க்யூப், யுஎப்ஓ நிறுவனங்களுக்கு எதிராக உண்ணாவிரதம்!- தயாரிப்பாளர்கள் அறிவிப்பு

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் உரிமைகளை முடக்கி வரும் 'க்யூப்' மற்றும் 'யூஎஃப்ஓ' நிறுவனங்களின் செயல்பாடுகளை தமிழக அரசின கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்த் திரையுலகம் சார்பில் மே மாத முதல் வாரத்தில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

Producers announces fight against Qube, UFO

"க்யூப்', "யூஎஃப்ஓ' நிறுவனங்கள் அரசுக்கு சேவை வரி செலுத்துவதாகக் கூறி, அதை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர். ஆனால், அந்தத் தொகை அரசுக்கு செலுத்தப்படுகிறதா என்பது தெரியவில்லை. மேலும் திரைப்படங்களை வெளியிடும் போது தயாரிப்பாளர்களின் அனுமதி பெறாமல் தனியார் நிறுவனங்களின் விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.

இதன் மூலம் கிடைக்கும் வருவாய் "க்யூப்' நிறுவனங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை. திரைப்படங்களை வெளியிடும்போது பெரிய தொகையை தயாரிப்பாளர்களிடமிருந்து வசூலிக்கின்றனர்.

தங்களது நிறுவனங்கள் மட்டுமே தொழில் செய்ய வேண்டுமென்ற தனி நபர் ஆதிக்கத்தை உருவாக்கி தயாரிப்பாளர்களின் உரிமைகளை அவர்கள் முடக்கி வருகின்றனர்.

இதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில், அரசின் ஒப்புதலோடு தமிழ்த் திரையுலகம் சார்பில் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம்," என்று தாணு குறிப்பிட்டுள்ளார்.

 

விரைவில் ‘என்னை அறிந்தால்’ தெலுங்குப் பதிப்பு

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.

Yennai Arinthaal Telugu dubbed version soon

இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் முக்கியமானது என்னை அறிந்தால்.

இந்தப் படம் நேரடி தமிழ்ப் படமாகவே ஆந்திராவில் வெளியானது. ஆனால் இப்போது படத்தை தெலுங்கில் மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

த்ரிஷா, அனுஷ்கா இருவருக்கும் தெலுங்கில் நல்ல பெயர். தனி ரசிகர் கூட்டம் உள்ளது. டப் செய்யப்பட்டு வெளியாகும் தமிழ்ப் படங்களைப் பார்க்க ஆந்திர ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே என்னை அறிந்தால் டப்பிங் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அநேகமாக மே 2வது வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.

 

கங்காரு விமர்சனம்

-எஸ் ஷங்கர்

நடிகர்கள்: அர்ஜூன், ப்ரியங்கா, தம்பி ராமையா, வர்ஷா, ஆர் சுந்தர்ராஜன், கலாபவன் மணி, சுரேஷ் காமாட்சி, வெற்றிக் குமரன்

ஒளிப்பதிவு: ராஜரத்னம்

இசை: ஸ்ரீனிவாஸ்

தயாரிப்பு: சுரேஷ் காமாட்சி

இயக்கம்: சாமி

தொடர்ந்து சர்ச்சைக்குரிய கதைகளைப் படமாக்கி வந்த சாமி, தனக்குத் தானே வேப்பிலை அடித்துக் கொண்டார் போலிருக்கிறது. அண்ணனுக்கும் தங்கைக்குமான பாசத்தில் எந்த வில்லங்கமும் பண்ணாமல், ஒரு கங்காருக்கும் அதன் குட்டிக்குமான தாய்மையுடன் ஒப்பிட்டிருக்கிறார் இந்த கங்காருவில்.

Kangaroo Review

கைக்குழந்தயாக தங்கையை தூக்கிக் கொண்டு அந்த கொடைக்கானல் மலை கிராமத்துக்கு வருகிறான் ஒரு சிறுவன். அங்குள்ள கடைக்காரர் தம்பி ராமையா ஆதரவில் வளர்ந்து, தங்கையை கண் இமைக்குள் வைத்துக் காக்கிறான். முரட்டுத்தனமும் கொஞ்சம் மனநிலை பிறழ்ந்த தோற்றமுமாகத் தெரியும் அவன் பிழைப்புக்கு டீக்கடை. மீதி நேரம் பூராவும் தங்கைக்காகவே செலவழிக்கிறான். அதனாலேயே ஊர் அவனை கங்காரு என்கிறது. அவனை உருகி உருகிக் காதலிக்கிறார் வர்ஷா. ஆனாலும் கங்காரு கண்டு கொள்ளாமல் தங்கைக்கு நல்ல மாப்பிள்ளை பார்ப்பதில் கவனமாக இருக்கிறான்.

அதற்கு வேலை வைக்காமல் தங்கையே ஒருவனைக் காதலிக்க, அது தெரிந்து அவனுக்கே திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் திருமணத்துக்கு முன்பு அந்தப் பையன் மலையிலிருந்து விழுந்து இறந்துவிட, அடுத்த சில தினங்களில் வேறொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். அவனும் கரண்ட் கம்பியில் சிக்கி உயிரை விடுகிறான்.

தன்னால் இரு உயிர்கள் பலியாகிவிட்டதே என்ற வருத்தத்திலிருக்கும் தங்கையை, ஆர் சுந்தரராஜன் அட்வைஸ்படி வேறு ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறான் கங்காரு.

Kangaroo Review

அங்கு இன்னொரு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். திருமண நேரத்தில் இந்த புதுமாப்பிள்ளைக்கும் விபத்து.. அப்போதுதான் தெரிகிறது, அதுவரை நடந்ததெல்லாம் விபத்து அல்ல, கொலை என்பது. இதை துப்புத் துலக்க போலீஸ் களமிறங்க, முன்கணிக்க முடியாத அளவு திருப்பங்களுடன் க்ளைமாக்ஸ்.

வசனங்களின்றி, இசையுடன் நகரும் அந்த க்ளைமாக்ஸ் காட்சிகள் யாரும் எதிர்ப்பார்க்காததும்கூட.

முரட்டுத்தனமும் சைக்கோத்தனமும் கொண்ட அந்த கங்காரு அண்ணன் பாத்திரத்துக்கு பக்காவாகப் பொருந்துகிறார் அர்ஜூனா.

தங்கையாக வரும் ப்ரியங்கா இந்தப் படத்தில் அஜீத் ரசிகை. அஜீத் பட சிடிக்களைப் பரிமாறியே காதல் வளர்ப்பது கொஞ்சம் புதுசு.

Kangaroo Review

வர்ஷாவுக்கு அதிக வாய்ப்பு இல்லை என்றாலும், 'என் ஏத்தத்துக்கும் இறக்கத்துக்கும் என்னா குறை?' என்று மழையில் ஆட்டம் போட்டு இளசுகளின் பல்ஸை பதம் பார்க்கிறார்.

தம்பி ராமையா அந்த வேடத்துக்கு கவுரவத்தைத் தருகிறார். ரொம்ப டீசன்டான நடிப்பு. கஞ்சா கருப்பு அதிகம் படுத்தாமல் விடைப் பெறுகிறார்.

கலாபவன் மணிதான் வில்லன். அவர் பாணியில் நகைச்சுவை வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

கங்காரு தங்கச்சிக்கு கடைசியாக அமையும் மாப்பிள்ளை யாரென்று பார்த்தால்.. அட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. வெல்கம்... நடிகராகவும் தொடரலாம் எனும் அளவுக்கு நடித்திருக்கிறார் இந்த மாப்பிள்ளை!

பொதுவாக டாக்டர் பாத்திரங்கள் ஒரு டெம்ப்ளேட் மாதிரி ஆகிவிட்டதால் அதில் யார் வந்தாலும் கேலிக்குள்ளாகிவிடுவார்கள். விதிவிலக்கு இந்தப் படத்தில் நடித்துள்ள வெற்றிக் குமரன். ஒரு காட்சி என்றாலும் பளிச்சென்று மனதில் நிற்கிறார் இந்த டாக்டர்!

பாசமே கூட ஒரு அளவைத் தாண்டினால் பாய்சனாகிவிடும் என்ற கருத்தை கதையாக எடுத்தது நல்லதுதான். ஆனால் திரைக்கதையை, குறிப்பாக முன் பாதியை இன்னும் சிரத்தையுடன் செதுக்கியிருக்கலாம்.

Kangaroo Review

லொகேஷனாக கொடைக்கானல் கிடைத்தபிறகு எந்த காமிராவுக்கும் உற்சாகம் பிறந்துவிடும் அல்லவா... ராஜ ரத்னம் நம்மை அந்த கிராமத்துக்கே கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார்.

இவரென்ன இசையமைத்துவிடப் போகிறார் என்ற அலட்சியத்துடன்தான் அமர்கிறோம். ஆனால் மெல்ல மெல்ல அந்த கங்காரு பாடலில் உள்ளே இழுத்துவிடுகிறார். பின்னணி இசையும் ஓகே.

இயக்குநர் சாமி இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வேறு நடித்திருக்கிறார். உறுத்தாத நடிப்பு. அந்த முன்பாதியை இன்னும் சுவாரஸ்யமாக எடுத்திருந்தால் படமும் எந்த உறுத்தலுமின்றி ரசிக்க வைத்திருக்கும்!

மேட்டுக்குடி காதல்களைக் கொண்டாடும் சினிமா சூழலில், விளிம்பு நிலை மனிதர்களின் பாசம், உறவு, வாழ்க்கை முறையைச் சொன்னதற்காகவே இந்த கங்காருவுக்கு ஆதரவு தரலாம்!

 

நெட்டில் அனுஷ்காவின் “ஆபாசப் படம்”?- இன்டெர்நெட்டில் பரபரப்பு!

சென்னை: நடிகை அனுஷ்கா என்ற பெயரில் ஆபாச படம் ஒன்று இன்டர்நெட்டில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஹன்சிகா குளியலறையில் இருப்பது போன்ற படம் இன்டர்நெட் மற்றும் வாட்ஸ்அப்களில் வெளியானது. பாத்ரூமில் கேமராவை ரகசியமாக மறைத்து வைத்து இந்த படத்தை எடுத்து இருந்தனர். அப்படத்தில் இருப்பது நான் அல்ல என்று அவர் மறுத்தார்.

Anushka's nude video rounds in internet

பின்னர் ராதிகா ஆப்தேவின் ஆபாச படங்கள் இணைய தளங்களில் பரவியது. படுக்கை அறையில் ஒரு ஆணுடன் நெருக்கமாக இருப்பது போன்று இப்படங்கள் இருந்தன. இந்த ஆபாச படத்தில் இருப்பது நான் அல்ல என்று ராதிகா ஆப் தேவும் மறுப்பு வெளியிட்டார்.

அதன் பிறகு வசந்தராவின் ஆபாச கிளு கிளு படங்கள் இன்டர்நெட்டில் வெளியானது. லட்சுமிமேனன் பெயரில் ஆபாச வீடியோவும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது அனுஷ்கா என்ற பெயரிலும் ஆபாச வீடியோ இணைய தளங்கள் மற்றும் வாட்ஸ்அப்களில் பரவி வருகிறது. அந்த படத்தில் இருப்பது அனுஷ்காதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட போலி வீடியோவா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

 

பஞ்ச தந்திரம், வசூல் ராஜா வரிசையில் உத்தம வில்லன்!- பார்த்தவர்கள் கருத்து

கமலின் உத்தம வில்லன் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்தவர்கள், இந்தப் படம் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைப் படமாக உள்ளதாகவும், கமல் பிரமிக்க வைத்திருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திருப்பதி பிரதர்ஸ் - ராஜ்கமல் தயாரித்துள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை தனது நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு திரையிட்டுக் காட்டினார் லிங்குசாமி.

Uthama Villain special show

படத்தைப் பார்த்த பிறகு, அவர்களிடம் படம் குறித்த ஒளிவு மறைவற்ற கருத்தைக் கூறுமாறு கேட்டுக் கொண்டாராம்.

அவர்கள் கமலின் நடனம், நகைச்சுவையை வியந்து பாராட்டியுள்ளனர். குறிப்பாக, ஒரு பாடல் காட்சியில் கமலின் நடனம் இன்றைய இளம் நாயகர்களை மிஞ்சும் வகையில் அமைந்திருந்ததைச் சொல்லி வியந்துள்ளனர்.

இந்தப் படம் இன்னொரு பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எனும் அளவுக்கு சிறப்பாக வந்துள்ளது என்று கூறியதைக் கேட்டதும் மகிழ்ந்துபோய்விட்டாராம் லிங்குசாமி.

 

காஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த ரஜினி!

இந்த கோடையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை, ரஜினிகாந்த் தன் வீட்டு குட்டி திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

இந்தப் படம் வெளியாவதற்கு சில தினங்களுக்கு முன் படத்தின் சில காட்சிகள் மற்றும் ராகவா லாரன்ஸின் விதவிதமான கெட்டப்புகளை ரஜினியிடம் காட்டி ஆசி பெற்று வந்தார் ராகவா லாரன்ஸ்.

மிக வித்தியாசமாகவும், அபார உழைப்புடனும் படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள், படம் பெரிய வெற்றியைப் பெரும் என்று வாழ்த்தியனுப்பினார் ரஜினி.

Rajini watched Kanchana 2 at his mini theater

அதேபோல படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் குவிகின்றனர்.

சமீபத்தில் ரஜினியின் வீட்டில் உள்ள குட்டித் திரையரங்கில், க்யூப் மூலம் ரஜினிக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டினர்.

படம் பார்த்த ரஜினி, ராகவா லாரன்ஸை வெகுவாகப் பாராட்டினார்.