தெய்வத்திருமகளுக்கு சிம்பொனி இசை

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெய்வத்திருமகளுக்கு சிம்பொனி இசை

5/21/2011 11:54:36 AM

விஜய் இயக்கத்தில் விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடிக்கும் படம் 'தெய்வத்திருமகள்'. இந்தப் படத்துக்கு சிம்பொனி இசையை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் பயன்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 'படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சில காட்சிகளில் வசனம் இருக்காது. இசை மூலம் அழுத்தமான உணர்வுகளை சொல்ல வேண்டும். இதற்காக 18 நிமிடங்கள் பின்னணி இசையமைக்கிறேன். அதை சிம்பொனி இசை வடிவில் உருவாக்குகிறேன். இதற்காக 50 இசைக்கலைஞர்களை சென்னை ஸ்டுடியோவுக்கு வரவழைத்து, ஒலிப்பதிவு செய்தேன். எனக்கு இந்தப்படம் மைல் கல்லாக அமையும்' என்றார்.

 

சிறுத்தையை ரீமேக் செய்கிறார் பிரபுதேவா

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

சிறுத்தையை ரீமேக் செய்கிறார் பிரபுதேவா

5/21/2011 11:53:02 AM

கார்த்தி, தமன்னா நடித்த 'சிறுத்தை' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. தெலுங்கில் ரவிதேஜா நடிப்பில் ஹிட்டான படம் 'விக்ரமார்க்குடு'. இது தமிழில் 'சிறுத்தை'யானது. கார்த்தி, தமன்னா, சந்தானம் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழிலும் ஹிட்டானதை அடுத்து, இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபுதேவா. இதில் ஹீரோவாக அக்ஷய்குமார் நடிக்கிறார். சோனாக்ஷி சின்ஹா ஹீரோயின். ஏற்கனவே 'போக்கிரி' படத்தை இந்தியில் ரீமேக் செய்திருந்தார் பிரபுதேவா. இப்போது மீண்டும் ரீமேக் படத்தை இந்தியில் இயக்குகிறார்.

 

ஒரு நாள் வரும்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ஒரு நாள் வரும்

5/21/2011 11:54:04 AM

மலையாளத்தில் 'ஒரு நாள் வரும்' பெயரில் ரிலீசான படம், தமிழில் அதே பெயரில் டப் ஆகிறது. ஏ.வி.ஜி மூவிஸ் சார்பில் திருவேற்காடு வி.துரைமுருகன் தயாரிக்கிறார். சீனிவாஸ் கதை, திரைக்கதை. ஒளிப்பதிவு, மனோஜ் பிள்ளை. இசை, எம்.ஜி.ஸ்ரீகுமார். பாடல், திருநாவுக்கரசு. வசனம், வெட்டுவாணம் சிவகுமார். இயக்கம், ராஜீவ் குமார். எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கும் கார்ப்பரேஷன் அதிகாரி, சீனிவாஸ். அவரை கையும் களவுமாக பிடிக்கும் சி.பி.ஐ அதிகாரி, மோகன்லால். இவர்களின் அடுத்தடுத்த செயல்களால் ஏற்படும் பிரச்னைகளை சொல்லும் இப்படம், விரைவில் ரிலீசாகிறது. மோகன்லால் ஜோடியாக சமீரா ரெட்டி நடித்துள்ளார்.

 

மேகத்துக்கு காத்திருக்கிறது கழுகு டீம்

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மேகத்துக்கு காத்திருக்கிறது கழுகு டீம்

5/21/2011 11:53:32 AM

பட்டியல் சேகர் தயாரிப்பில், சத்யசிவா இயக்கும் படம், 'கழுகு'. கிருஷ்ணா ஹீரோ. பிந்து மாதவி ஹீரோயின். ஒளிப்பதிவு, சத்யா. இசை, யுவன்சங்கர்ராஜா. படம் பற்றி கிருஷ்ணா கூறியதாவது: 90 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளது. மூணாறில் கடுமையான வெயில். இரு பாடல் மற்றும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியை படமாக்க, மேகமூட்டம் தேவை. சீஸன் அடுத்த மாதம் தொடங்கும் என்பதால், காத்திருக்கிறோம். பிந்து மாதவியும், நானும் சந்திக்கும் முதல் காட்சி உருக்கமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கும்.

திரைக்கதையும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் படத்தின் உயிர்நாடி. பின்னணி இசைக்கு நிறைய ஹோம் ஒர்க் செய்து வருகிறார் யுவன். அவர்தான் இப்படத்தின் ஹீரோ. கொடைக்கானல் பகுதியில் வாழும்  நான்கு நண்பர்களை பற்றிய கதை. நண்பர்களாக நான், தம்பி ராமய்யா, கருணாஸ், பிரவீன் நடிக்கிறோம். இந்தப் படத்தையடுத்து, என் அண்ணன் விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறேன். இதன் ஷூட்டிங் இவ்வருட இறுதியில் தொடங்குகிறது.

 

திருமணத்துக்கு அவசரம் இல்லை

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திருமணத்துக்கு அவசரம் இல்லை

5/21/2011 11:55:28 AM

சென்னை : கதைக்கு தேவை என்றால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை என்றார் ஹனிரோஸ்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழில் 'சிங்கம் புலி' படத்தில் சின்ன கேரக்டரில் நடித்தேன். ஒரு பாடலில் கிளாமராக வந்தேன். இவ்வளவு கவர்ச்சியாக நடிக்கலாமா என்று கேட்டார்கள். கதைக்கும், காட்சிக்கும் தேவை என்றால் அப்படி நடிப்பதில் தவறு இல்லை. 'காந்தர்வன்' ஷூட்டிங் முடிந்து விட்டது. 'மல்லுக்கட்டு' படத்தில், கல்லூரி செல்லும் கிராமத்து பெண் கேரக்டர்.
மலையாளத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த 'உப்புக்கண்டம் பிரதர்ஸ்', அடுத்த மாதம் ரிலீஸ். தெலுங்கிலும், கன்னடத்திலும் நல்ல வாய்ப்பு அமையவில்லை. இந்தியில் நடிக்க விருப்பம் இல்லை.
தற்போது பி.ஏ சோஷியாலஜி படிக்கிறேன். இதுவரை யாரும் எனக்கு காதல் கடிதம் கொடுத்தது இல்லை. நானும் யாரையும் காதலித்தது இல்லை. தமிழிலும், மலையாளத்திலும் நிறைய வெற்றிப் படங்களில் நடிக்க விரும்புகிறேன். எனக்கு குறைந்த வயதுதான். அதனால் திருமணத்துக்கு அவசரம் இல்லை.

 

தமிழ் சினிமாவுக்குதான் கேரளாவில் வரவேற்பு மலையாள இயக்குனர் தகவல்

Tags: nbsp, nbsp nbsp nbsp nbsp nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமாவுக்குதான் கேரளாவில் வரவேற்பு மலையாள இயக்குனர் தகவல்

5/21/2011 11:56:06 AM

மலையாளத்தை விட தமிழில்தான் சமீப காலமாக நல்ல படங்கள் வருகின்றன. இதனால் கேரளாவில், தமிழ் சினிமாவுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது என்று மலையாள இயக்குனர் மோகனன் கூறினார்.
'கதபரயும்போள்' (தமிழில் குசேலன்) படத்தை அடுத்து, 4 வருட இடைவெளிக்குப் பிறகு 'மாணிக்கக்கல்லு' என்ற படத்தை இயக்கியுள்ளார் மோகனன். பிருத்விராஜ், சம்விருதா நடித்துள்ள இந்தப் படம் ஹிட்டாகியுள்ளது. அவர் கூறியதாவது:
 நான் இயக்கிய 'கத பரயும்போள்' படம் முழுக்க முழுக்க ஸ்ரீனிவாசன்-மம்மூட்டி படம் தான். அதில் என் பங்கு அதிகமாக இல்லை. அந்தப் படத்தில் மம்மூட்டி பணம் வாங்காமல் நடித்தார்.        எனது இரண்டாவது படமான 'மாணிக்கக்கல்லு' படத்தின் கதையைக் கேட்டதும் பிருத்விராஜ், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தருவதாக கூறி நடித்தார். தற்போதைய காலகட்டத்தில் ஆசிரியர்-மாணவர் உறவு மோசமாக உள்ளது. ஆசிரியர் நினைத்தால் சீரழிந்து கொண்டிருக்கும் சமுதாயத்தை நல்வழிக்கு கொண்டுவரலாம் என்பதே இந்தப் படத்தின் கரு. இந்தக் கதை சினிமாவுக்கு சரியாக வராது என்று கூறி பலர் என்னை திசை திருப்ப முயற்சித்தனர். ஆனால் என் கதையில் எனக்கு நம்பிக்கை இருந்தது. அது வீண்போகவில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் எனக்கு போன் செய்து அழுதுள்ளார்கள். இது தான் என் படத்தின் வெற்றி.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலப் படங்களுக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆனால், கேரளாவில் மலையாள சினிமாவை விட தமிழ்ப் படங்களுக்குத் தான் வரவேற்பு அதிகமாக இருக்கிறது.
மலையாள சினிமாவை விட தமிழில் திறமை வாய்ந்த இளைஞர்கள் அதிகமாக வருகின்றனர். மலையாள ஹீரோக்களை விட சில தமிழ் ஹீரோக்களுக்கு இங்கு மார்க்கெட் அதிகமாக உள்ளது. ஒரு காலத்தில் மலையாளப் படத்துக்கு அடுத்து இந்திப் படங்களுக்குத் தான் மார்க்கெட் அதிகமாக  சிறுத்தையை  ரீமேக் செய்கிறார் பிரபுதேவா




 

ஆரண்ய காண்டம் படத்துக்கு டிரிபியூனல் அனுமதி

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆரண்ய காண்டம் படத்துக்கு டிரிபியூனல் அனுமதி

5/21/2011 11:56:50 AM

கேபிடல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.பி.சரண் தயாரித்துள்ள படம் 'ஆரண்ய காண்டம்'. வன்முறை மற்றும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறி படத்தை வெளியிட சென்னை தணிக்கை குழு தடை விதித்தது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் எஸ்.பி.சரண் படத்தை டிரிபியூனலுக்கு கொண்டு சென்றார். படத்தை பார்த்த டிரிபியூனல் குழு வெளியிட அனுமதி அளித்திருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா கூறும்போது, 'டெல்லியில், ஒரு நீதிபதி, இரு உறுப்பினர்கள், மற்றும் சென்சார் சார்பில் தற்போது சென்னை மண்டல அதிகாரியாக இருக்கும் பக்கிரிசாமி ஆகியோர் படத்தை பார்த்தார்கள். ஒரு சில கட் மட்டும் கொடுத்து படத்தை வெளியிட அனுமதி வழங்கினார்கள். சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்கச் சொன்னார்கள். அவற்றை நீக்கி விட்டோம். விரைவில் படம் வெளிவருகிறது' என்றார்.




 

கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா?

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா?

5/21/2011 12:20:01 PM

கௌதம் மேனன் தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரீமேக் செய்வதில் பிசியாக இருக்கிறார். விரைவில் அவர் தமிழில் ஒரு ஆக்ஷன் கலந்த படம் இயக்குகிறார். அதில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிக்கிறார். சரி, யார் அந்த முன்னணி ஹீரோ?
என்பது தான் எல்லோருடைய கேள்வி. கௌதமின் லிஸ்டில் கார்த்தி, ஆர்யா, ‌ஜீவா ஆகியோர் உள்ளனர். இதில் ஜீவா தேர்வு செய்யபடுவார் என தெரியவருகிறது. இதில் ‌ஜீவா மட்டும் கௌதமை சந்தித்துப் பேசியிருக்கிறார். ஆனாலும் ஹீரோ யார் என்பது இன்னும் முடிவு தெ‌ரியாமலே உள்ளது.




 

கால்ஷீட் பிரச்சனை முடிந்தது, சிம்புவுடன் இணைகிறார் தனுஷ்!

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கால்ஷீட் பிரச்சனை முடிந்தது, சிம்புவுடன் இணைகிறார் தனுஷ்!

5/21/2011 12:40:43 PM

சிம்புதேவனுக்கு கால்ஷீட் கொடுக்க தடுமாறிவந்த தனுஷ் கதை பிடித்து போனதால் இப்போது கமிட்மெண்ட் ஆகிறார். ஆம், சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார், தற்போது சிம்புதேவனும், ஜி.வி.பிரகாஷூம் கம்போஸிங்கில் பிசியாக உள்ளனர்.




 

ஸ்ருதியுடன் இணைகிறார் ஹன்சிகா...

Tags: nbsp

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ருதியுடன் இணைகிறார் ஹன்சிகா...

5/21/2011 12:54:50 PM

வேணு ஸ்ரீராம் இயக்கும் ஓ மைஃப்ரண்ட் தெலுங்கு படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். அதில் மற்றொரு ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார் மாப்பிள்ளை, எங்கேயும் காதல் படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி. மேலும் வெளிவரவிருக்கும்  வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களிலும் ஹன்சிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.




 

மங்காத்தா போஸ்டர்களில் அஜித் கையெழுத்து...

Tags:

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மங்காத்தா போஸ்டர்களில் அஜித் கையெழுத்து...

5/21/2011 1:16:14 PM

அஜித் கேரியரில் முக்கிய படமாக கருதபடும் மங்காத்தா படம் விரைவில் ரிலீசாக உள்ளது. மேலும் மங்காத்தா போஸ்டர்களில் அஜித் தம் கையெழுத்தை பிரிண்ட் செய்யாமல் கைப்பட கையெழுத்து இடுகிறார். அஜித் கையெழுத்து போட்ட போஸ்டர்களின் எண்ணிக்கை 5000 மாம்!




 

ரஜினி பற்றிய வதந்தியால் ரசிகர் தற்கொலை!

Tags: ldquo, rdquo


சென்னை: ரஜினி பற்றிய வதந்தி காரணமாக மனமுடைந்த ரசிகர் ஒருவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

உலகில் வேறு எந்த நடிகருக்கும் இல்லாத அளவுக்கு ரசிகர் மன்றங்களையும் அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களையும் கொண்டவர் ரஜினி.

தமிழகத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் ஏராளம். உலகில் தமிழர் வசிக்கும் நாடுகளிலெல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. ஜப்பான், கொரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த மக்களிலும் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.

ரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கிவிட்டனர். அவரைப் பற்றி மாற்றி மாற்றி வரும் செய்திகள் மற்றும் வதந்திகள் காரணமாக ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, ரஜினி குறித்த வதந்தியால் கலக்கமடைந்த ரசிகர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை அருகே பால்ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி வெங்கடேசன் (29). அந்த பகுதி ரஜினிமன்ற கிளை செயலாளராக இருந்தார். ரஜினி உடல்நிலை பற்றி வந்த வதந்தியால் வேதனையில் இருந்தார்.

இந்நிலையில், நண்பர் ராஜேசுக்கு நேற்று மாலை செல்போனில் பேசிய வெங்கடேசன், “தலைவர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்னால் தாங்கமுடியாது. எனவே, சாகப்போகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அதற்கு நண்பர், "கவலைப்படாதே, தலைவர் ரஜினி உடல் நலம் தேறி வந்துவிடுவார்" என்று ஆறுதல் கூறியிருக்கிறார். இதன்பிறகு அவரது செல்போனுக்கு நண்பர் பேசியபோது செயல்படவில்லை.

இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் வெங்கடேசன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

சாதாரண நிலைக்குத் திரும்பினார் ரஜினி! - மருத்துவமனை அறிவிப்பு

Tags:


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் உடல்நிலை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. அவர் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.

முழுமையான பரிசோதனைக்குப் பின் அவரை தீவிர சிகிச்சை பிரிவுவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்றவற்றுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதன் விளைவாக, ரஜினி சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டார் என்று ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

வழக்கமான உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாக, இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.
 

தியானம் செய்யும் ரஜினி-ராகவேந்திரா பெயர் சொல்லி மாத்திரை சாப்பிடுகிறார்!

Tags:


சென்னை: மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி அவ்வப்போது தியானம் செய்வதாகவும், மருந்து மாத்திரைகளை ராகவேந்திரர் பெயரைச் சொல்லி உட்கொள்வதாகவும் ராணா படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளார்.

அதேநேரம் ரஜினி நலமுடன் உள்ளதாகவும், இட்லி வடை, ரசம் போன்ற வழக்கமான உணவுகளை ருசித்து சாப்பிடுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை டாக்டர் தணிகாசலம் கூறினார். இன்று அல்லது நாளை தனியறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.

நெகிழ்ந்த ரஜினி...

இதற்கிடையில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்யும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் நெகிழ்ச்சியடைந்தார். பூரண நலம் பெற வாழ்த்து செய்தி வெளியிட்டவர்கள், மருத்துவமனைக்கு நேரில் வந்தவர்கள் விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. டிஸ்சார்ஜ் ஆனதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்.

மருத்துவமனையில் அடிக்கடி தியானம் செய்கிறார் என்றும் ராகவேந்திரா, ஷிர்டி சாய்பாபா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி மருந்துகளை சாப்பிடுகிறார் என்றும் 'ராணா' பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.

ரஜினி உடல்நிலை குறித்து வெளிநாட்டு டாக்டர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது.
 

அசினுடன் காதலா? மறுக்கும் நீல் நிதின் முகேஷ்

Tags:


மும்பை: பிரபல இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷுடன் அசின் காதல் வயப்பட்டுள்ளதாக மும்பை பட உலகில் கிசு கிசுக்கள் பரவி உள்ளது. ஆனால் நடிகை அசினை நான் சந்திக்கவே இல்லை என நீல் நிதின் முகேஷ் மறுத்துள்ளார்.

மும்பை படவுலகில் அசினை சல்மான்கானுடன் இதுவரை இணைத்துப் பேசி வந்தனர். இப்போது சல்மான் இடத்தில் நீல் நிதின் முகேஷ்.

பிரபல பின்னணிப் பாடகர் முகேஷின் பேரனும் நடிகருமான நிதின் முகேசை அசின் காதலிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அசினுக்காக தயாரிப்பாளர்களிடம் நிதின் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. தனது படங்களில் அவரை ஜோடியாக்கவும் நிர்ப்பந்திக்கிறாராம்.

ஆனால் இது வெறும் வதந்திதான் என்று நிதின் மறுத்துள்ளார். அசினை சமீபத்தில் நான் சந்திக்கவே இல்லை. நட்பாக பழகினாலே காதல் என கதை கட்டி விடுகிறார்களே, என்று கூறியுள்ளார்.

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகை அசினோ அமைதி காக்கிறார்.
 

ரஜினி நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்தும் திரையுலகம்!

Tags:


மருத்துவமனையில் உள்ள ரஜினிகாந்த் விரைவில் நலம் பெற்று வர சினிமா உலகினர் நாளை கூட்டுப் பிரார்த்தனை நடத்துகின்றனர்.

ஆவடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள ஸ்ரீராகவேந்திரர் கோயிலில் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடக்கிறது. திரையுலகினரும் பொதுமக்களும் இந்த பிரார்த்தனையில் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

ரஜினிகாந்த் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், மரியாதையும் கொண்டவர்கள் பல கோடி மக்கள். அவர்களில் நானும் ஒருவன்.

உடல் நலமில்லாமல் இருக்கும் ரஜினி நலம் பெற்று, என்னைப் போன்ற கோடிக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக சிறப்பு பூஜையுடன், கூட்டு பிரார்த்தனை ஏற்பாடு செய்திருக்கிறேன்.

"சூப்பர்ஸ்டாராக பல கோடி மக்களின் மனதில் இடம் பிடித்து பேரும் புகழுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்துக்கு உடல்நலமில்லை என்பதை அறிந்து துடிதுடித்துப்போய்விட்டேன்.

என்னை சினிமாவுக்கு கொண்டு வந்ததே சூப்பர் ஸ்டார்தான்.

அவரைப் போலவே தீவிர ராகவேந்திரர் பக்தனான நான், ராகவேந்திரருக்காக திருக்கோவில் கட்ட தீர்மானித்தபோது, சிலை வடிவமைக்க மாதிரி புகைப்படம் ஒன்றைக் கொடுத்து, இதுபோல் சிலை இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அவரது எண்ணப்படியே சிலையை வடித்து ஆவடியில் ராகவேந்திரருக்கு திருக்கோவிலை நிர்மாணித்தோம்.

ரஜினி எண்ணப்படி கட்டப்பட்ட ராகவேந்திரர் திருக்கோவிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை 22.05.2011 அன்று காலை 6.30 மணிக்கு, ரஜினி உடல்நலம் பெற வேண்டி, 108 குடம் பாலாபிஷேகம் செய்து, கூட்டுப்பிரார்த்தனை செய்ய இருக்கிறோம்.

ரஜினி உடல்நலத்துக்காக நடைபெற உள்ள இந்த கூட்டுப் பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். ரஜினி ரசிகர்களும் திரளாக கலந்து கொண்டு இந்த கூட்டுப் பிரார்த்தனை சிறப்பாக நடைபெற ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இதில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே பிரார்த்தனை செய்யவும்.

கோடானுகோடி மக்களின் சார்பாக கடவுளின் முன் வைக்கப்படும் நம் கோரிக்கை ஏற்று நிச்சயம் கடவுள் அருள் புரிவார். ரஜினி விரைந்து நலம் பெறுவார்," என்று தெரிவித்துள்ளார்.
 

தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து

Tags:


சென்னை: தேசிய விருது பெற்ற தமிழக நடிகர்-நடிகைகளுக்கு விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

58-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று முன்தினம் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 'ஆடுகளம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் வெற்றிமாறனுக்கு கிடைத்துள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது `ஆடுகளம்' படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கும், சிறந்த நடிகைக்கான விருது `தென்மேற்கு பருவக்கற்று' படத்தில் நடித்த நடிகை சரண்யாவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் "கள்ளிக்காட்டில் பிறந்த தாயே'' என்ற பாடலை எழுதிய கவிஞர் வைரமுத்துவுக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் சிறந்த துணை நடிகருக்கான விருது `மைனா' படத்தில் நடித்த நடிகர் தம்பிராமையாவுக்கும், சிறந்த துணை நடிகைக்கான விருது 'நம்ம கிராமம்' படத்தில் நடித்த நடிகை சுகுமாரிக்கும் கிடைத்துள்ளது.

நடிகர்-நடிகைகளுக்கு வாழ்த்து

இவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். தமிழ்த்திரையுலகத்திற்கு மேலும் மேலும் பல விருதுகள் கிடைத்திட இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறி உள்ளார்.
 

ராணா கைவிடப்படவில்லை... ரஜினி குணமாகி வந்து நடிப்பார்! - கே.எஸ். ரவிக்குமார்

Tags:


ரஜினி குணமாகி வந்து ராணாவில் நடிப்பார். அந்தப் படம் கைவிடப்பட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் படம் ராணா. இதில் அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார்.

இந்தப் பட பூஜையின்போதுதான் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மைலாப்பூர் இசபெல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக ராணா படம் கைவிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கே.எஸ்.ரவிக்குமார் அறிக்கை:

இந்த நிலையில் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மும்பையில் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

ரஜினி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் ராணா படம் கைவிடப்பட்டிருப்பதாக வெளியாகிற தகவல்கள் வருத்தம் அளிக்கிறது. உடல் நலக்குறைவால் ஒருவர் பாதிக்கப்படுவது இயற்கை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கனவுப்படம் ராணா. அவரது சிந்தனையில் உதித்த படம். எனவே இந்தப்படத்தை வெற்றிகரமாக கொண்டு வருவதில் அவர் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.

அடுத்த ஆண்டு வெளியாகும்

ரஜினியின் உடல் நலக்குறைவு, இந்தப்படத்தின் படப்பிடிப்பு திட்டத்தில் ஆரம்பத்தில் ஒரு சிறிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் அவர் உடல் நலம்பெற்று வருவதில் உறுதியாக உள்ளார். மேலும் ஜுலை மாதத்துக்கு பிறகுதான் தீபிகா கால்ஷீட் தந்துள்ளார்.

எனவே இந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக வருகிற தகவல்கள் தவறானவை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான். சூப்பர் ஸ்டார் வேகமாக உடல் நலம்பெற்று வருகிறார். அடுத்த ஆண்டு ராணா படத்தை வெளியிட்டு விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கே.எஸ். ரவிக்குமார் கூறி உள்ளார்.