'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

தமிழ் சினிமாவில் ஒரு நிருபர் போன் செய்தால் உடனே அதை எடுத்துப் பேசும் அளவுக்கு இயல்பாக உள்ள ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆனால் பெரும்பாலான ஹீரோக்கள் ஒரு வாரத்துக்கொரு போன் நம்பர் மாற்றுவார்கள் அல்லது யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியமாக ஒரு நம்பரை வைத்திருப்பார்கள்.

ஜெய், சூரி, சந்தானம், ஆர்யா, ஜீவா, தனுஷ், சிவகார்த்திகேயன் என இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரது நம்பர் எதுவென்று கேட்டால் எந்த நிருபருக்கும் தெரியாது அல்லது அவர்களிடம் உள்ள நம்பர் உபயோகத்தில் இல்லாததாகவே இருக்கும்.

'ஏம்பா தினேசு.. போனை எடுக்கவே மாட்டேங்குறியாமே!'

இந்த பட்டியலில் லேட்டஸ்டாக இடம்பெற்றுள்ள நடிகர் தினேஷ். அட்டகத்தி, குக்கூ படங்களின் நாயகன். தொடர்ந்து இரண்டு படங்கள் சுமார் ஹிட்டடித்த மிதப்பில் மீடியாக்காரர்கள் யாருடைய போனையும் எடுப்பதே இல்லையாம்.

குக்கூ பிரஸ் மீட்டுக்கு வந்திருந்த தினேஷ், மாய்ந்து மாய்ந்து பிரஸுக்கு நன்றி என்று பேசிக் கொண்டிருந்தார்.

அப்போதுதான், ஏம்பா, இங்கே இவ்வளவு பேசறீங்க, போன் அடிச்சா எடுக்கக்கூட மாட்டேங்கறீங்க.. அவ்வளவு பெரிய ஹீரோவாயிட்டீங்களா? என ஒரு நிருபர் மடக்கினார்.

உடனே பதறுவது போல காட்டிக் கொண்ட தினேஷ், "அப்படியெல்லாம் இல்லை. நான் சினிமாவுக்கு புதுசு. நிருபர்களுக்கு பதில் சொல்லத் தெரியாம ஏதாவது உளறிட்டா என்ன பண்றதுன்னுதான், தெரியாத நம்பர்களிலிருந்து போன் வந்தா எடுப்பதில்லை. ஆனா எஸ்எம்எஸ் பண்ணா உடனே பதில் அனுப்பிடுவேன். இனிமே போன் வந்தா கண்டிப்பா எடுக்கிறேன்," என்றார்.

 

ச்சே.. பாலா படம் கைவிட்டுப் போயிருச்சே...! - மகா வருத்தத்தில் ஸ்ரேயா

பாலாவின் தாரை தப்பட்டை பட வாய்ப்பு போன வருத்தத்தில் இருக்கிறார் நடிகை ஸ்ரேயா.

பாலா - இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் படம் தாரை தப்பட்டை. கரகாட்டக் கலையை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் இது.

இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் ஸ்ரேயாதான்.

தமிழில் சுத்தமாக வாய்ப்புகளே இல்லாத நிலையில், பாலா பட வாய்ப்பு கிடைத்ததும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அனைவரிடமும் சொல்லி மகிழ்ந்தார் ஸ்ரேயா.

ச்சே.. பாலா படம் கைவிட்டுப் போயிருச்சே...! - மகா வருத்தத்தில் ஸ்ரேயா

இந்த படம் மூலம் மீண்டும் தமிழ் பட உலகில் இன்னொரு ரவுண்ட் வரும் கனவோடு, சென்னையிலேயே கடந்த சில வாரங்களாகத் தங்கியிருந்தார் ஸ்ரேயா.

ஆனால் திடீரென 'சைஸ் ஜீரோ' அழகியான ஸ்ரேயாவை கழற்றிவிட்ட பாலா, சரத்குமார் மகள் வரலட்சுமியை ஹீரோயினாக்கிவிட்டார்.

கரகாட்ட கலைஞருக்கான பாடி லாங்குவேஜ் வரலட்சுமிக்கு சரியாக இருந்ததாலேயே அவரை ஹீரோயினாக்கியதாக பாலா தரப்பில் சொல்கிறார்கள்.

இந்த செய்தி கேட்டதிலிருந்து ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம் ஸ்ரேயா. நல்ல வாய்ப்பு போயிடுச்சே.. இது யாரோட சதியா இருக்கும் என புலம்புகிறாராம்.

 

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இது இனமா... ராஜபக்சேவின் பணமா?

இப்படித்தான் கேள்வி எழுப்பியுள்ளனர் இனம் படத்தைப் பார்த்த தமிழ் உணர்வாளர்கள் பலரும்.

சந்தோஷ் சிவன் இதற்கு முன் ஈழப் பிரச்சினையின் பின்னணியில் டெரரிஸ்ட் போன்ற படங்களை எடுத்து கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தவர். ஆனாலும் தொடர்ந்து அவர் ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து படங்கள் எடுக்கிறார்.

அப்படி சமீபத்தில் அவர் எடுத்த படம்தான் இனம். இந்தப் படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் வெளியிடுகிறது.

உலகத் தமிழர்களை கொதிக்க வைத்துள்ள இனம்... கமலின் உத்தம வில்லனுக்கு நிஜ வில்லன்!!

இதைவிட ஒரு அரைவேக்காட்டுத்தனமான படம் இருக்க முடியாது என்றும், திட்டமிட்டு நடந்த ஒரு கோரமான இனப்படுகொலையை மறைக்க இதுபோன்ற படங்கள் உதவும் என்றும் விமர்சனங்கள் பலமாக எழுந்துள்ளன.

ஆனாலும் பிரபல சினிமாக்காரர்கள் சிலர் இந்தப் படத்தை பாராட்டி வருகின்றனர். 'இப்படியொரு படம் மூலமாகவாவது தமிழர் படுகொலை செய்யப்பட்டதை காட்ட முடிந்திருக்கிறதே பெரிய விஷயம்' என்ற அளவில் திருப்திப்பட்டுள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இந்த இனம் படத்தை வெளிநாடுகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என உலகத் தமிழர் அமைப்புகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

மேலும், இந்தப் படத்தை வெளியிடும் லிங்குசாமி தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தையும் புறக்கணிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன.

உத்தம வில்லன் படம் கமல் ஹாஸன் நடிக்கும் படம். ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இப்போதுதான் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது.

இந்தப் படத்துக்கு இனம் படம் நிஜ வில்லனாகியிருப்பது கமல் தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

எனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை! - குக்கூ நாயகி மாளவிகா

சென்னை: பார்க்க பெரிய மனுஷி லுக்கிலிருக்கும் குக்கூ நாயகி மாளவிகா மேனன், தனக்கு பதினாறே வயதுதான் ஆகிறதென்றும், நடித்தே தீர வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி, செய்தியாளர்களைச் சந்தித்தனர் படக்குழுவினர். அப்போது படத்தின் நாயகி மாளவிகா நாயர் கூறுகையில், "ஆக்ஷுவலா நான் மலையாளி (அதைச் சொல்லித்தான் தெரியணுமா...). தமிழ் சினிமா பெரிய இன்டஸ்ட்ரி. கமர்ஷியலா பெரிய படங்கள் பண்றாங்க. அதனால் நாம அங்கே போய் என்ன செய்யப் போகிறோம்.. என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, ராஜூ முருகன் என்னை அழைத்து கதை சொன்னார். பார்வையற்ற நாயகி பாத்திரம். என்னால் செய்ய முடியும் என்று தோன்றவில்லை முதலில்.

எனக்கு வயசு பதினாறுதான்.. நடிச்சே ஆகவேண்டிய கட்டாமில்லை! - குக்கூ நாயகி மாளவிகா

பின்னர் 7 நாட்கள் நடந்த பயிற்சி முகாம் போய், பார்வையற்றவர்களுடன் பழகி நடிக்க ஆரம்பித்தேன்.

எனக்கு நடிப்பு என்பது தொழில் இல்லை. பைலட் ஆக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஒரு பொழுதுபோக்காகத்தான் நடிக்கிறேன்.

ஜெர்மனியில் பயணிகள் விமான பயிற்சி கல்விக்கு விண்ணப்பித்துள்ளேன். கிடைத்தவுடன் சென்றுவிடுவேன். கிடைக்கும் இடைவெளியில் குக்கூ மாதிரி சவாலான காதாபத்திரம் கிடைத்தால் நடிப்பேன்," என்றார்.

ரொம்ப ஸேஃபா விளையாடுது பாப்பா!!

 

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

உடல் எடை குறைத்து உற்சாக மறுபிரவேசம் செய்யும் கவுசல்யா!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹரி இயக்கும் விஷால் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க வந்தார். நடிக்க வந்த போது மெல்லிய தேகத்துடன் காணப்பட்ட கவுசல்யா, இப்போது பருத்த உடலுடன் காணப்பட்டார்.

இதைத் தொடர்ந்து உடல் எடையை இயக்குநர் குறைக்கச் சொன்னதால், யோகா மற்றும் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார்.

இப்போது 100 கிலோவிலிருந்து 79 கிலோவாகக் குறைந்துவிட்டதாக உற்சாகமாகத் தெரிவித்த கவுசல்யா, ஹரி - விஷால் படத்தில் நடிக்க வந்துள்ளார். மேலும் சில படங்களில் கேரக்டர் வேடங்கள் செய்யவும் பேசி வருகிறார்களாம்.

 

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

சென்னை: குக்கூ படத்தின் வெற்றி பெற்றதால், அதன் இயக்குநர் ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

பாக்ஸ் ஸ்டார் - தி நெக்ஸ்ட் பிக் பிலிம்ஸ் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்கள், பாராட்டுகளைச் சந்தித்துள்ள படம் குக்கூ. இந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்து, நேற்று அதைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தினர்.

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

அப்போது குக்கூ படத்தை இயக்கிய ராஜூ முருகனுக்கு புதிய டஸ்டர் காரை பரிசளிப்பதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்தனர்.

அதே மேடையில், தங்களின் அடுத்த படத்தை இயக்கப் போவதும் ராஜு முருகன்தான் என தி நெக்ஸ் பிக் பிலிம்ஸ் சார்பில் தெரிவித்தனர்.

அப்போது ஒரு நிருபர், "இப்படித்தான் ஆரம்பத்தில் எல்லா தயாரிப்பாளர்களும் ஆர்வத்துடன் அடுத்த படமும் இவருக்கே என்பார்கள். ஆனால் கடைசியில் சொன்னபடி செய்ய மாட்டார்கள். கொடுத்த அட்வான்ஸைக் கூட கேட்காமல் அமைதியாக ஒதுங்கிவிடுவார்கள். நீங்கள் எப்படி?" என்றார்.

குக்கூ பட வெற்றி.. இயக்குநர் ராஜூ முருகனுக்கு டஸ்டர் கார் பரிசு!

கொஞ்சம் ஜெர்க் ஆன தயாரிப்பாளரும் இயக்குநரும்... "உண்மையாகவே அடுத்த படத்தையும் நான்தான் இயக்குகிறேன். கதை ரெடி," என்றார்.

 

பிக்கப் டிராப் நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை

சென்னை: பிக்கப் டிராப் நடிகருடன் இனிமேல் நடிக்க மாட்டேன் என்று நயன நடிகை கூறிவிட்டாராம்.

பிக்கப் டிராப் நடிகருக்கும், நயன நடிகைக்கும் காதல் என்று பேச்சாக கிடந்து ஓய்ந்துள்ளது. இந்நிலையில் நயன நடிகைக்கும் அவரது முன்னாள் காதலரான விரல் நடிகருக்கும் இடையே மீண்டும் காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது. இந்த ஆண்டே அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை பிக்கப் டிராப் நடிகருடன் சேர்ந்து பாஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. நயனம் இல்லாத பாஸ் படமா என்று நடிகர் கவலையில் உள்ளாராம்.

நடிகர் என்ன தான் கோரிக்கை வைத்தாலும் நடிகை இறங்கி வருவதாக இல்லையாம். பிக்கப் டிராப் நடிகரை விட்டு விலகி இருப்பது தான் தனக்கு நல்லது என்று நினைக்கிறாராம் நடிகை.

 

இந்த ஹீரோ கேட்கிற சம்பளத்தில் நான் 3 படம் எடுத்திடுவேனே: இயக்குனர்

சென்னை: சீயான் நடிகர் கேட்ட சம்பளத் தொகையை கேட்டு சோடா பட இயக்குனர் அதிர்ச்சி அடைந்தாராம்.

சீயான் நடிகர் பிரமாண்ட இயக்குனரின் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் ரூ.8 கோடியை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இந்நிலையில் அவர் தனது சம்பளத்தை ரூ.15 கோடியாக உயர்த்த முடிவு செய்துள்ளாராம். அவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்க இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயாராக இல்லையாம்.

இந்நிலையில் தான் சோடா பட இயக்குனர் நடிகரை பார்த்து கதை சொன்னாராம். கதை நடிகருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து தனது புதிய சம்பளத்தை இயக்குனரிடம் தெரிவித்து நல்ல தயாரிப்பாளருடன் வாருங்கள் என்றாராம் நடிகர்.

சரி என்று கூறி விட்டு வந்த இயக்குனர் அவர் கேட்கிற சம்பளத்தை வைத்து நான் மூன்று படங்களை எடுத்துவிடுவேனே என்று தனது நண்பர்களிடம் தெரிவித்து வருகிறாராம்.