படம் வெளியாவதற்கு முன் ஒரு பாடலை மட்டும் விளம்பரத்துக்கு வெளியிடும் முறை தமிழ் சினிமாவிலும் வந்துவிட்டது போல. சமீபத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் '3' படத்தின் ஒய் திஸ் கொல வெறி பாடல் யூ டியூப் முதல் ஃபேஸ் புக் வரை பட்டையைக் கிளிப்பியது. இந்த பார்முலாவை இப்போது எல்லா இயக்குனர்களும் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், ஆர்யா நடிக்கும் 'வேட்டை' படத்தின் 'பத்திக்கிச்சு பம்பரம்' பாடலை வெளியிட்டு இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் அவரே(யுவனே) பாடியுள்ளார். அதுமட்டுமின்றி பாடல் உருவான விதத்தையும் வெளியிட்டுள்ளனர்.
வசனகர்த்தா ஆகிறார் வெற்றிமாறன்!
ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற, இயக்குனர் வெற்றிமாறன் அடுத்து சிம்புவை வைத்து 'வட சென்னை' படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு முன், தன் நண்பன் பிர்த்திவி ராஜ்குமார் இயக்கும் 'நான் ராஜாவாகப் போகிறேன்' படத்திற்கு வசனம் எழுத இருக்கிறார். முன்னதாக, பிர்த்திவி ராஜ்குமார் வெற்றிமாறனின் அசிஸ்டன்ட்டாக பணியாற்றினார். நகுல் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தின் கதை பிடித்துப் போனதால் படத்திற்கு வசனம் எழுத ஒப்புக்கொண்டாராம் வெற்றிமாறன்.
"முகமுடி" படம் 'ஸ்பைடர் மேனை' மிஞ்சும் : மிஷ்கின்
தன்னுடைய கனவுப் படமான 'முகமுடி' ஹாலிவுட் படம் 'ஸ்பைடர் மேனை' மிஞ்சும் என மிஷ்கின் கூறியுள்ளார். படத்தில் சூப்பர் ஹீரோவாக ஜீவா நடிக்கிறார். நரேன் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு 'கே' இசையமைக்க, யு டிவி நிறுவனம் தயாரிக்கிறது. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாராகும் இந்த படம், கோடை விடுமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தன்னுடைய கனவு படமான இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய படமாக கருதப்படும் என நம்புவதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார். இந்த கதை உருவாக்க நிறைய ஆண்டு உழைத்திருப்பதாகவும், குழந்தைகளுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் என மிஷ்கின் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி முகமுடி படம் ஆங்கலி படம் போல பார்ட் 2, பார்ட் 3 என எதிர்காலத்தில் வெளியாகும் எனக் கூறிய மிஷ்கின் முகமுடி பார்ட் 2-ன் கதையை தயார் செய்து விட்டதாக மிஷ்கின் கூறினார். தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படமும் இதுதான் என்பதால் 'முகமுடி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உண்டு.
கதக் டான்ஸ் ஆடும் உலக நாயகன்!
உலக நாயகன் கமலஹாசன் நடித்து இயக்கும் படம் 'விஸ்வரூபம்'. ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கதாபாத்திரத்தை தேர்வு செய்யும் உலக நாயகன் கமலஹாசன், விஸ்வரூபம் படத்தில் 'கதக்' நடனம் ஒன்றை ஆட இருக்கிறார். படத்தின் ஒரு காட்சி மட்டும் அல்லாமல், கதையொட்டியே இந்த நடனம் வருவதாக தெரிகிறது. கமல் கதக் டான்ஸ் இந்த பாடல் சங்கர் மகாதேவன் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். உலக நாயகனுக்கு சினிமாவின் எல்லா கலைகளும் தெரியும், ஏற்கனவே சலங்கை ஒலி படத்தில் பாரத நாட்டிய கலைஞனாக கமல் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளியே சுற்றும் காதல் பறவைகள்!
சமீபத்தில் கோலிவுட் பக்கம் புதிய காதல் பறவை பறந்துக் கொண்டிருக்கிறது. அது வேறு யாருமில்லை சினேகாவும், பிரசன்னாவும் தான். விரைவில் திருமணம் செய்துக்கொள்ளும் இவர்கள், தற்போது வெளியே ஜோடியாக சுற்ற ஆரம்பித்துள்ளனர். ஷாப்பிங், பார்ட்டி, என அனைத்து இடங்களுக்கும் ஜோடியாக சென்று வருகின்றனர். இதனையடுத்து இவர்களின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் பாண்டு ஆகிறார் விஜய்!
கௌதம் மேனன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் படம் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று'. ஆக்ஷன் ப்ளஸ் த்ரில்லர் கலந்த இந்தக் கதை சீனா உட்பட பல வெளிநாடுகளில் உருவாகிறது. இந்த படம், ஜேம்ஸ் பாண்டு கதை போல, நிறைய அத்தியாயங்கள் இருக்கும் என தெரிகிறது. மேலும் இந்த படத்தில் விஜய் ஜேம்ஸ் பாண்டு போல ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஒய் திஸ் கொல வெறி.... இது ஒரு பாட்டா?
கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஸ்ரீநாத்து ஒய் திஸ் கொல வெறி பாடலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தப் பாடல் குறித்து அவர் கூறுகையில் "கொலை வெறிடி பாடலை ரசிக்க முடியவில்லை. அபத்தமாக உள்ளது. நான் கற்கால மனிதன் அல்ல. வளர்ச்சி அடைந்த நவீன காலத்தில் வாழ்கிறேன். அதனால் இதுபோன்ற பாடல்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, பாடலை விரும்பாதவர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன்" என்றார்.
மீண்டும் கௌதம்-ஹாரிஸ் கூட்டணி!
கௌதம் மேனனின் முதல் படமான 'மின்னலே' முதல் 'வாரணம் ஆயிரம்' படம் வரை கௌதம்-ஹாரிஸ் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருந்தது. இதனிடையே திடீரென இவர்கள் கூட்டணி பிரிந்தது. இனி கௌதம் மேனனுடன் இணைப் போவதில்லை என்று ஹாரிஸ் கூறியதாக தெரிகிறது. அதன் பின், இசைப்புயல் ஏ,ஆர்.ரகுமானுடன் கூட்டணி வைத்தார் கௌதம் மேனன். இதுவும் வெற்றி கூட்டணியாக அமைந்தது. இதனையடுத்து, தான் இயக்கும் அடுத்து படமான 'நீ தானே என் பொன்வசந்தம' படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை தேர்வு செய்தார் கௌதம். ஆனால் படு பிசியாக ரகுமான் இருப்பதால், அடுத்த முறை இசையமைக்கிறேன் என்று கூறிவிட்டாராம். தற்போது வேறு வழியில்லாமல் தனது முன்னாள் சகா ஹாரிஸையே நாடியிருக்கிறார் கௌதம். ஹாரிஸூம் உடனே இசையமைக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். கௌதமின் மகன் பிறந்த நாளில் பழைய கசப்புகளை இருவரும் களைந்துவிட்டதாகத் தெரிகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு "பத்ம விபூஷன்" விருது?
சினிமா துறையில் 35 வருடம் சேவை புரிந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விரைவில் 'பத்ம விபூஷன்' விருது இந்திய அரசு வழங்கும் என செய்திகள் வெளியாகின. நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான 'பத்ம விபூஷன்' விருதை 35 வருடம் இந்திய சினிமாவிற்கு வேவை புரிந்திருக்காக வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 'பத்ம பூஷன்' விருது வழங்கி கவுரம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும் : அபிஷேக்!
'சீயான் விக்ரம், இளைய தளபதி விஜய், சூர்யா மற்றும் சிம்புவை எனக்கு ரொம்ப பிடிக்கும்' என அபிஷேக் பச்சான் தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் தமிழ் சினிமாவின் பங்கு முக்கியமானது. அதும் சமீப காலத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள் தெளிவான திரைக்கதையில் வெளியாகிறது என்று கூறிய அபிஷேக், விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் மற்றும் சிம்புவின் படங்களை விரும்பி பார்த்த வருவதாகவும் அபிஷேக் கூறினார். இவர்களின் நடிப்பும், ஆக்ஷனும் தன்னை வெகுவாக கவர்ந்து உள்ளதாக அபிஷேக் கூறினார். மேலும் நேரடி தமிழ் படங்களில் நடிக்க ஆசை இருப்பதாகவும், சரியான கதை அமைந்தால் நடிப்பேன் என்று அபிஷக் கூறியுள்ளார்.