கோவா விழாவில் குற்றம் கடிதலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் பெற்ற 'குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி, தயாரிப்பாளர் ஜே எஸ் கே, மற்றும் படக் குழுவினர் இதற்கென கோவா வரவேற்பை ஏற்றனர்.

கோவா விழாவில் குற்றம் கடிதலுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு

பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைக்கும் இந்த சிவப்புக் கம்பள வரவேற்பு, இதற்கு முன் ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்துக்குக் கிடைத்தது.

இந்தப் படத்தையும் ஜேஎஸ்கே நிறுவனம்தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமை. முன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் 'சமர்ப்பணம்," என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார்.

 

என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு சோலோ பாட்டு!

கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு சோலோ பாட்டு!  

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் த்ரிஷா தனியாகப் பாடும் பாடல் காட்சியை படமாக்கப் போகிறார் கவுதம் மேனன். இந்தப் பாடல் காட்சியில் பங்கேற்பதற்கான ஒத்திகையில் சமீபத்தில் பங்கேற்றார் த்ரிஷா. இதனை ஒரு செல்ஃபி படமாக எடுத்து ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.

என்னை அறிந்தால்... த்ரிஷாவுக்கு சோலோ பாட்டு!

"என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இதில் இடம் பெறும் சோலோ பாடலுக்காக என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்," என்றும் தெரிவித்துள்ளார் த்ரிஷா.

 

தமிழில் ஜோதிகாவுடன் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் அபிராமி!

தமிழில் சமுத்திரம், வானவில், விருமாண்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த அபிராமியை நினைவிருக்கிறதா..

சில ஆண்டுகள் காணாமல் போயிருந்த அபிராமி, மீண்டும் மலையாளப் படங்களில் தலை காட்ட ஆரம்பித்தார். இப்போது தமிழ்ப் படம் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழில் ஜோதிகாவுடன் 'ரீ என்ட்ரி' கொடுக்கும் அபிராமி!

ஜோதிகா நடிக்கும் ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் அபிராமி ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு டெல்லியில் சமீபத்தில் தொடங்கியது.

அடுத்த கட்டப் படப்பிடிப்பில் அபிராமியும் இணைகிறார். ஜோதிகாவுக்கு தோழியாக அவர் வருகிறார். மலையாளத்தில் இந்தப் பாத்திரத்தில் கனிகா நடித்திருந்தார். ஜோதிகாவுக்கும் இந்தப் படம்தான் ரீ என்ட்ரி.

கமல் நடித்துள்ள உத்தம வில்லன் படத்தில் அபிராமி டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஐ தெலுங்கு, ஹிந்தி இசை வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு

ஐ தெலுங்கு, ஹிந்தி இசை வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு  

அடுத்து இதன் இந்தி இசை வெளியீட்டு விழா மும்பையில் நடக்கிறது. வரும் டிசம்பர் 5-ம் தேதி விழா நடக்கிறது.

அதற்கடுத்த 5 நாட்கள் கழித்து டிசம்பர் 10-ம் தேதி தெலுங்குப் பதிப்பின் இசையை வெளியிடுகிறார்கள்.

இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் ஹாலிவுட் பிரபலங்கள் சில்வஸ்டர் ஸ்டெலோன் மற்றும் ஜாக்கி சான் பங்கேற்பார்கள் என முன்பு கூறிவந்தனர். வருவார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் இந்தப் படத்தை வரும் ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று வெளியிடுகின்றனர்.

 

மகள்களை ஜெயிக்க வைக்காம ஓயமாட்டேன்: மாஜி நடிகையின் சபதம்

சென்னை: கோலிவுட்டில் ஜொலிக்க முடியாமல் தவிக்கும் தனது 2 மகள்களையும் முன்னேற்றாமல் ஓய்வது இல்லை என்ற முடிவுக்கு முன்னாள் ஹீரோயின் வந்துள்ளாராம்.

ஒரு காலத்தில் கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்தவர் அந்த இரண்டு எழுத்து ஹீரோயின். திருமணம், குழந்தைகள் என்றான பிறகு அவர் சினிமாவுக்கு முழுக்குப்போட்டுவிட்டார். இந்நிலையில் தாய் வழியில் அவரது இரண்டு மகள்களும் நடிக்க வந்துள்ளனர்.

மூத்த மகளுக்கு தமிழில் ஒரு படம் ஓடியது. இளைய மகளுக்கோ அவர் இதுவரை நடித்த இரண்டு படங்களும் ஊத்திக் கொண்டது. இருவரும் சினிமா உலகில் ஜொலிக்க முடியாமல் தவிக்கிறார்கள். தான் வெற்றிக் கொடி நாட்டிய இடத்தில் தனது மகள்கள் தத்தளிப்பதை பார்த்து முன்னாள் ஹீரோயின் கவலையில் உள்ளாராம்.

இப்படியே கவலைப்பட்டால் வேலைக்கு ஆகாது என்று ஒரு முன்னணி ஹீரோவை பிடித்து அவருக்கு மகள்களை ஜோடியாக்கி படம் எடுப்பது என்று முடிவு செய்துள்ளதாம் தாய்க்குலம். இதற்காக கமர்ஷியல் ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர்களை தொடர்பு கொண்டு கதை கேட்டு வருகிறாராம்.

தாய்க்குலத்தின் இந்த முயற்சி தந்தைக்குலத்திற்கு பிடிக்கவில்லையாம். ஆனாலும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்து வருகிறாராம் தாய்க்குலம்.

 

ஆமீர்கான் படத்தை முந்திய ரஜினியின் லிங்கா!

ஆமீர்கானின் பிகே படத்தை விட அதிக அரங்குகளில் வெளியாகிறது ரஜினியின் ஆமீர்கான் படத்தை முந்திய ரஜினியின் லிங்கா!   

இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் 3000 அரங்குகளைக் குறிவைத்துள்ளனர் படத்தை வெளியிடும் அய்ங்கரன் நிறுவனத்தினர். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

ஆக மொத்தம் 5500-க்கும் அதிகமான அரங்குகளில் லிங்கா வெளியாகிறது.

ஆனால் ஆமீர்கானின் இந்திப் படம் பிகே 4000 அரங்குகளில்தான் வெளியாகிறது. இவற்றில் 1000 அரங்குகள் வெளிநாடுகளில் உள்ளவை. இந்தியாவில் 3000 அரங்குகளில் படத்தை வெளியிடுகின்றனர். இந்தப் படத்தை ராஜு ஹிராணி இயக்கியுள்ளார்.

 

தமிழகத்தில் 650 அரங்குகளில் லிங்கா ரிலீஸ்

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி வெளியாகும் தமிழகத்தில் 650 அரங்குகளில் லிங்கா ரிலீஸ்  

ரஜினி படங்கள் வெளியாகும்போது, தமிழகத்தின் 90 சதவீத அரங்குகளில் அந்தப் படமே வெளியாகும் என்ற நிலை பாபா சமயத்திலிருந்து உருவாகியுள்ளது.

எந்திரன் படம் வெளியானபோது, தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகள் அந்தப் படத்துக்கே தரப்பட்டன.

நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு இப்போதுதான் ரஜினியின் லைவ் ஆக்ஷன் படம் வெளியாகிறது என்பதால், தமிழகத்தின் அனைத்து அரங்குகளும் அந்தப் படத்தை வாங்கி திரையிட ஆர்வம் காட்டியுள்ளன. இரண்டு அல்லது மூன்று அரங்குகள் மட்டுமே கொண்ட சிறு நகரங்களில், அனைத்து அரங்குகளிலும் லிங்காவை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் அதிகபட்சமாக 65 அரங்குகளில் லிங்கா திரையிடப்பட உள்ளது. பிவிஆர், ஐநாக்ஸ், மாயாஜால் போன்ற அரங்குகளில் அனைத்து திரைகளும் இந்தப் படத்துக்கே ஒதுக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 650 அரங்குகளில் லிங்கா வெளியாகும் என்று இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெளியீட்டுத் தேதி நெருங்க நெருங்க மேலும் 50 அரங்குகள் வரை அதிகரிக்கும் நிலை உள்ளது.

 

சிம்பு, நயன் மாதிரி ஆகப் போகும் ஆலியா பட், வருண் தவான்?

சென்னை: முன்னாள் காதலர்களான ஆலியா பட் மற்றும் வருண் தவான் ஆகியோர் ஒன்று சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.

பாலிவுட்டின் இளம் கனவுக் கன்னியான ஆலியா பட், வருண் தவான் சேர்ந்து ஹம்ப்டி ஷர்மா கி துல்ஹனியா படத்தில் நடித்தனர். அதில் அவர்கள் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்திருந்தது. மேலும் அவர்களுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. இருவரும் சில காலம் கைகோர்த்து காதல் பறவைகளாக சுற்றி வந்தனர். இந்நிலையில் தான் வருணுக்கு தனது முன்னாள் காதலி நினைவு வந்து அவருடன் சேர ஆலியாவை பிரிந்து சென்றுவிட்டார்.

சிம்பு, நயன் மாதிரி ஆகப் போகும் ஆலியா பட், வருண் தவான்?

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹாரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸ் படத்தில் ஆலியாவும், வருணும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம். படத்தை அவர்களை ஏற்கனவே இயக்கிய ஷஷாங்க் கைத்தான் தான் இயக்க உள்ளாராம்.

சரி ஆலியாவுக்கும் சிம்பு, நயனுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் நினைக்கலாம். முன்னாள் காதலர்களான சிம்புவும், நயன்தாராவும் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள் அல்லவா அது போன்று தானே ஆலியாவும், வருணும் நடிக்க உள்ளனர். அது தான் அப்படி தலைப்பு.

முன்னதாக தீபிகா படுகோனே தனது முன்னாள் காதலரான ரன்பீர் கபூருடன் சேர்ந்து நடித்த படம் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட வராத விக்ரம்! - நினைவுகூரும் கலைஞானம்

தன்னை நாயகனாக அறிமுகப்படுத்திய பிரபல இயக்குநர் ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட நடிகர் விக்ரம் வரவில்லை என்று கூறியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கலைஞானம்.

இன்று முன்னணி நடிகராக உள்ள விக்ரம் நாயகனாக அறிமுகமானது தந்துவிட்டேன் என்னை என்ற படத்தில்தான். ரோகிணிதான் இதில் அவருக்கு ஜோடி.

இயக்குநர் ஸ்ரீதர் உடல் நலம் குன்றி, மரணத்தின் விளிம்பில் இருந்த போது விக்ரம் முதல் நிலை நடிகராகிவிட்டிருந்தார் (இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடுகள் சாதாரணமானதல்ல!).

அறிமுகப்படுத்திய ஸ்ரீதர் மரணத்துக்குக் கூட வராத விக்ரம்! - நினைவுகூரும் கலைஞானம்

இதுகுறித்து கலைஞானம் நக்கீரன் பத்திரிகையில் எழுதியிருப்பதாவது:

சில வருடங்களுக்குப் பிறகு தி.நகர் வீட்டை விற்றுவிட்டு அடை யாறு பக்கம் குடியேறினார் ஸ்ரீதர். அதன்பின் கை, கால் செயல்படாமல் இருந்து... இறந்தும் விட்டார்.

திரையுலகமே சென்று ஸ்ரீதருக்கு அஞ்சலி செலுத்தியது. நானும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினேன். அப்போது சோகமயமாக நின்றிருந்த ஸ்ரீதரின் ஒன்றுவிட்ட தம்பியும், பிரபல டைரக்டருமான சி.வி.ராஜேந்திரன் என்னிடம் வந்தார்.

"விக்ரமை ஹீரோவா அறிமுகப்படுத்தி 'தந்துவிட்டேன் என்னை' படம் எடுத்தார். அதில் பெரும் நஷ்டம். வட்டிக்கு மேல் வட்டி ஏறி... பெரும் மன உளைச்சலில்தான் அவரை நோய் தாக்கியது. கை, கால் விழுந்து விட்டது. பாருங்க... அவர் இறப்புக்கு எல்லாரும் அஞ்சலி செலுத்தினாங்க. ஆனா.. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட விக்ரம் வரலை. இப்படியுமா இருப்பாங்க மனுஷங்க...'' என வேதனைப்பட்டார்.

"ராஜேந்திரன் சார்... ஏத்திவிட்ட ஏணியை எட்டி உதைக்கிற பலரை நான் என் அனுபவத்தில் பார்த்திருக்கேன். அதேபோல ஏத்திவிட்ட ஏணி மரத்தை தெய்வமாக கொண்டாடுனவங்க... அண்ணன்மார்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றவர்கள்தான். இதுவும் என் அனுபவம்தான்'' என அவரை ஆசுவாசப்படுத்தினேன்.

-இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

 

கஷ்டப்பட்டேன்.. கஷ்டப்பட்டேன்னு புலம்பாதீங்க! - விஜய் சேதுபதி

சினிமாவில் கஷ்டப்பட்டேன் கஷ்டப்பட்டேன்னு யாரும் புலம்பாதீங்க... சினிமா மட்டுமல்ல, எல்லா தொழில்களிலும் கஷ்டப்பட்டாத்தான் வெற்றி வரும் என்றார் விஜய் சேதுபதி.

'1பந்து 4ரன் 1விக்கெட்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

கஷ்டப்பட்டேன்.. கஷ்டப்பட்டேன்னு புலம்பாதீங்க! - விஜய் சேதுபதி

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக விஜய் சேதுபதி அழைக்கப்பட்டிருந்தார். இந்த விழாவில் படத்தில் நடித்த அனைவரும் பங்கேற்று பேசினார்கள். பேசிய அனைவருமே விஜய் சேதுபதி எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது தெரியும், அவர் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவர் வாழ்வில் பல நாட்கள் கஷ்டபட்டதுதான் என்று விஜய் சேதுபதியை வாழ்த்திப் பேசினார்கள்.

அடுத்து பேச வந்த விஜய் சேதுபதி, ‘படம் வெற்றியடைய இயக்குனர் வீராவுக்கு வாழ்த்துகள். வாழ்வில் எல்லோருமே கஷ்டப்படுகிறார்கள். கஷ்டப்பட்டால்தான் வாழ முடியும்.

சினிமாவில் மட்டுமல்ல, மற்ற தொழில்களும் அப்படித்தான். அதனால், கஷ்டப்பட்டேன்... கஷ்டப்பட்டேன்... என யாரும் புலம்ப வேண்டாம். கஷ்டப்பட்டாதான் வெற்றி வரும்.

நமக்கான வேலையை நாம் செய்துகொண்டே இருப்போம். வெற்றி வரும், போகும் ஆனால் நாம் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும்,' என்றார்.

 

லிங்கா.. தமிழக உரிமையை வாங்கியது வேந்தர் மூவீஸ்.. கோவை தவிர மற்ற ஏரியாக்களுக்கு ரூ 70 கோடி!!

ரஜினியின் லிங்கா.. தமிழக உரிமையை வாங்கியது வேந்தர் மூவீஸ்.. கோவை தவிர மற்ற ஏரியாக்களுக்கு ரூ 70 கோடி!!  

ஆனால் இந்த விலைக்குத் தர ஈராஸ் நிறுவனம் தயாராக இல்லை. அதே சமயம் கோவையைச் சேர்ந்த நகைக் கடை நிறுவனம் ஒன்று கோவை பகுதிக்கான உரிமையை மட்டும் பெரும் விலைக்குக் கேட்டு வந்தது.

கேரள உரிமைக்கும் ரூ 10 கோடிக்கு மேல் தர விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.

எனவே கோவை பகுதி நீங்களாக தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை மட்டும் வேந்தர் மூவீசுக்குக் கொடுத்துள்ளனர் ஈராஸ் நிறுவனத்தினர். இதற்கு விலையாக ரூ 70 கோடியைத் தந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மாநிலத்தில் படத்தை வெளியிடும் உரிமைக்காக இவ்வளவு பெரிய தொகை தரப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் படத்தில் காமெடிப் பட்டாளமே இருக்கு... ஆனால் முன்னணி காமெடியன்களுக்கு இடமில்லை!

சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதுமையான படத்தில் ஒரு காமெடிப் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது.

ஆனால் வடிவேலு, சந்தானம், சூரி போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.

விஜய் படத்தில் காமெடிப் பட்டாளமே இருக்கு... ஆனால் முன்னணி காமெடியன்களுக்கு இடமில்லை!

இந்தப் படத்தில் தம்பி ராமையா, சத்யனா், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி போன்றவர்கள் நகைச்சுவைக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்த வித்யுலேகா (சந்தானம் ஜோடி) இந்தப் படத்தின் பெண் நகைச்சுவை நடிகையாக சேர்க்கப்பட்டுள்ளார்.

விஜய் படத்தில் காமெடிப் பட்டாளமே இருக்கு... ஆனால் முன்னணி காமெடியன்களுக்கு இடமில்லை!

பொதுவாக விஜய் படங்களில் யாராவது ஒரு முன்னணி காமெடி நடிகர் அவருடன் கைகோர்ப்பார். ஆனால் இந்தப் படத்தில் அப்படி யாரும் இணையவில்லை.

சந்தானம், வடிவேலு என இரண்டு முன்னணி நடிகர்களுடனுமே இயக்குநர் சிம்பு தேவனுக்கு சரியான உறவில்லை என்பதால்தான் இந்த நிலை என்கிறார்கள்.

 

உங்களுக்கு என் இங்கிலீஷ் புரியுமா? - திஹார் இசை வெளியீட்டுக்கு வந்தவர்களைக் கேட்ட கிரண் பேடி

திகார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, விழாவுக்கு வந்திருந்தவர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் நான் பேசும் ஆங்கிலம் புரியுமா என்று கேட்டுவிட்டு, பின்னர் தமிழில் மொழி பெயர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

உங்களுக்கு என் இங்கிலீஷ் புரியுமா? - திஹார் இசை வெளியீட்டுக்கு வந்தவர்களைக் கேட்ட கிரண் பேடி

பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் கிரண் பேடி. திகார் படத்தினா இசைத் தட்டை வெளியிட்டுப் பேசினார்.

அவர் பேசத் தொடங்கும் முன், "உங்களுக்கெல்லாம் நான் பேசற இங்கிலீஷ் புரியுமா?" என்று கேட்டார்.

உங்களுக்கு என் இங்கிலீஷ் புரியுமா? - திஹார் இசை வெளியீட்டுக்கு வந்தவர்களைக் கேட்ட கிரண் பேடி

உடனே கூடியிருந்த கூட்டம் (நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் உள்பட) மையமாகத் தலையாட்டி வைத்தார்கள்.

இதைப் பார்த்த கிரண் பேடி, தன் பேச்சை மொழிப் பெயர்க்குமாறு தொகுப்பாளினியிடம் சொன்னார்.

தொடர்ந்து திகார் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த கிரண் பேடி, இந்த நிகழ்ச்சி ரொம்ப நகைச்சுவை மிக்கதாக இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருக்கும் நகைச்சுவை படத்தின் ட்ரைலரில் இல்லை. ரொம்ப ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருந்தது," என்றவர், தொடர்ந்து திகார் சிறையில் தான் மேற்கொண்ட சீர்த்திருத்தங்களை விலாவாரியாகச் சொன்னார்.

உங்களுக்கு என் இங்கிலீஷ் புரியுமா? - திஹார் இசை வெளியீட்டுக்கு வந்தவர்களைக் கேட்ட கிரண் பேடி

பின்னர் நிஜ திகார் பற்றி ஒரு படம் எடுக்குமாறும், அதற்கு தான் எழுதியுள்ள திகார் சிறை பற்றிய புத்தகம் உதவும் என்றும் கூறி வாழ்த்தினார்.

அவர் ஆங்கிலத்தில் சொன்னதை தமிழில் மொழிப் பெயர்ப்பதாகக் கூறி தொகுப்பாளினி சொதப்பி வைத்தார். கிரண் பேடி படத்தில் தேடிய நகைச்சுவை இந்த தொகுப்பாளினியின் மொழிப் பெயர்ப்பில்தான் இருந்தது!!