ஜீவா இந்த வருடமும் பிசி தான். இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜீவாவுக்கு 5 படங்கள் கையில் உள்ளன. இதில் 'வாமனன்' இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தில் த்ரிஷாவை ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக த்ரிஷாவை சந்தித்து கதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அகமது. த்ரிஷாவும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வு தகவலும் வராததால் நம்மால் சரியாக சொல்ல இயலவில்லை.
இனி என் வழி... சூப்பர் ஸ்டார் வழி : சந்தானம்!
2011ல் வெளிவந்த முன்னணி ஹீரோக்களின் 70% படங்களில் காமெடியனாக சந்தானம் நடித்த படங்கள் தான் அதிகம். சூப்பர்ஸ்டார் முதல் சிம்பு, விக்ரம், கார்த்தி. ஜீவா என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் சந்தானத்தின் காம்பினேஷன் சென்ற வருடம் காமெடியில் அசத்தியது. அதே போல் இந்த வருடமும் சந்தானத்திறகு சூப்பரான வருடம் போல இருக்கு, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', சகுனி, வேட்டை மன்னன் என இப்போதே 15 படங்கள் கையில் உள்ளன. இப்படி பிசியாக இருக்கும் சந்தானம், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழியை பின்பற்ற போகிறாராம். அது என்ன வழி தெரியுமா?... ஆன்மீகம் தான்-!. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகனாக இருக்கும் சந்தானம், இனி டைம் கிடைக்குபோது ஆன்மீகத்தில் ஈடுபடப் போவதாக கூறியுள்ளார். 'ரஜினி சார் ஆன்மீகத்தில் அதிகம் கவனம் செலுத்துவதால் தான் புகழின் உச்சிக்கு சென்றாலும், எளிமையாக, அத்தனை பேருக்கும் வழிகாட்டியாக அவர் இருக்கிறார்' என சந்தானம் சூப்பர் ஸ்டாருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
விதார்த் செல்போன் திருட்டு!
'மைனா', 'தொட்டுப்பார்', 'முதல் இடம்' படங்களில் ஹீரோவாக நடித்தவர் விதார்த். இரு தினங்களுக்கு முன் சென்னை காமராஜர் அரங்கில் நடந்த விருது விழாவில் பங்கேற்க வந்தார். அப்போது அவரது செல்போன் திருடு போய் விட்டதாகக் கூறப்படுகிறது. அதன் விலை 40 ஆயிரம் ரூபாய். மாயமான போன், உடனே சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் விதார்த்.
யூ டியூப்பில் விரைவில் "கொலவெறி" வீடியோ!
கொலவெறி பாட்டு, உலக முழுவதும் சூப்பர் ஹிட். யூ டியூப் முதல் ஃபேஸ் புக் வரை இந்த பாடலுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. உலகின் வேறு எந்த ஒரு பட பாட்டுக்கும் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததில்லை. அதுமட்டுமின்றி உலகமெங்கும் உள்ள மற்ற மொழியினரும், தங்கள் மொழியில் 'கொலவெறி' பாடலை உருவாக்கி யூ டியூப்பில் போட ஆரம்பித்துவிட்டனர். இதற்கு அடுத்தப்படியாக, தற்போது 'கொலவெறி' பாட்டின் வீடியோ காட்சிகளை விரைவில் யூ டியூப்பில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 'சூப் சாங்' எனப் பெயரிடப்பட்ட 'கொலவெறி' பாட்டின் வீடியோ காட்சிக்கு 'சூப் சாங் வீடியோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாட்டுக்கு நடனம் அமைக்க நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்களை படக்குழுவினர் அணுகியுள்ளதாக தெரிகிறது. அதில் சிறந்த நடன இயக்குனரை தேர்ந்தெடுக்கவும் முடிவு செய்துள்ளது படக்குழு.
ஜீவாவுடன் ஜொடி சேருகிறார் த்ரிஷா?
ஜீவா இந்த வருடமும் பிசி தான். இந்த வருடம் தொடக்கத்திலேயே ஜீவாவுக்கு 5 படங்கள் கையில் உள்ளன. இதில் 'வாமனன்' இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தில் த்ரிஷாவை ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்துள்ளாராம். இதற்காக த்ரிஷாவை சந்தித்து கதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அகமது. த்ரிஷாவும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் எந்த ஒரு அதிகாரப்பூர்வு தகவலும் வராததால் நம்மால் சரியாக சொல்ல இயலவில்லை.
எனக்கு யாரும் போட்டியில்லை
கடந்த ஆண்டு 14 படங்களில் நடித்திருக்கிறார் கஞ்சா கருப்பு. இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எப்போதும் இயக்குனர்களின் காமெடியன். எனக்கென்று தனி காமெடி டீம் கிடையாது. கதைக்கு ஏற்ற மாதிரி இயக்குனர்களே காமெடி காட்சிகளை அமைக்கிறார்கள். அவர்கள் சொல்லும்படி நடித்து கொடுக்கிறேன். சிறிய பட்ஜெட் படம், புதுமுக நடிகர் என்று பார்ப்பதில்லை. எனக்கான கேரக்டரை நடித்துக் கொடுத்து விடுவேன். அது ரசிகர்களை கவர்ந்தால் அந்த பெருமையில் பாதி இயக்குனரைச் சேரும். இதையும் தாண்டி சில கேரக்டர்கள் என்னை பாதிக்கும். அப்படி சமீபத்தில் பாதித்தது 'போ ராளி'. அதில் நான் நடித்தது என் நிஜ வாழ்க்கை. எனக்கு யாரும் போட்டியில்லை.
தமிழுக்கு திரும்புகிறார் ஷீலா
தமிழில் மீண்டும் நடிக்க இருப்பதாக ஷீலா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழ்ப் படங்களில் நடித்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். மலையாளத்திலும் நடிக்கிறேன். இரண்டு மொழிகளில் நடிப்பதால் தமிழில் கவனமாக படத்தை தேர்வு செய்ய வேண்டியது இருக்கிறது. இதனால் தமிழ் வாய்ப்புகளை தவிர்க்க வேண்டி வந்தது. தமிழில் கதை அம்சமுள்ள படங்கள் நிறைய வருகிறது. அவற்றில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். இந்த ஆண்டு கண்டிப்பாக தமிழ் படத்தில் நடிப்பேன். தெலுங்கைப் போன்று தமிழிலும் எனக்கென்று தனி இடம் பிடிக்க ஆசை. இவ்வாறு ஷீலா கூறினார்.
படம் இயக்குகிறார் விவேக்
கதை, திரைக்கதை, வசனம் எழுதி படம் இயக்க இருப்பதாக விவேக் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: இதுவரை நான் நடித்த சில படங்களுக்கு நண்பர்களின் உதவியுடன் காமெடி டிராக் எழுதியுள்ளேன். இப்போது முதல்முறையாக படம் இயக்க ஸ்கிரிப்ட் எழுதியுள்ளேன். ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. கிராமத்தில் தறுதலையாக இருக்கும் இளைஞன், எப்படி தபால்தலையில் இடம்பெறுகிறான் என்பது கதை. காதலுக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் இருக்கும். தறுதலை இளைஞனாக நான் நடிக்கிறேன். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது.
வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்!
இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறைஎண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிம்புதேவன் தனுஷை வைத்து மாரீசன் என்று படத்தை இயக்குகிறார். கி.மு., 12ம் நூற்றாண்டை தழுவிய கதை என்பதால் இப்படத்திற்கு ரூ.30 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. கதையைக் கேட்ட யுடிவியின் உரிமையாளர்களான வால்ட் டிஸ்னி நிறுவனத்தினர், இக்கதை ஆங்கிலப் படங்களின் பாணியில் பிரமாதமாக உள்ளது எனவும் தாராளமாக எடுங்கள் எனவும் பாராட்டினார்களாம். தனுஷ் அதிக பட்ஜெட்டில் நடிக்கும் முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது முதல்முறையாக தனுஷ் படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலுவுடன் நடிப்பதில் ஏதும் தயக்கம் உண்டா என தனுஷிடம் இயக்குநர் கேட்டதற்கு, தாராளமாக நடிக்க வையுங்கள். எனக்கு அதில் மகிழ்ச்சியே என்றாராம் தனுஷ். விஷயம் கேள்விப்பட்டு தனுஷுக்கு வடிவேலு நன்றி கூறியதாகச் சொல்கிறார்கள்.
அறுவடைக்கு காத்திருக்கிறது கும்கி டீம்
'மைனா' ஹிட்டுக்குப் பிறகு பிரபு சாலமன் இயக்கும் படம், 'கும்கி'. பிரபு மகன் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதுகிறார். படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் கூறியதாவது: யானைகளின் பின்னணியின் இனிமையான காதல் கதையை சொல்கிறேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்துவிட்டது. ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டுமே பாக்கி இருக்கிறது. கர்நாடகாவின் ஜோக் நீர்வீழ்ச்சி சீசனுக்காக, கடந்த ஜூன் மாதம் வரை காத்திருந்து ஷூட்டிங்கை ஆரம்பித்தோம். அங்கு பல ரிஸ்கான காட்சிகளை படமாக்கியுள்ளோம். பிறகு அக்டோபர் மாதம் வரை மஞ்சள் பூக்கள் சீசனுக்காகக் காத்திருந்தோம். பின்னர் விசாகப்பட்டினத்தில் பல ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த இந்த பூக்களினிடையே படம் பிடித்தோம். இது விஷூவலாக புதுமையாக இருக்கும். இப்போது அறுவடை சீசனுக்காகக் காத்திருக்கிறோம். வரும் பிப்ரவரி மாதம் அறுவடை தொடங்கும். அப்போது சில முக்கியமான காட்சிகளை எடுக்க இருக்கிறோம். இந்த காட்சியை எடுத்தால் படம் முடிந்துவிடும். அதற்காக காத்திருக்கும் வேளையில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கிறது. இவ்வாறு பிரபு சாலமன் கூறினார்.
மீண்டும் பெயர் மாறிய நடிகை
ஏ.எம்.ஜோதிகிருஷ்ணா எழுதி இயக்கி, ஹீரோவாக அறிமுகமாகும் படம், 'ஊ ல ல லா'. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிரீத்தி பண்டாரி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இப்படம் ரிலீசாவதற்கு முன், தன் பெயரை மாற்றியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது: என் சொந்தப் பெயர், திவ்யா பண்டாரி. நடிக்க வந்த பின், பிரீத்தி பண்டாரி என்று பெயரை மாற்றினேன். 'ஊ ல ல லா' ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், மீண்டும் பெயரை மாற்றியுள்ளேன். திவ்யா பண்டாரி என்ற பெயரிலேயே இனி நான் நடிப்பேன். திவ்யா பண்டாரி என்ற பெயர்தான் அதிர்ஷ்டகரமானது.