சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் ரஜினி!

'சினிமாவில் சாதனை பண்ணுங்க, வேணாம்னு சொல்லல.. ஆனா அதுக்கு முன்ன இரண்டு குழந்தைகள் பெத்து வளத்துட்டு, சினிமாவுக்குப் போங்க' - இந்த ஆண்டு கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு ரஜினிகாந்த் சொன்ன அறிவுரை இது.

தந்தையின் விருப்பத்தை இப்போது நிறைவேற்றிவிட்டார் சவுந்தர்யா. ஆம்.. சவுந்தர்யா அஸ்வின் இப்போது கர்ப்பமடைந்துள்ளார்.

சவுந்தர்யா கர்ப்பம்.. மீண்டும் தாத்தாவாகும் ரஜினி!

சவுந்தர்யாவுக்கும் அஸ்வினுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி சென்னையில் விமரிசையாக திருமணம் நடத்தி வைத்தார் ரஜினி.

திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பெற்றுக் கொள்வதை தள்ளிப்ப போட்ட சவுந்தர்யா, திரைப்படப் பணிகளில் பிஸியாகிவிட்டார். கோச்சடையான் படத்தை உருவாக்க அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலானது.

சவுந்தர்யா தாயாகவிருப்பது ரஜினி குடும்பத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

தெரிகிறதா... இவர்தான் விக்ரம்... நடிப்பு ராட்சஸன்!

ஒரு பாத்திரத்துக்காக எந்த அளவு ஆபத்தையும் சந்திக்கத் தயங்காதவர்களில் விக்ரமும் ஒருவர்.

குறிப்பாக ஷங்கரின் ஐ படத்துக்காக அவர் எடுத்த ரிஸ்க், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்றால் மிகையல்ல. கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வரும் அவரது ஒரு நோஞ்சான் படத்தைப் பார்த்தாலே அதைப் புரிந்து கொள்ளலாம்.

தெரிகிறதா... இவர்தான் விக்ரம்... நடிப்பு ராட்சஸன்!

படத்தில் வரும் கூனன் கதாபாத்திரத்திற்காக உடல் எடையைக் குறைத்து, எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிக்கும் அந்தப் படம் பார்ப்பவர் கண்களை குளமாக்கும்.

இது விக்ரம்தானா? இந்த மனிதர் ஏன் இப்படி ரிஸ்க் எடுக்கிறார்.. இப்படியெல்லாம் கூட ஒருவரால் சினிமாவுக்காக மெனக்கெட முடியுமா? என்று பிரமிப்பும் கவலையும் கலந்த தொனியில்தான் ஒவ்வொருவரும் கேட்டு வருகின்றனர்.

இனி விக்ரம் இதுமாதிரி ஆபத்தான விளையாட்டில் இறங்கவே கூடாது என அவரது மருத்துவர்களும் எச்சரித்துள்ளனர்.

விக்ரம் இத்தனை சிரமப்பட்டு நடித்துள்ள ஐ படம் வரும் ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வருகிறது. விக்ரம் பட்ட பாட்டுக்கு ரசிகர்கள் தரும் மரியாதை.. அவர் படத்தை திரையில் போய் பார்க்க வேண்டும் என்பதைத் தவிர வேறென்ற இருக்கும்!

 

கே. பாலச்சந்தர்.. தப்பாக ட்வீட் செய்து மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா

ஹைதராபாத்: இயக்குனர் கே. பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்று தவறாக ட்வீட் செய்ததற்காக இயக்குனர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார்.

இயக்குனர் கே. பாலச்சந்தர் உடல்நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமை சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று வரும் அவர் நலமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறுகையில்,

இந்திய சினிமாவின் அருமையான இயக்குனர் கே. பாலச்சந்தரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

 கே. பாலச்சந்தர்.. தப்பாக ட்வீட் செய்து மன்னிப்பு கேட்ட ராம் கோபால் வர்மா

அதன் பிறகு பாலச்சந்தர் உயிருடன் இருக்கும் செய்தியை அறிந்த அவர் அந்த ட்வீட்டை அவசரமாக அழித்துவிட்டு புதிதாக ஒரு ட்வீட்டை போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

பாலச்சந்தர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை நம்பி ட்வீட் செய்ததற்காக என்னை மன்னித்து விடுங்கள். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 

'வரும் காலம் நமக்கே'... நெல்லையில் விஜய் பார்த்த அரசியல் முன்னோட்டம்!

மூன்று ஆண்டுகள் அமைதியாக இருந்த நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு நெல்லையில் நடந்த கத்தி விழாவில் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.

டிசம்பர் 14-ம் தேதி நெல்லையில் நடந்தது கத்தி 50வது நாள் விழா மட்டுமல்ல, அரசியல் பிரவேசம் எப்போது, யாருடன் கூட்டணி என்பது வரை கலந்தாலோசிக்கப்பட்ட அரசியல் விழாவும்தான்.

'வரும் காலம் நமக்கே'... நெல்லையில் விஜய் பார்த்த அரசியல் முன்னோட்டம்!

வழக்கமா இந்த மாதிரி விழாக்களை அந்தந்த பகுதி ரசிகர் மன்றத்தினரை வைத்து செய்யச் சொல்வதுதான் விஜய் தரப்பின் வழக்கமாம். ஆனால் இந்த முறை, தன் சார்பாக ரசிகர் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் முன்கூட்டியே நெல்லைக்கு வந்து, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட விஜய் மன்ற பொறுப்பாளர்களை அழைத்து பெரும் கூட்டம் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டாராம்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து விஜய் இறங்கியதுமே, மன்ற நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து நலம் விசாரித்து படமெடுத்துக் கொண்ட விஜய், நெல்லைக்குப் போனதும் செய்த விஷயம்தான் அவரது அரசியல் நடவடிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

வாகைக்குளம் அருகில் உள்ள சத்யா ரிசார்ட்டில் தங்கிய விஜய், படமெடுத்துக் கொள்ள வந்த ரசிகர்களுடன் போஸ் கொடுத்துவிட்டு, மாநிலம் முழுவதுமிருந்து முன் கூட்டியே வந்திருந்த 32 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோ சனை நடத்தினார். நிறைவாக, "இங்கு என்ன நடந்தது என யாருக்கும் இப்போது தெரியக்கூடாது'' என கண்டிப்பாகக் கூறி அனுப்பியுள்ளார்.

வந்திருந்த நிர்வாகிகளிடம் பெயர், மாவட்டம்னு முதலிலேயே அச்சிடப்பட்ட ஒரு படிவத்தைக் கொடுத்துள்ளனர்.

அதில் மக்கள் இயக்கமாக இருந்து தனியாக அரசியல் களத்தில் இருப்பதா?

தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் களத்தைச் சந்திப்பதா?

தேசியக் கட்சி என்றால் உங்களது சாய்ஸ்?-னு மூன்று கேள்விகளை அச்சடித்துள்ளனர்.

பெரும்பாலான நிர்வாகிகள் பாஜவுடன் கூட்டணி அமைத்து இயங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்களாம்.

பின்னர் அனைவரையும் மீண்டும் அழைத்த விஜய், உங்கள் கருத்துக்கு நன்றி. நானும் ஒரு முடிவில்தான் இருக்கிறேன். பின்னர் சொல்கிறேன், என்று கூறியதாக ஒரு நிர்வாகி தெரிவித்தார்.

'நான் சொல்றதை கவனமாக் கேளுங்க. என்னை வாழ வச்சீங்க. இனி நீங்களும் வாழணும். அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன். முதல்ல நாம வசதியா இருக்கணும். அப்பதான் எதையும் சந்திக்க முடியும். குடும்பத்தை கவனிங்க. குடும்பத்தைப் பார்த்தாதான் நாம் வெளியில போராட முடியும். உங்க மனசில 2016-ஐக் குறிச்சுக்கங்க. 2021 நமக்கு நிச்சயமானது. முன்னேறுங்க. வெற்றி நிச்சயம்.. வரும் காலம் நமதுதான்," என்றாராம் விஜய்.

இதே போன்ற விழாக்களை கோவை, மதுரை, வேலூர் போன்ற இடங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளார்களாம் விஜய் தரப்பில்.

 

அட ஆமாங்க.. என் படத்துல புதுசா ஒண்ணுமில்ல! - இது ரீங்காரம் இயக்குநரின் வாக்குமூலம்

ரீங்காரம்... இது விரைவில் வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் தலைப்பு. வட சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வரும் இன்னுமொரு படம் இது.

இப்படத்தை சமுத்திரகனி உள்ளிட்ட பல இயக்குனர்களிடம் உதவியாளராக பணிபுரிந்த சிவகார்த்திக் என்பவர் இயக்குகிறார். இது ஒருநாளில் நடக்கும் கதை. கதையின் விறுவிறுப்புக்கும், வேகத்துக்கும் வேகத்தடை கொடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில் படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே வைத்துள்ளாராம் சிவகார்த்திக்.

அட ஆமாங்க.. என் படத்துல புதுசா ஒண்ணுமில்ல! - இது ரீங்காரம் இயக்குநரின் வாக்குமூலம்

-பாலா என்ற புதுமுகம்தான் நாயகன். கங்காரு படத்தில் நடித்த பிரியங்கா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், கலாபவன் மணி, ஆடுகளம் ஜெயபாலன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஜெயபாலன் இப்படத்தில் இருட்டில் வாழும் பூதமாக நடிக்கிறாராம். விஜய் டிவி புகழ் சிங்கப்பூர் தீபன் இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறார்.

அட ஆமாங்க.. என் படத்துல புதுசா ஒண்ணுமில்ல! - இது ரீங்காரம் இயக்குநரின் வாக்குமூலம்

படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘இது புதிய கதை இல்லை. எல்லாருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் கோணங்களில் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறோம்.

மனிதன் அவன் வாழ்நாளில் கடக்கிற ஒட்டு மொத்த உணர்வுகளையும் நிகழ்வுகளையும் இரண்டே விஷயத்தில் தெளிவாகச் சொல்லி விடலாம். ஒன்று சிரிப்பு இன்னொன்று அழுகை. இந்த இரண்டு விதமான உணர்வுகளையும் சரிவர பயணம் செய்து, பார்த்த மனிதர்களிடமிருந்தும் படித்த புத்தகங்களிடமிருந்தும் எடுத்து சொல்லியிருக்கிறேன். இதை ஓர் அனுபவமாக உணர வைத்திருக்கிறேன். ஆனாலும் இதை புதுசு என்று சொல்லமாட்டேன் என்கிறார்.

 

கே பாலச்சந்தர் உடல் நிலையில் லேசான முன்னேற்றம்!

இயக்குநர் கே பாலச்சந்தர் உடல் நிலையில் இன்று மேலும் லேசான முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு தினங்களுக்கு முன் உடல் நிலை கவலைக்கிடமானது. அவரை காவேரி மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்தனர்.

கே பாலச்சந்தர் உடல் நிலையில் லேசான முன்னேற்றம்!

அவரை ரஜினிகாந்த் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் போய்ப் பார்த்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் கே பாலச்சந்தர் உடல் நிலை மெதுவாக தேறி வருவதாக மருத்துவர்கள் நேற்றிலிருந்து கூறி வருகின்றனர். இன்று அவரை நேரில் பார்த்த நடிகர் விவேக்கும் இதே கருத்தைத் தெரிவித்தார்.

கே பாலச்சந்தரை அருகிலிருந்து கவனித்துக் கொள்ளும் அவரது உதவியாளர் மோகனும், அவர் உடல் நிலை சீரடைந்து வருவதாகத் தெரிவிதார்.

 

6 சேர்ந்து அட்டகாசமாக வெளியிட்ட ராஜதந்திரம் டீசர்கள் – நடிகர் விஜய்யின் டிவிட்டர் மூலம் ரிலீஸ்!

சென்னை: ராஜதந்திரம் என்று எந்த நேரத்தில் பெயர் வைத்தார்களோ, படக்குழுவினர் ராஜதந்திரமாகத்தான் யோசித்து படத்தில் டீசர்களை வெளியிட்டுள்ளனர்.

சன் லாண்ட் சினிமாஸ் மற்றும் ஒயிட் பக்கேட் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் வீரா, ரெஜினா கெசன்ரா, பட்டியல் எஸ் சேகர் நடிப்பில் ஏஜி.அமித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் "ராஜதந்திரம்".

படத்தில் முக்கிய கதாபாத்திரங்கள் 6 பேர். அந்த ஆறு கதாபாத்திரங்களுக்கும் அவர்களின் சுபாவம் வெளிபடும் வகையில் படகுழுவினர் 6 டீசர்களை எடுத்து, 6 திரை நட்சத்திரங்களின் மூலம் ஒவ்வொரு டீசர்களாக வெளியிடுகின்றனர்.

6 சேர்ந்து அட்டகாசமாக வெளியிட்ட ராஜதந்திரம் டீசர்கள் – நடிகர் விஜய்யின் டிவிட்டர் மூலம் ரிலீஸ்!

விஜய் வெளியிடும் முன்னோட்டம்:

மேலும் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை விஜய் மூலமாக, அவரது டுவிட்டரில் வெளியிடுகின்றனர். தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு முன்னோட்டம் டுவிட்டர் மூலமாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஜி.வி.பிரகாஷ் வெளியீடு:

படத்தின் கதை கருவை உணர்த்தும் டீசரை, டிசம்பர் 14 அன்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

ரெஜினாவுக்கு சமந்தா:

படத்தின் கதாநாயகியான ரெஜினா கெசன்ராவின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை சமந்தா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

அஜய் பிரசாத்தின் டீசர் குஷ்பு மூலம்:

அஜய் பிரசாத் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 15 அன்று நடிகை குஷ்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்.

சிவாவுக்கு பிரேம்ஜி அமரன்:

டர்புக்கா சிவா நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, டிசம்பர் 16 அன்று நடிகர் பிரேம்ஜி அமரன் தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்

இளவரசுவிற்கு வெங்கட் பிரபு:

இளவரசு நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை டிசம்பர் 16 அன்று நடிகர் மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டார்

தந்தைக்கு கிருஷ்ணா:

தன் தந்தை பட்டியல் எஸ். சேகர் நடித்த கதாபாத்திரத்தின் சுபாவத்தை வெளிபடுத்தும் டீசரை, கிருஷ்ணா தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்.

கதாநாயகன் வீராவிற்கு சிம்பு:

இப்படத்தின் கதாநாயகன் வீரா தோன்றும் டீசரை, சிம்பு தனது டுவிட்டர் மூலமாக வெளியிட்டுள்ளார்.

முழு டிரெய்லருக்கு விஜய்:

இறுதியில் இப்படத்தின் முழு முன்னோட்டத்தை நடிகர் விஜய் டிசம்பர் 18 அதாவது நாளை தனது டுவிட்டர் மூலமாக வெளியிடவுள்ளார்.

ஜனவரியில் படம் ரிலீஸ்:

முன்னோட்டத்தை வெளியிடும் படக்குழுவினரின் வித்தியாசமான மற்றும் விமர்சையான அணுகுமுறை பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் ஜனவரியில் தமிழ் ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமையவுள்ளது.

 

லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன... இப்போ வேகமா இருக்கா படம்?

லிங்கா படத்திலிருந்து 10 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டதை நேற்றே கூறியிருந்தோம்.

நீளம் குறைக்கப்பட்ட லிங்காவை நேற்று முதல் பார்க்க முடிந்தது.

லிங்காவில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன... இப்போ வேகமா இருக்கா படம்?

படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6. அவை:

1. மரகத நெக்லஸ் திரும்போது, கதவில் அனுஷ்காவை விட்டு மார்க் பண்ண வைக்கும் காட்சி

2. ரஜினியை வரவேற்று லோக்கல் புலவர் ஒருவர் கண்ணதாசன், வாலி, வைரமுத்து கவிதைகளைச் சொல்லி பரிசு கேட்கும் காட்சி

3. தன் தோழிகளுடன் சோனாக்ஷி செய்யும் சேட்டை காட்சி

4. டேம் ப்ளான் பேப்பரில் சோனாக்ஷி காப்பியைக் கொட்டிவிடும் காட்சி

5. ராஜா லிங்கேஸ்வரன் பிறந்த நாளுக்கு விருந்தினர்கள் வரும் நீண்ட காட்சி

6. க்ளைமாக்ஸ் பலூன் காட்சியில் ஒரு பகுதி

மொத்தம் 10 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

படத்தின் நீளத்தை குறைப்பது பற்றி பட வெளியிட்டுக்கு முன்பே ரஜினி பேசினாராம். ஆனால் 4 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் வந்திருப்பதால் ரசிகர்களுக்கு சலிக்காது, எதையும் குறைக்கத் தேவையில்லை என்று ரவிக்குமார் உள்ளிட்டோர் கருதியதால் அப்படியே விட்டிருக்கிறார்கள்.

இப்போது படத்தைக் குறை சொல்வோர் பிரதானமாகச் சொல்வதே, அதன் நீளத்தைத்தான். எனவே நீளத்தையும், க்ளைமாக்ஸின் ஒரு பகுதியையும் ட்ரிம் செய்துள்ளனர்.

இப்போது வேகமா இருக்கா படம்... பார்த்தவர்கள் சொல்லுங்க!

 

ரஜினி பிறந்தநாளில் துவங்கிய தல தளபதி களத்துல...

தல என்று அஜீத்தையும், தளபதி என்று விஜயையும் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த இரண்டு பெயர்களையும் இணைத்து ‘தல தளபதி களத்துல' என்று சினிமாவிற்கு பெயர்சூட்டியுள்ளனர்.

ரசிகர்கள் அவ்வப்போது மோதிக்கொண்டாலும் அஜீத்தும் விஜயும் நண்பர்கள்தான். படத்திற்கும் இந்த கருதான் கதையாக உள்ளதாம்.

ரஜினி பிறந்தநாளில் துவங்கிய தல தளபதி களத்துல...  

இந்த படத்தின் துவக்க விழா ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்து, முஸ்லீம், கிருஸ்துவர் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் படபூஜை அமைந்திருந்தது.

பிரின்ஸ் மீடியா சார்பில் ஜபீரலி என்பவர் தயாரிக்க, என்.டி.ரவிச்சந்திரன் இயக்குகிறார்.வெளியில் மோதிக்கொள்ளும் இரண்டு நண்பர்கள் உள்ளுக்குள் நண்பர்கள்தான் என்கிறார் இயக்குநர்.

தல தளபதி களத்துள படத்திற்கு ஜான்பீட்டர் இசையமைக்க, ராஜேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.