இளையராஜா குடிப்பதில்லை.. ஆனா ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்!- விவேக்

இசைஞானி இளையராஜாவுக்கு மது அருந்தும் பழக்கமில்லை... ஆனால் ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார், என தனக்கே உரிய பாணியில் பேசி கலகலக்க வைத்தார் நடிகர் விவேக்.

இளையராஜா இசையில் உருவாகியிருக்கும் போர்க்களத்தில் ஒரு பூ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விவேக் பேச்சு சிறப்பாக அமைந்தது.

அந்த பேச்சிலிருந்து...

"இசைப்பிரியா தொடர்பான அந்த ஒரு காட்சியையே நம்மால தாங்கிக்க முடியல. தமிழனாக, மனிதனாகப் பிறந்த யாராலுமே தாங்கிக்க முடியாத காட்சி அது.

இளையராஜா குடிப்பதில்லை.. ஆனா ஏழு மணிக்கு மேல எல்லாருக்கும் அவர்தான் கம்பெனி கொடுக்கிறார்!- விவேக்

அந்த சென்சிடிவ் விஷயத்தை ஒரு திரைப்படமாக்கி, தமிழர்களுக்கு காணிக்கையாகத் தர வேண்டும் என்று இங்கே உள்ளவர்கள் கூட நினைக்காத நேரத்தில், கன்னடத்திலிருந்து ஒரு இயக்குநரும், தெலுங்கிலிருந்து ஒரு தயாரிப்பாளரும் வந்து படமாக்கியிருப்பதை என்ன சொல்லிப் பாராட்டுவது!

முன்பெல்லாம் சாப்ட்வேர் பற்றி கதைகள் வந்தன. இப்போதெல்லாம் ஹார்ட்வேர் கதைகள்தான்... லுங்கியை மடித்துக் கட்டி, அரிவாளைத் தூக்கிக் கொண்டு, நாக்கை மடித்துக் கடித்தபடி கிளம்பிட்டாங்க.

ஆனால் இந்தப் படத்தில் கமர்ஷியல் அயிட்டங்கள் இருக்கா, கவர்ச்சி இருக்கா, பஞ்ச் டயலாக் இருக்கா, எவ்வளவு தியேட்டர்ல போட முடியும், சேட்டிலைட்ல என்ன வரும், எப்எம்எஸ் போகுமான்னெல்லாம் யோசிக்காம, இந்தப் படத்தை நாம எடுக்கணும், அதுக்கு இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எடுத்த படக்குழுவுக்கு பலத்த கைத்தட்டலைத் தரவேண்டும்.

இந்த விழாவுக்கு நான் வரக் காரணம், படத்தின் போஸ்டர்களில் இடம்பெற்றிருந்த ஷிர்டி பாபாவின் படம். அவர் வாழ்ந்த சித்தர். அடுத்து, வாழுகின்ற சித்தரான இசைஞானி இளையராஜா.

இந்தப் படத்தோட ஹீரோயின்... இசைப்பிரியா என்ற அந்த போராளியின் கேரக்டரைப் பண்ணியிருக்காங்க. இனிமே நீங்க பெரிய ஹீரோயினாகலாம்... ராஜா சாரையே பார்த்து, எங்கோ பார்த்த மாதிரி இருக்கேன்னு கூட சொல்லலாம். அந்த மாதிரி அவர் எவ்ளோ பார்த்திருக்கார்... அவர் பார்க்காததில்லே... விஜய் கூட நடிக்கலாம்.. அஜீத் கூட நடிக்கலாம். இன்னும் பெரிய பெரிய ஹீரோக்களோட நடிக்கலாம். ஆனால் அதிலெல்லாம் கிடைக்காத கவுரவம் உனக்கு இந்த முதல் படத்திலேயே கிடைத்துவிட்டது. இனிமே எனக்கு படமே வேணாம், கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாகிடுறேன்னிட்டு நீ போனா கூட... - ஏன்னா இப்போ அதான் பேஷன், பீக்ல இருக்கும்போது திருமணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது ஒரு ட்ரெண்டு... புரிஞ்சவங்க புரிஞ்சிக்கங்க.. புரியாதவங்க கேட்டுத் தெரிஞ்சிக்கங்க..

அடடா பீல்டை விட்டு போயிடுவாங்க போலிருக்கேன்னு நிறைய வாய்ப்புகள் வரலாமே... நான் தப்பா சொல்லல..

இதுக்கு மேல எவ்வளவு உயரத்துக்குப் போகலாம்... உனக்கு பேசத் தெரியல.. அதாவது நீ பிறக்கறதுக்கு முன்பிருந்தே அவர் இசை அமைச்சிக்கிட்டிருக்கார். நீ போன பிறவியில பொறக்கறதுக்கு முன்னாடியிருந்தே கூட அவர் இசையமைச்சிருப்பார்.

இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயின், மற்றும் உள்ள எல்லாரும் புதுமுகங்கள்தான். ஆனா இசைஞானி இளையராஜாவின் இசை வந்ததும், இந்தப் படம் உலகத் தரத்துக்குப் போய்விடுகிறது. அதான் உண்மை.

இந்திய இசையின் கவுரவம் இசைஞானி இளையராஜா... உலக இசையின் ஆச்சர்யம் இசைஞானி இளையராஜா.. தமிழ்நாட்டின் செல்லம் இசைஞானி இளையராஜா.

தமிழ்நாட்டின் ஏழரை கோடி.. இது நேத்து கணக்கு... நாளைக்கு எவ்வளவோ தெரியாது... ஆனா அவ்வளவு கோடி பேர்களின் ரேஷன் அட்டைகளில் இல்லாத, ஆனால் அவர்களின் இதயத்தில் இடம்பெற்ற பெயர் இசைஞானி இளையராஜா.

சார் பாருக்கே போனதில்லே... ஆனா இவர் பாட்டில்லாத பாரே இல்ல... இசைஞானி மது அருந்துவதே இல்லை.. ஆனா மது அருந்தியவர்களுக்கு இசைஞானி இசையை விட்டா வேறு கம்பெனியே கிடையாது. சார், எவ்வளவு பார்ல, எவ்வளவு கார்ல, எத்தனை பேருக்கு கம்பெனி குடுத்துக்கிட்டிருக்கார் தெரியுமா... ஆனா அவர் குடிக்காமல்.

அது என்னவோ.. என்ன மாயமோ தெரியல... மத்த நேரத்திலெல்லாம், மத்தவங்க பாட்டா கேக்கறான். ஆனா இதயம் கசிந்து உருகி ஒரு உன்னதமான நிலைக்கு அவன் தள்ளப்படும்போது, அவன் கேட்க விரும்புவது இசைஞானி இசையை மட்டும்தான்.

அவர் குரலுக்கு ஒரு வசீகரமான மயக்கம் இருக்கிறது. மெல்லிசை மன்னர் எம்எஸ்வி குரலுக்கு ஒரு வசீகரம் உண்டு. அதுபோல இசைஞானி இளையராஜாவின் குரலுக்கு ஒரு வசீகரமுள்ளது. தமிழ்நாட்டில் எல்லாருக்கும் பிடித்த குரல்களில் இவையெல்லாம் வரும். இந்தப் படத்தில் இசைஞானி குரலில் ஒரு பாடல் வந்தது. அடடா என்று கேட்க ஆரம்பிக்கும்போதே, பல்லவியுடன் பாடல் நின்றுவிட்டது. ஆனால் நம் எல்லோருக்கும் முழுப் பாடலையும் கேட்க வேண்டுமே என்ற ஏக்கம் வந்தது பாருங்கள்... அதுதான் இளையராஜாவின் வெற்றி.

அந்தப் பாடல் நிச்சயம் இந்தப் படத்தின் ஒரு ஹைலைட்டாக இருக்கும்.

மொசார்ட் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. பாக் வாழ்ந்த காலத்தில் நாம் வாழவில்லை. பீத்தோவன் வாழ்ந்த காலத்தில் வாழும் பாக்கியம் கிடைக்கவில்லை. இங்கே, தென்னிந்தியாவில் தியாகப் பிரம்மம், முத்துசாமி தீட்சிதர் மற்றும் ஷ்யாமா சாஸ்திரி ஆகியோர்தான் கர்நாடக சங்கீதத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்து, சங்கீதத்தை வளர்த்தார்கள்.. அவர்கள் காலத்தில் நாம் வாழவில்லை. ஆனால் நமக்கெல்லாம் இருக்கிற ஒரே சந்தோஷம்.. இசைஞானி இளையராஜா வாழும் காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதுதான்.

நீங்கள் எப்பேர்ப்பட்டவருடைய இசையில் இந்தப் படத்தை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு உதாரணம், ராஜா சாரின் பாடலை, அன்னக்கிளியில் ஆரம்பித்து.. இப்போ இந்தப் படம் வரைக்கும் உள்ள பாடல்களை வரிசையா போட்டு கேட்டிங்கன்னா, அதாவது பிரேக் விடாம... அப்படியே நான் - ஸ்டாப்பா கேட்டிங்கண்ணா ரெண்டு மூணு மாசமாகும், அதிலிருந்து வெளிய வர்றதுக்கு! அவ்வளவு நீண்ட நெடிய இசைப்பயணத்தை அவர் நடத்தியிருக்கிறார்.

யாரோடும் ஒப்பிடுவதை விரும்பாதவர் இசைஞானி... காரணம் அதற்கு அப்பாற்பட்டவர் அவர். பொதுவாக இசையமைப்பாளர்கள் ஒரு காட்சியைப் பார்க்க வேண்டும். பார்த்த பிறகு ஹார்மோனியத்தை அமுக்க வேண்டும்... அதில் தொட்ட பிறகு அந்த சத்தத்தை அவர்கள் கேட்க வேண்டும். அதன் பிறகு இசையமைக்க வேண்டும். இதுதான் மனிதனால் முடியக் கூடியது.

ஆனால், இவர் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, குனிந்து எழுதுகிறார். எழுதுவதை வாசித்தால், அந்தக் காட்சிக்கான இசை அப்படியே வருகிறது. இப்படி நொட்டேஷன் எழுதக் கூடிய ஒரே இசையமைப்பாளர், தென்னாசியாவிலேயே இசைஞானி இளையராஜா ஒருவர்தான்.

ஏனென்றால், எதை தியானம் செய்கிறாயோ அதுவாகவே நீ மாறிவிடுவாய். நீ வேறு, ஆர்மோனியம் வேறு, அதில் வரும் இசை வேறு என மூன்றாகப் பிரிந்திருந்தால் அது கஷ்டம்.. நீயும் ஆர்மோனியமும் அதில் வரும் இசையும் ஒண்ணாகிடறீங்க.. அது யோகம். அதானால்தான் அவரை சித்தர்ங்கிறோம். அந்த Oneness அவருக்கு கிடைச்சிருச்சி. அதனால் அவர்கள் கண்கள் இமைப்பதே நின்றுவிட்டது. சித்தர்களுக்கு ஒரு அளவுக்கு மேல சில சக்திகள்... அவருக்கு வந்து கான்டாக்ட் வேற கான்டாக்ட்ல இருக்கார் அண்ணன். நீயும் நானும் பேசறதெல்லாம் அவருக்குப் புரியாது. அவரு பேசறது சில சமயம் நமக்குப் புரியாது. அவர் வேற ஒரு லெவல்லருந்து நம்ம திட்டுவாரு.. அறிவுரை கூறுவார். சில விஷயங்கள் சொல்வார்.. நமக்குப் புரியாது. நாமெல்லாம் சாதாரண மனிதப் புழுக்கள்.

நாம அவர் இசையைக் கேட்கணும்.. அதற்குக் கைத்தட்டணும்.. சாயங்காலங்களில் ஜாலியா இருக்கணும், அவர் பாடல்களைக் கேட்டுக்கிட்டே. இப்படியொரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்துட்டிருக்கிறோம்.

ஹௌ டு நேம் இட் என்ற ஒரு இசை ஆல்பம் முதல் முதலா இசைஞானி இசையில் வந்தது. அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்டு. அதுல ஸ்டடி பார் வயலின்-னு வர்ற ஒரு பாடலை அவர் எங்கே வைத்து எழுதினார் தெரியுமா... அதைச் சொல்லி விளம்பரம் தேடிக்கொள்பவர் அல்ல அவர். அந்த நிலையிலும் அண்ணன் இல்லை. அதைத் தாண்டிய மிகப்பெரிய இசைஞானி அவர். ஆனால் இதைச் சொல்வதன் மூலமாக, இந்த விஷயம் இசைப் பிரியர்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்த மேடையில் சொல்கிறேன். எங்கே வைத்து எழுதினார் தெரியுமா... அறையில் வைத்தோ, ஸ்டுடியோவில் வைத்தோ, வீட்டில் வைத்தோ, அல்லது அவருக்குப் பிரியமான தோட்டத்தில் அமர்ந்தோ அந்த நொட்டேஷன்களை எழுதவில்லை.. அவர் விமானத்தில் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தபோது, பேப்பரில் இப்படி எழுதினால், அது அப்படி வரும் என்ற அசாத்திய நம்பிக்கையோடு எழுதியிருக்கிறார்.

இது போன்ற ஒரு அசாத்தியமான இசைத் திறமை என்பது 'மேல' கான்டாக்ட் இல்லேன்னா வராது. கீழே இருக்கும்போதே அவருக்கு அந்த கான்டாக்ட் அதிகம்னா.. மேலே ப்ளைட்ல போகும்போது இன்னும் பக்கமாயிடுதில்ல! கடகடகடன்னு வந்து விழுது.. அப்படியே டவுன்லோட் பண்ணி இறக்கிடறார் பேப்பர்ல!!

அப்பேர்ப்பட்ட மாபெரும் இசைஞானியைத்தான் உங்கள் படத்துக்கு இசையமைக்க வைத்திருக்கிறீர்கள்... இதுவே உங்களுக்கு மாபெரும் பாக்கியம்".

-இவ்வாறு பேசினார் விவேக்.

 

கார்விபத்து வழக்கு: சல்மான் கான் மது அருந்தியிருந்ததாக வெயிட்டர் சாட்சியம்

மும்பை: 12 ஆண்டுகளுக்கு முன்பாக மும்பை புறநகர்ப் பகுதியான பாந்த்ராவில் உறங்கிக் கொண்டிருந்த நடைபாதைவாசிகள் மீது காரை ஏற்றிய வழக்கில் நடிகர் சல்மான் கானிற்கு எதிராக 5 நட்சத்திர விடுதி வெயிட்டர் இன்று மும்பை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார்.

2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியாக 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை மும்பை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கார்விபத்து வழக்கு: சல்மான் கான் மது அருந்தியிருந்ததாக வெயிட்டர் சாட்சியம்

நீதிபதி தேஷ்பாண்டே முன்பு நடைபெற்ற விசாரணையின் போது மோலே பாக் என்ற வெயிட்டர், சாட்சியம் அளித்தார். காக்டெயில் மற்றும் ரம் ஆகியவற்றை சல்மான் கான் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு தான் சப்ளை செய்ததாக தெரிவித்தார். ஆனால் சல்மான் குடித்தாரா என்பது தனக்குச் சரியாக தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

அரசுத் தரப்பு வக்கீல் ஜகன்னாத் கெஞ்ச்ரால்கர், அவரை மடக்கி மடக்கி கேள்விகள் கேட்டு சல்மான் கான் அன்று குடித்திருந்தார் என்பதை நிரூபித்தார்.

"விடுதியில் போதிய வெளிச்சம் இல்லை, அதனால் யார் யார் குடித்தார்கள் என்பதை என்னால் சரியாகப் பார்க்க முடியவில்லை" என்றார்.

மற்றொரு சாட்சியான போலீஸ் கான்ஸ்டபிள் லஷ்மண் மோர் கூறுகையில், "சல்மான் கானும் அவரது சகோதரர் சோகைலும் ரைன் பாருக்குச் சென்றனர். சகோதரர் சோகைல் நள்ளிரவில் வீடு திரும்பினார். ஆனால் காலை 3 மணியாகியும் சல்மான் திரும்பவில்லை, அப்போது ஒருவர் வந்து எங்களிடம் சல்மான் காரை நடைபாதைவாசிகள் மீது ஏற்றிய சம்பவத்தைக் கூறினார்" என்றார்.இந்த வழக்கு விசாரணை நாளையும் நடைபெறுகிறது.

 

மாயாஜாலில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்... கோச்சடையான் புதிய சாதனை!

சென்னையில் உள்ள மாயாஜால் அரங்கிரல் ரஜினியின் கோச்சடையான் படம் நாளொன்றுக்கு 100 காட்சிகள் வீதம் வெளியாகவிருக்கிறது.

இதுவரை எந்தப் படத்துக்கும் இத்தனை காட்சிகள் ஒதுக்கப்பட்டதில்லை. இதற்கு முன் வெளியான ரஜினியின் எந்திரனுக்குக் கூட 90 காட்சிகள்தான். ஆனால் அதையும் தாண்டியுள்ளது கோச்சடையான்.

மாயாஜாலில் ஒரு நாளைக்கு 100 காட்சிகள்... கோச்சடையான் புதிய சாதனை!

மாயாஜாலில் மொத்தம் 16 அரங்குகள் உள்ளன. இவற்றில் தினசரி நான்கு காட்சிகள் என்ற கணக்கெல்லாம் கிடையாது. முதல் காட்சி 7 மணிக்குத் தொடங்குகிறது. கடைசி காட்சி இரவு 11.44-க்கு. அதுவரை தொடர் காட்சிகளாக படங்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.

இந்தக் கணக்குப்படி ஒரு நாளைக்கு நூறுக்கும் அதிகமான காட்சிகள் மாயாஜாலில் திரையிடப்படுகின்றன.

முன்பு ரஜினியின் எந்திரன் படம் வெளியானபோது, அந்தப் படம் முதலில் 81 காட்சிகளும், அடுத்த வாரத்திலிருந்து 90 காட்சிகளுக்கு மேலும் திரையிடப்பட்டது.

அந்த சாதனையை கோச்சடையான் படம் முறியடித்துள்ளது.

கோச்சடையான் 2 டி, 3டி மற்றும் ஆரோ 3 டி என மூன்று வடிவங்களில் இந்த அரங்கில் வெளியாகிறது. இந்த மூன்றும் சேர்த்து நாளொன்றுக்கு நூறு காட்சிகளாக இந்தப் படம் ஓடவிருக்கிறது.

நேற்று மாலைக்குப் பிறகுதான் மாயாஜாலில் கோச்சடையானுக்கு முன்பதிவு தொடங்கியது. நாளைக்குள் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிடும் என நம்புகிறார்கள்.

 

கேன்ஸ் விழாவில் உலகக் கலைஞர்களைக் கவர்ந்த கமல் ஹாஸன்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த ஆண்டு கலந்து கொண்ட கமல் ஹாஸனின் பேச்சும் கலந்துரையாடலும் அங்கு வந்திருந்தவர்களைக் கவரும் வகையில் அமைந்தது.

2014 கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார் கமல்ஹாஸன். கேன்ஸ் விழாவில் இந்திய அரங்கை திறந்து வைக்க, ஃபிக்கி (இந்திய தொழில் கூட்டமைப்பு) பிரதிநிதியாகச் சென்றிருந்தார் கமல் ஹாஸன்.

கேன்ஸ் விழாவில் உலகக் கலைஞர்களைக் கவர்ந்த கமல் ஹாஸன்!

மத்திய அரசும், பிக்கி அமைப்பும் இணைந்து இந்த இந்திய அரங்கப் பகுதியை அமைத்திருந்தன.

இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்த மத்திய அரசின் செய்தி ஒலிபரப்புத் துறை மற்றும் ஃபிக்கி அமைப்புக்கு வாழ்த்துக் கூறிய கமல், "இப்படி ஒரு உலகத் திரைப்பட விழாவில் இந்தியாவின் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொண்டிருப்பது மிகச் சிறப்பு. இதன் மூலம் வர்த்தகத்தை ஒருங்கிணைக்க முடியும்... இன்னொரு பக்கம், இத்தகைய விழாக்களுக்கு தனியாக வர முடியாத இந்திய படைப்பாளிகள், இந்தியாவின் சார்பில் வந்து உலக கலைஞர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதேபோல இந்தியாவில் கொட்டிக் கிடக்கும் திறமைகளை உலகம் பயன்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பையும் இந்த இந்திய அரங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது," என்றார்.

இந்த விழாவில் கமல் ஹாஸனுடன் பல சர்வதேசக் கலைஞர்களும் ஆர்வத்துடன் கலந்துரையாடினர்.

 

தனுஷும் அக்ஷராவும் நம்ப ஒழுக்கமான, கட்டுப்பாடு மிக்க நடிகர்கள் - அமிதாப்

தனுஷும் அக்ஷராவும் மிகவும் கட்டுப்பாடு மிக்க ஒழுக்கமான நடிகர்கள் என பாராட்டியுள்ளார் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சன்.

பால்கி இயக்கும் புதிய படத்தில் அமிதாப் பச்சனுடன் தனுஷ், அக்ஷரா ஹாஸன் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.

தனுஷும் அக்ஷராவும் நம்ப ஒழுக்கமான, கட்டுப்பாடு மிக்க நடிகர்கள் - அமிதாப்

படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு நீலகிரியில் நடந்து வருகிறது.

தனுஷ் மற்றும் அக்ஷராவின் தொழில் நேர்த்தி குறித்து பெரிதும் சிலாகித்த அமிதாப் பச்சன், "இந்தப் படத்தில் தனுஷும் அக்ஷராவும் எனது சக நடிகர்கள். தென்னகத்துக்கே உரிய நேர்த்தியையும் ஒழுக்கத்தையும் அவர்களிடம் காண்கிறேன். மிகச் சிறந்த கலைஞர்கள்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் நடிப்பைப் பார்க்கப் பார்க்க அவர்களின் மீதான என் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது...

நீலகிரிக்கு பல முறை நான் ஷூட்டிங்குக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு அலுக்காத லொகேஷன் இது...," என்றார்.

 

புதிதாக எதையாவது கண்டுபிடிக்க ரஜினிக்கு ஆர்வம்: மனம் திறந்த லதா

புதிதாக எதையாவது கண்டுபிடிக்க ரஜினிக்கு ஆர்வம்: மனம் திறந்த லதா

டெல்லி: ரஜினிகாந்த் எதையாவது புதிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக உழைத்துக் கொண்டுள்ளார் என்று அவரது மனைவி லதா தெரிவித்தார்.

ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் வழக்கமான எந்த ஒரு சினிமாவிலும் நடித்து பெயரும், புகழும் பெறலாமே, எதற்காக அனிமேசன் போன்ற புது முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று கேட்கிறார்கள். ஆனால் ரஜினியை பொறுத்தளவில் புதிதாக எதையாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் உழைக்கிறார். தனது புகழ் மிக்க பெர்சனாலிட்டியை, புதிய டெக்னாலஜியை அறிமுகம் செய்ய அவர் பயன்படுத்திக்கொள்கிறார்.

அவதார் போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை நமது நாட்டு மக்களுக்கான பயன்பாட்டுக்கு கொண்டுவர தனது புகழை அவர் பயன்படுத்துகிறார். இந்த படத்தில் நடித்தது அவருக்கு சிறந்த அனுபவமாக இருந்தது. ரஜினிகாந்த் திரைப்படங்களில் பேசும் வசனங்கள், டயலாக்குகள் மக்களின் வாழ்க்கையில் ஒத்துப்போகிறது. ரஜினி மந்த்ரா என்ற பெயரில் பள்ளிகளில் மேலாண்மை பாடம் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றார் லதா ரஜினிகாந்த்.

 

என்னை டம்மி பீஸாக்கிடுவாங்களோ: கவலையில் நயன நடிகை

சென்னை: நயன நடிகையை பீதி அடைய வைத்துள்ளாராம் கண் பட நடிகை.

சிங்கம் இசை வாரிசு இயக்குனரின் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நாயகி தேடியபோது நயன நடிகை தானாக வந்து வாய்ப்பு கேட்க அவர்களும்

அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டனர். அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்களில் நடிப்பதை எண்ணி நயன நடிகை மகிழ்ச்சியில் இருந்துள்ளார்.

இந்நிலையில் படத்தில் புதுமுகம் ஒருவரை இரண்டாவது நாயகியாக போடப்போவதாக தெரிவித்துள்ளனர். ஹா புதுமுகம் தானே என்று நயனமும்

கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். புதுமுகத்தை தேடிய இயக்குனருக்கு கண் பட நாயகி நினைவு வந்தது. அவரை படத்தில் ஒப்பந்தம் செய்ய அவருக்கு

ஆசை இருந்தபோதிலும் அவர் எவ்வளவு சம்பளம் கேட்பாரோ என்ற பயமும் இருந்தது.

நடப்பது நடக்கட்டும் என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கண் பட நடிகையை நாடியபோது அவர் என்னவென்றால் ஹீரோவின் பெயரை

கேட்டதும் ஓகே நடிக்கிறேன், சம்பளத்தை பற்றி பேசிக்கலாம் என்று தெரிவித்துவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத இயக்குனருக்கு ஒரே மகிழ்ச்சியாம்.

ஆனால் இது குறித்து கேள்விப்பட்ட நயனத்துக்கு தான் பீதியாக உள்ளதாம்.

கண் பட நடிகை ஹாலிவுட் நடிகை என்பதால் அவரது கதாபாத்திரத்திற்கு ஓவர் வெயிட் கொடுத்து தன்னை டம்மி பீஸாக்கிவிடுவார்களோ என்பது

தான் நயனத்தின் கவலையாக உள்ளது. இந்நிலையில் ஊதா கலரு ரிப்பன் வேறு படத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாம்.

 

No such pipe, or this pipe has been deleted

This data comes from pipes.yahoo.com but the Pipe does not exist or has been deleted.