தமிழக அரசின் கலை -பண்பாட்டு துறை சார்பில் ஜெயகாந்தன்,இளையராஜா ஆகியோருக்கு தமிழக அரசு விருது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழக அரசின் கலை - பண்பாட்டு துறை சார்பில் ஜெயகாந்தன், இளையராஜா ஆகியோருக்கு தமிழக அரசு விருது

1/18/2011 12:11:33 PM

தமிழக அரசின் கலை - பண்பாட்டு துறை சார்பில் ஜெயகாந்தன், இளையராஜா, பத்மா சுப்பிரமணியம் ஆகியோருக்கு தமிழக அரசு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2007 - 2008ம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் பண்பாட்டு துறை மானிய கோரிக்கை மீது தமிழக சட்டப்பேரவையில் 7.5.2009 அன்று நடைபெற்ற விவாதத்தின்போது தமிழகத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற விருதுகள் வழங்கப்படுவதுபோல, அகில இந்திய அளவில் புகழ்பெற்ற கலைஞர்களுக்கும், இலக்கியவாதிகளுக்கும் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், இயல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாரதி விருது, இசைத்துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, நாட்டிய கலையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு பாலசரஸ்வதி விருது என மூன்று விருதுகளை ஆண்டுதோறும் வழங்க முதல்வர் கருணாநிதி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார்.

அந்த உத்தரவின்படி முதல் முறையாக இந்த ஆண்டில் இயல் துறையில் சிறந்த எழுத்தாளராகிய ஜெயகாந்தனுக்கு பாரதி விருது வழங்கவும், திரை இசைக்கலையில் தனி முத்திரை பதித்துள்ள இளையராஜாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது வழங்கவும், நாட்டிய கலையில் புகழுடன் திகழும் டாக்டர் பத்மா சுப்ரமணியத்துக்கு பாலசரசுவதி விருது வழங்கவும், இந்த விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் விருதுக்குரிய பொற்கிழியாக வழங்கவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





Source: Dinakaran
 

மீண்டும் கே.வி-சூர்யா கூட்டணி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் கே.வி-சூர்யா கூட்டணி!

1/18/2011 1:05:44 PM

அயன் படத்தின் பிரம்மாண்ட வெற்றி பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த் ஜீவாவை வைத்து ‘கோ’ படத்தை முடித்துள்ளார். விரைவில் ‘கோ’ வெளியாகும் என்ற நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார் கே.வி. அயன் படத்தின் மூலம் சூப்பர்ஹிட்டடித்த கே.வி.ஆனந்தும், சூர்யாவும் மீண்டும் இணைகிறார்கள். படத்திற்கு மாற்றான் எனப் பெயரிட்டுள்ளனர். தற்போது முருகதாஸின் 7ஆம் அறிவு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. வழக்கம் போல படத்தின் ஸ்கி‌‌ரீப்டை எழுதுயிருப்பவர்கள் எழுத்தாளர்கள் சுபா. இசை ஹ‌‌ரீஸ் ஜெயரா‌ஜ். ஆக் ஷன் படமான இதற்கு மாற்றான் என்று பெயர் வைத்துள்ளனர். தற்போது ஹீரோயின் வேட்டை நடந்து வருகிறது.


Source: Dinakaran
 

மீண்டும் தன் கதையை துசு தட்டிய செல்வராகவன்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் தன் கதையை துசு தட்டிய செல்வராகவன்!

1/18/2011 12:51:48 PM

செல்வராகவன் அறிவித்து அறிவிப்போடு நின்றுபோன படங்கள் பல. டாக்டர்ஸ், இது மாலை நேரத்து மயக்கம், சிந்துபாத்… ‘காதல் கொண்டேன்’ படம் வெற்றிக்குப் பிறகு தனுஷை வைத்து ‘டாக்டர்ஸ்’ என்ற படத்தை இயக்க முடிவு செய்தார் செல்வராகவன். ஆனால் கதை விவாத்துடன் ‘டாக்டர்ஸ்’ முடிந்தது. தற்போது தனுஷ், ஆன்ட்‌ரியா நடிக்கும் இரண்டாம் உலகம் படத்தை இயக்கி வருகிறார். இது ஏற்கனவே அவர் அறிவித்த டாக்டர்ஸ் படம் என்ற பேச்சு எழுந்துள்ளது. காரணம் படத்தில் ஆன்ட்‌ரியா மருத்துவராக வருகிறார். மேலும் அவர் மனநல மருத்துவர் என்ற செய்தியும் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் கண்ணாடி அணிந்து நாலு நாள் தாடியுடன் வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா படத்துக்கு இசையமைக்கிறார்.


Source: Dinakaran
 

இளையராஜாவுடன் மீண்டும் இணையும் மணிரத்னம்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjh2dUgKhn9i0XZdr1Ss2CyId8E1sGrvzhvBkZe506EyD2BXMHD-FbmmSPa9J2yrRO6pPePhjeXnfm7Vcr7zUf2h18Ss5f0SyF7E-Q5x9NmAJlz-oRCM0E4WNhXJxyusL0Mqep1hTbMwhHB/s320/ilayaraja-maniratnam.jpg 
இருபது ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவும், மணிரத்னமும் மீண்டும் இணையவுள்ளனர்.

"ராவணன்" படத்திற்கு மணிரத்தினம் அடுத்த இயக்கவுள்ள படம் "பொன்னியின் செல்வன்". மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ள இப்படம் ராஜராஜ சோழன் காலத்து கதையாகும். அரசகாலத்து கதை என்பதால் இந்தபடத்திற்கு இளையராஜா தான் பொருத்தமான இசையமைக்க முடியும் என்று மணிரத்தினம் எண்ணியுள்ளார். இதனால் படத்திற்கு அவரையே இசையமைக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழில் மணிரத்தினம் இயக்கிய முதல்படமான "பகல்நிலவு" முதல் "தளபதி" வரை அனைத்து படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளிவந்த படப்பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட்டாயின. அப்படி ஹிட் கொடுத்த இவர்களது கூட்டணி "ரோஜா" படத்தில் முறிந்தது. "ரோஜா" படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்தினார் மணிரத்னம். "ரோஜா" முதல் கடைசியாக வந்த "ராவணன்" வரை ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து பணியாற்றிய மணிரத்தினம், இப்போது "பொன்னியின் செல்வன்" படத்தின் மூலம் மீண்டும் இளையராஜாவுடன் இணையவுள்ளார். கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடை‌வேளிக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர்.
 

பிரபுதேவா-சிம்பு மோதல்

http://www.cinehour.com/gallery/gossip/40006835simbu.JPG
நயன்தாரா பற்றி ரகசியங்களை சிம்பு தனது நண்பரிடம் கூறி வருவதை அறிந்த பிரபுதேவா, சிம்புவை கூப்பிட்டு எச்சரித்துள்ளார்.

வல்லவன் படத்தின் மூலம் சிம்பு-நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் காதலாக மாறியது.  இருவரும் மிகநெருக்கமாக இருந்த காட்சிகள் வெளியானதால் இவர்கள் இடையே பிரச்சனை உருவானது. பின்னர் இருவரும் பிரிந்தனர். அதன்பின்னர் பிரபுதேவாவுடன் காதல் வயப்பட்டார் நயன்தாரா.

பிரபுதேவா-நயன்தாரா காதல் விவகாரம் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திற்கு தெரியவர பெரும் பிரச்சனை வெடித்தது. இப்போதுதான் அந்த பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. ரமலத்திற்கு ஒரு மிகப்பெரிய தொகையை கொடுத்து சமாதானம் ஆக்கி விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வைத்துள்ளார் பிரபுதேவா. இருவருக்கும் ஜூன் மாதம் விவாகரத்து கிடைக்கவுள்ளது. விவாகரத்து கிடைத்த கையொடு நயன்தாராவை கரம்பிடிக்க உள்ளார் பிரபுதேவா. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கிவிட்டன. இந்நிலையில் புதிதாக மற்றொரு பிரச்சனை கிளம்பியுள்ளது. இம்முறை பிரச்சனை நயன்தாராவுக்கு.

நயன்தாராவின் முன்னாள் காதலரான சிம்பு, தமக்கும், நயன்தாராவுக்கும் இடை‌யயான நெருக்கம் மற்றும் நயன்தாரா பற்றிய ரகசியங்களை தமது நண்பரிடம் கூறி வருகிறாராம். இந்த செய்தி எப்படியோ பிரபுதேவாவின் காதுக்கு எட்ட மிகவும் டென்ஷனாகி போனா பிரபுதேவா, சிம்புவை பார்த்து முடிஞ்சது, முடிஞ்சு போச்சு, நீ ஒண்ணும் வாயை திறக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.