எக்ஸ் ரே பார்வை: சத்தியம் டிவியின் புலனாய்வு நிகழ்ச்சி

எக்ஸ் ரே பார்வை: சத்தியம் டிவியின் புலனாய்வு நிகழ்ச்சி

சத்தியம் தொலைக்காட்சியில் ‘எக்ஸ்ரே பார்வை' என்ற புலனாய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

சமூகத்தில் நடக்கும் குற்றமும் அதன் பின்புலமும் நேரடி பதிவில் மக்களின் குரலாக இந்த எக்ஸ்ரே பார்வை நிகழ்ச்சியில் இடம் பெற்று வருகிறது .

அரசியல் , பொருளாதாரம் , கல்வி , வேளாண்மை , வர்த்தகம் தொழில் நுட்பம் உள்ளிட்ட சமூக முறைகேடுகளைக் கேள்விக்குட்படுத்தும் தளமாக எக்ஸ்ரே பார்வை , பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது .

சத்தியம் தொலைக்காட்சி வழங்கும் எக்ஸ்ரே பார்வை சனிக்கிழமை தோறும் இரவு 9 .00 மணி முதல் 9.30 வரைக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. ஞாயிற்றுக் கிழமை இரவு 8.00 மணி முதல் 8.30 வரைக்கும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

 

இந்த காமெடி பீஸின் லொள்ளு தாங்கலடா சாமி: பல்லைக் கடிக்கும் ஹீரோ

சென்னை: சிறுத்தை கோடிகளில் சம்பாதிக்கும் காமெடி நடிகர் மீது கடுப்பில் உள்ளாராம்.

சிறுத்தையும், கோடிகளில் சம்பாதிக்கும் காமெடி நடிகரும் தொடர்ந்து கூட்டணி சேர்ந்து நடித்து வருகின்றனர். இதில் காமெடி நடிகர் மீது சிறுத்தைக்கு கடுப்பாக உள்ளதாம். காரணம் இயக்குனர் ஒரு வசனத்தை சொல்லிக் கொடுத்தால் காமெடி நடிகர் தன் பங்கிற்கு நக்கல்ஸ் வார்த்தைகளை சேர்த்துப் போட்டுக் கொள்கிறாராம்.

இதனால் தாம் டம்மியாகிவிட்டோமோ என்று சிறுத்தைக்கு ஃபீலிங்காம். இந்த அக்கப்போரால் தான் தற்போது நடித்து வரும் படத்தில் அந்த காமெடியன் வேண்டாம் என்று சிறுத்தை ஒற்றைக் காலில் நின்றுள்ளார். அடடா இப்போதெல்லாம் படத்தை ஓட்ட உதவுவதே அந்த காமெடியன் தான் இந்த நிலையில் சிறுத்தை இப்படி மல்லுக்கு நிற்கிறதே என்று நினைத்து ஹீரோவை ஒரு வகையாக நைசாகப் பேசி சமாதானம் செய்துவிட்டனர்.

இதையடுத்து தான் சிறுத்தை மீண்டும் அந்த காமெடியனுடன் நடிக்க சம்மதித்துள்ளார். இத்தனை நடந்தும் காமெடியனின் லொள்ளு மட்டும் குறையவே இல்லையாம். இதை பார்த்து சிறுத்தை உருமிக் கொண்டிருக்கிறதாம்.

 

உனக்கெதுக்குப்பா இந்த வேலை.. பணத்தை இழக்காதே! - கேப்டனின் அறிவுரையால் நெகிழ்ந்த விஷால்

சென்னை: சொந்தப் படம் தயாரிக்கலாம். ஆனால் இன்னொருவர் தயாரித்த படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினால் பணத்தை இழப்பதுதான் மிச்சம். உனக்கெதற்கு அந்த வேலை, என்று நடிகர் விஷாலுக்கு அட்வைஸ் செய்தாராம் விஜயகாந்த்.

மதகஜராஜா' படம் முடிவடைந்து 8 மாதங்களாக திரைக்கு வராமல் முடங்கிக் கிடந்ததால், அந்த படத்தை திரைக்கு கொண்டுவர விஷால் பெரும் முயற்சி செய்தார்.

இதற்காக, விஷால் பிலிம் பேக்டரி என்ற பட நிறுவனத்தை தொடங்கி, அந்த பட நிறுவனம் சார்பில் ‘மதகஜராஜா' படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கி, வெளியிட முன்வந்தார்.

உனக்கெதுக்குப்பா இந்த வேலை.. பணத்தை இழக்காதே! - கேப்டனின் அறிவுரையால் நெகிழ்ந்த விஷால்

தனது சொந்தப் பணம் பல கோடிகளை இதற்காக செலவழித்தார். அப்படியிருந்தும் அந்த படம் நிதி நெருக்கடியிலிருந்து வெளிவராமல் முடங்கிப் போக, ‘மதகஜராஜா'வை விஷால் தயாரிப்பாளரிடமே திருப்பிக் கொடுத்து விட்டார்.

இந்த பிரச்சினை பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், விஷாலுக்கு போன் செய்து, ‘‘படத்தை வெளியிடும் முயற்சிகளில் இனிமேல் ஈடுபடாதே. நானும் உன்னை மாதிரி பிறருக்கு உதவி செய்யப் போய் பணத்தை இழந்ததுதான் மிச்சம்.

படம் வெளிவரவில்லையே என்று பதற்றப்படாதே. நடிப்பதோடு வேலை முடிந்தது என்று நினைத்து, அடுத்த படத்தில் கவனம் செலுத்து.

சொந்த படம் எடுக்கலாம். ஆனால், இன்னொருவர் தயாரித்த படத்தை வெளியிடும் வேலையில் இறங்காதே," என்றாராம்.

இதைக் கேட்ட விஷால் நெகிழ்ந்து போய்விட்டார்.

‘கேப்டனுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய அறிவுரையை ஏற்று நடப்பதே அவருக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும்'' என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் விஷால்.

 

பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி

இன்னும் இரு ஆண்டுகளில் பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் - ப்ரியாமணி  

தமிழில் நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருந்ததாகவும், ஆனால் எதுவும் திருப்தியாக அமையவில்லை என்றும் தெரிவித்த ப்ரியா மணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியாக சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, "இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம் .

ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும். முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும்," என்றார்.

 

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட்

சென்னை: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் நடிகை அஞ்சலி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை அஞ்சலி தன்னுடைய சொத்தை அபகரிக்க இயக்குனர் களஞ்சியம் அபகரிக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார். இதையடுத்து அஞ்சலி தலைமறைவாகிவிட்டு சில நாட்கள் கழித்து அவரே திரும்பி வந்தார். இதற்கிடையே தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டிய அஞ்சலி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குனர் களஞ்சியம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது அஞ்சலி ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டார்.

தலைமறைவாக இருந்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி தெலுங்கு படங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.