ரித்திக்கை பிரிந்தது ஏன்?: சொல்கிறார் சூசன்

மும்பை: தனிப்பட்ட விருப்பங்களின்படி தான் தாங்கள் பிரிந்ததாக நடிகர் ரித்திக் ரோஷனின் மனைவி சூசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சஞ்சய் கானின் மகளான சூசன் ரித்திக் ரோஷனை 4 ஆண்டுகள் காதலித்து 20.12.2000 அன்று திருமணம் செய்து கொண்டார். 13 ஆண்டுகள் ரித்திக்குடன் வாழ்ந்த பிறகு தற்போது அவர் பிரிந்து சென்றுவிட்டார்.

சூசன் என்னை பிரிய முடிவு செய்துள்ளார் என்று ரித்திக் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தார். இந்நிலையில் பிரிவு குறித்து சூசன் கூறுகையில்,

ரித்திக்கை பிரிந்தது ஏன்?: சொல்கிறார் சூசன்

நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், அக்கறையும் வைத்துள்ளோம். எங்களின் தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் தான் பிரிவு முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இரண்டு அருமையான குழந்தைகளின் பெற்றோர். அவர்களை பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதை எதனாலும் மாற்ற முடியாது என்றார்.

ரித்திக் ரோஷன் உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார். வரும் 20ம் தேதி அவர்களின் 13வது திருமண தினம் வரும் நிலையில் சூசன் ரித்திக்கை பிரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'பெத்த' தொகைக்கு சென்ற 'வீரம்' பட ஆடியோ உரிமம்

சென்னை: அஜீத்தின் வீரம் படத்தின் ஆடியோ உரிமத்தை ஜங்க்ளீ மியூசிக் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

அஜீத்தின் வீரம் படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. படம் 1800 பிரிண்டுகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். சந்தானம், சுஹைல், விதார்த், பாலா, முனீஷ், அப்புக்குட்டி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

'பெத்த' தொகைக்கு சென்ற 'வீரம்' பட ஆடியோ உரிமம்

இந்நிலையில் படத்தின் ஆடியோ உரிமத்தை டைம்ஸ் குழுமத்தின் ஜங்க்ளீ மியூசிக் வாங்கியுள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆடியோ உரிமம் ரூ.1 கோடிக்கும் மேல் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

வீரம் படம் வெற்றி பெற அஜீத் குமார் திருப்பதி கோவிலில் மொட்டை போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.