ஒரு நடிகை திருமணம் செய்து கொள்வது குற்றமல்ல என்று ஹிந்தி திரைப்பட நடிகை கரீனா கபூர் கூறினார். கடந்த ஆண்டு ஹிந்தி நடிகர் சைப் அலி கானை மணந்த அவர், திருமண வாழ்வையும், வேலையையும் தொடர்படுத்திக் கொள்ள கூடாது என்று குறிப்பிட்டார்.
மும்பையில் நடைபெற்ற இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய கரீனா, " ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தாலோ அல்லது திருமணம் செய்து கொண்டாலோ, அவளை, அவள் கதாபாத்திரத்தை திரையில் யாரும் ரசிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. இது இரண்டுமே (திருமணம் மற்றும் திரைபடங்கள்) வெவ்வேறானவை. இரண்டையும் இணைத்துப் பார்க்க கூடாது. எதுவானாலும் காதலிப்பதும் திருமணம் செய்து கொள்வதும் குற்றமல்ல" என்றார்.
இதற்கு அவர் உதாரணம் கூறும் போது, " தற்போது இதை ஒரு பிரச்னையாக மக்கள் பேசுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். கடந்த காலங்களில் வஹிதா, ஷர்மிலா போன்ற நடிகைகளும் திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். எனவே இது வழக்கமான நடைமுறை தான்" என்று கூறினார்.