ராணி ருத்ரமா தேவி வேடத்துக்கு நயன்தாரா - அனுஷ்கா கடும் போட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆந்திராவில் ஆட்சி புரிந்த ராணி ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரப் பெண் ஜான்சி ராணியை போல் தென்னிந்தியாவில் புகழ்பெற்றவர் ராணி ருத்ரமா தேவி. இவரது வீர, தீர செயல்களை பின்னணியாகக் கொண்டு பீரியட் படம் இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் குண சேகர். இந்த படத்தில் ராணி வேடத்தில் நடிக்க அனுஷ்காதான் படக்குழுவின் முதல் சாய்ஸாக உள¢ளார். இது பற்றி அனுஷ்காவிடம் பேசப்பட்டது.

தமிழில் விக்ரமுடன் தாண்டவம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் சுராஜ் இயக்கும் படம் என அனுஷ்கா பிசியாக உள்ளார். அதே நேரம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் ராணி ருத்ரமா தேவி படத்தில் நடிக்கவும் அவர் விரும்புகிறார். இதனால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து இப்படத்தில் நடிப்பது பற்றி அறிவிக்கிறேன் என அனுஷ்கா கூறி உள்ளாராம். இதற்கிடையே இப்படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு மறைமுகமாக தூது விட்டுள்ளாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பின் சினிமாவில் மீண்டும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இதனால் இப்படத்தில் நடித்தால் மீண்டும் தனது பழைய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பது அவரது கணிப்பு. எனவே ராணி வேடத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அருந்ததி படத்தில் நடித்ததால், ராணி வேடம் அனுஷ்காவுக்கு பொருந்தும் என குணசேகர் கருதியுள்ளார்.  

சமீபத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பதால் அவருக்கும் இந்த வேடம் பொருந்தும் என திரையுலகினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், அனுஷ்கா நடிப்பதாக கூறியுள்ள படத்துக்கு நயன்தாரா தூது விட்டிருப்பதால் இருவருக்குமிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது மோதலாக மாறும் சூழலும் உருவாகியுள்ளது.

கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் திரையிட கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் படத்தை திரையிட கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. எழுதி, இயக்கி, கமல்ஹாசன் நடிக்கும் படம் விஸ்வரூபம். தீவிரவாதம் தொடர்பான பின்னணியில் இப்படக் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஷங்கர்-எஹசான்-லாய் இசையமைக்கிறார். பட ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை கேன்ஸ் பட விழா குழுவினருக்கு கமல்ஹாசன் திரையிட்டு காண்பித்தார். இதை பார்த்த குழுவினர், இப்படத்தை பட விழாவில் திரையிடலாம் என அனுமதி வழங்கிவிட¢டது.

ஆனால் மார்ச் 15ம் தேதிக்குள் பட பிரின்ட் எங்களுக்கு வேண்டும் என கமல்ஹாசனுக்கு விழா குழு நிபந்தனை விதித்துள்ளது. இதனால் பட யூனிட் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது பற்றி கமல்ஹாசன் கூறும்போது, ÔÔவிஸ்வரூபம் படத்தை 9 பேர் அடங்கிய விழா குழு பார்த்தது. கிரிஸ்டியன் ஜெவ்ன் என்பவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவரும் பட வேலைகள் பற்றி அவ்வப்போது கேட்டு அறிந்துகொள்கிறார். கேன்ஸ் பட விழாவில் விஸ்வரூபம் திரையிடப்பட்டால் அது சந்தோஷமாக இருக்கும் என்றார். விழா குழு அளித்த நிபந்தனைபடி இன்னும் 14 நாட்களே இருப்பதால் அதற்குள் படத்தை முடிக்க கமல் அண்ட் கோ தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நேரடி டப்பிங்குடன் ஷூட்டிங் நடப்பதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன.

துப்பாக்கியில் விஜய் பாடிய "பார்ட்டி சாங்"

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'துப்பாக்கி'. படத்தில் என்கவுன்ட்டர் ஸ்பெலிஷ்ட்டாக விஜய் நடித்தியிருக்கிறார். விஜய்-க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தை பற்றி நாளுக்கு நாள் புது தகவல்கள் வந்து கொண்டே இருக்கிறது. துப்பாக்கி படத்தில் இளைய தளபதி விஜய் 'பார்ட்டி சாங்' ஒன்றை பாடியுள்ளார் என்பது படத்தின் லேட்டஸ்ட் தகவல். முதலில் விஜய்யின் குரலில் பாட வைத்த ஹாரிஸ் ஜெயராஜ், விஜய் இந்த பாட்டு முழுவதும் பாடினால் நல்லாயிருக்கும் என சொல்ல, விஜய்யும் பாட ஒப்பபுக் கொண்டாராம்.