அமீர் இருக்கும் மேடைக்கு நான் வர மாட்டேன் - ப்ரியாமணி

Priyamanik Refused Share The Stage With Ameer   

அமீர் இருக்கும் மேடைக்கு நான் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாராம் பிரியாமணி.

ப்ரியாமணியின் நடிப்பு வாழ்க்கையில் பெரிய திருப்பம் தந்த படம் பருத்தி வீரன். இந்தப் படம் மூலம் தேசிய விருது பெற்று நாடறிந்த நடிகையானார்.

ஆனால் பருத்தி வீரன் படத்துக்குப் பிறகு,. அமீர் இருக்கும் திக்கைக் கூட திரும்பிப் பார்க்க மறுக்கிறாராம் அம்மணி. அவ்வளவு விசுவாசம்!

சமீபத்தில் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு ப்ரியாமணியை அழைத்திருந்தார்கள். ஆரம்பத்தில் வர ஒப்புக் கொண்டுள்ளார் இந்த முத்தழகி. பின்னர்தான் நிகழ்ச்சிக்கு யாரெல்லாம் வருவார்கள் என்று விசாரித்துள்ளார்.

இயக்குநர் அமீர்தான் சீப் கெஸ்ட் என்று சொன்னார்களாம். அவ்வளவுதான். படக்கென்று எழுந்தவர், அவர் பேச்சை எடுக்காதீர்கள். அவர் இருக்கும் மேடைக்கு நான் வரவே மாட்டேன். இந்தாங்க உங்க இன்விடேஷன் என்று கோபமாகக் கூறி அனுப்பிவிட்டாராம்.

 

'டி 20' சூப்பர் சிங்கரில் பட்டையை கிளப்பிய பாட்டிகளின் நடனம்

Shravan S Granny Performs Super Singer T20

விஜய் டிவியின் 'டி 20 சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் பாட்டிகளின் நடனம் பார்வையாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

நடனம் என்பது உற்சாகத்தை தரக்கூடிய விசயம். நடனத்தை முழுமையாக கற்றுக்கொண்டு முறைப்படி ஆடுவது ஒருவகை. இசையை கேட்டு தானாக தாளம் மாறாமல் ஆடுவது மற்றொருவகை. குழந்தைகள் எப்படி நடனமாடினாலும் அதை ரசிக்கலாம். அதேபோல் வயதான தாத்தாவோ, பாட்டியோ நடனமாடுவது கூட அபூர்வமானதுதான்.

விஜய் டிவியின் டி 20 சூப்பர் சிங்கர் நடனநிகழ்ச்சியில் நேற்று பச்சை அணியும், மஞ்சள் அணியும் மோதின. இதில் பச்சை அணியைச் சேர்ந்த இருவர் வல்லவன் படத்தில் வரும் "யம்மாடி ஆத்தாடி" என்ற பாடலை பாடினார்கள். இசையும், பாடலும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவே நிகழ்ச்சியை பார்க்க வந்திருந்த இரண்டு பாட்டிகள் நடனமாட ஆரம்பித்துவிட்டனர்.

வரிக்கு வரி அவர்கள் மாற்றிய ஸ்டெப் அனைவரையும் ரசிக்க வைத்தது. கடைசியில் பாடலுக்கு மதிப்பெண் போட்ட நடுவர் கிரிஷ் பாட்டியின் நடனத்திற்காக ஒருமதிப்பெண் அதிகம் கொடுத்தார். அது மட்டுமல்லாது பாட்டிகளை மேடைக்கு அழைத்து அவர்களுடன் ஒரு குத்தாட்டம் போட்டார். நேற்றைய ‘டி 20 சூப்பர் சிங்கர்' இசை நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக அமைந்தது

 

கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக் இவர்தாங்க!

நவரச நாயகன் எனப்பட்ட நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கின் முதல் சினிமா ஸ்டில்லை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

கடல் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார் கவுதம் கார்த்திக். ஆனால் ஒரு சஸ்பென்ஸ் இருக்க வேண்டும், மீடியா அதிகமாக பரபரக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக கவுதமின் ஸ்டில்களை வெளியில் விடாமல் மறைத்து வந்தார் மணிரத்னம்.

manirathnam releases another first look of goutham   

இடையில் ஒருமுறை கவுதமின் ஸ்டில் யதேச்சையாக வெளியாகிவிட, பதறிப்போய், அதை நீக்கச் சொன்னதெல்லாம் நடந்தது.

இந்த நிலையில் கடல் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்போது முற்றிய கத்தரிக்காயை வெளியில் காட்டி வியாபாரம் செய்தாக வேண்டுமே...

எனவே தினத்துக்கு ஒரு ஸ்டில்லாக வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு கடல் ஃபர்ஸ்ட் லுக் என்ற பெயரில் கவுதம் முகத்தைக் காட்டாமல் ஒரு ஸ்டில்லை வெளியிட்டார் மணிரத்னம்.

இப்போது அதில் கொஞ்சம் முன்னேற்றம். கவுதம் முகத்தை ஓரளவு காட்டியபடி உள்ள டிசைனை வெளியிட்டுள்ளனர்.

இன்னும் சில தினங்களில் இதே ரேஞ்சுக்கு படத்தின் ஹீரோயினான ராதா மகள் துளசியையும் காட்டப் போகிறார். .

ஆமா...ஒரு படத்துக்கு எத்தனை முறை ஃபர்ஸ்ட் லுக் விடுவீங்க மணிரத்னம்?

 

விஸ்வரூபம்... தியேட்டர் கிடைப்பதில் சிக்கல்... சொந்தமாக ரிலீஸ் செய்கிறார் கமல்!

Kamal Release Viswaroopam On His Own   

படத்தை யாரும் வாங்கத் தயாராக இல்லாததால், சொந்தமாகவே ரிலீஸ் செய்கிறார் கமல்ஹாஸன்.

தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேனல் சார்பில் தமிழகம் மற்றும் பிற பகுதிகளில் வெளியிடுகிறார்.

முதல்கட்டமாக தமிழகத்தில் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளார் கமல். திரையரங்குகள் கிடைப்பதில் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஒரு பிரபல விநியோகஸ்தரின் துணையுடன் தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்புவரை, இந்தப் படத்துக்கு ரூ 40 கோடி வரை விலை கொடுக்க தயாராக இருந்தனர் சில விநியோகஸ்தர்கள்.

ஆனால் படத்துக்கு ரூ 100 கோடி வரை விலை வைத்த கமல், மீதி ரூ 60 கோடியை எடுக்க, படத்தை தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடத் திட்டமிட்டார்.

இது தெரிந்து அதிர்ந்த திரையரங்க உரிமையாளர்கள் கமலுக்கு ரெட்கார்ட் போட முடிவு செய்தனர்.

நிலைமையின் விபரீதம் புரிந்து கமல் தன் டிவி ரிலீஸ் முடிவை கைவிட்டார். ஆனால் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் இல்லாத நிலை உருவாகிவிட்டது.

இப்போது விஸ்வரூபத்தை தன் ராஜ்கமல் பட நிறுவனம் மூலம் வெளியிடுகிறார் கமல். ஆனால் தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டதாம். காரணம் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ள ஆரோ 3 டி தொழில்நுட்பம். இந்த வசதி கொண்ட அரங்குகள் மிகக் குறைவு. எனவே மொத்தம் 250 முதல் 300 வரை தியேட்டர்கள் கிடைப்பதே பெரிய விஷயம் என்றாகிவிட்டது நிலைமை.

 

வித்தியாசமான தோற்றத்தில் ஷாம் நடித்த 6 பட இசை - சுதீப் வெளியிட்டார்

Shaam S 6 Movie Audio Launched

சென்னை: நடிகர் ஷாம் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள 6 என்ற படத்தின் இசையை கன்னட நடிகர் சுதீப் இன்று வெளியிட்டார்.

படத்தின் டிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டு வாழ்த்தினார்.

விஇஸட் துரை இயக்கியுள்ள இந்தப் படம் 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 பருவங்கள், 6 நாட்கள் என எல்லாமே 6 எண்ணி்க்கை வருவது போன்ற காலச் சூழலில் உருவாகியுள்ளது.

எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஷாமின் அண்ணன் தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது.

நடிகர் சுதீப் முதல் இசை தட்டை வெளியிட, நடிகைகள் சினேகா, நமீதா, விமலாராமன் பெற்றுக் கொண்டனர்.

டிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டார். நடிகர்கள் பரத், அப்பாஸ், உதயா, வைபவ், சிட்டிபாபு, இயக்குனர் திருமலை, ‘6‘ படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

புத்தாண்டு.. 10 நிமிட ஆட்டத்துக்கு ரூ. 50 லட்சம் வாங்கும் சமீரா ரெட்டி!

Sameera Gets 50 Lakh A 10 Minute Performance   

மும்பை: புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை சமீரா ரெட்டிக்கு 50 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சிலவாரங்களில் புத்தாண்டு பிறக்கப்போகிறது. இதற்காக டிசம்பர் 31ம் தேதி மிகப்பெரிய ஹோட்டல்களிலும், மால்களிலும் கொண்டாட்டங்கள், பார்ட்டிகள் களைகட்டும். நடிகர், நடிகைகள் நடனம் அரங்கேறும். இதற்காக கோடி கோடியாய் கொட்டிக்கொடுக்க தயாராய் இருப்பார்கள் ஓட்டல் உரிமையாளர்கள்.

லக்னோ நகரில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்று நடிகை சமீரா ரெட்டியை புத்தாண்டு பார்ட்டிக்கு புக் செய்திருக்கிறதாம். இதற்காக 10 நிமிடத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளம் அட்வான்ஸ் தரப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.

சிகிச்சைக்காகவும், தனது சகோதரியின் குழந்தையை பார்ப்பதற்காகவும் ஐரோப்பா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சமீரா விரைவில் மும்பை திரும்பிய உடன் இந்த பார்ட்டிகளில் பங்கேற்பார் என்றும் கூறப்படுகிறது.

 

விஸ்வரூபம் கமலே வெளியிடுகிறார்

 

சந்திரமுகி போன்று ஒரு படத்தில் நடிக்க வேண்டும்: தமன்னா

 

குத்துப்பாடலில் தனுஷ்

 

கவுதம் கார்த்திக் இவர் தான்!

 

ஐ படத்துக்காக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார் விக்ரம்

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா முதல் சிடி-யை ஷங்கர் வெளியிட சிம்பு பெற்றுக் கொள்கிறார்

 

படத்தில் இடம்பெறாத சில காட்சிகள் இணையத்தில்: கௌதம்

 

ரகுமானிடம் பாட சான்ஸ் கேட்டார் தபு

 

என்னை வைத்து படம் ஓடாது : அசின்

 

கிசு கிசு - மேனேஜருக்கு குட்பை

 

இளையராஜாவை விட்டு பிரிந்தது ஏன்? : மணிரத்னம் விளக்கம்

 

விஜய் படத் தலைப்பு தங்கமகன்... ரஜினி ரசிகர்கள் கடுப்பு!

Vijay S Next Movie Title Thangamagan

இயக்குநர் விஜய்யும் நடிகர் விஜய்யும் இணையும் புதிய படத்துக்கு தங்கமகன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, ரஜினி ரசிகர்களை கொதிப்புள்ளாக்கியுள்ளது.

துப்பாக்கி படத்துக்குப் பிறகு, ஏஎல் விஜய் இயக்கத்தில், அமலா பால் ஜோடியாக நடித்து வருகிறார் விஜய்.

இந்தப் படத்துக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட தலைப்பு தலைவன். ஆனால் இந்தத் தலைப்பை சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் தன் படத்துக்கு வைத்துவிட்டார். இந்த தலைவன் தலைப்புக்கு முன்போ பின்போ ஏதாவது
ஒரு வார்த்தையை சேர்த்துப் பயன்படுத்திக் கொள்ள இயக்குநர் விஜய் திட்டமிட்டபோது, 'வேணாம் மச்சான் வேணாம் பெரிய இடத்துப் பொல்லாப்பு,' என விஜய் தரப்பில் பலமாக எடுத்துச் சொன்னார்களாம்.

விளைவு... தங்கமகன் என்ற தலைப்பை பிடித்துக் கொண்டார்களாம் (ஏற்கெனவே ஒரு விஜய் படத்துக்கு அழகிய தமிழ்மகன் என பெயர் வைத்திருந்தார்கள்).

இந்தத் தலைப்பு ரஜினி - பூர்ணிமா நடிப்பில், ஏ ஜெகன்னாதன் இயக்கி சத்யா மூவீஸ் தயாரித்த சூப்பர் ஹிட் படத்துடையது. விஜய் கால்ஷீட்டுக்காக நப்பாசையுடன் காத்திருக்கும் சத்யா மூவீஸும் இதற்கு அனுமதி அளித்துவிட்டதாகத் தெரிகிறது.

விஷயம் செய்தியாக வெளியில் வந்ததும், மகா கடுப்பில் இருக்கிறார்கள் ஏற்கெனவே விஜய் படங்களை செமையாக ஓட்டும் ரஜினி ரசிகர்கள்.

 

புவனேஸ்வரி மீது பாய்ந்தது 2வது வழக்கு...!

2nd Case Slapped On Actress Buvaneswari

சென்னை: கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி மீது 2வது வழக்குப் பாய்ந்துள்ளது. காரை விற்று விட்டு மறுபடியும் அதை திரும்ப எடுத்து்ச் சென்று மோசடி செய்ததாக புவனேஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரைக் கைது செய்த போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் டிரைவ் இன் தியேட்டருக்கு தனது ஆதரவாளர்களோடு போய் பெரும் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து புவனேஸ்வரி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்,.

இந்த நிலையில் புவனேஸ்வரி மீது மடிப்பாக்கம் விநாயகராஜ் என்பவர் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில்,நடிகை புவனேஸ்வரியிடம் இருந்த ஒரு காரை கடந்த ஆண்டு ரூ.6 லட்சத்திற்கு வாங்கினேன். முதல் தவணையாக அந்த காருக்கு ரூ.5 லட்சம் தந்து விட்டு, காரை வீட்டிற்கு எடுத்து வந்தேன். ஆனால் மறுநாள் புவனேஸ்வரி அனுப்பியதாக கூறி ஒருவர் வந்தார். புவனேஸ்வரி விற்ற காரில், அவரது புடவை இருக்கிறது என்று சொல்லி அவர் காரை புவனேஸ்வரியின் வீட்டுக்கு எடுத்துச்சென்று விட்டார். மீண்டும் காரை திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து நான் போய்க் கேட்டபோது, புவனேஸ்வரி திரும்பத்தர மறுத்து விட்டார். அத்துடன் அவரும், அவரது ஆட்களும் என்னை மிரட்டினர் என்று கூறியுள்ளார் விநாயகராஜ்.

இந்தப் புகாரை வாங்கி வழக்குப் பதிவு செய்த மடிப்பாக்கம் போலீஸார் புழல் சிறைக்குப் போய் புவனேஸ்வரியை இந்த வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் கோர்ட்டுக்குக் கொண்டு போய் நிறுத்தி அந்த வழக்கில் ரிமாண்ட் பெற்று மீண்டும் சிறையில் கொண்டு வந்து அடைத்தனர்.

புவனேஸ்வரி மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை குண்டர் சட்டத்தின் கீழும் போலீஸார் கைது செய்யக் கூடும் என்ற பேச்சும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

எனக்கும் த்ரிஷாவுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி... விஷால் புளகாங்கிதம்!

Vishal Hails Trisha S Performance Samar

சென்னை: எனக்கும் த்ரிஷாவுக்கும் கெமிஸ்ட்ரி பிரமாதமாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது சமர் படத்தில் என்கிறார் விஷால்.

விஷால்-திரிஷா இருவரும் முதல்முறையாக, 'சமர்' என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செவ்வாய்க்கிழமை காலை நடந்தது.

அப்போது பேட்டியளித்த விஷாலிடம், 'இந்த படத்தில் நீங்களும், திரிஷாவும் காதல் மற்றும் பாடல் காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்து இருக்கிறீர்களே...' என்று கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு பதிலளித்த விஷால், "திரிஷாவும், நானும் நீண்டகால நண்பர்கள் என்பதால், ஒருவரையருவர் புரிந்துகொண்டு வேலை செய்தோம். படப்பிடிப்பின்போதே எங்கள் இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருப்பதாக நிறைய பேர் பாராட்டினார்கள். இரண்டு பேருக்கும் 'கெமிஸ்ட்ரி' நன்றாக இருக்கிறது.

திரிஷாவை எனக்கு ஜோடியாக்க நீண்டகாலமாக முயற்சி நடந்தது. 4 படங்களில் முடியாமல் போய்விட்டது. இந்த படத்தில் முடிந்து இருக்கிறது. மற்ற கதாநாயகிகள் நடித்தால் பொருத்தமாக இருந்திருக்காது என்று சொல்கிற அளவுக்கு, திரிஷா இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

நாங்கள் இருவரும் நெருக்கமான நண்பர்கள் என்பதால், முதல்நாள் படப்பிடிப்பில் இரண்டு பேரையும் நடிக்க வைப்பதற்கு டைரக்டர் ரொம்ப சிரமப்பட்டார். இரண்டு பேரும் கண்களால் நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளும் காட்சியில், இருவருமே சிரித்து விடுவோம். ஒருவழியாக சமாளித்துக்கொண்டு நடித்து முடித்தோம்," என்றார்.