பிரபுதேவா தாளத்திற்கு ஆடப்போகும் கங்னம் ஸ்டைல் புகழ் பிஎஸ்ஒய்?

Gangnam Style Hitmaker Psy Dance Prabhudeva Tune

டெல்லி: கங்னம் ஸ்டைல் பாடல் மூலம் உலகப் புகழ்பெற்ற தென்கொரிய கலைஞர் பிஎஸ்ஒய் பிரபுதேவாவின் தாளத்திற்கு ஆடவிருக்கிறார்.

பிரபுதேவா நடித்த 3டி டான்ஸ் படம் ஏபிசிடி. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழிலும் ரிலீஸானது. டான்ஸை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபுதேவாவின் டான்ஸ் திறமை பாராட்டப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க தென் கொரிய சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று யுடிவி மோஷன் பிக்சர்ஸுடன் பேசி வருகிறது.

கொரிய மொழியில் பிரபுதேவாவின் கதாபாத்திரத்தில் கங்னம் ஸ்டைல் புகழ் பிஎஸ்ஒய் நடிப்பாராம்.

இது குறித்து யுடிவி தலைவர் சித்தார்த் ராய் கபூர் கூறுகையில்,

ஏபிசிடியின் உரிமையை வாங்க தென்கொரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இப்போதைக்கு இது குறித்து எதுவும் கூற முடியாது. இப்படத்தின் உரிமையைக் கேட்டு பலர் எங்களை அணுகுகின்றனர். படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி என்றார்.


 

ஹைதராபாத் குண்டுவெடிப்பில் எனக்கொன்றும் ஆகல, பத்திரமா இருக்கேன்: சிம்பு

Simbu Is Safe Hyderabad

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தபோது அங்கிருந்த நடிகர் சிலம்பரசன் தான் பத்திரமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நடந்ததில் 16 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்த போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம்சிட்டியில் வாலு பட ஷூட்டிங்கில் இருந்தார் சிம்பு.

குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

இந்த குண்டுவெடிப்பு ஒரு சாபம். நாம் இந்தியர்கள் அச்சமற்றவர்கள். எத்தனை எதிரிகள் சவால் விட்டாலும் நாம் தான் எப்பொழுதும் வெற்றி பெறுவோம். ஜெய்ஹிந்த் என்று தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் தான் பத்திரமாக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

விஸ்வரூபத்தை தூக்கிய அமீரின் ஆதிபகவன்... 500 அரங்குகளில் வெளியீடு!

Ameerin Aadhi Bhagavan Kicked Viswaroopam 2 Weeks

வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது.

குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது.

கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் படம் எடுக்கப்பட்டுவிட்டது. அவற்றில் பெருமளவு ஆதிபகவன் படமே வெளியாகியுள்ளது.

மதுரையில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 8 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. வெற்றி, அமிர்தம், பிக் சினிமாஸ், மதி, அபிராமி, தமிழ்ஜெயா, மணி இம்பாலா உள்ளிட்ட அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல், சிவகங்கை, காரைக்குடி, தேனி, பழனி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 26 அரங்குகளில் ஆதிபகவன் திரையிடப்பட்டுள்ளது.

கோவை நகரில் மட்டும் 11 அரங்குகளில் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட கோவைக்கு இணையாக திருப்பூரில் 9 அரங்குகளில் இந்தப் படத்தை திரையிட்டுள்ளனர்.

சேலம் ஏரியாவில்தான் அதிகபட்ச அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. சேலம் நகரில் மட்டும் 8 அரங்குகளிலும், மற்ற பகுதிகளில் 42 அரங்குகளிலும் ஆதிபகவன் வெளியாகிறது.

 

பாடகர் சிம்புவுக்கு சம்பளம் அஞ்சு லட்சமாம்!!

Simbu Fixes Rs 5 Lakh Per Song

சிம்பு முழுநேர பாடகராகவும் அவதாரம் எடுத்துள்ளதாக, அவரே பிரஸ் ரிலீஸெல்லாம் அனுப்பியுள்ளார்.

ஆம்.. நடிக்க வந்ததிலிருந்து பார்ட் டைமாக அல்லது நட்புக்காக பாடிக் கொண்டிருந்தார் சிம்பு.

‘போட்டு தாக்கு' , ‘லூசுப் பெண்ணே', ‘யம்மாடி ஆத்தாடி', ‘நலம்தானா', ‘வச்சிக்கவா உன்னை மட்டும்' போன்ற பல பாடல்கள் இவரது குரலில் ஹிட்டாகியுள்ளன.

இப்போது புதுமுக இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் பாட சிம்புவை அழைக்கிறார்களாம். பாட்டுக்கு பாட்டுமாச்சு, பப்ளிசிட்டியையும் சிம்புவே பாத்துப்பார் என்கிற கணக்கில் அவரை அழைக்கிறார்கள்.

இதைப் புரிந்து கொண்ட சிம்பு, சரி பாட வர்றேன்... சம்பளமா ஒரு பாட்டுக்கு ரூ 5 லட்சம் கொடுத்துடுங்க என சம்பளம் நிர்ணயித்திருக்கிறாராம்.

சில தயாரிப்பாளர்கள் அதற்கும் சரி என்று ஒப்புக் கொண்டுள்ளனர்.

'என்னை நான் முழு நேர பாடகனாக கருதவில்லை. செலவை சமாளிக்கவே பாடுகிறேன்,' என்று இதற்கு விளக்கமும் அளித்துள்ளார் சிம்பு.

 

இளையராஜா கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை - பாரதிராஜா

Bharathiraja Denies Comment On Ilayaraaja

இளையராஜா என்னை விமர்சித்ததற்கு பதில் கூற விரும்பவில்லை என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இளையராஜா - பாரதிராஜா இருவரும் தங்கள் திரை வாழ்க்கையை ஒன்றாகத் துவங்கியவர்கள். சினிமாவுக்கு வரும் முன்பே இளம் பிராயத்திலேயே நண்பர்களாக இருந்தவர்கள்.

இருவரும் இணைந்து படைத்த படங்கள் இசைக் காவியங்களாகத் திகழ்கின்றன. வணிக வெற்றிகளுக்கும், காலங்களுக்கும் அப்பால் நிற்கும் படங்கள் அவை.

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் இணைந்து படங்கள் செய்யாமல் போனாலும், மேடைகளில் நட்பு பாராட்டி வந்தனர்.

ஆனால் இருவருக்கும் இப்போது பெரும் உரசல் ஏற்பட்டுள்ளது. அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா, மிக உரிமையாய் இளையராஜாவி விமர்சனம் செய்தார்.

அது இளையராஜாவை மிகவும் காயப்படுத்திவிட்டது. இந்த வருத்தத்தை அவர் குமுதம் பத்திரிகையில் தான் எழுதும் கேள்வி பதில் பகுதியில் வார்த்தைகளில் வெடித்திருந்தார்.

என்னிடம் தனியாகச் சொல்ல வேண்டியதை மேடையில் சொல்லி அவமானப்படுத்திவிட்டார் பாரதிராஜா. அதை ஒரு பைத்தியக்காரனின் பேச்சாக எடுத்துக் கொள்கிறேன், என்றெல்லாம் எழுதியிருந்தார்.

தமிழ் சினிமா உலகில் இது பரபரப்பாக பேசப்படும் விஷயமாகிவிட்டது.

இந்த நிலையில், பாரதிராஜாவிடம் இளையராஜாவின் வருத்தம் மற்றும் கோபம் குறித்து கேட்டபோது, "இதற்கு என்னிடம் பதில் இல்லை. சொல்லவும் விரும்பவில்லை. நாங்கள் அரசியல் கட்சியா நடத்துகிறோம்... பதிலுக்கு பதில் அறிக்கைவிட... விடுங்கள்," என்றார்.

 

சாதிக்கலாம் வாங்க… மாணவர்களை வழி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி

Makkal Tv Saadhikkalam Vaanga Program

பள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக ‘சாதிக்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது.

மாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு பற்றிய பயத்தை போக்க மக்கள் தொலைக்காட்சி சாதிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம், மைண்ட் பிரஸ் கீர்த்தன்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியுடன், ஆனந்தம் அமைப்பு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

தேர்வு பயத்தை போக்கவும், தேர்வு எழுதும் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வினை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி இது ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

 

கொரிய திரைப்பட விழாவில் நீர்ப்பறவை!

Neerparavai Goes Korea

சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான நீர்ப்பறவை படம் கொரிய திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம், ‘நீர்ப்பறவை.' இந்த படத்தில் விஷ்ணு, சுனைனா, சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, நந்திதா தாஸ் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

மீனவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், திரைப்பட விழாக்களில் தவறாமல் இடம்பிடிக்கும் படமாக மாறியுள்ளது.

இந்த படம், தென்கொரிய நாட்டின் தலைநகர் சியோலில் நடக்கும் 14-வது சர்வதேச திரைப்பட விழாவில், போட்டிப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது.

ஏப்ரல் 25-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை நடக்கும் இந்த படவிழாவில், இயக்குநர் சீனுராமசாமி, தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தென்கொரிய நாட்டின் அழைப்பின் பேரில் சென்று கலந்து கொள்கிறார்கள்.

 

சங்கரா டிவியில் வணிக நிகழ்ச்சி கோல்டன் இன்வெஸ்ட்மென்ட்

Golden Investments On Sankara Tv

ஆன்மிக நிகழ்ச்சிகளை மட்டுமே ஒளிபரப்பிவந்த சங்கரா டிவி புதிதாக கோல்டன் இன்வெஸ்ட்மென்ட் எனப்படும் புதிய வணிக நிகழ்ச்சி ஒன்றை தொடங்கியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் தங்கம், வெள்ளி, கரன்சி, கமாடிட்டி மார்க்கெட்டிங் என அனைத்து விதமான தகவல்களையும் இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.30 மணி முதல் 10.30 மணிவரை நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள் இடம்பெறுகின்றன. பொதுமக்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கின்றனர். தொலைபேசி மூலம் நிபுணர்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

 

உலகத்திலேயே பாதுகாப்பான ஊர் சென்னைதான் - பிரபல இசையமைப்பாளர் பப்பிலஹிரி

Chennai Is The Safest Place On The Earth

சென்னை: உலகிலேயே மிகவும் இனிமையான ரசிகர்கள் தமிழர்கள்... மிகவும் பாதுகாப்பான ஊர் சென்னைதான், என்றார் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் பப்பிலஹிரி.

நமக்ஹலால், ஷராபி, டிஸ்கோ டான்ஸர் போன்ற பல சூப்பர்ஹிட் படங்களின் இசையமைப்பாளர் பப்பிலஹிரி. தாய்வீடு, பாடும் வானம்பாடி உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 40 ஆண்டு காலமாக இந்தித் திரையுலகில் முன்னணியில் உள்ள பப்பிலஹிரி, முதல் முறையாக கருப்பம்பட்டி என்ற தமிழ்ப் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அஜ்மல் - அபர்ணா பாஜ்பாய் நடிக்க, பிரபுராஜசோழன் இயக்கத்தில் சுந்தர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டுவிழா நேற்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பப்பிலஹிரி பேசுகையில், "சென்னை எனக்கு எப்போதுமே ரொம்பப் பிடித்த ஊர்... ரொம்ப அதிர்ஷ்டமான ஊர். என்னுடைய சூப்பர் ஹிட் பாடல்களில் பெரும்பாலானவை சென்னையிலோ அல்லது பக்கத்திலிருக்கும் மாமல்லபுரத்திலோதான் மெட்டமைக்கப்பட்டன. ஷராபி, நமக்ஹலால், மிதுன் சக்ரவர்த்தியின் பெரும்பாலான படங்களுக்கு இங்குதான் இசையமைத்திருக்கிறேன்.

சென்னை மாதிரி பாதுகாப்பான ஊரை உலகில் எங்கும் பார்க்க முடியாது. நான் இவ்வளவு தங்கத்தை அணிந்திருக்கிறேன். எங்குபோனாலும் மூன்று பாடிகார்டுகளுடன்தான் போவேன். ஆனால் சென்னையில் எனக்கு எந்த பாடிகார்டும் தேவைப்படவில்லை.

எனது திரையுலக வாழ்க்கையில் இது 40வது ஆண்டு. இந்த சிறப்பான ஆண்டைக் கொண்டாடும் விதத்தில் நான் தமிழ்ப் பாடல் பாடியிருக்கிறேன். அதுவே எனக்கு பெருமையாக உள்ளது," என்றார்.

பின்னர் தான் பாடிய தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார் பப்பிலஹிரி.

 

சிரஞ்சீவி தம்பி மகனுக்கு ஜோடியாக கமலின் இளைய மகள்?

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் நடிக்கும் முதல் படத்தில் அவருக்கு கமலின் இளைய மகள் அக்ஷராவை ஜோடியாக்க முயற்சி செய்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தயாரிப்பாளருமான நாகபாபுவின் மகன் வருண் தேஜ். சீத்தம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு பட இயக்குனர் ஸ்ரீகாந்த் அட்டலா  தான் இயக்கும் கொல்லபாமா படத்தில் வருண் தேஜை ஹீரோவாக்கியுள்ளார். இந்த படத்தில் வருணுக்கு ஜோடியாக கமல் ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

tollywood trying make akshara hassan an actress

அக்ஷராவை நடிக்க வைக்க முயன்று மணிரத்னம் தோற்றுப்போனார் என்று கோலிவுட்டெல்லாம் பேச்சாக கிடந்தது. இந்நிலையில் வருணுடன் நடிக்க அவர் ஒப்புக்கொள்வாரா என்று தெரியவில்லை. அக்ஷரா தனது அக்கா ஸ்ருதியைப் போன்று கேமராவுக்கு முன்பு இருக்காமல் கேமராவுக்கு பின்னே இருக்க விரும்புகிறார். இந்நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

 

அங்காடித் தெரு நாயகன் மகேஷ் நடிக்கும் யாசகன்!!

Angadi Theru Mahesh Yasagan   

அங்காடித் தெரு படத்தில் அருமையாக நடித்திருந்தும் அடுத்து நல்ல வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மகேஷ், இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். பெயர் யாசகன்.

அகரம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக கே.கே.சந்தோஷ்பாண்டியன் தயாரிக்கும் இப்படத்தை அமீர் மற்றும் சசிகுமாரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய துரைவாணன் இயக்குகிறார்.

கேரளாவைச் சேர்ந்த நிரஞ்சனா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி, மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை இணைத்து உருவாக்கப்பட்டு வரும், இந்த படத்திற்கு முன்பு ‘சித்தன்' என பெயிரிட்டிருந்தனர். தற்போது ‘யாசகன்' என மாற்றியுள்ளனர்.

இப்படம் குறித்து இயக்குனர் துரைவாணன் கூறுகையில், "இந்த வருடத்தின் மிகச்சிறந்த காதல் படமாக இது அமையும் என நம்புகிறேன்," என்றார்.

‘கனிமொழி', ‘லீலை' ஆகிய படங்களுக்கு இசையமைத்த சதீஷ் சக்கரவர்த்தி இசையமைக்கிறார். கே.வி.ஆனந்தின் உதவியாளர் பாபு ஒளிப்பதிவு செய்கிறார்.

 

'அது' வேணாமாம், ஆனால் 'அது' மட்டும் வேணுமாம்.. இதுசல்மான் ரகளை!

Salman Khan Doesn T Want Marry But Wishes To Have Kids

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான் கான் திருமணம் செய்யாமல் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு 47 வயதாகிறது. ஆனால் அவர் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ளார். அவர் வாழ்வில் பல பெண்கள் வந்து போகிறார்களே தவிர யாரும் நிலைத்து நின்றபாடில்லை. இந்நிலையில் கூகுள் பிளஸ்ஸில் ரசிகர்களுடன் வீடியோ சேட் செய்தார் சல்மான். அப்போது ரசிகர்கள் அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்டனர். அவரும் பதில் அளித்தார்.

அப்போது ஒரு ரசிகர் திருமணப் பேச்சை எடுத்துள்ளார். அதற்கு சல்மான் கான் கூறிய பதில் வருமாறு,

திருமணமா, எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் இஷ்டம். எனக்கு குழந்தைகள் வேண்டும். திருமணமாகாமல் குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள ஒரு வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறேன் என்றார்.

சல்மானின் இந்த பதில் பலரையும் அதிர்ச்சி அடை வைத்துள்ளது.

 

டோலிவுட்டை பரபரக்க வைத்த அல்லு அர்ஜூன் - அமலா லிப் லாக்!

Amala Paul S Liplock With Allu Arjun

டோலிவுட்டில் இப்போதாய பரபரப்பு அல்லு அர்ஜுடன் அமலா பால் நடத்திய லிப் லாக்-தான்.

பூரி ஜெகன்னாத் இயக்கும் புதிய படமான 'இத்தரம்மாயிலதோ' படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அமலா பால்.

இதில ஒரு படு ஹாட்டான ரொமான்ஸ் காட்சியில் இருவரும் உதட்டோடு உதடு நீண்ட முத்தம் கொடுப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றுள்ளதாம்.

இந்தக் காட்சியை இங்கு வைத்து படமாக்கினால் பரபரப்பு எகிறிவிடும் என்பதால், ஸ்பெயினில் வைத்து ஷூட் செய்தார்களாம்.

இந்தக் காட்சியில் கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் செட்டில் நீண்ட நேரம் 'பேசி' தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டார்களாம்.

அமலா பாலுக்கு முத்தக் காட்சியில் நடிப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே ஆர்யாவுக்கு தன் உதடுகளைக் கொடுத்த அனுபவம் உண்டு.

அல்லு அர்ஜுனுடனான இந்த முத்தக் காட்சி ஸ்கிரீன் பற்றிக் கொள்ளும் என்று பரபரக்கிறது தெலுங்கு பத்திரிகையுலகம்!!