கிசு கிசு - ஹீரோயினுக்கு வீடு பார்க்கும் ஹீரோ!

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோயினுக்கு வீடு பார்க்கும் ஹீரோ!

7/26/2011 2:43:37 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

களவாணி ஹீரோ நடிக்க¤ற படம், ஹாலிவுட் தழுவல்னு தகவல் கிளம்பியிருக்கு. இதனால இயக்கம் அதிர்ச்சி ஆயிட்டாராம்… ஆயிட்டாராம்… 'நம்ம நாட்டுல போட்ட சட்டத்தை மையமா வச்சித்தான் கதையை எழுதியிருக்கேன். இத தழுவல்னு சொல்லி புரளி கிளப்புறாங்க. அது தப்புன்னு பாக்கிறவங்ககிட்டயெல்லாம் சொல்லி புலம்புறாராம்… புலம்புறாராம்…

மதராச படத¢துல நடிச்ச இங்கிலீஷ் ஹீரோயினுக்கு மலையாள வாய்ப்பு கிடைச்சிருக்கு. இன்னொரு தமிழ் படத்துலேயும் நடிக்கப்போறாராம். இதனால சென்னையில வீடு எடுத்து தங்குறதுக்கு நடிகை முடிவு பண்ணியிருக்காராம்… பண்ணியிருக்காராம்…  அவருக்காக வீடு பார்க்கிற வேலையில ஐகாட் ஹீரோ பிசியா இருக்காராம்… இருக்காராம்…

ரீம நடிகைக்கு தமிழ்ல படங்கள் இல்லை. இருந்தாலும் அடிக்கடி சென்னைக்கு வந்து நைட் பார்ட்டிகள்ல கலந்துக்கிறாராம்… கலந்துக்கிறாராம்… சமீபத்துல ஒரு பார்ட்டியில கலந்துகிட்ட நடிகை, தன்னோட நட்பான இயக்குனருங்ககிட்ட புலம்பித் தீர்த்தாராம். ‘உங்க படங்களுக்கு புது ஹீரோயின்களை தேடித்தான் போறீங்க. நானெல்லாம் இருக்கிறது தெரியமாட்டேங்குதே’ன்னு சலிச்சிக்கிட்டாராம்…
சலிச்சிக்கிட்டாராம்…

 

சார்மியை நீக்க சொல்கிறார் ஓபராய்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
சார்மியை நீக்க சொல்கிறார் ஓபராய்

7/26/2011 2:42:53 PM

கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு சென்று ஒரு ரவுண்ட் வந்தார் சார்மி. சமீபத்தில் 'புட்டா ஹோகா தேரா பாப்' படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அடுத்து 'ஜில்லா காஸியாபாத்Õ என்ற படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கிடையில் அப்படத்தில் அவர் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சய்தத், விவேக் ஓபராய், அர்ஷத் வர்சி என 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இதில் சார்மிக்கு எதிராக பிரச்னை கிளப்புகிறாராம் விவேக் ஓபராய். 'சார்மியுடன் நான் சேர்ந்து நடிக்க மாட்டேன். அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யுங்கள்' என்று இயக்குனரிடம் கூறியதாக தெரிகிறது. இது பற்றி சார்மியிடம் கேட்டபோது, ''ஜில்லா காஸியாபாத் படத்தில் நடிப்பேனா, மாட்டேனா? என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. விவேக் ஓபராய் என்னை நீக்க சொல்லி கேட்கிறாரா என்பதும் தெரியாது.  எனக்கு இந்த படம் கிடைக்க வேண்டும் என எழுதியிருந்தால் யாராலும் அதை தடுக்க முடியாது" என்றார்.




 

ஆபாச பாட்டு... அமீர் கானுக்கு நோட்டீஸ்!


படு ஆபாசமான, கெட்ட வார்த்தைகள் கொண்ட பாடல் வரிகள் அமீர் கானின் சொந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளதால், அதை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தி நடிகர் அமீர்கான் 'டெல்லி பெல்லி' என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் ஒரு பாடல் காட்சியில் நடித்துள்ளார். இந்த பாடல் வரிகள் ஆபாசமாகவும் அறுவறுப்பாகவும் உள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

எனவே பாடலை தடை செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மிகக் கேவலமான இந்தப் பாட்டை தடை செய்ய வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

நீதிமன்றம் இந்த மனு மீது விசாரணை நடத்தியது. இதில் விளக்கம் அளிக்கும்படி அமீர்கானுக்கு நோட்டீஸ் அனுப்பி கோர்ட்டு உத்தரவிட்டது. தணிக்கை குழுவுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. அமீர்கான் இரண்டு வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
 

சரிந்த செல்வாக்கு, தகர்ந்த கனவுகள்... தவிப்பில் மம்முட்டி, மோகன்லால்!


வருமானவரி சோதனையால் மம்முட்டி, மோகன்லால் செல்வாக்கு கேரளாவில் சரிந்து விட்டது. மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த நல்ல அபிப்பிராயம் தகர்ந்து விட்டதாக கேரள பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

மேலும் மோகன்லாலுக்கு ராணுவத்தில் வழங்கப்பட்ட கவுரவ பதவியை திரும்பப் பெறுமாறு எழுத்தாளர் சுகுமாறன் ஆழிக்கோடு வலியுறுத்தியுள்ளார். மம்முட்டிக்கு வழங்கப்படவிருந்த ராஜ்யசபா எம்பி பதவிக்கும் இந்த சோதனை வேட்டு வைத்துள்ளது.

மம்முட்டியும் மோகன்லாலும் மலையாள திரையுலகில் முதல் நிலை நடிகர்கள். ரசிகர்களும் ஏராளம். பல ஆண்டுகளாக இவர்கள் மலையாள திரையுலகை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் இவர்கள் சம்பாதித்த பணத்தை வேறு தொழில்களில் முதலீடு செய்ய துவங்கினர். மோகன்லால் ரியல் எஸ்டேட்டில் குதித்தார். அபார்ட்மெண்ட்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களை கட்டி வாடகைக்கு விட்டார். மம்முட்டியும் நிலத்தில் முதலீடு செய்தார். இதனால் வருமானம் குவிந்தது.

இதில் பொறாமையடைந்த சக நடிகர்கள் சிலர் வருமன வரித்துறைக்கு புகார்களை அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து மம்முட்டி, மோகன்லால் சொத்து விவரங்களை வருமான வரித்துறை ரகசியமாக வேவு பார்த்து அதிரடி வேட்டையில் இறங்கியது.

இந்த சோதனையில் லட்சக் கணக்கில் ரொக்கம், நகைகள், சொத்து ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இருவரிடமும் பலமணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதன்மூலம் மம்முட்டி, மோகன்லால் செல்வாக்கு கேரளாவில் சரிந்து விட்டதாக அங்குள்ள திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.

மம்முட்டி, மோகன்லாலுக்கு எதிரான பிரசாரத்திலும் சிலர் இறங்கியுள்ளனர். மோகன்லால் வீட்டில் யானை தந்தம் பிடிபட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. அதனை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் சுகுமார் ஆழிக்கோடு இந்தக் கோரிக்கையை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ கே அந்தோணிக்கு வைத்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கேரள அணியை ஏலம் எடுக்க மோகன்லால் தயாராகி வந்தார். இந்த வருமான வரி சோதனை காரணமாக அது நிறைவேறுமா என்பதில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் மம்முட்டியின் கலைச் சேவையை பாராட்டி ராஜ்யசபா எம்.பி.யாக்கவும் ஏற்பாடுகள் நடந்தன. இப்போது அதுவும் கேள்விக்குறியாகிவிட்டது.
 

மங்காத்தா சர்ப்ரைஸ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மங்காத்தா சர்ப்ரைஸ்

7/26/2011 12:32:45 PM

மங்காத்தா எப்போது வெளியாகும் என்பது முடிவாகவில்லை. ஆனால் அதன் முடிவு எப்படி இருக்கும் என்று இரண்டு தகவல்கள். ஒன்று, ஜார்‌ஜ் குளூனியின் நரைத்த முடி கெட்டப்பில் படம் முழுக்க வரும் அ‌ஜீத், படத்தின் இறுதியில் ஸ்மார்ட் கெட்டப்பில் நரைமுடியில்லாமல் தோன்றுகிறார். இரண்டாவது இன்னும் புதிது. ஜாக்கிசான் படங்களில் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸியமான விஷயங்களை தொகுத்து அளிப்பார்களே... அதேமாதி‌ரி மங்காத்தா படப்பிடிப்பில் நடந்தவற்றை தொகுத்து அளிக்கிறாராம் வெங்கட்பிரபு.




 

விஸ்வரூபத்தில் ப்‌ரியா ஆனந்த்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
விஸ்வரூபத்தில் ப்‌ரியா ஆனந்த்?

7/26/2011 12:34:56 PM

விஸ்வரூபம் படத்தின் கதை, கதாநாயகி குறித்த விஷயங்கள் மர்மமாகவே உள்ளது. சோனாக்‌சி சின்கா படத்திலிருந்து விலகிவிட்டது பழைய கதை. இன்னொரு நாயகி இஷா ஷர்வானியும் இப்போது இல்லை என்கிறார்கள். சமீபத்தில் நூற்றெண்பது படத்தின் நாயகி ப்‌ரியா ஆனந்தை வைத்து மேக்கப் டெஸ்ட் நடத்தியிருக்கிறார்கள். இஷா நடிக்கயிருந்த வேடத்துக்காகதான் இந்த மேக்கப் டெஸ்ட் என்று கூறப்படுகிறது. மேக்கப் டெஸ்டின் முடிவு என்ன என்பது இன்னும் தெ‌ரியவில்லை.




 

இந்த வருட தேசிய விருது விஷாலுக்கா, விக்ரமுக்கா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இந்த வருட தேசிய விருது விஷாலுக்கா, விக்ரமுக்கா?

7/26/2011 12:29:59 PM

சென்ற வருடம் தமிழ் சினிமா அதிக தேசிய விருதுகளை தட்டிச் சென்றது. அதே போல் இந்த வருடம் தொடக்க முதல் அதிக தேசிய விருதுகளை வாங்க தயாராகி வருகிறது. விஜய்யின் 'தெய்வத்திருமகள்', பாலாவின் 'அவன் இவன்' போன்ற படங்கள் இப்பொழுதே விருது பட்டியலில் இடம்பெறுவதற்கு காத்துக்கொண்டிருக்கிறது. அக்ஷன் படங்களை மட்டும் நம்பி நடித்துக் கொண்டிருந்த விஷால், 'அவன் இவன்' படத்தில் திருநங்கையாக நடித்து அசத்தினார். அதே போல் கமர்சியல் படங்களை விட்டு 'தெய்வத்திருமகள்' படத்தில் மனநோயாளியாக நடித்த விக்ரமிக் நடிப்பும் குறைந்தது அல்ல. இந்த வருடம் தேசிய விருதுக்கான சிறந்த நடிகர் பட்டியலில் இவர்கள் (விஷால், விக்ரம்) பெயரும் இடம்பெறலாம் என தெரிகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கம் என்பதால், தமிழ்சினிமாவிலிருந்து இன்னும் பல நடிகர்கள், நடிகைகள் மற்றும் டெக்னிஷியங்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.




 

தாமதமாகும் மங்காத்தா ஆடியோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தாமதமாகும் மங்காத்தா ஆடியோ

7/26/2011 12:07:30 PM

மங்காத்தாவில் மொத்தம் 9 பாடல்கள். இதில் ஒரு பாடலை விளம்பரத்துக்காக ஏற்கனவே வெளியிட்டுள்ள யுவன், மங்காத்தா படத்தின் ஆடியோ தாமதமாவதற்கு நான்தான் காரணம் என்று தெ‌ரிவித்துள்ளார். மீதமுள்ள எட்டுப் பாடல்களில் ஒரு பாடல் மட்டும் இன்னும் தயாராகவில்லை. பலமுறை டியூன் போட்டும் குறிப்பிட்ட பாடல் மட்டும் திருப்திகரமாக வரவில்லை என யுவன் தெ‌ரிவித்துள்ளார். மங்காத்தா அ‌ஜீத்தின் 50வது படம் என்பதால் படத்தின் குவாலிட்டியில் எந்த காம்ப்ரமைஸும் செய்வதாக யாருக்கும் எண்ணமில்லை. லேட்டாக வந்தாலும் சுவீட்டாக இருக்க வேண்டும் என்பதே அனைவ‌ரின் எண்ணமாக இருப்பதால் தாமதத்தை ஒரு தடையாக யாரும் கருதவில்லை.

 

பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடிவீரனும்"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பாரதிராஜாவின் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்'

7/26/2011 12:01:37 PM

பல வருட உழைப்பை அவர் இயக்க போகும் 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்தின் திரைக்கதைக்காக அவர் செலவிட்டுள்ள பாரதிராஜா, இன்றைய இளைய தலைமுறை இயக்குனர்களுக்கு இந்த படம் சவாலாக இருக்கும் என்று அவரே தெ‌ரிவித்திருப்பதால் அதில் நடிக்க ஒவ்வொரு நடிகருக்குமே ஆவல் உள்ளது. படத்தின் பெயரை வெளியிட்ட பாரதிராஜா இதுவரை நடிக்கப் போவது யார் என்று சொல்லவில்லை. தனது சொந்த பூமியில் இந்தப் படத்தை இமயம் இயக்குகிறார். படத்துக்காக லொகேஷன்களை அவர் தேர்வு செய்துவிட்டதாக தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.




 

கோடிகளை நம்பியல்ல... தாடிகளை நம்பி எடுக்கும் படம்! - டி ராஜேந்தர்


என்னுடைய அடுத்த படமான ஒருதலைக் காதல் கோடிகளை நம்பி எடுக்கப்படும் படமல்ல, காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கப்போகும் படம், என்கிறார் டி ராஜேந்தர்.

மேலும் அடுத்த ஆண்டு தான் இயக்கும் படத்தில் அவரது இளைய மகன் குறளரசன் கதாநாயகனாக நடிக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறையில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்துக்கு திரைப்பட இயக்குனரும், லட்சிய தி.மு.க. தலைவருமான விஜய டி. ராஜேந்தர் வந்தார். திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நான் இயக்கி கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு தலைக்காதல்' சினிமா படப்பிடிப்பு நடத்த கொல்லிமலை முதல் இமயமலை வரை சென்று வந்தேன். இமயமலை சென்ற போது திருக்கயிலாய யாத்திரை மேற்கொள்ள நினைத்தேன். அதற்கு முன்பாக எங்கள் திருக்கயிலாய பரம்பரை, எங்கள் மண்ணின் குரு திருவாவடுதுறை ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற வந்தேன்.

ஒரு தலைக்காதல் படம் கோடிகளை நம்பி எடுக்கும் படம் அல்ல. காதலில் தோற்ற தாடிகளை நம்பி எடுக்கும் படம். இந்த படம் வெளிப்புற படப்பிடிப்பில் தான் உருவாக போகிறது.

எனது மகள் இலக்கியாவுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து ஜாதக பொருத்தமுள்ள மணமகனை தேடி வருகிறேன். இலக்கியா திருமணம் முடிந்தவுடன் மூத்த மகன் நடிகர் சிலம்பரசனுக்கு திருமணம் நடைபெறும்.

அடுத்த ஆண்டு நான் இயக்க உள்ள படத்தில் எனது இளைய மகன் குறளரசனை கதாநாயகனாக அறிமுகப்படுத்த உள்ளேன்.

பதவிக்காக வாழ்வதா...

பொதுவாழ்க்கையில் என்னைப் போல தூய்மையான ஒருவனை காட்ட முடியுமா... ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அமைச்சர் பதவிக்கு நிகரான தமிழ்நாடு சிறுசேமிப்பு துறை துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.

இதைப்போல அன்றைய ஆட்சியாளர்கள் பதவியை துறக்க முன்வந்திருந்தால் நிச்சயமாக ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கலாம்.

தமிழ் உணர்வு மங்கிவிட்டதா? பின்தங்கிவிட்டதா? என்ற கேள்வி தான் என் மனதில் எழுந்துள்ளது. பதவிக்காக மட்டும் வாழக்கூடாது. மக்கள் பணி மட்டுமே எங்கள் பணியாகும்," என்றார்.
 

காதலன் நீல் நிதின் முகேஷைப் பிரிந்தார் அசின்!


காதலன் நீல் நிதின் முகேஷைப் பிரிந்துவிட்டார் நடிகை அசின். இதனை உறுதிப்படுத்தும் வகையில், 'எல்லாம் ஓவர்... இனி என்னுடன் பேசாதே, எஸ்எஸ்எம் அனுப்பாதே' என்று முகேஷுக்கு தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ். இவருக்கும், அசினுக்கும் காதல் என மும்பை பட உலகில் கிசு கிசுகள் பரவின. ஏற்கனவே அமீர்கான், சல்மான்கானுடன் இணைத்து பேசப்பட்டார். அவர்களிடம் நட்பாகத்தான் பழகுகிறேன் என்று மறுத்தார். முகேஷும் மறுத்து வந்தார்.

ஆனால் நீல்நிதின் முகேசுடன் அசின் ரகசிய தொடர்பு வைத்திருந்ததை மும்பை பத்திரிகைகள் வெளியிட்டன. இருவரும் ஓட்டல்களில் அடிக்கடி சந்திப்பதாகவும், வெளியூர்களுக்கு சேர்ந்து பயணிப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது.

இந்த நிலையில் இருவருக்கும் தற்போது திடீர் தகராறு ஏற்பட்டு உள்ளது. தொடர்பை முறித்துக் கொள்வதாகவும், இனிமேல் என்னுடன் பேச வேண்டாம் என்றும் நீல் நிதின் முகேசுக்கு அசின் எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார்.

நீல் நிதின் முகேஷ் செல்போனில் அசினுடன் பேச பலதடவை முயற்சித்தும் அவர் போனை எடுக்கவில்லையாம். பிரிவுக்கு காரணம் தெரியவில்லை என்கிறது மும்பை திரையுலகம்.
 

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் ரவிச்சந்திரன் மரணம்!

7/26/2011 10:03:52 AM

உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் நேற்று மாலை இறைவனிடம் சேர்ந்தார். தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 70 களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் ரவிச்சந்திரன். திருச்சியில் புனித ஜோசப் கல்லூரியில் படித்து பட்டம் பெற்ற இவரை இயக்குனர் ஸ்ரீதர் 1964-ல் காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். வெள்ளி விழா நடிகர் என்று பாராட்டப்படும் அளவுக்கு ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படம் 'ஆடு புலி'.நடிகர் ரவிச்சந்திரனுக்கு மனைவி விமலா, மகன்கள் அம்சவர்த்தன் பாலாஜி, ஜார்ஜ், மகள் லாவண்யா உள்ளனர். ரவிச்சந்திரனின் உடல் தியாகராய நகரில் சாய் மஹால் திருமண மண்டபத்தில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரவிச்சந்திரன் மரணம்!




 

'போர்க்குற்றவாளி' ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?


சென்னை: இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மறுத்தாரா விஜய்?

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், 'இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை,' என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம்.

உடனே கோபமாக, 'நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார் வன்னியரசு.

விஜய் விளக்கம்

ஆனால் இதனை விஜய் தரப்பில் முழுவதுமாக மறுத்துள்ளனர். 'வன்னியரசு சொல்வதில் உண்மையில்லை. இதுகுறித்து நடிகர் விஜய்யே விளக்கம் தெரிவிப்பார்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
 

ரவிச்சந்திரன் மறைவை நம்ப முடியவில்லை! -கே ஆர் விஜயா, ராஜஸ்ரீ உருக்கம்


சென்னை: ரவிச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை நம்ப முடியவில்லை, என்று அவருடன் நடித்த நடிகைகள், பழகிய பிரமுகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் நேற்று இரவு மறைந்தார். அவரது மறைவுக்கு கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த ரவிச்சந்திரன் நடிப்பு, நடனம், சண்டைக் காட்சி ஆகியவற்றில் படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கவர்ந்தார். 1960-களில் தமிழ் சினிமாவின் ரொமான்டிக் ஹீரோவாக வலம் வந்த ரவிச்சந்திரனுக்கு ரசிகர்களை விட ரசிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

ஆண்டுதோறும் அவர் நடித்த பத்து படங்கள் வரை வெளியாகும். அனைத்துமே வெற்றிப் படங்களாக அமைந்துவிடும். எனவே தயாரிப்பாளர்கள் அவரது கால்ஷீட்டுக்காக வரிசையில் நின்றனர். நடிப்பதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, "மானசீக காதல்', "மந்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். கன்னடத்திலும் இரண்டு படங்களை இயக்கியுள்ளார்.

ராஜ்ஸ்ரீ

ரவிச்சந்திரனின் மறைவு குறித்து அவரது முதல் படத்தில் நாயகியாக நடித்த ராஜஸ்ரீ கூறுகையில், "நான் நடித்த முதல் படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தில் நான்தான் அவருக்கு ஜோடி. நான் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையானதால் படப்பிடிப்பின்போது என்னை சீனியர் நடிகை என்று மிகுந்த மரியாதை கொடுப்பார். ஆனால் அவரைப் பார்த்தால் அறிமுக நடிகராகவே தெரியாது. தான் இருக்கும் இடத்தை எப்போதும் கலகலப்பாக வைத்திருப்பார். அவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிந்து மூன்று நாள்களுக்கு முன்பு அவரை மருத்துவமனையில் பார்த்தேன். அவருடைய மறைவை நம்ப முடியவில்லை. அவருடைய குடும்பத்தாருக்கு என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.

கே ஆர் விஜயா

ரவிச்சந்திரன் நடித்த கடைசி படமான ஆடுபுலியில் அவருக்கு ஜோடியாக கேஆர் விஜயா நடித்திருந்தார். அவர் கூறுகையில், "மனசு மிகவும் கஷ்டமாக உள்ளது. நேற்றுதான் அவரைப் பார்த்தது போலிருக்கிறது. அதற்குள் மறைந்துவிட்டார். மிக இனிமையான மனிதர் ரவிச்சந்திரன். நாங்கள் இருவரும் ஆடுபுலியில் நடித்தபோது, பழைய நாட்களைப் பற்றி அடிக்கடி பேசிக் கொள்வோம். ரவிச்சந்திரன் மறைவு, எங்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது," என்றார்.

காதலிக்க நேரமில்லை வசனகர்த்தா சித்ராலயா கோபு கூறுகையில், "காதலிக்க நேரமில்லை' படத்துக்காக ஸ்ரீதர் ஏற்கெனவே நான்கு பேரைத் தேர்வு செய்து வைத்திருந்தார். ஆனால் ரவியைப் பார்த்தவுடன் "இவர்தான் நம் ஹீரோ'' என முடிவுசெய்துவிட்டார். ஆனாலும் ரவிச்சந்திரனிடம் அதைப்பற்றி ஏதும் கூறாமல் இருந்தார். அதனால் படப்பிடிப்பு தொடங்கும் நாள் வரை ரவிச்சந்திரன் பதற்றமாகத்தான் இருந்தார். பிறகு ஸ்ரீதர் அவரை படப்பிடிப்புக்கு அழைத்தவுடன்தான் சகஜ நிலைக்குத் திரும்பினார். அனைத்து இயக்குநர்களிடமும் மிகுந்த மரியாதை கொண்டவர். அவருடைய மறைவு வேதனை தருவதாக உள்ளது", என்றார்.

இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்

"காதலிக்க நேரமில்லை' படத்தில் நான் இணை இயக்குநர். ரவிச்சந்திரனுக்கு முதல் படம் என்பதால் அவரிடம் சகஜமாகப் பேசி, நடிப்பை சொல்லித் தாருங்கள் என ஸ்ரீதர் கூறினார். அதனால் அவரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு இப்போது வரை தொடர்ந்துகொண்டிருந்தது. ரவிச்சந்திரனைப் போன்ற குரு பக்தி உடையவர்களை சினிமாவுலகில் பார்ப்பது கஷ்டம். ஒரு நல்ல நண்பனை இழந்த சோகத்தில் இருக்கிறேன்," என்றார்.
 

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மரணம்: இன்று உடல் தகனம்!


சென்னை: சிறுநீரகங்கள் முற்றாக செயலிழந்து சிகிச்சைப் பெற்று வந்த பழம்பெரும் கதாநாயகன் ரவிச்சந்திரன் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவருடைய உடல் தகனம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

காதலிக்கநேரமில்லை என்ற சூப்பர் ஹிட் படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ஸ்ரீதரால் அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன்.

தொடர்ந்து நான், குமரிப்பெண், அதே கண்கள், மூன்றெழுத்து, பாக்தாத்பேரழகி, அன்றுகண்ட முகம் உள்பட 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக நடித்த படம் சமீபத்தில் வெளியான ஆடுபுலி. அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயா நடித்திருந்தார்.

வெள்ளிவிழா கதாநாயகன் என்று அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தார். ஊமை விழிகள் படத்தில் இவருடைய வில்லன் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

சிறுநீரகக் கோளாறு

71 வயதான ரவிச்சந்திரனுக்கு நீண்டகாலமாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதற்காக அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவர் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. நுரையீரலில் நீர்க் கோர்ப்பு மற்றும் மூச்சுத்திணறல் நோய்களால் பாதிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கோமா நிலையை அடைந்தார்.

கடைசி வரை நினைவு திரும்பாமலேயே நேற்று இரவு 8.35 மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராயநகரில் உள்ள அவருக்கு சொந்தமான சாய் மகால் என்ற திருமண மண்டபத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

ஏராளமான பொது மக்களும், திரை உலக பிரமுகர்களும் ரவிச்சந்திரன் உடலுக்கு மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ரவிச்சந்திரனின் உடல் தகனம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின்சார மயானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு விமலா என்ற மனைவியும், பாலாஜி, அம்சவர்தன் என்ற 2 மகன்களும், லாவண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். இவர்களில் அம்சவரதன் சில படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். இவரை நாயகனாக வைத்து ரவிச்சந்திரன் இரு படங்களை இயக்கினார்.

வெள்ளிவிழா நாயகன்

மறைந்த நடிகர் ரவிச்சந்திரனின் சொந்த பெயர் ராமன். அவருடைய சொந்த ஊர் திருச்சி. ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம் மூலம் இயக்குநர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லை படத்துக்குப் பின் நிற்க நேரமில்லை என்று சொல்லும் அளவுக்கு பிஸியான நாயகனாகிவிட்டார் ரவிச்சந்திரன்.

ஸ்ரீதரின் சொந்த படநிறுவனமான சித்ராலாயாவுக்காக 2 வருடத்திற்கு ரவிச்சந்திரனை மாதம் ரூ.500 சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தார். 2 வருடங்களில் ரவிச்சந்திரன் பிரபலமானதும் சித்ராலாயா நிறுவனத்தில் இருந்து விலகி மற்ற நிறுவன படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பிறகு அவர் படிப்படியாக உயர்ந்து வெள்ளிவிழா கதாநாயகன் என புகழப்பட்டார்.

அறுபதுகளின் இறுதி மற்றும் எழுபதுகளின் ஆரம்பத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் மிகப் பிரபலமான நாயகர்களாகத் திகழ்ந்தனர்.
 

ரவிச்சந்திரன் மரணம்: ஜெயலலிதா இரங்கல்; ஸ்டாலின் நேரில் அஞ்சலி


சென்னை: மறைந்த நடிகர் ரவிச்சந்திரனுக்கு முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

உடல்நிலைக் கோளாறு காரணமாக நேற்று இரவு காலமானார் ரவிச்சந்திரன். மறைந்த ரவிச்சந்திரனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் அறிக்கை:

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 25.07.2011 அன்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி, குமரிப்பெண், நான், மூன்றெழுத்து, இதயக்கமலம், அதே கண்கன், உட்பட சுமார் 180 திரைப்படங்களில் முத்திரை பதித்து, தமிழ் திரைப்பட ரசிகர்களால் வெள்ளி விழா நாயகன் என்று போற்றப்பட்டு, அவர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள்.

1964ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தைத் துவக்கி, சமீப காலம் வரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரவிச்சந்திரன் அவர்களுடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு ஒரு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் பரிணமித்தவர் ரவிச்சந்திரன்.

ரவிச்சந்திரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்".

-இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி

ரவிச்சந்திரன் உடலுக்கு முன்னாள் துணை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "ரவிச்சந்திரன் கலைஞரிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று கலைஞர் இரங்கல் தெரிவித்தார்.

ரவிச்சந்திரனை இழந்து வாடிக்கொண்டிருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் அவர்கள் சார்பிலும், திமுக சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
 

விபச்சாரக் கும்பலாக மாறிய இலங்கை டிவி நடிகைகள்- 20 பேருக்கு வலைவீச்சு


சிங்கள டிவி நடிகைகள் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். மிகப் பெரிய அளவில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வரும் 20 நடிகைளைத் தேடி வருவதாக இலங்கை போலீஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரு குழுவாக இயங்கி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர்.

கடந்த சில வாரங்களில் நான்கு நடிகைகள் பிடிப்டுள்ளனர். இவர்கள் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதிகளில்தான் இவர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம்.

டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பல நடிகைகள் இதுபோல விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவது இலங்கை அரசையும், காவல்துறையையும் அதிர வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது 20 முக்கிய நடிகைகளைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். இவர்கள் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இதை விட கேவலமான பல செயல்களும் இலங்கையில் தற்போது அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள கிளப்களில் பல வெளிநாட்டு பெண்களைக் கொண்டு விபச்சாரத்தை ஓஹோவென நடத்தி வருகிறார்களாம்.

பெண்கள், குழந்தைகள் என பாரபட்சமே இல்லாமல் பெருமளவில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தகவல் ஒன்று தெரிவிக்கிறது. அனுராதபுரத்தில்தான் இது தலைவிரித்தாடி வருவதாகவும் அது கூறுகிறது.

இத்தனை காலமாக வருமானமே இல்லாமல் செத்துப் போய்க் கிடந்த இலங்கை சுற்றுலாத்துறைக்கு வருமானம் சேர்ப்பதற்காக அரசே மறைமுகமாக விபச்சாரத்தை ஆதரிப்பதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருப்பது நினைவு கூறத்தக்கது.