கமலின் விஸ்வரூபத்தை வெளியிடுகறது ஜெயா பிக்சர்ஸ்?


Kamal
கடந்த ஆட்சியில் சன் டிவி, திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோகத்துக்கென்று சன் பிக்சர்ஸ் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இந்த நிறுவனம் குறித்து ஆஹா ஓஹோ என்று பாராட்டிய சினிமாக்காரர்கள், நாளாக ஆக குத்துதே குடையுதே என புலம்ப ஆரம்பித்தனர்.

ஆட்சி மாற்றம் வந்ததும் சன் பிக்சர்ஸ் அடங்கிப் போக ஆரம்பித்தது. இப்போது ஜெயா டிவி முறை போலிருக்கிறது.

விரைவில் சினிமாவுக்கென்று ஜெயா பிக்சர்ஸ் எனும் பேனரில் படங்களை தயாரிக்க, விநியோகிக்க ஜெயா டிவி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான வேலைகளிலும் மும்முரமாக இறங்கியுள்ளதாம்.

இந்த சேனல் ஏற்கெனவே விஜய் நடித்த வேலாயுதம் படத்தை ஆஸ்கர் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டதாகக் கூறுகிறார்கள். அந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் பெற்றது. அடுத்து கமல் நடிக்கும் விஸ்வரூபம் படத்தின் தியேட்டர் மற்றும் டிவி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளதாக விஷயமறிந்த வட்டத்தில் கூறுகின்றனர்.
 

சினிமா நடிகையின் தியேட்டரைப் பறிக்கப் பார்த்த கோஷ்டி-போலீஸ் வலைவீச்சு!


கோவையைச் சேர்ந்த சினிமா நடிகை ஒருவருக்குச் சொந்தமான வீட்டை வாங்கிய சிலர், அந்த வீட்டோடு இணைந்துள்ள நடிகையின் தியேட்டரையும் அபகரிக்க முயன்றனர். அதைத் தட்டிக் கேட்க முயன்ற நடிகைக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது. போலீஸார் இதுதொடர்பாக ஐந்து பேரைத் தேடி வருகின்றனர்.

கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் புவனா என்கிற புவனேஸ்வரி. இவரது தந்தை பாலசுப்ரமணியம், தாயார் பெயர் சம்பூர்ணம். இவர்கள் தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். பூர்வீகம் கோவை அன்னூர் ஆகும்.

சூப்பர்டா, கலக்குற சந்துரு உள்ளிட்ட சில படங்களிலும் தலை காட்டியுள்ளார் புவனா. இவருக்கு சொந்த ஊரில் ஒரு தியேட்டரும், 2 வீடுகளும் உள்ளன. இதில் வீடுகள் இரண்டையும் தென்னம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த சுப்பிரமணியத்திற்கு ரூ. 50 லட்சத்திற்கு விற்று விட்டார். தியேட்டரை சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இன்னொரு சுப்பிரமணியத்திற்கு விற்க முடிவு செய்தார்.

இதுதொடர்பாக தனது தாயாருடன் புவனா அன்னூர் வந்தார். அப்போது தியேட்டருக்கு அவர் போனபோது ஏற்கனவே வீடுகளை வாங்கிய சுப்பிரமணியம், அவரது மனைவி, மகன் உள்பட 5 பேர் அங்கு வந்தனர். வீட்டோடு தியேட்டரையும் நாங்களை வாங்கி விட்டோம். எனவே இதை விற்க முடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. மேலும் புவனாவுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

இதையடுத்து அன்னூர் போலீஸில் புகார் கொடுத்தார் புவனா. இதையடுத்து போலீஸார் ஐந்து பேரையும் தேடி வருகின்றனர்.
 

அஜீத் பட நாயகிக்கு கல்யாணம்!


Bruna Abdullah
அஜீத்துடன் இணைந்து பில்லா-2 படத்தில் நடித்து வரும் பிரேசில் நாட்டு பேரழகி புரூனா அப்துல்லாவுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாம். இதனால் விரைவிலேயே அவர் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பம் நடத்தப் போகிறாராம்.

பில்லா 2 படம்தான் அவருடைய கடைசிப் படமாம். புரூனாவை மணக்கப் போகும் நபர் ஒரு பெங்காலியாம். கடந்த 3 வருடங்களாக அவர்கள் மும்முரமாக காதலித்து வருகின்றனராம். சமீபத்தில் புரூனாவுடன் பிரேசில் போய் அவருடைய அம்மா, அப்பாவைப் பார்த்து விட்டு வந்தாராம் இந்தக் காதலர்.

புரூனா வீட்டில் அத்தனை பேருக்கும் அவரது காதலரைப் பிடித்து விட்டதாம். இதனால் நிச்சயம் செய்து விட்டனர். இருப்பினும் பில்லா படத்தை முடித்து விட்டு வந்து விடுகிறேன், அதற்குப் பிறகு கல்யாணம், கச்சேரியை வைத்துக் கொள்ளலாம் என்று புரூனா கூறியுள்ளதால் படம் முடிந்த பிறகுதான் கல்யாணமாம்.

வெரிகுட்..!
 

கோச்சடையான் அனுபவம்... சிலிர்க்கும் ஆதி


Aadhi and Rajini
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்தது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் என்று நடிகர் ஆதி கூறினார்.

ரஜினியின் கோச்சடையான் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்து வருகிறது.

இப்படத்தில் சரத்குமார், ஆதி, முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நாயகியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ஆதி நடித்த காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

அந்த அனுபவம் குறித்து ஆதி கூறுகையில், "ரஜினி எனது ஆதர்ச நாயகன். என் இளம் வயதிலிருந்து அவரைப் பார்த்து வருகிறேன். என் அப்பா அவர் நடித்த பெத்தராயுடுவை இயக்கியவர்.

நான் நடித்த ஈரம் படத்தின் இசையை ரஜினி வெளியிட்டு வாழ்த்தியதை மறக்க முடியாது.

அப்படிப்பட்ட என் ஹீரோ, ரஜினி சாருடன் கோச்சடையான் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் மூலம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ள சௌந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் எனக்கு ஒரு சவால்.

ரஜினியை படப்பிடிப்பில் சந்தித்தது உற்சாகமூட்டுவதாக அமைந்தது. நான் நடித்து முடித்த கடைசி நாளில் ரஜினியுடன் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது அவருடன் போட்டோ எடுத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். அதை அவரிடத்தில் சொல்ல தயங்கினேன். ஆனால் ரஜினி திடீரென என்னை பக்கத்தில் அழைத்து போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்றார். என் தோளில் கைபோட்டு படம் எடுத்தார். அது மறக்க முடியாத தருணம்," என்றார்.
 

அஜீத்தின் அசத்தல் ஹெலிகாப்டர் சண்டை!


பில்லா 2 படத்தின் டிரைலருக்கு பெரும் வரவேற்பு இணையத்தில். பல லட்சம் பேர் பார்த்த வீடியோவாக மாறியுள்ளது இந்த ட்ரைலர்.

வெளியான சில மணி நேரங்களில் 4 லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள்.

இந்த வீடியோவில் ரசிகர்களை உறைய வைத்தது அஜீத்தின் மயிர்க்கூச்செரியும் சண்டைக் காட்சிகள்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சி அது.

நானும் எத்தனையோ படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ளேன். ஆனால் இந்த அளவு ரிஸ்க் எடுத்த முன்னணி நடிகரை பார்த்ததில்லை. மைனஸ் டிகிரி குளிரில், உயரப் பறக்கும் ஹெலிகாப்டரிலிருந்து குதித்த அஜீத், ஒரு கையால் ஹெலிகாப்டரின் கம்பியைப் பிடித்து தொங்கியபடி சண்டை போட்டது என்னை அதிர்ச்சியில் உறைய வைத்தது. சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க் இது என அவருக்கு ஸ்டன்ட் அமைத்துக் கொடுத்த இயக்குநர் கீசா காம்பக்தீ வியப்பு தெரிவித்துள்ளார்.

ஏகத்துக்கும் ஏத்தி விடறாங்களே...!
 

நான் கை கால் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார்! - அஜீத் 'ஓபன் டாக்'!


என் நடிப்பு, முயற்சியைப் பாராட்ட மனமில்லாதவர்கள், என் தோற்றத்தையும் உடல் அமைப்பையும் கிண்டல் செய்கிறார்கள். 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு நான் நடப்பதே பெரிய விஷயம், என்கிறார் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியின் சில பகுதிகள்...

செல்ப் புரமோஷன் கிடையாது...

"நான் 'மங்காத்தா’வில் இருந்து என் படங்களை புரொமோட் பண்ணிப் பேசறது இல்லைனு முடிவு பண்ணிட்டேன். அது 'பில்லா-2’-வுக்கும் பொருந்தும். ஜூன் மாசம் படம் ரிலீஸ். இதுக்கு மேல் இப்போதைக்கு எதுவும் இல்லை!''

மனதை பாதித்த விமர்சனம்...

''படம் நல்லா இருக்கா, இல்லையானு சொல்லாம, சிலர் நான் குண்டா இருக்கேன்னு பெர்சனலா கமென்ட் அடிக்கிறாங்க. 15 ஆபரேஷன்களுக்குப் பிறகு என் மெட்டபாலிஸமே மாறிடுச்சு. நான் ரெண்டு காலையும் ஊன்றி நடக்கிறதே பெரிய விஷயம் சார். அதை நினைச்சு நான் சந்தோஷப்படுறேன்.

நான் நல்ல டான்ஸரா இல்லாம இருக்கலாம். ஆனா, அதுக்காக முயற்சி பண்றேன். இவ்வளவு சிகிச்சைகளுக்குப் பிறகும் ஹெலிகாப்டர்ல இருந்து குதிக்கிறேன்... சண்டை போடுறேன். ஆனா, தொடர்ந்து என் பெர்சனல் தோற்றத்தை சிலர் கிண்டல் செய்றது வருத்தமா இருக்கு!''

நெகடிவ் விமர்சனங்கள் குறித்து...

''என்கிட்டயே நிறையப் பேர் சொல்லியிருக்காங்க... பொறந்தா அஜீத்குமாராப் பொறக்கணும்னு. அஜீத்குமாருக்கு என்னல்லாம் கஷ்டம் இருக்குனு, அஜீத்குமாரா வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். சச்சின் டெண்டுல்கர் இப்படி ஆடணும்னு சொல்றது ரொம்ப ஈஸி. ஆனா, கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைச் சுமந்துக்கிட்டு விளையாடுற சச்சின் டெண்டுல்கருக்குத்தான் அது எவ்வளவு கஷ்டம்னு தெரியும்.

கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துட்டு கருத்து சொல்றது ஈஸி. களத்துல இறங்கி நின்னாதான், அது எவ்வளவு கஷ்டம்னு புரியும். 30 வயசுல நம்மால எல்லாம் முடியும்னு தோணும். இப்போ 40 வயசுக்கு மேல நம்மளை மீறி ஒரு சக்தி இருக்கு... அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும்னு தோணுது. என்னை விமர்சிக்கிற எல்லாருக்கும் அந்தப் பக்குவம் கிடைக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன்!''

ரசிகர்களுக்கு...

''இத்தனை ஆண்டுகளில் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டே இருப்பது கடவுள் ஆசீர்வாதம்தான். என் ரசிகர்களுக்கு வெறும் நன்றி சொன்னால், அது முழுமையாகாது. உண்மையைச் சொல்றேன்... தினமும் காலையில் கடவுளை வேண்டும்போது என் ரசிகர்களுக்காகவும் வேண்டிக்கிறேன். நான் இன்னைக்கு சினிமாவில் இருப்பேன். நாளைக்கு இல்லாமலும் போவேன். ஆனா, ஒரு அண்ணனா என் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். அட்வைஸ்னு தப்பா நினைக்கா தீங்க. உங்க தன்மானத்தை யாருக்கா கவும் விட்டுக்கொடுக்காதீங்க.

உங்க வேலையை 100 சதவிகிதம் ரசிச்சு செய்யுங்க. நல்லாப் படிங்க. நான் பத்தாவது வரைக்கும்தான் படிச்சேன். வாழ்க்கையில் கஷ்டப்பட்டுத்தான் பல விஷயங்களைக் கத்துக்கிட்டேன். ஆனா, அந்த ரூட் ரொம்பக் கஷ்டம். படிச்சிருந்தா இவ்வளவு அடிபட்டு வந்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காதே. அதனால நல்லாப் படிங்க. யாரையும் கண்மூடித்தனமா நம்பாதீங்க. யார் பின்னாடியும் போகாதீங்க. மத்தவன் காலை மிதிச்சு முன்னேறாதீங்க. சிம்பிளா சொல்றேன்... வாழு... வாழவிடு!''

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

"எனக்கு வாய்த்த நண்பர்கள் இப்படி..!''


Director A Venkatesh
விரைவில் வரவிருக்கும் ஒரு புதிய படத்தின் பெயர்தான் நீங்கள் படித்த தலைப்பு! இந்தப் படத்தை இயக்குபவர் அதிரடி ஆக்ஷன் மசாலா ஸ்பெஷலிஸ்ட் என அறியப்பட்ட ஏ வெங்கடேஷ்.

ஆனால் இந்தப் படம் வழக்கமான அவரது பாணி படமாக இல்லாமல், முற்றிலும் மாறுபட்ட காமெடி களத்தில் அமைந்துள்ளதாம்.

அந்த வித்தியாசத்தை தலைப்பிலேயே உணர்த்த வேண்டும் என்பதற்குதான், எனக்கு வாய்த்த நண்பர்கள்இப்படி என்று பெயர் வைத்தாராம். இதற்கு முன் அவர் இயக்கிய படங்களின் தலைப்பு ரொம்பவே சுருக்கமாக இருக்கும். மகா பிரபு, சாக்லெட், பகவதி, தம், குத்து, ஏய்...இப்படித்தான் இருக்கும்!

மவுண்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில், ஆர்.மது தயாரிக்கும், இந்தப் படத்தில் கதாநாயகனாக புதுமுகம், 'தேஜஸ்' நடிக்கிறார். 'தூவானத் தும்பிகள்", "மூனாம் முறா" உள்பட நூறு மலையாள படங்களில் நடித்த,முன்னாள் மலையாள வில்லன் நடிகர் அலெக்ஸின் மகன். கதாநாயகியாக 'உத்ரா' அறிமுகம் ஆகிறார்.

தம்பி ராமையா,சிங்கம் புலி,மயில்சாமி ,ஸ்ரீரஞ்சனி, கூத்துப்பட்டறை ஜார்ஜ் , ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முதன் முதலாக ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

"கழட்டி விடவும் முடியாம, கண்டிக்கவும் முடியாம மூன்று நடுத்தர வயது நண்பர்களோட, அவஸ்தை படுற ஒரு இளைஞனுக்கு காதலி ஒருத்தி குறுக்கே வருகிறாள். அப்புறம் என்னாகிறது என்பதுதான் கலகலப்பான இந்தப்படத்தின் திரைக்கதை," என்கிறார் வெங்கடேஷ்.

படத்தின் முதல் பாதியில், கதாநாயகனும், கதாநாயகியும்,பேசும் வசனங்கள்.. நாலே வரிகள்தானாம்.

இசை: ஸ்ரீகாந்த் தேவா ஒளிப்பதிவு-ஏ.வெங்கடேஷ், வசனம்-பட்டுக்கோட்டை பிரபாகர், பி.ஆர்.ஓ - ஜான்சன்.

மே மாதம் படப்பிடிப்பு தொடங்கி, வரும் ஆகஸ்ட்டில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி, பழனி, ஊட்டி போன்ற இடங்களில் நடக்கிறது.
 

திருமணத்துக்கு பின் நடிக்க வந்த ரீமா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கடந்த மாதம் திருமணம் முடித்த ரீமா சென், மீண்டும் நடிக்க வந்துள்ளார். தனது 2 வருட காதலர் ஷிவ் கரண் சிங்கை கடந்த மாதம் கைப்பிடித்தார் ரீமா சென். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு அவர் தடை விதிக்கவில்லை. ஆனால் நடிக்க வேண்டாம் என யோசிக்கிறேன் என ரீமா கூறியிருந்தார். ஆனால் தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தததும் ஓகே சொல்லியிருக்கிறார். எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து ஹிட்டான படம் சட்டம் ஒரு இருட்டறை. இதே படம் மீண்டும் இப்போது ரீமேக் ஆகிறது. நடிகர் விஜய், கில்லி பிலிம்ஸ் என்ற தனது புது நிறுவனம் மூலம் இதை தயாரிக்கிறார்.

இதில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். கோ கார்த்திகா ஹீரோயின். விஜய்யின் உறவினர் சினேகா இயக்குகிறார். இதில் கவர்ச்சியான வேடத்தில் பியா நடிக்க உள்ளார். பெண் போலீஸ அதிகாரி வேடம் ஒன்றும் படத்தில் இருந்தது. இதில் நடிக்கத்தான் ரீமாவை கேட்டனர். உடனே கால்ஷீட் தந்துவிட்டார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. சென்னையில் தொடங்கும் முதல் ஷெட்யூலில் ரீமா சென் பங்கேற்க உள்ளார். இனி தொடர்ந்து படங்களில் நடிக்கவும் அவர் முடிவு செய்துள்ளாராம்.


 

கிசு கிசு - ரகசியத்தை உடைத்த நடிகை : சத்தம் போட்ட இயக்குனர்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பிரமாண்ட இயக்கம் திரும்ப கதை பண்ண உட்கார்ந்தா, லஞ்சம், ஊழலுக்கு எதிரான ஹீரோயிசம்னு அவரோட பழைய எண்ணங்களே காட்சியா வருதாம்... வருதாம்... நொந்துபோனவரு, ஸ்கிரிப்ட் டீமையே கலைச்சிட்டாராம்... கலைச்சிட்டாராம்... ஆனந்த இயக்கத்தோட ஸ்கிரிப்ட் டீமை தன்னோட படத்துக்கு பயன்படுத்த முடிவு பண்ணினவரு, அந்த டீமோடு உட்கார்ந்து டிஸ்கஷன் பண்றாராம்... பண்றாராம்... இனி என்னோட பாணி புதுசா இருக்கும்னு இயக்கம் சொல்லிக்கிறாராம்... சொல்லிக்கிறாராம்...

ஷூட்டிங் ஸ்பாட்ல மன்சுவான நடிகையை மணியான இயக்கம் சத்தம் போட்டாராம்... சத்தம் போட்டாராம்... ஷாட் சரியா வந்துச்சு, நடிகையும் நல்லாத்தான் நடிச்சாங்க. அப்புறம் ஏன் சத்தம் போட்டாருன்னு யூனிட்காரங்க குழம்பிபோனாங்களாம்... குழம்பிபோனாங்களாம்... நைட்பார்டடியில  தனக்கு நெருக்கமான இண்டஸ்ட்ரிகாரங்ககிட்ட மணியானவரு படத்துல தன்னோட ரோல் என்னாங்கிற ரகசியத்தை மன்சு நடிகை போட்டு உடைச்சிட்டாராம்... உடைச்சிட்டாராம்... இந்த தகவல் எப்படியோ மணி காதுக்கு போச்சாம். அந்த கோபத்தைதான் ஷூட்டிங் ஸ்பாட்ல இயக்கம் காடடினாராம்...
காட்டினாராம்...

இந்தியல பாடிகாட் படம் பண்ணின சித்திக்கான இயக்கம், திரும்ப இந்தி படம் பண்ண முயற்சி பண்ணினாரு. கானை வச்சு படம் எடுத்தவரு, அடுத்ததா தன் படத்துல நடிக்க இன்னொரு கான் வருவாருன்னு எதிர்பார்த்தாராம்... எதிர்பார்த்தாராம்... ஆனா அது நடக்கல. இயக்கத்துக்கும் இந்தியில பெரிய ஹீரோக்களை அப்ரோச் பண்ற டெக்னிக் தெரியலையாம்... தெரியலையாம்... இதனால இரண்டாம் தர ஹீரோவை வச்சு ஒரு படம் பண்ண ரெடி ஆயிட்டாராம்... ஆயிட்டாராம்...


 

த்ரிஷா படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
த்ரிஷா நடித்துள்ள தெலுங்கு படத்துக்கு கர்நாடகாவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த்ரிஷா, கோ கார்த்திகா, ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தெலுங்கு படம் தம்மு. நாளை ரிலீசாகிறது. இப்படம் கர்நாடகாவில் மட்டும் 150 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. பெரிய ஹீரோவின் கன்னட படத்துக்கு இணையாக இத்தனை தியேட்டர்களில் இப்படம் ரிலீசாவதால் கன்னட திரையுலகம் கொதித்துப் போயுள்ளது. இதற்கு முன் கர்நாடகாவில் ரிலீசான ரச்சா தெலுங்கு படம் அங்கு வசூலை குவித்தது. இதனால் தம்மு படத்தை போட்டி போட்டுக் கொண்டு தியேட்டர் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர். அதே நேரம், இந்த போக்கு கன்னட ஹீரோக்கள், தயாரிப்பாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மற்ற மொழி படங்களை கர்நாடகாவில் தாமதமாகவே ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை கன்னட சினிமா சங்கத்தினர் கொண்டு வந்தனர். பலத்த எதிர்ப்புகள் காரணமாக அந்த விதிமுறை நீக்கப்பட்டது. இப்போது கன்னட படங்களுக்கு இணையாக தம்மு படம் ரிலீஸ் ஆவதால், அதே நாளில் திரைக்கு வரும் 3 கன்னட படங்களின் வியாபாரம் பாதிக்கப்படலாம் என தயாரிப்பாளர்களும் வினியோகஸ்தர்களும் கதி கலங்கியுள்ளனர். அப்பட ஹீரோக்களும் இதனால் டென்ஷனில் உள்ளனர். நாளை திரைக்கு வரும் 3 கன்னட படங்களில் உபேந்திராவின் காட்ஃபாதர் படமும் அடங்கும். இதற்கிடையே கன்னட தயாரிப்பாளர் சங்கம், இது பற்றி ஆலோசிக்க முடிவு செய்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாற்று மொழி படங்களுக்கு குறிப்பிட்ட அளவு தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என தெரிகிறது.


 

ஆங்கிலத்தில் உருமி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'உருமி' படம் ஆங்கிலத்திலும் தயாராகிவருகிறது என்று சந்தோஷ் சிவன் தெரிவித்துள்ளார். சந்தோஷ் சிவன் மலையாளத்தில் இயக்கிய படம், 'உருமி'. பிருத்விராஜ், ஜெனிலியா, வித்யாபாலன், பிரபுதேவா, ஆர்யா உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம், தமிழில் அதே பெயரில், அடுத்த மாதம் ரிலீஸ் ஆகிறது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். இந்தப் படம் ஆங்கிலத்திலும் ரெடியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றி சந்தோஷ் சிவன் கூறியதாவது:

மலையாளம், தமிழிலிருந்து மாறுபட்ட வடிவத்தில் ஆங்கிலப் படம் இருக்கும். அதற்கு 'வாஸ்கோடகாமா' என்று பெயர் வைத்துள்ளோம். ஒரு மணி நேரம் பத்து நிமிடம் வரை ஓடும் விதமாக எடிட் செய்யப்படுகிறது. பொதுவாக வரலாற்றுப் படங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. இதுவும் வரலாற்றுப் படம்தான். ஆங்கிலத்துக்காக இன்னும் சில வேலைகள் பாக்கி இருக்கிறது. அதனால் இப்போது ஆங்கில வெளியீடு இருக்காது. தமிழில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு சந்தோஷ் சிவன் கூறினார்.


 

மடிசார் மாமி... மதன மாமா...

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷில்ப் மோஷன் வொர்க்ஸ் மற்றும் வோல்ட் ஃப்ளிக் லைஃப் பட நிறுவனங்கள் சார்பில் விவேக் தீக்ஷித், சுசாந்த் கர்டு தயாரிக்கும் படம், 'மடிசார் மாமி மதன மாமா'. இதில் மிதுன், ரிஷி பூட்டாணி நாயகர்களாக நடிக்கிறார்கள். மான்சி, காயத்ரி ஹீரோயின்கள். ரவி பிரகாஷ் கதை. வசனம் ரவி பிரகாஷ், சுதேசிகன். ரஞ்சித் போஸ் திரைக்கதை எழுதி இயக்கி எடிட்டிங் செய்கிறார். கபில் கே.கவுதம் ஒளிப்பதிவு. எல்.வி கணேசன் இசை. பாடல்கள் பழனிபாரதி, யுகபாரதி, முத்து விஜயன். ''அஞ்சலி என்ற 3 வயது குழந்தையை சுற்றி நடக்கும் கதை இது. சமுதாயத்தின் வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் மூன்று குடும்பங்களின் பிரச்னைகளை 3 வயது குழந்தை தீர்த்து வைப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியுள்ளோம்'' என்றார் இயக்குனர்.


 

காமெடி படம் இயக்குகிறார் விக்ரம் குமார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'யாவரும் நலம்' படத்தை இயக்கிய விக்ரம் குமார் காமெடி படம் இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தெலுங்கில் நாகேஸ்வர ராவ், நாகார்ஜுன், நாக சைதன்யா நடிக்கும் 'ட்ரையம்' படத்தை இயக்குகிறேன். இதன் திரைக்கதை பாணி புதுமையாகவும், யூகிக்க முடியாததாகவும் இருக்கும். 'ட்ரையம்' என்பதற்கு மூன்று என்று அர்த்தம். மூன்று நிலைகளில் வாழ்பவர்களைப் பற்றிய கதை இது. முழுநீள காமெடிப் படமாக உருவாக்குகிறேன். அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அக்டோபரில் ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழிலும் இப்படம் உருவாகிறது.


 

ஹீரோ மீது ஹீரோயின் கோபம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எஸ்.பி.பிலிம்ஸ் சார்பில் எஸ்.சத்யமூர்த்தி, எஸ்.மணிமாறன் தயாரிக்கும் படம் 'கண்டதும் காணாததும்'. நடன இயக்குனர் ஜான்பாபு மகன் விகாஷ் ஹீரோ. ஜோடியாக சுவாஷிகா நடிக்கிறார். சீலன் இயக்குகிறார். இதில் புது ஹீரோவுடன் நடிக்க, சுவாஷிகா மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் கூறியதாவது:  நல்லவர்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒரு தவறை சொல்லும் படம் இது. இதில் ஹீரோ, ஹீரோயினுக்கு நெருக்கமான காட்சி இருக்கிறது. இதில் நடிக்க பல நடிகைகள் மறுத்தனர். சுவாஷிகா முன்வந்தார். முதல் காட்சியாக நெருக்கமான காட்சியை எடுத்தேன். சுவாஷிகா தைரியமாக நடித்தார். ஹீரோ விகாஷ் கூச்சத்துடன் நடித்தார். பல டேக்குகள் போனது. இரண்டு மணி நேரத்தில் எடுக்க வேண்டிய காட்சியை அன்று மாலை வரை எடுக்க முடியவில்லை. இதனால் ஹீரோயின் கோபம் அடைந்தார். அவரை சமாதானப்படுத்தி மறுநாள் அக்காட்சியை படமாக்கினோம்.


 

நடிப்புக்காக எதையும் செய்வேன் : கிருஷ்ணா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிப்புக்காக எதையும் செய்ய தயார் என்று நடிகர் கிருஷ்ணா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இதற்கு முன் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் 'கழுகு'தான் என்னை அடையாளம் காட்டியது. கழுகு மக்களிடம் போய் சேர்ந்ததற்கு முதல் காரணம் யுவனின் இசை. அடுத்து இயக்குனர் கதை சொன்ன விதம், அடுத்துதான் என் நடிப்பு. அழுக்கான கேரக்டர்களில் மட்டும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். அப்பாவே தயாரிப்பாளர் என்பதற்காக பத்துபேரை அடிக்கிற ஆக்ஷன் ஹீரோவாக நடித்து மக்களை ஏமாற்ற விரும்பவில்லை. நல்ல நடிகனாக பெயர் எடுக்க வேண்டும் என்பதே ஆசை.  நடிப்புக்காக எதையும் செய்ய தயாராக இருக்கிறேன். 'கழுகு' படத்தில் கதாநாயகியை தொட்டுக்கூட நடிக்க வில்லை. அடுத்த படம் எல்லா அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சகப் படமாக இருக்கும். 'கழுகு'க்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வருகிறது. எல்லா கேரக்டர்களிலும் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்.


 

சினிமா நூற்றாண்டு மாளிகை ஜெயலலிதா திறந்து வைத்தார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திரைப்பட வர்த்தக சபையின் புதிய கட்டிடத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்திய சினிமா துவங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆவதையொட்டி இதற்கு 'சினிமா நூற்றாண்டு மாளிகை' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவும் இரண்டாவது மாளிகைக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நேற்று நடந்தது.

திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண் தலைமையிலும் செயலாளர்கள் ரவி கொட்டாரக்கரா, ஆனந்தா எல்.சுரேஷ் முன்னிலையிலும் முதல்வர் ஜெயலலிதா, வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: அண்ணா துரையால் 15.6.1968ல் தொடங்கி வைக்கப்பட்ட கட்டிடம் இது. இந்த வர்த்தக சபை திரையரங்கில் எம்.ஜி.ஆர் திரைப்படங்களை பார்த்துள்ளார். இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். நானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். திரைப்படத்துறை வளர்ச்சிக்காவும், அதன் அனைத்து பி£வுகளுக்காகவும் பாடுபடும் இந்த அமைப்பு, பல நூற்றாண்டுகளை கடந்தும் பாடுபட வேண்டும். இதன் இரண்டாவது மாளிகைக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன். அதை நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் நடந்த விழாவில் பொருளாளர் கே.எஸ்.ஸ்ரீனிவாசன், துணை தலைவர்கள் எம்.பாலசுப்பிரமணியன், எடிட்டர் மோகன், பொன்.தேவராஜன், தாமஸ் டிசவுஸ்சா, தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்ஹாக் கமிட்டி தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர், திரைப்பட உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், ஆந்திர சேம்பர் தலைவர் சுரேஷ்பாபு, கர்நாடக தலைவர் சந்திரசேகர ராவ், கேரள தலைவர் சசிகுமார், பெப்சி செயலாளர் சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

அஞ்சலி, ஓவியாவை கட்டாயப்படுத்தவில்லை : சுந்தர்.சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சுந்தர்.சி இயக்கி உள்ள படம், 'கலகலப்பு'. விமல், சிவா, சந்தானம், அஞ்சலி, ஓவியா நடித்துள்ளனர். படம் பற்றி சுந்தர்.சி கூறியதாவது: இது எனக்கு 25வது படம். சில படங்களை தயாரித்தேன். விநியோகம் செய்தேன். சில படங்களில் நடித்தேன். வாழ்க்கை நம்மை எப்படி அழைத்துச் செல்கிறதோ, அப்படி போக வேண்டும் என்று நினைப்பவன். சில நடிகர்களுக்காக கதை உருவாக்கி கால்ஷீட் கிடைக்காமல் மற்ற நடிகர்களை கொண்டு அந்த படத்தை இயக்கிய அனுபவம் உண்டு. ஆனால் இந்தக் கதையை உருவாக்கும்போது இந்த கேரக்டருக்கு இவர்தான் என்று மனதில் பதிந்து கொண்டு உருவாக்கினேன். அவர்களே இதில் நடித்தார்கள். அஞ்சலியையும் ஓவியாவையும் கட்டாயப்படுத்தி கிளாமராக நடிக்க வைக்கவில்லை. அவர்களே ஒப்புக் கொண்டுதான் நடித்தார்கள். நான் இயக்கும் படங்களில் பழம்பெரும் நடிகர் ஒருவருக்கு பெரிய கேரக்டர் இருக்கும். இதில் வி.எஸ்.ராகவன் நடித்திருக்கிறார். 90 வயதில் அவர் நடித்தும் பாடியும் இருக்கிறார்.


 

சசிகுமாரின் சுந்தரபாண்டியன்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனது கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம், 'சுந்தரபாண்டியன்'. இதை சசிகுமாரின் உதவியாளர் பிரபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். 'கும்கி' படத்தில் நடித்துள்ள லட்சுமி மேனன் ஹீரோயின். மற்றும் விஜய் சேதுபதி, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு, 'பசங்க' பிரேம்குமார். இதன் ஷூட்டிங் தேனியில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து காரைக்குடியிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்தது.


 

8 கதைகளை நிராகரித்தார் ரிச்சா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் சிறந்த கதையை எதிர்பார்த்திருப்பதாக, ரிச்சா கங்கோபாத்யாய் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில், தனுஷுடன் 'மயக்கம் என்ன', சிம்புவுடன் 'ஒஸ்தி' படங்களில் நடித்தேன். இந்தப் படங்கள் என்னை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. இந்தப் பட ஷூட்டிங்கின் போது சிம்புவும் தனுஷும் தமிழ் பேசுவதற்கு உதவி செய்தனர். இருவரும் பல்வேறு திறமைகளை கொண்ட நடிகர்கள். இருவருடனும் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இப்போது எனது தாய்மொழியான பெங்காலியில் 'பிக்ரம் சிங்கா' படத்தில் நடித்துள்ளேன். இது தமிழில் வெளியான 'சிறுத்தை' படத்தின் ரீமேக். பெங்காலிக்காக கதையில் மாற்றம் செய்துள்ளனர். தாய்மொழியில் நடிப்பது எப்போதும் சுகமானது. தெலுங்கில் பிரபாஸுடன் 'வாராதி' என்ற படத்தில் நடித்துவருகிறேன். தமிழில் அடுத்த படம் என்ன என்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்துவருகிறேன். தமிழிலும் அப்படித்தான் எதிர்பார்க்கிறேன். நடித்த கேரக்டரிலேயே நடிக்க எனக்கு உடன்பாடில்லை. இதுவரை எட்டு கதைகள் கேட்டேன். எனக்கு திருப்தியாக இல்லாததால் நிராகரித்தேன்.


 

ஜெயம் ரவிக்கு ஜோடி நயன்தாரா அல்ல... அமலா பால்!


முன்னணி நடிகை என்ற பெயர் இருந்தாலும், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போடாதவர் அமலா பால்.

இப்போது அந்தக் குறையும் தீர்ந்துவிடும் போலிருக்கிறது.

இவர் நடிக்கும் அடுத்த படத்தின் ஹீரோ ஜெயம் ரவி!

ஜெயம் ரவியை வைத்து சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்ற கூறப்பட்டது. ஆனால் இப்போது நயன்தாரா இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் இந்தப் படத்தை வாசன் விஷுவல்ஸ் நிறுவனத்தினர்.

படத்தின் கதையைக் கேட்ட அமலாப் பால் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கப்படுவதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

அமலா பால் நடித்து சமீபத்தில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி படம் ஓரளவு நல்ல வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்தாலும், அவர் தெலுங்குப் படங்களுக்கே முக்கியத்துவம் தந்துவந்தார்.