கோவா திரைப்பட விழாவில் பங்கேற்க ஓவர் சீன் போட்ட நடிகை கஜோல்

பனாஜி: கோவாவில் நடக்கும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகை கஜோல் பல கன்டஷன்கள் போட்டுள்ளார்.

கோவாவில் 44வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று துவங்கியது. இந்த விழாவில் இந்திய திரைப்படங்கள் தவிர்த்து வெளிநாட்டுப் படங்களும் திரையிடப்படுகிறது.

விழாவில் உலக நாயகன் கமல் ஹாஸன், ஹாலிவுட் நடிகை சூசன் சரண்டன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு பாலிவுட் நடிகை கஜோல் வருகிறேன் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் பின் வாங்கிவிட்டார். விழா ஏற்பாடுகள் பிடிக்காததால் அவர் வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விழா ஏற்பாட்டாளர்களுக்கு நெருங்கியவர்கள் கூறுகையில், கஜோல் சூசனுக்கு கொடுக்கப்பட்டது போன்று லிமோசின் கார், 5 பிசினஸ் வகுப்பு விமான டிக்கெட் வேண்டும் என்றார். இவ்வளவு செலவு செய்ய முடியாததால் ஏற்பாட்டாளர்கள் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர் என்றனர்.

 

இது மும்பை... ரொம்ப கேர்புல்லா இருக்கணும் ஸ்ருதி...! - மகளை விசாரித்த கமல்

இது மும்பை... ரொம்ப கேர்புல்லா இருக்கணும் ஸ்ருதி...! - மகளை விசாரித்த கமல்

மும்பை: இது மும்பை... நாம்தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்... பத்திரமா இரும்மா ஸ்ருதி என தன் மகளுக்கு அன்புடன் அறிவுரை கூறியுள்ளார் நடிகர் கமல்ஹாஸன்.

நேற்று முன்தினம் கமல் ஹாஸனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதி ஹாஸன் அவரது மும்பை வீட்டில் மர்ம நபரால் தாக்கப்பட்டார்.

சட்டென்று சுதாரித்துக் கொண்டதால், பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்தார் ஸ்ருதி.

இந்த சம்பவம் பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது. சக நடிகர் நடிகைகள் இதுகுறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

ஸ்ருதியின் தந்தை கமல்ஹாஸன் நேற்று முன்தினம் மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.

கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்த கமல் ஹாஸன் இதுகுறித்து கூறுகையில், "நேற்று ஸ்ருதியுடன் பேசினேன். அவர் இப்போது மும்பையில் நலமாக உள்ளார். அவருக்கு நான் சொன்னதெல்லாம், இது மும்பை, நாமதான் ரொம்ப கவனமா இருக்கணும். இன்னும் ரொம்ப விழிப்போட இருக்கச் சொன்னேன்.." என்றார்.

 

ரஜினி பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்திக்கும் 'டிஜிட்டல் பரட்டை'

சென்னை: ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி 16 வயதினிலே படம் டிஜிட்டலில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

கடந்த 1977ம் ஆண்டு ரிலீஸான படம் 16 வயதினிலே. பாரதிராஜா இயக்கிய படத்தில் கமல் ஹாஸன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் கதாபாத்திரங்களான சப்பானி, பரட்டை, மயிலு மிகவும் பிரபலம். இந்நிலையில் 36 ஆண்டுகள் கழித்து இந்த படத்தை தற்போது டிஜிட்டலில் வெளியிடுகிறார்கள்.

ரஜினி பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்திக்கும் 'டிஜிட்டல் பரட்டை'

படம் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தை கலைப்புலி எஸ். தாணு ரிலீஸ் செய்கிறார். படம் தமிழகத்தில் 350 ஸ்கிரீன்களிலும், கர்நாடகத்தில் 55 மற்றும் மும்பையில் 10 ஸ்கிரீன்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

16 வயதினிலேவை மறுபடியும் பார்க்க தயாராகுங்கள் ரசிகர்களே!

 

நேரு உள்விளையாட்டரங்கில் கோச்சடையான் இசை வெளியீடு?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படத்தின் இசை, வரும் டிசம்பர் 12-ம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

கேஎஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் சவுந்தர்யா இயக்கியுள்ள கோச்சடையான் முப்பரிமாண படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் ரஜினி.

மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் பெரும்பாலான காட்சிகளும், நிஜமான ரஜினி சில காட்சிகளிலும் தோன்றுகிறார்கள்.

இந்தப் படத்தின் இசை வரும் டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரு உள்விளையாட்டரங்கில் கோச்சடையான் இசை வெளியீடு?

இந்த இசை வெளியீட்டை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வைத்து வெளியிடப் போவதாகவும், அதில் ரஜினி கலந்து கொள்வார் என்றும் முதலில் அதன் தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம். இசை வெளியீட்டை சென்னையிலேயே நடத்துகிறார்கள்.

நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக இந்த விழாவை நடத்தவிருக்கிறார்கள். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

இதற்கிடையில் கோச்சடையான் விளம்பரப் பணிகளை முழு வீச்சில் ஆரம்பித்துள்ளனர்.

 

போலீசில் புகார் செய்தார் ஸ்ருதி... தாக்கியவர் ரசிகர்? விசாரணை தொடக்கம்!

மும்பை: நடிகை ஸ்ருதி ஹாசனை அவரது மும்பை வீட்டில் நுழைந்து தாக்கியது அவரது தீவிர ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி இப்போது போலீசில் ஸ்ருதி புகார் செய்துள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன்- சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தற்போது பாலிவுட்டில் பிஸியாக உள்ளதால், அங்கு பாந்த்ரா பகுதியில் தனி குடியிருப்பில் தங்கியுள்ளார்.

அவர் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ஸ்ருதிஹாசன் வீட்டில் இருந்த போது அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு, கதவை திறந்து யார் என்று விசாரிப்பதற்குள் 27 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தான்.

போலீசில் புகார் செய்தார் ஸ்ருதி... தாக்கியவர் ரசிகர்? விசாரணை தொடக்கம்!

திடீர் என்று ஸ்ருதி இறுக்கிப் பிடித்து, கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான். உடனே சுதாரித்துக் கொண்ட சுருதி அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு காவலாளி வந்து விட்டதால் மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான்.

இதுபற்றி போலீசில் ஸ்ருதி ஆரம்பத்தில் புகார் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.

ஆனாலும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதில் ஸ்ருதியைத் தாக்கிய அந்த மர்ம மனிதன் ஸ்ருதியின் தீவிர ரசிகர் என்று தெரியவந்துள்ளது.

ஸ்ருதியை கடந்த ஒரு வருடமாகவே பின் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்ருதி போகும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.

ட்விட்டர் இணைய தளத்திலும் அடிக்கடி தொடர்பு கொண்டு இருக்கிறான். ஸ்ருதியை சந்திக்கும ஆவலில் படப்பிடிப்பு தளங்களில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

பிரபுதேவா டைரக்ஷனில் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் ஸ்ருதி நடித்தபோதும் இதே நபர்தான் ஸ்ருதியைத் தொட முயன்று விரட்டியடிக்கப்பட்டாராம்.

போலீசில் புகார்

தந்தையின் அறிவுறுத்தல் மற்றும் சக நடிகர்களின் ஆலோசனையின் பேரில் இப்போது பாந்த்ரா போலீசில் புகார் செய்தார் ஸ்ருதி.

போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதனை தேடிவருகிறார்கள். ஸ்ருதியை சந்திக்கும் ஆவலில் வந்தானா? அல்லது முன் விரோதமா? யாராவது அவனை ஏவி விட்டார்களா என்றெல்லாம் விசாரணை நடக்கிறது.

ஸ்ருதியிடமும் முதல்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு ரொம்ப பயந்து போயுள்ள ஸ்ருதி தன் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.

 

அமிதாப்புடன் நடிப்பது பெருமையாக உள்ளது! - தனுஷ்

அமிதாப்புடன் நடிப்பது பெருமையாக உள்ளது! - தனுஷ்

அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிப்பது மிகவும பெருமையாக உள்ளது என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

ராஞ்சனாவுக்குப் பிறகு இரண்டாவது இந்திப் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இதில் அவருடன் சாதனை நடிகர் அமிதாப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை பால்கி இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார்.

‘வேலை இல்லா பட்டதாரி', ‘அநேகன்' ஆகிய இரு தமிழ் படங்களை முடித்துவிட்டு இந்த இந்திப் படத்தில் நடிக்கிறார் தனுஷ்.

தனுஷ் ஜோடியாக நடிக்க கமலஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா பெயர் அடிப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதுகுறித்து தனுஷ் கூறும்போது, "இந்தியில் அடுத்து பால்கி இயக்கும் படத்தில் நடிக்கிறேன். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடிப்பது பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைப்பது மேலும் சந்தோஷத்தை கொடுக்கிறது," என்றார்.