பார்ட்டிகளில் பட வாய்ப்பு தேடும் சோனியா அகர்வால்


பார்ட்டி என்றால் தவறாமல் ஆஜராகிவிடுகிறார் நடிகை சோனியா அகர்வால்.

நடிகை சோனியா அகர்வால் விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்கத் துவங்கிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் எப்படி வாய்ப்பு தேடுகிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?

பிரபலங்கள் கொடுக்கும் அனைத்து பார்டிகளிலும் தவறாமல் ஆஜராகிவிடுகிறார். பார்ட்டி என்றால் பல பேர் வருவார்கள். புதிதாக பலர் அறிமுகமாவார்கள். அதன் மூலம் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பது சோனியாவின் கணிப்பு. அவர் கணிப்பு தவறாகவில்லை.

ஆம், பார்ட்டிகளுக்கு சென்றது வீண் போகவில்லை. தற்போது கை நிறையப் படம் வைத்திருக்கிறார் சோனியா. குணசித்ர கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என்று ஒப்புக் கொள்கிறார்.

சோனியா பலே கில்லாடி தான்...
 

சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை: போலீசார்


சென்னை: சரண் தன்னை பலாத்காரம் செய்ததற்கு ஆதாரமான வீடியோவை நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்ததாக சோனா தெரிவித்தார். ஆனால் சோனா எந்த வீடியோ ஆதாரமும் கொடுக்கவில்லை என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நடிகை சோனா நேற்று காலை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு கூடுதல் கமிஷனர் அபய்குமார் சிங்கை சந்தித்து புகார் மனு கொடுத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, எஸ்.பி.பி. சரண் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்துள்ளேன். கமிஷனரை சந்தித்து அதற்கான வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தேன்.

வீடியோவை எனது லேப்டாப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். அதை கமிஷனரிடம் ஒப்படைத்து விட்டேன். நான் பணத்துக்கு ஆசைப்பட்டும், விளம்பரத்துக்காகவும் சரண் மீது பாலியல் புகார் கூறுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. அதற்கு இந்த வீடியோ ஆதாரம் பதில் சொல்லும். இந்த ஆதாரத்தை வைத்து சரண் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் கேட்டுக் கொண்டேன் என்றார்.

வீடியோ ஆதாரமே கிடைத்துவிட்டது. எனவே, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்படும் என்று பார்த்தால் புஸ்ஸாகிவிட்டது. காரணம் சோனா போலீசாரிடம் வீடியோ எதையும் கொடுக்கவேயில்லையாம். புகார் மனுவை மட்டும் கொடுத்துவிட்டு, வீட்டுக்குப் போய் உதவியாளரிடம் வீடியோவை கொடுத்தனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றவர், சென்றவர் தானாம்.

இந்த தகவலை போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து சோனாவிடமே கேட்கலாம் என்று நினைத்து தொடர்பு கொண்டால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி. சரணை மிரட்டுவதற்காகத் தான் தன்னிடம் வீடியோ ஆதாரம் உள்ளது என்று சோனா தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது. சமரச பேச்சுவார்த்தைகளை சோனா வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 

காஜலைத் தேடி வரும் பலான மலையாள பட வாய்ப்புகள்


காஜல் அகர்வாலுக்கு தற்போது கேரள நாட்டில் இருந்து பட வாய்ப்புகள் குவிகிறதாம். ஆனால் அவை எல்லாம் ஒருமார்க்கமான படங்கள்.

நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர். தமிழிலும் அவ்வப்போது வந்து நடித்துவிட்டு போவார். அண்மையில் இந்தியில் சிங்கம் படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படி அவர் ஆக்டிங் கெரியர் மேலே போய் கொண்டிருக்கையில் அவர் செய்த ஒரு காரியம் பெரிய பிரச்சனையாகியுள்ளது.

எப்ஹெச்எம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தார். நான் அப்படியெல்லாம் போஸ் கொடுக்கவில்லை என்று முதலில் மறுத்த அவர் பின்பு அமைதியாகிவிட்டார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக பிலிம்பேர் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கும் டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்துள்ளார். இப்படி அடுத்தடுத்து அதிர்ச்சி தந்துள்ளார் காஜல்.

பாலிவுட்டில் சான்ஸ் கிடைக்கத் தான் காஜல் இப்படியெல்லாம் போஸ் கொடுக்கிறார் என்று அங்குள்ளவர்கள் கிண்டல் செய்கிறார்களாம். அவர் பாலிவுட் வாய்ப்பை எதிர்பார்த்து இப்படி செய்தாரா, இல்லையா என்றெல்லாம் நமக்கு தெரியாது. ஆனால் அவருக்கு மாலிவுட்டில் இருந்து வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். ஆனால் அவையெல்லாம் பலான பட வாய்ப்புகளாம்.

இதனால் காஜல் தரப்பு அதிர்ச்சியாகியுள்ளதாம். எதையோ நினைத்து போஸ் கொடுத்தால் எதுவெல்லாமோ கிளம்பி வருகிறதே என்று அங்கலாய்க்கிறார்களாம்.

எல்லாம் அந்த டாப்லெஸ் போஸால் வந்த வினை...!
 

அஜீத்தை ராஜா இயக்கவில்லை! - ஜெயம் ரவி மறுப்பு


அஜித்தை வைத்து ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர்கள் என்று பல்வேறு செய்திகள் உலா வருகின்றன.

சமீபத்தில் ஜெயம் ராஜாதான் இந்தப் படத்தை இயக்குவார் என எந்த ஆதாரமும் இல்லாமல் ஒரு செய்தி வெளியானது. இருவரும் மகேஷ்பாபுவின் 'தூக்குடு' படத்தை ரீமேக்குகிறார்கள் என்றும் கூறியிருந்தனர்.

அதுபற்றி இன்டஸ்ட்ரியிலும் வாய்வழி பேச்சு பரவியதால், உடனடியாக இதற்கு முற்றுப் புள்ளி வைக்க நினைத்தார்கள் ஜெயம் ராஜா தரப்பில்.

உடனே ஜெயம் ரவி தனது ட்விட்டரில், “ராஜா அஜித் படத்தை இயக்கவில்லை. அந்த செய்தி தப்பானது,” எனக் குறிப்பிட்டுள்ளார். அஜித்தின் தரப்பிலும், ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கு தேதிகள் மட்டுமே கொடுத்திருப்பதாகவும், வேறு எதுவும் உறுதி செய்யப்படவில்லை எனவும், ஜனவரி மாதம் வரை பில்லா 2 படப்பிடிப்பு இருக்கும் அதுவரை எதுவும் உறுதி படுத்த நேரம் இருக்கப்போவதில்லை எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே அஜீத்துக்கு பெரும் தொகையை இந்தப் படத்துக்கு அட்வான்ஸாகக் கொடுத்துவிட்டார் ஏ எம் ரத்னம்!

இப்போதைய நிலவரப்படி இந்தப் படத்தை ஒன்று ஷங்கர் இயக்குவார் அல்லது விஷ்ணுவர்தன் இயக்கக்கூடும் என்கிறார்கள்.
 

காதலர் சைப் அலியின் தந்தை மன்சூர் அலிகான் பட்டோடி மரணம்- சோகத்தில் கரீனா


மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடியின் மரணத்தை தொடர்ந்து, இந்தி நடிகை கரீனா கபூர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார். தனது திருமணத்திற்கு முன்பே மன்சூர் அலிகான் இறந்து விட்டதால் அவர் பெரும் சோகத்துடன் காணப்படுகிறார்.

இந்திய ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்தி நடிகை கரீனா கபூர் செப்டம்பர் 21 தேதி தனது 31 வயதை கடந்தார். ஆண்டுதோறும் தனது பிறந்தநாளை மிக விமரிசையாக கொண்டாடும் கரீனா, அன்று எல்லா பணிகளுக்கும் ஓய்வு கொடுத்துவிட்டு தனது உயிர் நண்பரும், நடிகருமான சயீப் அலிகான் மற்றும் தனது குடும்பத்துடன் ஜாலியாக கொண்டாடுவார்.

சயீப் அலிகான் மற்றும் கரீனா கபூரின் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற செய்திகள் பரவி வரும் நிலையில், இந்தாண்டு கரீனாவின் பிறந்தநாள் விழா படுவிமரிசையாக கொண்டாட கரீனா திட்டமிட்டு இருந்தார். கரீனாவிற்கு கூடுதல் மகிழ்ச்சியாக கடைசியாக வெளியான அவரது திரைப்படமான 'பாடிகாட்' சூப்பர் ஹிட்டாகி உள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சயீப் அலிகானின் தந்தையும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான பட்டோடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் தனது நண்பர் சயீப்பின் வேண்டுகோளை ஏற்று தனது இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாடத்தை கரீனா ரத்து செய்தார்.

இந்த நிலையில், நேற்று பட்டோடி உயிரிழந்தால், கரீனா கபூர் பெரும் சோகமடைந்தார். மன்சூர் அலிகான் பட்டோடியின் குடும்பத்தினருடன் அவர் ஆறுதலாக தங்கியுள்ளார்..
 

ஏழாம் அறிவு இசை வெளியீடு... விழாக்களின் சிகரம்!


தமிழ் சினிமா இசை வெளியீட்டின் உச்சம் என்று புகழும் அளவுக்கு பிரமாண்டம், சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாமல் நடந்தது சூர்யா நடிப்பில, ஆ ஆர் முருகதாஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள உதயநிதியின் ஏழாம் அறிவு பட இசைவெளியீட்டு விழா.

தமிழில் மிகுந்த எதிர்ப்பார்க்குரிய படங்களுள் ஒன்றாகக் கருதப்படும் ஏழாம் அறிவு இசை வெளியீடு சென்னை வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை மாலை நடந்தது.

விழாவுக்கு தமிழ் சினிமாவின் முக்கியஸ்தர்கள் அத்தனை பேரும் வந்திருந்தார்கள். சூர்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் குவிந்துவிட்டனர் என்றால் மிகையல்ல.

வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு நல்ல கலைநிகழ்ச்சியைப் போல இசை வெளியீட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

க்யூட் ஜோடி என்று சினிமாவில் பெயர் வாங்கிய ஜெய் - அஞ்சலிதான் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள். சும்மா சொல்லக் கூடாது, விழாவுக்கான காம்பியரிங் என்று சொல்ல முடியாத அளவுக்கு இயல்பாகத் தொகுத்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றனர்.

படத்தின் ட்ரெயிலர் அத்தனை பேரையும் பிரமிக்க வைத்துவிட்டது. இயக்குநர்கள் கேஎஸ் ரவிக்குமார், விஜய், நடிகர் தனுஷ் என வந்திருந்த அத்தனை பேரும் பாராட்டித் தள்ளினர்.

"ஒரு நல்ல ட்ரைலர் பார்த்தவுடன் புரியக்கூடாது. அதை மெய்ப்பிக்கிறது முருகதாஸின் இந்த ஏழாம் அறிவு ட்ரைலர். காட்சிகளின் பிரமாண்டமும் நேர்த்தியும் என்னை வாயடைக்க வைத்து விட்டது," என்றார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

இயக்குநர் விஜய் கூறுகையில், "இதுவரை ஆங்கிலப் படங்களைத்தான் ரெஃபரன்ஸுக்கு வைத்துக் கொள்வார்கள் தமிழ் இயக்குநர்கள். இனி ஏழாம் அறிவை அந்த லெவலில் வைக்கலாம். தமிழ்ப் படங்களை உலகமே பார்க்கிறது. அந்த வகையில் இனி ஹாலிவுட் காரர்களும் இந்தப் படத்தை ரெபரன்ஸுக்கு வைக்கும் அளவுக்கு படம் உள்ளது," என்றார்.

பாடல்களை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், ஹீரோ சூர்யா, நாயகி ஸ்ருதி உள்ளிட்ட ஏழாம் அறிவு குழுவினர் வெளியிட, அதனை விழாவுக்கு வந்திருந்த கேஎஸ் ரவிக்குமார், நடிகர் சிவகுமார் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

படத்தின் இரு பாடல் காட்சிகளை முன்னோட்டமாகத் திரையிட்டுக் காட்டினர். பின்னர் அனைத்துப் பாடல்களையும் மேடையில் பாடி ஆடி பரவசப்படுத்தினர் இஷா ஷெர்வானி, லட்சுமி ராய் உள்ளிட்டோர்.

நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது, இரு வெளிநாட்டு கலைஞர்கள் செய்து காட்டிய அருமையான ஜிம்னாஸ்டிக் காட்சி. 10 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பார்த்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

அதேபோல, படத்தின் சிறப்புகள் குறித்த லேசர் நிகழ்ச்சியும் பிரமாதமாக அமைந்திருந்தது.

பாடி ஆடி பரவசப்படுத்திய சூர்யா!

பொன்னந்தி மாலைநீ... என்ற பாடலை முதல் முறை கேட்டபோதே அரங்கம் ஆர்ப்பரித்து ஆடியது. இன்னொரு பாடலுக்கு படத்தின் நாயகன் சூர்யா மேடையேறி, நடன இயக்குநர் ஷோபி குழுவினருடன் இணைந்து ஆடி ரசிகர்களைப் பரவசப்படுத்தினார்.

படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன் பேசும்போது, "ஒரு தமிழ்ப் பெண்ணாக எனக்கு இது மிக முக்கியமான படம். இப்படி ஒரு மிகப் பெரிய, திறமையான டீமோடு இணைந்து பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்," என்றார்.

சூர்யா-முருகதாஸ்-ஸ்ருதிக்கு கமல் தந்த இன்ப அதிர்ச்சி!

ஏழாம் அறிவு இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு நிகழ்ச்சியாக கமல் அளித்த வாழ்த்துச் செய்தி, ஆடியோ விஷுவலாக ஒளிபரப்பப்பட்டது.

தனது வாழ்த்தில், "திறமையும் வெற்றியும் ஒருங்கே அமைவது அரிதாக நடக்கும் விஷயம். இந்தப் படத்தில் மிகச் சிறந்த திறமையாளர்கள் இணைந்துள்ளனர்.

அவர்களோடு என்மகள் ஸ்ருதி இணைந்து பணியாற்றுவது, அவருக்கு கிடைத்த அதிருஷ்டம் என்பேன்," என்றார்.

மொத்தத்தில் ஏழாம் அறிவு என்ற படத்தின் உலகத்தரத்துக்கு ஒரு அசத்தல் முன்னோட்டமாக அமைந்தது இந்த இசை வெளியீட்டு விழா என்றால் மிகையல்ல!
 

'நடிகையின் வாக்குமூலம்'த்தில் செல்வராகவனை 'வெறுப்பேற்றுகிறாரா' சோனியா?


சோனியா அகர்வால் நாயகியாக நடிக்கும் ஒரு நடிகையின் வாக்குமூலம் படத்தில், அவரது முன்னாள் கணவர் இயக்குநர் செல்வராகவனை வெறுப்பேற்றும் வகையில் ஒரு கேரக்டர் உருவாக்கப்படுவதாக எழுந்துள்ள வதந்தியை மறுத்துள்ளார் படத்தின் இயக்குநர் ராஜ் கிருஷ்ணா.

'ஒரு நடிகையின் வாக்கு மூலம்' என்ற பெயரில் நடிகர், நடிகைகளின் நிஜ வாழ்க்கை கதை படமாகிறது. இந்த படத்தை ராஜ்கிருஷ்ணா இயக்குகிறார். இதில் பாதிக்கப்படும் நடிகை வேடத்தில் சோனியா அகர்வால் நடிக்கிறார். திருமணமாகி, விவாகரத்து பெற்ற பிறகு சோனியா ஹீரோயினாக நடிக்கும் படம் இது.

நடிகையான பிறகு சோனியா சந்தித்த நெருக்கடிகள் மற்றும் திருமண வாழ்க்கை விவாகரத்து போன்றவை இதில் இடம்பெற்றுள்ளனவாம். சோனியா அகர்வாலின் சொந்த வாழ்க்கையே இந்த படம் என்றும் கணவர் வேடத்தில் நடிக்க செல்வராகவன் தோற்றத்தில் நடிகர் தேடுவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதுகுறித்து இயக்குனர் ராஜ்கிருஷ்ணாவிடம் கேட்ட போது, "நான் நிறைய நடிகைகளை சந்தித்திஇருக்கிறேன். அவர்கள் பட்ட சிரமங்களை நேரில் அறிந்தும் இருக்கிறேன். அதை 'ஒரு நடிகையின் வாக்குமூலம்' என்ற பெயரில் படமாக எடுக்கிறேன். ஒவ்வொரு நடிகையின் வாழ்வில் நடந்த ஓரிரு சம்பவங்கள் இப்படத்தில் இருக்கும். அப்படி எல்லா நடிகைகளும் சந்தித்த நிகழ்வுகள் இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது.

இப்படம் முழுக்க சோனியா அகர்வாலின் வாழ்க்கை கதை என்பது சரியல்ல. கதையைக் கேட்டபோது, என் வாழ்க்கையிலும் இதுபோன்று ஓரிரு சம்பவங்கள் நடந்துள்ளன என்றார் சோனியா. அவர் நடிப்பதால் இந்தப் படம் அவரது சொந்த வாழ்க்கைக் கதையின் அடிப்படையில் படமாக்கப்படுவதாக ஒரு இமேஜ் பரவிவிட்டது. அவர் வாழ்க்கையில் நடந்தவை இரண்டே சீன்கள்தான் படத்தில் இருக்கும்.

செல்வராகவன் போன்று இப்படத்தில் ஒரு கேரக்டரை உருவாக்கி இருப்பதாக வெளியான செய்தியிலும் உண்மை இல்லை. நடிகைகளான எனது சகோதரிகளை புண்படுத்தும் காட்சிகளோ சக இயக்குநரை அவமதிக்கும் காட்சியோ இப்படத்தில் இருக்காது," என்றார்.
 

ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும்! - 'மெரினா' இயக்குநர், தயாரிப்பாளர் பாண்டிராஜ்


பசங்க, வம்சம் என இரண்டே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க, நம்பிக்கை தரும் படைப்பாளிகள் வரிசையில் இடம்பெற்றுள்ளவர் பாண்டிராஜ்.

இப்போது இவர் உருவாக்கியுள்ள புதிய படம் மெரினா. தலைப்பே சொல்லிவிடும் இந்தப் படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதை.

ஆம்... மெரினா கடற்கரையே வாழ்க்கை என அங்கே சுண்டல், டீ விற்றபடி திரியும் சிறுவர்கள், அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள லோக்கல் புரோக்கர்கள், மெரினாவில் காதல் வளர்க்கும் இளசுகள்... என நாம் பார்க்கும், ஆனால் விரிவாகத் தெரியாத இன்னொரு உலகம் பற்றித்தான் இந்தப் படத்தில் அவர் சொல்லியிருக்கிறாம்.

இந்தப் படம் குறித்து நம்மிடம் பேசினார் பாண்டிராஜ்.

படம் பற்றி வெளியாகியுள்ள தகவல்களை வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட டாகுமெண்டரி எஃபெக்ட் தெரிகிறதே, என்று ஆரம்பித்தோம்.

உடனே சட்டென்று இடைமறித்தவர், "இதுதான் கதை என்பது முடிவானதுமே, எனக்குள் இந்தக் கேள்வி எழாமல் இல்லை. ஆனால் மெரினாவில் பல உலகங்களைப் பார்க்க முடிந்தது. அது ஒரு முடிவற்ற கதைக் களம். அதில் உள்ள சில சுவாரஸ்யமான நிகழ்வுகள், மனிதர்களைப் பற்றி வணிக ரீதியில் பொழுதுபோக்காகச் சொல்லியிருக்கிறேன். ஏதோ உபதேசம் போலவோ, செய்திப் பட சாயலோ இதில் எள்ளளவும் பார்க்க முடியாது. மெரினா கடற்கரையை சுற்றி ஆயிரம் சோகங்கள், இருட்டு உலகங்கள் என்று இருந்தாலும், நான் காட்டியிருப்பது ரொம்ப ஜாலியான மெரினாவை மட்டும்தான்," என்றார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளராகவும் மாறியது ஏன்?

"எனக்கு இப்போது 2 படங்கள் வெளித்தயாரிப்பாளர்களுக்கு செய்து தரவேண்டிய கமிட்மெண்ட் உள்ளது. ஆனாலும் இந்தக் கதையை நான் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன். யாரிடமும் இந்தக் கதையைக் கொண்டுபோய் கொடுத்து தயாரிப்பாளராக இருக்கச் சொல்லவில்லை.

இதுபோன்ற படங்களுக்கு இயக்குநரே தயாரிப்பாளராக இருப்பதுதான் வசதியானது. என்னைக் கேட்டால் ஒவ்வொரு இயக்குநரும் தயாரிப்பாளராகணும். அப்போதுதான் தயாரிப்பாளரின் வலி புரியும். நான் இது வரை பண்ண இரண்டு படங்களிலும் தயாரிப்பாளர்களின் இயக்குநராக, அவர்களுக்கு எந்த வகையிலும் நஷ்டம் ஏற்படுத்தாத இயக்குநராகவே இருந்துள்ளேன்," என்றார்.

இந்தப் படத்துக்காக நிறைய ஆய்வுகளெல்லாம் மேற்கொண்டு, அதில் கண்டறிந்த உண்மைகளின் அடிப்படையில் காட்சிகளை அமைத்தாராம் பாண்டிராஜ்.

படத்தின் நடிகர்கள் குறித்து அவர் கூறுகையில், "புதுமுகம் சிவகார்த்திகேயன், ஓவியா, 'பசங்க' படத்தில் நடித்த பக்கடா மற்றும் 13 சிறுவர்கள் நடித்துள்ளனர் மெரீனாவில். ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தில் விமலையே நடிக்க வைக்கலாம்னுதான் நினைச்சேன்.

அப்புறம் 'பசங்க' படம் மாதிரியே ஆயிடுமோன்னு சந்தேகமா இருந்தது. அப்போ தான் ஒரு நிகழ்ச்சியில் சிவ கார்த்திகேயனை பார்த்தேன். நம்ம கதைக்கு இவரு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. என்னுடைய உதவி இயக்குனர்களும் இதையே சொன்னார்கள். இந்த படத்தில் இவர் எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருப்பார். இவருக்கு ஜோடியா ஓவியா நடிச்சிருக்காங்க. இருவருக்குள் இருக்கும் காதல்தான் படம்.

'பசங்க' படத்தில் நடித்த பக்கோடா பாண்டி இந்த படத்தில் மெயின் ரோல் பண்ணிருக்கான். இந்த சின்ன வயசிலேயே அவனுக்குள்ளே இவ்வளவு திறமையானு படம் பார்க்கும் எல்லாரையும் நினைக்க வைப்பான். 'பசங்க' படத்தில் அவனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா கிடைக்கல. இந்தப் படம் அந்தக் குறையைத் தீர்க்கும்," என்றார்.

உங்கள் சக இயக்குநர்கள், முதல் படம் தந்த சசி போன்றவர்களுக்கு இந்தக் கதை தெரியுமா... அவர்கள் கருத்து என்ன?

"இந்த கதை இயக்குனர் சுசீந்திரனுக்கு மட்டும் தான் தெரியும். சசி சாருக்கு இந்த கதையின் ஒன்லைன் தெரியும்," எனும் பாண்டி, இதுவரை எந்த புதிய இயக்குநரும் செய்யாத ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் செய்கிறார்.

இந்தியில் வெளியாகி பெரும் வெற்றியும் விருதுகளும் குவித்த மீரா நாயரின் 'சலாம் பாம்பே' என்ற படத்தினை பார்த்துதான் இந்த படத்தின் கதையை தயார் செய்தாராம் பாண்டிராஜ். ஆகையால் படத்தின் ஆரம்பத்திலேயே இதற்கான நன்றி அறிவிப்பை தெரிவிக்க இருக்கிறாராம்!
 

ஏழாம் அறிவில் வரும் ஹீரோ 'போதி தர்மன்'... சில குறிப்புகள்!


போதி தர்மன்... தமிழ் சினிமாக்காரர்கள் மற்றும் ரசிகர்கள் இணையத்தில் அதிகமாககத் தேடிக் கொண்டிருக்கும் பெயர் இன்றைக்கு இதுதான்!

காரணம், சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்தில் கதையின் நாயகன் இந்த போதி தர்மன்தான்!

முதலில் போதி தர்மன் யார் என்பதை சுருக்கமாகப் பார்த்து விடுவோம்.

கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர்.

புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா, ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு' பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... இப்படிப் போகிறது போதியின் கதை.

இந்தக் கதைதான் சூர்யா நடிக்கும் ஏழாம் அறிவு படத்துக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. போதியின் ஜீன்களைப் பயன்படுத்தி, நவீன மருத்துவமுறையில் சாதனைகளைச் செய்வதாக இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

படத்தின் முக்கிய காட்சிகளை சீனா, தாய்லாந்து என போதி தர்மன் வாழ்ந்த இடங்களிலேயே எடுத்திருப்பதுதான் ஏழாம் அறிவின் சிறப்பு.

தகவல்களைப் படிக்கும்போதே படம் குறித்து ஏக எதிர்ப்பார்ப்பு உருவாகிறதல்லவா... எதிர்ப்பார்ப்பை பொய்யாக்க மாட்டார் முருகதாஸ் என நம்புவோம்!
 

சோனா பாலியல் பலாத்கார வழக்கு: எஸ்.பி.பி.சரணுக்கு 2 வாரம் இடைக்கால முன்ஜாமீன்


சென்னை: மது விருந்தின்போது நடிகை சோனாவை பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரணுக்கு இரு வார இடைக்கால முன்ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்த வழக்கை நீதிபதி ராஜசூர்யா விசாரித்தார். வழக்கு விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதால், முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் அவர் சாட்சியை கலைத்துவிடக்கூடும் என்றும் அரசு வக்கீல் சி.பாலசுப்பிரமணியம் வாதிட்டார்.

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சரணுக்கு 2 வாரத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் அளிக்கப்படுகிறது. வழக்கின் சாட்சிகளை கலைப்பதற்கு முயற்சிக்கக்கூடாது. மறுஉத்தரவு வரும்வரை தினமும் காலை 8 மணிக்கு பாண்டிபஜார் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி சரண் கையெழுத்திட வேண்டும்.

ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீன் தொகையும், அதே தொகைக்கான இருநபர் ஜாமீனும் அளித்து சரண் முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம்," என்றார்.

முன்னதாக, எஸ்பிபி சரண் தன்னிடம் தவறாக நடந்ததற்கு வீடியோ ஆதாரம் இருப்பதாகக் கூறி அவற்றை போலீஸ் கமிஷனரிடம் ஒப்படைத்தார் சோனா.

மேலும் இன்று (வெள்ளிக்கிழமைக்குள்) சரண் தன்னிடம் மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் வாங்குவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால் சரண் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை. இதற்கிடையே அவருக்கு முன்ஜாமீனும் கிடைத்துள்ளது.
 

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஷங்கர் இயக்கத்தில் அஜீத்?

9/22/2011 12:20:07 PM

மாங்காத்தா வெற்றி பிறகு தல அஜீத்தை பற்றி நாளுக்கு நாள் ஒரு புது தகவல் வந்த கொண்டே இருக்கிறது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் அஜீத் அடுத்து நடிக்கும் மெகா பட்ஜெட் படத்தை இயக்குவதில் புது ரேஸ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் பில்லா 2 முடிந்த பிறகு அஜீத்தின் அடுத்த படத்தை ஜெயம் ராஜா இயக்கலாம் என செய்திகள் வெளியாகின. மேலும், நண்பன் படத்தை முடித்த கையோடு, இயக்குநர் ஷங்கர் அடுத்த படத்திற்கான வேலையை உடனடியாக தொடங்க உள்ளதாக தெரிகிறது. காரணம் ஏற்கெனவே ஏஎம் ரத்னத்துக்கு ஒரு படம் செய்து தருவதாகக் கூறியுள்ளாராம் ஷங்கர். இந்தப் படம் மூலம் அந்த வாக்குறுதி நிறைவேறவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்படி நிறைவேறினால் ஷங்கர் இயக்கத்தில் அஜீத் நடிப்பது கிட்டதட்ட உறுதியாகிவிடும். இந்த செய்தி ‘உண்மையா’ இல்லை ‘பொய்யா’ என்பதை ஷங்கர் வாய் திறந்தால் மட்டுமே நிஜமாகும்.

 

ஜான் ஆபிரகாமிற்கு கல்யாண ஆசை

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஜான் ஆபிரகாமிற்கு கல்யாண ஆசை

9/22/2011 11:54:40 AM

பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். கை நிறையப் படங்கள் வைத்துக் கொண்டு ஓடி, ஓடி நடிக்கிறார். ஜானும், நடிகை பிபாஷா பாசுவும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அன்மையில் தான் ஆளுக்கொரு திசையைப் பார்த்துக் கொண்டு சென்றுவிட்டனர். அதன் பிறகு பிபாஷா டகுபதி ராணா, ஜாஷ் ஹார்ட்னெட், ஷாஹித் கபூருடன் நெருங்கிப் பழகுவதாக செய்திகள் வந்தன. அதேபோல ஜானும் ஜெனிலியா, தீபிகா படுகோனே என நேரத்தை செலவிடுவதாகப் பேசப்பட்டது. இந்நிலையில் ஜானுக்கு திருமண ஆசை வந்துள்ளதாம். அதை அவரே தனது வாயால் தெரிவித்துள்ளார்.




 

"எங்கேயும் எப்போதும்" படத்தின் சூப்பர் ஓபனிங்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் சூப்பர் ஓபனிங்!

9/22/2011 11:52:48 AM

இயக்குனர் ஏ,ஆர்.முருகதாஸின் முதல் தயாரிப்பான ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளது. பிரபல ஹாலிவுட் நிறுவனமான பாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக தயாரித்த ‘எங்கேயும் எப்போதும்’ தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு தமிழகத்தில் 128 திரையரங்குகளில் மட்டுமே வெளியான இந்தப் படத்துக்கு ரூ 2 கோடியை வசூல் ஈட்டியுள்ளது. முதல் மூன்று நாட்களில் சராசரியாக 80 சதவீத கூட்டத்துடன் ஓடியுள்ளது இந்தப் படம். இந்த வெற்றி முருகதாஸையும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்தையும் மீண்டும் இணைய வைத்துள்ளது. அடுத்த படத்துக்கான வேலைகளில் இப்போதே களமிறங்கிவிட்டனர். அடுத்த படத்துக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என முருகதாஸ். இப்போது தமிழகத்தில் மட்டுமே வெளியாகியுள்ள எங்கேயும் எப்போதும், அடுத்த வாரம் இந்தியாவின் பிற பகுதிகளிலும் வெளிநாடுகளிலும் ரிலீசாகிறது.

 

கரணின் தந்தையிடம் செயின் பறிப்பு

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கரணின் தந்தையிடம் செயின் பறிப்பு

9/22/2011 11:38:46 AM

பிரபல நடிகர் கரணின் தந்தை கேசவன். இவரும் சில படங்களில் நடித்து உள்ளார். சென்னை கோயம்பேடு வடக்குமாட வீதியில் தனியாக வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டு வெளியில் நின்ற மர்ம நபர் ஒருவன், கேசவனை தள்ளிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். பின்னர் கத்திமுனையில் கேசவனை மிரட்டி, அவர் அணிந்திருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் அந்த நபர் தப்பி ஓடிவிட்டான். இந்த சம்பவம் தொடர்பாக கேசவன் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு போலீசில் புகார் கொடுத்தார்.