58வது தேசிய விருது அறிவிப்பு : சன் பிக்சர்சின் ஆடுகளத்துக்கு 6 விருது, எந்திரனுக்கு 3 விருது!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
58வது தேசிய விருது அறிவிப்பு : சன் பிக்சர்சின் ஆடுகளத்துக்கு 6 விருது, எந்திரனுக்கு 3 விருது!

5/19/2011 4:03:17 PM

58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சன் பிக்சர்சின் ஆடுகளம் படத்தில் நடித்த தனுஷிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. மேலும் ஆடுகளம் படத்திறகு 5 தேசிய விருதுள் என மொத்தம் 6 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இயக்குநருக்கான விருது, ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார். மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார். இதுமட்டுமின்றி சிறந்த எடிட்டிங், சிறந்த நடன வடிவமைப்பு மற்றும் சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது என மொத்தம் 6 விருதுகள் ஆடுகளத்துக்கு கிடைத்துள்ளது.

எந்திரனுக்கு 3 தேசிய விருது!

அதே சமயம், சன் பிக்சர்சின் பிரம்மாண்ட தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. எந்திரன் படத்துக்கு சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸ், சிறந்த கலை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகிய விருதுகள் கிடைத்துள்ளது.


சிறந்த நடிகர் தனுஷ்

அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்பவருடன் இணைந்து பெறுகிறார்.

சிறந்த நடிகை சரண்யா

இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை சுகுமாரி

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்

தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடன அமைப்பு திணேஷ்

ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.




 

தேசிய விருது அறிவிப்பு : ஆடுகளத்து படத்துக்கு 2 விருது, சிறந்த நடிகர் விருது : தனுஷ்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தேசிய விருது அறிவிப்பு : ஆடுகளத்து படத்துக்கு 2 விருது, சிறந்த நடிகர் விருது : தனுஷ்!

5/19/2011 4:03:17 PM

புதுடெல்லி : சன்பிக்சர்சின் ஆடுகளம் படத்தை இயக்கிய வெற்றிமாறனுக்கு 2 தேசியவிருது வழங்கப்படுகிறது. சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிமாறனுக்கு தங்கத்தாமரை விருது வழங்கப்படுகிறது. சிறந்த நடிகருக்கான விருது ஆடுகளம் படத்தின் நாயகன் தனுஷிற்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகைக்கான விருது சரண்யா பொன்வண்ணனுக்கு வழங்கப்படுகிறது. "தென்மேற்கு பருவக்காற்று" படத்தில் நடித்ததற்காக சரண்யாவிற்கு விருது வழங்கப்படுகிறது. மலையாளப்படமான 'ஆதாமின்டே மகன் அபு' படத்திற்கு தங்கத்தாமரை விருது வழங்கப்பட்டுள்ளது. சல்மான்கான் நடித்த தபாங் திரைப்படம் சிறந்த பொழுதுபோக்கு படத்திற்கான விருதை பெற்றுள்ளது.




 

மும்பை குண்டுவெடிப்பு கதையில் மம்மூட்டி

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மும்பை குண்டுவெடிப்பு கதையில் மம்மூட்டி

5/19/2011 3:40:30 PM

1993ல் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ், மலையாளத்தில் படமாகிறது. இப்படத்தை மலையாள கதாசிரியர் பாபு ஜனார்த்தனன் இயக்குகிறார். படத்துக்கு Ô1993 பம்பாய் மார்ச் 12Õ என பெயரிட்டுள்ளனர். மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ரோமா ஹீரோயினாக நடிக்கிறார். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின்போது நடந்த நிஜ சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றி இயக்குனர் பாபு ஜனார்த்தனன் கூறும்போது, ÔÔமும்பையை சேர்ந்த சனதான பட் என்பவரும் கேரளாவை சேர்ந்த ஆபிதா என்ற பெண்ணும் மும்பையில் சந்திக்கிறார்கள். அப்போது குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து, அவர்கள் வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதே கதை. இது நிஜமாக நடந்தது. அந்த மும்பைவாசி வேடத்தில் மம்மூட்டியும் கேரள பெண்ணாக ரோமாவும் நடிக்க உள்ளனர்ÕÕ என்றார்.

 

தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்

Tags:



டெல்லி: 58வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்.

அதேபோல தென் மேற்குப் பருவக் காற்று படத்தில் சிறப்பாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மராத்தி நடிகை மித்தாலியுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதை பெறுகிறார்.

58வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன.

சிறந்த நடிகர் தனுஷ்

அதன்படி ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை அவர் நடிகர் சலீம் குமார் என்ற மலையாள நடிகருடன் இணைந்து பெறுகிறார்.

சிறந்த நடிகை சரண்யா

இதேபோல சிறந்த நடிகைக்கான விருது சரண்யாவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்துள்ளது. இவர் மித்தாலி என்ற மராத்தி நடிகையுடன் இணைந்து சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார்.

சிறந்த இயக்குநர் வெற்றி மாறன்

சிறந்த இயக்குநருக்கான விருது வெற்றி மாறனுக்குக் கிடைத்துள்ளது. இதற்கான தங்கத் தாமரை விருதை அவர் பெறுகிறார்.

சிறந்த திரைக்கதை – வெற்றி மாறன்

சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வெற்றி மாறனே தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகர் தம்பி ராமையா

சிறந்த துணை நடிகருக்கான விருது தம்பி ராமையாவுக்குக் கிடைத்துள்ளது. காமெடியனாக, இயக்குநராக அறியப்பட்ட தம்பி ராமையா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த படம் மைனா. இந்தப் படத்துக்காக தம்பி ராமையா, சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார்.

சிறந்த துணை நடிகை சுகுமாரி

சிறந்த துணை நடிகை விருது சுகுமாரிக்குக் கிடைத்துள்ளது. நம் கிராமம் என்ற படத்துக்காக அவர் இதைப் பெறுகிறார்.

சிறந்த பாடலாசிரியர் வைரமுத்து

சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்குக் கிடைத்துள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக இந்த விருது அவரைத் தேடி வந்துள்ளது.

சிறந்த தமிழ்ப் படம்

தமிழில் சிறந்த படமாக தென் மேற்குப் பருவக் காற்று திரைப்படம் தேர்வாகியுள்ளது.

சிறந்த நடன அமைப்பு திணேஷ்

ஆடுகளம் படத்தில் நடன வடிவமைப்பு செய்திருந்த திணேஷுக்கு சிறந்த நடன அமைப்புக்கான விருது கிடைத்துள்ளது.

எந்திரனுக்கு 2 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறப்பு ஸ்பெஷல் எபக்ட்ஸுக்காக ஸ்ரீனிவாஸ்மோகன் விருது பெறுகிறார்.

சிறந்த கலை-தயாரிப்பு வடிவமைப்புக்காக சாபு சிரில் விருது பெறுகிறார்.

ஆடுகளத்திற்கு 6 விருதுகள்

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடன வடிவமைப்பு, சிறந்த படத்துக்கான சிவராம காரந்த் விருது ஆகியவை ஆடுகளம் படத்துக்குக் கிடைத்துள்ளது.

அதேபோல சிறந்த எடிட்டிங்குக்கான விருதும் ஆடுகளம் படத்திற்காக கிஷோருக்குக் கிடைத்துள்ளது.

ஈழக் கவிஞருக்கு சிறப்பு விருது

ஆடுகளத்தில் தனுஷின் குருவாக நடித்தவரான ஈழத்தைச் சேர்ந்த கவிஞர் ஜெயபாலனுக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஜினி நலமாக உள்ளார், இட்லி வடை சாப்பிட்டார்-டாக்டர் தணிகாச்சலம்

Tags:



சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதேபோல அவரது டாக்டர் தணிகாச்சலமும், ரஜினிகாந்த் நலமாக இருப்பதாகவும், இட்லி வடை சாப்பிட்டதாகவும், லதா வைத்துக் கொண்டு வந்து வாழைத் தண்டு ரசத்தை ருசித்து சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இருப்பினும் ரஜினி குறித்து சிலர் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பியவண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை லதா ரஜினிகாந்த் சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

ரஜினி பூரண நலத்துடன் உள்ளார். யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர் மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் உள்ளார். நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தான் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியுள்ளனர் என்றார்.

ரஜினியின் உடல் நலம் குறித்து மூத்த மருத்துவர் எஸ். தணிகாசலம் கூறியதாவது,

ரஜினி உற்சாகத்துடன் காணப்படுகிறார். அவர் தனது குடும்பத்தாருடன் பேசினார். அவர் நல்ல ஆரோக்கியமான மனிதர். சுவாசக் கோளாறு மற்றும் வயிற்றுக் கோளாறுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வழக்கம்போல் அவர் இன்று காலையும் 2 இட்லி, ஒரு வடை சாப்பிட்டார்.மேலும் லதா ரஜினிகாந்த் வைத்துக் கொண்டு வந்த வாழைத்தண்டு ரசத்தையும் ருசித்துச் சாப்பிட்டார். ரஜினி நலமாக இருக்கிறார் என்பதை நிரூபிக்க இதை விட வேறு எதைச் சொல்வது என்று கேட்டார்.

 

புகழ் உச்சியில் லேடி காகா!

Tags:



உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் லேடி காகா அமெரிக்க கவர்ச்சி பாப் பாடகி லேடி காகா, உலகிலேயே மிகவும் பிரபலமானவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் பத்திரிக்கை இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வருடா வருடம் உலகிலேயே புகழ் மிக்க பிரபலமானவர்கள் 100 பேர் கொண்ட பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் லேடி காகாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இந்த இடத்தில் இருந்து வந்தவர் ஓப்ரா வின்பிரே. தற்போது அந்த இடத்தை காகா பிடித்து விட்டார். வின்பிரே இரண்டாவது இடத்துக்குத் தள்ளபப்ட்டுள்ளார்.

லேடி காகாவுக்கு 90 மில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளன. இது தவிர அவருக்கு பேஸ்புக்கில் 3.2 கோடி பாலோயர்களும் உள்ளனர். பேஸ்புக்கில் அதிக அளவிலான ஆதரவாளர்களைக் கொண்ட பிரபலம் இவர் மட்டுமே. ட்விட்டரிலும் இவருக்கு ஒரு கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.

மேலும், அவரது பார்ன் திஸ் வே என்ற பாப் பாடலுக்கு ஐந்தே நாட்களில் பத்து லட்சம் ஆடியோ பிரதிகள் விற்று விற்பனை சாதனையும் கிடைத்தது. இதை வைத்துத்தான் தற்போது போர்ப்ஸ் பிரபலங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து விட்டார் காகா.

முதல் பத்து இடங்களில் உள்ளவர்கள் விவரம்:

1. லேடி காகா.
2. ஓப்ரா வின்பிரே
3. ஜஸ்டின் பீபர்Justin Bieber
4.யு12
5. சர் எல்டன் ஜான்
6. டைகர் உட்ஸ்
7. டெய்லர் ஸ்விப்ட்
8. பான் ஜோவி
9. சிமோன் கோவல்
10.லெப்ரான் ஜேம்ஸ்
11. ஏஞ்செலீனா ஜூலி
12. கேதி பெர்ரி
13.ஜானி டெப்
14.கோப் பிரையன்ட்
15. லியனார்டோ டிகாப்ரேயி
16. பிளாக் ஐட் பீஸ்
17. டொனால்ட் டிரம்ப்
18. பில் மெக்கிரா
19. டைலர் பெர்ரி
20. சர் பால் மெக்கார்டினி

 

நான் கர்ப்பமாக இல்லை-ஷில்பா ஷெட்டி மறுப்பு

Tags:



தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளை நடிகை ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார்.

தான் காதலித்து வந்த லண்டன் தொழிலதிபரான ராஜ் குந்த்ராவை மணந்து அவருடன் லண்டனில் வாழ்க்கை நடத்தி வருகிறார் ஷில்பா. இந்த நிலையி்ல் அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின.

இதையடுத்து பலரும் ஷில்பாவைத் தொடர்பு கொண்டு தாயாகப் போவதற்காக வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால் தான் கர்ப்பமாக இல்லை என்று குண்டைப் போட்டுள்ளார் ஷில்பா.

இதுகுறித்து அவர் கூறுகையில், எத்தனை கால்கள், எத்தனை மெசேஜ்கள். அத்தனைக்கும் பதிலளித்து எனக்கு சலித்துப் போய் விட்டது. நான் கர்ப்பமாக இல்லை. இதுதான் இப்போதைக்கு என்னிடமிருந்து வரும் விசேஷ செய்தி. அதுதொடர்பாக வெளியான அத்தனை செய்தியும் பொய். எனக்கு இதைப் படித்து தலை சுற்றிக் கொண்டு வருகிறது என்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார் ஷில்பா.

கடந்த வாரம்தான் ஷில்பா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதை தற்போது ஷில்பாமறுத்து விட்டார். தனது ட்விட்டர் செய்தியில் மேலும் அவர் கூறுகையில், மீடியாவில் வந்ததைப் போல இப்போதைக்கு எதுவும் இல்லை. எதுவாக இருந்தாலும் நானே சொல்வேன் என்றும் ஷில்பா கூறியுள்ளார்.

நான் பிரபலமானவளாக இரு்ந்தாலும் கூட எனக்கும் பிரைவஸி உண்டு என்பதை மீடியாக்கள் உணர வேண்டும். அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஷில்பா கோரியுள்ளார்.

தற்போது தன்னுடைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஒரே பதட்டத்துடன் இருக்கிறாராம் ஷில்பா.

முதல்லை கோப்பையை வெல்லட்டும், அப்புறம் பாப்பா பத்திக்கவலைப்படலாம் என நினைத்து விட்டாரோ ஷில்பா.

 

'மிரட்டும்' கார்த்திகா-டென்ஷனில் ஹன்சிகா!

Tags:



‘கோ’ படம் மூலம் ‘ஜெய்’ஹோ என்று ராதா மகள் கார்த்திகா பாட ஆரம்பித்திருப்பதால் முதலிடத்திற்கு முட்டிக் கொண்டிருக்கும் சில நாயகிகளிடையே பீதி கிளம்பியுள்ளதாம்.

அந்தக் காலத்து முன்னணி நாயகி ராதா. அவரது மகள் கார்த்திகா. கூடிய விரைவில் இவரும் ஒரு பிசியான நாயகியாகி விடுவார் போலத் தெரிகிறது. காரணம், கோ படத்தில் கிடைத்த செமத்தியான பிரேக்கால்.

சில நேரங்களில் ராதாவின் சாயல் தெரிகிறது. சில நேரங்களில் ராதாவை மிஞ்சும் சாயல் தெரிகிறது – கார்த்திகாவிடம்.

இந்த வித்தியாசமான அழகுக்கு, கோ படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அம்மா ராதாவம், மகள் கார்த்திகாவும் பூரிப்பில் உள்ளனர். தேவைப்பட்டால் கார்த்திகா கவர்ச்சியாகவும் நடிக்கலாம் என்று ராதா கொள்கை முடிவு எடுத்திருக்கிறார். இதனால் தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கூட பூரிப்பு தென்படுகிறதாம்.

நல்ல கதையம்சத்துடன் கூடிய படங்களைத் தேர்வு செய்து கார்த்திகாவுக்கு கொடுக்கப் போகிறார் ராதா. கோ பட வெற்றியைத் தொடர்ந்து கார்த்திகாவை நோக்கி நிறையப் பேர வர ஆரம்பித்துள்ளனர் கதையுடன். அவற்றை தீவிரமாக பரிசீலித்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து வருகிறாராம் ராதா.

அடுத்தடுத்து வித்தியாசமான கதைகளில் கார்த்திகாவைக் காணலாம் என்கிறார் ராதா நம்பிக்கை பிளஸ் சந்தோஷத்துடன்.

கார்த்திகாவின் இந்த திடீர் விஸ்வரூபத்தால் ஏற்கனவே முதலிடத்திற்கு முண்டியடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி, அமலா பால் உள்ளிட்டோர் சற்றே கலங்கிப் போயுள்ளனராம்.

ஏற்கனவே இவர்கள் வந்துதான் தமன்னாவை பேக்கப் செய்து விரட்டினர். அந்த சூடு ஆறுவதற்குள்ளாகவே கார்த்திகாவின் வருகை, இவர்களை சற்றே பயம் கொள்ளச் செய்துள்ளதாம்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரிப்பு

Tags:



சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தை இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.

ரஜினிகாந்த் மூச்சுத் திணறல், நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக கடந்த 13-ம் தேதி போரூர் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால் தற்போது டயாலிசிஸ் செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து சினிமாத்துறையினர், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது குடும்பத்தாரை தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா பதவேற்பு விழாவுக்கு வந்த குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு ரஜினியை சந்தி்த்து உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரஜினிகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார்.

 

14 தேசிய விருதுகளை வாரிச் சுருட்டிய தமிழ்!

Tags:



இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய அளவில் தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகள் பெருமளவில் கிடைத்துள்ளன. மொத்தம் 14 விருதுகளை தமிழ் சினிமா தட்டிச் சென்றுள்ளது.

இத்தனை விருதுகளை தமிழ் சினிமா இதுவரை பெற்றதாக நினைவில்லை. அந்த அளவுக்கு 58வது தேசிய விருதுகளை தமிழ் சினிமா சுனாமி போல வந்து வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது.

இத்தனைக்கும் எந்திரன், ஆடுகளம், மைனா, தென் மேற்குப் பருவக் காற்று ஆகிய நான்கு படங்கள் மட்டுமே இத்தனை விருதுகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்கள் எந்திரன், ஆடுகளம் ஆகியவை. மைனா படம், உதயநிதி ஸ்டாலினின் படம். அதிக அளவிலான பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று.

தனுஷ் ஆடுகளத்தை விட மிகச் சிறப்பான நடிப்பைக் கொடுத்த படங்கள் இதற்கு முன்பே வந்துள்ளன. ஆனால் அவற்றுக்குக் கிடைக்காமல் ஆடுகளத்துக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.

அதேபோல சரண்யாவின் நடிப்பும் இதற்கு முன்பு பலமுறை பாராட்டுக்களை வாரிக் குவித்துள்ளது. அதேசமயம், இந்தப் படங்கள் அத்தனையையும் சேர்த்து ஒரே படத்தில் கொடுத்தது போல தென் மேற்குப் பருவக் காற்றில் அபாரமான நடிப்பைக் கொடுத்திருந்தார் சரண்யா. அவருக்கு விருது நிச்சயம் என்று அப்போதே பேசப்பட்டது. ஆனால் இப்போதோ சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து விட்டது.

ஆடுகளம் மொத்தம் ஆறு விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. அதேபோல எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

அனைவராலும் பாராட்டப்பட்ட மைனா படத்துக்கு ஒரே ஒரு விருதுதான் கிடைத்துள்ளது. அதேசமயம், அத்தனை பேரின் பாராட்டுக்களையும் வாரிக் குவித்தவரான தம்பி ராமையாவுக்கே அந்த விருது கிடைத்திருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது.

விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்ற படம் தென் மேற்குப் பருவக் காற்று. இப்படத்திற்கு சிறந்த பாடலாசிரியர், சிறந்த நடிகை, தமிழில் சிறந்த படம் என மூன்று விருதுகளை அள்ளியுள்ளது. ரஜினி படத்துக்கு நிகராக இந்தப் படமும் மூன்று விருதுகளை அள்ளியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவுக்கு இத்தனை விருதுகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

விருதுகளை பெருமளவில் அள்ளிய ஆடுகளம், தென் மேற்குப் பருவக் காற்று, மைனா ஆகிய மூன்றுமே தமிழ் மணம் வீசும், மண்வாசனைப் படங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தரமும், மண்மணமும் நிறைந்திருந்தால் நிச்சயம் விருதுகள் ஓடி வரும், தேடி வரும் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்துள்ளன.

 

6வது முறையாக தேசிய விருது பெற்று வைரமுத்து சாதனை

Tags:



சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 6வது முறையாக பெற்று சாதனை படைத்துள்ளார் கவிப்பேரரசு வைரமுத்து.

தமிழ்த் திரையுலகம் தந்த ஒப்பற்ற பாடலாசிரியர்களில் ஒருவர் வைரமுத்து. கண்ணதாசனுக்குப் பிறகு, வாலிக்குப் பிறகு, வார்த்தைகளிலும், வரிகளிலும் மாயாஜாலம் புரிந்தவர் வைரமுத்து மட்டுமே.

இதுவரை 5 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதைப் பெற்றிருந்த வைரமுத்து தற்போது 6வது முறையாக இந்த விருதை தட்டிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

எந்த ஒரு தமிழ் திரைப்பட பாடலாசிரியரும் இதுவரை செய்யாத சாதனை இது.

இதற்கு முன்பு முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம் மற்றும் கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதைப் பெற்றிருந்தார் வைரமுத்து.

தற்போது தென் மேற்குப் பருவக் காற்று படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

 

நலமாக இருக்கிறார் ரஜினி, ரசிகர்கள் பயப்பட வேண்டாம் : லதா ரஜினிகாந்த்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நலமாக இருக்கிறார் ரஜினி, ரசிகர்கள் பயப்பட வேண்டாம் : லதா ரஜினிகாந்த்!

5/19/2011 10:07:11 AM

நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு போரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி ‘ராணா’ பட ஷூட்டிங்கில் ரஜினிகாந்துக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மயிலாப்பூரிலுள்ள இசபெல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீடு திரும்பினார். மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால் இசபெல் மருத்துவமனையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு மூச்சு திணறல் அதிகமானது.

இதையடுத்து போரூரிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்குள்ள 7வது மாடியில் தனி அறையில் அவருக்கு நுரையீரல், சிறுநீரகங்கள் சம்பந்தப்பட்ட நோய்களுக்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இந்நிலையில் நேற்று, ரஜினிக்கு மூச்சு திணறல் அதிகமானது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து ராமச்சந்திரா மருத்துவமனை வெளிட்ட அறிக்கையில், ‘மூச்சு விடுவதை எளிதாக்கும் விதத்தில் ரஜினியை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்திருக்கிறோம். இதன் மூலம் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிகிறது’ என தெரிவிக்கப்பட்டது. நேற்று அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சையும் அளிக்கப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீரல் பிரச்னை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் அள¤க்கப்படுகிறது. தொடர்ந்து இன்றும் தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நலமோடு உள்ளார் ரஜினிகாந்த் : லதா ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் நலமோடு உள்ளார் என்று அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் தெரிவித்துள்ளார். வயிற்றுக் கோளாறு, சுவாசப் பிரச்னைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் நேரடி பராமரிப்பிற்காகவே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறுப்புகளின் சமநிலையைப் பராமரிக்கவே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி வருகின்றன என்றும் லதா தெரிவித்துள்ளார்.

ரசிகர்களுக்கு தடை; போலீஸ் குவிப்பு

ரஜினியின் உடல்நிலை பற்றி அறிந்து கொள்வதற்காக, அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் ரசிகர்கள் குவிகின்றனர். 'ரஜினியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு ரசிகர்கள் வர வேண்டாம்' என்று மருத்துவமனை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனாலும், ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உடல்நிலை பற்றி ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரிவர பதில் கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர். ரஜினி சிகிச்சை பெறுவது போன்ற போட்டோவையாவது பத்திரிகைகளில் வெளியிட வேண்டும் என்று கேட்டு மருத்துவமனை ஊழியர்களிடம் ரசிகர்கள் தகராறு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பத்திரிகையாளர்களுக்கும் மருத்துவமனைக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ரசிகர்களை கட்டுப்படுத்த போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவர்கள் தகவல்

இந்நிலையில், சுவாசக் கோளாறை குணப்படுத்த ஐசியூ வில் ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொண்டு ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரிலிருந்து ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் : ரசிகர்களுக்கு கோரிக்கை!

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குணமடைந்து வரும் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் வருவதை தடுக்க மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை!

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். திருப்பூரில் "மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்" இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்!  கவிஞர் வைரமுத்து

“ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். மேலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை!

ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

 

க்ரிஷ்-3ல் மூன்று ஹிருத்திக் ரோஷன்

Tags:


bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

க்ரிஷ்-3ல் மூன்று ஹிருத்திக் ரோஷன்

5/19/2011 10:24:23 AM

“க்ரிஷ்” படத்தை தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இயக்கும் “க்ரிஷ்-3″ல் அப்பா, மகன், பேரன் என மூன்று ரோலில் நடிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். கடந்த 2006ம் ஆண்டு வெளிவந்த “க்ரிஷ்” படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் ஹிருத்திக் அப்பா-மகன் என்று இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி ஜிந்தா, ப்ரியங்கா சோப்ரா நடித்து இருந்தனர். ஹாலிவுட் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்ட இப்படம் இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வசூலில் சாதனையும் படைத்தது. இப்படத்தை ராகேஷ் ரோஷன் தயாரித்து, இயக்கி இருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து “க்ரிஷ் – 3″ படத்தை எடுக்க இருக்கின்றனர். இப்படத்தை ராகேஷ் ரோஷனே தயாரித்து, இயக்குகிறார். ஹீரோவாக ஹிருத்திக்கும், அவருக்கு ஜோடியாக ப்ரியங்‌கா சோப்ராவுமே நடிக்கின்றனர். இவர்கள் தவிர முக்கிய ரோலில் மற்றொரு பாலிவுட் நடிகர் விவேக் ஓபுராய் நடிக்க இருக்கிறார்.

“க்ரிஷ்-3″ படமும், முந்தைய படமான “க்ரிஷ்” போன்று பலபடங்கு பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. அத்துடன் இந்தபடத்தில் ஹிருத்திக் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார். முதல் படத்தில் அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் வந்த ஹிருத்திக், க்ரிஷ்-3ல் அப்பா, மகன், பேரன் என மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

 

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை

Tags: ldquo, nbsp, rdquo


திருப்பூர்:  ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்

திருப்பூரில் “மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்” இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிரார்த்தனை

இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர். இது தவிர, 51 பக்தர்கள் திருமூர்த்தி மலை அமணலிங்கேசுவரர் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவில் இருந்து பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு 50 கிமீ தூரம் பாத யாத்திரையாக செல்கிறார்கள்.

அன்னதானம்

சேவை மையத்தின் சார்பில் பக்தர்களுக்கு வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மனிததெய்வம் ரஜினிகாந்த் இயக்க நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
 

ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை

Tags:


ரஜினி விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும், மீண்டும் ராணாவில் நடிக்க வேண்டும் என பிரார்த்திப்பதாக நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், ராணா. இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார்.

படப்பிடிப்பு தொடக்க விழா, சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த மாதம் 29ந் தேதி நடந்தது. அதில் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். படப்பிடிப்பு தொடக்க விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் அன்று பிற்பகல் வீடு திரும்பினார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 9ந் தேதி வரை அவர் அங்கு சிகிச்சை பெற்றார்.

கடந்த 13ந் தேதி மாலை அவர் சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நலக்குறைவு காரணமாக, 'ராணா' படம் நிறுத்தப்பட்டுவிட்டதாக வதந்திகள் பரவின. அந்த வதந்திகளை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மறுத்தார். ரஜினிகாந்த் குணம் அடைந்து வீடு திரும்பியபின், சில நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டபின், ராணா படப்பிடிப்பு தொடரும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில் படத்தின் கதாநாயகி தீபிகா படுகோன் அளித்துள்ள பேட்டியில், "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். ராணா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பு தொடக்க விழா அன்றுதான் அவரை முதன்முதலாக நேரில் பார்த்தேன்.

எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அவருக்கு எங்கிருந்து இவ்வளவு சக்தி கிடைக்கிறது? என்று தெரியவில்லை. இத்தனைக்கும் அன்று அவர் உடல்நலக்குறைவாக இருந்தார்.

ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன்," என்றார்.
 

ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை-தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

Tags: nbsp


சென்னை: சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாததால், ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து ரத்த சுத்திகரிப்புக்காக அவருக்கு நேற்று டயாலிசிஸ் சிகிச்சை தரப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், நேற்று நள்ளிரவில் மருத்துவனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மூச்சு விடுவதை எளிதாக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நுரையீரல், சிறுநீரகங்கள், இதயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது என்று மட்டும் கூறப்பட்டுள்ளது.

சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது.

இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இந் நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அபாய கட்டத்தை தாண்டினார் ரஜினி-டாக்டர்:
  Read:  In English 
 

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி : ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினி : ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

5/19/2011 10:07:11 AM

சென்னை : சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் ரஜினிக்கு டயாலிசிஸ் சிகிச்சை நடந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக இரண்டு வாரங்களுக்கு முன்பு ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். ஆனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பினார்.

ஆனால், நுரையீரல் பாதிப்பின் விளைவால் ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு 7வது மாடியில் உள்ள தனி அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நுரையீரல் பாதிப்பு காரணமாக அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறல் ஏற்பட்டு வந்தது. இந்த சுவாச பிரச்சனையால் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து நுரையீரலில் தேங்கியுள்ள நீரை அகற்ற சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் சிறுநீரகங்களிலும் பிரச்சனை ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் : மருத்துவர்கள் தகவல்

இந்நிலையில், சுவாசக் கோளாறை குணப்படுத்த ஐசியூ வில் ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவ சிகிச்சையை ஏற்றுக் கொண்டு ரஜினி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ரஜினிக்காக ரசிகர்கள் சிறப்பு பிரார்த்தனை!

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் திருப்பூரிலிருந்து ரசிகர்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.  

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு வரவேண்டாம் : ரசிகர்களுக்கு கோரிக்கை

ரஜினிகாந்தை பார்க்க மருத்துவமனைக்கு ரசிகர்கள் வரவேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. குணமடைந்து வரும் ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திப்பார் என்று உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் வருவதை தடுக்க மருத்துவமனை முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  

ரஜினிகாந்த் குணமடைய திரூப்பூரில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். திருப்பூரில் "மனிததெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்" இயங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். தற்போது நுரையீரலில் பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம் சார்பில் திருப்பூர் ஓம் சக்தி கோவிலில் 1008 பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜை மற்றும் பிரார்த்தனை செய்தனர்.

ரஜினிகாந்த் வருவார்… திரையுலகை ஆள்வார்! – கவிஞர் வைரமுத்து

“ரஜினிகாந்த் விரைவில் மீண்டு வருவார். திரையுலகை ஆள்வார். நவீன மருத்துவத்தின் மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது,” என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார். மேலும், உணர்ச்சி வசப்பட்டு எந்த ரசிகரும் வதந்திகளை நம்பி தவறான முடிவுக்கு தள்ளப்பட்டு விட வேண்டாம். ஏனென்றால் ரஜினியின் உயிரைப் போலவே உங்கள் உயிரும் உயர்ந்தது. உடல்களில்தான் பேதம் உண்டு. உயிர்களில் பேதம் இல்லை. எனவே மருத்துவமனையின் அதிகாரப்பூர்வமான அறிக்கையை மட்டுமே நம்புங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ரஜினிக்காக தீபிகா படுகோன் பிரார்த்தனை!

ரஜினி சாருடன் சேர்ந்து நான் இன்னும் நடிக்கவில்லை. அந்த நாளை நான் மிகுந்த பரவசத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர் விரைவில் பூரண உடல்நலம் பெற்று, ராணா படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

 

ஆபாச படம் : ஸ்ரேயா கோபம்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆபாச படம் : ஸ்ரேயா கோபம்!

5/18/2011 3:19:32 PM

பிரபலமான ஹீரோயின்கள் படங்களை மார்ஃபிங் செய்து ஆபாசமாக நெட்டில் உலவவிடுவதை கண்டிக்கிறார் ஸ்ரேயா. அவர் கூறியது: தமிழில் 'ரவுத்திரம்' படம் வரவுள்ளது. இந்தியில் தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன்' ஷூட்டிங்கில் பங்கேற்றேன். இந்நிலையில் சில நடிகைகளின் படங்கள், ஆபாசமாக போஸ் தருவது போல் நெட்டில் பரப்புவதாக அறிந்தேன். இதைவிட கொடுமை என்னவென்றால், அந்த படங்களை விற்கிறார்கள். இத்தகைய போலி படங்களால் அந்த நடிகைகள் எப்படி மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். தர்மசங்கடமான அந்த சூழலில் நானும் சிக்கி இருக்கிறேன். நெட்டில் எனது போலி படங்களை தேடிப்பிடித்து, அதை நிறுத்த நடவடிக்கை எடுத்தேன். இந்த சம்பவம் நடந்த பிறகு நான் எச்சரிக்கையாக இருக்கிறேன். பேஸ்புக், ட்விட்டரில் என்னை தொடர்பு கொள்பவர்கள் எனது படங்களை கேட்பதுண்டு. அவர்களுக்கு உடனடியாக எனது படங்களை அனுப்புவது கிடையாது. அப்படி கேட்பவர்கள் உண்மையில் நண்பர்கள்தானா என்பதை ஆராய்ந்த பிறகே அனுப்புவேன்.




 

கவுதம் படம் : புது இயக்குனர் தாக்கு!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவுதம் படம் : புது இயக்குனர் தாக்கு!

5/18/2011 3:20:29 PM

'நான் சிவனாகிறேன்' பட இயக்குனர் ஞானசேகர் கூறியது: இது சைக்கோ த்ரில்லர் படம் என்றாலும் காதல், பாடல் என்று கமர்ஷியலாக இயக்கி இருக்கிறேன். சைக்கோ கதைக்கு எப்போதும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். கடைசியாக வெளியான சைக்கோ கதை கொண்ட 'நடுநிசி நாய்கள்' படம், அந்த எதிர்பார்ப்பை சிதைத்துவிட்டது. படம் பார்ப்பவர்கள் கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு ஒரு கதையை படமாக்குவது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல. இத்தகைய படங்களிலும் ஒரு மெசேஜ் சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம். அதன் அடிப்படையில்தான் 'நான் சிவனாகிறேன்' கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கதைக்கு ஹீரோயின் தேவையில்லையென்றாலும் கமர்ஷியல் அம்சத்துக்காக பயன்படுத்தி இருக்கிறேன். ஹீரோயினாக வர்ஷா. ஹீரோவாக உதய் கார்த்திக் நடிக்கின்றனர். திருச்சி, திருப்பூர், சென்னையில் ஷூட்டிங் நடந்துள்ளது.




 

நிஜ போட்டோ கிராப்பர் ஆனார் ஜீவா

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிஜ போட்டோ கிராப்பர் ஆனார் ஜீவா

5/18/2011 3:22:56 PM

'கோ' படத்தில் பத்திரிக்கை போட்டோ கிராப்பர் வந்த ஜீவா, அந்த படத்திற்கு பிறகு போட்டோ எடுப்பதை தனது ஹாபியாக கொண்டுள்ளாராம். ஷூட்டிங்கிற்காக வெளியூர், வெளிநாடு டூர் என்றால் ஆர்வமாக கிளம்பும் ஜீவா, ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் சுற்றுலா சென்று போட்டோக்கள் எடுப்பதை ஹாபியாக கொண்டுள்ளாராம்.




 

தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லை!

5/18/2011 3:21:31 PM

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு பின் தமிழில் புதிய படங்கள் ஏதும் ரீமாவுக்கு கிடையாது. அதுமட்டுமின்றி பிற மொழி படங்களும் கைவசம் இல்லாததால், தவித்து போனார் ரீமா சென். இறுதியில் எந்த படமும் இல்லாமலிருந்த ரீமா சென், தெலுங்கு டைரக்டர் வி.என். ஆதித்யா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் முடிந்த பிறகு மலையாளத்தில் ஒரு படம் நடிக்கிறார்.




 

சற்குணத்தின் புதுமுயிற்சி!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சற்குணத்தின் புதுமுயிற்சி!

5/18/2011 3:22:13 PM

களவாணி' பட இயக்குனர் சற்குணம், 1966ல் நடக்கும் கதையாக 'வாகை சூட வா' படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் 1960களில் ஏற்படும் சூழல் போல் கதை உருவாக்கி, அதற்கான முயிற்சியும் எடுத்த வருகிறார். விமல் நடிக்கும் இந்த படத்தின் காஸ்டியூம், வசன உச்சரிப்புகளுக்காக 60களில் வெளியான படங்களை பார்க்கிறாராம் சற்குணம்.




 

கிசு கிசு - கலங்கும் நாயகி அடக்கமான ஹீரோ

Tags:

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
கலங்கும் நாயகி அடக்கமான ஹீரோ

5/18/2011 3:23:50 PM

நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

அஜ்மலான நடிகரு அடிக்கடி நைட் பார்ட்டிகளுக்கு போறாராம்... போறாராம்... அங்கே நட்பு வட்டாரத்தை உருவாக்குறாராம். சமீபத்துல பார்ட்டிக்கு போனவரு, அங்கு இருந்த ஸ்டார்ஸ்கிட்ட தானா போயி பேசினாராம். அவங்களோட படத்துல சான்ஸ் கொடுக்கும்படி கேட்டாராம்... கேட்டாராம்...

டபுள் ஹீரோ படத்துல நடிக்க மாட்டேன்னு மல்லுகட்டிவந்தாரு காதல் நடிகரு. திடீர்னு டபுள் ஹீரோ படத்துல நடிச்சாரு. இனியும் சோலோவாத்தான் நடிப்பேன்னு முரண்டு பண்ணாம வர்ற வாய்ப்பை யூஸ் பண்ணிக்கோன்னு கூட இருக்கிறவங்க அட்வைஸ் பண்றாங்களாம்... பண்றாங்களாம்... ட்ரிபிள் ஹீரோ கதையா இருந்தாலும் இனிமே நடிப்பேன்னு நடிகரு ரொம¢ப அடக்கமா சொல்றாராம்... சொல்றாராம்...

டிஷர்ட்டை தூக்கி இடுப்பை காட்டுற சீன்ல நடிச்சாரு கல்லூரி நடிகை. இதுக்கு ஆந்திரால எதிர்ப்பு கிளம்பிச்சு. Ôஇது என்னோட தப்பு இல்லைÕன்னு நடிகை விளக்கம் கொடுத்தாரு. நிலைமை சரியாயிடுச்சி. நடிகை சந்தோஷமா இருந்தாரு... இருந்தாரு... இப்போ திடீர்னு ஸ்விம் சூட்ல நடிக்க¤றாருன்னு டோலிவுட்ல கிளப்புறாங்களாம்... கிளப்புறாங்களாம்... இதனால நடிகை கலங்கிப் போயிருக்கிறாராம்... போயிருக்கிறாராம்...