'திருட்டு' சாட்டை... போலீஸ் கமிஷனரிடம் இயக்குநர் பிரபு சாலமன் புகார்

Prabu Solomon Gives Complaint Again

சென்னை: சாட்டை படத்தின் திருட்டு விசிடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் பிரபு சாலமன்.

இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பிரபு சாலமன் இதுதொடர்பாக புகார் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், நான் சாட்டை என்ற படத்தைத் தயாரித்துள்ளேன்.அப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. ஆனால் அப்படத்தை சிலர் திருட்டு விசிடியாக தயாரித்து விற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் கோயம்பேட்டிலிருந்து செல்லும் ஆம்னி பஸ்களிலும் இதை காட்டுகின்றனர். இன்டர்நெட்டிலும் வெளியி்ட்டுள்ளனர். இதற்கு எதிராக நடவடிக்கை எடுத்து திருட்டு விசிடிக்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபு சாலமன்.

 

பர்ஃபி கதை சுட்டதா, சுடாததா?

Is Barfi Story Copied One

மும்பை: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்தி படமான பர்ஃபியின் கதை சுடப்பட்டது என்று கூறப்படுகிறது.

அனுராக் பாசு இயக்கத்தில் ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா நடித்த வெற்றிப் படம் பர்ஃபி. இந்த படத்தில் ரன்பீர் காது கோளாத வாய் பேசமுடியாதவராகவும், பிரியங்கா ஆட்டிஸம் பாதித்தவராகவும் நடித்துள்ளனர். அவர்கள் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வரும் பல காட்சிகள் பல இடங்களில் இருந்து சுடப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ரன்பீர் கபூர் செய்யும் சில காமெடிகள் சார்லி சாப்ளின் படங்களில் இருந்தும், இலியானா வரும் ஒரு காட்சியும், பிரியங்காவும், ரன்பீரும் ஒரே படுக்கையில் இறந்து கிடக்கும் காட்சியும் ஹாலிவுட் படமான தி நோட்புக்கில் இருந்து சுடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இத்தனை காட்சிகளை பல்வேறு இடங்களில் இருந்து சுட்ட படத்தையா இந்தியா ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஏழாம் அறிவு மற்றும் வழக்கு எண் உள்பட மொத்தம் 19 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கு செல்வதற்கான பரிந்துரை போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறுதியில் பர்ஃபி திரைப்படம் தேர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழில் இப்படி ஒரு படம் வருமா?

Will Kollywood Learn From Bollywood

சென்னை: பாலிவுட்டில் கதாநாயகிகளை மையமாகக் கொண்டு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதே போன்று தமிழிலும் படங்கள் தயாரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் படம் ரிலீஸானால் அனைவரும் கேட்கும் முதல் கேள்வி யாரப்பா ஹீரோன்னு தான். படத்தைப் பற்றி செய்தி வெளியிடும்போதும் சரி, பேசும்போதும் சரி கமல் படம், அஜீத் படம், ரஜினி படம், விஜய் படம் என்று ஹீரோக்கள் பெயரைத் தான் சொல்கிறோம். ஒரு நாளும் இது இந்த நாயகியின் படம் என்று பேசுவதில்லை.

ஆனால் பாலிவுட்டில் அப்படி அல்ல. அங்கு ஹீரோயின்கள் ஹீரோ ரேஞ்சுக்கு இருக்கிறார்கள். ஹீரோயினை மையமாக வைத்து படம் எடுக்கிறார்கள். உதாரணத்திற்கு தமிழில் கலக்கிய சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாக வைத்து படம் எடுக்க தென்னிந்தியாவில் யாருக்குமே தோணாத நேரத்தில் பாலிவுட்டில் ஏக்தா கபூர் வித்யா பாலனை வைத்து தி டர்ட்டி பிக்சர் தயாரித்தார். படத்தில் நசிருத்தீன் ஷா என்ற ஜாம்பவான் இருந்தாலும் வித்யா தான் ஹீரோ. தற்போது கரீனா கபூரை வைத்து ஹீரோயின் படம் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரியங்கா சோப்ராவை மையமாக வைத்து பேஷன் படம் வெளியானது.

இது ஏன் நம்ம தெலுங்கில் கூட அனுஷ்காவை வைத்து அருந்ததி படத்தை எடுத்தார்கள். இதே போன்று தமிழ் திரையுலகிலும் ஹீரோயின்களை மையமாக வைத்து படம் எடுக்க மாட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் ஹீரோயின்கள் ஹீரோவாகும் நாளும் எந்நாளோ?

 

பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்

Actor Krishnamurthy Complaints About Producer Sridharan

சென்னை: காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி பட அதிபர் எஸ்.ஸ்ரீதரன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பல்வேறு படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேட்ங்களில் நடித்துள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. அவர் தமிழ், மலையாளம், மற்றும் கன்னடத்தில் தயாராகியுள்ள யாருக்கு தெரியும் என்ற படத்தில் புரொடக்ஷன் மேனஜராக பணியாற்றினாராம். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ். ஸ்ரீதரன் தன்னிடம் வேலையை வாங்கிவிட்டு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டதாக கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

யாருக்கு தெரியும் படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினேன். எனக்கு பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காமல் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் படத்தை வெளியிடும் வேலையில் மும்முரமாக உள்ளார். அதனால் எனக்கு சேர வேண்டிய சம்பளத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியில் புகார் கொடுத்துள்ளேன். இது குறித்து சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நான் அவரை ஏமாற்றியதாகவும், பண மோசடி செய்தததாகவும் ஸ்ரீதரன் அவதூறு பரப்பி வருகிறார். திரையுலகில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. ஸ்ரீதரனின் அவதூறு புகரால் மன உளைச்சலில் உள்ளேன் என்றார்.

கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞர் எம்.தாமோதர கிருஷ்ணன் கூறுகையில்,

கிருஷ்ணமூர்த்திக்கு திரையுலகில் உள்ள நன்மதிப்பை கெடுக்கவே அவருக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. தனக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
கொடுத்துள்ளார் என்றார்.

நடிகர் கிருஷ்ணமூர்த்தியை அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவரது பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது. மாறாக அவர் தவசி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகளைச் சொன்னால் அத்தனை பேருக்கும் பளிச்சென தெரியம் - பின்லேடன் அட்ரஸையும், முல்லா உமரின் அட்ரஸையும் கேட்டுவடிவேலுவை டார்ச்சர் செய்து நடித்திருப்பார் அப்படத்தில். அதுதான் அவரதுமுகவரியாகவும் அமைந்தது கடைசியில்..

 

250வது முறையாக சைப் அலி கானுடன் தேனிலவுக்குப் போகும் கரீனா கபூர்

Kareena Kapoor S 250th Honeymoon With

டெல்லி: பாலிவுட் நடிகை கரீனா கபூர் வரும் டிசம்பரில் தனது கணவர் சைபுடன் சேர்ந்து 250வது தேனிலவைக் கொண்டாடப்போகிறாராம்.

பாலிவுட் நடிகை கரீனாவுக்கும் நடிகர் சைப் அலி கானுக்கும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை சைப் அலி கானின் தாய் ஷர்மிஷா தாகூர் தான் வெளியிட்டார். இது குறித்து இத்தனை நாட்களாக வாய் திறக்காத கரீனா தனக்கும், சைபுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதை சட்டப்படி பதிவு செய்ய வேண்டியது தான் பாக்கி என்றும் நேற்று தெரிவித்தார்.

அவரும், சைபும் சேர்ந்து ஒரு வீடு வாங்கி கடந்த 5 ஆண்டுகளாக ஒன்றாகத் தான் வாழ்கிறார்களாம். இது தவிர வரும் டிசம்பர் மாதம் இருவரும் விடுமுறையைக் கழிக்க வெளிநாடு செல்கின்றனர். இது அவர்களின் 250வது தேனிலவாம். இதை கரீனாவே கூறியுள்ளார்.

5 ஆண்டுகளில் 250வது தேனிலவா? இத்தனை வாட்டியா என்று நினைக்கையில் ஆச்சரியமாகத்தான் உள்ளது கரீனா.

 

ஹன்சிகாவுக்கு சிம்பு கூட 2, தனுஷ் கூட 2 படம்?

Double Dhamaka Hansika With Simbu Dhanush   

சென்னை: இயக்குனர் சற்குணம் தனுஷை வைத்து எடுக்கும் சொட்ட வாளக்குட்டி படத்தில் ஹன்சிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

விருதுகளைக் குவித்த வாகை சூடவா படத்துக்குப் பிறகு இயக்குநர் சற்குணம் எடுக்கும் படம் சொட்ட வாளக்குட்டி.இந்த படத்தில் தனுஷ் தான் ஹீரோ. அவர் தற்போது இந்தி படமான ராஜ்னாஹாவில் பிசியாக இருப்பதால் அதை முடித்த பிறகு சற்குணம் படத்தில் நடிக்க வருகிறார். வரும் நவம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தில் தனுஷ் குத்துவிளக்கு வியாபாரியாக வருகிறாராம். அவருக்கு ஜோடியைத் தேடி அலைந்த சற்குணம் இறுதியில் ஹன்சிகாவை எடுக்கலாமே என்று முடிவு செய்துள்ளார். இது குறித்து ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடிந்து வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தனுஷ் வரும் வரைக்கும் பாடல்களை ரெடியாக்கும் வேலையில் இறங்கியுள்ளார் சற்குணம். ஹன்சிகா தனுஷின் மாப்பிள்ளை படம் மூலமாகத் தான் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு தற்போது தான் அவருக்கு தனுஷுடன் மீண்டும் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் சிம்புவுடன் வாலு, வேட்டை மன்னன் ஆகிய படங்களில் நடிக்கிறார்.

சொட்ட வாள்ககுட்டியில் நடிக்க ஒப்புக் கொண்டால் அவர் சிம்பவுடன் 2 மற்றும் அவரது எதிரி, நண்பன் தனுஷுடன் 2 படங்களில் நடித்தவர் ஆவார்.

 

45 வயதில் 2வது முறையாக அப்பாவான அக்ஷய் குமார்

It S Baby Girl Akshay Twinkle

மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இரண்டாவது முறையாக அப்பாவாகி உள்ளார். அவரது மனைவி டுவிங்கிள் இன்று காலை அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிகை டுவிங்கிள் கன்னாவை மணந்தார். திருமணத்திற்கு பிறகு டுவிங்கிள் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். அவர்களுக்கு 10 வயதில் ஆரவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அக்ஷய் குமாரும், டுவிங்கிளும் பிரியப் போகிறார்கள் என்று செய்திகள் வந்தன.

இந்த செய்திகள் பரவ ஆரம்பித்த சில நாட்களில் டுவிங்கிள் இரண்டாவது முறையாக கர்ப்பம் என்ற செய்தி வந்தது. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்ஷய் குமார் ஓ மை காட் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெய்ப்பூர் சென்றிருந்தார். இந்த செய்தி கேட்டவுடன் அவர் மும்பை வந்து சேர்ந்தார்.

இன்று காலை டுவிங்கிள் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை டுவிங்கிளைப் போன்று அழகாக உள்ளதாக அக்ஷய் தெரிவித்துள்ளார்.

 

நடிகையானார் சத்யராஜின் மகள் திவ்யா!

Sathyaraj S Daughter Debuts As Actress

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவும் இப்போது நடிகையாகியுள்ளார். ஆனால் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பாட்டுப் பாடும் நடிகையாக அல்ல, மாறாக, ஒரு டாக்குமென்டரி படத்தில் அவர் நடித்துள்ளார்.

சினிமாவில் அப்பா அல்லது அம்மா அல்லது இருவருமே இருந்தால் அவர்களைப் பின்பற்றி அவர்களது பிள்ளைகளும் நடிக்க வருவது புதிதல்ல. எத்தனையோ பேர் இதுபோல வாரிசு நடிகர்களாகி, நடிகைகளாகி முத்திரை பதித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக திவ்யா சத்யராஜ் இணைகிறார். இவர் நடிகர் சத்யராஜின் மகள் ஆவார். தனது மகன் சிபிராஜை சினிமாவில் சேர்த்து விட்ட சத்யராஜ், மகளை மட்டும் சினிமா வாடை கூட அண்டாமல் கவனமாக இருந்து வந்தார். ஆனால் திவ்யாவுக்கோ சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு ரொம்ப நாளாக இருந்தது. இருப்பினும் தந்தை விரும்பாததால் அதை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு வேறு பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.

சமூக சேவையில் அவர் இறங்கினர். சமூக சேவை ஆலோசகராகவும் திகழ்கிறார். என்ஜிஓ அமைப்பு ஒன்றிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அவரத் தேடி நடிப்பு வாய்ப்பு வந்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இயக்குநர் சிர்ஷாய் என்பவர் சிறார் தொழில் குறித்த ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளார். அதில்தான் திவ்யா நடித்துள்ளாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலி்ல கொங்கனா சென்னைத்தான் அணுகினாராம் சிர்ஷாய். ஆனால் அவர் பிசியாக இருக்கவே வேறு நடிகையைத் தேடி வந்தார். அப்போதுதான் தற்செயலாக திவ்யாவை சந்திக்க நேர்ந்துள்ளது. அவரே ஒரு சிறார் தொழிலாளர் நல ஆலோசகராக இருக்கவே டக்கென திவ்யாவையே நடிக்க வைத்து விட்டார்.

திவ்யாவின் நடிப்பைப் பார்த்து அவரது அண்ணன் சிபிராஜ் வெகுவாகப் பாராட்டினாராம்.

இந்த டாக்குமென்டரிப் படத்தை கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் திட்டம் உள்ளதாம்.

 

அஜீத் படத்தில் நடிக்க பிறமொழி படங்களை கிடப்பில் போட்ட அனுஷ்கா

Anushka Prefers Ajith Others   

சென்னை: நடிகை அனுஷ்கா அஜீத் குமாரின் 53வது படத்தில் நடிப்பதற்காக பிறமொழி படங்களில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்கத் தயங்குகிறாராம்.

அஜீத் குமார் தற்போது விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சிறுத்தை இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் அஜீத்தின் 53வது படமாக அமையும். படத்தின் திரைக்கதை பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்காவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து அறிந்த அனுஷ்கா அஜீத் படத்தில் நடிப்பதற்காக தன்னைத் தேடி வரும் பிற மொழிப் பட வாய்ப்புகளை கிடப்பில் போட்டுள்ளாராம். அனுஷ்கா தற்போது ஆர்யாவுடன் இரண்டாம் உலகம் மற்றும் கார்த்தியுடன் அலெக்ஸ் பாண்டியன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் விக்ரமுடன் ஜோடி சேர்ந்த தாண்டவம் விரைவில் ரிலீஸாகவிருக்கிறது.

இது தவிர அவர் சூர்யாவுடன் சிங்கம் 2 படத்திலும் நடிக்கிறார். அவர் கை நிறைய படங்கள் இருந்தாலும் வாய்ப்புகள் வந்து குவியத் தான் செய்கிறது.

 

வீணா மாலிக்கின் சூடான முத்தம்!

Veena Malik Kissing Scene Is Ready To Spark Fire

வீணா மாலிக்கின் செயல்களைப் பார்த்தால் சீக்கிரமே அவர் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகியோரை தூக்கிச் சாப்பிட்டு விடுவார் போல. அந்த அளவுக்கு அவரும் கவர்ச்சியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.

புதிதாக ஒரு ஆல்பத்தில் தோன்றி நடித்து, பாடியும் உள்ளார் வீணா. அதன் பெயர் டிராமா குவீன். இது ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வீடியோ ஆல்பம். இதில் கவர்ச்சிகரமாக தோன்றி ஒரு பாடலையும் பாடியுள்ளார் வீணா.

இந்த நிலையில் இந்தஆல்பம் தொடர்பான 3வது டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் வீணா மாலிக்கின் சூடான முத்தக் காட்சி இடம் பெற்றுள்ளது. படு கவர்ச்சிகரமான அந்த முத்தக் காட்சி குறித்து வீணா கூறுகையில், முத்தங்கள் வாழ்க்கையில் ரொம்ப முக்கியமானவை, அழகானவை. நமது உணர்வுகளை வெளிப்படுத்த முத்தங்கள்தான் சரியான வழியாகும். அதை அன்போடும், சந்தோஷத்தோடும் கொண்டாட வேண்டும் என்கிறார் வீணா மாலிக்.

 

குத்தாட்டம் போட மாட்டேன்: ஸ்ருதி ஹாஸன்

I M Not An Item Dancer Shruti Hassan   

சென்னை: தெலுங்கில் ராம் சரண் தேஜா படத்தில் குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடவில்லை என்று ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தெலுங்கு நடிகர் ராம் சரண் தேஜாவின் நாயக் படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த தகவல் பொய்யானது என்று ஸ்ருதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

நான் தெலுங்கு படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடுகிறேன் என்பதெல்லாம் வெறும் வதந்தி. நான் பிசியாக உள்ளேன். பலுப்பு படப்பிடிப்பு துவங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி தற்போது சம்திங் சம்திங் இந்தி ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை ரீமேக் மன்னன் பிரபுதேவா இயக்கி வருகிறார். இது தவிர ஸ்ருதி தெலுங்கில் ரவி தேஜாவுடன் பலுப்பு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

குத்துப்பாட்டுக்கு ஆட்டம் போட பாலிவுட் நாயகிகள் போட்டி போடும்போது இந்தியில் பெயர் எடுக்க விரும்பும் ஸ்ருதி குத்தாட்டம் போட மாட்டேன் என்று கூறியுள்ளது ஆச்சரியமாக உள்ளது.

 

மகளுக்கு 15 வயசுதானே ஆகிறது.. ஸ்ரீதேவி

Sridevi Don T Want Jhanvi Films At

எனது மகள் ஜான்விக்கு 15 வயதுதான் ஆகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைக்க நான் விரும்பவில்லை. அவரது படிப்பு பாழாகி விடும் என்று கூறியுள்ளார் முன்னாள் கவர்ச்சிக் கன்னி ஸ்ரீதேவி.

4 வயதிலேயே நடிக்க வந்தவர் ஸ்ரீதேவி. 16 வயதாக இருந்தபோது 16 வயதினிலே படத்தில் தனி நாயகியாக நடித்து அந்தக் காலத்து இளசுகளின் மனங்களைக் கவர்ந்து சென்றார். ஆனால் தனது மகளை நடிக்க வைக்க அவர் ரொம்பவே தயங்குகிறார்.

அவரது மூத்த மகள் ஜான்விக்கு தற்போது 15 வயதாகிறது. அவரை சினிமாவில் நடிக்க வைக்க பலரும் கடுமையாக முயன்று வருகின்றனர். ஆனால் ஸ்ரீதேவிக்குத்தான் அதில் விருப்பம் இல்லையாம்.

இதுகுறித்து ஸ்ரீதேவி கூறுகையில், இந்த வயது சினிமாவில் நடிப்பதற்கான வயது இல்லை. நான் எங்கு போனாலும் அவரும் கூடவே வருகிறார். ஆனால் ஒரு தோழியாக, மகளாகத்தான் வருகிறார். அவரை ஒரு நடிகையாக நான் இன்னும் பார்க்கவில்லை. சினிமாவில் நடிக்க வைக்கத்தான் நான் எனது மகளை கூடவே கூட்டிப் போவதாக கூற முடியாது.

எனது மகளை ஆர்க் லைட் வெளிச்சத்திற்குக் கீழ் நிறுத்த நான் விரும்பவில்லை. தற்போது அவர் படித்துக் கொண்டிருக்கிறார், சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே படிக்கிறார். அவரது படிப்பு மீதான கவனம் திசை திரும்புவதை நான் விரும்பவில்லை. இப்போது நடிக்க வந்தால் படிப்பு பாழாகி விடும் என்றார் ஸ்ரீதேவி.

என்னதான் இருந்தாலும் மகளாச்சே, நடிக்க வைக்க யோசிக்கதானே செய்யும் தாய் மனம்...!