அவன் இவனில் மது ஷாலினி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'அவன் இவன்' படத்தில் தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். ஆர்யா, விஷால் நடிக்கும் படம் 'அவன் இவன்'. பாலா இயக்குகிறார். காமெடி படமான இதில், சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். இன்னொரு ஹீரோயினை தேடி வந்தனர். இப்போது தெலுங்கு நடிகை மது ஷாலினி நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது தேனி அருகே நடந்து வருகிறது.


Source: Dinakaran
 

‘வில்லனிடமிருந்து’ மகளைக் காப்பாத்துங்க-பாக்யாஞ்சலி தந்தை புகார்

Bagyanjali
வில்லன் நடிகரிடமிருந்து என் மகளைக் காப்பாற்றுங்கள் என்று நடிகை பாக்யாஞ்சலியின் தந்தை போலீஸில் இன்னொரு புகார் தந்துள்ளார்.
கோட்டி, நெல்லு மற்றும் உன்னையே காதலிக்கிறேன் படங்களின் நாயகி பாக்யாஞ்சலி. இதுவரை மூன்று படங்களில் நடித்தும் வெளியில் தெரியாமலிருந்த இவரது பெயர், இப்போது பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
உன்னையே காதலிப்பேன் என்ற படத்தில் வில்லனாக நடித்த வேலு தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள மிரட்டுவதாகவும், ஆபாச காட்சியை செல்போனில் படமெடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாகவும் போலீசில் புகார் தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பாக வேப்பேரி போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் நிலையம் வந்து வேலு உரிய விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளனர்.
இந்த புகார் குறித்து வில்லன் நடிகர் வேலு மறுப்பு தெரிவித்தார். உரிய நேரத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பேன் என்று கூறினார்.
இந்த நிலையில் பாக்கியாஞ்சலிக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் என்று அவரது தந்தை போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “வில்லன் நடிகர் வேலு எனது மகள் பாக்கியாஞ்சலியை கடந்த சில மாதங்களாக தொந்தரவு செய்து வந்தார். திருமணம் செய்துகொள் என்று மிரட்டினார். அவள் எங்கு சென்றாலும் அங்கே வந்து விடுவார்.
படப்பிடிப்பு தளம் என்றாலும் சரி, ரெயில் நிலையம் என்றாலும் சரி எப்படியாவது தெரிந்து கொண்டு வந்து மிரட்டுகிறார்.
இதனால் நிம்மதியே போய்விட்டது. என் மகளுக்கு தற்போது புதிய பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. வேலு மிரட்டலால் அது பாதிக்கப்படுகிறது. எனவே போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வேலுவை கைது செய்ய வேண்டும்…”, என்றார்.
 

திருமணம்-தபுவின் குழப்பம்!

Tabu
காதல் தேசம் படத்துக்காக தாஜ் கோரமண்டலில் ஒரு பிரஸ்மீட் வைத்திருந்தார் கேடி குஞ்சுமோன் (அப்போதுதான் அவருக்கு போதாத காலம் துவங்கியிருந்தது!).
பிரஸ் மீட்டில் ஒரு மூத்த நிருபர் இப்படிக் கேட்டார்:
“ஆமா… படத்தில் கல்லூரி மாணவியாக வரும் அந்தப் பொம்பள யார்?” என்று வெள்ளந்தியாகக் கேட்டுவைக்க, நெஞ்சைப் பிடித்துக் கொள்ளாத குறையாக தவித்துப் போனார் குஞ்சுமோன்!
“அவங்க சின்னப் பொண்ணுதாங்க… பேர் தபு. இந்தில பேமஸ் ஆர்டிஸ்ட்…” என்று நீண்ட விளக்கமெல்லாம் தந்தார். ஆனால் தமிழில் தபு எடுபடவே இல்லை. இருந்தாலும் இந்தி, தெலுங்கில் தபுவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு!
குறிப்பாக நாகார்ஜுனா ரசிகர்களுக்கு இவரை ரொம்பப் பிடிக்கும்!
ஆனால் அம்மணியின் பழக்கம் நாகார்ஜூனாவோடு நிற்கவில்லை… பாலிவுட்டில் சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார்.
கடைசியாக மாடலிங்கில் பிஸியாக இருக்கும் உபேன் பட்டேல் என்பவருடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாககக் கூட செய்திகள் வந்தன. ஆனால் இதை (இது ஒன்றை மட்டும்தான்!) தபு மறுத்தார்.
இப்போது தபுவுக்கு வயது கிட்டத்தட்ட 40!
இந்தநிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மும்பையைச் சேர்ந்த அந்த தொழில் அதிபருடன் தபு நெருங்கிப் பழகுவதாகவும், இருவரும் பல இடங்களுக்கு இணைந்தே செல்வதாகவும் இந்தி திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதோடு, தொழில் அதிபர் குடும்பத்தினர் தபு குடும்பத்தாரிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும், ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுபற்றி தபு கூறுகையில், “இந்த ஒரு வருடத்தில் எனக்குத் திருமணம் என 5 முறை செய்திகள் வெளியாகியுள்ளன. நான் திருமணம் செய்து கொள்வேனா என்று தெரியவில்லை. அப்படியொரு உறவுக்காக நான் யாருடனும் பழகவில்லை..,” என்கிறார் மையமாக!
 

கவர்ச்சியாக நடித்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சத்யா, அஞ்சலி, நாசர், கருணாஸ் நடிக்கும் படம் 'மகாராஜா'. ஜெய்ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஜெ.ரவி தயாரிக்கிறார். டி.மனோஹரன் இயக்குகிறார். இதில் நடித்தது பற்றி நிருபர்களிடம் அஞ்சலி கூறியதாவது: மாடர்ன் பெண்ணாக வருகிறேன். இதனால், ஏராளமான மாடர்ன் உடைகள் அணிந்து நடித்தேன். இளம் தலைமுறையினரைப் பார்த்து, அவர்களைப் போன்று மாற நினைத்து, அதன்மூலம் சந்திக்கும் பிரச்னைகளால் படிப்பினை பெறுகின்ற கதை. இளம் ஜோடிகளாக நானும், சத்யாவும் நடிக்கிறோம். நாசர், சரண்யா இன்னொரு ஜோடி. நாசருக்கு அனிதாவும் ஜோடி. அது எப்படி என்பது சஸ்பென்ஸ். இந்த படத்துக்காக மலேசியாவின் புத்ரஜெயா பகுதியில் படமான, 'மெக்ஸி மெக்ஸிகன் லேடி' பாடல் காட்சியில் பங்கேற்றேன். அப்போது 122 டிகிரி வெயில். இடைவிடாமல் நடனமாடியதால், மயக்கம் வருவது போல் இருந்தது. ஒருகட்டத்தில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் பயந்து விட்டனர். உடனே ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. அங்கிருந்த டாக்டரிடம் சிகிச்சை பெற்றேன். இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்த நான், இதில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடித்துள்ளேன். கதைக்கு அது அவசியம் என்றதால் நடித்தேன். இவ்வாறு அஞ்சலி கூறினார்.


Source: Dinakaran
 

‘பஞ்சதந்திரம் 2′ இயக்க திட்டமில்லை : கே.எஸ். ரவிக்குமார்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமல்ஹாசன், சிம்ரன், ரம்யா கிருஷ்ணன் நடித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய படம் ‘பஞ்சதந்திரம்’, 2002 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி அடைந்தது. காமெடி ப்ளஸ் ரொமான்டிக் என அசத்திய ‘பஞ்சதந்திரம்’ படத்தின் இரண்டாம் பாகம் கே.எஸ். ரவிக்குமார் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை கே.எஸ். ரவிக்குமார் மறுத்துள்ளார். மேலும், ‘பஞ்சதந்திரம் 2′ இயக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கே.எஸ். ரவிக்குமார் கூறினார்.


Source: Dinakaran
 

ரொமான்டிக் ஆர்யா லண்டன் ஸ்ரேயா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதல் பயண அனுபவங்களை சொல்லும் படமாக, 'சிக்கு புக்கு' உருவாகியுள்ளது என்று அதன் இயக்குனர் மணிகண்டன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆர்யா நிறைய படங்களில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில்தான் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதேபோல, லண்டனில் வசிக்கும் தமிழ் பெண்ணாக வரும் ஸ்ரேயா கிளாமர் இல்லாமல் நடித்திருக்கும் படம் இது. அன்றைய வாழ்க்கையை அன்றே அனுபவிக்க நினைக்கிறவர் ஆர்யா. நாளை பற்றி யோசிப்பவர் ஸ்ரேயா.
இந்த இருவரும் லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். கூடவே பயணம் செய்யும் வாய்ப்பு. கொஞ்சம் கூட ஒட்டாத இவர்களுக்குள் காதல் வரும்போது எதிர்பாராத ஒரு நிகழ்வை சந்திக்கிறார்கள். அது இவர்கள் இருவரையும் புரட்டிப்போடுகிறது. இதுதான் கதை. பயணங்கள் வெறும் தூரத்தை கடக்கும் செயல் அல்ல. அற்புதமான அனுபவம். அதற்குள் காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படம். கர்நாடக பகுதியின் மழைக்காடுகள், காரைக்குடியின் வெயில் இரண்டிலும் இருவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக படமாக்கி உள்ளோம். அடுத்த மாதம் வெளிவருகிறது. இவ்வாறு மணிகண்டன் கூறினார்.


Source: Dinakaran
 

ரஜினியை பார்த்து பூரித்த சமீரா ரெட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் சினிமா உட்பட அனைத்து மாநில கதாநாயகிகளும் ஒரு முறையாவது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க ஆசை இருக்கும். அப்படிப்பட்ட ஆசைகளும் சமீரா ரெட்டிக்கும் இருக்கு என்ற விஷயம் இயக்குனர்கள் சங்க விழாவில் தெரிந்தது. இயக்குனர்கள் சங்க விழாவில் ஒரு பாட்டுக்கு ஆடிய சமீரா ரெட்டி ரஜினியுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. பிறகு நம்மிடம் அவரது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார். இயக்குனர்கள் சங்க விழாவில் ரஜினியை சந்தித்து பேசியது மறக்க முடியாத தருணம் என பூரித்த சமீரா ரெட்டி, ரஜினி சாருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால், வாய்ப்பு மறுக்காமல் நடிப்பேன் என்று சமீரா கூறினார்.


Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகைகள் திடீர் போட்டி

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பாய்ஸ் ஹீரோ, தெலுங்கு படத்துல நடிக்கிறாரு. இந்த படத்துல ஹீரோயினோடு கிஸ் சீன் இருக்காம்… இருக்காம்… படத்துல இந்த சீன் வைக்க ஐடியா தந்தது இயக்குனர் கிடையாதாம். ஹீரோதானாம்… ஹீரோதானாம்…
ஹீரோயினாத்தான் நடிப்பேன்னு அடம்பிடிச்சிட்டு இருந¢தாரு வாளமீனு நடிகை. இப்போ திடீர்னு மனம் மாறி கேரக்டர் ரோல்ல நடிக்கிறாரு… நடிக்கிறாரு… அதுக்கு காரணம் கணவரை பிரிஞ்ச சோனிய நடிகைதானாம்… நடிகைதானாம்… Ôநமக்கெல்லாம் இனிமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காது. கிடைக்கிற வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்Õனு வாளமீன் நடிகைக்கு அட்வைஸ் பண்ணினாராம்… பண்ணினாராம்…
சினிமா வாய்ப்பை பிடிக்கிற மாதிரி சில நடிகைங்க விளம்பர வாய்ப்பையும் வலைவீசி பிடிக்கிறாங்களாம்… பிடிக்கிறாங்களாம்…
நிறுவன அம்பாசிடர் வேலை கிடைச்சா, கோடியில சம்பாதிக்கலாம்னு கணக்கு போடுறாங்களாம். இந்த வாய்ப்பு பிடிக்கிற போட்டியில மூணுஷாவும் காலேஜ் நடிகையும் மும்முரமா இறங்கியிருக்காங்களாம்… இறங்கியிருக்காங்களாம்…


Source: Dinakaran
 

பிகினிக்கு 3மாத அவகாசம் கேட்டார் :லேகா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'ஜெயம் கொண்டான்Õ படத்தில் தங்கை வேடத்தில் நடித்தவர் லேகா வாஷிங்டன். அவர் கூறியது: இந்தியில் 'பீட்டர் கயா காம்ஸேÕதான் எனது முதல் படம். இப்படம் வெளிவருவதற்கு முன்பே 'பவர்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். உடல் அழகை காட்டுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அதற்கு காரணம், எனது உடல்கட்டு. கவர்ச்சிக்கு ஏற்றார்போல் இல்லை என்ற எண்ணம்தான். Ôபீட்டர் கயா காம்ஸேÕ படத்தில் நீச்சல் உடையில் நடிக்க வேண்டும் என்றபோது அதிர்ந்தேன். நீச்சல் உடை எனக்கு பொருத்தமாக இருக்காது என்றேன். ஆனால் காட்சிக்கு முக்கிய தேவை என்று டைரக்டர் கூறியதால் ஓகே சொன்னேன். அதே நேரம், அந்த காட்சியை எடுப்பதற்கு 3 மாதம் அவகாசம் கேட்டேன். அந்த மூன்று மாதத்தில் உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்கினேன். எனக்கு திருப்தி ஏற்படும் வகையில் உடல் ஷேப் வந்த பின்தான் பிகினியில் நடித்தேன்.


Source: Dinakaran
 

பிரியாமணியின் முத்தக் காட்சிக்கு சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

டோலிவுட் படங்களில் பிகினி, உதட்டோடு உதடு முத்தம் என படு கவர்ச்சி காட்சிகளுக்கு தாராளம் காட்டுகிறார் பிரியாமணி. பெயரிடப்படாத தெலுங்கு படம் ஒன்றில் சுமந்த் ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் இவர்கள் உதட்டோடு உதடு பதிக்கும் சூடான முத்தக் காட்சி படமாக்கப்பட்டது. இயக்குனர் சிபிஸ்விஸ்தா படமாக்கினார். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் நடந்து முடித்த நிலையில் சிபிஸ்விஸ்தா திடீரென்று நீக்கப்பட்டுள்ளார். தயாரிப்பாளர், ஹீரோவிடம் இவருக்கு ஏற்பட்ட மனஸ்தாபமே இதற்கு காரணமாம். இப்போது ஆதித்யா என்பவர் டைரக்டராகி உள்ளார். படத்தில் சில மாற்றங்களை இவர் செய்துள்ளாராம். இதனால் பிரியாமணி-சுமந்த் முத்தக் காட்சிக்கு இடம் இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை என்கிறது பட யூனிட்.


Source: Dinakaran
 

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திரா விருது-வழங்கினார் மன்மோகன் சிங்!

AR Rahman
டெல்லி: பிரபல இசையமைப்பாளர்களுக்கு இந்திரா காந்தி தேசிய விருது வழங்கப்பட்டது.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாடுபட்டதற்காக இந்த விருதினை அவருக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முன்னிலையில் வழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்.
தேசிய ஒருமைப்பாட்டுக்காக சிறந்த சேவை செய்கிறவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி பெயரில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தேசிய விருதுக்கு, நாராயணபுரத்தில் செயல்படும் ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமும், ஆஸ்கார் விருது நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு விருது வழங்கும் விழா, இந்திரா காந்தியின் 25-வது நினைவு நாளான நேற்று, டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி பவனில் நடந்தது.
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமத்துக்கு, தேசிய முற்போக்கு கூட்டணி தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்தி விருது வழங்கினார். ஆசிரம தலைவர் சுவாமி வியாப்தானந்தா இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விருது வழங்கினார்.
ரஹ்மானுக்கு புகழாரம்!
விருது வழங்குவதற்கு முன்னதாக சோனியாகாந்தி பேசுகையில், “தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும், ஒற்றுமையை பேணிக் காக்கவும் பல வழிகள் உள்ளன. ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையாலும், ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம் பின் தங்கிய மற்றும் ஏழைகளுக்கு கல்வி அளிப்பதன் மூலமும் இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள். அவர்களது பணி பாராட்டுக்குரியது…” என்றார்.
இசையால் தேசத்தின் ஒற்றுமை வளர்ப்பவர் ஏஆர் ரஹ்மான், என்று புகழாரம் சூட்டினார் மன்மோகன் சிங்.
 

பாடல் மூலம் அம்பு விடும் ‘மன்மதன் கமல்’!

Kamal with Trisha
மன்மதன் அம்பு படத்தில் கமல்ஹாஸனே அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார்.
சினிமா உருவாக்கம் என்று வந்தால் கமல்ஹாஸன் ஒரு நிஜமான சகலகலா வல்லவன். இயக்கம், பாடுவது, நடனம், நடிப்பு என அவர் அனைத்து துறையிலுமே வல்லவர்தான்.
ஏற்கெனவே தன்னை ஒரு திறமையான பாடலாசிரியராக, ஹே ராம் படத்தில் நிரூபித்தார். இளையராஜா இசையில் எப்போது கேட்டாலும் இதயத்தை வருடும், ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ பாட்டு கமல் எழுதியதுதான்.
அடுத்து மன்மதன் அம்பு படத்துக்காக தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் 4 பாடல்களை எழுதியுள்ளார் கமல்.
இதுகுறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறுகையில், “மன்மதன் அம்பு படத்தில் கமல்தான் ஹைலைட். நடிப்பு என்றில்லாமல், பல துறைகளிலும் கமலின் பங்களிப்பு இந்தப் படத்தில் அதிகம். அதற்கு ஒரு உதாரணம், இந்தப் படத்தின் 5 பாடல்களில் நான்கை கமல் சாரே எழுதியிருப்பதுதான்…” என்றார்.
பாடல் வெளியீட்டு விழா நவம்பர் 20-ம் தேதி சிங்கப்பூரில் நடக்கிறது. படம் டிசம்பர் 10-ம் தேதி வெளியாகிறது.
 

தமிழ்ப் பெயர் கொண்ட படங்களுக்கு வரி விலக்கு-அரசு விளக்கம்

http://www.newchennai.com/wp-content/uploads/2010/01/Tamilnadu-Emblem3.jpg
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளதா, அதற்கு வரி விலக்கு தரலாமா என்பதை முடிவு செய்ய நியமிக்கப்பட்டுள்ள கமிட்டி முடிவு செய்யும் படங்களுக்கு மட்டுமே கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழில் பெயர் வைக்கப்படும் திரைப்படங்களுக்கு மட்டுமே, கேளிக்கை வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அரசின் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் கூடுமானவரையில், பெயர்ச் சொல்லாகவாவது படத்தின் பெயர் தமிழில் அமைந்துள்ள திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. உதாரணங்கள்: ‘சிவாஜி’, ‘ஏகன்’, ‘பாஸ் (எ) பாஸ்கரன்’, ‘கோவா’, ‘எந்திரன்’ போன்ற திரைப்படங்களாகும்.
ஆனால், இந்தத் துறையில் அறிமுகமாகி, படங்களின் தயாரிப்பாளராகவும் அல்லது படங்களுக்கு இயக்குநராகவும், கதை-உரையாடல் எழுதுபவராகவும் வளரத் தலைப்பட்டுள்ள சில கலைஞர்கள்; கேளிக்கை வரிவிலக்குக்கான அரசின் நிபந்தனைகளைப் புரிந்து கொள்ளாமலும், அல்லது வேண்டுமென்றே திட்டமிட்டு, திரைப்படத் தலைப்புகளில் அறவே தமிழ்மொழி அல்லாத பெயர்களைச் சூட்டுவதும்; அவற்றுக்குக் கேளிக்கை வரிவிலக்கு உண்டென்று பிரச்சாரம் செய்வதும்; அதனடிப்படையில், இரண்டு தரப்பினர் விவாதித்துக் கொண்டு, அவர்களில் ஏதோ ஒரு தரப்பினர்க்கு, இந்த வரிவிலக்கு விவகாரத்தில் அரசு துணை இருப்பது போன்ற ஒரு செய்தியை அரசியல் நோக்குடன் வெளியிட்டு வருவதும் இப்பொழுது வழக்கமாக ஆகத் தொடங்கியுள்ளது.
திரைப்படங்களுக்குத் தமிழில் பெயரிடப்பட்டிருக்கிறதா அல்லது திரைப்படங்களுக்கு இடப்பட்டுள்ள தலைப்புக்கான பெயர்கள் கூடுமானவரையில் தமிழில் உள்ளதா என்பதை முடிவு செய்து அறிவிக்க தமிழக அரசின் வணிகவரித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆகிய அதிகாரிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவின் சார்பில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பதற்குமுன்பு, சில படங்களுக்கு அந்த விதிகளை மீறி, வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக வருகின்ற செய்திகளுக்கு அரசு பொறுப்பல்ல. அந்தக் குழு ஒப்புக் கொள்ளாத எந்தவொரு பெயரையும் திரைப்படங்களுக்கு வைத்து வெளியிடப்படுமேயானால், வரிவிலக்கு பற்றி கூறுவதற்கு அந்த படத் தயாரிப்பாளர்களுக்கு உரிமை கிடையாது என்பதையும் அவர்கள் முழு வரியையும் செலுத்தியே ஆகவேண்டும் என்பதையும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசு வழங்கும் வரிவிலக்கு பற்றி மட்டுமே இந்த விளக்கமாகும். எந்தவொரு படத்தையும் வெளியிடுவதற்கான அனுமதியை மத்திய அரசின் தணிக்கை துறைதான் வழங்கும் என அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஒச்சாயி என்ற படத்திற்கான தலைப்பு குறித்தும், அதற்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படாததும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பின்னர் இந்தப் படத்திற்கும் கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

‘மனுச நாத்தத்தைவிட மீன் வாடை எவ்வளவோ தேவலை!’

Ramya
நடிகைகள் எதற்கெல்லாம் பயப்படுவார்கள் என்பதே புதியாத சமாச்சாரம். டிஸ்கொத்தேக்களில் மது நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அவர்கள், மீன் வாடைக்கு பயப்படுவார்கள்.
பெரிய பாம்புகளுடன் தைரியமாக நடிக்கும் இவர்கள்தான், கரப்பான் பூச்சிக்காக ஊரைக் கூட்டுவார்கள்.
குத்து ரம்யாவும் இந்த ரகம்தான். இவருக்கு தமிழர்களை அறவே பிடிக்காது. ஆனால் தமிழ்ப் படங்களின் வாய்ப்பு மட்டும் வேண்டும்.
காவிரி பிரச்சினைக்காக இங்கே கோலிவுட் உண்ணாவிரதமிருந்தபோது, இவர் பெங்களூரில் காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என கொடிபிடித்து உண்ணும் விரதமிருந்ததை மறக்க முடியாது.
ஆனாலும், ரோஷக்கார தமிழ் சினிமாக்காரர்கள் இந்த குத்து ரம்யாவை தேடிப்போய் அழைத்து வந்து தமிழ்ப் படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்து குதூகலித்தனர். அப்படி வந்ததுதான் வாரணம் ஆயிரம், சரி விடுங்கள், அது கெளதம் மேனன் படம்.
இப்போது ஜீவாவுடன் சிங்கம் புலி படத்தில் நடிக்கிறார் இந்த குத்து ரம்யா என்கிற திவ்யா ஸ்பாந்தனா.
இப்படத்தில் ஜீவா வக்கீலாகவும், மீன் விற்பவராகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம்.
சமீபத்தில் இப்படத்தின் படப்படிப்பு ராயபுரம் மீன் மார்க்கெட்டில் நடந்தது. ஜீவா, திவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென ரம்யா கேரவனை நோக்கி ஓடினாராம். பதறிப்போன இயக்குநர் அவரிடம் உடம்பு சரியில்லையா? என்று கேட்க திவ்யாவோ, “உடம்பு நல்லாத்தான் இருக்கு, மீன் வாடையைத்தான் பொறுக்க முடியவில்லை,” என்று கூறி உள்ளார்.
நாளைக்கொரு வேஷம் போடுகிற மனுஷன் நாத்தத்துக்கு இந்த மீன் நாத்தம் ஆயிரம் மடங்கு பெட்டர்… வாங்க உங்க சீனை வேணும்னா சீக்கிரம் முடிச்சிடறேன்”, என்று கூறி அழைத்துப் போனாராம் இயக்குநர்.
 

ஜெனிலியா ‘ரீமேக்கியா’!

Genelia
ரீமேக் நாயகியாகி வருகிறார் ஜெனிலியா. அவர் நடித்த, நடித்துக் கொண்டிருக்கிற பெரும்பாலான படங்கள் ரீமேக் படங்கள்தானாம்.
தமிழில் அதிக ரீமேக் படங்களில் நடித்த, நடித்து வரும் நாயகர்களாக ஜெயம் ரவியும், விஜய்யும்தான் உள்ளனர். இவர்களது பெரும்பாலான படங்கள் ரீமேக் படங்கள்தான்.
இந்த நிலையில், ரீமேக் படங்களில் அதிகம் நடிக்கும், நடித்த நாயகியாக உருவாகியுள்ளார் ஜெனிலியா.
தற்போது அவர் தனுஷுடன் இணைந்து நடித்துள்ள உத்தமபுத்திரன் தெலுங்கில் உருவான ரெடியின் ரீமேக்தான். அதேபோல இதன் இந்திப் பதிப்பிலும் ஜெனிலியாவே நடிக்கவுள்ளார்.
பொம்மரிலு படம் தமிழில் சந்தோஷ் சுப்ரமணியமாக உருவானபோது அதில் நயாகியாக நடித்தவர் ஜெனிலியாதான். இதே படம் இந்திக்குப் போனபோதும் அதிலும் ஜெனிலியா நாயகிதான்.
இப்படி தொடர்ந்து ரீமேக் படங்களாகவே நடித்து வருவதால் அவரை ரீமேக் ராணி என்றும் கோலிவுட்டில் செல்லமாக அழைக்க ஆரம்பித்துள்ளனராம்.
 

நடிகர் விஜய்யின் தாயார் ஷோபாவுக்கு வாழ்நாள் சாதனை விருது

Shoba Chandrasekhar
சென்னை: நடிகர் விஜய்யின் தாயாரும், கர்நாடக இசைப் பாடகியும், தயாரிப்பாளருமான ஷோபா சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்பட்டது.
சென்னையில் கல்யாணமான பெண்களுக்கான திருமதி சென்னை 2010 அழகிப் போட்டி நடந்தது. இதில் கலந்து கொண்டு பல பெண்கள் தங்களது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினர்.
அவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டன. அவற்றில் பல திருமதிகள் ஆர்வத்துடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிழ்ச்சியில் ஷோபா சந்திரசேகருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.
 

‘பாய்ஸை’ வெறுக்கும் சித்தார்த்!

Siddharth
பாய்ஸ் மூலம் வெளிச்சத்திற்கு வந்த நடிகர் சித்தார்த், தற்போது அந்தப் படத்தை தனது முதல் படம் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கப்படுகிறாராம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் படம் பெரும் சர்ச்சைகளையும், விமர்சனங்களையும் சந்தித்த படமாகும். ஆனால் இப்படத்தில் நடித்த சித்தார்த், பரத், ஜெனிலியா, நகுல் ஆகியோர் இப்போது சினிமாவில் பிசியாக உள்ளனர்.
அதில் சித்தார்த் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் ஹீரோ. பரத் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர், ஜெனிலியா நான்கு மொழிகள் பிசியாக உள்ள நடிகை. நகுலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். இப்படத்தில் நடித்த நான்காவது நபரான தமன் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் பாய்ஸ் படத்தில் நடித்தது பிடிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் சித்தார்த்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பாய்ஸ் படத்துக்குப் பிறகு இனிமேல் நடிக்கவே கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். காரணம், அந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதனால் பாய்ஸ் படத்தை மறக்கவே விரும்புகிறேன்.
யாராவது என்னிடம் உனது முதல் படம் என்ன என்று கேட்டால் நுவ்வொஸ்தான்டன்டே நேநொட்டாதன்டனா (தெலுஙகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படம்) படத்தைத்தான் கூற விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் சித்தார்த்.
நேரம்தான்!
 

டைமிங் ‘மிஸ்’-ஹீரோயின் கன்னம் ‘புஸ்’!

Uthayathara
ஹீரோ கன்னத்தில் அறைவது போன்ற காட்சியில் டைமிங் மிஸ் ஆனதால், நிஜமாகவே கன்னத்தில் பளார் என அறை விழ பொறி கலங்கிப் போய் கன்னம் வீங்கி கதறி அழுதாராம் நடிகை உதயதாரா.
இப்போதெல்லாம் ஷூட்டிங்கின்போது நடக்கும் நிஜக் காட்சிகள் குறித்த நிகழ்வுகள் கோலிவுட்டிலிருந்து நிறைய வருகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்தியபோது ஹீரோயின் அல்லது ஹீரோ மூழ்கிய செய்திகள், அடிப்பது போன்ற காட்சியின்போது நிஜமாகவே அடித்து விடுவது, ஹீரோயினைக் கடிப்பது போன்ற காட்சியில் நிஜமாகவே கடித்து விடுவது (நடிகர் விக்னேஷ் நடிகையின் கன்னத்தைக் கடிப்பது போல நடித்தபோது நிஜமாகவே கடித்து விட்டதாக செய்தி வந்தது) என்று நிஜங்கள் குறித்த பல செய்திகள் வருகின்றன.
அந்த வரிசையில் ஹீரோவிடம் அடி வாங்கிய ஹீரோயின் கதை குறித்த செய்தியும் தற்போது வெளியாகியுள்ளது. பகவான் என்று ஒரு படம். யுவராஜா என்பவர்தான் நாயகன். உதயதாராதான் நாயகி.
நாயகியை ரவுடிகள் சிலர் கிண்டல் செய்கிறார்கள். அதை நாயகி ஹீரோவிடம் போய் சொல்கிறார். பொங்கி எழும் ஹீரோயினை அழைத்துக் கொண்டு ரவுடிகளிடம் செல்கிறார். ஆனால் அங்கு ரவுடிகளாக ஹீரோயின் சொன்னவர்கள் எல்லாம் சமூக சேவகர்கள் எனத் தெரிகிறது.
நாயகி தன்னை ஏமாற்றி விட்டதை அறியும் ஹீரோ கடும் கோபமடைந்து அவரை பளார் என அறைகிறாராம். இது சீன். இந்த சீனில் யுவராஜும், உதயதாராவும் நடித்தனர். யுவராஜ் ஓங்கி அறைவது போல நடித்தபோது படாரென உதயதாரா திரும்பிக் கொள்ள வேண்டும். ஆனால் டைமிங் மிஸ் ஆகி உதயதாரா திரும்பாமல் இருந்து விட்டார். பிறகென்ன கன்னம் பளுத்துப் போய் வீங்கி விட்டதாம்.
வலி தாங்க முடியாமல் உட்கார்ந்து விட்டாராம் உதயதாரா. கதறி அழுத அவரை நீண்டநேரம் ஆறுதல் படுத்தினார் யுவராஜ். இருந்தாலும் உதயதாரா தேறி வர அரை மணி நேரம் ஆனதாம். பின்னரே அந்தக் காட்சியமைப் படமாக்கி முடித்தார்களாம்.
 

பேசாமல் சினிமாவை விட்டு விலகி விடலாம் போலிருக்கிறது-காம்னா சலிப்பு

Kamna Jethmalani
கவர்ச்சியாக நடித்தால் பெரிய அளவுக்குப் போகலாம் என ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால் இப்போது அதில் இஷ்டம் போய் விட்டது. சில படங்களில் நடித்து விட்டு பேசாமல் சினிமாவை விட்டே விலகி விடலாம் போலிருக்கிறது என்று சலிப்புடன் கூறுகிறார் காம்னா ஜெத்மலானி.
இதயத் திருடன், மச்சக்காரன் என சில படங்களில் நடித்துள்ளார் காம்னா. ஆனால் தமிழில் அவர் ஒரு ஸ்டாராகவே ஆக முடியாமல் போய் விட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வந்த அவர் இடையில் தமிழில் சுத்தமாக காணவில்லை. தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தார். அங்கும் இதே கதைதான்.
இப்போது முழு நீள காமெடிப் படம் ஒன்றில் நடிக்க வந்துள்ளார் காம்னா. அதிரடிப் படங்களை இயக்கியவரான திருமலை இயக்கும் முழு நீளக் காமெடிப் படம் காசேதான் கடவுளடா. இதில் நடிக்கிறார் காம்னா.
ஏன் தமிழில் உங்களைக் காணவில்லை, உங்களது கவர்ச்சி நடிப்பு பாலிசி இப்போது எந்தஅளவுக்கு உள்ளது என்று காம்னாவிடம் கேட்டால், பிடித்தவற்றில் மட்டுமே நடிக்கிறேன். இதுவரை 10 படங்களில் நடித்து விட்டேன். ஆனாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு சினிமா கூட இல்லை.
முதலில் கவர்ச்சியாக நடிக்கலாம் என்ற முடிவில் இருந்தேன். இப்போது கவர்ச்சியாக நடிப்பதில் இஷ்டம் இல்லை. ஓரிரு நல்ல படங்களில் நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகி விட வேண்டும் என்று தோன்றுகிறது.
காசேதான் கடவுளடா படத்தில் நல்ல கேரக்டர் கிடைத்திருக்கிறது. முழு நீளக் காமெடிப் படம். எனக்கு காமெடி செய்யும் கேரக்டரில் முழுநீள அளவில் நடிப்பது இதுவே முதல் முறை. இப்படம் எனக்கு நல்ல திருப்பத்தைத் தரும் என நினைக்கிறேன் பார்க்கலாம் என்கிறார்.
 

கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதால் பாக்யாஞ்சலி பொய்ப் புகார்-வேலு

Baghyanjali
நான் நடிகை பாக்யாஞ்சலிக்கு கொடுத்த ரூ. 40,000 பணத்தைத் திருப்பிக் கேட்டதால், நான் அவரைக் கல்யாணம் செய்து கொள்ள வலியுறுத்தியதாக கூறி பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார் நடிகை பாக்யாஞ்சலி என்று கூறியுள்ளார் வில்லன் நடிகர் வேலு.
நடிகை பாக்யாஞ்சலி கூறியுள்ள புகார்கள் குறித்து அவர் கூறுகையில்,
என் மீது புகார் கொடுத்துள்ள நடிகை பாக்கியாஞ்சலி மோசமானவர். என்னிடம் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். இதற்காக அவர் கைப்பட எழுதிக் கொடுத்த பேப்பர் என்னிடம் உள்ளது.
கடந்த ஓராண்டாக இந்த பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இதனை நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். கடனை திருப்பி தராவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். இதனால் என் மீது பொய் புகார் கூறியுள்ளார்.
நான் அவரை விரட்டி விரட்டி காதலித்ததாகவும், திருமணம் செய்ய ஆசைப்பட்டு அறையில் பூட்டி முத்தம் கொடுத்ததாகவும் பாக்கியாஞ்சலி கூறியுள்ளார். இது முழுக்க முழுக்க கட்டுக்கதை. அவரிடமிருந்து ஒரு பையை பறித்துக் கொண்டு சென்றதாகவும் ரூ.15 லட்சம் நான் கடன் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.
இவ்வளவு பெரிய தொகை கடனாக கொடுக்கும் அளவுக்கு நான் இன்னும் வசதியாகவில்லை.
உன்னை காதலிக்கிறேன் படத்துக்கு 1 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். நெல்லு படத்துக்கு ரூ. ஒன்றரை லட்சமும், கோட்டி படத்துக்கு ரூ.2 லட்சமும் சம்பளம் வாங்கியுள்ளார்.
ஆனால் கேரளாவில் ரூ.45 லட்சத்துக்கு வீடு வாங்கியுள்ளார். இது எப்படி முடிந்தது? அவரைப்பற்றி கேரளா பக்கம் போய் விசாரித்தால் நிறைய உண்மைகள் வெளிவரும். என்னை போல பலரிடம் கடன் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்த மாதிரி பெண்களை முட்டாள்தான் காதலித்து திருமணம் செய்வான். வளர்ந்து வரும் நடிகன் நான். எனது பெயரை கெடுப்பதற்காக திட்டமிட்டு பாக்கியாஞ்சலி இப்படி செயல்பட்டுள்ளார். இதனை நான் சட்டப்படி சந்திப்பேன். போலீஸ் விசாரணைக்கு உரிய நேரத்தில் செல்வேன். நான் எங்கும் தப்பிச் செல்லவில்லை என்று கூறியுள்ளார் வேலு.
இதற்கிடையே பாக்யாஞ்சலி மீது நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கப் போகிறாராம் வேலு.
 

இரண்டு குழந்தைகளை அநியாயமாக கொன்ற பாதகனை தூக்கில் போடுங்கள்-நடிகர் விஜய் ஆவேசம்

Vijay
கோவை: கோவையில் இரண்டு குழந்தைகளை தண்ணீரில் தள்ளி விட்டு கொடூரமாகக் கொலை செய்த அந்த பாதகனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என்று நடிகர் விஜய் ஆவேசமாக கூறியுள்ளார்.
கோவையில் இரண்டு அப்பாவிக் குழந்தைகளைக் கடத்தி அநியாயமாக தண்ணீரில் தள்ளி விட்டுக் கொலை செய்த பாதகன் மோகன் என்கிற மோகன் ராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அனைவரின் உள்ளத்தையும் பதறடித்துள்ளது இந்த சம்பவம்.
இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து வேதனையும், கோபமும் வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவையில் பள்ளிக்கு சென்ற அக்கா, தம்பி, முஸ்கின், ரித்திக் என இரு குழந்தைகளை பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அறிந்ததும் இதயம் உறைந்து போனது.
துள்ளி திரிந்த இரு இளம் தளிர்களை ஈவு, இரக்கமில்லாமல் கொலை செய்ய எப்படித்தான் மனம் வந்ததோ தெரியவில்லை. பெற்ற குழந்தைகள் இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அவர்களது பெற்றோர் மனதை என்ன பாடு படுத்தியிருக்கும் என நினைத்து பார்க்கவே அச்சமாக உள்ளது.
பணத்துக்காக குழந்தைகளை கடத்தும் கொடூர கும்பலை இனியும் விட்டு வைக்கக் கூடாது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
குழந்தைகளை கடத்தி கொலை செய்வது தான் உலகிலேயே மிக கொடூரமான குற்றம். இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசர சட்டங்கள் ஏற்படுத்தவேண்டும்.
இதை ஒரு நடிகனாக சொல்லவில்லை. மனிதநேயமுள்ள கோடிக்கணக்கான மக்களின் மனக்குமுறலையும், வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளேன். குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் மட்டுமே மருந்தாகிவிடாது. கடவுளால் மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் வழங்கமுடியும் என்று கூறியுள்ளார் விஜய்.
தான் நடித்து வரும் வேலாயுதம் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது உடுமலைப் பகுதியில் தங்கியுள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.