இணையத்தில் அவன்இவன் பாடல் யுவன் சங்கர் அப்செட்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இணையத்தில் அவன்இவன் பாடல் யுவன் சங்கர் அப்செட்!

4/18/2011 12:01:13 PM

ஆர்யா, விஷால் நடித்துள்ள, 'அவன் இவன்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு முன்பே இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது. பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால், மது ஷாலினி, ஆர்.கே நடித்துள்ள படம் 'அவன் இவன்'. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். நா.முத்துக்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். இதன் பாடல் வெளியீடு இன்று மாலை நடக்கிறது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பே இன்டர்நெட்டில் பாடல்கள் வெளியாகிவிட்டது. இதுபற்றி யுவன் சங்கர் ராஜா கூறும்போது, 'இதன் பாடல் உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளிநாட்டுக்கு அந்நிறுவனம் சி.டி.களை அனுப்பியுள்ளது. அங்கிருந்து பாடல்கள் வெளியாகியிருக்கலாம். இதை கேள்விபட்டு அப்செட்டாகிவிட்டேன். இந்த மாதிரிவெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் பாடல்கள் லீக் ஆகியிருப்பது கண்டிக்கத்தக்கது' என்றார்.





Source: Dinakaran
 

பின்னணி பாடும் ஷகிலா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பின்னணி பாடும் ஷகிலா!

4/18/2011 12:10:53 PM

சத்யசாய் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.லக்ஷ்மண் ராவ், பி.சீனிவாச ராவ் இந்தி, தமிழில் தயாரிக்கும் படம் 'சண்முகிபுரம்'. மனோஜ், அந்திர விஸ்வாஸ், ஷாதிகா, ஷகிலா உட்பட பலர் நடிக்கின்றனர். செழியன் இயக்குகிறார். ஆதி ஒளிப்பதிவு. வீ. தஷி இசை. பட்டுக்கோட்டை சண்முகசுந்தரம், தாணு கார்த்திக், கணேசன் பாடல்கள் எழுதுகின்றனர். இதில், 'மடக்கிப் போடு மடக்கிப் போடு மங்காத்தா' என்ற குத்துப்பாடலை ஷகிலா, பாடி நடித்துள்ளார்.





Source: Dinakaran
 

அனுஷ்காவை அழ வைத்த பாட்டு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அனுஷ்காவை அழ வைத்த பாட்டு!

4/18/2011 11:38:13 AM

தெய்வத்திருமகன்' படத்தில் இடம்பெற்றுள்ள 'விழிகளில் ஒரு வானவில்' பாடலை கேட்டதும் கண்ணீர் விட்டு அழுதேன் என்று அனுஷ்கா கூறினார். விஜய் இயக்கியுள்ள 'தெய்வத்திருமகன்' படத்தில் விக்ரம், அமலா பாலுடன் நடித்துள்ளார் அனுஷ்கா. பாடல் காட்சியில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: இந்தப் படத்துக்காக, 'விழிகளில் ஒரு வானவில்' பாடலை முதலில் கேட்டபோது என் கண்களில் இருந்து தண்ணீர் வந்துவிட்டது. என்னையறியாமல் அழுதேன். அந்தளவுக்கு சிறப்பான பாடல் அது. இப்படியொரு பாடலை கொடுத்த இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு எனது பாராட்டுகள். இதை பாடிய சைந்தவியையும் வாழ்த்துகிறேன். அவர்தான் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் வருங்கால மனைவி என்பதையும் அறிந்தேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். இந்தப் பாடலில் எனக்கு நடனம் ஆடுவதுபோல் காட்சிகள் எதுவும் இல்லை. ஆனால், இந்தப் பாடலில் நீரவ் ஷாவின் திறமையான ஒளிப்பதிவு கண்டிப்பாகப் பேசப்படும் விதமாக இருக்கும். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.





Source: Dinakaran
 

சூரியநகரம் என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சூரியநகரம் என்ன கதை?

4/18/2011 11:42:51 AM

ஏ.வி ஸ்கிரீன்ஸ் சார்பில் எக்ஸ்.பி.ராஜன் தயாரிக்கும் படம், 'சூரியநகரம்'. இதில் ராகுல், மீரா நந்தன், ஸ்ரீதர், கஞ்சா கருப்பு, சூரி நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஜே.கே.வெங்கி. இசை, ஃபென்வியாலி. பாடல்கள், வைரமுத்து. எம்.செல்லமுத்து இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் எம்.செல்லமுத்து கூறியதாவது: மதுரைக்கு பல பெயர்கள். அதில், ஒன்று சூரியநகரம். சாதிப் பிரச்னையால் காதல் ஜெயிக்கிறதா இல்லையா என்பது கதை. 'உன்னைப் பிரிவேனா' என்ற பாடல் காட்சியை, வைரமுத்துவின் சொந்த ஊரான வடுகப்பட்டியில் படமாக்கினேன். கோம்பை அருகிலுள்ள ராமக்கல்மெட்டு பகுதி, இதுவரை எந்த படத்திலும் வரவில்லை. அதன் அழகை அப்படியே படமாக்கியுள்ளோம். ராகுல், மீரா நந்தன் நடித்த இப்பாடல் காட்சி ஹைலைட்டாக இருக்கும். 60 நாட்களில் ஷூட்டிங் நடத்தினோம். ஃபென் வியாலியின் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது.





Source: Dinakaran
 

தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்க இயக்குனர் சித்திக் மறுப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் வாங்க இயக்குனர் சித்திக் மறுப்பு!

4/18/2011 11:49:06 AM

படம் இயக்க தயாரிப்பாளர்கள் கொடுத்த அட்வான்சை பெற்றுக் கொள்ள இயக்குனர் சித்திக் மறுத்துள்ளார். இந்தியில் 'பார்டிகார்ட்' படத்தை இயக்கி வரும் அவர் கூறியதாவது: இந்தி சினிமாவுக்கு வருவேன் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. முதல் படத்திலேயே சல்மான்கான், கரீனா கபூர், சத்ருகன் சின்ஹா ஆகியோரை இயக்குவதில் பெருமை. சல்மானுக்காக கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறேன். இந்தியில் கொஞ்சம் கிளாமர் வேண்டும் என்பதால் கரீனாவை  பயன்படுத்தியிருக்கிறேன். இந்த படம் முடிந்ததும் அடுத்து தமிழ் படம் இயக்குகிறேன். நிறைய தயாரிப்பாளர்கள் கதை, ஹிரோவை அப்புறம் முடிவு செய்து கொள்ளலாம் என்று அட்வான்ஸ் கொடுக்க முன்வந்தார்கள். எனக்கு அப்படி பெறுவதில் உடன்பாடு இல்லை. கதையும், ஹீரோவும் முடிவு செய்த பிறகு வாங்கிக் கொள்கிறேன் என்று மறுத்து விட்டேன்.





Source: Dinakaran
 

சாய்பாபா ஆகிறார் நாகார்ஜுனா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சாய்பாபா ஆகிறார் நாகார்ஜுனா!

4/18/2011 11:59:10 AM

சாய்பாபா வாழ்க்கை பற்றி தயாராகும் படத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார். தெலுங்கில் நாகார்ஜுனா நடித்துள்ள வெளியான 'அன்னமாயா', 'ஸ்ரீராமதாசு' ஆகிய ஆன்மிகப் படங்கள் ஹிட்டானது. இதையடுத்து மீண்டும் ஆன்மிகப் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் நாகார்ஜுனா. சாய்பாபா பற்றிய கதையில் சாய்பாபாவாக அவர் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் மூத்த இயக்குனர் கே.ராகவேந்தர் ராவ் இந்தப் படத்தை இயக்குகிறார். தற்போது 'ராஜண்ணா' என்ற படத்தில் நடிக்கிறார் நாகார்ஜுனா. இந்த படத்தை முடித்துவிட்டு சாய்பாபா படத்தில் நடிக்கிறார்.





Source: Dinakaran
 

வெற்றிக்காக போராடுகிறேன் : அசோக்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
வெற்றிக்காக போராடுகிறேன் : அசோக்!

4/18/2011 11:54:50 AM

'முருகா', 'பிடிச்சிருக்கு' படங்களில் ஹீரோவாக நடித்த அசோக், கூறியதாவது: நான் நடித்த இரண்டு படங்களிலுமே எனக்கு பாராட்டு கிடைத்தாலும் படங்கள் சரியாகப் போகவில்லை. அடுத்து, 'வானம் பார்த்த சீமையிலே' படத்தில் நடித்துள்ளேன். ஏதோ காரணங்களால் படம் வெளிவர தாமதமாகிறது. தற்போது 'கன்னிகாபுரம் ரெயில்வே கேட்', 'ஐந்தாம் வேதம்' படங்களில் நடித்து வருகிறேன். என்னதான் நடிப்பு திறமையை காட்டினாலும் ஒரு படத்தின் வெற்றிதான் நடிகனை அடையாளம் காட்டும். அந்த ஒரே ஒரு வெற்றிக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு அசோக் கூறினார்.





Source: Dinakaran