தயாரிப்பாளர் விஷாலுக்கு பின்னால் இருக்கும் விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவுரைப்படி தயாரிப்பாளரான விஷால் பாண்டியநாடு வெற்றியால் தற்போது மகிழ்ச்சியாக உள்ளார்.

விஷால் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பாண்டியநாடு படம் ஹிட்டானதால் அவர் மகிழ்ச்சியில் இல்லை இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார். காரணம் படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். மேலும் படத்தின் சாட்டிலைட் உரிமமும் நல்ல விலைக்கு சென்றுள்ளது.

தயாரிப்பாளர் விஷாலுக்கு பின்னால் இருக்கும் விஜயகாந்த்

விஷாலின் இந்த மகிழ்ச்சிக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் அறிவுரை தான் காரணமாம். தான் நடித்த மதகஜராஜா படத்தின் வினியோகதஸ்ராக ஆனார் விஷால். அந்நேரத்தில் விஜயகாந்த் விஷாலை அணுகி தயாரிப்பாளராக மாறுமாறு அறிவுரை வழங்கியுள்ளாராம். மேலும் தான் தயாரிப்பாளராக மாறிய அனுபவங்களையும் விஜயகாந்த் விஷாலிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தான் வருவது வரட்டும் என்று விஷால் தயாரிப்பாளராக மாறினாராம்.

 

அஜீத்தை திருமணம் செய்ய ஆசையாக உள்ளது: புதுமுக நடிகை ப்ரீத்தி

சென்னை: அஜீத் குமாரை திருமணம் செய்து கொள்ளும் ஆசை இருக்கிறது. ஆனால் அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே என்று நடிகை ப்ரீத்தி தாஸ் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து கோலிவுட்டுக்கு வந்திருப்பவர் ப்ரீத்தி தாஸ். அவர் மறுமுகம், உயிருக்கு உயிராக ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அஜீத்தை திருமணம் செய்ய ஆசையாக உள்ளது: புதுமுக நடிகை ப்ரீத்தி

அப்போது அவர் கூறுகையில்,

நான் மும்பையில் மாடலிங் செய்து கொண்டிருந்தேன். அப்போது தான் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து தற்போது 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இதையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்க உள்ளேன். நான் மேற்கத்திய கலாச்சாரத்தில் வளர்ந்தவள். அதனால் கவர்ச்சி காட்டுவதில், உதட்டில் முத்தம் கொடுப்பதில் தயங்க மாட்டேன்.

அஜீத் சாருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. அவரை திருமணம் செய்து கொள்ளும் ஆசையும் உள்ளது. ஆனால் அவருக்கு தான் திருமணமாகிவிட்டதே. தமிழில் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்க விரும்புகிறேன். நான் அழகாக உள்ளேன். நன்றாகவும் நடிப்பேன். எனக்கு தமிழ், இந்தி, மராத்தி, பஞ்சாபி மற்றும் ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் பேசத் தெரியும் என்றார்.

 

ஏற்கனவே ஜனவரி ரேஸில் ரஜினி, அஜீத்: இதில் லேட்டஸ்டாக சேர்ந்த கமல்

ஏற்கனவே ஜனவரி ரேஸில் ரஜினி, அஜீத்: இதில் லேட்டஸ்டாக சேர்ந்த கமல்

சென்னை: ஜனவரி 26ம் தேதி கமலின் விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான், அஜீத் குமாரின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. கோச்சடையான் ரிலீஸாவதால் பொங்கலுக்கு பிற படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிலைமை இப்படி இருக்கையில் கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். கமல் படத்தை டிடிஹெச்சில் வெளியிட முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்தை போன்று இந்த படத்திற்கும் எதிர்ப்பு கிளம்பினால் நாட்டை விட்டு வெளியேற வேண்டி இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி மாதம் முக்கிய நடிகர்களின் படங்களாக ரிலீஸாவதால் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது. கோச்சடையான் மட்டும் 700 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யார் படத்திற்கும் பாதிப்பில்லாமல் படங்களை வெளியிட ஆலோசனை நடந்து வருகிறதாம்.

 

அப்பா கமல் நாத்திகவாதி, மகள் ஸ்ருதி ஆத்திகவாதி

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாஸன் ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார்.

நடிகர் கமல் ஹாஸன் ஒரு நாத்திகவாதி என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அவருடைய மகள் ஸ்ருதி பக்கா ஆத்திகவாதி. அவர் அவ்வப்போது பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்.

அப்பா கமல் நாத்திகவாதி, மகள் ஸ்ருதி ஆத்திகவாதி

தான் நடிக்கும் படங்கள் வெற்றியடைய சிறப்பு பிரார்த்தனை செய்வார். இந்நிலையில் ஸ்ருதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

முதல் முறையாக ஷீரடி சென்றேன். சாய் பாபா கோவிலில் அற்புதமான தரிசனம். என்ன ஒரு ஞாயிற்றுக்கிழமை :) என்று தெரிவித்துள்ளார்.

 

நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு

சென்னை: ஜில்லா படக்குழு பாடல் காட்சியை படமாக்க ஜப்பான் சென்றபோது அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வேலை செய்துள்ளனர்.

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா. இந்த படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியை படமாக்க விஜய், காஜல் உள்ளிட்ட படக்குழு ஜப்பான் சென்றது.

நிலநடுக்கத்தை பார்த்தும் அசராத ஜில்லா குழு

அந்த நேரம் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்த ஆர்.பி. சௌத்ரி படக்குழுவினரை உடனே ஊர் திரும்புமாறு கூறினார். ஆனால் ஜப்பானில் குறிப்பிட்ட சீசனில் பாடல் காட்சியை படமாக்க வேண்டும் என்று நினைத்து சென்ற படக்குழு ஊர் திரும்ப மறுத்துவிட்டது.

இதையடுத்து தாங்கள் நினைத்தபடி பாடல் காட்சியை படமாக்கிவிட்டது தான் ஊர் திரும்பியுள்னர். படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.