2/11/2011 3:28:27 PM
கவுதம் மேனன் இயக்கும் 'நடுநிசி நாய்கள்' பட ஹீரோயின் சமீரா ரெட்டி கூறியது: 'வாரணம் ஆயிரம்' மூலம் என்னை அறிமுகப்படுத்தினார் கவுதம் மேனன். அவர் எப்போது படத்தில் நடிக்க அழைத்தாலும் நான் தயார். 'நடுநிசி நாய்கள்' படத்தின் ஷூட்டிங் முழுவதும் நள்ளிரவில்தான் நடந்தது. இரவு 7 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிவரை நடக்கும். நேரத்தோடு இரவில் தூங்கும் பழக்கம் கொண்ட எனக்கு இந்த ஷூட்டிங் சவாலாக அமைந்தது. தூக்கம் சொக்கும். ஆனால் ஷூட்டிங்கில் படமாக்கும் திகில் காட்சிகள், தூக்கத்தை விரட்டிவிடும். ஈசிஆரில் என்னை 4 நாய்கள் துரத்திவரும். தடுக்கி கீழே விழுந்தவுடன் என்னை சுற்றிநின்றுக்கொண்டு குலைக்கும். கால் நகத்தில் பிராண்டும். பயத்தில் முகத்தைக்கூட தூக்காமல் மண்ணுக்குள் தலையை கவிழ்த்துகொண்டேன். இந்த சீனில் நாயின் பயிற்சியாளர் அருகில் நின்றுகொண்டு 'அட்டாக், அட்டாக்' என்று சொல்லும்போது எங்கே மேலே விழுந்து குதறிவிடுமோ என்ற பயத்தில் அழுகையே வந்துவிட்டது. இதில் ஹீரோ வீரா சைக்கோவாக நடிக்கிறார். அவர் என்னை தாக்கப் பாயும் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். இதையடுத்து பிரபு தேவா இயக்கும் படத்தில் நடிக்கிறேன். படத்துக்கு படம் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.