சிங்கப்பூர் கடையில் நகை திருடி மாட்டிய கவர்ச்சி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி

சிங்கப்பூர்: பெங்காலி கவர்ச்சி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி, சிங்கப்பூர் நகைக்கடையில் தங்க கம்மல் ஒன்றினை திருடியதாக புகார் எழுந்துள்ளது.

பெங்காலி பட உலகின் கவர்ச்சி கன்னியாக திகழ்பவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற பெங்காலி மொழி பட விழாவில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார்.

சிங்கப்பூர் கடையில் நகை திருடி மாட்டிய கவர்ச்சி நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி

நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த அவர் ஷாப்பிங் சென்றார். அருகில் உள்ள மார்க்கெட்டில் இருந்த நகை கடைக்கு பையுடன் சென்றார். நிறைய வித விதமான நகைகளை எடுத்து பார்த்து விலை கேட்டாராம். அப்போது காது கம்மல் ஜோடி ஒன்றை நைசாக எடுத்து கைப்பைக்குள் போட்டுக் கொண்டாராம்.

இந்திய ரூபாயில் அதன் மதிப்பு ரூ 15 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்குள்ள சி.சி. டி.வி.கேமராவில் பதிவானது. பிறகு நகை ஏதும் வாங்காமல் நைசாக வெளியேறினார்.

நகை கடை பாதுகாவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி பையை சோதனை போட்டு உள்ளே இருந்த கம்மல்களை எடுத்தனர். இதையடுத்து சிறிது நேரம் கடைக்கு உள்ளேயே ஸ்வஸ்திகா சிறை வைக்கப்பட்டார்.

கம்மலை நான் எடுத்து போடவில்லை. பைக்குள் அவை எப்படி விழுந்தன. என்று தனக்கு தெரியாது என்று சொல்லி அவர் கெஞ்சியதை அடுத்து கடை ஊழியர்கள் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனராம்.

இது பெங்காலி திரை உலகினரை அதிர்ச்சி அடைய செய்து உள்லது. தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறார்கள். இது குறித்து பலர் சசமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து உள்ளனர்.

நடிகை ஸ்வஸ்திகா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த மது விருந்தில் முன்னணி வங்காள நடிகரான சுமன் முகர்ஜியுடன், போதையில் சண்டை போட்டார். இதுவும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம்.. நித்தியானந்தா சிஷ்யை ராகசுதாவை மணக்கிறார்

சென்னை: நடிகை ப்ரியா ராமனை விவாகரத்து செய்த நடிகர் ரஞ்சித், நடிகையும் நித்தியானந்தாவின் சிஷ்யையுமான ராகசுதாவை இரண்டாவதாக திருமணம் செய்கிறார்.

மறுமலர்ச்சி, பாண்டவர்பூமி, நட்புக்காக, நரசிம்மா, வள்ளுவன் வாசுகி, பசுபதி மேபா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் ரஞ்சித் நடித்துள்ளார். மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம்.. நித்தியானந்தா சிஷ்யை ராகசுதாவை மணக்கிறார்

ப்ரியா ராமனுடன்

ரஞ்சித்துக்கும் நடிகை பிரியாராமனுக்கும் 1999- ல் திருமணம் நடந்தது. இது காதல் திருமணம் ஆகும். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். நேசம் புதுசு என்ற படத்தை இருவரும் இணைந்து தயாரித்தனர்.

கருத்து வேறுபாடு

இந்த நிலையில் ரஞ்சித்துக்கும், பிரியாராமனுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன் இருவரும் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தார்கள். ரஞ்சித் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.

ராகசுதாவுடன்

தற்போது நடிகை ராகசுதாவுடன் அவருக்கு காதல் மலர்ந்துள்ளது. ராகசுதா ‘தங்கத்தின் தங்கம்' என்ற படத்தில் ராமராஜன் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர். தமிழச்சி, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கையான நடிகை கே.ஆர்.சாவித்திரியின் மகள்.

நித்தியானந்தாவின் சிஷ்யை

ராகசுதா ஆன்மீக பணிகளில் ஈடுபட்டு வந்தார். நித்யானந்தாவின் சிஷ்யையாகி, பிடதி மடத்தில் கொஞ்ச காலம் ஆன்மீக பணியாற்றி வந்தார். இவர் மூலம் பல திரையுலக பிரபலங்கள் நித்தியானந்தாவின் பக்தர்களானார்கள்.

காதல்

இந்த நிலையில் ரஞ்சித்துக்கும் ராகசுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறி, இப்போது திருமணம் வரை வந்துள்ளது. ராகசுதாவை திருமணம் செய்து கொள்வதை ரஞ்சித்தும் உறுதிபடுத்தினார்.

வீட்டில் சம்மதம்

இதுகுறித்து நடிகர் ரஞ்சித் கூறுகையில், "ராகசுதாவும் நானும் நட்பாக பழகினோம். அவருடைய ஆன்மீக ஈடுபாடுகளில் நான் ஈர்க்கப்பட்டேன். இவருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுதுள்ளோம். எங்கள் திருமணத்துக்கு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். வருகின்ற 10- ந்தேதி சென்னையில் எங்கள் திருமணம் நடக்க உள்ளது", என்றார்.

 

சினிமாவை விட சமையல்தான் பிடித்திருக்கிறது… நடிகை ஆதிராவின் புதிய பயணம்

திருவனந்தபுரம்: சினிமாவில் கதாநாயகியாக நடித்தவர்கள் வாய்ப்பிற்குப் பின்னர் சீரியலுக்கு சென்று விடுவார்கள். ஆனால் ஒரு கதாநாயகி இப்போது சமையல் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஹீரோயினாக நடித்த நாயகி ஆதிராதான் இன்று சமையல் கலை வல்லுநராக மாறி 500 முதல் 1000 பேருக்கு வரை உணவு சமையல் செய்து தருகிறார்.

தாதாசாகிப் என்ற மலையாள திரைப்படத்தில் மம்மூட்டியின் கதாநாயகி. தொடர்ந்து ஐந்து படங்களில் பிரபல நடிகர்களோடு கதாநாயகியாக நடித்தார். பின்னர் நடிப்புக்கு டாட்டா காட்டிவிட்டு கணவருடன் இணைந்து சமையல் வேலை செய்யத் தொடங்கியுள்ளார்.

சினிமாவை விட சமையல்தான் பிடித்திருக்கிறது… நடிகை ஆதிராவின் புதிய பயணம்

ஆதிராவின் கணவர் விஷ்ணு நம்பூதிரி கோட்டயத்தை சேர்ந்தவர். சமையல் கலைஞர். அவர் காயத்ரி கேட்டரிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

2004-ம் ஆண்டு இவர்கள் திருமணம் நடக்கும்போது ரம்யாவுக்கு டீ மற்றும் நூடுல்ஸ் இரண்டும்தான் தயாரிக்க தெரியும். அடுத்த 3 ஆண்டுகளில் கணவரிடம் இருந்து சமையல் வித்தைகளை கற்றுக்கொண்டு, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டார்.

500 பேருக்கு சமையல்

இப்போது கணவருடன் இணைந்து 60 கிலோ அரிசியை வேகவைத்து, 80 கிலோ காய்கறிகளை நறுக்கி 150 தேங்காய்களை உடைத்து துருவி அசராமல் சமைப்பாராம்.

சமையல்தான் சூப்பர்

சினிமாவை விட சமையல்தான் பிடித்திருக்கிறது என்று கூறும் ஆதிரா.சினிமா ஒரு எலிப்பொறி போன்றது. அதன் மீது ஆசை வைத்துவிட்டால் அதன் உள்ளே நாம் சிக்கிக்கொள்வோம். திருமணத்தின் மூலம் நான் அந்த பொறியில் இருந்து தப்பினேன் என்கிறார்.

சந்தோச வாழ்க்கை

நாம் கஷ்டப்பட்டு உழைத்து வாழ்ந்தால் அதன் மூலம் நமக்கு நிறைய மகிழ்ச்சி கிடைக்கும். நான் நல்ல முறையில் சம்பாதித்து வாழ்கிறேன் என்பதை பலரும் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதை அடைந்துவிட்டேன். நான் சினிமாவில் கண்ணீரை மட்டும்தான் குடித்தேன். அந்த கஷ்ட வாழ்க்கை முடிந்துபோய்விட்டது என்கிறார்.

ரம்யா- விஷ்ணு நம்பூதிரி தம்பதிகளுக்கு வைஷ்ணவி, வரதா என்று இரண்டு மகள்கள். அவர்கள் இருவருக்கும் அம்மா கதாநாயகியாக நடித்த படங்களைவிடவும், அம்மாவின் சமையல்தான் ரொம்ப பிடித்திருக்கிறதாம்.

அமைதியான வாழ்க்கை

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகைக்கு நல்ல முறையில் குடும்ப வாழ்க்கை அமையும் என்று சொல்ல முடியாது. நான் மனஅமைதி நிறைந்த குடும்ப வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்றும் கூறுகிறார்

 

ஜப்பானில் சூறாவளியில் சிக்கிய 'பென்சில்' ஜிவி பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா

ஜப்பானில் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது பென்சில் பட கதாநாயகன் ஜி.வி.பிரகாஷ் உள்பட மொத்த குழுவினரும் கடும் சூறாவளியில் சிக்கிக் கொண்டார்களாம்.

படக்குழுவினர்தான் அவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாகும் முதல் படம் பென்சில். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பு அண்மையில் ஜப்பானில் நடைபெற்றது.

ஜப்பானில் சூறாவளியில் சிக்கிய 'பென்சில்' ஜிவி பிரகாஷ் - ஸ்ரீதிவ்யா

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட நூரி எனும் கடும் சூறாவளியில் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட குழுவினர் சிக்கித் தவித்தது தெரிய வந்துள்ளது.

ஜப்பானில் உள்ள யட்சுகடகே எனும் மலை உச்சியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. படக்குழுவினர் விஞ்ச் மூலம் மலை உச்சிக்கு சென்றனர். அப்போது ஏற்பட்ட கடும் சூறாவளி காரணமாக அப்போது மலை உச்சியில் கடும் குளிர் நிலவியது. பிராண வாயு பற்றாக்குறையால் பலருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாம்.

கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தாயார் கடுமையாக பாதிக்கப்பட்டபோது குழுவில் இருந்த தயாரிப்பாளர் மருத்துவர் என்பதால் உடனடியாக முதலுதவி அளித்துள்ளார். இருப்பினும் மற்றவர்களும் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

படப்பிடிப்பு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், குழுவினர் ஒத்துழைப்புடன் திட்டமிட்டபடி காட்சிகளை எடுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ். படப்பிடிப்பை முடித்துக்கொண்டு இன்று படக்குழுவினர் சென்னை திரும்புகின்றனர்.

 

ரூ.300 கோடி வசூல் செய்த ஹேப்பி நியூ இயர்: படமா அது சுத்த 'நான்சென்ஸ்'- ஜெயா பச்சன் தாக்கு

மும்பை: ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் செய்துள்ளது.

தோழி ஃபரா கான் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸான படம் ஹேப்பி நியூ இயர். படம் ரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்தது. அப்படி என்றால் படம் அவ்வளவு சூப்பரா இருக்கிறதா பாஸ் என்று கேட்டால் இல்லை என்பது தான் பதில். பின்னர் எப்படி இந்த வசூல் சாதனை எல்லாம் என்று ரூம் போட்டு யோசிக்க வேண்டாம்.

ரூ.300 கோடி வசூல் செய்த ஹேப்பி நியூ இயர்: படமா அது சுத்த 'நான்சென்ஸ்'- ஜெயா பச்சன்

விடுமுறை நேரம், ஏகப்பட்ட தியேட்டர்கள் என்று ரிலீஸ் செய்து, ஷாருக்கானை வைத்து கல்லா கட்டிவிட்டனர்.

ரூ.200 கோடி

ஹேப்பி நியூ இயரின் வசூல் ரூ.100ல் இருந்து ரூ.200 கோடி ஆனது. அடடே படம் ரூ.200 கோடி வசூலித்துவிட்டதா என்று நினைக்கையில் அடுத்த அதிசயம் நடந்துவிட்டது.

ரூ.300 கோடி

உலக அளவில் ஹேப்பி நியூ இயர் ரூ.300 கோடியை வசூல் செய்துவிட்டு அடுத்த சாதனையை படைக்க ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜெயா பச்சன்

ஹேப்பி நியூ இயர் படத்தில் என் மகன் அபிஷேக் நடித்தார் என்றே அதை பார்த்தேன். ஆனால் அது சரியான நான்சென்ஸ் படம் என்று ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

உல்டா ராசி

படத்தை விமர்சகர்கள் திட்டித் தீர்த்தாலும், ஏன் ரசிகர்களே நக்கல் அடித்தாலும் படம் ஓடு, ஓடு என்று ஓடி கோடி கோடியாய் வசூல் செய்யும் உல்டா ராசி ஷாருக்கானுடையது. அது ஹேப்பி நியூ இயருக்கும் ஒர்க் அவுட்டாகிவிட்டது.

 

கிட்ணாவில் அமலாபால் இடத்தைப் பிடித்த நடிகை மகிமா…

சமுத்திரகனியின் கிட்ணா படத்தில் நடிகை மகிமா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இது அமலாவுக்காக தயாரான கதாபாத்திரமாம்.

நிமிர்ந்துநில் படத்தை இயக்கிய சமுத்திரக்கனி தற்போது கிட்ணா என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இப்படத்தில் முதலில் அமலாபால் கதாநாயகியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.

நிமிர்ந்து நில் படப்பிடிப்பின்போது ஒருநாள், சமுத்திரக்கனி சொன்ன கிட்ணா கதையைக் கேட்ட அமலாபால், தானே அப்படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார்.

கிட்ணாவில் அமலாபால் இடத்தைப் பிடித்த நடிகை மகிமா…

தற்போது படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் அமலாபால் பெரிய சம்பளம் கேட்டதால் அவரை நீக்கிவிட்டு, தற்போது மகிமாவை ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார் சமுத்திரக்கனி

நாயகி மகிமா

சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா, தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார்.

கிட்ணாவில் டபுள் ஆக்ட்

இந்நிலையில், தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட கிட்ணா என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.

டிப்ஸ் கொடுத்த சமுத்திரகனி

சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம் என்றார் மகிமா.

கீதாரி நாவல் கதை

கிட்ணா? கெடை ஆடு மேய்க்கிறவர்களைப் பற்றிய கதையாம். எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி எழுதின கீதாரி என்ற நாவலுக்கு திரைக்கதை அமைத்து கிட்ணா படத்தை இயக்கி வருகிறாராம் சமுத்திரகனி.

சர்வதேச விருது பெரும்

கீதாரி நாவல் இலக்கிய உலகத்தில் பரவலாக கவனிக்கப்பட்ட கதை. எனவே கீதாரியை மூலக்கதையாகக் கொண்ட கிட்ணா வர்த்தக ரீதியில் மட்டுமல்ல, சர்வதேசஅளவில் பல விருதுகளையும் பெறும் என்கிறார்கள் கிட்ணா படக்குழுவினர்.

அழுத சமுத்திரகனி

நாடோடிகள் படத்தை இயக்கிக்கொண்டிருந்த சமயத்தில் இயக்குனர் சமுத்திரக்கனிக்கு கீதாரி என்கிற நாவல் படிக்க கிடைத்திருக்கிறது. இந்த நாவலை படித்ததும் அவரையறியாமலேயே அழுதுவிட்டாராம்.

நாட்டுக்குள் நடக்கும் அவலம்

அந்த அளவுக்கு மனிதாபிமானம் பற்றி அந்த நாவல் பேசியிருந்ததாம். காட்டுக்குள் இருக்கவேண்டிய மனிதர்கள் நாட்டுக்குள் இருக்கும் அவலத்தை அந்த நாவலில் பொட்டில் அடித்தமாதிரி சொல்லி இருந்தாராம் சு.தமிழ்ச்செல்வி. உடனே அந்த நாவலை படமாக்கவேண்டும் என தோன்றியதால் சு.தமிழ்ச்செல்வியிடம் முறையாக அனுமதி வாங்கி அதைத்தான் இப்போது ‘கிட்ணா' என்கிற பெயரில் படமாக்கி வருகிறார்.

 

2015ல் கன்னட தயாரிப்பாளரை மணக்கும் நடிகை பாவனா?

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கன்னட பட தயாரிப்பாளரான நவீனை அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

16 வயதில் நடிகையானவர் பாவனா. மலையாள படங்களில் நடித்து வந்த அவர் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் கன்னட திரை உலகிற்கு சென்றார். அங்கு அவர் நடித்த ரோமியா என்ற படத்தை தயாரித்தவர்களில் ஒருவரான நவீன் என்பவரை அவர் காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் பாவனாவோ தான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணத்திற்கு முந்தைய மாதம் தான் அவரின் பெயரை தெரிவிப்பேன் என்றும் கூறினார். நவீனும் பாவனா என் தோழி மட்டுமே என்றார்.

2015ல் கன்னட தயாரிப்பாளரை மணக்கும் நடிகை பாவனா?

இதற்கிடையே பாவனா மலையாள நடிகர் அனூப் மேனனை காதலிப்பதாக பேச்சாக கிடந்தது. திருவனந்தபுரம் லாட்ஜ், ஆங்க்ரி பேபீஸ் ஆகிய படங்களில் அனூப் மற்றும் பாவனா சேர்ந்து நடித்தனர். தங்களுக்குள் காதல் இல்லை என்றும், நாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் அவர்கள் கூறியதை யாரும் நம்பவில்லை.

கிசுகிசு அடங்காத நிலையில் அனூப் மேனனோ தான் திரை உலகை சேராத ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாவனாவும், நவீனும் நண்பர்கள் மட்டும் அல்ல அதையும் தாண்டி காதலர்களாகவும் உள்ளது தெரிய வந்துள்ளது. வரும் ஜனவரி மாதம் பாவனாவின் சகோதரரின் திருமணம் முடிந்த பிறகு திருச்சூரில் அவர்களின் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

 

ரஹ்மானால் நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிப் போன லிங்கா ஆடியோ வெளியீடு!

ரஜினியின் லிங்கா பட இசை வெளியீடு வரும் 16-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டது. படத்தின் பாடல்கள் அடங்கிய மாஸ்டர் சிடியை தர ஏஆர் ரஹ்மான் தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேதி தள்ளிப் போனதாக தகவல் கசிந்துள்ளது.

ரஜினியின் லிங்கா ஆடியோ கடந்த தீபாவளி தினத்தன்றே வெளியாகும் என தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியிருந்தார். ஆனால் அன்றைக்கு வெளியாகவில்லை.

ரஹ்மானால் நவம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிப் போன லிங்கா ஆடியோ வெளியீடு!

சமீபத்தில் படத்தின் டீசர் மட்டும் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்தார் ராக்லைன் வெங்கடேஷ். நவம்பர் 9-ம் தேதி சத்யம் அரங்கில் இசை வெளியீடு நடக்கும் என அறிவித்திருந்தார்.

ஆனால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், படத்தின் பாடல்கள் அடங்கிய மாஸ்டர் காப்பி தருவதில் தாமதம் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே இசை வெளியீட்டை மேலும் ஒரு வாரம் தள்ளிப் போட்டுவிட்டனர்.

இப்போது நவம்பர் 16-ம் தேதியை புதிய ஆடியோ ரிலீஸ் தேதியாக அறிவித்துள்ளனர். அதே சத்யம் அரங்கில் நிகழ்ச்சி நடக்கப் போகிறது.

 

வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்!

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் இரண்டாவது படமான வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வருகிறார் நடிகர் தனுஷ்.

கவுதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வை ராஜா வை'. சமீபத்தில் இப்படத்துக்காக யுவன் இசையில் தனுஷ் எழுதிய பாடலை இளையராஜா பாடியிருக்கிறார்.

டாப்ஸி, விவேக், டேனியல் பாலாஜி, மனோபாலா ஆகியோர் நடிக்கும் 'வை ராஜா வை' படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

வை ராஜா வை படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ்!

இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது குறித்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா.

''வை ராஜா வை' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட தனுஷூக்கு நன்றி. இந்தக் காட்சியைப் படமாக்கும் போது கண்டிப்பாக உற்சாகமாக இருக்கும்,'' என தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.

தனது முதல் படமான 3-ல் தனுஷை நாயகனாக வைத்து இயக்கினார் ஐஸ்வர்யா. அந்தப் படம் முடிந்து வெளியான பிறகு, இனி மனைவியின் இயக்கத்தில் நடிக்க மாட்டேன் என்று அறிவித்திருந்தார் தனுஷ்.

ஆனால் காலம் அவர் மனதை மாற்றியுள்ளது. ஐஸ்வர்யா அடுத்து இயக்கும் படத்தை தனுஷ் தயாரித்து நடிப்பார் என்று கூறப்படுகிறது.

 

சினிமாவில் ஆண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்! - படவிழாவில் இயக்குநர் பேச்சு

நாட்டில் பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்; சினிமாவில் ஆண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். குறிப்பாக இயக்குநர்கள் பலர் இந்த மாதிரி கற்பழிப்புக்கு உள்ளாகிறார்கள் என இயக்குநர் ஒருவர் படவிழாவில் ஆவேசப்பட்டார்.

8 எண்டர் டெய்ன்மெண்ட் சார்பில் பி.அருமைச்சந்திரன் தயாரித்துள்ள படம் ‘ஓம் சாந்தி ஓம்'.

இசை வெளியீடு

ஸ்ரீகாந்த், நீலம்உபாத்யாய், நரேன், வினோதினி நடித்துள்ளார்கள். அறிமுக இயக்குநர் டி. சூர்யபிரபாகர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது.

சினிமாவில் ஆண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்! - படவிழாவில் இயக்குநர் பேச்சு

இயக்குநர்கள் எஸ்.ஜே.சூர்யா, ‘தயா' செந்தில்குமார்,சுப்ரமணிய சிவா, ராஜேஷ்.எம் வெளியிட நடிகர் பரத் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், எஸ்.,ஆர்.பிரபு ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

புதியவன்

தயாரிப்பாளர் அருமைச் சந்திரன் பேசும்போது, "நான் சினிமாவுக்குப் புதியவன். அனுபவம் இல்லாததால் நிறைய இழப்புகளுக்குப்பின் பாடம் கற்றுக் கொண்டேன்.

எந்தத் தொழில் செய்ய வேண்டும் என்றாலும் அந்தத் தொழில் பற்றிய அனுபவமும், தொழில் நுட்பமும் இருந்தால் போதும். ஆனால் சினிமா எடுக்க இவை மட்டுமல்ல அரசியலும் வேண்டும். வேறுபலவும் தேவை. இதுதான் சினிமா.

அதுக்கெல்லாம் ஞானம் வேணும்

பணம் உள்ள எல்லாரும் சினிமா எடுக்க முடியாது. இந்தப் படத்தின் மூலம் நிறைய ஞானம் பெற்றேன்.இன்று இந்தத் தொழிலில் நம்பிக்கை குறைவாக இருக்கும் சூழல் உள்ளது.

கடலில் போட்டதை கடலில்தான் தேடவேண்டும் என்பதைப் போல நான் சினிமாவில் விட்டதை சினிமாவில்தான் தேட வேண்டும். சினிமாவில் தேடுவேன். வெற்றி பெறுவேன்," என்றார்.

போராட்டம்

நிகழ்ச்சியில் படத்தை இயக்கிய சூர்யபிரபாகரின் குருநாதர் என்கிற வகையில் இயக்குநர் ‘தயா' செந்தில்குமார் பேசினார். அவர் பேசும் போது, "நானும் 14 படங்களில் பலவித இயக்குநர் களிடம் பணியாற்றியிருக்கிறேன். புதியவர்கள் 7பேரிடமும் அனுபவசாலிகள் 7 பேருடனும் பணிபுரிந்து இருக்கிறேன். இரண்டு வகை இயக்குநர்களும் போராடியதைப் பார்த்திருக்கிறேன்.

பல்வேறு போராட்டங்களுக்குப் பின் அவர்கள் நினைத்ததைத் தவிர எல்லாமே படத்தில் வந்திருக்கும்.

இதுவும் கற்பழிப்புதான்

நாட்டில் பெண்கள் கற்பழிக்கப் படுவதாக செய்திகளில் பார்க்கிறோம். அது வருத்தப்படவேண்டிய விஷயம்.கண்டிக்கப் படவேண்டிய விஷயம்.நாட்டில் பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள்; சினிமாவில் ஆண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், இப்படி சினிமாவில் கற்பழிக்கப்பட்ட, கற்பழிக்கப்படுகிற இயக்குநர்கள் பலர்.

உயிர்த்தெழுவார்கள்

ஒவ்வொரு படத்திலும் அதுவும் முதல் படத்தில் இது கண்டிப்பாக நடக்கும். இதை எல்லா இயக்குநர்களும் அனுபவித்திருப்பார்கள். ஒரு படம் எடுத்து முடிந்ததும் டைரக்டரும் தயாரிப்பாளரும் சிலுவையில் அறையப்படுவார்கள். மறுபடியும் உயிர்த்தெழுவார்கள். மீண்டும் உயிர்த்தெழுந்துதான் இரண்டாவது படத்தையோ அடுத்த படத்தையோ எடுக்க வேண்டும். அவ்வளவு வலிகளையும் வேதனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்தப் படத்தை இயக்கும் சூர்யபிரபாகர் என்னுடன் பணியாற்றியவர். கடுமையான உழைப்பாளி. படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்," என்றார்.

எஸ்ஜே சூர்யா

எஸ்.ஜே.சூர்யா பேசும் போது, "தயாரிப்பு பெரிய வேலையல்ல. 2 மணி நேரத்து வேலைதான். படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் 1 மணி நேரம் என்ன செய்யப் போகிறோம், என்ன எடுக்கப் போகிறோம்என்று கணக்கு பார்க்க வேண்டும்.படப்பிடிப்பு ஆரம்பித்த பின்பு 1 மணி நேரம், அன்று என்ன செய்தோம், என்ன எடுத்தோம். என்று கணக்கு பார்க்க வேண்டும். இப்படி கணக்குப் பார்ப்பதாக நடித்தாலே போதும் 10 கோடியில் எடுப்பதை 8 கோடியில் எடுக்க முடியும். உண்மையிலேயே கணக்கு பார்த்தால் 6 கோடியில் எடுக்க முடியும்,"என்றார்.

ஸ்ரீகாந்த்

நடிகர் ஸ்ரீகாந்த் பேசும் போது, "ஒவ்வொரு நடிகரும் ஒரு படம் சொந்தமாகத் தயாரித்து அனுபவம் பெற வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளரின் வலியும் வேதனையும் புரியும்," என்றார்.

இரண்டு அம்மாக்கள்

சூர்யபிரபாகர் பேசும் போது, "எனக்கு இரண்டு அம்மாக்கள். ஒன்று என்னைக் கருவில் சுமந்த என் அம்மா ஆண்டாள். இன்னொருவர் என் கதைக் கருவை படமாக்கிய தயாரிப்பாளர் அருமைச் சந்திரன்," என்று நெகிழ்ந்தார்.

 

டாக்டரா, தொழில் அதிபரா?: நடிகைக்காக காத்திருக்கும் மாப்பிள்ளைகள்

சென்னை: உயர்ந்த நடிகைக்கு அவர் உயரத்திற்கேற்ற படித்த மாப்பிள்ளைகளை பார்த்து வைத்துள்ளார்களாம் குடும்பத்தார்.

உயர்ந்த நடிகைக்கு வயதாவதால் விரைவில் அவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு தான் மறுவேலை என்று உள்ளனர் அவரது குடும்பத்தினர். அம்மணியோ தான் ஒப்புக் கொண்ட படங்களை நடித்து முடித்துக் கொடுத்த பிறகே மணமேடை ஏறுவேன் என்கிறார்.

நீ பாட்டுக்கு படங்களில் நடித்துக் கொண்டிரு அந்த சமயத்தில் நாங்கள் மாப்பிள்ளையை தேடுகிறோம் என்றனர் குடும்பத்தார். அவர்கள் நடிகையின் உயரத்திற்கேற்ற உசரமான மாப்பிள்ளைகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நடிகைக்கு தொழில் அதிபர், டாக்டர், என்ஜினியர் மாப்பிள்ளைகளை பார்த்து வைத்துள்ளார்களாம். அம்மணி பார்த்து அவர்களில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்ய வேண்டியது தான் பாக்கி.

நடிகை தற்போது தமிழில் இரண்டு படங்களிலும், தெலுங்கில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தனை படங்களையும் முடித்த பிறகே அவருக்கு டும் டும் டும்.

 

பழி வாங்கப் பாய்ந்தோடி வரும்... காத்தம்மா!

சென்னை: போகன் வில்லா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில், பிரபல ஒளிப்பதிவாளர் எம்.டி.சுகுமார் இயக்கும் படம் ‘காத்தம்மா'.

இப்படத்தில் பிஜு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஆதிரா நடிக்கிறார். மற்றும் அசோக்ராஜ், சிவாஜிமல்லிகா, கோவைசரளா, அலி, ரவீந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜில்லன் இசையமைக்க , பரிதி பாடல்களை எழுதுகிறார்.

பழி வாங்கப் பாய்ந்தோடி வரும்... காத்தம்மா!

ஒளிப்பதிவாளரின் இயக்கத்தில்...

காத்தம்மாவிற்கு ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எம்.டி.சுகுமார். இவர் மலையாளம், தமிழ் உட்பட பல மொழிகளில் சுமார் 50 படங்களுக்கும் மேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஆண்களைச் சுற்றிய கதைக்களம்...

தனது காத்தம்மா படம் குறித்து சுகுமார் கூறுகையில், ‘நமது பெரும்பாலான படங்களில் பாதிக்கப்பட்ட ஆண்கள் வெகுண்டெழுந்து காரணமானவர்களை கொள்வது, பழிவாங்குவது தான் கதைகளாக்கப்பட்டுள்ளது.

பழி வாங்கும் கதை...

இந்த படத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணான " காத்தம்மா " எப்படி பழிவாங்கினாள் என்பது கதையாக்கப்பட்டுள்ளது.

பயிற்சிகள் பெற்ற ஆதிரா...

இந்த கதைக்காக புதுமுகமான ஆதிரா பல பயிற்சிகளை எடுத்து தன்னை தயார் படுத்திக் கொண்டார் அதன் பிறகுதான் நடிக்கவே ஆரம்பித்தார்.

கமர்ஷியல் படம்...

இந்த படத்தின் கதை எல்லோராலும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது. கம்பம், தேனி, திண்டுக்கல், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.