ராஜமவுலியைப் பாராட்டிய அஜீத்... அஜீத்தைப் புகழ்ந்த ராஜமவுலி - அடுத்த படத்துக்கு அச்சாரம்?

Ajith Praises Rajamouli    | பில்லா 2   | நான் ஈ  

கோலிவுட்டில் இன்றைய சூடான பேச்சு... ராஜமவுலி - அஜீத் டெலிபோன் பேச்சு குறித்துதான்.

ராஜமவுலியை அநேகமாக தமிழுக்கு அழைத்து வந்துவிடுவார் போலிருக்கிறது தல, என்கிறார்கள் இருவரும் பேசிக் கொண்டதை அருகிலிருந்து கேட்டவர்கள்.

நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் படம் நான் ஈ. இந்தப் படத்தின் இயக்குனர் ராஜமௌலிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தையும் அதன் வில்லன் சுதீப்பையும் பாராட்டித் தள்ளிவிட்டார்.

தமிழ்த் திரையுலகமே இந்தப் படத்துக்கு பாராட்டு மழை பொழிந்துவிட்டது. தெலுங்கில் இதுவரை வந்த படங்களின் சாதனையை ஈகா முறியடித்துவிட்டது.

லேட்டஸ்டாக நான் ஈ படம் பார்த்தவர் அஜீத். படம் பார்த்து முடித்ததும், ராஜமவுலியை போனில் தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளிவிட்டாராம். கூடவே, ஒரு நல்ல சரித்திர த்ரில்லர் நடிக்கும் தனது ஆசையையும் ராஜமவுலிக்கு தெரிவித்துள்ளார் அஜீத்.

தனக்கேற்ற மாதிரி ஒரு கதையைத் தயார் செய்யத் தகுதியானவர் ராஜமவுலி என்பது அஜீத்தின் கருத்து. அதேபோல, அஜீத்தின் நடிப்புத் திறமையையும் யதார்த்தத்தையும் புகழ்ந்த ராஜமவுலி, ஒரு பர்பெக்டான படம் அமைந்தால் அஜீத்தின் ரேஞ்சே வேறு என்றாராம்.

ராஜமவுலி நேரடி தமிழ்படம் இயக்குவதில் ஆர்வமாக உள்ளாராம். தலயும் 'ஷோ மேனும்' கை கோர்ப்பதற்கு எக்கச்சக்க சாத்தியம் உள்ளதாக அஜீத் வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

 

ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... திரையிசையில் அது ஒரு பொற்காலம்!

The Tridevs Bollywood

ராஜேஷ் கன்னா - ஆர் டி பர்மன் - கிஷோர் குமார்... எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பத்தாண்டுகள் பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த கூட்டணி இது.

ஆராதனாவில் ஆரம்பித்தது இந்தக் கூட்டணி. அந்தப் படத்துக்கு இசை எஸ்டி பர்மன். ஆர்டி பர்மனின் தந்தை. இணையற்ற இசை மேதை. 'நாளெல்லாம் சாஷ்டாங்கமாக காலில் விழுந்து கும்பிட வேண்டும்' என்று இளையராஜா போற்றி வணங்கும் அளவுக்கு மாபெரும் இசைமேதை!

அன்றைக்கு புகழின் உச்சியில் இருந்தவர் முகமத் ரஃபி. ஆனால் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் பயன்படுத்திக் கொண்டு, மற்ற பாடல்களை கிஷோர் குமாருக்குக் கொடுத்தார், தந்தையின் இசைக்கு நடத்துநராகப் பணியாற்றிய ஆர்டி பர்மன்.

அவரது யோசனை பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது. அன்று தொடங்கியது இந்த மும்மூர்த்திகளின் ராஜ்ஜியம்!

33 படங்களில் இந்த மூவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சில்வர் ஜூப்ளி கூட அல்ல... கோல்டன் ஜூப்ளி படங்கள்.

கதி பதங்கில் வரும் 'ப்யார் தீவானா ஹோதா...', 'யே ஷாம் மஸ்தானி...' இன்றும் இளசுகளைக் கிறங்கடிக்கும் இனிமையானவை.

நமக் ஹரம் படத்தில் இடம்பெறும் 'நதியா கே தரியா' ராஜேஷ் கன்னா - கிஷோர் - ஆர்டியின் எவர்கிரீன் ஹிட். அந்தப் பாடலுக்கு குல்சாரின் வரிகளும், ஆர்டியின் துள்ளல் இசையும் கிஷோர் பாடும் விதமும் எப்போது கேட்டாலும் மனசை அள்ளிக் கொள்ளும்!

அந்த ரூப்பு தேரா மஸ்தானா பட பாடல்களை பாலிவுட் உள்ளவரை மறக்க முடியுமா...!

அமர் பிரேமில் இடம்பெற்றுள்ள சிங்காரி கோயி பட்கே..., அஜ்நபியில் கிறங்கடித்த பீகி பீகி ராத் மெய்ன்..., ஹம் தோனோ தோ ப்ரேமி.., ஏக் அஜ்நபி ஹஸீனா ஸே.., குத்ரத்தில் ஹமே தும்ஸே ப்யார் கித்னா... எத்தனையெத்தனை இனிமையான பாடல்கள்.

அப்னா தேஷில் இந்த மூவரும் துள்ளல் இசையில் புதிய சரித்திரமே படைத்திருப்பார்கள். தி ட்ரெயின் மற்றும் அப்னா தேஷில் ராஜேஷ் கன்னாவுக்காக குரல் கொடுத்திருப்பார் ஆர் பர்மன். அதில் துனியா மேய்ன் லோகோ... காலத்தை வென்ற பாடல்!

சினிமாவைத் தாண்டி, தனிப்பட்ட முறையிலும் இந்த மூன்று சிகரங்களும் ஒருவருக்கொருவர் அத்தனை அந்நியோன்னிய நட்பு பாராட்டினர்.

இசையில் கொடிகட்டிப் பறந்த ஆர்டி பர்மனை, எண்பதுகளின் பிற்பகுதியில் பல முக்கிய தயாரிப்பாளர்களும் கைவிட்ட நேரத்திலும், ராஜேஷ் கன்னா மட்டும் தொடர்ந்து அவருடன் பணியாற்றினார். தன் சொந்தத் தயாரிப்புகளுக்கு அவரையே இசையமைப்பாளராக்கினார்.

அதேபோல, ராஜேஷ் கன்னா முதல் முறையாக படம் தயாரித்தபோது, பாடகர்களில் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த கிஷோர் குமார், பணம் வாங்காமல் அனைத்துப் பாடல்களையும் பாடிக் கொடுத்தார். அந்தப் படத்துக்கு தனக்கும் பணம் வேண்டாம் என்று கூறிவிட்டார் ஆர்டி பர்மன்.

கிஷோர் குமார் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினருக்கு தொடர்ந்து உதவியவர் ராஜேஷ் கன்னா. கிஷோரின் மகன் அமித் குமார் தயாரிப்பில், கிஷோர் குமார் இயக்கி பாதியில் நின்ற ஒரு படத்தை தன் சொந்த செலவில் முடித்துக் கொடுத்தாராம்.

இந்த மூவரில் முதலில் மறைந்தவர் கிஷோர் குமார் (1987). அடுத்து ஆர் டி பர்மன் (1994). இப்போது ராஜேஷ் கன்னா.

இசையால் மனங்களை என்றும் ஆளும் மும்மூர்த்திகள்!

 

அமிதாப் பேத்திக்கு காது குத்தியாச்சாம்!

Beti B S Ears Pierced Jaya Bachchan

அமிதாப் பச்சனின் பேத்தியும் அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராயின் மகளுமான ஆரத்யாவுக்கு காது குத்தி விட்டார்களாம். இதை ஆரத்யாவின் பாட்டி ஜெயா பச்சன் தெரிவித்துள்ளார்.

அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா தம்பதிக்கு அழகான மகள் பிறந்துள்ளாள். இக்குழந்தைக்கு ஆரத்யா என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த ஒரு திரைப்பட விழாவுக்கு பாட்டி ஜெயா பச்சன் வந்திருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பிரபலங்களிடம் அவர் பேசியபோது ஆரத்யாவும், ஐஸ்வர்யாவும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். ஆரத்யா படு சுட்டியாக இருப்பதாகவும் பூரிப்புடன் கூறினார்.

பின்னர் தனக்கு அருகில் நின்றிருந்த நடிகை நந்திதா தாஸிடம் ஜெயா கூறுகையில், பேத்திக்கு மொட்டை போட்டு விட்டோம் என்று கூறினாராம்.

அப்புறம், ப்ரீகேஜி எங்கே சேர்க்கப் போறீங்க...சொன்னீங்கன்னா நியூஸ் போட வசதியா இருக்கும்!

 

தனது தோளில் என்னை 8 நாட்கள் தாங்கினார் ராஜேஷ்.. மும்தாஜ்

Rk Carried Me On His Shoulders Eight Days Mumtaz

ராஜேஷ் கன்னா குறித்த மலரும் நினைவுகளை அவருடன் ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் மும்தாஜ். அவரும் ராஜேஷ் கன்னாவும் இணைந்து எட்டுப் படங்களில் நடித்துள்ளனர். அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இதுவும் கூட ராஜேஷ் கன்னாவின் சாதனைகளில் ஒன்றுதான்.

ராஜேஷ் கன்னாவுடனான அனுபவம் குறித்து மும்தாஜ் கூறியது...

நானும், ராஜேஷ் கன்னாவும் அதிர்ஷ்டக்கார ஜோடிகள். ஒரு பிளாப் படத்தைக் கூட நாங்கள் தரவில்லை. நானும், அவரும் இணைந்து நடித்த கடைசிப் படம் ஆய்னா. அதில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

எங்களது முதல் படமான தோ ராஸ்தே மிகப் பெரிய ஹிட் ஆன படம். பாடல்கள்தான் அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம். அதன் பிறகு எனக்குத் திருமணமாகி விடை பெற்றுச் செல்லும் வரை அவருடன் நடித்த அத்தனையும் ஹிட் படங்கள்.

அவருடன் நடித்தபோது சுதந்திரமாக அவருடன் என்னால் பேச முடிந்தது. எங்களது ஜோடிக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவருடன் இருந்த நண்பர்கள் அனைவருமே அவரை அதிகம் நேசித்தவர்கள். அப்படித்தான் அவர் தனது நட்பு வட்டத்தை அமைத்திருந்தார். என்னிடம் அவருக்கு எப்போதுமே அதிக பாசம் உண்டு. நல்ல நட்புடன் இருவரும் இருந்தோம். நடிக்கும்போதும் சரி, பாடல் காட்சிகளின்போதும் சரி, எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.

மன்மோகன் தேசாயின் ரொட்டி படத்தில் நடித்தபோது என்னைத் தூக்கிக் கொண்டு பனி படர்ந்த மலையில் அவர் ஓடி வர வேண்டும். அப்போது நான் சற்று பருமனாக இருப்பேன். இதனால் என்னை அவர் கிண்டலடிப்பார். தினசரி காலையில் ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள், வெயிலுக்கு முன்பாகவே. என்னைப் பார்த்ததும், வாம்மா குண்டம்மா, ஓட ஆரம்பிக்கலாம் என்று சிரித்தபடி என்னை தூக்கிக் கொண்டு ஓடுவார். அது படத்தின் கிளைமேக்ஸ் காட்சி. இந்தக் காட்சியை மட்டும் எட்டு நாட்கள் எடுத்தார்கள். எட்டு நாட்களும் என்னைத் தூக்கிச் சுமந்தார் அவர். இதனால் அவரது தோள்பட்டையே சிவந்து போய் விட்டது.

ராஜேஷ் கன்னாவை இழந்தது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, எனக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான் என்றார் மும்தாஜ்.

 

மூன்று மார்புகளுடன் கலக்கும் காத்லீன் லீப்!

Meet Total Recall S New Three Breasted Woman

ஹாலிவுட்டில் ஒரு படத்திற்காக ஒரு நடிகை மூன்று மார்புகளுடன் காட்சி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அந்த நடிகையின் பெயர் காத்லீன் லீப். சாண்டியாகோவில் நடந்த காமிகான் நிகழ்ச்சியின்போது மூன்று மார்புகள் தெரிய அவர் வந்தபோது அனைவரும் வியந்து போய் அங்கேயே பார்த்தனர்.

லென் வைஸ்மேனின் டோட்டல் ரீகால் படத்தின் ரீமேக்கில்தான் இப்படி மூன்று மார்புகளுடன் தோன்றுகிறார் காத்லீன். மூன்று மார்புகளும் வெளியில் தெரியும்படியாக அவர் கவர்ச்சிகரமான உடையுடன் வந்தபோது நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அத்தனை பேரின் பார்வையும் மூன்று மார்புகள் மீதுதான் விழுந்தது.

இந்த மார்பு நிஜமான மார்பு அல்ல, மாறாக செயற்கையாக உருவாக்கப்பட் மார்பு, டோட்டல் ரீகால் படத்தில் இப்படி மூன்று மார்புகளுடன் அவர் தோன்றுகிறார். பட புரமோஷனுக்காக செயற்கை மார்பகத்தைப் பொருத்தியபடி அவர் வந்திரு்நதார்.

நிஜமான மார்பு போலவே காத்லீனின் மூன்றாவது மார்பும் கம்பீரமாக காட்சி அளித்ததைப் பார்த்து பலரும் வியந்தனர்.

காத்லீன் டோட்டல் ரீகால் படத்தில் மூன்று மார்புகளுடன் நடிப்பது ஏற்கனவே ரசிகர்களிடையே கிளுகிளுப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் நிஜமாகவே அதே கெட்டப்பில் அவரை நேரில் பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகி விட்டது.

தன்னையே உற்றுப் பார்த்தவர்களைப் பார்த்து சிரித்தபடி காத்லீன் இப்படிச் சொன்னார்...உங்களுக்கு மூன்று கைகள் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இல்லையா....!

 

கும்கி ஆடியோ - கமல் வெளியிட சூர்யா பெற்றுக்கொள்கிறார்!

Kamal Release Kumki Audio

கும்கி படத்தின் இசையை கமல் ஹாஸன் வெளியிடுகிறார். நடிகர் சூர்யா முதல் சிடியை பெற்றுக் கொள்கிறார்.

பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகும் படம் கும்கி. பிரபு சாலமன் இயக்கியுள்ள இந்தப் படத்தை யுடிவியும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

யானைகளைப் பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் இது. மைனாவுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் என்பதால், பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இமான் இசையில் உருவாகியுள்ள, இப் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜூலை 27-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் நடக்கிறது.

நடிகர் கமல்ஹாஸன் முதல் சிடியை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் ரஜினியும் கலந்து கொள்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் அவர் பிரபு மகனை வாழ்த்தி வீடியோ பேட்டி மட்டும் கொடுத்துள்ளார். வெளியூரில் இருப்பதால் இந்த விழாவில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமே என்று கூறப்படுகிறது.

 

தனது முதல் மலையாளப் படத்திலிருந்து ஆர்யாவை நீக்கிய பேரரசு!

Perarasu Drops Arya From His Debut

இயக்குநர் பேரரசு முதல் முறையாக இயக்கும் மலையாளப் படத்துக்காக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆர்யாவை நீக்கிவிட்டு, ப்ருத்விரகாஜை ஒப்பந்தம் செய்துள்ளார்.

தடாலடிப் படங்களுக்குப் பெயர் போனவர் பேரரசு. இன்று அவர் கிண்டலாகப் பார்க்கப்பட்டாலும், விஜய், அஜீத் இருவருக்குமே லைப் கொடுத்தவை அவரது படங்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழில் இப்போது இவருக்குப் படங்கள் இல்லாத நிலையில், இவர் மலையாளத்தில் ‘சன் ஆப் அலெக்ஸாண்டர்' என்ற படத்தை இயக்குகிறார். இதுவும் அதிரடி ஆக்ஷன் கதைதான்.

இப்படத்தில் நடிப்பதற்காக முதலில் ஆர்யாவிடம் பேசப்பட்டது. ஆனால் மலையாள படவுலகில் ஆர்யாவுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தினால் ஆர்யாவை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் யோசித்தனர்.

இதையடுத்து இப்பொழுது ஆர்யாவை ஒப்பந்தம் செய்வதை விட்டுவிட்டு மலையாள படவுலகில் பிரபலமாக இருக்கும் பிருத்விராஜை ஒப்பந்தம் செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு சிபாரிசு செய்துள்ளார் பேரரசு.

பிஸினஸ்தானே முக்கியம்... அதனால துணிஞ்சி முடிவெடுங்க சார் என்று தயாரிப்பாளரிடம் கூறினாராம் பேரரசு!

 

பிளேபாய்க்கு நிர்வாண போஸ் கொடுத்ததற்காக ஷெர்லின் சோப்ராவுக்கு பாரத ரத்னா வேணுமாம்

Sherlyn Chopra Wants Bharat Ratna N

பிளேபாய் பத்திரிக்கைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்ததற்காக பாலிவுட் நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வேண்டுமாம். இதை அவரே தெரிவித்துள்ளார்.

ஆண்கள் பத்திரிக்கையான பிளேபாயின் நடுப்பக்கத்தில் யாராவது பிரபலமான பெண்ணின் நிர்வாண புகைப்படம் வருவது வழக்கம். இந்த போட்டோவுக்காக ஆண்கள் ஆளாளுக்கு போட்டி போட்டுக் கொண்டு இந்த பத்திரிக்கையை வாங்குவார்கள்.
இந்த பத்திரிக்கைக்கு இதுவரை எந்த இந்திய பெண்ணும் நிர்வாண போஸ் கொடுத்ததில்லை. இந்நிலையில் பாலிவுட்டில் பெரிய நடிகையாகத் துடிக்கும் ஷெர்லின் சோப்ரா லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சற்றும் கூச்சமின்றி நிர்வாண போஸ் கொடுத்துவிட்டு ஏதோ பெரிய சாதனை படைத்துவிட்டதுபோன்று பெருமி்தத்துடன் நாடு திரும்பியுள்ளார். அவரது புகைப்படம் அடங்கிய பத்திரிக்கை வரும் நவம்பரில் வெளிவருகிறது.

இந்தியாவுக்கு வந்ததும், வராததுமாக டுவிட்டரில் தனது பிளேபாய் போஸ் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

நாட்டுக்கு சேவை செய்வோரை பாராட்டி வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னா விருது எனக்கு கொடுக்கப்பட வேண்டும். நான் பிளேபாய் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ளேன். இந்நேரத்தில் எனது தந்தை மட்டும் உயிருடன் இருந்திருந்தால் மிகவும் பெருமைபட்டிருப்பார். பிளேபாய்க்கு அதிக முறை போஸ் கொடுத்த பமிலா ஆன்டர்சனின் சாதனையை முறியடிக்க கடவுள் தான் எனக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிறந்தமேனியாக போஸ் கொடுத்தற்கு பாரத ரத்னா கேட்குதாக்கும்...

 

ராஜேஷ் கன்னா-டிம்பிள் தி்ருமணம் பற்றி சுவையான 10 தகவல்கள்

10 Lesser Known Facts About Dimple

இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டாரான பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, டிம்பிள் தம்பதியின் திருமணம் பற்றி சுவையான 10 தகவல்கள் வருமாறு,

1. டிம்பிள் கபாடியா பாலிவுட் நடிகர் ரிஷி கபூரை காதலித்தார். அவர்கள் காதல் முறிந்த பிறகு ராஜேஷ் கன்னா தன்னுடைய தீவிர ரசிகையான டிம்பிளை சந்தித்தார்.

2. ராஜேஷ் கன்னா தன்னைவிட 15 வயது சிறியவரான டிம்பிளை கடந்த 1973ம் ஆண்டு மார்ச் மாதம் ஜுஹூவில் உள்ள டிம்பிளின் குடும்ப பங்களாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.

3. அவர்களது திருமண வரவேற்பு மும்பை ஜுஹூவில் உள்ள ஹோட்டல் ஹாரிசனில் நடந்தது. பாலிவுட் நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

4. டிம்பிள் தான் நடித்துக் கொண்டிருந்த பாபி படித்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்கள் தேனிலவை மார்ச்சில் இருந்து ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

5. திருமணம் முடிந்த கையோடு பாபி படப்பிடிப்புக்கு சென்றார் டிம்பிள். அதனால் அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளில் அவரது கையில் திருமணத்திற்காக போடப்பட்ட மெஹந்தி தெரியாதவாறு எடுத்தனர்.

6. ராஜேஷ்-டிம்பிள் தம்பதி ஐரோப்பாவுக்கு தேனிலவு சென்றனர். ஆனால் அவர்கள் தனியாக செல்லவில்லை. அவர்களுடன் தயாரிப்பாளர் ராஜ் பதீஜா, அவரது மனைவி நிர்மல் மற்றும் பால்தேவ் பதக் (நடிகைகள் ரத்னா, சுப்ரியா பதக்கின் தந்தை) ஆகியோரும் சென்றிருந்தனர்.

7. அவர்கள் ஐரோப்பாவில் தேனிலவு கொண்டாடியபோது டிம்பிளின் 16வது பிறந்தநாளுக்கு ராஜேஷ் ஹில்டன் ஹோட்டலில் பிரமாண்டமான பார்ட்டி கொடுத்தார். அதே ஆண்டு திருமணமான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் அப்போது லண்டனில் தேனிலவைக் கொண்டாடினர். அவர்களை ராஜேஷ் தனது மனைவியின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தார். அவர்களும் அவரது அழைப்பை ஏற்று பார்ட்டிக்கு வந்தனர்.

8. ராஜேஷ் தனது மனைவியை செல்லமாக டிம்பி என்று அழைத்தார். அதே போன்று டிம்பிள் அவரை காக்கா என்றே அழைத்தார்.

9. 1984ம் ஆண்டு ராஜேஷும், டிம்பிளும் பிரிந்துவிட்டாலும் அவர்கள் விவகாரத்து பெறவில்லை.

10. இந்த பிரிவு நடந்து பல ஆண்டுகள் கழித்து ராஜேஷ் கன்னா கூறுகையில், உங்களுக்கு ஒன்று தெரியுமா, நான் இன்னும் எனது மனைவி டிம்பிளை காதலிக்கிறேன் என்றார்.

 

ரம்ஜான் ஸ்பெஷலாக வருகிறது கமலின் விஸ்வரூபம்?

Kamal S Vishwaroopam Hit Screens Au   

இந்த ஆண்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ள படங்களில் ஒன்றான கமல்ஹாஸனின் விஸ்வரூபம், ரம்ஜான் ஸ்பெஷலாக வரும் என்று விநியோகஸ்தர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

கமல்- பூஜா குமார்-ஆன்ட்ரியா உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள பெரிய பட்ஜெட் படம் விஸ்வரூபம். ஒரு ஆண்டுக்கும் மேலாக கமல்ஹாஸன் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்.

பிவிபி சினிமாஸுடன் இணைந்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் சிறப்புக்காட்சி இந்த ஆண்டு ஐஃபா விழாவில் திரையிடப்பட்டது. படத்தின் முன்னோட்டக்காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளன.

இந்தப் படம் இந்த மாதம் வெளியாகக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் பாடல்களே வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே, ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருந்த மாற்றான், துப்பாக்கி படங்கள் தள்ளிப் போய்விட்டன. எனவே ஆகஸ்ட் மூன்றாவது வாரம் விஸ்வரூபம் படம் வெளியாகக்கூடும் என விநியோகஸ்தர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

 

தமிழுக்கு வரும் ஜான் ஸினா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக நடிக்க வைப்பது சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இந்திய படங்களில் ஹாலிவுட் டெக்னீஷியன்கள் பணியாற்றுவது வழக்கமாகி இருந்தது. சில படங்களில் கிராபிக்ஸ், ஆக்ஷன் விஷயங்களில் ஹாலிவுட் படத்தில் பணியாற்றியவர்கள் இங்கும் பணியாற்றியுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக இந்தி நடிகர், நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கத் தொடங்கினர். அனுபம் கெர், அனில்கபூர், இர்பான்கான், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பிரீடா பின்டோ மல்லிகா ஷெராவத், பிபாஷா பாஷு உட்பட பலர் ஹாலிவுட் படங்களில் நடித்துவருகின்றனர். இதையடுத்து இப்போது ஹாலிவுட் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தமிழ்ப் படங்களில் ஹாலிவுட் நடிகர்களை வில்லனாக்குவது பேஷனாகி உள்ளது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் ஹாலிவுட் நடிகர் ரோலண்ட் கிக்கிங்கர் வில்லனாக நடித்திருந்தார். சர்வதேச அரசியல் பற்றிய படமான இதில் அவரது கேரக்டர் பாராட்டப்பட்டது. இதையடுத்து விஜய் இயக்கிய 'மதாரசபட்டினம்' படத்தில் வில்லனாக அலெக்ஸ் ஓ நெல் நடித்திருந்தார். காதல் கதையான இதில் அலெக்ஸின் நடிப்பு பொருத்தமாக இருந்தது. இவரே சந்தோஷ் சிவனின் 'உருமி' படத்திலும் நடித்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய '7ஆம் அறிவு' படத்தில் ஜானி டிரை நுயன் வில்லனாக நடித்திருந்தார். மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டரான ஜானியின் ஆக்ஷன் காட்சிகள் பரபரப்பாகப் பேசப்பட்டன. 'விளையாட்டு' என்ற படத்தில் ஆன்ட்ரூ என்பவர் நடித்திருந்தார். இந்த படங்கள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்து ரிலீஸ் ஆக உள்ள படங்களிலும் ஹாலிவுட்டில் இருந்து வில்லன்கள் இறக்குமதி ஆகின்றனர். ஜெயம்ரவி, த்ரிஷா நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் படம், 'பூலோகம்'. இதில் வில்லனாக நடிக்க ஹாலிவுட் நடிகர்களான ஜான் ஸினா மற்றும் ஸ்டீவ் ஆஸ்டினிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஜான்ஸினா '12 ரவுண்ட்', 'மரைன்' உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர். இதே போல ஸ்டீவ் ஆஸ்டின் 'நாக்கவுட்', 'கன்டம்டு' உட்பட பல படங்களில் நடித்தவர். இதையடுத்து அமீர் இயக்கும் 'ஆதிபகவன்' படத்தில் தாய்லாந்து ஸ்டண்ட் நடிகர்கள் சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளனர். இதே போல கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்' படத்திலும் ஹாலிவுட் நடிகர்கள் வில்லன்களாக நடித்துள்ளனர். அடுத்து ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 'சிங்கம் 2' படத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த வில்லன் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.


 

பிரியாணி படத்தில் ரிச்சா

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
கார்த்தி நடிக்க வெங்கட்பிரபு இயக்கும் பிரியாணி படத்தில்  ரிச்சா கங்கோபாத்யாய் ஹீரோயினாக நடிக்கிறார். மற்றொரு ஹீரோயினாக காக்டெய்ல் இந்தி படத்தில் நடித்த தியானா நடிக்க பேச்சு நடக்கிறது.


 

சல்மானுடன் பிறந்தநாள் கொண்டாடிய கேத்ரினா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
தனது பிறந்த நாளன்று வீட்டுக்கு வெளியே காத்திருந்த மீடியாவை ஏமாற்றிவிட்டு பழைய காதலன் சல்மான் வீட்டுக்கு பறந்தார் கேத்ரினா கைப். பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவரான கேத்ரினா கைப், ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளை தடபுடலுடன் கொண்டாடுவது வழக்கம். கடந்த 16ம் தேதி அவருக்கு 28வது வயது பிறந்தது. ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாடாமல் தவிர்த்தார். கடந்த 2 வருடத்துக்கு முன் அவர் நடத்திய பிறந்த நாள் விழாவில் சல்மான் கான், ஷாருக் கான் கலந்துகொண்டபோது இருவருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டது. இதனால் பார்ட்டியே கலகலத்துப்போனது. அந்த பயம் கேத்ரினாவுக்கு இன்று வரை போகாததால் இம்முறை பார்ட்டி நடத்தவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் கேத்ரினாவின் பிறந்த நாள் நிகழ்வு தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக மும்பையில் உள்ள பத்திரிகை, டிவி சேனல் நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மணிக்கணக்கில் அவர் வீட்டு முன் காத்திருந்தனர். யாரையும் அவர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நீண்ட நேரத்துக்கு பிறகு வீட்டிலிருந்து வெளிவந்த கேத்ரினா அங்கிருந்த போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்தார். பின்னர் தன்னை யாரும் பின்தொடரக்கூடாது என்று கண்டிஷன் போட்டுவிட்டு அங்கிருந்து காரில் பறந்தார். இதனால் மீடியாக்காரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தனது பழைய காதலன் சல்மான் வீட்டுக்கு சென்ற கேத்ரினா, அங்கு ரகசியமாக பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். சல்மான், கேத்ரினா இணைந்து ஏக் தா டைகர் படத்தில் நடித்துள்ளனர். இப்பட ஷூட்டிங்கில் இருவரும் மீண்டும் நெருக்கமாக பழக ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.


 

வேட்டையாடு என்ன கதை?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சௌந்தர்யன் பிக்சர்ஸ் சார்பில் விடியல்ராஜூ தயாரித்து நடிக்கும் படம் 'வேட்டையாடு'. ஹரி, மான்ஸ், உதயதாரா நடிக்கின்றனர். எஸ்.பி.எல்.செல்வநாதன் இசை. இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  அருண்விஜய் வெளியிட, ஆதி பெற்றார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், செயலாளர் தேனப்பன், பொருளாளர் கலைப்புலி தாணு, துணை தலைவர் டி.சிவா, தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி உட்பட பலர் கலந்து கொண்டனர். படம் பற்றி இயக்குனர் கே.எஸ்.விஜயபாலன் கூறும்போது, ''ஊருக்கு பயந்து ஓடும் காதல் ஜோடி, காட்டுப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தஞ்சமடைகிறது. பெரிய மனிதர் ஒருவர் அடைக்கலம் கொடுக்கிறார். அவர் காதலர்களை கண்டாலே வெட்டி புதைப்பவர். அவரிடம் இருந்து தப்பித்தார்களா?இல்லையா என்பது கதை. பாண்டியராஜனும், ரோஜாவும் கழைக்கூத்தாடிகளாக நடித்துள்ளனர்'' என்றார்.


 

எல்லா கேரக்டர்களிலும் நடிக்க ஆசை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஆர்.கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாலமுருகன், மணி தயாரிக்கும் படம் 'மச்சான்'. கருணாஸ் ஹீரோ. ஷெரில் பிரிண்டோ ஹீரோயின். மற்றும் விவேக், ரமேஷ் அரவிந்த், கோவை சரளா, மயில்சாமி உட்பட பலர் நடிக்கின்றனர். ஷக்தி சிதம்பரம் இயக்கி, நடிகராக அறிமுகமாகிறார். படம் பற்றி நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது: நட்பை மையப்படுத்திய கதை. ஆல் இன் ஆல் அழகுராஜாவாக நானும், லொள்ளு பாண்டியாக ஷக்தி சிதம்பரமும் நடிக்கிறோம். என் மனைவியாக ஷெரில் பிரிண்டோ. விவேக்கிடம், 'இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும்' என்றேன். ஒப்புக்கொண்டார். இதற்கு அவர் பெருந்தன்மைதான் காரணம்.

'திண்டுக்கல் சாரதி', 'அம்பாசமுத்திரம் அம்பானி' படங்களில் ஹீரோவாக நடித்தேன். இப்போது 'ரகளபுரம்', 'சந்தமாமா' படங்களை தொடர்ந்து இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். மேலும், ஐந்து படங்களில் ஹீரோவாக நடிக்க உள்ளேன். என்றாலும், காமெடி வேடத்தில் நடிக்க வரும் வாய்ப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு சீன் வந்தாலும், ரசிகர்களை எப்படி சிரிக்க வைப்பது என்றுதான் யோசிப்பேன். இதற்கு நான் ஒரு காட்சியில் மட்டுமே நடித்த 'யாரடி நீ மோகினி' உதாரணம். என் காமெடி அதில் பேசப்பட்டது. எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடித்து சாதிக்க ஆசைப்படுகிறேன்.


 

வில்லன் ஆனார் கன்னட ஹீரோ

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கன்னட ஹீரோ சுதீப், 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவரை அடுத்து மற்றொரு கன்னட ஹீரோவான ஆதித்யா தமிழில் வில்லனாகிறார். சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிக்கும் படம், 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கும் இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க புதுமுகங்களைத் தேடி வந்தனர். இப்போது கன்னட ஹீரோ ஆதித்யா வில்லனாக நடிக்கிறார். இவர் நடித்த காட்சிகளின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கியது.

இதுபற்றி இயக்குனர் விஜய் சந்தர் கூறியதாவது: இது ஜாலியான கதை. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படுகிறது. வில்லனாக நடிக்க புதுமுகங்களைத் தேடினோம். தமிழ், தெலுங்கில் பலரைப் பார்த்தும் நாங்கள் நினைத்த கேரக்டருக்கு யாரும் செட்டாகவில்லை. இதையடுத்து பெங்களூரில் லொகேஷன் பார்க்க சென்றபோது ஆதித்யா நடித்த பட போஸ்டர்களைப் பார்த்து இவரை நடிக்க வைக்கலாம் என நினைத்தோம். அவரிடம் கேட்டபோது சம்மதித்தார். இதில் அன்பு என்கிற தொழிலதிபராக ஆதித்யா நடிக்கிறார். அவர் கேரக்டர் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு கூறினார்.


 

ராஜேஷ் கன்னா உடலுக்கு அஞ்சலி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி திரையுலகில் சூப்பர்ஸ்டாராக விளங் கிய ராஜேஷ் கன்னா நேற்று காலமானார். அவருக்கு வயது 69. அவரது உடலுக்கு இந்தி திரையுலகமே திரண்டு அஞ்சலி செலுத்தியது. அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. பாலிவுட்டில் முதன்முதலாக சூப்பர் ஸ்டார் என்ற பட¢டப்பெயருக்கு சொந்தக்காரர் ராஜேஷ் கன்னா (69). கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவர் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான் கான், அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், நடிகைகள் ஹேமமாலினி, ஷபானா ஆஸ்மி உள்ளிட்ட பலர் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். ராஜேஷ் கன்னாவின் இறுதி சடங்கு இன்று காலை நடந்தது. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது 'ஆசீர்வாத்' இல்லத்தில் இருந்து காலை 10 மணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள், உறவினர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 11 மணியளவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

தொடர்ந்து 8 வெள்ளிவிழா நெஞ்சை விட்டு நீங்காத ஆராதனா

மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னா, சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் என புகழ் அஞ்சலி செலுத்தி வருகிறது திரையுலகம். ஆராதனா படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக அவர் விளங்கினார். இந்தி திரையுலகில் காதல் மன்னனாக திகழ்ந்த ராஜேஷ் கன்னாவுக்கு பெண் ரசிகைகள் அதிகம். அவருக்கு ரத¢தத்தில் கையெழுத்திட்டு கடிதங்கள் எழுதுவார்கள். காரில் செல்லும்போது அவரை பார்த்துவிட்டால் கார் கண்ணாடிக்கு முத்தமிடுவார்கள். ரசிகைகள் கூட்டத்திலிருந்து கார் மீண்டு வந்தபிறகு பார்த்தால் கண்ணாடியில பல இடங்களில் ரசிகைகள் கொடுத்த முத்தங்களின் அடையாளமாக ஏராளமான லிப்ஸ்டிக் சாயம் இருக்கும். இதுவரை 163 படங்களில் நடித்திருக்கிறார் ராஜேஷ் கன்னா. இதில் 106 படங்கள் அவர் தனிபட்டமுறையில் ஹீரோவாக நடித்தவை. 22 படங்கள் டபுள் ஹீரோ சப்ஜெட் படங்கள். 1969 முதல் 1972வரை தொடர்ச்சியாக அவர் நடித்த 15 படங்கள் சூப்பர் ஹிட்டாகி வசூலை அள்ளிக்குவித்தது. இதில் தொடர்ந்து 8 படங்கள் வெள்ளி விழா கொண்டாடியவை. இதனால், சூப்பர் ஸ்டார்களுக்கெல்லாம் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா என அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலகினர் அவரை பற்றி கூறியுள்ளனர். இவர் நடித்த ஹாத்தி மேரா சாத்திÕ , ஆராதனா படங்கள் தமிழில் ரீமேக் ஆகின. இவற்றில் முறையே எம்ஜிஆர் (நல்ல நேரம்), சிவாஜி (சிவகாமியின் செல்வன்) நடித்தது குறிப்பிடத்தக்கது. இவரது படங்களில் இடம்பெற்ற 'மேரே சப்னோகி ராணி, ரூப் தேரா மஸ்தானா, சல் சல் சல் மேரே சாத்தி உள்ளிட்ட பல பாடல்கள் பிரபலமானவை. ஆராதனா படம், சென்னையில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. இந்த படம¢ மூலம் தமிழகத்திலும் அவருக்கு ரச¤கர்கள் பெருகினர். 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டுவரை இவர் எம்.பி.யாக இருந்தார். பாபி படத்தில் நடித்த டிம்பிள் கபாடியாவை இவர் 1973ம் ஆண்டு மணந்தார். மகள்கள் டுவிங்கிள் கன்னா, ரிங்கிள் கன்னா உள்ளனர்.


 

கிசு கிசு - நமீ இல்லாமல் படம் இயக்கமாட்டேன்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

காட்டன் வீர ஹீரோவுக்கு 14 சி சம்பளம்னு அவர் தரப்பே கிளப்பி விடுறாங்களாம்... விடுறாங்களாம்... இதை கேட்டு இண்டஸ்ட்ரி கொதிச்சு போயிருக்காம்... போயிருக்காம்... காட்டன் வீர படத்தை தவிர சொல்ற மாதிரி ஹிட்டே தராதவருக்கு 14 சி சம்பளமான்னு திருப்பி கேட்கிறாங்களாம். ஹீரோ தொடர்ந்து அவரோட சொந்த கம்பெனிலதான் நடிச்சிட்டிருக்காரு. அப்புறம் யாரு அவருக்கு அவ்வளவு சம்பளம் தர்றாங்கன்னும் கிண்டலா கேட்கிறாங்களாம்... கேட்கிறாங்களாம்...

நமீ ஹீரோயின் இல்லாமல் படம் இயக்கமாட்டேனு சக்தி இயக்கம் சொன்னாராம்... சொன்னாராம்... சமீப காலமா அவர் எடுக்க¤ற படங்கள்ல நடிகைக்கு வாய்ப்பு தரலையாம். இது பத்தி இயக்கத்திடம் கேட்டப்ப, படத்துல அவருக்கான கேரக்டர் எதுவும் இல்ல. அவருக்காக கேரக்டர் உருவாக்க முடியாது. அதனாலதான் என் படத்துல இப்ப நமீ நடிகைக்கு வாய்ப்பு தரலைனு பல்டி அடிக்க¤றாராம்... அடிக்க¤றாராம்...

பிரகாச வில்லன் நடிகருக்கு பாலிவுட் ஆசை அதிகமாயிடுச்சாம்... ஆயிடுச்சாம்... கோலிவுட், டோலிவுட்ல இப்ப கவனத்த செலுத்த மறுக்க¤றாராம். புதுசா படம் வந்தாலும் பெண்டிங்ல வைக்கிறாராம். பாலிவுட்ல இப்பத்தான் ஒண்ணு, ரெண்டுன்னு படங்கள் வந்துகிட்டிருக்காம். ஒரு படம் கிளிக் ஆச்சின்னாலும் பாலிவுட்ல உள்ள டாப் வில்லன்களுக்கு போட்டியா களத்துல குதிச்சி தண்ணி காட்டிடலாம்னு நட்புங்ககிட்ட சொல்றாராம்... சொல்றாராம்...


 

நேரமாகி விட்டது, கிளம்ப வேண்டியதுதான்... ராஜேஷ் கன்னா குறித்து அமிதாப் உருக்கம்!

Amitabh Bachchan On Rajesh Khanna

சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவுடனான தனது நட்பு குறித்து அமிதாப் பச்சன் தனது பிளாக்கில் மிக உருக்கமாக எழுதியுள்ளார்.

அதிலிருந்து சில பகுதிகள்:

ராஜேஷ் கன்னாவை நான் பிலிம்பேர் பத்திரிக்கையில்தான் முதலில் பார்த்தேன். பிலிம்பேர்-மாதுரி திறமைப் போட்டியில் வென்றிருந்தார் கன்னா. நானும் கூட அதில் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நிராகரிக்கப்பட்டேன்.

அவரது ஆராதனா படத்தை டெல்லி, கன்னாட் பிளேஸில் உள்ள ரிவோலி தியேட்டரில் பார்த்தேன். எனது அம்மாதான் அப்படத்திற்கு என்னைக் கூட்டிச் சென்றிருந்தார். தியேட்டரில் பெரும் கூட்டம், ராஜேஷ் கன்னாவுக்குக் கூடிய அந்தக் கூட்டம், குறிப்பாக இளைஞர்கள், இளம் பெண்கள் எப்போதும் மறக்க முடியாதது.

பின்னர் நான் கொல்கத்தாவுக்குப் போய் விட்டேன். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்க மும்பை வந்தேன். ஆனால் ராஜேஷ் கன்னாவின் முகத்தையும், அவருக்கு இருந்த ரசிகர் கூட்டத்தையும் பார்த்த எனக்கு, எங்கே எனக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்றுதான் தோன்றியது.

அப்போதுதான் எனக்கு சாத் இந்துஸ்தானி பட வாய்ப்பு கிடைத்தது. உடனே ஓடினேன். எனக்கும் ரோல் கிடைத்தது. படப்பிடிப்புக்குப் போனேன். அப்போதுதான் படப்பிடிப்பின்போது ராஜேஷ் கன்னாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. கஷ்டப்பட்டுத்தான் அந்த வாய்ப்பை பிடித்தேன். என்னுடன் கை குலுக்கினார் கன்னா. அதை என்னால் மறக்க முடியாது.

அதன் பின்னர் ஆனந்த் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு பெரிய அற்புதம். கடவுளின் ஆசிர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும். ராஜேஷன் கன்னாவுடன் இணைந்து நடிப்பது என்பதே ஒரு பெரிய ஆச்சரியம்தானே. அது எனக்கு நடந்தது.

மிகவும் அமைதியாக, அடக்கமாக, எளிமையாக இருந்தார் ராஜேஷ் கன்னா. அவரைப் பார்க்க எப்போதும் ரசிகர் கூட்டம் அலைமோதியபடி இருக்கும். யாருக்குமே அப்படி ஒரு கூட்டத்தை நான் பார்த்தது இல்லை. ஸ்பெயினிலிருந்து கூட அவரது ரசிகர்கள் வந்ததைப் பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அப்போதெல்லாம் ஒரு நடிகருக்கு இப்படி கூட்டம் கூடுவது என்பது கனவிலும் நடக்காத ஒன்று.

அவருடைய ஆசிர்வாத் வீட்டுக்கு நான் ஒருமுறைதான் போயுள்ளேன். அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூற போயிருந்தேன். ஆனால் நான் ஒரு நாள் முன்னதாகவே வந்து விட்டேன் என்பது வீட்டுக்குப் போனபோதுதான் தெரிந்தது. இருந்தாலும் எனது தர்மசங்கடத்தைக் கண்டு கேலி செய்யாமல், பெருத்த சிரிப்புடன் வரவேற்று என்னை உபசரித்தார் ராஜேஷ். பின்னர் சக்தி சமந்தாவின் வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். அங்கு டின்னரில் கலந்து கொள்ளச் செய்தார்.

பின்னர் அடுத்த நாள் மீண்டும் சென்றேன், வாழ்த்தினேன். அன்றும் என்னை சிறப்பாக உபசரித்தார் ராஜேஷ்.

ஆனந்த் படப்பிடிப்பின்போது எனக்கு ஒரு சம்பவம் நடந்தது. அது இப்போது நினைத்தாலும் கண்ணீரை வரவழைப்பதாகும்.

மோகன் ஸ்டுடியோஸில் படப்பிடிப்பு. படத்தில் அதுதான் கடைசி சீன். ராஜேஷ் கன்னா அக்காட்சியில் இறப்பது போலவும், நான் உணர்ச்சிவசப்பட்டு பேசுவது போலவும் காட்சி. ஆனால் எனக்கு அப்போது சரியாக பேச வரவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை. இதனால் ஒரு பிரேக் எடுத்துக் கொண்டு மஹமூ்தின் உதவியை நாடினேன். அவர் சொன்னார்.. ராஜேஷ் கன்னா நிஜமாகவே இறந்து விட்டதாக நினைத்துக் கொள், தானாகவே எல்லாம் வரும் என்றார்.

அதன் பிறகு நான் நடித்தேன். நான்தானா என்று எனக்கே ஆச்சரியம் அளித்த காட்சி அது.

காலம் மாறி விட்டது, ஆட்கள் மாறி விட்டனர், சூழல்கள் மாறி விட்டன, ராஜேஷ் கன்னா மட்டும் அதே அமைதியுடன், அதே கம்பீரத்துடன், சிங்கம் போல இருந்தார்.

இறுதி மரியாதையை செலுத்த ராஜேஷ் கன்னா வீட்டில் இருந்தபோது, எனக்கு நெருக்கமான ஒருவர் வந்து என்னிடம், நேரமாகி விட்டது, கிளம்பலாம் என்றார்.

உண்மைதான்...!

 

உஷ்... சொல்லாதே யாரும் கேட்டால்... எல்லோரும் தாங்க மாட்டார்!!

எப்படி ஆரம்பிப்பது... எப்படி அவர்கள் பெயர்களைக் குறிப்பிடுவது என்பதில் குழப்பமாகத்தான் இருக்கிறது. காரணம், மேட்டர் அத்தனை சீக்ரெட்.. சீரியஸா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லணும்!

மிக முக்கிய பெண்மணி அவர். ரொம்ப பரபரப்பு கிளப்பியவர். கணவர், குழந்தை, பலமான பின்னணி என இருந்தாலும் ஏற்கெனவே ஏகப்பட்ட வதந்திகள், வில்லங்கங்களுடன் வாழ்பவர்தான்.

இந்தப் பெண்மணியின் இப்போதைய ரகசிய சினேகிதனாக மாறியிருக்கிறார் ஒரு இளம் நடிகர்!

'நல்லா வருவான்' என்று கணிக்கப்பட்ட பையன்களில் ஒருவர்தான் இந்த நடிகர். பெரிய இயக்குநரால் அறிமுகமாகி, குறுகிய காலத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி, அதே வேகத்தில் ஓய்ந்துபோய் கிடக்கும் இந்த நடிகர்தான், இப்போது அந்த மதிப்புக்குரிய பெண்மணியின் அன்பையும் இல்லத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாக கோலிவுட்டே பரபரக்கிறது.

அடப்பாவி, சினிமா வாய்ப்பு இல்லேங்கிறதுக்காக, இப்படி 'ஆன்ட்டி ஹீரோவா' மாறிட்டானே என்று சக நட்பு நடிகர்கள் கிண்டலடிக்கிறார்களாம்!

 

ராஜேஷ் கன்னா உடல் தகனம்: சிதைக்கு தீ மூட்டிய பேரன் ஆரவ்

Rajesh Khanna S Cavalcade Reaches Crematorium   

மும்பை : மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் உடல் இன்று காலை 11 மணி அளவில் தகனம் செய்யப்பட்டது. அவரது சிதைக்கு அவரது பேரன் ஆரவ் தீ மூட்டினார்.

மும்பையில் உள்ள ஆசீர்வாத் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த ராஜேஷ் கன்னாவின் உடல், காலை 10.15 மணிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

வழி நெடுகிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். வெள்ளை நிற வாகனத்தில் அவரது உடல் வைக்கப்பட்டு முக்கிய சாலைகளில் திரண்டிருந்த ரசிகர்களுக்க மத்தியில் மெதுவாக ஊர்ந்து சென்றது. மும்பையே திணறும் அளவுக்கு லட்சக்கணக்கில் மக்களும் ரசிகர்களும் இந்த இறுதி ஊர்வலத்துக்கு திரண்டு வந்தனர்.

ராஜேஷ் கன்னா மனைவி டிம்பிள் கபாடியா, மகள்கள் ரிங்கி கன்னா, ட்விங்கிள் கன்னா, மருமகன்கள் அக்ஷய் குமார், சமீர் சரண் ஆகியோர் அந்த வண்டியில் அமர்ந்து சென்றனர். இறுதி ஊர்வலம் இன்று காலை 11 மணி அளவில் விலே பார்லேவில் உள்ள மைதானத்தை அடைந்தது. அங்கு அவரது உடலுக்கு ட்விங்கிள்- அக்ஷய் குமாரின் மகன் ஆரவ் தீ மூட்டினார்.

 

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா!

Rajesh Khanna The Only Super Star With 15 Hits

இந்தியத் திரையுலகம் எத்தனையோ சாதனை நடிகர்களைக் கண்டுள்ளது. அவர்களுக்கு நிகரான நடிகைகளையும் கண்டுள்ளது. ஆனால் ராஜேஷ் கன்னாவுக்கு நிகரான ஒருவர் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு முன்பும் சரி, பின்பும் சரி பெரிய பெரிய ஸ்டார்கள் வந்தார்கள் இருந்தார்கள் என்றாலும் முதல் முத்திரையைப் பதித்த முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா மட்டுமே.

1965ல் பாலிவுட்டில் நடிக்கப் புகுந்த ராஜேஷ் கன்னா, ஆரம்பத்தில் நடித்த 3 படங்கள் சரியாக ஓடவில்லை. இதனால் யாருடைய பார்வையிலும் அவர் விழவில்லை. ஆனால் ஆராதனாதான் அவரை எங்கேயோ கொண்டு போய் நிறுத்தியது. சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் அவர் அழைக்கப்படத் தொடங்கினார். பெண் ரசிகர்கள் இவருக்குப் போல எவரும் இல்லை. எங்கு போனாலும் துரத்தித் துரத்தி இவரை ரசித்துப் பார்த்தார்கள். இவரது காரைக் கூட விடாமல் துரத்தித் துரத்தி முத்தமிட்டு மகிழ்ந்தனர். கார் டயரில் ஒட்டியிருந்த மண்ணைக் கூட துடைத்து எடுத்துச் சென்றனர்.

ராஜேஷ் கன்னாவின் திரையுலக வாழ்க்கையே ஒரு சினிமாப் படம் போலத்தான் இருந்தது. மும்பையில் கஷ்டமான நிலையில் இருந்து வந்த கன்னா, பிலிம்பேர் இதழ் நடத்திய ஒரு திறமைப் போட்டியில் கலந்து கொண்டார். 1000 பேர் கலந்து கொண்ட அப்போட்டியில் வெற்றி பெற்றார்.

அதன் பிறகுதான் அவருக்கு நடிக்க வாய்ரப்பு கிடைத்தது. 1966ல் ஆக்ரி காட்டில் நடித்தார். பின்னர் காமோஷியில் நடித்தார். அதன் பிறகுதான் வரலாறு படைத்த ஆராதனா 1969ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் பாலிவுட்டைப் போலவே சென்னையிலும் தமிழகத்திலும் ஓடி பெரும் வசூல் மற்றும் சாதனை படைத்த படமாகும். அப்படத்தின் பாடல்கள் இன்று வரை புகழ் பெற்றவை. அக்காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஆராதனா பாடல்கள்தான்.

ஆராதனா படத்திற்குப் பிறகுதான் சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழியோடு அழைக்கப்பட்டார் ராஜேஷ் கன்னா. இந்தியத் திரையுலகிலேயே சூப்பர்ஸ்டார் என்ற பெயரைப் பெற்ற முதல் நடிகர் இவர்தான்.

அடுத்தடுத்து 15 ஹிட் படங்களைக் கொடுத்த ஒரே நடிகரும் இவர்தான். இந்த நிமிடம் வரை இந்த சாதனையை இதுவரை இந்தியாவில் எந்த நடிகரும் முறியடிக்கவில்லை. முறியடிக்க முடியவில்லை.

காதி பதாங், சபர், இத்திபாக், ஆன் மிலோ சஜ்னா, ஹாத்தி மேரே சாத்தி ஆகியைவ ராஜேஷ் கன்னாவின் சூப்பர் ஸ்டார் பெருமையை மேலும் மேலும் வலுப்படுத்திய மெகா ஹிட் படங்களாகும்.

அதேபோல ராஜேஷ் கன்னாவுடன், அமிதாப் பச்சன் இணைந்து நடித்த ஆனந்த் படமும் இன்று வரை ராஜேஷ் கன்னாவின் மணிமகுடப் படங்களில் முக்கியமானதாக இருக்கிறது.

ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூகர், ஆஷா பரேக், டிம்பிள் கபாடியா ஆகியோர் இணைந்து படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் படங்கள்தான்.

நிச்சயம், ராஜேஷ் கன்னாவின் மரணம்,பாலிவுட்டுக்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகுக்கே பெரும் இழப்புதான்...!

 

ரஜினியை இயக்குவது எப்போது? - கேவி ஆனந்த் பதில்

Directing Superstar Is The Dream Kv Anand

ரஜினியை இயக்குவது என் கனவு என்றும், அது எப்போது சாத்தியமாகும் என்று தெரியவில்லை, என இயக்குநர் கே வி ஆனந்த் தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை நீங்கள் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் மறுத்தீர்கள். இப்போது மீண்டும் அதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றனவே என்று அவரிடம் கேட்டபோது, "ரஜினி சார் மிக எளிமையான, அருமையான மனிதர். அவரைப் போல ஒருவரை சினிமாவில் மட்டுமல்ல, உலகிலேயே பார்க்க முடியாது. அவருடன் பணியாற்றுவது குறித்து இப்போது எதுவும் சொல்வதற்கில்லை...

படம் குறித்து ரொம்ப நாள் முன்னாடி ரஜினி சார் என்னிடம் பேசினார். ஆனால் அதுபற்றி இப்போது எதுவும் சொல்லும் நிலையில் இல்லை.

ரஜினியை இயக்க வேண்டும் என்றால் சரியான கதை வேண்டும். அந்தக் கதை அவருடைய ரசிகர்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும்," என்றார்.

 

ஆபாசமாக படம் எடுத்து டாப்ஸியை பிளாக்மெயில் செய்கிறார் மகத்?

Is Mahath Blackmailing Tapsi

டாப்ஸியை ஆபாசமாக படமெடுத்து வைத்துக் கொண்டு நடிகர் மகத் மிரட்டுவதாக புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸிக்கும் மங்காத்தாவில் நடித்த மகத்துக்கும் ஆரம்பத்தில் காதல் என்று கூறப்பட்டது.

ஆனால் மோகன் பாபு மகன்களுடன் டாப்ஸி நெருக்கம் காட்டினார். குறிப்பாக மோகன்பாபுவின் இளைய மகன் மஞ்சு மனோஜூடன் அவர் தனிக்குடித்தனம் நடத்துவதாகக் கூறப்பட்டது.

சென்னைக்கு வரும்போது மகத்தும், ஹைதராபாதில் மோகன்பாபு மகனும் அவருக்கு நெருக்கமாக இருந்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் மகத்தை ஒதுக்க ஆரம்பித்துவிட்டாராம்.

இதற்கு காரணம் மஞ்சு மனோஜ்தான் என்று கோபப்பட்டுள்ளார் மகத்.

இந்த நிலையில் மகத்தும், மனோஜும் சென்னையில் சில தினங்களுக்கு முன் நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் கடுமையாக மோதிக்கொண்டனர்.

மகத்தை மனோஜும் அவரது நண்பர்களும் அடித்து உதைத்தனர். வயிற்றிலும் தொண்டையிலும் பலமான குத்து விழுந்தது. இதையடுத்து மகத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பெற்றார்.

மகத் புகார் தந்ததால் வழக்குப் பதிவு செய்து மனோஜிடம் விசாரணை நடத்த போலீசார் தயாரானார்கள். ஆனால் மனோஜ் மலேசியா தப்பி விட்டார்.

இதற்கிடையில் விசாரணை தொடரவேண்டாம் என்று முக்கியஸ்தர்களிடம் இருந்து போலீசாருக்கு நெருக்கடிகளும் வந்தன. இருதரப்பிலும் சமரச முயற்சிகளும் நடந்தன. ஆனால் மனோஜ் தன்னை கைது செய்யலாம் என்று கருதி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவும் தாக்கல் செய்துள்ளார்.

இதையடுத்து தாக்குதல் சம்பவத்துக்கான காரணம் பற்றி விசாரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் போலீசாருக்கு ஏற்பட்டது. ரகசிய விசாரணையில் அவர்கள் இறங்கினர்.

அடிதடி நடந்ததை நேரில் பார்த்தவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தனர். மனோஜ், மகத் நண்பர்களிடமும் விசாரிக்கப்பட்டது. மனோஜ் தரப்பில் டாப்சியை மகத் மிரட்டியதால் இந்த அடிதடி நடந்ததென கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

டாப்சியும் மகத்தும் மிக நெருக்கமாக இருந்த போது, இருவரும் அந்தரங்கமாக இருந்ததை மகத் ரகசியமாக வீடியோ படம் எடுத்து வைத்திருந்ததாகவும், தற்போது நட்பை முறித்துக் கொண்டதால், டாப்சி மீது ஆத்திரமாகி அந்த வீடியோ படங்களைக் காட்டி அவரை மிரட்டியதாக மனோஜ் நண்பர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.

மகத்திடம் இதுபற்றி மனோஜ் கோபத்துடன் கேட்டபோதுதான் வாய்த்தகராறு முற்றி அடிதடி வரை போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து புகார் கொடுத்த மகத் மீதே கடுமையான வழக்கு பாயும் நிலை உருவாகியுள்ளது.

'கட்டகடேசில.. 'மங்காத்தா' வேலையத்தான் செஞ்சீங்களா மகத்? இல்ல போலீஸை வச்சி மனோஜ் அன்ட் கோ இந்த கேமை விளையாடறாங்களா?', என்ற கமெண்ட் கிளம்பியுள்ளது கோலிவுட்டில்!

 

ராஜேஷ் கன்னா மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்!

Superstar Rajini Condoles Rajesh Khanna Death

பாலிவுட்டின் சாதனை நடிகர் ராஜேஷ் கன்னாவின் மரணத்துக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

புதன்கிழமை பிற்பகல் ராஜேஷ் கன்னா மரணச் செய்தி அறிந்ததும் மிகுந்த வேதனைக்குள்ளான ரஜினி விடுத்துள்ள இரங்கல் செய்தி:

"சாதனை நடிகர் ராஜேஷ்கன்னாவின் மரணத்துக்கு என் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் - ரஜினிகாந்த்"

(MY HEART FELT CONDOLENCES TO THE LEGENDARY STAR Mr.RAJESH KHANNA.

I PRAY TO THE ALMIGHTY TO REST HIS SOUL IN PEACE.. RAJINIKANTH)

இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

'ஆர்கே'

ராஜேஷ் கன்னாவை பாலிவுட்டில் ஆர்கே அல்லது காகாஜி என்றுதான் அழைப்பார்கள்.

ரஜினியை மிக நெருக்கமானவர்கள் ஆர்கே என்று குறிப்பிடுவதுண்டு. ரஜினி தன் பட நிறுவனத்துக்கு வைத்த பெயரும் ஆர்கே பிலிம்ஸ் என்பதுதான்.

கடந்த ஆண்டு நடந்த திரையுலக விழாவுக்காக சென்னைக்கு வந்திருந்தார் ராஜேஷ் கன்னா. அப்போது ரஜினி, கமலுடனான தனது நட்பு குறித்து மிக உயர்வாகப் பேசினார். தன்னைச் சந்தித்த பிரபு தேவாவிடமும் எம்ஜிஆர், ரஜினி, கமல் குறித்து அவர் நீண்ட நேரம் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாராம்.

 

கணவர் விருப்பத்தை நிறைவேற்ற குழந்தையுடன் நடிக்க வந்த நவ்யா நாயர்!

Navya Makes Her Comeback Nammoda Ve

கணவர் விரும்பியதால் மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நவ்யா நாயர். சொன்னதோடு நில்லாமல், தன் குழந்தையுடன் வந்து ஒரு படத்தின் முதல்நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

தமிழில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி உள்பட சில படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

கேரள மாநிலம் கொச்சி அம்பலக்காடு பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார் நவ்யா நாயர். பல தயாரிப்பாளர்கள் கேட்டும் கூட படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.

இதனிடையே பிரபல மலையாள இயக்குனர் சைஜுஅந்திக்காடு இயக்கும் 'நம்மோட வீடு' என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்லம், ஒத்தப்பாலம் பகுதியில் நடந்து வருகிறது.

படப்பிடிப்புக்கு தனது ஒன்றரை வயது மகன் சாய்கிருஷ்ணாவுடன் வந்திருந்த நவ்யா, தனது மறுபிரவேசம் குறித்து கூறுகையில், "மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. குழந்தை மற்றும் கணவருடன் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிறேன். பல படங்களை தவிர்த்து வந்த நிலையில் நம்மோட வீடு படத்தின் கதையை இயக்குனர் சைஜுஅந்திகாடு கூறியபோது, எனது கணவருக்கு கதை பிடித்துப்போனது. அவர்தான் என்னை நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து படங்களில் நடிப்பது குறித்து கணவர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைய எனது உலகம் எல்லாமே கணவரும், குழந்தையும்தான்," என்றார்.

 

சமையல் (சகலகலா) ராணி அலமேலு: நளினியின் புதிய காமெடி தொடர்

K Tv Comedy Serial Program In Alamelu

வில்லத்தனமான கதாபாத்திரங்களில் கண்களை உருட்டி மருமகள்களை திட்டிக்குவிக்கும் நளினிக்கு சமையல் கைவந்த கலையாம். ஸ்டார் ஓட்டல் சமையலை விட அம்மாவின் சமையல்தான் சூப்பர் என்று அவரின் குழந்தைகளிடம் சர்ப்பிகிகேட் வாங்கி வைத்திருக்கிறாராம். சீரியசான சீரியலை விட கே டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி ஆல் இன் ஆல் அலமேலு தொடரில் நளிளியின் காமெடி கலந்த நடிப்பும் சமையல் டிப்ஸ்சும் ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் பெரும்பாலும் கவர்ந்துள்ளது. இந்த தொடர்பற்றியும், தன்னுடைய அனுபவங்களை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன்.

சீரியல்னாலே வில்லத்தனம் செய்யும் மாமியார் ரோல்தான் அதிகமா செய்திருக்கேன். ஆனா 'ஆல் இன் ஆல் அலமேலு' என்னுடைய இன்னொரு பரிமாணத்தை உணர்த்தியிருக்கு.

எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். என்னுடைய குழந்தைகளுக்கு எதையாவது புதுசு புதுசா செய்து கொடுத்திட்டு இருப்பேன். அதை சாப்பிடறப்பா எந்த ஸ்டார் ஓட்டல் சமையலுக்கும் இது ஈடாகாது மம்மின்னு சொல்லுவாங்க. அதைதான் இப்பநான் 'ஆல் இன் ஆல் அலமேலு' தொடர்ல செய்றேன்.

அலமேலு தொடர்ல காமெடியோட விதவிதமான வெரைட்டியான சமையல் செய்யவும் இதுல கற்றுக்கொடுக்கிறோம். தவிர சுற்றுச்சூழல் பராமரிப்பு, வீட்டு அலங்காரம் என எல்லாத்துக்குமே டிப்ஸ் கொடுக்கிறோம். இதனால மற்றவங்களுக்கு சொல்றதோட நானும் நிறைய கத்துக்கிறேன் என்று மலர்ச்சியாய் சொன்னார் நளினி.

நளினி இப்போது கலைஞர் டிவியில் பொக்கிஷம், ஜெயா டிவியில் இருமலர்கள், சன் டிவியில் பிள்ளை நிலா என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். குழந்தைகளை கவனிக்க வேண்டும் என்பதற்காகவே சினிமா வாய்ப்புகளையும், வெளியூர் சூட்டிங்குகளையும் தவிர்த்து வருகிறாராம்.

பிட் நியூஸ் : 'ஆல் இன் ஆல் அலமேலு' ஆரம்பித்து 50 எபிஷோடு முடிந்து விட்டதாம். அதை குரூப் போட்டோ கொண்டாடி உள்ளனர் அலமேலு டீம் குடும்பத்தினர்.