சிவா படத்தை முடித்த பிறகு முருகதாஸ் படத்தில் நடிக்கும் அஜீத்

Ajith Murugadoss Work Together After 12 Years

சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் துப்பாக்கி இந்தி ரீமேக்கை முடித்த பிறகு அஜீத் குமாரை வைத்து படம் ஒன்றை எடுக்கிறார்.

ஏ.ஆர். முருகதாஸ் தான் இயக்கிய முதல் படமான தீனாவின் ஹீரோ அஜீத் குமாருடன் மீண்டும் சேர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். ஆனால் அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் படம், அதையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவாவின் படம் என்று அடுத்தடுத்து பிசியாக உள்ளார். இருப்பினும் தான் அஜீதுக்காக காத்திருக்கப் போவதாக முருகதாஸ் தெரிவித்தார்.

இதற்கிடையே முருகதாஸ் துப்பாக்கி படத்தை இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்கிறார். அதை முடித்து விட்டு அஜீத் குமாரை வைத்து படம் எடுக்கிறார். அதற்குள் அஜீத்தும் தனது கையில் இருக்கும் படங்களை முடித்துவிடுவார். அஜீத்-முருகதாஸ் சேரும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அதை ஐங்கரன் இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது என்று தற்போது தெரிய வந்துள்ளது. இந்த பட வேலைகள் 2013ல் துவங்கும் என்று கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு பிறகு சேரும் இந்த வெற்றிக் கூட்டணி நிச்சயம் வெற்றிப் படத்தை தரும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

தமிழச்சி மனசில் என்ன இருக்கு...?

Tamizhachi Thangapandian Cinema Interest

சென்னை: தமிழ்த் திரையுலகில் நுழையப் போகிறது ஒரு அழகு முகம், தமிழ் முகம் என்பதுதான் லேட்டஸ்ட் கிசுகிசுவாக உள்ளது. அந்த அழகு முகத்துக்குரியவர், தமிழச்சி தங்கப்பாண்டியன்.

திமுக வட்டாரத்தில் பிரபலமானவர் தமிழச்சி. கல்லூரிப் பேராசிரியை, கவிதாயினி, பேச்சாளினி என்பது தவிர அரசியல் ஆர்வம், இலக்கிய ஆர்வம் மிகுந்தவர் என்பதும் இவரது கூடுதல் அடையாளங்கள்.

அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக, அருமையாக பேசக் கூடிய ஒரு தமிழ்ப் பெண். மறத் தமிழச்சியான இவர் இப்போது சினிமா விழாக்களில் அடிக்கடி வலம் வர ஆரம்பித்துள்ளார்.

நீர்ப்பறவை ஆடியோ வெளியீட்டின்போது இருந்தார். வெற்றிச்செல்வன் ஆடியோ, நர்த்தகி ஆடியோ வெளியீடு, பூர்வகுடி ஆடியோ வெளியீடு, இயக்குநர் சீனு ராமசாமி புத்தக வெளியீடு என இவரை சினிமா பக்கம் அடிக்கடி பார்க்க முடிகிறது.

சினிமாவில் கவிஞராக அறிமுகமாக இவர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இல்லை, இல்லை வசனகர்த்தாவாக மாறப் போகிறார் என்று ஒரு தகவல் கூறுகிறது. படம் இயக்கத்தான் ஆழம் பார்த்து வருகிறார் தமிழச்சி என்று சொல்வோரும் உண்டு.

எதுவாக இருந்தால் என்ன, 'அன்னியர்களின்' ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு 'தமிழச்சி' வந்து விட்டுத்தான் போகட்டுமே...!

 

ஜெய்க்கு திருமணம்: மணப்பெண் யார்னு தெரியுமா?

Jai Kiss Goodbye Bachelorhood Soon

சென்னை: நடிகர் ஜெய்க்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தபோது ஜெய்க்கும், நடிகை அஞ்சலிக்கும் இடையே லவ்வாகிவிட்டது என்று கூறப்பட்டது. இதை கேட்டு கொதித்த அஞ்சலி, ஜெய் வேண்டும் என்றே வதந்தியைப் பரப்புகிறார், இனி அவருடன் சேர்ந்து நடிக்கவே மாட்டேன் என்றார்.

அதற்கு ஜெய், நான் எந்த நடிகையையும் காதலிக்கவில்லை. எந்த நடிகையையும் மணக்க மாட்டேன் என்றார். இந்நிலையில் ஜெய் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அவருக்கு டாக்டர் பெண்ணைப் பார்த்திருக்கிறார்களாம். எப்பொழுது திருமணம் என்று தெரியவில்லை. தெரிந்ததும் சொல்கிறோம்.

இதற்கிடையே அஞ்சலி டோலிவுட் படங்களில் நடிக்கச் சென்றுவிட்டார். அம்மணி தற்போது தெலுங்கு படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முதலில் மாமனார், இப்போ மருமகனுடன் குத்தாட்டம் போட்ட நயன்

nayanthara does it again   
சென்னை: நயன்தாரா எதிர் நீச்சல் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஒரு குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளார்.

நடிகர் தனுஷ் சிவ கார்த்திகேயன், பிரியா ஆனந்த் ஆகியோரை வைத்து செந்தில் இயக்கியுள்ள எதிர் நீச்சல் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கொலவெறி பாடல் புகழ் அனிருத் இசையமைத்துள்ளார். இசை உரிமையை சோனி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது என்று தெரிகிறது.

இந்த படத்தில் தயாரிப்பாளர் தனுஷ் ஒரு பாட்டுக்கு வந்து ஆடுவார் என்று கூறப்பட்டது. அவர் ஒன்றும் தனியாக ஆடவில்லை. நயன்தாராவுடன் சேர்ந்து தனுஷ் குத்தாட்டம் போட்டுள்ளார். முன்னதாக சிவகாசி படத்தில் விஜயுடன் நயன் ஆடிய கோடம்பாக்கம் ஏரியா, சிவாஜி படத்தில் ரஜினிகாந்துடன் ஆடிய பல்லேலக்கா ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்டானது.

இந்நிலையில் தற்போது தனுஷுடன் நயன் ஆடிய பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் கடந்த 2 நாட்களாக படமாக்கப்பட்டது.

எதிர் நீச்சல் படம் வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

 

சமந்தாவுக்கு சூடான முத்தம் கொடுத்தாரா ஜீவா?

Samantha Jeeva Share Kiss Neethaane En Ponvasantham   

சென்னை: நீதானே என் பொன்வசந்தம் படத்தில் இதுவரை இசைஞானி இளையராஜாதான் ஹாட் டாப்பிக்காக இருந்து வரும் நிலையில் இன்னொரு பரபரப்பு ஹாட் மேட்டர் வெளியாகியுள்ளது. அதாவது படத்தில் நாயகி சமந்தாவுக்கு நாயகன் ஜீவா அழகான ஒரு காதல் முத்தம் கொடுத்துள்ளார் என்பதுதான் அந்த விஷயம்.

இளையராஜாவின் இனிய இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க உருவாகியுள்ள படம் நீதானே என் பொன்வசந்தம். தமிழில் ஜீவா நாயகனாக நடிக்க, தெலுங்கில் நானி நாயகனாகியுள்ளார்.

தெலுங்கு பதிப்பான யெடோ வெள்ளிப்போயிந்தி மனசு படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் அங்கு பெரும் எதிர்பார்ப்புகளைக் கிளறி விட்டுள்ளது. அதாவது சமந்தாவுக்கு நானி கொடுத்துள்ள உதட்டு முத்தத்தால்தான் இந்த பரபரப்பும், கிளுகிளுப்பும். இந்த நிலையில் இதேபோல தமிழில் ஜீவாவும், சமந்தாவின் உதடுகளுடன் தனது உதடுகளைப் பொருத்தியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ஆனால் ஜீவா, சமந்தா தொடர்பான லிப் லாக் குறித்த தகவல்களை இறுக்கமாக வைத்துள்ளார் கெளதம் மேனன். இருந்தாலும் நானி, சமந்தாவின் லிப் லாப் புகைப்படங்கள் இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவியுள்ளன. டிவிட்டர், பேஸ்புக் மூலமும் இதை வேகமாகப் பரப்பி வருகின்றனர் ரசிகப் பெருமக்கள்.

சினிமாவில் சமந்தா லிப் லாக்கில் ஈடுபடுவது இது மூன்றாவது முறையாகும். ஏற்கனவே தெலுங்கில் வெளியான கெளதம் மேனனின் என் மயா சேசவே படத்தில் ஒரு லிப் லாக் கொடுத்திருந்தார். இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்காகும். இதுதான் சமந்தா கொடுத்த முதல் லிப் லாக் ஆகும் - அதாவது சினிமாவில்.

தற்போது ஒரே நேரத்தில் ஜீவா மற்றும் நானிக்கு தனது உதடுகளைக் கொடுத்துள்ளார் சமந்தா. இதில் எத்தனை டேக்குகளை இரு ஹீரோக்களும் வாங்கினார்கள் என்பது குறித்த 'புள்ளிவிவர'த் தகவல் தெரியவில்லை!

 

சர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் கொடுக்கும் அனுஷ்கா

Anushka Gives Surprise After Surprise

சென்னை: நடிகை அனுஷ்கா திரையுலகினருக்கு சர்பிரைஸ் மேல் சர்பிரைஸ் கொடுத்து வருகிறார்.

அனுஷ்காவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் போட்டி போடுகின்றனர். அவரும் டேட்ஸ் பார்த்து கால்ஷீட் தருகிறார். முடியவில்லை என்றால் தனது தோழிகளை நடிக்க வைக்க பரிந்துரை செய்கிறார். அவர் எந்த படத்திற்கும் 30 நாட்களுக்கு மேல் கால்ஷீட் கொடுக்கவே மாட்டார். இந்நிலையில் செல்வ ராகவனின் இரண்டாம் உலகம் படத்திற்கு முப்பதல்ல 60 நாட்கள் கால்ஷீட்டை பெரிய மனசுடன் கொடுத்தார்.

அட 60 நாட்கள் கால்ஷீட்டா அதுவும் அனுஷ்காவா என்று கோலிவுட்டே திகைத்துப் போனது. இந்நிலையில் அவர் கோலிவுட் மற்றும் டோலிவுட்டை திகைக்க வைத்துள்ளார். அதாவது அவர் தான் நடிக்கும் ராணி ருத்ரம்மா தேவி படத்திற்கு யாருமே கனவில் கூட நினைத்துப் பார்க்காத வண்ணம் 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்த படம் 13ம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. இதற்கு இசை ஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

 

'எண்டே'...பலான தொழில் குறித்து மலையாளத்தில் ஒரு படம்!

Real Life Sex Trafficking Story On Film

டெல்லி: மலையாளத்தில் ஒரு படம் உருவாகியுள்ளது. பலான தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் குறித்த படம் இது.

விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்கும் பணியில் நீண்ட காலமாக ஈடுபட்டிருப்பவர் பெங்களூரைச் சேர்ந்த சுனிதா கிருஷ்ணன். இதுவரை ஆயிரக்கணக்கான பெண்களை இவர் மீட்டுள்ளார். இவர் குறித்த கதைதான் எண்டே.

மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் சுனிதா கிருஷ்ணனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. செக்ஸ் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் கொடுமை, அவலம் குறி்த்து விவரிக்கிறது.

இப்படத்தில் மராத்தி நடிகை அஞ்சலி படேல் நாயகி பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் படம் திரைக்கு வருகிறதாம்.

 

வயசுப் போச்சுன்னா நடிக்க முடியாதுல்ல: ஸ்ருதி ஹாசன்

Fainting Is Quite Common Shruti   

மும்பை: ஓய்வின்றி உழைத்ததால் நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம் தான். வயது போனதென்றால் நடிக்க முடியாதல்லவா என்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

நடிகை ஸ்ருதி ஹாசன் இந்தி, தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கிறார். ஆனால் தமிழில் நல்ல கதைக்காக காத்திருக்கிறாராம். உன்னைப் போல் ஒருவன் படத்திற்கு பிறகு அவர் எந்த படத்திற்கும் இசையமைக்கவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில்,

இசை என்னுடன் தான் இருக்கிறது. அது எங்கும் போகவில்லை. வயது போனால் சில கதாபாத்திரங்களில் நடிக்க முடியாதில்லையா அதனால் தான் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறேன். ஷூட்டிங்கிற்காக விமானத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்ததால் டயர்ட் ஆகிவிட்டேன். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மயங்கினேன். சினிமாவில் ஓய்வில்லாமல் உழைப்பதால் மயங்கி விழுவது சகஜம் தான். நான் மயங்கி விழுந்தது சாதாரண விஷயம். தமிழில் நல்ல திரைக்கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

 

உன் சமையல் அறையில் சினேகா!

Sneha Shares Good News   

சென்னை: நடிகை சினேகா பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் உன் சமையல் அறையில் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நடிகர், இயக்குனர் பிரகாஷ் ராஜ் மலையாளத்தில் வெளியான சால்ட் அன்ட் பெப்பர் படத்தை தமிழில் உன் சமையல் அறையில் என்ற பெயரில் ரீமேக் செய்கிறார். இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

பிரகாஷ் ராஜ் இதற்கு முன்பு கன்னடத்தில் அபியும், நானும் மற்றும் தோணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் சினேகா பிரகாஷ் ராஜ் நிச்சயம் நல்ல படங்களை இயக்குவார் என்ற நம்பிக்கையில் அவரது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தனக்கு இந்த படத்தில் கிடைத்துள்ள கதாபாத்திரத்தை நினைத்து சினேகா குஷியாக உள்ளார் என்று கூறப்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு சமையல் தெரியாத நான் தற்போது கற்றுக் கொண்டிருக்கிறேன். கடவுள் அருளால் எனது திருமண வாழ்க்கை அருமையாகப் போய்க் கொண்டிருக்கிறது என்றார் சினேகா.

 

பாலிவுட் போன கையோடு பாய் பிரண்ட் பிடித்த இலியானா

What Wrong Live In Relationship   

மும்பை: திருமணத்திற்கு முன்பு லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதில் தவறில்லை என்று நடிகை இலியானா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் கொடிகட்டிப் பறந்த இலியானா அவ்வப்போது தமிழ் படங்களிலும் தலையைக் காட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் பர்ஃபி பட வெற்றிக்குப் பிறகு ஜாகையை மும்பைக்கே மாற்றிவிட்டார். தற்போது பாலிவுட் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் அவர் இந்தி நடிகர் ஷாஹித் கபூருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

ஷாஹித் கபூர் இலியானா வீட்டுக்கு அடிக்கடி சென்று வருவதாகக் கூறப்படுகிறது. இருவரும் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்று வருகிறார்கள். பாலிவுட்டில் இதுபோன்ற லிவ் இன் ரிலேஷன்ஷிப்பெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. இத்தனை நாட்கள் பிரியங்கா சோப்ராவுடன் வாழ்ந்த ஷாஹித் அவரைப் பிரிந்து இலியானாவிடம் வந்திருக்கிறார்.

இந்நிலையில் இது குறித்து இலியானா கூறுகையில்,

மனதிற்கு பிடித்தவருடன் நட்பாக இருப்பது, டேட் செய்வது தவறில்லை. நான் மாடர்ன் பெண். என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் கவலையில்லை. குறை சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் தப்பில்லை என்றார்.

 

ஜி தமிழில் விரைவில் இங்கிலிஷ் விங்கிலிஷ்!

English Vinglish Debut Tv Through Zee Tamil

சென்னை: ஜி தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் ஒளிபரப்பப் போகிறார்களாம். அனேகமாக புத்தாண்டுக்கான சிறப்புப் படமாக இது இருக்கும் என்று தெரிகிறது.

முன்னாள் கனவுக் கன்னி ஸ்ரீதேவி ரொம்ப காலத்திற்குப் பின்னர் நடித்த முழு நீள காமெடிக் கலக்கல் படம் இங்கிலிஷ் விங்கிலிஷ். இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் வெளியானது.

ஸ்ரீதேவி முக்கியப் பாத்திரத்தில் நடிக்க அவருடன் ஏகப்பட்ட நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். அல்டிமேட் ஸ்டார் அஜீத்தும் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார்.

அக்டோபர் மாதம் திரைக்கு வந்த இப்படம், விரைவில் ஜி தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாம். இதற்கான டீசர்களைப் போட ஆரம்பித்து விட்டது ஜி தமிழ்.