திருவனந்தபுரம்: காதலித்துக் கல்யாணம் செய்த மலையாள ஜோடி பகத்தும், நஸ்ரியாவும் பெங்களூரில் சொந்தமாக ஒரு வீட்டை பார்த்துப் பார்த்து கட்டி வருகின்றனர்.
அழகிய வில்லா ஒன்றைக் கட்டிவரும் இந்த ஜோடி கடந்த மே மாதம் 15ம் தேதி அன்று உலகமே கொண்டாடி மகிழ்ந்த குடும்ப தினத்தை தங்கள் வீட்டின் முன்னால் மரம் நட்டு கொண்டாடி மகிழ்ந்துள்ளது.
திருமணம் செய்து கொண்ட கையோடு சினிமாவை விட்டு ஒதுங்கிய நஸ்ரியா வீடு கட்டும் பணியில் மிகவும் மும்முரமாக இருக்கிறாராம். மீண்டும் நஸ்ரியா நடிக்க வருகிறார் என்று பேச்சு எழுந்த நிலையில் அதைப் பற்றிய எந்த பதிலும் நஸ்ரியாவிடம் இருந்து வரவில்லை.
இருவரும் இணைந்து பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடித்தனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் தங்களது கனவு இல்லத்தை பெங்களூரில் எழுப்புவது பொருத்தமானதுதான்.