நடிகர் நடிகைகளுக்கு ஜோதிகா அளித்த பிறந்த நாள் விருந்து!

Jyothika Celebrates Her Birthday Star Hotel

தன்னுடன் நடித்த, பழகிய நடிகர் நடிகைகள் அனைவருக்கும் பிறந்த நாள் விருந்து அளித்தார் நடிகை ஜோதிகா.

முன்னணி நடிகர் நடிகைகள் ஏராளமானோர் இந்த விருந்தில் பங்கேற்றனர்.

நடிகை ஜோதிகாவுக்கு 35 வயது ஆகிறது. இத்தனை நாளும் தன் வீட்டுக்குள் கணவர் - மாமனார், மாமியார், அக்கா ஆகியோருடன் மட்டும் கொண்டாடி வந்தவர், தனது இந்த பிறந்த நாளை நட்சத்திர ஓட்டலில் 'கேக்' வெட்டி கொண்டாடினார்.

பிறந்த நாளையொட்டி சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகைகள் பங்கேற்றனர்.

நடிகைகள் அனுஷ்கா, குஷ்பு, ராதிகா, லிசி, நதியா, தனுஷ் மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றனர். நடிகர் கார்த்தி, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சூர்யா மதுரையில் 'சிங்கம்-2' படப்பிடிப்பில் இருந்ததால் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

சசிகுமாருடன் கைகோர்க்கிறார் சூர்யா?

Surya Join Hands With Sasikumar

அடுத்து சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதற்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சசிகுமார்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் மினிமம் கியாரண்டி நடிகர் கம் இயக்குநராக உள்ளார்.

ஹீரோ என்று பார்த்தாலும், முன்னணி நாயகர்களுக்கு இணையாக வந்துவிட்டார். சுந்தரபாண்டியன் அவரை ஒரு படி மேலே உயர்த்திவிட்டது.

இந்த நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஹீரோவாக சூர்யா நடிக்கக் கூடும் என்று தெரிகிறது.

சூர்யாவுக்காக சசிகுமார் கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து சூர்யா கூறுகையில், "சசிகுமாரும், நானும் சந்தித்துப் பேசியது உண்மைதான்.

கதை பற்றியும் விவாதித்துள்ளோம். ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை. பார்க்கலாம்," என்றார்.

அப்படி முடிவானால், சிங்கம் 2 முடிந்தபிறகு இந்தப் படத்துக்கான வேலைகள் ஆரம்பமாகுமாம்!

 

இம்சை அரசன் 23ம் புலிகேசி - 2

'Imsai Arasan 23am Pulikesi' Part 2

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில், சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்த 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படம் மெகா ஹட் ஆனது. இதனையடுத்து தற்போது பட வாய்ப்புகள் தேடி வரும் வடிவேலுக்கு மீண்டும் ஒர நல்ல செய்தி வந்திருக்கிறது. 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' படத்தின் 2ம் பாகம் எடுக்கும் முயற்சியில் இயக்குனர் சிம்புதேவன் இறங்கியுள்ளார் என்பது தான் அந்த நல்ல செய்தி. இதுபற்றி இயக்குனர் சிம்புதேவன் கூறுகையில், 'இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் நிறைய காட்சிகள் எடுக்க முடியாமல் போனது, அதை தற்போது கருத்தில் கொண்டு 2 பாகத்தை தயார் செய்து வருகிறேன், இதுபற்றி வடிவேலுவிடம் பேசியுள்ளேன், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்' என்றார்.
 

'வெல்டன் லட்சுமி ராமகிருஷ்ணன்' - கே பாலச்சந்தர் பாராட்டு!

K Balachander Paraises Lakshmi Ramakrishnan

முதல் முறையாக ஆரோகணம் படத்தை இயக்கியுள்ள நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு, நூறு படங்களை இயக்கிய கே பாலச்சந்தர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

படத்தைப் பார்த்து தான் மிகவும் நெகிழ்ந்ததாகவும், முதல் படத்திலேயே தேர்ந்த இயக்குநருக்குரிய முத்திரை பதித்துள்ளதாகவும் லட்சுமி ராமகிருஷ்ணனை அவர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமீபத்தில் கே பாலச்சந்தர் எழுதியுள்ள கடிதம்:

மறைந்த டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு, தமிழ் சினிமா பல பெண் திரைப்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாத் தொழில்துறையில் அவர்கள் யாருமே ஊக்குவிக்கப்படவில்லை என்பதும் அதனால் அவர்களில் எவருமே இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதும் உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் தகுதி பெற்ற, சினிமாவுக்குப் போதுமான அளவு தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கின்ற அபர்ணா, ரேவதி போன்ற பல பிரபலங்களும், வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பல சாதனைகள் புரியக்கூடிய ‘பீப்ளி லைவ்' படப் புகழ் இயக்குநர் அனுஷா ரிஸ்வி போன்ற இயக்குநர்களும் இருந்தாலும், இந்திய சினிமாவில் நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவு ஊக்குவிப்பு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

ஆனால், பெண் இயக்குநர்களிடமிருந்து நமக்கு சில அருமையான பங்களிப்புகளும் கிடைத்துள்ளன. சிறப்புமிக்க அந்த வரிசையில் சமீபத்திய வரவு, ‘ஆரோகணம்' என்ற உங்களின் முதல் படைப்புடன் நீங்கள்!

உங்களைப் பார்த்தபோது, உங்களது துணிச்சலை நிரூபிக்க ஏன் திரைப்பட இயக்கம் என்னும் இவ்வளவு கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என நான் முதலில் வியந்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பின்புதான், உங்களை உந்தித் தள்ளியது நல்ல சினிமா மீதான உங்களது காதலும் பெருவிருப்பமும் தான் என்று முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் முடிந்தது.

‘ஆரோகணம்' திரைப்படத்தில், அந்த விவரித்தலில் ஓர் ஆர்வமும் உற்சாகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களது கதாபாத்திரங்கள் பெண்மைக்குரிய நுட்பமான அறிவோடு இருப்பது, நிஜமாகவும் நம்பக்கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் அவலநிலையில் இருந்தாலும் உறுதியானவர்கள்..

விவேகமற்றவர்களாக இருந்தாலும் பாராட்டுக்குரியவர்கள்! உங்கள் செலுலாய்ட் கதைப்பரப்பில் உலவும் கதாபாத்திரங்கள் எல்லாம் அதற்குத் தொடர்பில்லாதது போல் தெரிந்தாலும், எப்படியோ கதைக்கான முக்கியமான பகுதியாகி விடுகின்றனர். நன்கு பரிச்சயமான மற்றும் அவ்வளவாக பரிச்சயமில்லாத

முகங்கள் அனைவருமே அவர்களின் தற்செயலான மற்றும் தீவிரமான பாத்திரப்படைப்புகளால் மனதில் ஆழப்பதிகின்றனர். கருவை எடுத்துரைப்பதில் கொண்டிருக்கும் கட்டுப்பாடு அதேசமயம் கதையின் வேகம். இரண்டுமே உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியவை. வசனங்களும் அவற்றைப் பேசியிருக்கும் விதமும் மிகச் சரியாக நிறைவாக அமைந்துள்ளன.

இப் படத்தில், வைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் ஆகட்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ‘லொகேஷன்'கள் ஆகட்டும். எடுக்கப்பட்டிருக்கும் ‘ஷாட்'கள் ஆகட்டும்.. எல்லாவற்றிலுமே தொழில்நுட்ப நுண்ணறிவு பெருமளவில் தெரிகிறது.

‘க்ளோஸ் அப்' காட்சிகளில், அவை வைக்கப்பட்டிருக்கும் நிலை (பொஸிஷன்) மற்றும் காலஅளவு (டியூரேஷன்) ஆகியவை மிகச் சரியாக இருப்பதால் உண்மையில் மனதில் ஆழப்பதிவதாய் இருக்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் உங்களது தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவுக்கும் உங்களின் கூரிய சினிமாக் கற்பனைக்குமே!

படத்தின் இசையும் எந்தவித உறுத்தலும் இன்றி, நம் மனதைக் கவர்கிறது. இரண்டு பாடல்களும் அவற்றைப் படமாக்கியிருக்கும் பின்புலமும் மிக அழகான கலவையாக வெற்றிபெறுகின்றன. இதனாலேயே, மிகத் தீவிரமான அதேசமயம் சுவாரஸ்யமான இந்தத் திரைப்படத்தின் ‘மியூஸிகல் வேல்யூ' கூடியிருக்கிறது.

ஒரு திரைப்படம் என்பது, அதைப் படைப்பவருடைய ஆத்மாவின் பிரதிபலிப்பு. அது, அந்தப் படைப்பாளியின் மனதின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

துரிதமாக கடந்து கொண்டிருக்கும் என் படைப்பாற்றலின் இந்த அந்திப்பொழுதில், இடையில் சிறிது நிறுத்தி என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என் காலத்தை நிறுத்தி, அப்படியே உறைய வைத்துவிட்டீர்கள். தொடர்ந்த அந்த 2 மணி நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம், முழுமை, உறுதியான நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள், தமிழ் சினிமாவை இன்னும் சிறிதுஉயரத்தில் நிற்கச் செய்திருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் கர்வத்தோடு நடைபோட வைத்திருக்கிறீர்கள்.

இவை இரண்டையும் பெண்மைக்குரிய நேர்த்தியோடு செய்திருக்கிறீர்கள்!

அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

மற்ற படைப்பாளிகள் உங்கள் மதிநுட்பத்திலிருந்து தங்களுக்கான குறிப்பை எடுத்துக் கொள்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ‘ஆரோகணம்' படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நீங்கள் இயக்கத் தீர்மானிக்கவிருக்கும் 99 படங்களுக்கும் சேர்த்து வெற்றியே கிடைக்க நான் வாழ்த்துகிறேன். உங்கள் 100-வது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், அந்த விழா நிகழும் வேளையில். நிச்சயம் அது நடக்கும்.. அப்போது, நான் இந்த மாலை நேரத்தையும் இந்த இடத்தையும், ஒரு படைப்பாளியாகவோ ‘தாதா சாகேப் பால்கே' விருது பெற்றவனாகவோ இல்லாமல், நல்ல சினிமாவின் காதலனாக நான் பகிர்ந்துகொண்டதை நீங்கள் நினைவு கூர்வீர்கள் என்று நம்புகிறேன்..!

‘ஆரோகணத்'தின் அத்தனை எழுச்சியூட்டும் குறிப்புகளுக்கும் நன்றி லக்ஷ்மி.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்!

விஜியைப் பற்றி ஒரு வார்த்தை... சரிதாவை வைத்து நான் வரலாறு படைத்திருக்கிறேன்.. உண்மையிலேயே உயர்ந்த காவியங்கள் படைத்துள்ளேன். அந்தத் திறமை உண்மையிலேயே மரபு வழி வந்தது என்று விஜி நிரூபித்திருக்கிறார். மேலும், அவரும் என்னுடைய கண்டுபிடிப்பு என்பதை இந்தவேளையில் சொல்லிக்கொள்வதில் நான் அளவுகடந்த பெருமிதம் கொள்கிறேன். அவருடைய ஆற்றலை மீண்டும் கண்டெடுத்திருப்பதற்கு உங்களுக்கு மிகுந்த பாரட்டுக்கள்.

குறைபாடற்ற விதத்தில் நடிகர்களுக்குப் பாத்திரங்களைப் பகிர்ந்தளித்திருக்கும் உங்கள் பாங்குக்கு,

வெல்டன் லக்ஷ்மி!

-இவ்வாறு அவர் தன் கடிதத்தில் எழுதியுள்ளார்.

 

டிசம்பரில் வெளியாகிறது விஸ்வரூபம்

Vishwaroopam will release on december

கமல்ஹாசன் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்துக்கு 14 காட்சிகளுக்கு கட் கொடுத்த¤ருக்கிறது சென்சார் போர்டு. 'மன்மதன் அம்பு' படத்துக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படம் 'விஸ்வரூபம்'. இப்படத்தை தயாரிப்பதுடன் கதை எழுதி இயக்குனர் பொறுப்பும் ஏற்றுள்ளார். ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜா குமார், ஜெய்தீப், சாம்ராட் சக்ரபர்த்தி, ஜரீனா வஹாப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலிவுட் இயக்குனர் ஷேகர் கபூர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ஷங்கர் எஹசான் லாய் இசை அமைத்துள்ளனர்.

தீவிரவாதத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து கடந்த 17ம் தேதி சென்சார் சான்றிதழுக்காக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் படத்தின் சில காட்சிகளை வெட்ட வேண்டும் என்று தெரிவித்தனர். அக்காட்சிகளுக்கு கமல் விளக்கம் அளித்தார். அதில் சிலவற்றை ஏற்றுக்கொண்டனர். குறிப்பிட்ட 14 காட்சிகளுக்கு கட் கொடுத்தனர். நான்கெழுத்து வசனம் ஒன்றை சைலன்ட் செய்ய கூறினர். அதை கமல் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. டிசம்பரில் படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

ஹீரோ வாரிசுகளை இயக்கும் பாலா?

Bala''s Next Choice

தேசிய விருது வென்ற இயக்குனர் பாலா தற்போது 'பரதேசி' படத்தை முடித்துவிட்டார். இந்த படத்தில் மறைந்த முன்னாள் நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக நடித்திருக்கிறார். வேதிகா மற்றும் தன்ஷிகா ஹீரோயினாக நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ள நிலையில், பாலாவின் அடுத்த படம் குறித்து பேச்சுக்கள் வர தொடங்கிவிட்டன.

பாலா தனது அடுத்த படத்தில், இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவையோ அல்லது நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதமை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. கௌதம் தற்போது மணிரத்னத்தின் 'கடல்' படத்திலும் மற்றும் விக்ரம் பிரபு, எங்ககேயும் எப்போதும் புகழ் இயக்குனர் சரவணன் இயக்கத்திலும் பிசியாக இருக்கின்றனர். இந்த படங்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு பாலா, இருவரில் ஒருவரை ஹீரோவாக நடிக்க வைக்க போகிறாராம்.

மேலும், பெரிய ஹீரோக்களை இயக்க பாலா தயங்குவதாக கோலிவுட் பக்கம் பேசப்பட்டு வருகிறது. காரணம், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் போது அவர்களின் இமேஜ் தகுந்தவாறு பாலா எடுக்க மாட்டார், கதைக்கு ஏற்ப மாறும் ஹீரோவை பாலா விரும்புவார். அதே சமயம், விக்ரம், சூர்யா, ஆர்யா மற்றும் விஷால் போன் பெரிய ஹீரோக்கள் ஏற்கனவே பாலா படத்தில் நடித்துவிட்டனர். அவர்களை மீண்டும் நடிக்க வைக்க பாலா தயங்க மாட்டார் என்று கூறுகிறது பாலா தரப்பு.

இப்படி ஒரு பக்கம் பேசி வர, பாலா தனது அடுத்த படத்தில் விக்ரம் அல்லது சூர்யாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக என சொல்லி வருகிறது இன்னொரு தரப்பு.
 

ஆர்யாவுக்காக காத்திருக்கும் "ராஜா ராணி"

'Raja Rani' waits for Arya

ஷங்கரின் உதவியாளருக்கு ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்க வாய்ப்பு தந்தார். பிரமாண்ட படங்களை இயக்கும் ஷங்கர் தற்போது 'ஐ' படத்தை இயக்கி வருகிறார். சொந்தமாக படங்களும் தயாரித்து தனது உதவியாளர்கள் பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் மற்றும் சிம்புதேவன் உள்ளிட்டோருக்கு படம் இயக்க வாய்ப்பளித்தார். பின்னர் பட தயாரிப்பை நிறுத்திக்கொண்டார். இந்நிலையில் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்து கதை சொன்னார்.

அக்கதை பிடித்துவிடவே தயாரிக்க சம்மதித்தார் முருகதாஸ். புதிய படத்துக்கு 'ராஜா ராணி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர்யா, ஜெய், நயன்தாரா நடிக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். மேலும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்த 2 பாடல்களை கேட்டு பாராட்டினார். இதன் படப்பிடிப்பில் ஜெய், நயன்தாரா நடித்தனர். சத்யராஜ், சந்தானம், சத்யன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மற்றொரு ஹீரோ ஆர்யா தற்போது கண்ணன் இயக்கும் 'சேட்டை' பட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் முடித்தவுடன் 'ராஜா ராணி' படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ஏற்கனவே 'எங்கேயும் எப் போதும்Õ என்ற படத்தை தயாரித்த முருகதாஸ் அப்படத்தை இயக்க தனது உதவியாளர் சரவணனுக்கு வாய்ப்பு தந்திருந்தார்.
 

பிரியாணியில் நான் தான் ஹீரோ

I am the hero of 'Biriyani'

'பிரியாணி' படம் பற்றி தினமும் ஒரு தகவல் வந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி வந்த இன்றைய தகவல் என்ன தெரியுமா?... 'அண்ணன் இயக்கிய படத்தில் மங்காத்தாவை தவிர எல்லா படத்திலும் நான் தான் ஹீரோ, பிரியாணிலும் நான் தான் ஹீரோ' என்று சிரித்தபடியே பிரேம்ஜி அமரன் கூறியுள்ளார். வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி 'என் அண்ணனை தவிர எந்த இயக்குனரும் முக்கிய கதாபாத்திரம் நடிக்க வைக்க தர தயாராக இல்லை, அதே சமயம் எங்க அண்ணனை 'என்ன நடிக்க வைக்கலனா நான் உன்னோட படத்தில் இசை அமைப்பேன்' என்று மிரட்டி வைத்திருக்கிறேன்' என்று சிரித்துக் கொண்டு சொன்னார்.  

கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில்  ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.