தலைவா 20-ம் தேதி ரிலீஸ்... இன்று முதல் முன்பதிவு!

தலைவா 20-ம் தேதி ரிலீஸ்... இன்று முதல் முன்பதிவு!

சென்னை: விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழகத்தில் மட்டும் வெளியாகாமலிருந்த தலைவா படம், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை நடிகர் விஜய்யும் சரி, இயக்குநர் விஜய் அல்லது இப்போது நெஞ்சு வலி என மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கும் படத்தின் தயாரிப்பாளரும் சரி சொல்லவே இல்லை.

இந்தப் படத்தின் ரிலீசுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று, போலீசார் கூறிவிட்டனர். ஆனால் படத்தை வெளியிட வேண்டிய வேந்தர் மூவீஸோ வாயைத் திறக்கவில்லை.

ஆனாலம முதல்வர் ஜெயலலிதா தலையிட்டு இந்தப் படத்தை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். முதல்வரைச் சந்திக்க அனுமதியும் கோரி வந்தனர்.

ஆனால் முதல்வர் இதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. இந்தப் படத்துக்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை மிகத் தெளிவாக அவர் உணர்த்திவிட்டார்.

இந்த நிலையில்தான், தலைவா படத்துக்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. என்னிடம் கொடுங்கள் நான் நாளையே 300 தியேட்டர்களில் வெளியிட்டுக் காட்டுகிறேன் என்று பகிரங்கமாக அறிவித்தார் திமுக எம்எல்ஏவும், புதிதாக தயாரிப்பாளரானவருமான ஜெ அன்பழகன்.

இதற்குப் பிறகுதான் படத்தை வெளியிட விஜய்யும் வேந்தர் மூவீஸும் வேலைகளில் இறங்கினர்.

இப்போது படம் வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை வெளியாகும் என்றும், ஞாயிற்றுக் கிழமையிலிருந்து முன்பதிவு தொடக்கம் என்றும் வேந்தர் மூவீஸ் அறிவித்துள்ளது.

ஆனால் படத்தை மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் திரையிட மாட்டோம் என்றும், சதவீத அடிப்படையில் வெளியிடுகிறோம் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் நிபந்தனை விதித்தே படத்தை வெளியிடுகின்றனர்.

 

தலைவா, வேந்தர் மூவீஸுடன் எனக்கு தொடர்பே இல்ல! - சொல்கிறார் பச்சமுத்து

தலைவா, வேந்தர் மூவீஸுடன் எனக்கு தொடர்பே இல்ல! - சொல்கிறார் பச்சமுத்து

சென்னை: விஜய் நடித்த தலைவா படத்துடனோ, அதை வெளியிடும் வேந்தர் மூவீஸுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, என்று கூறியுள்ளார் எஸ்ஆர்எம் குழுமத்தின் டி ஆர் பச்சமுத்து.

தலைவா படத்தை வேந்தர் மூவீஸ் வெளியிடுகிறது. இந்த வேந்தர் மூவீஸ் பச்சமுத்துவுக்கு சொந்தமானது என்று திரையுலகில் கூறப்படுகிறது. பச்சமுத்து இப்போது தனக்கு வைத்துக் கொண்டுள்ள பெயர் பாரிவேந்தர் என்பதாகும்.

வேந்தர் டிவி, வேந்தர் மூவீஸ் என்பதெல்லாம் அவர் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனங்களே என்று கூறிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன் தில்லு முல்லு படம் வெளியானபோது வேந்தர் மூவீஸில் வருமான வரி சோதனை நடந்தது.

அப்போது வேந்தர் மூவீசுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கை விட்டார் பச்சமுத்து.

இப்போது தலைவா பட விவகாரத்தில் பச்சமுத்துவின் பெயரும் அடிபடுகிறது. படத்தை வெளியிட சில அரசியல் தலைவர்கள், ஒரு மூத்த அமைச்சர் ஆகியோரை பச்சமுத்து அணுகினார் என்று செய்திகள் வெளியாகின.

ஆனால் இதனை மறுத்து நேற்று அறிக்கைவிட்டுள்ளார் பச்சமுத்து. அதில், "தலைவா படத்துக்கு எதிராக கடிதம் அனுப்பியதாகக் கூறப்படும் புரட்சிர மாணவர் படையினர் அந்தக் கடிதத்தில் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

தலைவா படத்துடனோ, அதனை வாங்கி வெளியிடும் வேந்தர் மூவீசுடனோ எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இவற்றுடன் என்னைச் சம்பந்தப்படுத்த வேண்டாம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

‘பப்பாளி’ நடிகையோட பளபளப்பே போய்டுச்சாமே....

முன்பெல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டையே கலங்கடித்து விடும் அளவிற்கு கலாய்ப்பாராம் இந்த சின்னபூ நடிகை. ஆனால், காதலில் விழுந்த பிறகு, அடிக்கடி மூட் அவுட் ஆகிவிடுகிறாராம்.

சமீபத்தில் தெலுங்கு ஷூட்டிங்கில் ஒரு காதல் காட்சியில் நடித்த அம்மணி, எவ்வளவு முயற்சித்தும் முகத்தில் சோகத்தை தவிர்க்க முடியவில்லையாம். பல டேக் வாங்கியது தான் மிச்சமாம்.

காதல், அந்தரங்க புகைப்படம் என ஏகப்பட்ட மனக் குழப்பத்தில் இருக்கிறாராம் நடிகை. இதனால் நடிப்பில் கவனம் செலுத்த மிகவும் சிரமப்படுகிறாராம். முன்பெல்லாம் சகஜமாக பேசி பழகி வந்த நடிகை, சமீபகாலமாக தனிமையில் அமர்ந்திருப்பது யூனிட்டையே கவலைப்பட வைத்திருக்கிறதாம்.

சமீபத்தில் கைக்கெட்டிய வாய்ப்பு ஒன்று வாய்க்கெட்டாமல் மற்றொரு நடிகைக்கு போனது கூட இந்தக் காதலால் தான் என கோபத்தில் இருக்கிறாராம் நடிகை. பேசாமல் இன்னும் கொஞ்ச நாளைக்கு காதலை அறிவிக்காமல் கடலை போட்டே காலத்தை ஓட்டியிருக்கலாமோ என காலங்கெட்டு சிந்தித்து வருகிறாராம்.

 

இப்ப நேரம் சரியில்லை... தலைவா பட விளம்பரங்களில் 'டைம் டு லீட்' வாசகம் நீக்கம்!

சென்னை: தலைவா டிசைன்களில் இடம்பெற்றிருந்த Time to Lead என்ற வாசகத்தை இப்போது நீக்கிவிட்டனர் வெளியீட்டாளர்கள்.

தலைவா படம் நாளை மறுநாள் (20-ந்தேதி) ரிலீஸ் ஆகும் என்று நேற்று இரவு திடீரென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் வேந்தர் மூவிசின் ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு வெளியானது.

300 திரையரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கான விளம்பரங்களும் இப்போது வெளியாகி வருகின்றன.

இப்ப நேரம் சரியில்லை...  தலைவா பட விளம்பரங்களில் 'டைம் டு லீட்' வாசகம் நீக்கம்!

ஆரம்பத்திலிருந்து தலைவா பட விளம்பரங்களில் டைம் டூ ஹெட் (தலைமையேற்கும் நேரம் வந்துவிட்டது) என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் இப்போது இந்த வாசகங்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளன. இன்றைய விளம்பரங்கள் அனைத்திலும் வெறுமனே தலைவா என்று மட்டும் உள்ளது!

டைம் டு லீட் வாசகங்கள் நீக்கப்பட்டது குறித்து விஜய் தரப்போ, தயாரிப்பாளர் தரப்போ எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.

இப்ப நேரம் சரியில்லை...  தலைவா பட விளம்பரங்களில் 'டைம் டு லீட்' வாசகம் நீக்கம்!