தமன்னாவுக்கு சீக்கிரம் கல்யாணமாக ராம் சரண் கொடுத்த 'ஐடியா'!

Ram Charan S Idea Tamannah Get Marry Soon
தமன்னாவும், தெலுங்கு ஹாட் ஸ்டார் ராம் சரணும் செம தோஸ்த்துகளாகி விட்டனர். எல்லாம் 8 மாசம்தான் காரணம்... உடனே அங்க போயிடாதீங்க.. எட்டு மாதமாக இவர்கள் சேர்ந்து நடித்த ரச்சா படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதோடு, இருவருக்கும் இடையிலான நட்பையும் வலுவாக்கி விட்டதாம்.. .மறுபடியும் கற்பனையை தட்டிடாதீங்க.. வெறும் நட்புதானாம்.

சமீபத்தில் இரண்டு பேரும் சந்தித்து ஹாயாக பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது தமன்னா சொன்னாராம், என்னுடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கெல்லாம் உடனே கல்யாணமாகி விடுகிறது. கார்த்தி நடித்தார், இப்போது கல்யாணமாகி விட்டது. அதேபோலத்தான் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜூன், ஏன் நீங்களும் கூடத்தான் என்று கூறினாராம்.

அதைக் கேட்ட ராம் சரண் ரொம்ப கூலாக, அப்படியானால் நீங்க உடனே ராணா டகுபதியுடன் ஜோடி போட்டு நடிங்க, உங்களுக்கும் கல்யாணமாகி விடும் என்றாராம். ராணாவுடன் ஜோடியாக நடித்த ஜெனீலியாவுக்கு உடனே கல்யாணமானதை வைத்து இப்படிப் பதிலளித்தாராம் ராம் சரண்.

அவரது பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் தமன்னா...

அட, இங்க பார்ரா...!
 

சுந்தர்.சி க்காக ஏற்றிய உடம்பை முருதாஸுக்காக குறைக்கும் அஞ்சலி!

Anjali On Weight Loss Mode Murugadoss Film
கலகலப்பு படத்துக்காக லைட்டாக குண்டடித்த அஞ்சலி தற்போது அதைக் கஷ்டப்பட்டு இறக்கி வருகிறாராம். இதற்காக ஜிம்முக்கு அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறார். சீக்கிரம் பழையபடி ஸ்லிம்மாகி விடுவாராம்.

கலகலப்பு படத்தில் ஓவியாவுக்கு ஈக்வலாக கவர்ச்சியில் புகுந்து விளையாடி ரசிகர்களை புல்லரிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. அவரும், ஓவியாவும் ஒரு பாட்டில் போட்டுள்ள கிளாமர் ஆட்டம்தான் இந்த நிமிடம் வரை அத்தனை பேரின் பேச்சாகவும் இருக்கிறது.

இப்படத்துக்காக கொஞ்சம் போல குண்டடித்திருந்தார் அஞ்சலி. காட்சியில் கிளாமர் வருவதால் அதற்கேற்ற உடல் வாகுக்காக இந்த குண்டடிப்பாம். இப்போது அதைக் குறைக்க கடுமையாக உடற்பயிற்சியில் குதித்துள்ளார் அஞ்சலி.

அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் அஞ்சலி. இதற்காகத்தான் இந்த உடல் குறைப்பு முயற்சியாம். இந்தப் புதிய படத்தில் காலேஜ் கேர்ள் வேடத்தில் வருகிறாராம் அஞ்சலி. எனவேதான் உடலைக் குறைத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளாராம்.

ஜிம்முக்குப் போய் கடுமையாக உடற் பயிற்சி செய்து வரும் அஞ்சலிக்கு எடையில் நல்ல குறைவு ஏற்பட்டுள்ளதாம். இதனால் ஹேப்பியாகியிருக்கிறார்.

இந்தப் படம் தவிர டெல்லி பெல்லியின் தமிழ் ரீமேக்கான வருத்தப்படாத வாலிபர் சங்கத்திலும் நடிக்கப் போகிறார் அஞ்சலி.

தொடர்ந்து படங்கள் கை வசம் குவிந்து வருவதால் அஞ்சலிக்கு செ டைட்டாகியிருக்கிறதாம் கால்ஷீட் புக். இதனால் பார்த்துப் பார்த்துத்தான் வாய்ப்ப்புகளை ஏற்கிறாராம்.
 

ஓபனிங்கில் ஹிட்டடித்த அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'!

Aamir Khan Satyamev Jayate First Episode   
ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் ‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.

மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் அமீர்கான். ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பாடலுக்காக தனது 5 மாத கைக்குழந்தையை அமீர் கான் நடிக்க வைத்திருந்தார். இதற்கு அவரது மனைவி கிரண்ராவ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காட்சியை நீக்கிய பின்பே ஒளிபரப்பினாராம் அமீர் கான். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவே தனது 5 மாத குழந்தையை நடிக்க வைத்தாக அமீர் கானின் நெருங்கி நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் இதேபோல் விறுவிறுப்பான விவாதங்கள் முன் வைக்கப்படுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி காட்டினாரா காஜல் அகர்வால்?

Kajal Agarwal Shows Overdose Glamour In Dhada
தெலுங்கில் தாதா என்ற படத்தில் நடித்துள்ள காஜல் அகர்வால், அந்தப் படத்தில் இடம் பெற்ற இன்னொரு நாயகியான சமீக்ஷாவை பீட் செய்வதற்காக கூடுதல் கவர்ச்சி காட்டி கலங்கடித்துள்ளாராம்.

சூர்யானுடன் மாற்றான், விஜய்யுடன் துப்பாக்கி என ஏக பிசியாக இருக்கும் காஜல் அகர்வால் நடித்துள்ள தெலுங்குப் படம்தான் தாதா. நாக சைதன்யாவுக்கு ஜோடி கட்டியுள்ள இவர், இப்படத்தில் கவர்ச்சியில் பூந்து விளையாடியுள்ளாராம்.

இந்தப் படத்தை தற்போது தமிழிலும் டைகர் விஸ்வா என்ற டிப்பிகல் தெலுங்குப் பட டப்பிங் பெயருடன் களம் இறக்குகின்றனர். படத்தில் காஜலைத் தவிர சமீக்ஷாவும் ஒரு நாயகியாக நடித்துள்ளார். இதனால் கவர்ச்சியில் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு பட்டையைக் கிளப்பியுள்ளனர். அதிலும் தன்னை விட சமீக்ஷாவுக்குப் பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக வாலன்டியராக தானே முன்வந்து கவர்ச்சியை கூடுதலாக வழங்கி இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம் காஜல்.

அதிலும் ஒரு பாடல் காட்சியில் குட்டை உடை அணிந்து அடிக்கடி குணிந்து ரசிகர்களை நிமிர வைத்து விட்டாராம். அப்படியா என்று அவரிடம் கேட்டால், சினிமாவில் கவர்ச்சியா என்று யாரும் கேட்கவே கூடாது. அதுவும் கமர்ஷியல் படம் என்றால் கவர்ச்சி இருக்கத்தான் செய்யும். தேவையென்றால் நடித்துத்தானே ஆக வேண்டும் என்று ஸ்டைலாக பதிலளித்தார் காஜல்.

நல்ல பதில், நல்ல பதில்!
 

ஓபனிங்கில் ஹிட்டடித்த அமீர்கானின் 'சத்ய மேவ ஜெயதே'!

Aamir Khan Satyamev Jayate First Episode
ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடத்தும் ‘சத்ய மேவ ஜெயதே’ ரியாலிட்டி ஷோ மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பாலிவுட் நடிகர்கள் டிவி ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெறுவது புதிதல்ல. அமிதாப்பச்சன், சாருக்கான், சல்மான்கான், ஹிருரித் ரோஷான் போன்றவர்கள் வரிசையில் அமீர்கானும் இணைந்துள்ளார். சத்ய மேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியின் வழியாக அவரும் சின்னத்திரையில் தோன்றியுள்ளார்.

மே 6 ம் தேதி ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்டார் ப்ளஸ் தொலைக்காட்சியிலும், டிடி 1 லும் ஒளிபரப்பாகிய இந்த நிகழ்ச்சியில் தனது வழக்கமான மேனரிசத்துடன் நேயர்களிடம் உரையாடினார் அமீர்கான். ஓபரே வின்ஸ்ப்ரே போல நிகழ்ச்சியை விறுவிறுப்பாகவும், போராடிக்காமலும் கொண்டு சென்றதாக நிகழ்ச்சியை கண்டு ரசித்த ரசிகர்கள் டுவிட்டர், பேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கான புரோமாஷன் போட்டது தொடங்கி சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவைகளில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதைப்போலவே முதல் நிகழ்ச்சியே பரபரப்பான விஷயம்தான். பெண் சிசுக்கொலை பற்றியும், கருவில் இருப்பது பெண் என்று தெரிந்தால் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்ற விவாதங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெண் சிசுக்கொலையை தடுப்பது எவ்வாறு என்பது பற்றியும் கூட இதில் நேர்மறையான தீர்வு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் பாடலுக்காக தனது 5 மாத கைக்குழந்தையை அமீர் கான் நடிக்க வைத்திருந்தார். இதற்கு அவரது மனைவி கிரண்ராவ் எதிர்ப்பு தெரிவிக்கவே அந்த காட்சியை நீக்கிய பின்பே ஒளிபரப்பினாராம் அமீர் கான். நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பு கூட்டவே தனது 5 மாத குழந்தையை நடிக்க வைத்தாக அமீர் கானின் நெருங்கி நண்பர்கள் வட்டாரம் கிசுகிசுக்கிறது.

தொடர்ந்து வரும் நிகழ்ச்சிகளிலும் இதேபோல் விறுவிறுப்பான விவாதங்கள் முன் வைக்கப்படுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 

கேரளாவில் 100% கல்வியறிவு இருந்து என்ன புண்ணியம்?... குஷ்பு கேள்வி!

Women Should Empower Themselves First
கேரளாவில் 100 சதவீத கல்வியறிவு உள்ளது. ஆனால் எத்தனை படித்த பெண்கள் வேலையில் இருக்கிறார்கள், வேலை பார்க்கும் தகுதியுடன் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரும்பாலானோர் இல்லை என்பதே வியப்புக்குரிய பதிலாக உள்ளது என்று கூறியுள்ளார் திமுக நடிகை குஷ்பு.

கொச்சிக்கு வந்திருந்த குஷ்பு, அங்கு நிர்வாகவியல் மாணவர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், பெண்கள் நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இட ஒதுக்கீட்டைக் கோருவதற்கு முன்பு, தங்களைத் தாங்களே முதலில் சக்தி பெற்றவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

கேரளா இன்று 100 சதவீத கல்வியறிவுடன் உள்ளது. ஆனால், எத்தனை பெண்களுக்கு இங்கு வேலை உள்ளது, எத்தனை பேர் வேலை பார்க்கும் திறனுடன் உள்ளனர். பெரும்பாலானோர் இல்லை என்பதே ஆச்சரியமான பதிலாக உள்ளது.

முதலில் நத்தைகள் போல கூட்டுக்குள் இருக்கும் நிலையிலிருந்து பெண்கள் வெளியே வர வேண்டும். தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டும். நாம் மிகப் பெரிய சக்தி என்பதை முதலில் நாம் உணர வேண்டும். பிறகுதான் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும். அதன் பிறகு நாம் நாடாளுமன்றம், சட்டசபைகளில் போதிய பிரதிநிதித்துவம் கேட்டுப் போராடலாம்.

ரிலையன்ஸ், யுடிவி போன்ற பெரிய நிறுவனங்கள் திரைப்படம் தயாரிக்க வருவது தவறான ஒன்றல்ல. அதேசமயம், திரைப்பட உருவாக்கம் என்பது பணம் பண்ணும் தொழில் அல்லது. லட்சிய வேட்கை இருந்தால் மட்டுமே திரைப்படத் தயாரிப்பில் வெற்றிக் கொடி நாட்ட முடியும்.

நான் ஒரு பிரபலமாக இருப்பதால் எதிலும் ஈசியாக நுழைந்து விட முடிகிறது. அரசி்யலில் நுழைவது ஒரு நடிகையாக எனக்கு எளிதாகத்தான் இருந்தது. ஆனால் அத்தோடு நின்று விடக் கூடாது. கடுமையாக உழைக்க வேண்டும். ப்போதுதான் நமது பயணம் மேலும் முன்னேறிச் செல்லும் என்றார் குஷ்பு.
 

நடிகர் நடிகையருக்கு தனியே "வெட்டிங் பார்ட்டி' கொடுக்கும் சினேகா

Sneha S Special Party Artists   
சினேகா வீட்டில் கல்யாணக் களை கட்ட ஆரம்பித்து விட்டது. குடும்பத்தினரோடு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை நேரில் சந்தித்து கல்யாண பத்திரிக்கையைக் கொடுத்த அவர் தற்போது தனது திருமண விழா ஏற்பாடுகளில் தீவிரமாகி விட்டார்.

தமது திருமணத்தை 4 நாள் விழாவாக நடத்துகிறாராம் சினேகா. முதல் நாளில் அவர் நடிகர், நடிகைகள் மற்றும் நட்பு வட்டாரத்துக்கு மட்டும் ஸ்பெஷல் பார்ட்டி ஒன்றை "வீட்டிலேயே" கொடுத்து அசத்த இருக்கிறார்.

அப்புறமாக மெஹந்தி, சங்கீத் என்று 2 விழாக்களை ரொம்பவும் ஆடம்பரமாக நடத்த உள்ளார். இருக்கிற எல்லா நிறத்திலுமே பட்டுச் சேலைகளை வாங்கிக் குவித்திருக்கிறாராம். பட்டுச் சேலை சினேகாவுக்கு பிடித்தமானவை மட்டுமல்ல, அவருக்கு அவை படு பாந்தமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

காஞ்சிபுரத்துக்கு தானே நேரடியாக சென்று முகூர்த்த பட்டுப் புடவையை வாங்கியிருக்கிறார். பிரசன்னா பிராமணர் என்பதால் இந்தத் திருமணம் இரண்டு முறைப்படி நடக்கவிருக்கிறது. முதலில் சினேகாவின் நாயுடு முறைப்படியும், பின்னர் பிராமண முறைப்படியும் கல்யாணம் நடைபெறவுள்ளது.

பிராமண முறைப்படி நடைபெறும் திருமணத்தின்போது மாமிகள் கட்டுவது போல மடிசார் கட்டிக் கொண்டு பிரசன்னாவைக் கரம் பிடிக்கவுள்ளார் சினேகா.

மாதுரி தீட்சித் போல காக்ரா உடையிலும் திருமண நாளில் உலா வருகிறார் சினேகா. சினேகாவின் அனைத்து டிசைன்களையும் அவரது அக்காதான் வடிவமைத்து வருகிறார். திருமணத்தை நினைத்தாலே சினேகாவுக்கு "மனசுக்குள் ஆயிரம்பட்டாம் பூச்சிகள் பறக்கிறதாம்"...
 

மேலும் தாமதமாகும் பெரிய பட்ஜெட் படங்கள்!

Tamil Cinema Biggies Release Delay Further
தமிழ் சினிமாவில் கோடை காலம் மிக முக்கிய சீஸன். நாட்டில் மழை பெய்கிறதோ இல்லையோ... திரையரங்கில் வசூல் மழை இருக்கும்.

எனவே இந்த கோடையைக் குறிவைத்து முன்னணி நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் தயாராவது வழக்கம்.

இந்த ஆண்டு கோடை ரிலீஸில் முக்கியப் படமாக எதிர்ப்பார்க்கப்பட்டது கமல் ஹாஸனின் விஸ்வரூபம். ரூ 100 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

பாடல்கள் சேர்க்கப்படாத, படத்தின் ஒரு பிரதியை கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு அனுப்பிவிட்டார் கமல்ஹாஸன் என்று தெரிகிறது. ஆனால் தியேட்டர் ரிலீஸ் இன்னும் தள்ளிப் போகிறது.

படத்தின் விளம்பரம், வர்த்தகம் தொடர்பான வேலைகளை இனிமேல்தான் கமல் துவங்கவிருப்பதால், படம் வெளியாவது தாமதமாகிறது.

இந்த கோடையில் இன்னொரு முக்கிய வெளியீடு அஜீத்தின் பில்லா 2. பெப்சி தொழிலாளர் பிரச்சினை காரணமாக, மே மாதம் வெளியாகவிருந்த இந்தப் படம், ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப் போயுள்ளது.

சூர்யாவின் மாற்றான் திரைப்படம் மே மாதம் வெளியாகவிருந்தது. ஆனால் இதையும் தாமதப்படுத்தியுள்ளது பெப்சி தொழிலாளர் பிரச்சினை. ரஷ்யா, சீனா என வித்தியாசமான லொகேஷன்களில் பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் நல்ல எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

கார்த்தி நடிக்கும் சகுனி ஏப்ரலில் வரவிருந்தது. இந்த மாதம் வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.

பெரிய படங்கள் வராதது, வழக்கு எண் 18/9 போன்ற சிறிய, ஆனால் நல்ல படங்கள் பக்கம் ரசிகர்களை அதிகம் போக வைத்துள்ளது. அந்த வகையில் இந்த தாமதத்திலும் ஒரு நல்லது நடந்துள்ளது!
 

'கழுவி கழுவி'.... சந்தானத்திடம் தாய்க்குலம் கேட்ட சந்தேகம்!

Santhanam Meets Press Ishtam Movie
ரொம்ப நாட்களுக்குப் பிறகு நிருபர்கள் மத்தியில் நீண்ட நேரம் பேசினார் நகைச்சுவை நடிகர் சந்தானம். விமல் - நிஷா அகர்வால் நடித்துள்ள இஷ்டம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்திருந்தார் சந்தானம்.

வழக்கம்போல, இந்த நிகழ்ச்சியிலும் நாலு வார்த்தையோடு நிறுத்திக் கொண்டார் ஹீரோ விமல்.

ஆனால் சந்தானம் அரைமணி நேரம் பேசுவார் என பிஆர்ஓ மவுனம் ரவி அறிவிக்க, சிரித்த படி வந்த சந்தானம் சீரியஸாகவே சற்று அதிக நேரம் பேசினார்.

"எங்கிட்ட நிறைய பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் உடனடியாக தர முடியவில்லை. காரணம், நிற்க நேரமில்லாத அளவுக்கு ஷூட்டிங். ஆனா கண்டிப்பா தந்துடுவேன்..." என்று எடுத்த எடுப்பில் எக்ஸ்க்யூஸ் கேட்டவர், சினிமாவில் ஒருவர் நல்ல நிலைக்கு வரக் காரணத்தை விளக்கினார்.

"திறமை 90 பர்சென்ட் இருந்தாலும் ஒருவருடைய கேரக்டர்தான் அவரது வெற்றியைத் தீர்மானிக்கிறது. அடிப்படை குணம் சரியாக இருந்தால், இருக்கிற திறமையை வைத்து முன்னுக்கு வந்துவிடலாம்," என்றார்.

உங்களை வைத்துதான் இன்றைக்கு பட பிஸினஸ் நடக்கிறது எனும் அளவுக்கு வந்துவிட்டீர்கள். இன்னும் ஹீரோவின் காதலுக்கு உதவும் வேடம் ஏன்... ஹீரோவாக நடிப்பதுதானே? என்று ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

பதறிய சந்தானம், "இதுக்குதான் நான் அதிகமா பேட்டியெல்லாம் குடுக்கிறதில்ல. ஏங்க, நமக்கு என்ன வருமோ அதை செஞ்சிட்டு போறதுதான் நல்லது. எனக்கு காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகுது. ஹீரோவா நடிக்க பல பேர் இருக்காங்க.

தமிழ் சினிமாவுல 1000 காமெடியன்கள் இருந்தாலும் சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு 10 பேர்தான் இருப்பாங்க. அந்த பத்துப் பேர்ல ஒருத்தனா இடம்பிடிச்சா போதும்னு நினைக்கிறேன்," என்றார்.

மொக்க பிகர், சப்ப பிகர்னு நீங்கள் கிண்டல் பண்றதை .. பெண்கள் அமைப்புகள் எதிர்க்கிறார்களே?

"ஏங்க, நான் என்ன ரோட்ல போற பெண்களையா கிண்டல் பண்ணேன். படத்துல வர்ற, அதுவும் நான் சம்பந்தப்பட்ட கேரக்டர்களை அப்படி கிண்டல் பண்ணியிருப்பேன். அந்த காட்சிக்கு அது தேவையா இருந்தாதான் செய்யறோம். இதுல தப்பு என்னன்னு தெரியலையே," என்றார்.

அடுத்து வந்த கேள்வியை ஒரு பெண் நிருபர் கேட்டார். சந்தானமே எதிர்ப்பார்க்காத கேள்வி அது...

கழுவிக் கழுவி ஊத்தறது, அப்பா டக்கர்னு படத்துல நீங்க பயன்படுத்தற சில பஞ்ச் லைனை எங்கிருந்து புடிக்கிறீங்க? என்று அவர் கேட்க, கழுவி கழுவி ஊத்தறதுன்னா என்னன்னு நீண்ட விளக்கத்தைத் தந்தார் சந்தானம்!
 

பாமக எதிர்ப்பு எதிரொலி: விஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்

Smoking Scenes Thuppakki Be Removed   
சென்னை: பாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.

துப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.

நடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.

முகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.

"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

ஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், "விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்," என்றார்.
 

பாங்காக்கிலிருந்து வந்த நயனதாராவிடம் சென்னை சுங்க அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை

Customs Officials Grill Nayanathara

பாங்காக் போய் விட்டு வந்த நடிகை நயனதாராவை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் நிறுத்தி வைத்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

நயனதாரா இடையில் ஏற்பட்ட 2 காதல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட சிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். தெலுங்கில் பிசியாக நடிக்க ஆரம்பித்துள்ள அவர் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் அவரும் அவரது மேனேஜர் ராஜேஷ் மற்றும் மேக்கப் மேனுடன் பாங்காக் போயிருந்தார்.அங்கு போன வேலையை முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் நயனதாராவை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். மேலும் ராஜேஷை தனியாக கூட்டிச் சென்று இன்னொரு அறையில் வைத்து விசாரித்தனர். அவர்களின் சூட்கேஸ்களையும் முழுவதுமாக சோதனையிட்டனர். முக்கால் மணி நேரம் நயனதாராவிடம் விசாரணை நடந்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கால் மணி நேர விசாரணைக்குப் பின்னர் வியர்க்க விறுவிறுக்க நயனதாரா வெளியே வந்தார். அவரது மேனேஜரையும் அதிகாரிகள் விடுவித்து விட்டனர்.

நயனதாராவின் பாங்காக் பயணம் குறித்துத்தான் விசாரணை நடந்துள்ளதாக தெரிகிறது. அவர் குறித்து யாரேனும் சுங்கத்துறையினருக்கு வேண்டும் என்றே தகவல் கொடுத்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் பிரபுதேவாவை காதலித்த காலத்தில் தனது கையில் பிரபுதேவா என்று பச்சை குத்தி வைத்திருந்தார் நயனதாரா. தற்போது அதை அழிக்க முடியாமல் கடுமையாக சிரமப்படுகிறார். இதற்காகவே அவர் பாங்காக் போயிருந்ததாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

மொத்தத்தில் நயனதாராவுக்கு இந்த நாள் நிச்சயம் நல்ல நாளாக அமையாமல் கசப்பான நாளாக மாறி விட்டது உண்மை.