கிசு கிசு - பல்டி அடிச்ச இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
பூஜை போட்டப்போ, இந்த மாசத்துல தன்னோட படத்தை ரிலீஸ் பண்ணுவேன்னு மில்க் இயக்குனரு சொல்லியிருந்தாரு… சொல்லியிருந்தாரு… ஆனா இதுவரைக்கும் 60 சதவீதம்தான் ஷூட்டிங்கை முடிச்சிருக்காரு… முடிச்சிருக்காரு… படம் ரிலீசுக்கு இன்னும் மூணு மாசமாகும்னு சொல்றாராம்… சொல்றாராம்…
திமிரு டைரக்டரு ஹீரோ ஆயிட்டாரு. அவரை வச்சி படம் இயக்க, அவரோட உதவியாளரு ஆசைப்பட்டாராம்… ஆசைப்பட்டாராம்… கதை சொன்னதும் அதுல நிறைய மாற்றம் சொன்னாராம். அதனால எஸ் ஆன உதவியாளரு வேற ஹீரோவை வச்சி படம் இயக்க பேசுறாராம்… பேசுறாராம்…
Ôநயனம் மாதிரியே இருக்கீங்க. அவர் மாதிரியே வருவீங்கÕன்னு கோடம¢பாக¢க ஜோசியருங்க சொன்னதை கேட்டு ஜில்லாகி போயிருந்தாரு மேக்ன நடிகை. ஆனா, நடிச்ச படம் ஓடல. எதிர்பார்த்த வாய்ப்புகளும் வரல… வரல… இதனால நயனம் மாதிரியே கவர்ச்சிக்கு மாறலாமான்னு நடிகை யோசிக்கிறாராம்… யோசிக்கிறாராம்…


Source: Dinakaran
 

மீண்டும் ஹீரோ ஆகிறார் சசி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘நாடோடிகள்’ படத்தில் நடித்த பின் ‘ஈசன்’ படத்தை இயக்க சென்றுவிட்டார் சசிகுமார். இதில் அவர் நடிக்கவில்லை. இதையடுத்து ‘போராளி’ என்ற படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார். அவர் கூறியது: ‘ஈசன்’ சிட்டி சப்ஜெக்ட். என்ன கதை என்கிறார்கள். சிட்டிக்குள் நல்லதும் நடக்கும் கெட்டதும் நடக்கும். எது எப்போது நடக்கும் என்று கணிக்க முடியாது. இப்படியொரு கருவை வைத்துத்தான் 'ஈசன்' படம் உருவாகி இருக்கிறது. இதில் வைபவ், சமுத்திரக்கனி, ‘நாடோடிகள்’ அபிநயா, அபர்ணா நடிக்கின்றனர். இவர்கள் தவிர பல கதாபாத்திரங்கள் வந்து செல்லும். அடுத்த மாதம் ஆடியோ ரிலீஸ். டிசம்பர் மாதம் படம் திரைக்கு வரும். ‘நாடோடிகள்’ ஷூட்டிங் நடக்கும்போதே இந்த கதை உருவாகி விட்டது. அப்போதே அபிநயா இதில் நடிப்பதுபற்றி முடிவு செய்யப்பட்டது. அடுத்து சமுத்திரக்கனி இயக்கத்தில் 'போராளி’ என்ற படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன். இதன் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்குகிறது.


Source: Dinakaran
 

ஹீரோயின் யார்?குழப்பத்தில் கவுதம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் இந்தி ரீமேக்கை வேகமாக ஆரம்பித்தார் இயக்குனர் கவுதம் மேனன். இதில் ஓரிரு படங்களில் தலைகாட்டிய பிரதீக் பப்பர் ஹீரோ. அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த சில காட்சிகளை படமாக்கினார். கால்ஷீட் பிரச்னையால் படத்திலிருந்து த்ரிஷா விலகிவிட்டார். இதையடுத்து இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க முன்னணி இந்தி நடிகைகளிடம் கவுதம் பேசினார். ஆனால் ஹீரோ பிரதீக் என்பதால் அந்த நடிகைகள் நடிக்க மறுத்துவிட்டனர். புதுமுகம் சிலரை போட்டோ ஷூட் எடுத்தும் பார்த்தாராம். அதில் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. பிரபலம் இல்லாத இந்தி நடிகைகளை தேர்வு செய்வதில் அவருக்கு உடன்பாடு இல்லையாம். இதனால் ஹீரோயினை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் உள்ளார் கவுதம்.


Source: Dinakaran
 

கிசு கிசு - நடிகைக்கு எதிராக புகார்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
கவுரவமான படம் பார்த்த உசர நடிகர் வருத்தமா இருக்கிறாராம்… இருக்கிறாராம்… தன்னோட நிறைய காட்சிகள் எடிட¢டிங்ல இடம் மாறி போயிருக்காம்… போயிருக்காம்… இதுக்கு பிறகு ஏன் இந்த காட்சில இவர் இப்படி வர்றாருன்னு ரசிகருங்க குழப்பம் அடையுறாங்களாம்… அடையுறாங்களாம்… சில காட்சிகளை வெட்டியும் விட்டிருக்காங்களாம். இதனால நடிகருக்கு வருத்தமாம்… வருத்தமாம்…
நயன நடிகையோட லேட்டஸ்ட் படம் கை கொடுத்ததால சந்தோஷமா இருக்கிறாராம். மறுபடியும் நடிப்புல ஆர்வம் காட்டலாம்னு யோசனையில இருக்க¤றாராம்… இருக்க¤றாராம்… 'உன்னால இன்னும் பீல்டுல நிக்க முடியும். சான்ஸ் கிடைக்கும்போது சம்பாதிச்சிடணும்'னு தோழிங்க காதை கடிக்கிறாங்களாம்… கடிக்கிறாங்களாம்… இதனால நடிகைக்கும் தாடிக்கார லவ்வருக்கும் மோதல் வரும்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்க… பேசிக்கிறாங்க…
திவ்யமான நடிகை கன்னடத்துல நிறைய படங்கள்ல நடிக்க அட்வான்ஸ் வாங்கிட்டாராம்… வாங்கிட்டாராம்… கால்ஷீட் கொடுக்காம சொதப்புறாராம்… சொதப்புறாராம்… இதனால தயாரிப்புங்க கன்னட பிலிம் சேம¢பர்ல புகார் கொடுக்கப் போறாங்களாம்… போறாங்களாம்…


Source: Dinakaran
 

ஆர்யாவுக்கு ஹாங்காங் மாஸ்டர் பயிற்சி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'சித்திரம் பேசுதடி', 'அஞ்சாதே' படங்களை அடுத்து 'நந்தலாலா' படத்தை இயக்கினார் மிஷ்கின். இதையடுத்து சேரன் நடிக்கும் 'யுத்தம் செய்' படத்தை இயக்கி வருகிறார். அடுத்ததாக ஆர்யா நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார். இது பற்றி மிஷ்கின் கூறியது: ஒவ்வொரு படமும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் எனது படங்களுக்கு கதையை தேர்வு செய்கிறேன். இதுவரை வெளியான 2 படங்களுமே வெவ்வேறு கதைக் களத்தில் உருவானது. அடுத்து ஆர்யாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறேன். முழுக்க ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த படம். இதற்கான கதை தயாராகிவிட்டது. வெளிநாடுகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது.
இப்படத்திற்காக சில ஸ்டன்ட் கலைகளை ஆர்யா கற்க வேண்டியுள்ளது. அவருக்கு பயிற்சி அளிப்பதற்காக ஹாங்காங்கிலிருந்து தற்காப்பு கலை பயிற்சி தரும் மாஸ்டர் வர உள்ளார். படத்தில் முக்கிய அம்சமாக இந்த சண்டைக் காட்சிகள் இடம்பெறும். எனவே இதற்கு முறைப்படி பயிற்சி பெற வேண்டும் என ஆர்யாவிடம் கூறியதும் ஒப்புக்கொண்டார். விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ளது.


Source: Dinakaran
 

ரஜினியின் அடுத்த பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்?

Rajini
அடுத்தபடம் சத்யா மூவீசுக்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், உலக சூப்பர் ஸ்டாரின் (இதுதான் இப்போது ரஜினிக்கு மீடியா சூட்டியுள்ள பட்டம்!) இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே ஹரி இயக்குவார் என்றும், சத்யா மூவீசார் அவருடன் பேசியிருப்பதாகவும கூறப்பட்டது.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்கக் கூடும் என டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கமல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் இருக்கும் கே எஸ் ரவிக்குமார், இதுவரை வேறு புதிய படத்துக்கு அட்வான்ஸ் வாங்கவில்லை. ரஜினி படத்துக்காகத்தான் அவர் காத்திருக்கிறார் என்கிறார்கள். அதே நேரம் இந்திப் பட உலகில் முத்திரை பதித்த முருகதாஸும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுக்றது.
ரஜினியும் ரவிக்குமாரும் இணைந்து முத்து, படையப்பா என இரு மெகா ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இருவரும் இணைவதாக இருந்த மூன்றாவது படம் ஜக்குபாய் நிறுத்தப்பட்டுவிட, பின்னர் அதே கதையை சரத்குமாரை வைத்து இயக்கினார் ரவிக்குமார்.
ஏற்கெனவே ரஜினியின் அனிமேஷன் படமான சுல்தான் – தி வாரியரை கேஎஸ் ரவிக்குமார்தான் இயக்கப்போவதாக ஜெமினி நிறுவனம் அறிவித்தது நினைவிருக்கலாம்.