12/10/2010 3:10:43 PM
மன்மதன் அம்பு 23ந் தேதி ரிலீஸ்!
12/10/2010 3:10:43 PM
‘வேலாயுதம்’ ஷூட்டிங் 50 சதவீதம் முடிந்தது!
12/9/2010 10:59:37 AM
பாண்டியராஜன் நடிக்கும் காமெடி தொடர்
12/1/2010 11:05:13 AM
பாண்டியராஜன் நடிக்கும் காமெடி தொடரான, 'மாமா மாப்ளே' சன்.டி.வி.யில் ஒளிபரப்பாகிறது. பாண்டியராஜன் முதன்முதலாக நடிக்கும் டி.வி. தொடர், 'மாமா மாப்ளே'. விஷன் டைம் சார்பில் வைதேகி ராமமூர்த்தி தயாரிக்கிறார். இத்தொடர் சன் டி.வி.யில் வரும் 5&ம் தேதி முதல், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. 'சின்ன பாப்பா பெரிய பாப்பா' தொடரை இயக்கிய எஸ்.என்.சக்திவேல் இயக்குகிறார். பாண்டியராஜன் மாப்பிள்ளையாகவும் அவர் ஜோடியாக ஐஸ்வர்யாவும், மோகன்ராம் மாமனாராகவும் அவருக்கு ஜோடியாக கல்பனாவும் நடிக்கின்றனர். மேலும் பாலாஜி, குமரேசன், ஷோபனா, நெல்லை சிவா, மதுமிதா உட்பட பலர் நடிக்கின்றனர். திரைக்கதை, வசனம் எம்.ரவிக்குமார், பழனி. அசோக்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யா இசை அமைக்கிறார். 'காமெடியை மையமாக வைத்து இத்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக எல்லாரையும் சிரிக்க வைக்கும் விதமாக இத்தொடர் இருக்கும்' என்றார் இயக்குனர் சக்திவேல்.
ஆசிரம ஆண்டு விழாவில் ரஜினி
12/9/2010 10:45:32 AM
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ஆசிரம பள்ளி நடத்தி வருகிறார். இதில் ஆண்டுதோறும் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருட ஆண்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அதுமட்டுமின்றி இந்தி நடிகர் தர்மேந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் ஆசிரம பள்ளியின் ஆண்டு விழாவில் திரையுலக சேவைக்காக இந்தி நடிகர் தர்மேந்திராவுக்கு விருது வழங்கினார் ரஜினிகாந்த்.
ஆசிரம ஆண்டு விழாவில் ரஜினி
இளைஞன் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது!
12/9/2010 12:16:36 PM
தமிழக முதல்வர் மு.கருணாநிதி கதை வசனத்தில் உருவாகிய ‘இளைஞன்’ திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. படத்தை ‘சுரேஷ் கிருஷ்ணா’ இயக்கியுள்ளார். பாடலாசிரியர் பா.விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் ரஷ்ய நாவலாசிரியர் மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. பா.விஜய்யின் அம்மாவாக குஷ்புவும், சேனை என்ற வில்லியாக நமிதாவும் நடித்துள்ளனர்.
ஒரிஜினல் மழையில் தனுஷ் பட ஷூட்டிங்!
12/9/2010 12:25:34 PM
ஹரியின் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘வேங்கை’. தனுஷூக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் பெய்த மழையால் அஜீத்தின் மாங்காத்தா முதல் எல்லா பட ஷூட்டிங் எடுக்க முடியாமல் போனது. ஆனால் வேங்கை படக் குழுவினர் மட்டும் கொட்டும் மழையிலும் பட ஷூட்டிங்கை தொடர்ந்து நடத்தியுள்ளனர். வேங்கை படத்தில் மழைக் காட்சிகள் வருகின்றன. இதனால் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை ஒரிஜினல் மழையிலேயே எடுத்திருக்கிறார்கள்.
ஒரிஜினல் மழையில் தனுஷ் பட ஷூட்டிங்!
சஸ்பென்ஸ் அஜ்மல்
12/10/2010 10:50:29 AM
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, ராதா மகள் கார்த்திகா, பியா நடிக்கும் படம் ‘கோ’. ‘அயன்’ வெற்றி படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் படம் ‘கோ’. ராதாவின் மகள் ‘கார்த்திகா’ முதன் முறையாக ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், ‘அஞ்சாதே’ புகழ் அஜ்மல் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படத்தில் 'அஞ்சாதேÕ அஜ்மல் கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமாக இருக்கும் எனவும், அவர் வரும் காட்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும் எனவும் கே.வி.ஆனந்த் கூறியு-ள்ளார்.
ஓரினச் சேர்க்கை சர்ச்சையில் சிக்கிய ஷம்மு
12/9/2010 12:59:34 PM
காஞ்சிவரம் படத்தில் அறிமுகமான ஷம்மு ஓரினச் சேர்க்கை பற்றி கருத்து கூறியதில் மிகுந்த சர்ச்சை எழுந்துள்ளது. சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய நடிகை ஷம்மு ‘ஓரின சேர்க்கை குற்றமல்ல. அது தனிப்பட்டவரின் சொந்த விஷயம். உச்ச நீதிமன்றமே சாதகமான தீர்ப்பு கூறியுள்ளது. உலக நாடுகளிலும் அங்கீகரித்து உள்ளன. இதில் நாம் யார் எதிர்க்க,’ என்று பேசியதாக தெரிகிறது.
ஷம்முவின் இந்த கருத்துக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. அதன் மாநில அமைப்பு செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓரினச் சேர்க்கை சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியது. இயற்கைக்கு மாறானது. குடும்ப வாழ்க்கையை சிதைக்க கூடியது. அதனை நடிகை ஷம்மு ஆதரித்து இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் ஷம்மு வெளிப்படையாக இதனை ஆதரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்…,” என்று அவர் கூறியுள்ளார்.
நல்ல காரியங்கள் செய்யும் நமீதா!
12/9/2010 12:52:22 PM
நமீதா என்று சொன்னால் எல்லாருக்கும் நினைவிற்கு வருவது கவர்ச்சி நடிகை என்ற பெயர் தான். திரையில் கவர்ச்சியை தாரளமாக காட்டும் நமீதா, நிஜ வாழ்க்கையில் ஏழைகளுக்கு நல்ல காரியங்கள் செய்வதிலும் தாரணம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையிலுள்ள பாலவிகாஸ் ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்ற நமீதா அந்த இல்லத்தில் தாய், தந்தை இன்றி வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கி, சிறிது நேரம் அந்தக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்தார். இந்த சமூக சேவையை அடிக்கடி காட்டி வரும் நமீதா மற்ற நடிகைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளார்.
மன்மதன் அம்பு படத்தில் சூர்யா கெஸ்ட் ரோல்
12/10/2010 3:38:25 PM
மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களில் சிறப்புத்தோற்றம் இருந்து அழைத்தால், ஈகோ பார்க்காமல் சூர்யா ஒப்புக் கொள்கிறார். ஒருநாள் ஷூட்டிங் என்றாலும் ஒத்துழைப்பு தருகிறாராம். ஏற்கனவே ஜோதிகாவுடன் 'ஜூன் ஆர்' படத்தில் ஒரு காட்சியில் நடித்த அவர், ரஜினியின் 'குசேலன்' படத்திலும் வந்தார். இப்போது கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு', ஜீவா நடிக்கும் 'கோ', பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷாலுடன் 'அவன் இவன்' ஆகிய படங்களிலும் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். 'இது, என் நண்பர்களுக்காக நான் தரும் ஒத்துழைப்பு' என்கிறார் சூர்யா.
3 இடியட்ஸூக்கு முன்,நிறைய வேலை இருக்கிறது :விஜய் விளக்கம்!
12/9/2010 12:41:22 PM
ஷங்கர் இயக்கும் ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிக்க மாட்டர் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதுபற்றி எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை. இதனையடுத்து ’3 இடியட்ஸ்’ படத்தில் விஜய் நடிப்பாரா என்று கேள்விக்கு விடை தெரியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வந்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ளார் நடிகர் விஜய்.
இதுபற்றி அவர் கூறுகையில், ’3 இடியட்ஸ் படத்தில் நான் நடிக்கிறேனா இல்லையா என்பதை தயாரிப்பாளர்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். எனக்கு ஷங்கர் படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். அவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்தை எடுத்துச் செல்லும் வகையில் பணிப்புரிந்து வருகிறார். அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எல்லா ஹீரோ போல் எனக்கும் இருக்கிறது. ஆனால் அதற்கான நேரமும் வர வேண்டும். எனக்கு கால்ஷீட் பிரச்சினைகள் உள்ளன. காவலன் படத்துக்கு சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இதுபோன்ற பெரிய படங்களுக்கு பிரச்சினைகள் வரத்தான் செய்யும்.
இவற்றைத் தாண்டி படத்தை வெளியிட்டாக வேண்டும். காமெடி, காதல், சென்டி மெண்ட் என முழுக்க முழுக்க ஒரு விஜய் படமாக காவலன் இருக்கும். மலையாள கதையை 75 சதவீதம் மாற்றிவிட்டோம். வேலாயுதம் படம் 50 சதவீதம் முடிந்துள்ளது. இன்னும் நிறைய வேலை இருக்கிறது இந்தப் படத்தில். இதன் பிறகுதான் மற்ற படங்களில் நடிப்பது குறித்து சொல்வேன்…”, என்றார்.
3 இடியட்ஸூக்கு முன், நிறைய வேலை இருக்கிறது : விஜய் விளக்கம்!
நீதுவிற்கு சர்ட்டிபிகேட் கொடுத்த அமீர்!
12/9/2010 2:06:33 PM
யுத்தம் செய் படத்தில் நீது சந்திராவும், அமீரும் ஒரு குத்தாட்டம் போட்டனர். இதை தொடர்ந்து அமீர் இயக்கும் ‘ஆதிபகவான்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நீது சந்திரா நடித்து வருகிறார். மேலும் விழா ஒன்றில் “எனக்குத் தெரிஞ்சு, இந்தப் பொண்ணு அளவுக்கு திறமையும், பணிவும் வேற யார்கிட்டயும் பார்க்க முடியல…” என்று சர்ட்டிபிகேட்டும் கொடுத்துள்ளார் அமீர். மேலும், படத்தில் இடம்பெறும் ஒரு காட்சிக்காக நிஜமாகவே சிகரெட் பிடிக்க வேண்டும் என்றாராம் அமீர். ஆனால் நீது சந்திராவோ, ‘நான் இதுவரை சிகரெட்டை தொட்டுப் பார்த்தது கூட கிடையாதே’ என நழுவ, ‘காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும். அப்புறம் உன்னிஷ்டம்’, என அமீர் கூற, கடைசியில் சிகரெட்டை ஸ்டைலாக பிடிப்பது எப்படி என்று அமீர் க்ளாஸ் எடுக்க, அந்தக் காட்சியை எடுத்து முடிப்பதற்குள் நீதுசந்திரா 28 சிகரெட்டுகளை ஊதித் தள்ளி அசத்தினாராம் நீது.
மீண்டும் புவனேஸ்வரி!
12/9/2010 2:19:26 PM
விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளாராம். புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம், சினிமா வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சியும், சர்ச்சையும் அடைய வைத்தது. இதனையடுத்து சிறிது காலம் அவர் நடிக்காமல் இருந்தார். தற்போது பிரச்சனைகள் அமைதியான நிலையில் இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.
மீண்டும் புவனேஸ்வரி!
12/9/2010 2:19:12 PM
விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, மீண்டும் சின்னத்திரையில் நடிக்க உள்ளாராம். புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம், சினிமா வட்டாரத்தையே பெரும் அதிர்ச்சியும், சர்ச்சையும் அடைய வைத்தது. இதனையடுத்து சிறிது காலம் அவர் நடிக்காமல் இருந்தார். தற்போது பிரச்சனைகள் அமைதியான நிலையில் இடைவெளியைக் குறைக்கும் விதத்தில் `பாவத்தின் சம்பளம் என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு வருகிறார் புவனேஸ்வரி. தன் மீதான சமூகத்தின் தவறான பார்வையை மாற்ற போராடும் அவளின் போராட்டமே பாவத்தின் சம்பளம்.
அசனின் புதிய பாலிசி!
12/10/2010 11:05:46 AM
கோலிவுட், பாலிவுட் என சுற்றி வரும் அசின் தனக்கென தன்னுடைய பாலிசியை கைவிட்டுள்ளாராம். அதென்ன பாலிசி என்று கேட்டால் ‘எந்த ஒரு படத்திலும் 2வது ஹீரோயினாக நடிக்க மாட்டேன்’ என்ற அடம்பிடித்த அசினுக்கு, சமீபத்தில் பாலிவுட்டில் 2வது ஹீரோயின் வாய்ப்பை தவிர வேறு எந்த வாய்ப்பு வரவில்லையாம். இதனால், பாலிவுட் படங்களில் 2ம் கட்ட ஹீரோக்களுடன் நடிப்பதில்லை என்ற பாலிசியை கைவிட்டுள்ளாராம் அசின். இதையடுத்து சிறு பட இயக்குனர்களிடம் கதை கேட்கிறாராம்.
எனக்கும்,கார்த்திக்கும் காதல் இல்லை
12/10/2010 3:03:20 PM
''கார்த்தியை காதலிப்பதாக சொல்வதில் உண்மை இல்லை. எந்த நடிகரையும் நான் காதலிக்கவில்லை'' என்றார் தமன்னா. ‘பையா’ படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார் தமன்னா. இதையடுத்து இப்போது மீண்டும் கார்த்தியுடன் சிறுத்தை படத்தில் நடித்து வருகிறார். இருவரும் காதலிப்பதாகவும் தன்னுடன் நடிக்க தமன்னா பெயரை கார்த்தி சிபாரிசு செய்வதாகவும் கோடம்பாக்கத்தில் கிசு.. கிசு வெளியாகின. இதுபற்றி தமன்னாவிடம் கேட்ட போது என்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நட்பாக பழகுவேன். கார்த்தியுடனும் அப்படித்தான் பழகினேன். எனக்கும், கார்த்திக்கும் காதல் இல்லை என்று பலமுறை மறுத்து விட்டேன். ஆனாலும் தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகிறது. என்னையும், கார்த்தியையும் இணைத்து பேசுவதே முட்டாள்தனம். அவரோடு இரண்டு படம் நடிச்சிட்டா, காதல் வந்துடுமா… உடன் நடிக்கும் ஒரு நடிகர் அவர். அவ்வளவுதான். வேற எந்த உணர்வும் இல்லை. தயவு செய்து இதை எழுதுங்கள். இப்போதைக்கு சினிமாவில் கவனம் செலுத்துவது மட்டுமே எனது முதல் வேலை என்று கூறினார்.
யுவனின் நீண்ட நாள் ஆசை!
12/10/2010 10:59:14 AM
தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக இருக்கும் மியூசிக் டைரக்டர் யுவன் சங்கர் ராஜா. அவரது படங்களில் ஏதாவது ஒரு பாடலாவது ஹிட்டாகிறது. அப்படியிருந்தும் யுவனுக்கு நிறைவேறாத ஆசை இருக்கிறது. இதுபற்றி அவர் கூறுகையில், ‘சரித்திர கால படத்துக்கு இசை அமைத்து புகழ் பெற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை’ என்றார். செல்வராகவன் யுவன் கூட்டணி பிரிந்ததால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு யுவன் இசை முடியாமல் போனது. அப்படி இசை அமைத்திருந்தால், அவரது ஆசை நிறைவேறிருக்கும்.
தம்பி படத்தில் அண்ணன்
12/10/2010 11:37:43 AM
தமிழில் இளைய தளபதியை அடுத்து ஜெயம் ரவியை வைத்து (‘எங்கேயும் காதல்’) இயக்கி முடித்துள்ளார். தமிழ் முன்னணி ஹீரோக்களுடன் கை சேர்ந்து வரும் பிரவுதேவா தற்போது விஷாலுடன் இணைப் போகிறார். அதுமட்டுமின்றி தற்போது நடன பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தும் தன் அண்ணன் ராஜு சுந்தரத்தை, ‘எங்கேயும் காதல்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்துள்ளார் பிரபுதேவா.
விஜயகுமார் முன்ஜாமீன் கேட்டு மனு!
12/10/2010 3:14:50 PM
முன்னாள் நடிகையும், விஜயக்குமாரின் மகளுமான வனிதா. தன்னை விஜயக்குமாரும்,அருண் விஜய்யும் அடித்து உதைத்ததாக டிஜிபியிடமும் நேரில் புகார் கொடுத்திருந்தார். நடிகர் விஜயகுமார் – அவர் மகள் வனிதாவுக்கிடையே எழுந்துள்ள மோதலில், வனிதா கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீசார், விஜயகுமார் கொடுத்த புகார் மீது மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, வனிதாவின் கணவரை கைது செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து வனிதா தொடர்ந்து போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்து வற்புறுத்தி வருகிறார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயகுமார், மஞ்சுளா முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.
பாடலாசிரியருக்கு வாய்ப்பு கொடுத்த சினேகன்
12/10/2010 3:36:23 PM
ஒரு பாடலாசிரியர் இன்னொரு பாடலாசிரியருக்கு வாய்ப்பு கொடுப்பது குதிரைக்கொம்பு. ஆனால், சினேகன் கொடுத்துள்ளார். 'யோகி'யில் நடிகராக அறிமுகமான அவர், சில படங்களுக்கு பாட்டு எழுதுகிறார். என்றாலும், நடிப்பு ஆசை விடவில்லை. 'உயர்திரு 420' படத்தில் ஹீரோவாக நடித்து வரும் அவர், தனக்கு ஜோடியாக மேக்னா சுந்தரை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படத்துக்கு தானே பாட்டு எழுதினால் நன்றாக இருக்காது என்று நினைத்த சினேகன், டாக்டர் கிருதியாவை அழைத்து வாய்ப்பு கொடுத்திருக்கிறார். 'சினேகன் செய்த இந்த விஷயம், பெருந்தன்மையானது' என்று நெகிழ்கிறார், கிருதியா.
சிம்பு தேடும் காம்பினேஷன்!
12/10/2010 3:22:29 PM
மன்மதன் படத்தில் சந்தானத்தை காமெடியனாக அறிமுகம் செய்த சிம்பு, தற்போது செம குழப்பத்தில் உள்ளார் போலயிருக்கு. வானம் படத்தில் அயன் புகழ் ஜெகனை வானம் படத்தில் காமெடியனாக றடிக்க வைத்தார். பிறகு என்ன நினைத்தாரோ ஜெகனை நீக்கி விட்டு மீண்டும் சந்தானத்தை தேர்வு செய்துள்ளார் சிம்பு. பாதி படம் முடிந்த பிறகு ஜெகனை ரீபிலேஸ் செய்திருக்கிறார் சந்தானம். இப்போது ஜெகன் நடித்தப் பகுதிகளை தூக்கிவிட்டு சந்தானத்தை வைத்து ரீஷூட் செய்து வருகிறார்கள்.
சிம்ரனுக்கு அட்வைஸ்
12/10/2010 3:37:23 PM
சென்னையில் குடும்பத்துடன் குடியேறியுள்ள சிம்ரன், ஆரிஜெம் மூவிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இப்போது பல இயக்குநர்கள், சிம்ரனை ரகசியமாக சந்தித்து கதை சொல்லி வருகின்றனர். என்றாலும், இன்னும் ஒருவரது கதையை கூட படமாக்க அவர் முன்வரவில்லை. பதிலாக தானே ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். ஆனால், முதலில் பட தயாரிப்பு, பிறகு டி.வி தொடர் தயாரிப்பு, பிறகே டைரக்ஷனில் ஈடுபட வேண்டும் என்று சிம்ரனுக்கு அவர் கணவர் அட்வைஸ் செய்துள்ளதாக சொல்கிறார்கள்.