எதுக்கு வம்பு, பேசாம நீயும் கல்யாணம் செஞ்சுக்கோயேன்...?

சென்னை: ஒரு பெண்ணின் வேதனை இன்னொரு பெண்ணுக்குத்தான் புரியும் என்பார்கள். அடிக்கடி கிசுகிசுக்களில் சிக்கித் தவித்து வரும் நாயகிக்கு இன்னொரு நாயகி பேசாமல் திருமணம் செஞ்சுக்கோ, இந்த மாதிரியான பேச்செல்லாம் குறைந்து விடும் என்று அறிவுரை கூறியுள்ளாராம்.

1,2, 3, 4 என வரிசையாக காதல் கிசுகிசுக்களில் சிக்கி விட்டார் அந்த 8க்கும் 10க்கும் இடைப்பட்ட நாயகி. லேட்டஸ்டாக அவரை ஒரு உயரமான நடிகருடன் இணைத்துப் பேசி செய்தி வந்தது. ஆனால் அதே வேகத்தில் அந்த, நடிகர் தனது திருமணத்தை அறிவித்து அனைவரையும் அதிர வைத்தார்.

எதுக்கு வம்பு, பேசாம நீயும் கல்யாணம் செஞ்சுக்கோயேன்...?

இதனால் சம்பந்தப்பட்ட நடிகை விரக்தியாகி விட்டாராம். சமீபத்தில் 1ம் எண் நடிகரின் பிறந்த நாள் விழாவுக்கு வந்தபோது மனம் விட்டு சிரித்த முகத்துடன் நடிகருடன் வளைய வந்தாராம் நடிகை. இதனால் மறுபடியும் 1ம் எண்ணுக்கே தாவி விட்டார் நடிகை என்று வத்தி கொளுத்தி வாய்களில் வைத்து விட்டனர் வதந்தி பரப்பாளர்கள்.

இதையெல்லாம் பார்த்து டென்ஷனாகிப் போன நடிகையை போனில் பிடித்த அவரது தோழியும் சக நடிகையுமான அந்த 2க்கும், 4க்கும் இடைப்பட்ட நடிகை, பேசாம என்னைப் போல் கல்யாணம் செஞ்சுக்கோ. பிரச்சினையே வராது. வம்பு பேசும் வாய்கள் ஓயும் என்று அட்வைஸ் கொடுத்துள்ளாராம்.

தீவிரமாக திங்க் செய்து கொண்டிருக்கிறாராம் நடிகை.

 

என்னை இனி இயக்குநர் விஜய்னு போட்டா போதும்... நோ இனிஷியல் ப்ளீஸ்!

இனிமேல் என்னை இனிஷியலுடன் அழைக்க வேண்டாம். பெயருக்கு முன் இயக்குநர் என்று குறிப்பிட வேண்டும் என்று இயக்குநர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

கிரீடம் படம் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் விஜய். மதராசபட்டணம், தெய்வத் திருமகள், தாண்டவம், தலைவா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

என்னை இனி இயக்குநர் விஜய்னு போட்டா போதும்... நோ இனிஷியல் ப்ளீஸ்!

பிரபல தயாரிப்பாளர் ஏஎல் அழகப்பனின் மகன் இவர். எனவே அவரை ஆரம்பத்திலிருந்து ஏ எல் விஜய் என்றே குறிப்பிட்டு வந்தனர். ஆனால் தலைவா படத்தின் போது, தன் பெயரை இயக்குநர் விஜய் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் மீடியாவில் அவரை தொடர்ந்து ஏ எல் விஜய் என்றே குறிப்பிட்டு வந்தனர்.

எனவே மீண்டும் தன் பெயருடன் இனிஷியலை சேர்க்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.

"நண்பர்களே.. இனி என்னைப் பற்றிய செய்திகளில் ஏஎல் விஜய் என்று குறிப்பிட வேண்டாம். இயக்குநர் விஜய் என்று குறிப்பிடவும்," என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

படத்தை முடி, என்னை கட்டிக்கோ: நிஜமாகும் நடிகையின் டீல்?

சென்னை: நான்காவது காதலும் முறிந்துள்ள நடிகை ஒரு படத்தில் நடிக்கும் முன்பு தனது முன்னாள் காதலருடன் போட்ட டீல் செயல் வடிவம் பெற உள்ளது என்று கூறப்படுகிறது.

முதல் காதல் வம்பில் முடிய, இரண்டாவது காதல் டான்ஸ் ஆட, மூன்றாவது காதல் பாஸ் ஆகாமல் போக நான்காவது முறையாக காதலில் விழுந்தார் அந்த நட்சத்திர நடிகை. ஆனால் அவர் நேரமோ என்னவோ நான்காவது காதலும் முறிந்துவிட்டது. அந்த லேட்டஸ்ட் காதலருக்கு வேறு ஒருவருடன் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆக நடிகை தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

படத்தை முடி, என்னை கட்டிக்கோ: நிஜமாகும் நடிகையின் டீல்?

முன்னதாக நடிகை பல காலம் கழித்து தனது முதல் காதலருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படம் இந்த ஆண்டு ரிலீஸாக உள்ளது.

நடிகை அந்த படத்தில் நடிக்க ஒரு கன்டிஷன் போட்டாராம். அதாவது படத்தில் நடித்து முடித்த உடன் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தனது முதலாவது காதலரிடம் தெரிவிக்க அவரும் வம்பு செய்யாமல் ஒப்புக் கொண்டதாக பேச்சாக கிடந்தது.

இந்நிலையில் நடிகை வம்புக்கு பெயர் போன அந்த நடிகரை தான் திருமணம் செய்துகொள்வார் என்று ஒரு கூட்டம் தற்போதே பேச ஆரம்பித்துவிட்டது.

 

ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!

கேரளத்திலிருந்து மற்றுமொரு நடிகையைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா. அவர் ஸ்ருதி பாலா. ஏ வெங்கடேஷ் இயக்கும் ‘ரொம்ப நல்லவன்டா நீ‘ படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.

‘மிர்ச்சி' செந்தில் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ‘ரோபோ' சங்கர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

தனது தமிழிப் பட பிரவேசம் குறித்து ஸ்ருதி பாலா கூறுகையில், "விளம்பரப் படங்கள் மற்றும் மாடலிங் செய்து கொண்டிருக்கும் பொழுது சினிமா வாய்ப்புகள் வந்தன.

ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!

சிறு வயது முதலே பாரம்பரிய நடனம் கற்று வந்ததால் நடிப்பு சுலபமாய் அமைந்தது.

எனது முதல் படம் நல்ல கதையுடையதாய் இருக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கேற்றாற்போல் இயக்குனர் வெங்கடேஷ் இக்கதையை கூறினார். ‘அங்காடி தெரு' படத்தில் படுபயங்கரமாய் வரும் ஆளா இவர் என்று ஆச்சரியபர்பட்டேன்.

ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!

ரொம்ப நல்லவன்டா நீ நகைச்சுவை திரைப்படம். எனது கதாப்பாத்திரம் ஒரு தைரியமான படித்த பெண். ‘மிர்ச்சி' செந்தில் எனக்கு ஜோடியாக வருகிறார். துளியும் அலட்டல் இல்லாத மனிதர். இருப்பினும், ஷூட்டிங் சமயத்தில் செந்தில் , ‘ரோபோ' சங்கர் இருவரும் என்னை வம்பு செய்து கொண்டே இருப்பார்கள்.

ஸ்ருதி பாலா... 'ரொம்ப நல்லவன்டா நீ' படத்துக்காக மேலும் ஒரு கேரள நாயகி!

‘ரோபோ' எப்பொழுதும் கலகலவென இருப்பார். அவர் இருந்தால் ஷூட்டிங் முழுதும் மகிழ்ச்சியாய் இருக்கும்," என்றார்.

 

லிங்குசாமியிடமிருந்து 'ரஜினி, கமலை' வாங்கிய ஈராஸ்!

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் கமலின் உத்தம வில்லன் மற்றும் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் ஆகிய படங்களை வாங்கியது ஈராஸ் நிறுவனம்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள உத்தம வில்லன் படத்தை லிங்குசாமியும் கமலும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமையை ஏற்கெனவே ஈராஸ் வாங்கியிருந்தது. இப்போது பட வெளியீட்டு உரிமையையும் வாங்கியுள்ளது ஈராஸ். தெலுங்கிலும் இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனமே வெளியிடுகிறது.

லிங்குசாமியிடமிருந்து 'ரஜினி, கமலை' வாங்கிய ஈராஸ்!

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் தந்த பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டு உரிமையையும் ஈராஸ் நிறுவனமே வாங்கியுள்ளது.

எதிர்ப்பார்ப்புக்குரிய இரு பெரிய படங்களை வாங்கி, தமிழில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது ஈராஸ்.

 

பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!

வடிவேலு - ஆட்சியும் வீழ்ச்சியும்...

பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான அன்பையும் நட்பையும் எப்போதும் வைத்திருக்கும் திரைப் பிரபலங்களில் வைகை ப்புயல் வடிவேலுவும் ஒருவர். அதுவும் "வாங்க பங்காளி " என்று அவர் அழைக்கும் அன்பில் யாரும் உருகிப் போவார்கள். அவர் படங்களை இப்போது அதிகம் பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களைபோலவே மீடியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வருத்தமே.

இப்போது எலி படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வந்திருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

இன்று வடிவேலு இருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க வடிவேலு மட்டும்தான் காரணமே தவிர, வேறு யாரும் இல்லை. அதற்கு சாட்சியான சில சம்வங்களைப் பார்க்கலாம்.

இன்று வரைக்கும் வடிவேலுவின் சினிமா வரலாற்றில் அவர் கதையின் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசிதான். ஆனால் அதற்கு கதையில் இருந்த தொடர்ச்சியான காமெடி பெரிய பலமாக இருந்தது. அதோடு வடிவேலுவின் வெள்ளந்தியான நடிப்பும் படத்திற்கு பலம் கூட்டியது. ஆனால் இந்த உண்மையை மறந்து படத்தின் இந்த இமாலாய வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்னம் வடிவேலுவுக்குள் எழ ஆரம்பித்தது. அங்கிருந்து தொடங்கியது அவரின் திரைச்சரிவு.

பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!

அந்த அதீத நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படம். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து இயக்குனராக தம்பி ராமையாவிற்கு வடிவேலு மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடி தலையீடுகள் எண்ணிலடங்காதவை. காமெடியாக உருவாக்கப்பட்டிருந்த முழுக்கதையையும் மாற்றி தன்னை ஒரு ஹீரோவாகவே காட்ட வேண்டும் என்று பெரும் நெருக்கடி கொடுத்தார் வடிவேலு. ஆனால் தம்பி ராமையா 'பங்காளி முழு ஹீரோவாக நீங்கள் நடித்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். காமெடியனாக இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்' என்று சொல்லியும் அவரின் தலையீட்டால் படம் பப்படம் ஆனது. பெரும் கேலிக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டது வடிவேலு அல்ல. மீண்டும் தனக்கு இயக்குநராக வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் படமெடுத்த இயக்குநர்தான் பாதிக்கப்பட்டார்.

அதன் பிறகு வடிவேலு சிங்கமுத்து பஞ்சாயத்து பரபரப்பானது. ஒட்டு மொத்த மீடியாக்களும் வடிவேலுவுக்கு ஆதராவாகத்தான் இருந்தன. தனக்கு நெருக்கமான வார இதழ் நிருபரிடம் வடிவேலுவே "பங்காளி நீங்க எழுதுன பேட்டிதான் எனக்கு பெரிய உதவியா இருந்துச்சு" என்று மனம் திறந்து கூறினார். அப்படியிருந்த வடிவேலு அடுத்த செய்த தவறுதான் அவரின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விட்டது.

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த நெருக்கமான நிருபர் அவருக்கு போன் செய்து "அண்ணே கொஞ்சம் யோசிங்கண்ணே.. கலைஞர்களுக்கு அரசியல் தேவையில்லைண்ணே. இப்போதைக்கு கூட்டம் கூடுவதைப் பார்க்கும்போது சின்ன சபலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதன் முடிவு உங்களை ஏதோ ஒரு கட்சிக்கு எதிரியாக உட்கார வைத்து விடும்" என்று சொன்னார். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் வடிவேலு இல்லை. ஆனால் முடிவு அந்த நிருபர் சொல்லி வைத்தது போலவே அமைந்தது. பாவம் திமுகவின் அரசியல் லாபத்திற்காக தன்னுடைய சினிமா கேரியரை இழந்து நின்றார் வடிவேலு.

பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!

ஆனால் எந்தக் கட்சிக்காக அவர் தெருத் தெருவாக அலைந்து வாக்குச் சேகரித்தாரோ அந்த கட்சியின் குடும்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சினிமாக்களிலும், அந்த குடும்பத்து உறுப்பினரான உதயநிதி தான் நடிக்கும் படித்திலும் சந்தானத்திற்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, தங்கள் கட்சிக்கு பாடுபட்ட வடிவேலுவுக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. இதுதான் அரசியல் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்து, வடிவேலுக்கு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

அதன் பிறகும் நடந்த சம்பவங்கள் இன்னும் மோசமானவை. சினிமா கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலுவைப் புறக்கணிக்க ஆரம்பித்தது. அந்த நிலையிலும் அவர் தனக்கான கேரியரைத் தவற விடும் காரியத்தில்தான் இருந்தாரே தவிர, இம்மியளவு கூட தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னைத் தேடி வந்த சில படங்களையும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நடிக்க மறுத்து திருப்பி அனுப்பினார். அதற்கும் தயாராக இருந்த சிலருக்கு தன்னுடைய சம்பளமாக பல கோடிகளைக் கேட்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி அனுப்பி வைத்தார்.

அப்போதும் அவருக்கு நெருக்கமான அந்த பத்திரிகையாளர் மீண்டும் அக்கறையோடு "அண்ணே எனக்கு ஒரு ஐடியா தோணுது.. நீங்கள் புலிகேசி படத்தோட செகண்ட் பார்ட்டில் நடிக்கலாமே" என்று யோசனை சொல்ல அது அவருக்கு பளிச்சென்று உரைத்திருக்கிறது. "ஆமா பங்காளி நல்ல ஐடியாவாக் இருக்கு" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அங்கும் சம்பளம் பஞ்சாயத்து நடந்தது.

ஆனால் அதற்குள் தெனாலிராமன் ஐடியாவை வைத்துக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு சம்பளத்தையும் அதிகப்படுத்தி பேச அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் வடிவேலு. இந்த தகவல் அந்த நிருபருக்கு போய் அவர் தெனாலிராமன் கதையில் நடித்தால் ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துச் சொன்னார்.

"அண்ணே முதலில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து விட்டு அப்புறம் இந்த படத்தில் நடிக்கலாம். காரணம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை முழுதும் எனக்கு தெரியும். முதல் பார்ட்டை விட அசத்தலான காமெடி இருக்கு.

இப்போ தெனாலிராமன் வந்தால் புலிகேசி மாதிரி இல்லைன்னு ஒரு பேச்சு வரும். காரணம் தெனாலிராமன் கதை சின்ன குழந்தைகள் வரைக்கும் படிக்கும் பாடமாக பள்ளிக்கூடத்தில் இருக்கிறது. அதனால் சுவராஸ்யம் குறைவாக இருக்கும். அதனால் புலிகேசி 2-ல் நடித்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். அதன் பிறகு வேண்டுமானால் தெனாலிராமனில் நடிக்கலாம்... இப்போது தெனாலிராமன் தோற்று விட்டால் மீண்டும் நீங்கள் சரித்திரப் படத்தில் நடிக்க முடியாமலே போய் விடும்" என்று சொல்லியும் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெனாலிராமனில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

படம் வெளிவந்தவுடன் வடிவேலுவின் பக்கத்தில் இருக்கும் நண்பர்களே அந்த நிருபருக்கு போன் செய்து "அண்ணே நீங்க சொன்ன் மாதிரியே நடந்து போச்சுண்ணே... நல்லது சொன்ன கேடக் மாட்டேங்குறாரேண்ணே" என்று வருத்தப்பட்டார்கள் என்பது வைகை புயலுக்கே தெரியாத உண்மை.

இப்போது அதே கதாநாயக கனவுடன் எலி படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று மீண்டும் அவர் கோடம்பாக்கத்தில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

ஆனால் அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர மறுக்கிறார். அவரை ரசிகர்கள் பல வித கெட்டப்புகளில் ரசித்து கைத்தட்டியது எல்லாமே சிறு முதலீட்டுப் படங்களில் கதைக்கு இடையில் அவர் செய்த காமெடி வேடங்களைத்தான். அது மாதிரியான கேரக்டர்களைத்தான் மக்கள் ரசிக்க விரும்புகிறார்களே, தவிர அவர் ஹீரோவாக வந்து பஞ்ச் டயலாக் பேசும் காட்சிகளை அல்ல. இந்த உண்மையை எலி படமும் அவருக்கு உணர்த்தும்.

என்.எஸ்கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என்று எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் மக்களை சிரிக்க வைப்பதிலும் திரையுலகிற்கு தங்களை அர்ப்பணிப்பதிலும் மட்டும்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, பாவம் எல்லோரும் சம்பாதிப்பதில் கோட்டை விட்டனர். ஆனால் அவர்கள் இந்த உலகில் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் குடியிருக்கிறார்கள்.

வாழும் காலத்திலேயே புகழ் மங்கிப் போய் விடாமல் நாளை நாமும் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டும் என்பதை இன்று நாம் நடந்து கொள்வதுதான் தீர்மானிக்கிறது என்பதை பாசத்திற்குரிய பங்காளி புரிந்து கோள்ள் வேண்டும் என்பதே நமது ஆசை. வீழ்ச்சிக் காலம் முடிந்து திரையுலகில் அவர் ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கட்டும்!

-தேனி கண்ணன்

 

ரிட்டயர் ஆகறதுக்குள்ள அஜீத்தோட நடிச்சிடணும்... பிந்து மாதவியின் ஆசை

அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்று மீடியா முன் கோரிக்கை வைக்கும் நடிகைகள் பட்டியலில் பிந்து மாதவியும் இடம் பிடித்துவிட்டார்.

‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்' என்ற படத்தில் நகுல் ஜோடியாக நடித்து வரும் பிந்து மாதவி, அந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது மீடியாவுக்கு அளித்த பேட்டியில், "நடிப்பு நான் விரும்பி தேர்வு செய்த துறை. எனவே அனுவித்து நடிக்கிறேன்.

ரிட்டயர் ஆகறதுக்குள்ள அஜீத்தோட நடிச்சிடணும்... பிந்து மாதவியின் ஆசை

சினிமாவை விட்டு விலகுவதற்குள் ஒரு படத்திலாவது அஜித்துக்கு ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று ஆசையாக உள்ளது. காரணம் எனக்கு அவரை ரொம்பவும் பிடிக்கும். தமிழ் சினிமா நடிகர்களில் மிகவும் அழகானவர் அஜித்தான்," என்றார்.

அவரைப் பற்றி வரும் காதல் கிசுகிசுக்கள் குறித்து கூறுகையில், "நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன்," என்றார்.

 

கார்த்தி - சுராஜ் படத்துக்காக திருப்பதியில் மொட்டை போட்ட விவேக்

கார்த்தி - சுராஜ் இணையும் புதிய படத்துக்காக திருப்பதி போய் மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார் நடிகர் விவேக்.

அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்' படத்தில் விவேக் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

வழக்கமாக ஹீரோ போலீஸ் அதிகாரி என்றால், காமெடியனை கான்ஸ்டபிளாக்கி காமெடி செய்ய வைப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் ஹீரோ அஜீத்த்துக்கு இணையான போலீஸ் அதிகாரி வேடத்தில் விவேக்கை கண்ணியமாக காமெடி செய்ய வைத்திருந்தார் இயக்குநர் கவுதம் மேனன்.

கார்த்தி - சுராஜ் படத்துக்காக திருப்பதியில் மொட்டை போட்ட விவேக்

இது ரசிகர்களுக்கும் ரொம்பப் பிடித்திருந்தது.

அடுத்து சுராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் விவேக் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் தன் உதவியாளரும் நடிகருமான செல் முருகனுடன் திடீரென திருப்பதி சென்று மொட்டை போட்டுத் திரும்பியுள்ளார்.

என்னை அறிந்தால் வெற்றிக்காகவும், அடுத்து நடிக்கும் கார்த்தி - சுராஜ் படத்துக்காகவும் இந்த மொட்டை என்று தெரிவித்துள்ளார் அஜீத்.

சுராஜ் இயக்கத்தில் ஏற்கெனவே படிக்காதவன் படத்தில் விவேக் செய்த காமெடி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது புதிய கெட்டப்பில் சுராஜ் படத்தில் காமெடி செய்யப் போகின்றனர் விவேக்கும் செல்முருகனும்.

 

இன்று ஒரு முக்கியமான ஆளுக்கு பிறந்தநாள் தெரியுமா?

மும்பை: சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் நடிகை இன்று ஒரு முக்கியமான ஆளுக்கு பிறந்தநாள் தெரியுமா?  

இந்நிலையில் தான் அவர் பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்து பெரும் சர்ச்சையை கிளப்பினார். அந்த சர்ச்சை அடங்கும் முன்பே காமசூத்ரா 3டி படத்தில் நடித்தார். படப்பிடிப்பில் அவர் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்தது.

இப்படி எதற்கெடுத்தாலும் நிர்வாண போஸ் கொடுக்கும் அவர் தனக்கு வெட்கம் அதிகம் என்று வேறு பேட்டி கொடுத்துள்ளார். வெட்கத்திற்கு அவருக்கு அர்த்தம் தெரியவில்லை போன்று.

இப்படி ஏதாவது வில்லங்கமாக செய்து சர்ச்சையில் சிக்கும் ஷெர்லின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இது ரொம்ப முக்கியம் என்ற ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ் கேட்கிறது. என்ன பாஸ் செய்ய?

 

மனோபாலா தயாரிக்கும் பாம்பு சட்டை இன்று ஆரம்பம்

மனோபாலா தயாரிப்பில் பாபி சிம்ஹா ஹீரோவாக அறிமுகமாகும் பாம்புச் சட்டை படம் இன்று தொடங்கியது.

ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு அதிகம் தேடப்படும் நடிகராகிவிட்டார் பாபி சிம்ஹா. உறுமீன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதில் மனோபாலா தயாரிப்பில் ‘பாம்பு சட்டை' என்னும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

மனோபாலா தயாரிக்கும் பாம்பு சட்டை இன்று ஆரம்பம்

இப்படத்தை ஆர்.சரத்குமார், ஆர்.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிபன் ஆகியோரின் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கிறது.

இதில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்கள். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார். இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி தயாரிப்பாளர் மனோபாலா கூறுகையில், ‘எனது முதல் தயாரிப்பான ‘சதுரங்க வேட்டை' திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களைக் கவரும் வண்ணம் அடுத்த தயாரிப்பும் இருக்க வேண்டும், நல்ல படங்களை தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்று எண்ணினேன்.

ஆடம் தாசன் இந்த கதையை கூறிய உடனே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்தேன். இன்று முதல் இப்படத்தின் படப்பதிவு தொடங்கவுள்ளது.

"கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் மக்களைக் கவர்ந்துள்ள பாபி சிம்ஹா இப்படத்திற்கு பெரும் பலம். ‘பாம்பு சட்டை' சிம்ஹாவின் ஆற்றல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானத்தின் உண்மையான அடையாளத்தையும் வெளிபடுத்தும்.

கதாநாயகி கீர்த்தி சுரேஷ் 'நெற்றிக்கண்' படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் ‘தாமிரபரணி' புகழ் பானு இப்படத்தில் நடிக்கிறார். கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும். வெவ்வேறு திறமைகளின் கூட்டணியான இந்த பாம்பு சட்டை பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும்," என்றார்.

 

என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

என்னை அறிந்தால் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து ஒருவழியாக ஓய்ந்துள்ளன.

இப்போது படத்தின் பிஸினஸ் பற்றி பலரும் பலவிதமாக எழுத ஆரம்பித்துள்ளனர். சிலர் படம் பிரமாதமான வெற்றி என்றும், சிலர் அப்படியெல்லாம் இல்லை... சராசரிதான் என்றும் கூறி வருகின்றனர்.

தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் இதுபற்றி எதுவும் கூறாமல் அமைதி காக்கிறார். அவர் எப்போதுமே அப்படித்தான். பெரிய வெற்றி என்றாலும், தோல்வி என்றாலும் மவுனம்தான் அவர் பதில்.

என்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா?

சரி படம் உண்மையில் எப்படிப் போகிறது?

நன்றாகவே ஓடுகிறது. வசூலும் திருப்தியாக உள்ளது.

என்னை அறிந்தால் படம், வெளியாகி ஒரு வாரம் முடிந்த நிலையில் ரூ 60 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது மொத்தமாக. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ 40 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளது. இந்தப் படத்தின் பட்ஜெட்டை வைத்துப் பார்க்கும்போது, இது உண்மையிலேயே நல்ல வசூல்தான். வரி போக ரூ 28 கோடி வரை கிடைத்திருக்கிறது. பிற மாநிலங்களில் கேரளா, கர்நாடகாவில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்காவில் 4 லட்சம் டாலருக்கு மேல் வசூலித்துள்ளது இந்தப் படம். மொத்தமாக ரூ 60 கோடிக்கும் மேல் வசூலித்து, டீசன்டான வெற்றியைப் பெற்றுள்ளது என்னை அறிந்தால்.

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் சந்தோஷமாக அஜீத்தின் அடுத்த பட வேலைகளை ஆரம்பித்துவிட்டார்.

 

சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கினார் ஏ ஆர் ரஹ்மான்

சூர்யா நடிக்கும் புதிய படமான '24'- ன் இசையமைப்பு வேலைகளைத் தொடங்கிவிட்டார் ஏ ஆர் ரஹ்மான்.

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் சூர்யா, நயன்தாரா, பிரணிதா நடித்து வரும் படம் ‘மாஸ்'. இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளன.

சூர்யா படத்துக்கு இசையமைக்கத் தொடங்கினார் ஏ ஆர் ரஹ்மான்

இந்நிலையில் அடுத்து விக்ரம் கே குமார் இயக்கத்தில் '24' என்ற படத்தில் நடிக்கிறார் சூர்யா.

இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். ‘சில்லுன்னு ஒரு காதல்' படத்திற்கு பிறகு 9 வருடங்கள் கழித்து சூர்யா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்துக்கான இசைப் பணிகளை ஏ.ஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டார்.

விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளியான ‘யாவரும் நலம்' மற்றும் தெலுங்கில் ‘மனம்' என இரண்டுமே வித்யாசமான கதையம்சத்தில் அமைந்த படங்கள் என்பதால், சூர்யா விரும்பி அவரை தன் படத்தை இயக்க அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.