ரிடையர்மென்ட் டைம்... ப்ரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரம்!

ரிடையர்மென்ட் டைம்... ப்ரியாமணிக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் தீவிரம்!

சென்னை: ப்ரியாமணிக்கு ரிடையர்மென்ட் நேரம் நெருங்கிவிட்டதால், மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாக உள்ளனர் குடும்பத்தினர்.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, அமீரின் பருத்தி வீரன் என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் ப்ரியாமணி.

அவருக்கு இப்போது தமிழில் சுத்தமாக படங்களே இல்லை. கன்னடத்தில் மட்டும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது 29 வயது ஆகும் ப்ரியாமணியோடு ஜோடி சேர இப்போதுள்ள ஹீரோக்களும் விரும்புவதில்லை. எனவே ஒற்றைப் பாடலுக்கு குத்தாட்டம் போடும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டார்.

எனவேதான் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலக இதுதான் சரியான சமயம் என முடிவு செய்துள்ளார்.

ப்ரியாமணிக்கு ஏற்ற தொழிலதிபர், சாப்ட்வேர் எஞ்ஜினீயர் அல்லது வெளிநாட்டில் செட்டிலான இந்தியர்களில் மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம் ப்ரியாமணியின் பெற்றோர்.

 

மீண்டும் நடிக்கத் துடிக்கும் நடிகை: தடை போட்ட குடும்பத் தலைவர்

சென்னை: சிங்கத்தின் மனைவிக்கு மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. ஆனால் அவரது ஆசைக்கு குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சிங்கத்தின் மனைவி குழந்தைகளோடு பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் குழந்தைகள் தான் கொஞ்சம் வளர்ந்துவிட்டார்களே நாம் மீண்டும் நடிக்கத் துவங்கினால் என்ன என்று நினைத்தார். இதை தனது கணவரிடமும் கூறினார். காதல் கணவரான சிங்கம் ஓகே தாராளமாக நடிப்பை தொடரலாம் என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்.

ஆனால் குடும்பத் தலைவரான சிங்கத்தின் தந்தை மருமகளின் ஆசைக்கு தடை போட்டுவிட்டாராம். நான் இருக்கும் வரையில் குடும்பம் கட்டுக்கோப்பாக இப்படித் தான் இருக்க வேண்டும். அதன் பிறகு எப்படி வேண்டும் என்றாலும் இருங்கள் என்று பட்டென்று கூறிவிட்டாராம்.

அதனால் அம்மணி நடிப்பது குறித்து பேசாமல் வாய் மூடிக் கொண்டிருக்கிறாராம்.

 

காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்

சென்னை: 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதிய கவிஞர் வாலியின் 82வது பிறந்தநாள் இன்று.

5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியவர் காவியக் கவிஞர் வாலி. அவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி சென்னையில் மரணம் அடைந்தார்.

காவியக் கவிஞர் வாலிக்கு இன்று 82வது பிறந்தநாள்: உன்ன நெனச்சேன்.. பாட்டுப் படிச்சேன்

இந்நிலையில் அவரின் 82வது பிறந்தநாளான இன்று அவரை நாம் நினைவு கூர்வோம். வாலியின் மறைவு திரை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். பத்மஸ்ரீ விருது பெற்ற வாலி கடைசியாக பாடல் எழுதியது சித்தார்த் நடிக்கும் காவியத் தலைவன் படத்திற்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரங்கராஜனாக பிறந்த வாலி வயதானாலும் மனதளவில் வாலிபராகவே இருந்து மறைந்தார்.

 

கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

எதும் கிசுகிசு மேட்டர் இல்லீங்க... இது லட்சுமி மேனனை கவுதம் மேனன் ஒப்பந்தம் செய்திருப்பது குறித்து.

மிகுந்த சரிவிலிருந்த கவுதம் மேனனை கை கொடுத்து அஜீத் தூக்கி இருப்பது தெரிந்த விஷயம்.

அந்த தெம்பில், ஒரு புதிய படத்தைத் தயாரிக்கவும் முடிவு செய்துள்ளார் கவுதம் மேனன்.

கவுதம் மேனனும் லட்சுமி மேனனும்...

வீரம் படம் முடிந்து கவுதம் மேனன் படத்தில் அஜீத் நடிக்க குறைந்தது 3 மாதங்களாவது ஆகுமாம். பிப்ரவரியில் ஷூட்டிங் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த இடைவெளியில் சிம்புவை வைத்துப் படம்பண்ணுவதாக முதலில் முடிவு செய்திருந்தார் கவுதம். ஆனால் சிம்பு படத்தை 2014-ல் வைத்துக் கொள்ள முடிவு செய்த கவுதம், அந்த 3 மாதங்களில் ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்துள்ளாராம்.

இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் ராதாமோகன். இந்த படத்தில் யார் ஹீரோ என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஹீரோயினாக லட்சுமி மேனனைத் தேர்வு செய்துள்ளனர்.

லட்சுமி மேனனை இப்படத்திற்காக சிபாரிசு செய்தது கவுதம் மேனன்தானாம். இவருடைய விருப்பத்தை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம் ராதாமோகன்.

 

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை சந்தானம் நிறுத்தனும், இல்லை என்றால்...

பெண்களை இழிவுபடுத்தி பேசுவதை சந்தானம் நிறுத்தனும், இல்லை என்றால்...

சென்னை: படங்களில் பெண்களை இழிவுபடுத்துவது போன்று வசனம் பேசுவதாகக் கூறி நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜீவா, த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ள என்றென்றும் புன்னகை படத்தில் பெண் ஊழியர் ஒருவர் சந்தானத்திடம் அஞ்சு பத்துக்கு போகட்டுமா என்று கேட்க அவரோ நீ நன்றாகத் தானே இருக்க ஆயிரம், ஐநூறுக்கு போயேன் என்று இரட்டை அர்தத்தில் பேசிய வசனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து மனித உரிமைகள் கழக சர்வதேச அமைப்பின் மகளிர் அணி நிர்வாக செயலாளர் கல்பனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சந்தானம் எல்லா படங்களிலும் பெண்களை இழிவுப்படுத்துவது போல் வசனம் பேசி வருகிறார். மதுபாட்டிலும் கையுமாக போதையில் அவர் பெண்களை கொச்சைப்படுத்தி பேசும் வசனங்கள் பெண்களை புண்படுத்தி உள்ளது. இது போன்று வசனம் பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் சந்தானத்துக்கு எதிராக போராட்டம் நடத்த நேரிடும். தணிக்கை குழுவினர் இதுபோன்ற வசனங்களை நீக்கிவிட்டுத்தான் அனுமதி சான்று அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.