்க நிபந்தனை.

இதனைத் தொடர்ந்து நயன்தாரா, த்ரிஷா இருவரையும் சந்தித்து அனுமதிக் கடிதம் கோரினார் ஜிவி பிரகாஷ். இவர்களில் நயன்தாரா தனது பெயரைப் பயன்படுத்திக் கொள்ள ஆட்சேபணை இல்லை என்று கடிதம் கொடுத்துவிட்டார்.

அடுத்து த்ரிஷாவும் விரைவில் அனுமதி தருவதாகக் கூறியுள்ளாராம்.

இந்தப் படத்தில் பாரதிராஜா, அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்கின்றனர்.

 

வேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ?

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ஐ படம் குறித்து ஏகப்பட்ட எதிர்மறைச் செய்திகள்.

படம் நிதிப் பற்றாக்குறையால் தடுமாறுவதாக கடந்த ஆறேழு மாதங்களாக செய்திகள். படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே ஹீரோயின் எமி ஜாக்ஸன் கம்பி நீட்டிவிட்டார் என்று இன்னொரு செய்தி.

வேறு நிறுவனத்துக்கு கைமாறுகிறதா ஷங்கரின் ஐ?

ஆனால் இன்னொரு பக்கம் பிரமாண்ட ஆடியோ ரிலீசுக்கு தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஏற்பாடு செய்து வருவதாக தகவல் கசிந்தது.

இந்த நிலையில் படத்தை வேறு பெரிய நிறுவனத்துக்குக் கைமாற்றிவிடலாம் என இயக்குநர் ஷங்கர் யோசனை கூறியுள்ளாராம்.

ரிலையன்ஸ் மாதிரி ஒரு நிறுவனத்துக்கு படத்தை மொத்தமாகக் கைமாற்றிவிடுங்கள், அட்லீஸ் ஜூலையிலாவது படத்தை வெளியிட்டுவிடலாம் என்று கோரிக்கை வைத்துள்ளாராம் ஷங்கர்.

இந்தப் படம் மே மாதமே வெளியாகும் என்று ஷங்கர் அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் ஷூட்டிங்கே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி

பெங்களூர்: கன்னட நடிகை ராகினி திவேதியும், நடிகை லட்சுமி ராயும் பொது இடத்தில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளனர்.

அடடே லட்சுமி ராய் கன்னட திரையுலகிற்கு சென்று அங்குள்ள நடிகை ராகினி திவேதியிடம் சண்டை போட்டுள்ளாரா என சட்டென்று ஒரு முடிவுக்கு வந்து விட வேண்டாம். ஸ்ருங்காரா என்ற கன்னட படத்தில் ராகினியும், லட்சுமி ராயும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

நீயா, நானா?: படப்பிடிப்பில் பலப்பரீட்சையில் இறங்கிய நடிகைகள் லட்சுமி ராய், ராகினி திவேதி

அந்த படத்தின் படப்பிடிப்பில் இரண்டு நடிகைகளும் பலசாலியை கண்டறிய முயற்சி கூட செய்யவில்லை புகைப்படத்திற்கு போஸ் தான் கொடுத்துள்ளனர்.

படத்தில் இருவரும் தோழிகளா அல்ல எதிரிகளா என்று தெரியவில்லை. ஆனால் புகைப்படத்திற்கு சந்தோஷமாக சிரித்தபடி போஸ் கொடுத்துள்ளனர். அதை வைத்து தற்போதைக்கு அவர்களுக்குள் லடாய் எதுவும் இல்லை என்று நம்புவோம்.

லட்சுமி ராய் கைவசம் இருக்கும் ஒரே கன்னட படம் இது தான்.

 

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

எம்ஜிஆர் படத்தின் வெற்றிச் செய்திகளை நாமும் எழுதுவோமா என்ற பல நிருபர்களின் கனவை நனவாக்கியிருக்கிறது ஆயிரத்தில் ஒருவன்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் இது. புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன், இன்றைய முதல்வர் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தார்.

அன்றைக்கு தமிழ் சினிமா வசூலில் சரித்திரம் படைத்த இந்தப் படத்தை, 50 ஆண்டுகள் கழித்து டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் வெளியிட்டனர். கிட்டத்தட்ட 100 அரங்குகளில் வெளியான இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு.

ரூ 1 கோடி வசூலுடன் 75வது நாளைத் தொட்டது எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன்!

திரையுலகப் பிரபலங்களும் திரண்டு போய் இந்தப் படத்தைப் பார்த்தனர். மதுரையில் மட்டும் படம் சுமாராகத்தான் போனது. ஆனால் அங்கும் மறுவெளியீடு செய்து வசூலை ஈட்டினர்.

இப்போது இப்படம் சென்னை சத்யம், ஆல்பர்ட் தியேட்டர்களில் 75 நாட்களை தாண்டி ஓடுகிறது. பிற மாவட்டங்களிலும் 100 - வது நாளை நோக்கி ஓடிக்கொண்டுள்ளது இப்படம்.

இதுவரை ரூ.1 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் 75 நாள் விழா சத்யம் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடினர். டைரக்டர் பி.ஆர்.பந்தலு மகன் பி.ஆர்.ரவிசங்கர், எம்.ஜி.ஆரின் மெய் காப்பாளர் கே.பி.ராம கிருஷ்ணன், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் ஆகியோர் விழாவில்

சத்யம் தியேட்டரில் தொடர்ந்து ஹவுஸ் புல் காட்சிகளாக ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடிக் கொண்டுள்ளது.

 

மேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா? நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா? நீங்க சொல்லுங்க!!

நாமக்கல்: நடிகை நமீதா பங்கேற்ற விழா மேடை சரிந்ததால் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. விழாவும் பாதியில் நிறுத்தப்பட்டது.

விழா மேடை சரிந்ததால் லேசான காயத்துடன் அவர் பாதியிலேயே கிளம்பினார்.

நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டியில் நடந்து வரும் பகவதியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு இளைஞர் நாடக நற்பணி மன்றம் சார்பில் "மணவாழ்க்கை" எனும் சமூக நாடகம் நடந்தது.

மேடை சரிஞ்சதால நமீதா விழுந்தாங்களா? நமீதா ஏறினதால மேடை சரிஞ்சதா? நீங்க சொல்லுங்க!!

அதற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சினிமா இயக்குனர் பாக்யராஜ் மற்றும் நடிகை நமீதா அழைக்கப்பட்டிருந்தனர். இரவு 10.30 மணிக்கு நமீதா நாடக மேடைக்கு வந்தார்.

நமீதாவை பார்த்ததும் அங்கிருந்த ரசிகர்களும் மேடையில் ஏறினர். அதனால் மேடை ஒருபுறம் சரிந்தது. மேடையில் அமர்ந்திருந்த நமீதா நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சரிந்து விழுந்தனர்.

அதிர்ச்சியடைந்த நமீதா சிறு காயத்துடன் காரில் ஏறி ஓட்டம் பிடித்தார்.இந்த திடீர் அதிர்ச்சியால் நாடக விழா ரத்து செய்யப்பட்டது.பாவம் மேடையில் இருந்தவர்கள் சரிந்து விழுந்ததுடன் தப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக ஏகத்துக்கும் எடையேறிக் காணப்படுகிறார் நமீதா. உடற்பயிற்சியை தொடராமல் விட்டதாலும், முன்பு போல படங்கள் இல்லாததால் நடிப்புப் பயிற்சி குறைந்து போய் விட்டதாலும் உடல் உப்பி விட்டது நமீதாவுக்கு.. பாவம்.. அதுதான் மேடை பாரம் தாங்காமல் படுத்து விட்டது போல.

 

மூணுஷா பார்ட்டியில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அதிர்ந்த வருங்கால மாமனார்

சென்னை: மூணுஷா பிறந்தநாள் விழாவில் மில்க் நடிகை போட்ட ஆட்டத்தை வீடியோவில் பார்த்து அவரின் வருங்கால மாமனார் அதிர்ச்சி அடைந்துள்ளாராம்.

விரைவில் வெற்றி இயக்குனரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் மில்க் நடிகை மூணுஷாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. இந்நிலையில் அந்த பார்ட்டியில் நடிகைககள் ஆட்டம் போட்ட வீடியோ மில்கின் வருங்கால மாமனார் கையில் கிடைத்துள்ளது.

வருங்கால மருமகளின் ஆட்டத்தை வீடியோவில் பார்த்த மனிதர் அதிர்ந்துவிட்டாராம். உடனே அவர் மகனிடம், ஏற்கனவே இந்த புள்ள நம்ம குடும்பத்திற்கு ஒத்துவருமா என்று ஊரில் உள்ள சொந்தங்கள் எல்லாம் கேட்கிறார்கள். இந்நிலையில் இந்த பெண் இப்படி ஆட்டம் போட்டதை பார்த்தால் அவ்வளவு தான்.

இந்த ஆட்டம் பாட்டத்தை எல்லாம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தால் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தாராம்.

 

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பிரபல பிரிட்டிஷ் நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார்.

ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கும் படம் லிங்கா. இதில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா மற்றும் அனுஷ்கா நடிக்கின்றனர்.

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

இந்த நிலையில் மேலும் ஒரு ஜோடியாக பிரிட்டனைச் சேர்ந்த நடிகை லாரன் ஜே இர்வின் நடிக்கிறார். அவர் ரஜினியுடன் நடிக்கும் காட்சி, புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தில் வெளிநாட்டில் படித்த எஞ்ஜினியராக ஒரு பாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா விடுதலையடைவதற்கு முந்தைய காலத்தில் நடக்கும் கதையில் ரஜினி, லாரன் இர்வின், சோனாக்ஷி நடிக்கிறார்கள்.

கடந்த வாரம் இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மைசூர் வந்தார் லாரன். அவர் பங்கேற்கும் காட்சிகள் முடிந்ததும், "சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது மிகச் சிறந்த அனுபவம். ரவிக்குமார் மாதிரி இயக்குநர் ஒரு ஆச்சர்யம்," எனப் புகழ்ந்தார்.

லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின்!

அத்துடன் கடந்த வாரம் வெளியான ரஜினியின் கோச்சடையான் படத்தையும் பார்த்துப் பாராட்டியுள்ளார்.

பிரிட்டிஷ் படம் ஹார்ட், ஹாலிவுட் படம் வகரி, லண்டனின் புகழ்பெற்ற நாடகங்கள் வெஸ்ட் எண்ட், ஆன்னி, ஆலிவர் போன்றவற்றில் நடித்தவர் லாரன் இர்வின்.

லிங்கா படம் தனக்கு நிறைய இந்தியப் பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

ஆகஸ்டில் சண்டமாருதம்!- தென்காசியில் சரத் பேட்டி

தென்காசி: ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக தான் நடித்து வரும் சண்டமாருதம் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருப்பதாக சரத்குமார் தெரிவித்தார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினரும்,நடிகருமான சரத்குமார் நேற்று மாலை குற்றாலம் ஐந்தருவியில் நிருபர்களை சந்தித்தார்.

அபோது அவர் கூறுகையில், "ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு, தற்போது சண்டமாருதம் படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்துவருகிறேன்.

ஆகஸ்டில் சண்டமாருதம்!- தென்காசியில் சரத் பேட்டி

கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். ஆவணி மோடி, மீனாட்சி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

ராதாரவி,சமுத்திரக்கனி,கன்னடநடிகர் அருன்சாகர்,தம்பிராமையா, கவுரவ வேடத்தில் ராதிகா சரத்குமார் ஆகியோர் நடிக்கின்றனர்.

சென்னை, கும்பகோணம், பொள்ளாச்சி, உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு வாரணாசியில் நடத்தப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் 15தினங்களில் விடியல் படத்தின் பாடல்வெளியிட்டு விழா நடைப்பெறுகிறது.

தலைப்பாக்கட்டி

இந்தப் படத்துக்குப் பிறகு தலைப்பாக்கட்டி என்ற படத்தில் நடிக்கிறேன். தனுஷை வைத்து ஒரு படமும் தயாரிக்கும் திட்டம் உள்ளது," என்றார்.

தலைப்பாக்கட்டி ஓட்டல் விளம்பரத்தில் சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

போகாத பங்கு போட்டுத்தள்ளிய தலைமை!

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வி ஒருபுறம் இருக்க பங்கு விவகாரம்தான் நால்வரில் ஒருவர் நகர்த்தப்பட காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் ஒருவராக இருந்தவர் மீதே நடவடிக்கை பாய என்ன காரணம் என்பதை கதை கதையாக கூறுகின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

மாம்பழ வேட்பாளரை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று அசைன்மென்ட் கொடுக்கப்பட்டும் அதை சரிவர கவனிக்காமல் சாதிப் பாசத்தை காட்டினார் என்று செல்போன் ஆதாரத்தோடு மேலிடத்தில் போட்டு கொடுத்துவிட்டனராம்.

இதுதான் தோல்விக்குக் காரணம் என்று பற்ற வைத்தாலும், சென்னை மாநகராட்சியில் ஒரு டெண்டர் தொடர்பான விஷயத்தில் மேலிடத்துக்கு பங்கு சரிவர போய் சேரவில்லையாம் இதுதான் கோபத்திற்குக் காரணம் என்கின்றனர்.

கடந்த 18ம் தேதி மாலையில்தான் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. மூன்று பேரை உள்ளே வெளியே போட்டு தாக்கிய தலைமை சாமியானவரிடம் இருந்து வெயிட்டான துறையை பறித்துவிட்டு டம்மி துறையை கொடுத்தனர்.

பதவி போகலையே என்ற சந்தோஷத்தில் இருந்த நிலையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருந்து நீக்கியது தலைமை.

சரி, மாவட்டச் செயலாளர் பதவியாவது தப்பியதே என்று எண்ணியவரின் தலையில் 20ம்தேதி மதியம் இடியை இறக்கியது தலைமை, மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் தூக்கப்பட்டார். மாசெ பதவி போனாலும் பரவாயில்லை, அமைச்சர் பதவியாவது மிஞ்சியதே என்று திருப்தி அடைந்தார் சாமி.

ஆனால் அதுவும் கொஞ்ச நேரத்திலேயே பறிக்கப்பட்டது. இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர் சாமியின் ஆதரவாளர்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் சாமிக்கு இது போதாத காலம் என்கின்றனர்.

 

நடிச்சது போதும்.. குட்பை!- நஸ்ரியா நஸீம்

திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று ஒருவழியாக முடிவு செய்து, அதை திரையுலகிலுள்ளவர்களுக்கும் சொல்லிவிட்டாராம் நஸ்ரியா.

சினிமாவில் அறிமுகமானவுடன் பரபரவென புகழ் பெற்றவர் நஸ்ரியா. தமிழிலும் மலையாளத்திலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தன.

இந்த நேரத்தில் தனது வாய்த்துடுக்கால் சர்ச்சைகளிலும் சிக்கினார்.

நடிச்சது போதும்.. குட்பை!- நஸ்ரியா நஸீம்

இதற்கிடையில் திடீரென அவருக்கும் நடிகர் பகத் பாஸிலுக்கும் காதல் என செய்தி கிளம்பியது. அதே வேகத்தில் அந்தக் காதலை உறுதி செய்து, திருமண நிச்சயதார்த்தமும் செய்து கொண்டனர் நஸ்ரியாவும் பகத் பாசிலும்.

இருவருக்கும் வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்துக்குப் பிறகும் நடிக்க வேண்டும் என்பது நஸ்ரியாவின் ஆசை.

ஆனால் பாஸில் வீட்டில் இதை விரும்பவில்லை. திருமணத்துக்குப் பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட வேண்டும் என வற்புறுத்தினர்.

இதனால், தான் நடிக்க ஒப்புக் கொண்டிருந்த மலையாளப் படங்களிலிருந்து விலகிக் கொண்டாராம் நஸ்ரியா. தமிழில் திருமணம் எனும் நிக்காஹ்தான் அவரது கடைசி படம்!

 

கோச்சடையான் ராக்கிங்: சொல்கிறார் 'தல' ரசிகரான சிம்பு

சென்னை: கோச்சடையான் படம் பார்த்த நடிகர் சிம்பு இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் ராக்கிங்: சொல்கிறார் 'தல' ரசிகரான சிம்பு

அஜீத் குமாரின் தீவிர ரசிகரான நடிகர் சிம்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த கோச்சடையான் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த பிறகு அவர் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கோச்சடையான் படத்தின் கிராபிக்ஸை ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட முடியாது. இருப்பினும் இதை சாத்தியமாக்கிய சௌந்தர்யாவுக்கு வாழ்த்துக்கள். மாஸை தெரிந்து வைத்திருக்கும் கே.எஸ்.ஆர்., இசை மூலம் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ஏ.ஆர். ரஹ்மான், அந்தோனி பற்றியும் கூற வேண்டும். வசனங்கள் சூப்பரோ சூப்பர்.

கோச்சடையான் ராக்கிங், படம் மிகவும் பிடித்திருந்தது. சௌந்தர்யாவை நினைத்து பெருமையும், சந்தோஷமும் படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

மோடி பதவி ஏற்பு விழா... ஏன் தவிர்த்தார் ரஜினி?

தனது நெருங்கிய நண்பரான நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்ற மிக முக்கிய விழாவுக்கு அரசு விருந்தினராகப் போயிருக்க வேண்டிய ரஜினி கடைசி நேரத்தில் தவிர்த்துவிட்டார்.

காரணங்கள் இரண்டு...

மோடி பதவி ஏற்பு விழா...  ஏன் தவிர்த்தார் ரஜினி?

முதல் காரணம், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மத்திய அரசு அழைப்பிதழ் அனுப்ப, அவரும் வருவேன் என்று ஒப்புக் கொண்டதுதான்.

இலங்கை தொடர்பான விஷயங்களில் எப்போதுமே தெளிவான முடிவை எடுத்து வருகிறார் ரஜினி.

2009-ல் ராஜபக்சேவை கடுமையாகக் கண்டித்த ரஜினி, தமிழர் மண்ணை தமிழருக்கே தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இறுதிப் போர் முடிந்து, கொழும்பில் ஐஃபா திரைப்பட விழா நடந்தபோது, அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள ரஜினியை அழைக்க முடிவு செய்து, அழைப்பிதழ் தர வீட்டுக்கு வர அப்பாயின்ட்மென்ட் கேட்டார் சென்னையிலிருந்த இலங்கைத் தூதர்.

விஷயத்தைக் கேட்டுக் கொண்ட ரஜினி, "நான் விழாவுக்கு நிச்சயம் வர மாட்டேன். எதற்காக அழைப்பிதழ் தர சிரமப்படுகிறீர்கள். வர வேண்டாம்," என ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த விஷயம் மீடியா மூலம் வெளியில் தெரிய வர, அதன் பிறகு பெரும் போராட்டமே சென்னையிலும் மும்பையிலும் நடந்தது. அமிதாப், ஐஸ்வர்யா ராய் கூட அங்கு செல்வதைத் தவிர்த்துவிட்டனர்.

எனவே பிரதமர் பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்சே வருகிறார் என்பது தெரிந்ததுமே, தான் அந்த விழாவுக்குப் போவதில்லை என்று முடிவு செய்துவிட்டார் ரஜினி.

இரண்டாவது காரணம்...

ராஜபக்சேவை நரேந்திர மோடி அழைத்ததைக் கண்டித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுத்த அதிரடியான கண்டன அறிக்கை. இந்தக் கண்டன அறிக்கை வெளியான போது ரஜினி மைசூரில்தான் இருந்தார். அறிக்கை வெளியானதுமே, தனது நண்பர்களிடம், நான் விழாவுக்குப் போகப் போவதில்லை என்று கூறிவிட்டாராம்.

இருந்தாலும் மத்திய அரசின் அழைப்பு இது. தம்மை மதித்து அனுப்பப்பட்ட இந்த அழைப்பை மதிக்கும் விதத்திலேயே தன் மகள் ஐஸ்வர்யாவை அனுப்பி வைத்தாராம். அவரும் விழாவில் பங்கேற்றுவிட்டு, விருந்தில் கலந்து கொள்ளாமல் திரும்பினாராம்.

"தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என எப்போதும் தமிழ் மக்களைக் குறிப்பிடும் ரஜினி, தமிழர் உணர்வுகளுக்கு மாறாக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. எனவே ராஜபக்சே விருந்தினராக வரும் ஒரு விழாவில் ரஜினி கலந்து கொள்வார் என்று கனவு கூடக் காண வேண்டாம்," என்றார் நம்மிடம் பேசிய ரஜினியின் நண்பர் ஒருவர்.

அது போதும்!

 

பிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா!

தனது பிறந்த நாளன்று தன் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாகத் தருகிறார் நடிகை சோனா.

பூவெல்லாம் கேட்டுப்பார், குசேலன், அழகர் மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை சோனா. ‘கனிமொழி' என்ற படத்தை தயாரித்துள்ளார்.

பிறந்த நாள்... உடல் உறுப்புகளை தானம் செய்கிறார் சோனா!

பரபரப்பு நாயகியான இவர் வாழ்க்கையை புத்தகமாகவும், திரைப்படமாகவும் வெளியிடப்போவதாக அறிவித்து, அதற்கான வேலையில் மும்முரமாக உள்ளார்.

வருகிற ஜூன் 1-ஆம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் சோனா.

கவர்ச்சி நடிகை என்றால் நல்ல விஷயங்கள் செய்யக் கூடாதா என்று கேட்கும் சோனா, ஆண்டு தோறும் ஏதாவது ஒரு நலத் திட்ட உதவி செய்வது வழக்கம்.

இந்த ஆண்டு தனது பிறந்தநாளில் தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்யவுள்ளாராம். மக்களிடையே உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சோனா இந்த முடிவெடுத்துள்ளாராம்.

 

மேஜர் முகுந்த் மகளின் கல்விச் செலவுகளை ஏற்பதாக உறுதியளித்த விஜய்!

சென்னை: காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதி வாரச்சாவடைந்த மேஜர் முகுந்தின் மகள் படிப்புச் செலவுகளை தான் ஏற்பதாக நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கடந்த மாதம் காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம் அடைந்தார்.

மேஜர் முகுந்த் மகளின் கல்விச் செலவுகளை ஏற்பதாக உறுதியளித்த விஜய்!

சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், முகுந்த் வரதராஜன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

உடனே அங்கிருந்து கிளம்பிவிடாமல், சிறிது நேரம் ஒதுக்கி முகுந்த் வரதராஜனின் மூன்று வயது மகளான ஆர்ஷேயாவுடன் விளையாடி மகிழ்வித்தார் விஜய்.

தன் தந்தை வீர மரணம் அடைந்தது புரியாமல் அவரது உடலுக்கு அந்த சிறுமி டாட்டா சொல்லி விடைகொடுத்த புகைப்படத்தைப் பார்த்து கலங்கிவிட்டதாக விஜய் தெரிவித்தார். அவர்களின் வீட்டு விலாசத்தை விசாரித்து தெரிந்து கொண்ட விஜய் திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போய் அவர்களை ஆறுதல்படுத்தினாராம்.

முகுந்தின் மகளுடைய எதிர்கால கல்விச் செலவுகளை தாம் ஏற்பதாகவும் உறுதியளித்தாராம் விஜய்.

துப்பாக்கி படத்தில் ஜெகதீஸ் என்ற பெயரில் ராணுவ வீரராக விஜய் நடித்திருந்தது நினைவிருக்கலாம்.

 

சமத்தாக மாறிவிட்டாராம் பிக்கப் டிராப் நடிகர்

சென்னை: பிக்கப் டிராப் நடிகர் தற்போது சமத்துப் பிள்ளைாக மாறிவிட்டாராம்.

இந்த இளம் நடிகரின் படங்களை பற்றி பேசுவதை விட அவர் பிக்கப் டிராப் செய்யும் வேலைகளை பற்றி பேசுவது தான் அதிகம். பாவம் அவருக்கு பெயரே பிக்கப் டிராப் என்று ஆகும்படி மனிதர் நடிகைகளுடன் கடலை போடுவது, பிரியாணி விருந்து கொடுப்பது என்று இருந்தார்.

இதனால் அவரது இமேஜ் டேமேஜ் ஆனதோடு பெண் பார்க்க செல்லும் இடங்களில் எல்லாம் நீங்க பிக்கப் டிராப் வேலை செய்வதால் பெண் கொடுக்க முடியாது என்கிறார்களாம்.

இதையடுத்து தற்போது நடிகர் அடக்கி வாசிக்கிறாராம். யாராவது சக நடிகர் வா என் தோழியை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறினால் தேவையில்லை நான் நல்லபிள்ளையாகிவிட்டேன் என்று கூறுகிறாராம். டேமேஜான இமேஜை நல்லவிதமாக்கத் தான் இந்த முயற்சியாம்.

இதுவே பழைய ஆளாக இருந்தால் பிரியாணி விருந்து கொடுக்க திட்டம் போட்டிருப்பார்.