வாய்ப்பு குறைவதால் கவர்ச்சிக் கடலில் குதித்த ராணி முகர்ஜி

Rani Turns Too Sexy Aiyyaa

மும்பை: பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு வாய்ப்பு குறைவதால் அவர் அய்யா படத்தில் ஓவராக கவர்ச்சி காட்டியுள்ளார் என்று பேசப்படுகிறது.

பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு 34 வயது ஆகிறது. அவருக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான ஆதித்யா சோப்ராவுக்கும் இடையே நீண்ட காலமாக காதல். அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும் பேசப்படுகிறது. பாலிவுட்டில் கரீனா, கத்ரீனா, பிரியங்கா ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கையில் ராணிக்கு வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் 5ம் தேதி ரிலீஸாகவிருக்கும் அய்யா படத்தில் ராணி சகட்டு மேனிக்கு கவர்ச்சி காட்டியுள்ளார். அப்படியாவது சான்ஸ் கிடைக்காதா என்று பார்க்கிறாரோ என்னவோ. மேலும் இந்த படத்தில் அவர் பெல்லி டான்ஸ் வேறு ஆடியுள்ளாராம். படத்தில் மகாராஷ்டிரா பெண்ணாக நடித்துள்ள ராணிக்கு ஜோடி நம்ம மலையாள நடிகர் பிரித்விராஜ் தான்.

ஒரு பாட்டில் ராணி குட்டி குட்டியாக டிரஸ் போட்டு பிரித்விராஜுடன் ரொம்பவே ரொமான்டிக்காக டான்ஸ் ஆடியுள்ளார். பாலிவுட் நடிகைகளுக்கு ஐட்டம் டான்ஸ் அதாவது குத்தாட்டம் போடுவது என்றால் அல்வா சாப்பிடுகிற மாதிரி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நடிகை ஒரு படத்தில் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டால் அதைப் பார்த்துவிட்டு இன்னொரு நடிகை தன் படத்தில் அதைவிட படுகவர்ச்சியாக ஆடுகிறார். இந்தக் கொடுமையை எங்க போய் சொல்ல?

 

அதிபர் தேர்தலில் ஒபாமா வென்றால் நான் நிர்வாணமாகத் தயார்: பாப் பாடகி மடோனா

Pop Singer Madonna Willing Go Naked For Obama

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமாவை மக்கள் மீண்டும் வெற்றி பெற செய்தால், மேடையில் எனது ஆடைகளை துறந்து நிர்வாண கோலத்தில் நிற்கத் தயார் என்று பிரபல பாப் பாடகி மடோனா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் மடோனா கலந்து கொண்டார். அப்போது ரசிகர்களிடையே ஒபாமாவுக்கு ஆதரவு கோரி பிரசாரத்திலும் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

ஒபாமாவிற்கு ஓட்டு போடுவது நல்லதோ, கெட்டதோ, அவருக்கு ஓட்டு போடுங்கள். வெள்ளை மாளிகையில் ஒரு கறுப்பு முஸ்லீம் உள்ளார். அவருக்கு ஓட்டு போடுவதன் மூலம் நாட்டிற்கு ஒரு நம்பிக்கை கிடைக்கும். அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறார். அதற்காக அவரை ஆதரித்து ஓட்டு போடுங்கள்.

ஒபாமா ஒரு முஸ்லிம் அல்ல, அவர் கிறிஸ்தவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் நம் நாட்டில் பலரும் அவரை ஒரு முஸ்லிம் என்றே நினைத்து வருகின்றனர். என்னை பொறுத்த வரை ஒரு நல்ல மனிதன் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நல்லவராகவே இருப்பார். ஒபாமா எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.

அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா, மீண்டும் அதிபராக தேர்தலில் வெற்றி பெற்றால், மேடையிலேயே எனது ஆடைகளை களைய தயாராக உள்ளேன் என்றார்.

பின்னர் அதிபர் தேர்தலில் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மேடையில் ரசிகர்களுக்கு முன்பாக மடோனா தனது மேலாடையை கழற்றினார். அதன்பிறகு தனது முதுகைத் திருப்பிக் காட்டி அதில் 'ஒபாமா' என்று ஆங்கிலத்தில் பச்சைக்குத்தி இருப்பதை ரசிகர்களுக்கு காட்டி உற்சாகப்படுத்தினார்.

 

தகாத வார்த்தைகளால் திட்டினார்கள் - உறுப்பினர்கள் மீது அமீர் குற்றச்சாட்டு

Ameer S Explanation His Resignation

சென்னை: சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, அகௌரவப்படுத்தி வருகின்றனர். என் சுயமரியாதையைக் காத்துக் கொள்ள, செயலர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என இயக்குநர் அமீர் விளக்கம் அளித்துள்ளார்.

தாண்டவம் கதை விவகாரத்தில் எழுந்த மோதலைத் தொடர்ந்து இன்று இயக்குநர் சங்க செயலர் பொறுப்பிலிருந்து விலகினார் அமீர்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள விளக்கக் கடிதம்:

தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பாக என்மீது செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏழுபேர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

என்னை குற்றம்சாட்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் குற்றம்சாட்டுகின்றனர். அதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக நமது சங்கத்துக்கு வந்து என்னை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழ்த்தரமாக நடந்து கொண்டு சங்கத்தின் கண்ணியத்தை காயப்படுத்தியிருக்கிறார்கள்.

சந்தேகத்தின் நிழலோடு ஒருபோதும் எந்தப் பதவியிலும் இருக்க விரும்பாதவன் நான்.

நான் தொடர்ந்து இப்பதவியில் இருந்தால் இவர்கள் மேலும் மேலும் என்னை அகௌரவப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு சங்கத்தின் கவுரவத்தைக் குறைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தனிமனிதனை விட சங்கமே முக்கியம் என்று கருதுவதாலும், வலிமையாக உருவெடுத்திருக்கிற நமது சங்கம் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதற்காகவும் என் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

-இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

காஜலின் கால்ஷீட் சொதப்பலால் ரூ 2 கோடி நஷ்டம் - நாயகியை மாற்றும் தயாரிப்பாளர்

Kajal Makes Rs 2 Cr Loss Producer   

நடிகை காஜல் அகர்வாலின் கால்ஷீட் சொதப்பலால் ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெலுங்கு தயாரிப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு ஜோடியாக நடிக்கிறார் காஜல் அகர்வால். இந்த படத்துக்கான ஒரு பாடல் காட்சியை ரூ 2 கோடி வரை செலவழித்து பிரமாண்டமாக எடுத்தார்கள்.

ஆனால் இந்தப் பாட்டோடு படத்தின் ஷூட்டிங் நிற்கிறது.

காரணம் காஜல் அகர்வால் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததுதான். தமிழ்ப் படங்களில் பிஸியாகிவிட்டதால் மகேஷ் பாபு படத்தை அவர் கண்டுகொள்ளவே இல்லையாம்.

இதனால் காஜல் அகர்வாலை தூக்கிவிட்டு வேறு நாயகியை தேர்வு செய்ய தயாரிப்பாளர் தயாராகிவிட்டாராம். அப்படி மாற்றினால், ரூ 2 கோடி வரை நஷ்டம் ஏற்படும் என்பதால், அதை காஜலிடம் எப்படி கறப்பது என யோசித்து வருகிறாராம்!

 

தாண்டவம் விவகாரம்... இயக்குநர் சங்கத்தின் முன் உதவி இயக்குநர்கள் போராட்டம்!

சென்னை: தாண்டவம் படத்தின் கதை உரிமை தொடர்பான சர்ச்சையில் இயக்குநர் சங்கத்தின் நிலைப்பாட்டைக் கண்டித்து ஏராளமான துணை இயக்குநர்கள் இன்று சங்கத்தின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தாண்டவம் பட விவகாரம் இயக்குநர் சங்கத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது.

இந்தப் படத்தின் கதை தனக்கு சொந்தம் என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் உதவி இயக்குநர் பொன்னுசாமி. ஆனால் படத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம்.

இந்த விவகாரத்தில் பொன்னுசாமிக்கு ஆதரவாக உதவி இயக்குநர்கள் களமிறங்கியுள்ளனர்.

மேலும் பொன்னுசாமிக்கு நீதி கிடைக்கச் செய்வதை விட்டுவிட்டு, தாண்டவம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு சாதகமாக சங்கத்தின் முதல் நிலை நிர்வாகிகள் அமீர், கரு பழனியப்பன் போன்றவர்கள் செயல்படுவதாகக் கூறி கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன்னுசாமிக்கு ஆதரவாக ஜெகதீசன், ஐந்துகோவிலான், பாலமுரளிவர்மன், வி.சி.விஜயசங்கர், விருமாண்டி என்கிற கமலக்கண்ணன், நாகேந்திரன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். சங்க இணைச் செயலரான தம்பிதுரையும் ராஜினாமா செய்தார். இவர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் பதவி விலகிவிட்டார்.

தங்கள் ராஜினாமா குறித்து பாலமுரளி வர்மன் கூறுகையில், "இந்த இயக்குநர் சங்கம் உருவானதே உதவி இயக்குநர்களுக்காகத்தான். ஆனால் இன்று பொன்னுசாமி என்ற உதவி இயக்குநரே இந்த சங்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து கடந்த ஆகஸ்ட் மாதமே சங்கத்தில் புகார் பதிவு செய்தார் பொன்னுசாமி. அப்போதே, பொன்னுசாமியின் திரைக்கதையையும் விஜய்யின் திரைக்கதையையும் சங்த்தின் 7 பேர் கொண்ட குழு ஒப்பிட்டுப் பார்த்தது. உண்மையில் நாங்கள் கேட்ட பிறகே, விஜய் அந்த திரைக்கதையை தயார் செய்திருந்தார். இரு திரைக்கதைகளும் ஒரே மாதிரிதான் இருந்தன. பின்னர் படத்தையும் பார்த்தோம். படத்திலும் பொன்னுசாமியின் திரைக்கதையைத்தான் அப்பட்டமாக எடுத்தாண்டிருந்தனர்.

இந்தப் படத்தின் கதை அல்லது திரைக்கதைக்கு பொன்னுசாமி பெயரைப் போட வேண்டும் என்பதுதான் வைக்கப்பட்ட கோரிக்கை.

ஆனால் அதை யுடிவி ஒப்புக் கொள்ளவில்லை. மற்ற மொழிகளில் பிரச்சினை வரும் என்றார்கள். இதைத் தவிர்த்து வேறு எந்த திட்டத்துக்கும் பொன்னுசாமி சம்மதிக்காததால்தான் விஷயம் கோர்ட்டுக்குப் போனது. ஆனால் இந்த விசாரணையை வேண்டுமென்றே இயக்குநர் சங்கம் காலம் தாழ்த்தியது. குறிப்பாக ஜனநாதன், கரு பழனியப்பன், அமீர் போன்றவர்கள். அப்போதுதான் படத்துக்கு பொன்னுசாமியால் தடை வாங்க முடியாது என்று தெரிந்து காலம் தாழ்த்தினர்.

அவர்களின் இந்த ஒரு சார்பான நிலையைக் கண்டித்துதான் நாங்கள் ராஜினாமா செய்தோம். இன்று போராட்டம் நடத்தினோம். இந்த வழக்கையும் விடப் போவதில்லை.

இன்று அமீர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஏதோ நாங்கள் லெட்டர் பேடை திருடி பொன்னுசாமிக்கு ஆதரவாக கடிதம் கொடுத்ததாக பொய் கூறி வருகிறார். நாங்களும் சங்க நிர்வாகிகள்தான். அந்த லெட்டர் பேடில் எங்கள் பெயரும் உள்ளது. அந்த வகையில் லெட்டர் பேடை பயன்படுத்த எல்லா உரிமையும் எங்களுக்கு உள்ளது. இருந்தாலும், அவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டுத்தான் நாங்கள் அந்தக் கடிதத்தை தயாரித்து நீதிமன்றத்துக்குக் கொடுத்தோம். ஆனால் எங்களை தவறாக சித்தரித்து அமீர் பேசி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்," என்றார்.

உதவி இயக்குநர்கள் முற்றுகை

இன்று மாலை சென்னையில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகம் முன் குவிந்த ஏராளமான உதவி இயக்குநர்கள், சக உறுப்பினரான பொன்னுசாமிக்கு நீதி வழங்குமாறு கோஷம் எழுப்பினர். சங்கத்தின் நிர்வாகிகள் ஒரு சார்பாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டினர்.

இயக்குநர் சங்கம் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவு பட்டுள்ள இந்த சூழலில், சங்கத்தின் தலைவராக உள்ள பாரதிராஜா, எதுவும் பேசாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

ரியாலிட்டி ஷோவில் டான்ஸை விட கவர்ச்சியில் 'அப்ளாஸ்' வாங்கிய பமீலா!

Pamela Anderson Outshines Other Contestants In Glam

நியூயார்க்: அமெரிக்காவின் ஏபிசி தொலைக்காட்சி நடத்தும் டான்ஸிங் வித் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவிலிருந்து கவர்ச்சித் தாரகை பமீலா ஆண்டர்சன் முதல் ஆளாக வெளியேற்றப்பட்டு விட்டாலும் கூட அவரது கவர்ச்சிதான் அத்தனை பேரின் கண்களையும் கவ்வியது.

ஏபிசி தொலைக்காட்சியின் டான்ஸிங் வித் ஸ்டார்ஸ் ரியாலிட்டி ஷோவின் 15வது எபிசோட் தற்போது நடந்து வருகிறது. இது ஒரு நடன ரியாலிட்டி ஷோவாகும். ஆணும், பெண்ணுமாக ஜோடி போட்டு ஆட வேண்டும். இந்த ஷோவில் பமீலாவும், அவருக்குப் பார்ட்னராக டிரிஸ்டன் மெக்மெனஸும் கலந்து கொண்டனர். ஆனால் முதல் வாரத்திலேயே பமீலா ஜோடி வெளியேற்றப்பட்டு விட்டது.

45 வயதான பமீலா எப்பேர்ப்பட்ட பெருமைக்குரியவர், அவரது சிறப்புகள் என்ன என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அப்படிப்பட்டவர் முதல் வாரத்திலேயே வெளியேறியது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும் தனது கவர்ச்சியால் அத்தனை போட்டியாளர்களையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் பமீலா. நடன நிகழ்ச்சிக்காக அவர் போட்டிருந்த உடை படு கவர்ச்சிகராக இருந்தது. தொடையோடு நின்று வி்ட்ட அந்த கவர்ச்சி டிரஸ்ஸில் பமீலாவின் கால் அழகு பளிச்சிட்டது.

அத்தோடு நில்லாமல், அவரது உடல் அங்கங்களின் கவர்ச்சியும் பளீரிட்டது. மெக்மெனஸுடன் ஆடுவதற்குத் தயாரானபோதும் சரி, உடைகளை மாற்றியபோதும் சரி பமீலா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் படிந்து கிடந்தன. பமீலாவும் சும்மா இருக்காமல், தனது மார்பகங்களை இரு கைகளாலும் கவ்வி்ப் பிடித்து அதை பார்ட்னரை பார்க்க வைத்து சூட்டைக் கூட்டினார்.

முதல் வாரத்தில் அவரும், அவரது பார்ட்னரும் ஆடிய நடனம் வரவேற்பைப் பெறாவிட்டாலும் கூட பமீலாவின் கவர்ச்சி அனைவரையும் கவர்ந்து விட்டது என்னவோ உண்மை.

 

துப்பாக்கி போலீஸ் கதை இல்லை - ஏ ஆர் முருகதாஸ்

Ar Murugadoss Speaks On Thupakki   

விஜய் நடிக்கும் துப்பாக்கி போலீஸ் கதை அல்ல.... அதிரடி ஆக்ஷன் கதை, என்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

துப்பாக்கி படத்தின் தலைப்பு விவகாரம் மிகுந்த இழுபறியாக உள்ளது. இந்தத் தலைப்பு கிடைக்குமா, தடை போட்டுவிடுவார்களா என்ற டென்ஷனில் இருக்கிறது படக் குழு.

இதற்கிடையே துப்பாக்கியில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றெல்லாம் செய்தி வெளியாகி வந்தது.

இதுகுறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அவர் கூறுகையில், "இந்தப் படத்தின் நாயகன் மும்பையில் வசிக்கும் ஒரு தமிழன். அவனுக்கென்று ஒரு இலக்கும், அவனுடன் ஒரு படையும் இருக்கிறது. படத்தில் போலீஸ் உண்டு. ஆனால் நாயகன் போலீஸ் கிடையாது," என்றார்.

சரி... தீபாவளிக்கு நெருங்கிடுச்சே... ஆடியோ ரிலீஸ் எப்போ?

"நிச்சயம் அக்டோபர் முதல் வாரம் ஆடியோ ரிலீஸ் வச்சிடுவோம்," என்றார் முருகதாஸ்!

 

தாண்டவம் படத்தை வெளியிட தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தாண்டவம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நாளை அந்தப் படம் வெளியாகிறது.

உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் விக்ரம், நடிகை அனுஷ்கா நடித்த தாண்டவம் படத்தின் கதை என்னுடையது. இந்த படத்தின் கதையை யு.டி.வி. நிறுவனத்திடம் நான் கூறினேன். அந்தக் கதையை படமாக்கும் போது படத்தின் இணை இயக்குனராக சேர்க்கிறோம் என்று அந்த நிறுவனத்தின் சார்பில் எனக்கு வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் என்னை சேர்க்காமலேயே படத்தை தயாரித்துள்ளனர். இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. தாண்டவம் படம் வெளியிடப்பட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்.

தாண்டவம் படத்தில் வரும் கதை என்னுடையது என்று அறிவிக்க வேண்டும். எனக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்க யு.டி.வி. நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.

யு.டி.வி. சார்பில் ஆஜரான வக்கீல் சிவானந்தராஜ், "அவர், யு.டி.வி. நிறுவனத்திடம் மனுதாரர் கதை கூறினார் என்பதற்கு ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. தாண்டவம் படத்தில் இருப்பது அவரது கதை அல்ல. இந்தப் படம் வெளியிடப்படாவிட்டால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே தடை விதிக்கக் கூடாது," என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.சந்துரு, தாண்டவம் படம் வெளியாவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.

 

இயக்குநர் சங்க பதவியிலிருந்து அமீர் விலகல்!

Director Ameer Resigns Fro Director Association

தாண்டவம் படத்தின் கதை விவகாரம் இயக்குநர் சங்கத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து இயக்குநர் அமீர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

இன்னொரு பக்கம் உதவி இயக்குநர் பொன்னுசாமிக்கு நியாயம் கிடைக்க வேண்டி, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் ஒரு இணைச் செயலர் பதவி விலகியுள்ளன்.

இதனால் இயக்குநர் சங்கமே இரண்டாக பிளவுபட்டு நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குநர் பொன்னுசாமி என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போகும் முன் இயக்குநர் சங்கத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் படத்தைத் தயாரித்த யுடிவி மற்றும் பிரச்சினையை விசாரித்த இயக்குநர் சங்க குழுவுக்கிடையில் எந்த உடன்பாடும் எட்ட முடியவில்லை.

கடைசி நேரத்தில்தான் பொன்னுசாமி நீதிமன்றம் போனார். அவருக்கு ஆதரவான நிலையை சங்கத்தில் செயற்குழு உறுப்பினர்களாக உள்ள உதவி இயக்குநர்கள் எடுத்தனர். சங்கத்தின் சார்பில் இவர்கள் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை பொன்னுசாமிக்கு ஆதரவாக அளித்தனர்.

இந்தக் கடிதம் தன் அனுமதியில்லாமல் தரப்பட்டிருப்பதாகக் கூறி சங்கத்தின் செயலர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார் இயக்குநர் அமீர்.

இது கட்டுப்பாட்டை மீறிய செயல். தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் அனுமதியின்றி சங்கத்தின் லெட்டர்பேடில் கடிதம் தந்தது தவறு. இதனால் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை தலைவராக உள்ள பாரதிராஜாதான் விசாரித்து தீர்த்து வைக்க வேண்டும் என அமீர் கூறியுள்ளார்.

 

நயன்தாராவால் தூக்கம் கெட்டு தவிக்கும் ஜெய்

Jai Spends Sleepless Nights Because   

சென்னை: நடிகை நயன்தாராவால் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் தூக்கமில்லாமல் இருக்கிறாராம்.

நயன்தாரா, ஆர்யா நடிக்கும் படத்தில் சுப்பிரமணியபுரம் ஹீரோ ஜெய் நடிக்கிறார். அதிலும் படத்தில் நயனை காதலிக்கிறார். படத்தில் அவர்களுக்கு ஒரு டூயட் கூட இருக்கிறது. நயனுடன் காதல் காட்சிகளில் எப்படி நடிப்பது, அவருடன் எப்படி டூயட் பாடுவது என்று ஜெய்க்கு ஒரே படபடப்பாக உள்ளதாம்.

இரவில் கண்ணை மூடினாலும் அந்த படப்படப்பு அடங்காமல் இருக்கிறதாம். அதனால் மனிதர் தூக்கமில்லாமல் தவித்து வருகிறாராம். அட்லீ எடுக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. முக்கோண காதல் கதை கொண்டது இப்படம். ஆர்யா இரண்டாம் உலகத்தில் பிசியாக இருப்பதால் அவர் வரும் வரை ஜெய், நயன்தாரா வரும் காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

அவ்வளவு பெரிய நடிகையுடன் நடிக்கப் போகிறோமே என்று ஜெய் ஒருவித டென்ஷனில் உள்ளார். கவலைப்படாதீங்க ஜெய், நயன் ரொம்பவே நல்லவர். தைரியமா போய் நடிங்க. ஜெய் நடித்து கடைசியாக வந்த படம் எங்கேயும் எப்போதும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே என்ற வரி இளையராஜாவுக்காவே எழுதப்பட்டது!'

Spb Chitra Concert At Dallas   

டல்லஸ்(யு.எஸ்): எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பங்கேற்ற டல்லாஸ் இசை நிகழ்ச்சியில் வரலாறு காணாத அளவிற்கு தமிழர்கள் கலந்து கொண்டனர். எஸ்.பி ஷைலஜா மற்றும் எஸ்.பி.பி சரணும் உடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை புரிந்து கொண்ட எஸ்.பி.பி 'தயவு செய்து ரஜினி, கமல், விஜயகாந்த் பாடல்கள் என்று பிரித்துப் பார்க்காமல் நான் பாடிய பாடல்களாக பாருங்கள். நாங்கள் முதலில் பாடிய பிறகுதான் அவர்கள் நடிக்கிறார்கள்.. அனைத்தையும் இங்கே பாடமுடியாது என்பதால் குறிப்பிட்ட 200 பாடல்களை தேர்வு செய்து, சென்னையில் நான்கு நாட்கள் குழுவினரோடு காலை முதல் மாலை வரை, பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்திருக்கிறோம்.

திடிரென்று நீங்கள் வேறு ஏதாவது பாடல்களை கேட்டால், இசைக்குழுவினரால் சரியாக வாசிக்க முடியாமல் போகலாம். 40,000 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன். நிறைய பாடல்கள் எனக்கே மறந்திருக்கும். இன்று நாங்கள் பாடும் அனைத்து பாடல்களையும் ரசித்து ஒத்துழைப்பு தாருங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

முன்னதாக அவரை அறிமுகப்படுத்தும் போது 'பால்காரன் முதல் ரோபோ வரை எந்த வேடத்தில் நடித்தாலும் தனக்கு டைட்டில் சாங் பாட சூப்பர் ஸ்டார் ரஜினி அழைப்பது எஸ்.பி.பி யைத் தான்" என்றதும் எழுந்த ஆரவாரமான கைத்தட்டல்களை பார்த்து உஷாராகி விட்டார் போலும்.

இளையராஜாவுக்காக எழுதிய பாடல்

முதல் பாடலாக ‘மடை திறந்து' என்ற பாடலைத்தான் பாடினார் எஸ்.பி.பி.

'இந்தப் பாடலில் வரும் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே' என்ற வரிகளை, நான் பாடினாலும் அது இளையராஜாவுக்காகவே கவிஞர் வாலியால் எழுதப்பட்டது' என்று குறிப்பிட்டார்.

தமிழில் சாந்தி நிலையம் படத்தில் ‘இயற்கை என்னும் இளையகன்னி' பாடல் மூலம் அறிமுகப்படுத்திய எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும், அடுத்தடுத்து வித்தியாசமான வாய்ப்புகள் கொடுத்த இளையராஜாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

சித்ராவுக்காக ஹரிஹரன் குரலில்

வெவ்வேறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தவர், திடீரென்று ‘ உயிரே உயிரே' என ஏ.ஆர்.ரஹ்மானின் பம்பாய் பட பாடலை பாட ஆரம்பித்த்தும், பார்வையாளர்கள் பிரமிப்புக்குள்ளாகினர். மேடையில் அமர்ந்திருந்த சித்ராவின் முகத்தில் ஆச்சரியம், இன்ப அதிர்ச்சி என பலவிதமான உணர்வுகள். பாடலின் இடையே அவர் சேர்ந்து கொண்டு பாடி முடித்தார். ஹரிஹரன் பாடிய இந்த பாடலை சித்ராவுக்காக பாடியதாகவும், இந்த கச்சேரி டூரில், தனக்கும், சரணுக்கும் சித்ரா துணைக் குரல் எல்லாம் கொடுத்து ரொம்பவும் பரவசப்படுத்தி வருகிறார். அதனால், அவருக்கு முக்கியமான இந்த பாடலை, ஹரிஹரன் வரவில்லையென்றாலும் நானே பாடினேன். இது அவருக்கு முன்னதாக தெரியாது. மேடையில் பாடி இன்ப அதிர்ச்சி கொடுக்க விரும்பினேன் என்றார் எஸ்.பி.பி

மேலும், எனக்கு அவர் மகள் போல் என்றாலும், இசைப் புலமையில் அவர் ரொம்ப பெரியவர். அவரது இசை ஞானத்திற்கு முன்னால் நான் ஏதும் அறியாதவன் என்றும் குறிப்பிட்டார்.

இளைராஜாவைத் தந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு பாராட்டு

இளையராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சண்முகநாதனும், மகள் கீதாவும் (தமிழ் சங்க உப தலைவர்) டல்லஸில் வசிக்கிறார்கள். அவர்களை மேடைக்கு அழைத்து, இந்த பாடல் பஞ்சு அருணாச்சலத்திற்கு நன்றி செலுத்துவதற்காக பாடுகிறேன் என்று ‘காதலின் தீபம் ஒன்று' பாடினார்.

இளையராஜா என்ற இசை மேதையை அறிமுகப்படுத்திய அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்று புகழாரம் சூட்டினார்.

கம்பன் ஏமாந்தான், நீல வான ஓடையில் போன்ற பத்திற்கும் மேற்பட்ட பாடல்களை முதல் இரண்டு வரிகளுடன் மெட்லியாக பாடி அசத்தினார்.

'ஆயிரம் நிலவே வா' வை கேட்க திரண்ட 1500 பேர்

ஆயிரத்து ஐநூறு பேர் கொண்ட ஆடிட்டோரியம் நிறைந்து, டிக்கெட் கிடைக்காமல் ஏராளமானோர் ஏமாற்றம் அடைந்தனர். டல்லாஸில் தமிழ் நிகழ்ச்சிக்கு இவ்வளவு அதிகம் பேர் திரண்டது இது தான் முதல்முறை என்று சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி ஏற்பாட்டை தலைவர் கலைநாயகம், உப தலைவர் கீதா, செயலாளர் சுமதி, பொருளாளர் சுப்ரா, செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ரகு, ஜலீலா, தங்கவேல், ஆலோசகர் விஜிராஜன் மற்றும் ஏராளமான தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். எஸ்.பி.பி குழுவினரின் வருகையொட்டி, ஆடிட்டோரியத்தில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

'மடை திறந்து' ஆரம்பித்த கச்சேரி 'ஒருவன் ஒருவன் முதலாளி' என்ற வேத வாக்காக நிறைவானது.

இதுவரை டாம்பா, ராலே, சான் ஓசே, டல்லஸ் நகரங்களில் தமிழ், தெலுங்கு, கன்னட நிகழ்ச்சிகளை நட்த்தியுள்ள எஸ்.பி.பி குழுவினர், வாஷிங்டன் டிசி, சியாட்டில், போர்ட்லாண்ட், சான்டியாகோ, நியூ ஜெர்சி மற்றும் டொரோண்டாவில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அக்டோபர் 15 ம் தேதி சென்னை திரும்புகின்றனர்.

 

இந்திய சினிமா படங்கள், வாகனங்களுக்கு தடை விதித்த நேபாள மாவோயிஸ்டுகள்!

காட்மாண்டு: இனி நேபாளத்தில் இந்தியப் படங்கள் வரக்கூடாது, இந்திய பதிவு எண் கொண்ட வாகனங்களையும் பயன்படுத்தக் கூடாது என சிபிஎன் மாவோயிஸ்டுகள் தடை விதித்துள்ளனர்.

இவர்கள் நேபாளத்தில் ஆளும் மாவோயிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கியவர்கள். தங்களுக்கு செல்வாக்குள்ள 10 மாவட்டங்களில் அவர்கள் இத்தடையை விதித்துள்ளனர்.

இது தொடர்பாக அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான தேவ் குருங் கூறுகையில், "ஹிந்தி திரைப்படங்களை திரையிடவும், ஹிந்தி பாடல்களை ஒலிபரப்பவும் 10 மாவட்டங்களில் தடை விதித்துள்ளோம். நேபாள திரைப்படங்களையும், பாடல்களையும் காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய பதிவு எண்களைக் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏராளமான வேளாண்மை உற்பத்தி பொருள்கள் நேபாளத்துக்குக் கொண்டு வந்து விற்கப்படுகின்றன.

இதனால் உள்நாட்டு வேளாண்மை சந்தை நஷ்டத்தைச் சந்திக்கிறது. எனவேதான் இந்திய பதிவு வாகனங்களுக்குத் தடை விதித்துள்ளோம். இத்தடைகளை மீறுவோர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்," என்று அவர் எச்சரித்தார்.

மாவோயிஸ்டுகளின் தடையை அடுத்து, கேபிள் டி.வி. நடத்துவோர் ஹிந்தி பாடல்களை ஒளிபரப்புவதை உடனடியாக நிறுத்திவிட்டனர். தியேட்டர்களிலிருந்து படங்களையும் தூக்கிவிட்டனர்.

நேபாளத்தை நட்பு நாடாக அறிவித்து, பல்லாயிரம் கோடி ரூபாய் உதவிகளை செய்து வருகிறது இந்தியா. இன்றும் அந்நாட்டின் உள்கட்டமைப்பை இந்தியாதான் செய்து வருகிறது. நேபாளத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாவை மேம்படுத்தித் தந்திருப்பதும் இந்தியாதான். நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 70 சதவீதம் பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடை குறித்து இந்தியத் தூதரகம் கருத்து சொல்ல மறுத்துவிட்டது.