நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்

நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்

சென்னை: நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ராஜா சுப்பையா என்பவர் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத் தலைப்பால் அவர் பிரச்சனையில் சிக்கியுள்ளார். நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். அதனால் இந்த தலைப்புக்கு சூர்யா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ராஜா சுப்பையா சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நான் சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பில் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் தலையீடு இருப்பதால் பதிவு செய்ய மறுத்தனர். சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர் என்னை தினமும் தொலைபேசியில் மிரட்டி வருகிறார். எனவே தயாரிப்பாளர் சங்கம் மீதும், ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜசேகர் கூறுகையில்,

நான் யாரையும் மிரட்டவில்லை. அவர் விளம்பரத்திற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். படத் தலைப்பு சூர்யாவை குறிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

 

கோச்சடையான் டிக்கெட் விலை மோசடி: தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை: கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரியைக் கழிக்காமல் அதிக விலைக்கு டிக்கெட் விற்ற திரையரங்குகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவிடப்பட்டுள்ளது.

கோச்சடையான் டிக்கெட் விலை மோசடி: தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சென்னை உயர்நீதிமன்றத்தில் எர்ணாவூரைச் சேர்ந்த வக்கீல் எஸ்.முத்தையா என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், "தமிழ் திரைப் படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக அரசு 2011-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணைக்கு சென்னை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆனால், ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12-ந்தேதி வணிக வரித்துறை அதிகாரிகள் அரசாணை பிறப்பித்துள்ளனர். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும்," என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், ‘கோச்சடையான் படத்துக்கு வரி விலக்கு அளித்தது சரிதான். எனவே, கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது," என்று கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு மனுதாரரின் வக்கீல் ரவீந்திரன் ஆஜராகி, "கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட கோச்சடையான் படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கக் கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல், ஒரு சிலரைத் தவிர, தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் கேளிக்கை வரியை வசூலித்து வருகின்றனர். இந்த கோர்ட்டின் உத்தரவினை அவர்கள் மதிக்கவில்லை," என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இதுதொடர்பாக விரிவான மனுவைத் தாக்கல் செய்யுங்கள். திரையரங்குகள் கேளிக்கை வரியைக் கழிக்காமல் டிக்கெட்களை விற்றதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும். இந்த வழக்கு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்,' உத்தரவிட்டனர்.

 

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

சென்னை: சகல பாதுகாப்பு வசகளுடன் கூடிய புதிய வீட்டை மும்பையில் வாங்கி குடியேறினார் நடிகை ஸ்ருதிஹாஸன்.

தமிழ், தெலுங்கு, இந்தியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஸ்ருதிஹாஸன், கடந்த ஆண்டு வரை மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருந்தார்.

சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் அவரது ரசிகன் என்று கூறிக் கொண்டு வந்த ஒருவர் திடீரென தாக்கினார். ஸ்ருதி ஹாஸன் அதிர்ஷ்டவசமாக அதிலிருந்து தப்பினார். பிறகு போலீசார் தாக்கியவனை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

சகல பாதுகாப்பு வசதிகளுடன் மும்பையில் புதுவீடு வாங்கிய ஸ்ருதி!

இந்த சம்பவத்தை தொடர்ந்து சில நாட்கள் தோழி வீட்டில் தங்கி இருந்தார். பிறகு பலத்த பாதுகாப்புடன் வாடகை வீட்டுக்கே திரும்பி சென்றார்.

இருந்தாலும் சொந்தமாக வீடு வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார். மும்பை அந்தேரி பகுதியில் இரண்டு படுக்கை அறையுடன் அவருக்கு பிடித்த வகையில் ஒரு வீடு கிடைக்க, அதை உடனடியாக பேசி முடித்து, குடிபுகுந்துவிட்டார்.

இந்த வீட்டுக்குப் பக்கத்து வீடுகளில் நடிகர் இம்தியாஸ் அலி, நடிகை பிராச்சி தேசாய் போன்ற சினிமா பிரபலங்கள் வசிப்பதால், பயமின்றி இருக்கலாம் என நினைத்து குடிவந்திருக்கிறாராம்.

இருந்தாலும் பாதுகாப்புக்கு இரு காவலாளிகளை நியமித்துள்ளாராம் ஸ்ருதி.

 

ரஜினியின் லிங்கா... தெலுங்கு உரிமையை ரூ 30 கோடி விலை பேசும் விநியோகஸ்தர்கள்!

ரஜினியின் லிங்கா படத்தின் தெலுங்கு உரிமைக்கு ரூ 30 கோடிவரை தர தெலுங்கி விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோச்சடையானுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் லிங்கா. ஆனால் அவர் முழுமையாக நடிக்கும் படம் என்றால், எந்திரனுக்குப் பிறகு லிங்காதான். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேக்கப் போட்டிருக்கிறார் இந்தப் படத்துக்கு.

ரஜினியின் லிங்கா... தெலுங்கு உரிமையை ரூ 30 கோடி விலை பேசும் விநியோகஸ்தர்கள்!

இந்தப் படத்தில் ரஜினியின் கெட் அப், படத்தின் கதை போன்றவை பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

இன்னொரு பக்கம், தொன்னூறுகளில் நடித்தது போல, இந்தப் படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்து வெளியிடும் முடிவில் உள்ளனர் படக்குழுவினர். வெகு வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.

மைசூரில் கடந்த மே 2-ம் தேதி தொடங்கிய லிங்கா படப்பிடிப்பு, தொடர்ந்து அந்தப் பகுதியிலேயே நடந்து வருகிறது.

ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா, பிரிட்டிஷ் நடிகை லாரன் இர்வின் ஆகியோர் நடிக்கின்றனர். நயன்தாரா ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார். சந்தானம், ஜெகபதிபாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் உள்ளது.

முத்து, படையைப்பா மாதிரி அதிரடி ஆக்ஷன் பொழுதுபோக்குப் படமாக லிங்கா உருவாகி வருகிறது.

பாதிப் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையிலேயே படத்துக்கான வர்த்தகத்தை ஆரம்பித்துவிட்டனர் தென்னிந்திய திரைப்பட விநியோகஸ்தர்கள்.

லிங்காவின் தெலுங்கு ஏரியா உரிமையை ரூ 30 கோடிக்கு விலைபேசி வருகின்றனர். ஏற்கெனவே ரஜினியின் எந்திரன் ரூ 28 கோடிக்கு விற்பனையாகி, ரூ 45 கோடிக்கு மேல் வசூலித்தது நினைவிருக்கலாம்.

கர்நாடகாவில் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷே வெளியிடுகிறார். கேரள உரிமையைப் பெறுவதில் பெரும் முனைப்பு காட்டி வருகிறது சத்யம் சினிமாஸ். தமிழகம் மற்றும் உலக அளவிலான வெளியீட்டை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

 

அன்பளிப்பு வேண்டாம்: எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள்- அமலா பால், விஜய்

சென்னை: தங்கள் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்போ, மலர் கொத்தோ கொண்டு வந்து தர வேண்டாம் மாறாக எபிலிட்டி பவுன்டேஷனுக்கு அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, டிடியாகவோ அளிக்குமாறு நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அன்பளிப்பு வேண்டாம்: எபிலிட்டி பவுன்டேஷனுக்கு செக், டி.டி. கொடுங்கள்- அமலா பால், விஜய்

காதலர்களாக வலம் வந்த இயக்குனர் விஜய், நடிகை அமலா பால் ஆகியோரின் திருமணம் வரும் 12ம் தேதி சென்னையில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடைபெறுகிறது. அன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

இந்நிலையில் பத்திரிக்கை வைக்கையில் அதனுடன் ஒரு வேண்டுகோள் கடிதத்தையும் சேர்த்து வைத்திருக்கிறார்கள் அமலாவும், விஜய்யும்.

அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ "எபிலிட்டி பவுன்டேஷன்" என்ற அமைப்புக்கு வழங்குங்கள். இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறன் குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளும் பராமரித்து படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

சென்னை: திமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா.

இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையதளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அது உண்மையல்ல.

கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!

உண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது.

முன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார். அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார்.

ஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன்.

அப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.

கடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்:

"உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்குப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.

அந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது!"

 

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்! - தயாரிப்பாளர்

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்.

ரஜினி மூன்று வேடங்களில் தோன்றிய கோச்சடையான் படம் கடந்த 23-ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியான கோச்சடையான் தென்னகத்தில் பெரும் வெற்றிப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடஇந்தியாவில் படம் எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

இதை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் முரளிமனோகரே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகளை விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கோச்சடையான் இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுப்போம்! - தயாரிப்பாளர்

இதுகுறித்து அவர் கூறுகையில், "கோச்சடையானில் பயன்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் வட இந்தியாவுக்குப் புதிது. தென்னக மக்களைப் போல அவர்களால் இதை ரசிக்க முடியவில்லை.

எங்களுக்கு இருந்த பட்ஜெட், கால அளவில் ஒரு படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் தந்திருக்கிறோம். இதில் சில குறைகள் இருக்கலாம். ஆனால் இதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகத்தில் அப்படி எந்தக் குறையும் இல்லாமல் சிறப்பாக எடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்," என்றார்.

கோச்சடையானின் அடுத்த பாகம்தான் ராணா. அநேகமாக இந்தப் படத்தை நிஜமான ரஜினி மற்றும் அனிமேஷன் ரஜினி என கலந்து எடுக்கலாம் எனத் தெரிகிறது.

 

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

நடிகை பூஜாவுக்கு திருமணமாகிவிட்டது என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுபுதுப்புது விதமாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

திடீரென ஒரு அழகு சாதனை கடைத் திறப்புக்கு வந்து நின்றார் பூஜா. கேட்டால், திருமணமா.. எனக்கா... நான் பாட்டுக்கு பெங்களூரில் என் பெற்றோர் விருப்பப்படி அவர்களுடன் இருந்தேன் என்றார்.

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

அடுத்த ஒரு ஆண்டில், பாலா இயக்கிய பரதேசியில் நடிக்க வந்த வாய்ப்பைக் கூடத் துறந்துவிட்டு, விடியும் முன் என்ற படத்தில் நடித்தார்.

நல்ல பலன். படம் ஹிட். பூஜாவுக்கு நல்ல பெயர். தொடர்ந்து நல்ல கதைகள் வந்தால் நடிப்பைத் தொடர்வதாகக் கூறி வந்தார்.

இன்னும் எத்தனைவாட்டிதான் பூஜாவுக்கு கல்யாணம் பண்ணிப் பார்ப்பாங்களோ!

இந்த நேரத்தில்தான் திடீரென அவருக்குத் திருமணம் நடந்ததாக செய்திகள் பரவின கடந்த இரு தினங்களாக. அவருடன் யாரோ ஒரு இளைஞர் நிற்க, கைகளில் மாலையுடன் பூஜா.

ஆனால் இதனை அடியோடு மறுத்துள்ளார் பூஜா. தான் நடிக்கும் ஒரு படத்தின் காட்சி இது என்றும், அந்த இளைஞர் தன் நண்பர் மட்டும்தான் என்றும் பூஜா தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

இப்படித்தான் சில தினங்களுக்கு முன் இன்னொரு நடிகை, இதே போல மாலையும் கையுமாக நிற்க, உடனே அவருக்கு திருமணம் என்று செய்தியைக் கிளப்பிவிட்டார்கள் சிலர். அப்புறம்தான் தெரிந்தது, அதுவும் ஒரு படத்தின் காட்சிக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்று!

 

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

கருணாநிதிக்கு ரஜினி பிறந்த நாள் வாழ்த்து!

சென்னை: 91வது பிறந்த நாள் காணும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு வாழ்த்துகள் தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கருணாநிதியின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.

அரசியல் தாண்டி, பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், சமூகப் பிரபலங்களும், திரையுலகினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இவர்களில் சினிமாக்காரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்த்துகளை மிக மிக ரகசியமாக அவருக்குத் தெரிவித்து வருகின்றனர். இத்தனைக்கும் கடந்த முறை கருணாநிதி ஆட்சியில் இருந்த போது கிட்டத்தட்ட அவர் மடியில் ஏறி உட்கார்ந்து கொள்ளாத குறையாக செல்லம் கொஞ்சியவர்கள்.

சினிமாக்காரர்களுக்கு என்று தனி வாரியமே அமைக்கச் சொல்லி கேட்டு வாங்கி அனுபவித்தவர்கள். கருணாநிதியும் சினிமாக்காரர்கள் என்ன கேட்டாலும் இல்லையென்ற சொல்லே சொல்லாமல் வாரி வழங்கத்தான் செய்தார்.

இன்று அவர்களில் யாரும் கருணாநிதிக்கு பிறந்த நாள் சொல்லவோ.. அட, அவர் வீடு இருக்கும் கோபாலபுரம் அல்லது சிஐடி காலனி பக்கமோ எட்டிப் பார்க்கவும் விரும்புவதில்லை.

ஆனால் கருணாநிதி பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை தங்கள் நெருங்கிய நண்பராகப் பாவிப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாதவர்கள் ரஜினிகாந்த், இளையராஜா போன்றவர்களே.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை இளையராஜா முடித்துக் கொண்டார்.

சூப்பர் ஸ்டாரான ரஜினியோ, வழக்கம்போல, கருணாநிதிக்கு தன் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மைசூரில் லிங்கா படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி, போனில் கருணாநிதியைத் தொடர்பு கொண்டு, 'நீண்ட ஆயுளுடன் நலமாய் வாழ' வாழ்த்து தெரிவித்தார். ரஜினி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் கருணாநிதி.

 

மிரட்டும் நடிகையின் தந்தை: தில்லாக கிசுகிசுக்கும் 'சேட்டன், சேச்சிகள்'

திருவனந்தபுரம்: காவியமான நடிகையும் அண்மையில் மனைவியை பிரிந்த நடிகரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள அவர் அண்மையில் தனது மனைவியை பிரிந்தார். அவரிடம் இருந்து பிரிந்த மனைவி மலையாள படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். தமிழில் கூட சிங்கத்திற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அந்த நடிகை.

நடிகருக்கும், மல்லுவுட்டில் பிரபலமாக இருக்கும் காவியமான நடிகைக்கும் இடையேயான தொடர்பு பற்றி தெரிந்து தான் அவர் மனைவி அவரை பிரிந்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகரும், காவியமான நடிகையும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கேரள மக்கள் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள்.

ஆனால் காவியமான நடிகையின் தந்தையோ அப்படி திருமணம் ஒன்றும் இல்லை எந்த பத்திரிக்கையாவது என் மகளுக்கு திருமணம் என்று எழுதினால் வழக்கு தொடர்வேன் என்கிறார்.