என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

என் அம்மா சரிகா, நான் ஏன் கௌதமியை அம்மான்னு கூப்பிடணும்?: ஸ்ருதி

சென்னை: எனக்கு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. நான் ஏன் கௌதமியை அம்மா என்று அழைக்கணும் என ஸ்ருதி ஹாஸன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கமல் ஹாஸன், சரிகாவின் மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்ஷரா. இந்நிலையில் கமல், சரிகா விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு கமல் நடிகை கௌதமியுடன் ஒரே வீட்டில் வாழ்கிறார்.

இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி கூறுகையில்,

பிரிந்து செல்ல வேண்டும் என்பது என் பெற்றோரின் சொந்த விஷயம். அதனால் அது குறித்து நான் பேச விரும்பவில்லை. எனக்கு என் பெற்றோரின் சந்தோஷம் தான் முக்கியம். அவர்களே சந்தோஷமாக பிரிந்துவிட்டதால் எனக்கு அதில் எந்த பிரச்சனையும் இல்லை. என் தாய் மற்றும் தந்தையுடன்

எனக்கு நல்ல நெருக்கம். இருப்பினும் என் தாயுடன் தான் அதிக நெருக்கம். நாங்கள் தோழிகளுக்கும் மேல் என்றார்.

நீங்கள் கௌதமியை அம்மா என்று அழைப்பீர்களா என்று கேட்டதற்கு,

நான் ஏன் அப்படி கூப்பிடணும். எனக்கு ஒரு அம்மா இருக்கிறார். அவர் பெயர் சரிகா. என் தந்தை கௌதமியுடன் இருப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

 

சமூகத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்... பாரதிராஜா.வீடு முன் போராட்டம்!

சமூகத்தைக் கொச்சைப்படுத்தி விட்டார்... பாரதிராஜா.வீடு முன் போராட்டம்!

தேனி: சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை இயக்குநர் பாரதிராஜா செய்துள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி தேனியில் உள்ள இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு பார்வர்ட் பிளாக் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குநர் பாரதிராஜாவின் அன்னக்கொடி திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேனியில் உள்ள பாரதிராஜா வீட்டின் முன்பாக பார்வர்ட் பிளாக் கட்சியினர் திடீரென திரண்டனர். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், அவர்கள் வீட்டை நெருங்கும் முன்பு தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் பார்வர்ட் பிளாக் கட்சியினர் வீட்டுக்கு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கும், காவல்துறைக் கண்காணிப்பாளருக்கும் அவர்கள் மனு அளித்தனர்.

அதில், அன்னக்கொடி சினிமாவில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமாகவும் உள்ளது.

காதல் மற்றும் கலப்பு திருமண பிரச்சினைகளால் தர்மபுரி நாயக்கன் கொட்டாய், மரக்காணப் பகுதியில் நடந்த கலவரங்கள் தற்போது ஓய்ந்து உள்ளன. இந்த சினிமா மீண்டும் தென் தமிழகத்தில் பிரச்சினை ஏற்படுத்துவதாக உள்ளது.

சமூகத்தை கொச்சைப்படுத்தி நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயலை பாரதிராஜா செய்து உள்ளார். இதனை கண்டிக்கிறோம். எனவே அன்னக்கொடி படத்தை தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

உயரமான நடிகையை தீவிரமாக ரசிக்கும் இயக்குனர்

சென்னை: உயரமான நடிகை ஒருவரை இயக்குனர் ஒருவர் தீவிரமாக ரசித்து வருகிறாராம்.

நெடு, நெடு என்று வளர்ந்திருக்கும் அந்த நடிகை அருகில் நின்றால் பல ஹீரோக்கள் குள்ளமாகத் தெரிவார்கள். அந்த நடிகைக்கும் ஒரு தெலுங்கு நடிகருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அந்த நடிகருக்கு அண்மையில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

நடிகையோ தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார்.

அந்த நடிகையை லிங்கமான இயக்குனர் தீவிரமாக ரசித்து வருகிறாராம். இதை அவர் அந்த நடிகையிடம் இதுவரை தெரிவித்தது இல்லையாம்.

 

இனி வருஷத்துக்கு 2, அதுவும் பெருசு மட்டுமே: விமல் முடிவு

இனி வருஷத்துக்கு 2, அதுவும் பெருசு மட்டுமே: விமல் முடிவு

சென்னை: விமல் சரிந்து கொண்டிருக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த ஒரு முடிவை எடுத்துள்ளார்.

கூத்துப் பட்டறையில் இருந்து வந்த விமல் மற்றும் விதார்த் ஆகியோரின் மார்க்கெட் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டோ எகிறிக் கொண்டிருக்கிறது.

கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நானும் தானே நடித்தேன். அப்படி இருக்கையில் இந்த சிவகார்த்திகேயனுக்கு மட்டும் எப்படி பெயர் கிடைத்தது என்று புலம்பித் தள்ளுகிறாராம் விமல். இனி வரும், போகும் கம்பெனிகளின் படங்களில் எல்லாம் நடிக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

ஆண்டுக்கு 2 படங்கள் அதுவும் பெரிய இயக்குனர், பெரிய நிறுவனத்தின் படங்களில் மட்டும் தான் நடிப்பது என்று தீர்மானித்துள்ளாராம். தேசிங்கு ராஜா படத்தில் எம்.ஜி.ஆர். ரசிகராக விமல் நடித்துள்ளார். இந்த படம் தனக்கு நிச்சயம் பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறார்.

 

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

7 வயது மகளின் பாதுகாப்பிற்காக வாரம் 30லட்சம் செலவிடும் டாம்குரூஸ்

நியூயார்க்: ஹாலிவுட் சூப்பர் ஸ்டாரான டாம் குரூஸ் தன் செல்ல மகளின் பாதுகாப்பிற்காக வாரம் ரூ 29,76,150செலவிடுகிறாராம்.

50 வயதான டாம் , தனது 7வயது மகள் சூரியின் பாதுகாப்பிற்காக இவ்வளவு பணம் செலவு செய்வது குறித்து மிகவும் சந்தோஷப் படுகிறாராம். தனது தாயோடு நியூயார்க்கில் வாழ்ந்து வரும் சூரியைச் சுற்றி 24 மணி நேரம் பாதுகாப்புப்படையினர் உள்ளனராம்.

இது குறித்து டாமின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறுகையில், ‘டாமைச் சுற்றி எப்போதும் இரண்டு பேர் பாதுகாப்பு அரணாக கலர் டிரெஸ்ஸில் இருப்பார்கள். தற்போது அவர் மகள் சூரிக்கு இருமடங்காக நான்கு பேர் பாதுகாப்புக்கு உள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்கு பணியில் உள்ளவர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்களாம். மேலும், அதிகாரப் பூர்வமாக ஆயுதம் வைத்திருக்க அனுமதி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

சென்னை: பிரியா ஆனந்துக்கு காதல் ஆசை வந்துவிட்டது.

படத்தில் ஹீரோக்களை காதலிப்பது போன்று நடிக்கும் பிரியா ஆனந்துக்கு நிஜத்திலும் காதலிக்கும் ஆசை வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில்,

வாமனன் படத்தின் மூலம் சினிமாவுக்கு வந்த என்னை காதல் காட்சியில் நடிக்கக் கூறினார். காதலி கதாபாத்திரத்தில் முழுமையாக நடிக்க முடியவில்லை. ஏதோ நடித்தேன் என்று தான் கூற வேண்டும்.

தொழில் அதிபர் வேண்டாம், சக நடிகராக இருந்தாலும் ஓ.கே.: பிரியா ஆனந்த்

அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளேன். காதல் என்றால் என்ன என்பதையும் உணர்ந்து கொண்டேன். ஆனால் திரையில் காதலிப்பது போன்று நடிக்க மட்டுமே முடியும். நிஜத்தில் மனதுக்கு பிடித்த ஒருவரை காதலிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது.

நடிப்பில் பிசியாக இருப்பதால் காதலிக்க நேரமில்லை. ஆனாலும் கதாலர் என்று ஒருவர் வரும்போது ஆசை தீர அவரை காதலிப்பேன். பல ஆண்டுகள் காதலித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன். தொழில் அதிபரை மணக்கும் எண்ணம் இல்லை. சக நடிகராக இருந்தாலும் மனதுக்கு பிடித்தவராக இருந்தால் அவரை காதலித்து திருமணம் செய்து கொள்வேன் என்றார்.

 

கோச்சடையானில் ரஜினியின் 'சூப்பர்' லுக்

சென்னை: கோச்சடையான் படத்தில் ரஜினியின் சூப்பர் லுக்குடன் கூடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளைய மகள் சௌந்தர்யாவின் இயக்கத்தில் நடித்துள்ள படம் கோச்சடையான். 3டியில் வெளியாகும் கோச்சடையானில் ரஜினி நடுக்கடலில் டால்பினுடன் சண்டை போடும் காட்சி உள்ளது.

கோச்சடையான் பற்றி வரும் ஒவ்வொரு செய்தியைப் படிக்கும்போது படம் பற்றிய ஆர்வம் கூடுகிறது. படம் எப்பொழுது ரிலீஸாகும் என்று ரஜினி ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரு பலம் என்று கூறலாம்.

கோச்சடையானில் ரஜினியின் 'சூப்பர்' லுக்

மேலும் ரஜினிகாந்த் தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடியுள்ளார். இந்நிலையில் படத்தில் ரஜினியின் சூப்பர் லுக்கைப் பார்த்தீர்களா என்று அவரது பி.ஆர்.ஓ. நிகில் ட்விட்டரில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார். அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்.

 

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த சூர்யா, கார்த்தி

சென்னை: சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் வெள்ளத்தால் பெரும் சேதமடைந்துள்ள உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

உத்தரகண்டில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டதில் நூற்றுக்கண்கானோர் பலியாகினர். மேலும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் சிக்கினர். பல்வேறு இடங்களில் சிக்கித் தவிப்பவர்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பலத்த சேதம் அடைந்த உத்தரகண்டிற்கு திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலர் நிதி அளித்துள்ளனர். இந்நிலையில் சூர்யாவும், அவரது தம்பி கார்த்தியும் அகரம் பவுன்டேஷன் என்ற பெயரில் உத்தரகண்டிற்கு ரூ.10 லட்சம் நிதி அளித்துள்ளனர்.

சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு முன்னணி நடிகருமான பவன் கல்யாண் உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரகசியமாக ‘காதல்’ வளர்க்கும் வம்பு நடிகர்

சென்னை: படப்பிடிப்பில் உண்டான அறிமுகம் தற்போது வீடு வரை தொடர்ந்துள்ளதாம் விரல் நடிகருக்கும், பப்பாளி நடிகைக்கும்.

ஐதராபாத் தான் இவர்களது ரகசிய சந்திப்புகளுக்கு உகந்த இடமாம். இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கும் தெரிந்து விட்டதாம்.

எப்படியோ நல்லாருந்தா சரி என வாழ்த்திய பெற்றோர், நடிகரின் தங்கை திருமணம் முடியும் வரை காத்திருக்கச் சொல்லி இருக்கிறார்களாம்.

அப்போ... கூடிய சீக்கிரமே, இன்னொரு நட்சத்திர டும் டும் இருக்கும் போல.