சூர்யா, காஜல் அகர்வால் நடிக்கும் படம், 'மாற்றான்'. கே.வி.ஆனந்த் இயக்கும் இந்தப் படத்தை ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ரஷ்யாவில் ஒரு மாதம் நடந்தது. படத்தின் முக்கிய காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் இங்கு படமானது. இதையடுத்து, ரஷ்ய மொழியை தீவிரமாக கற்று வருகிறார் காஜல் அகர்வால். படத்திற்கு இந்த மொழி அதிகம் தேவைப்படுவதால் இந்த மொழயை தீவிரமாக கற்று வருகிறார்.
ரகுமான் இசையில் தனுஷ் பாடுவது உறுதி
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவாகவிருக்கும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் தனுஷ் பாடுகிறார். கொலவெறி பாடல் பட்டிதொட்டி முதல் சிட்டி வரை என இந்தியா முழுவதும் பட்டையை கிளப்புகிறது. இந்த பாடலை இசைப்புயல் விரும்பி கேட்டாராம், 'வந்தே மாதரம்' ஆல்பத்தை இயக்க போகும் பரத் பாலா இந்த ஆல்பத்தில் தனுஷை பாட வைக்க ஆசைப்பட்டாராம். இதற்கு ஏ.ஆர்.ரகுமானும் ஒப்புக் கொண்டாராம். முதலில் உலக நாயகன் கமலஹாசனை பாட வைக்க திட்டமிட்டு இருந்த ரகுமான், கமல் 'விஸ்வரூபம்' படத்தில் பிசியாக இருப்பதால் தனுஷையே பாட வைக்க முடிவு செய்துள்ளாராம் ரகுமான். 'இசைப்புயலின் தீவிர ரசிகனாகிய எனக்கு அவருடைய இசையில் அதுவும் 'வந்தே மாதரம்' ஆல்பத்தில் பாட இருப்பது மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறேன்' என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஹீரோவின் சூப்பா காஸ்ட்யூம்
தன்னுடைய கனவுப் படமான 'முகமூடி' ஹாலிவுட் படம் 'ஸ்பைடர் மேனை' மிஞ்சும் என மிஷ்கின் கூறியுள்ளார். படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு 'கே' இசையமைக்க, யு டிவி நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், தன்னுடைய கனவு படமான இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமாக கருதப்படும் என நம்புவதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய படக்குழுவிற்கு மிஷ்கன் ஒரு கண்டிஷன் போட்டிருக்கிறாராம். சூப்பர் ஹீரோவின், காஸ்ட்யூமை லீக் செய்துவிடக் கூடாது என்பது தான் அந்த கண்டிஷன்.
இந்தியில் ரீமேக் ஆகும் துப்பாக்கி
பொதுவாக படம் வெளியானது பிறகு தான் மற்ற மொழிகளில் ரீமேக் ஆகும். ஆனால் 'துப்பாக்கி' படம் மட்டும், இப்போது இருந்தே ரீமேக்கிற்கு தயாராகிவிட்டது. இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது 'துப்பாக்கி' படம். ஆக்சன் படமான இதில் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்டாக விஜய் நடிக்கிறார். காஜல் ஹீரோயின். இந்தப் படத்தைதான் இந்தியில் அக்சய்குமாரை வைத்து ரீமேக் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் முருகதாஸ். இதனையடுத்து முருகதாஸ் இயக்கத்தில் ஷாரூக் கான் நடிப்பார் என்ற தகவல் பொய்யானது.