இயக்குனராகும் ரோகிணி: நெல்லை, தூத்துக்குடியில் நடிகர், நடிகைகள் தேர்வு


பம்பரம் படம் மூலம் இயக்குனராகும் நடிகை ரோகிணி நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் நடிகர், நடிகைகள் தேர்வு நடத்தினார்.

மகளிர் மட்டும், விருமாண்டி போன்ற பல்வேறு படங்களில் நடித்தவர் ரோகிணி. மறைந்த நடிகர் ரகுவரனின் முன்னாள் மனைவி. இவர் பம்பரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார்.

இந்த படத்திற்கான நடிகை, நடிகர்கள், இசை கலைஞர்கள் தேர்வு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்தது. செய்துங்கநல்லூர் மகாலெட்சுமி மகாலில் நடந்த தேர்வில் ஏராளமான கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து இயக்குனர் ரோகிணி கூறியதாவது,

பம்பரம் படத்திற்கான நடிகர்கள், நடிகைகள், இசை கலைஞர்கள் தேர்வு நெல்லை, தூத்துக்குடியில் நடத்தினேன். ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். தகுதி, திறமை அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றார்.
 

சிம்பு கூட நடிக்க மாட்டேன்: தெலுங்கு நடிகர் ராணா


'வடசென்னை' படத்தில் சிம்புவுடன் நடிக்க தெலுங்கு நடிகர் ராணா மறுப்பு தெரிவித்துவிட்டார்.

இயக்குனர் வெற்றிமாறன் சிம்புவை வைத்து 'வடசென்னை' என்ற புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்க வைக்க வெற்றிமாறன் விரும்பினார். இதற்காக ராணாவை அழைத்து கதையை கூறியுள்ளார்.

கதையை கேட்டுவிட்டு, தனுஷை வைத்து 'பொல்லாதவன்' 'ஆடுகளம்' ஆகிய வெற்றி படங்களை கொடுத்துள்ள உங்கள் புதிய படத்தில் கட்டாயம் நடிக்கிறேன் என்று உறுதியளித்தார் ராணா. அதன்பின் படத்தின் ஹீரோ யார்? என்று கேட்டார்.

அதற்கு வெற்றிமாறன் ஹீரோவாக சிம்பு நடிக்கிறார் என்று கூறினார். சிம்பு என்று கூறியவுடன் சாரி சர், என்னால் நடிக்க முடியாது என்று நழுவிவிட்டார்.
 

'ஒஸ்தி பிரியாணி' விருந்து!


வாயைக் கட்டி, உடம்பை ஏத்தி படாதபாடுபட்டு ஒஸ்தி படத்தில் நடித்ததற்காக, சிம்புவுக்கு பிரியாணி விருந்து அளித்துள்ளார் இயக்குநர் தரணி.

ஒஸ்தி படத்துக்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சிகள் செய்து உடலை மிடுக்கான தோற்றத்துக்கு கொண்டு வந்தாராம். உணவில் செம கட்டுப்பாடாம். ஒரே ஷெட்டியூலில் படத்தினை முடித்து க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் படமாக்கி முடித்தனர்.

நேற்று இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்தது. பூசணிக்காய் உடைத்து படப்பிடிப்பை முடித்தார்களாம் படக்குழுவினர்.

சிம்புவுக்கு பிரியாணி என்றால் அப்படி ஒரு பிரியமாம். ஆனால் இந்தப் படத்துக்காக கடந்த 2 மாதங்களாக பிரியாணி சாப்பிடவில்லையாம். அவரது பிரியாணி விருப்பத்தைப் புரிந்து கொண்டு, படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குனர் தரணி பிரியாணி விருந்து படைத்திருக்கிறார்.

இது குறித்து சிம்பு "கடந்த இரண்டு மாதங்களாக இப்படத்திற்காக பிரியாணி சாப்பிட முடியவில்லை. ஆகையால் தரணி எனக்கு மொத்த படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுத்தார்," என்றார்.

பிரியாணி, சிக்ஸ் பேக்கெல்லாம் சரி... ரிலீசானதும் படம் பெட்டிக்கு 'பேக்கப்' ஆக இருக்கணும்!
 

பாரதிராஜா படத்திலிருந்து பார்த்திபன் விலகல்!


பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்திலிருந்து விலகுவதாக நடிகர் பார்த்திபன் அறிவித்துள்ளார்.

பாரதிராஜா எடுக்கவிருக்கும் புதிய படம் அன்னக்கொடியும் கொடிவீரனும். இந்தப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருந்தார் பார்த்திபன்.

இதற்காக முறுக்கு மீசை, கட்டான உடல் என தயாராகி வந்தார் பார்த்திபன்.

இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விரைவில் தொடங்கவிருக்கிறது. படபூஜையும் கூடமதுரையிலேயே நடக்கிறது.

இந்த நிலையில், அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்காமல் விலகிக் கொண்டதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அப்படத்தில் நான் பங்கேற்கவில்லை! காரணங்கள் சொல்லலாமே தவிர, சொல்வதெல்லாம் காரணமாகி விடாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.
 

சினேகாவின் 'காதலில் விழுந்தது' எப்படி? - பிரசன்னா


ஸ்னேகா பழக இனிமையானவர். அவரது எளிமையும் யதார்த்தமும் அவரை என் மனைவியாக்கிக் கொள்ளத் தூண்டியது. அதனால்தான் காதலித்தேன், என நடிகர் பிரசன்னா கூறினார்.

ஸ்னேகாவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்பது குறித்து பிரசன்னா அளித்த பேட்டி:

அச்சமுண்டு அச்சமுண்டு படம பண்ண போது ஸ்னேகாவுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் தொழில் ரீதியான நட்புதான் இருந்தது. நாளடைவில் ஸ்னேகா நடவடிக்கையில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை. ஆனாலும் அந்த தலைக்கனம் கொஞ்சமும் இல்லை. பந்தா இல்லாமல் பழகுவார். எளிமையாக நடந்து கொள்வார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.

ஸ்னேகா என் மனைவியாக வாழ்க்கை முழுக்க என்னுடன் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மூன்றரை வருடம் எங்களுக்குள் காதல் இருந்தது. ஆனாலும், அவசரப்படாமல் ஒருவரையொருவர் முழுமையாக புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். விவாதித்தோம். அதன் பிறகு திருமணம் செய்து கொள்வதென முடிவு எடுத்தோம்.

காதலின் அடையாளமாக முதலில் ஸ்னேகாவுக்கு புடவை வாங்கி கொடுத்தேன். அது அவருக்கு ரொம்ப பிடித்தது. எனக்கு ஸ்னேகா விலை உயர்ந்த கைக்கடிகாரம் வாங்கி கொடுத்தார்.

நாங்கள் ரொம்ப நெருக்கமான பிறகு ஸ்னேகாவுக்கு அவரது பிறந்த நாளில் 'ஐ பேட்' வாங்கி கொடுத்தேன். இரு குடும்பத்தாரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெறும்," என்றார்.

நடிகை ஸ்னேகா இன்னமும் இந்த திருமணம் குறித்து பேசவில்லை. ஸ்னேகா அனுமதியுடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பிரசன்னா தெரிவித்தார்.

விரைவில் இருவரும் கூட்டாக பிரஸ் மீட் வைக்கப் போகிறார்களாம்.
 

சச்சின் படத்துடன் 'முழு நிர்வாணத்தில்' பூனம் பாண்டே!


மும்பை: சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்க்கையில் யாருமே தராத அதிர்ச்சியை ஒருவர் தந்துள்ளார். அவர் நிர்வாணமாக தோன்றப் போவதாக அவ்வப்போது பயமுறுத்தி வந்த பூனம் பாண்டே!

காரணம் வேறொன்றுமில்லை... இத்தனை நாள் அரை, முக்கால் நிர்வாணம் காட்டி வந்த பூனம், இப்போது முழு நிர்வாணமானகிவிட்டதுதான்!

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு மாடல் பூனம் பாண்டே என்றால் யார் என்று தான் அனைவரும் கேட்டார்கள். ஆனால் இந்திய அணி கோப்பையை வென்றால் வீரர்களுக்கு முன்பு நிர்வாணமாக நிற்பதாக அறிவித்ததையடுத்து பிரபலமானார்.

தற்போது பூனம் பாண்டே கையில் ஒரு விஷ்ணு படத்துடன் நிர்வாண போய் கொடுத்துள்ளார். அதை ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நமஸ்கரிக்கிறார். அந்த விஷ்ணு படத்தை உற்றுப் பார்த்தால் முகம் சச்சினுடைது. விஷ்ணு கையில் பேட், தலையில் ஹெல்மெட், கையில் உலகக் கோப்பையை வைத்திருக்கிறார். இது மார்பிங் செய்யப்பட்ட புகைப்படம் என்று தெளிவாகத் தெரிந்தாலும் இணையத்தில் சக்கைப் போடு போடுகிறது.

மேலும் மகா விஷ்ணுவின் படத்துடன் பூணம் நிர்வாணமாக நிற்பது போன்ற இந்த மாரிபிங் படத்தின் மூலம், சுவாமியின் படத்தையும் அவமரியாதை செய்துள்ளனர்.

இந்த புகைப்படத்தைப் பார்த்துதான் சச்சின் டெண்டுல்கர் அதிர்ந்து போனார். என்னை வைத்து என்ன கூத்தெல்லாம் அடிக்கிறார்களே என்று நொந்துவிட்டார்.

படத்தைப் பார்த்த பூனம் டுவிட்டரில், "எனது ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் இது போன்று மார்பிங் புகைப்படத்தைப் பார்த்து வருத்தப்படுகிறேன். ஏனென்றால் எனக்கு கிரிக்கெட் ஒரு மதம் மாதிரி,' என்று எழுதியுள்ளார்.

அப்போது கூட தன்னை நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டதற்காக அவர் வருந்தவில்லை, கிரிகெட்டுக்காகத்தான் வருத்தப்படுகிறாராம்!
 

ஐஸ்வர்யாவுக்கு என்ன குழந்தை? 150 கோடிக்கு சூதாட்டம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில் (நாளை) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும்  சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் தொடர்பு கொண்டு, 'ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும்Õ என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர்.  'ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம்Õ என்று மும்பை போலீசார் கூறி உள்ளனர்.


 

கமல் உழைப்பு : நடிகை பூரிப்பு!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கமல் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்' படத்தில் நியூயார்க் நடிகை பூஜா குமார் நடிக்கிறார். அவர் கூறியது: நியூயார்க்கில் நான் வளர்ந்திருந்தாலும் ஒவ்வொரு கோடை காலத்திற்கும் இந்தியா வருவேன். இந்தியா மீது எனக்கு மிகுந்த நேசம் உண்டு. கமல் ஆபீசிலிருந்து என்னை தொடர்பு கொண்டார்கள். ஹாலிவுட் ஸ்டார் டாம் குரூஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் இருந்தது. 'எதற்காக என்னை தேர்வு செய்தீர்கள்Õ என்பது உள்பட தனிப்பட்ட முறையிலும் எந்த கேள்வியும் நான் கமலிடம் கேட்கவில்லை. அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது என்னுடைய அதிர்ஷ்டம்தான். ஏற்றுக்கொண்ட வேலையை முடிக்க ஒரு நாளைக்கு 15 முதல் 20 மணிநேரம் வரை கமல் உழைக்கிறார்.


 

ஐஸ்வர்யாவுக்கு என்ன குழந்தை? 150 கோடிக்கு சூதாட்டம்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு என்ன குழந்தை பிறக்கும் என்பது தொடர்பாக ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடக்கிறது. இதில் மும்பை தாதாக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மீதுதான் இதுவரை கோடிக்கணக்கில் சூதாட்டம் நடந்தது. இம்முறை சற்று வித்தியாசமாக சூதாட்டம் நடக்கிறது. கிரிக்கெட் வீரர்களுக்கு பதிலாக இதில் சிக்கி இருப்பவர் ஐஸ்வர்யா ராய். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு 11.11.11 தேதியில் (நாளை) தான் குழந்தை பிறக்கும் என்று பலர் கூறி உள்ளனர். ஆனால் சிலர் இதில் மாறுபடுகின்றனர்.

குழந்தைகள் தினமான நவம்பர் 14ம் தேதிதான் குழந்தை பிறக்கும் என்று கூறி வருகின்றனர். எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்பதை வைத்து மும்பை தாதாக்கள் சூதாட்டம் நடத்துகின்றனர். இதுதவிர ஐஸ்வர்யாவுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? என்ற பந்தயமும்  சூடுபிடித்துள்ளது. இதை மையமாக வைத்து ரூ.150 கோடிக்கு உலகம் முழுவதும் சூதாட்டம் நடக்கிறதாம். மும்பை தாதாக்கள்தான் இதில் அதிகம் ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒரு சிலர் ஐஸ்வர்யாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டரிடம் தொடர்பு கொண்டு, 'ஐஸ்வர்யாவுக்கு எப்போது, என்ன குழந்தை பிறக்கும்Õ என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களிடம் பேசுவதை டாக்டர்கள் தவிர்த்து வருகின்றனர்.  'ஐஸ்வர்யாவை மையமாக வைத்து கோடிக்கணக்கில் சூதாட்டம் நடப்பது பற்றி தகவல் வந்துள்ளது. இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை கண்காணித்து வருகிறோம்Õ என்று மும்பை போலீசார் கூறி உள்ளனர்.


 

வீரப்பன் படத்தில் 'முதல்வர் ஜெயலலிதாவாக' ஜெயசித்ரா!


சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய படத்தில் முதல்வர் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார் ஜெயசித்ரா.

வீரப்பன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து வனயுத்தம் என்ற பெயரில் தமிழ் - கன்னடத்தில் புதிய படம் தயாராகி வருகிறது.

குப்பி, காவலர் குடியிருப்பு படங்களை இயக்கிய ஏ எம் ஆர் ரமேஷ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடரில் பணியாற்றிய குழுவினர் ரமேஷுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பன் வேடத்தில் நடிகர் கிஷோரும், அவரது மனைவி முத்துலட்சுமியாக விஜயலட்சுமியும் நடிக்கின்றனர்.

அதிரடிப்படை தலைவர் டிஜிபி விஜயகுமார் வேடத்தில் அர்ஜூன் நடிக்கிறார். வீரப்பனின் தந்தையாக யோகி தேவராஜும், அதிரடிப்படை போலீஸ் செந்தாமரைக் கண்ணனாக ரவி காலேவும் நடிக்கிறார்கள்.

வீரப்பன் கொல்லப்பட்ட காலத்தில் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவரது வேடத்தில் நடிப்பவர் பழைய நடிகை ஜெயசித்ரா. உருவம், நிறம் சில ஒற்றுமை இருவருக்கும் உள்ளதால், ஜெயசித்ராவை இந்த வேடத்துக்கு தேர்வு செய்தார்களாம்.

வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாராக நடிகர் விவேக் ஓபராயின் தந்தை சுரேஷ் ஓபராய் நடிக்கிறாராம்.

காடுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் மிகப்பெரிய விருந்தாக ரசிகர்களுக்கு இந்தப் படம் அமையும் என்கிறார் இயக்குநர் ரமேஷ்.
 

வசூலில் 'நம்பர் ஒன்'னை இழந்தது ரா ஒன்!!


ரிலீசான முதல் வாரம் வசூலில் நம்பர் ஒன் படமாகத் திகழ்ந்த ஷாரூக்கானின் ரா ஒன், அடுத்தடுத்த நாட்களில் வசூலில் பின்தங்கிவிட்டது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்திப் படம் ஷாரூக்கானின் ரா ஒன். அசாதாரண பப்ளிசிட்டி மூலம் பெரிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பினர் இந்தப் படத்துக்கு.

தீபாவளியன்று இந்தப் படம் உலகம் எங்கும் பிரமாண்டமாக வெளியானது. துவக்கநாளில் மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், இரண்டாம் நாளே ரூ 30 கோடிக்கும் அதிகமாக ஈட்டியது. 9 நாட்களில் ரூ 200 கோடியைத் தாண்டிவிட்டது ரா ஒன்.

ஆனால், இந்தவாரம் படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியானால் இந்தப் படம் வெற்றியா தோல்வியா?

"வெற்றியுமில்லை, தோல்வியுமில்லை. தயாரிப்பாளர் இப்போதைக்கு தப்பித்துவிட்டார். தனது முதலீட்டின் மீது 30 சதவீதம் வரை லாபம் பார்த்துள்ளார். இன்னும் ஓரிரு வாரங்கள் நல்ல வசூலுடன் ஓடியிருந்தால் இந்தப் படம் ஹிட் லிஸ்டில் சேர்ந்திருக்கும். ஆனால் இந்த வாரம் மொத்தமே ரூ 14 கோடி வசூலித்துள்ளது. பல தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டு வருகிறது," என்கிறார் பிரபல சினிமா வர்த்தக பார்வையாளர் கோமல் நாதா.

பிரபல விமர்சகர் தரண் ஆதர்ஷ் கூறுகையில், "நிச்சயம் ரா ஒன் வெற்றிப் படமே. ஆனால் எதிர்ப்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றிப்படமல்ல. இருந்தாலும் நிகரலாபமாக ரூ 125 கோடியை நெருங்கிவிட்டது," என்றார்.
 

ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்: மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு


 

ஐஸ்வர்யா ராய்க்கு பிரசவம்: மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு


நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நாளை அதாவது 11-11-11ல் பிரசவம் நடக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு நவம்பர் 2வது வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். நாளை 11-11-11 என்னும் அரிய தேதி வருவதால் அன்றே பிரசவம் நடக்கவிருக்கிறது. இதற்காக ஐஸ்வர்யா ராயை மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருக்கு துணையாக கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப் மற்றும் மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் தங்கியுள்ளனர்.

பச்சன் குடும்பத்தினருக்காக மருத்துவமனையின் 5வது மாடியில் ஸ்பெஷல் அறை கொடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கியமான குடும்பம் தங்கியிருப்பதை அடுத்து மருத்துவமனையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மருத்துவமனை பாதுகாவர்கள் வழக்கமாக 6 மணி நேரம் பணியாற்றுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா ராய் பிரசவத்தை முன்னிட்டு அவர்களை 12 மணி நேரம் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர தனியார் பாதுகாப்பு நிறுவன பாதுகாவலர்களும், போலீசாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் தங்கியிருக்கும் அறைக்குள் பார்வையாளர்கள் யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்று மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 

சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம்! - மம்முட்டி


மலையாள திரையுலக சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம் என்று மம்முட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய அளவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே. ஆனாலும் அந்தந்த மொழி திரைப்பட உலகில் முன்னணியில் உள்ள நடிகர்களை சூப்பர் ஸ்டார் என சில பத்திரிகைகள் விளிக்கின்றன.

மலையாளத்தில் மம்முட்டி - மோகன் லால் இருவரையும் அதுபோல குறிப்பிடுகின்றன பத்திரிகைகள். அதே நேரம், இந்த இருவரும்தான் மலையாளத் திரையுலகம் வளராமல் பரிதாப நிலையில் இருக்கக் காரணம் என்றும், இளைஞர்களுக்கு வாய்ப்பு தர இருவரும் மறுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

திலகன், வினயன் போன்றோர் இந்த இரு பெரிய நடிகர்களுக்கும் எதிராக நீண்ட நாட்களாக போராட்டமே நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் மம்முட்டிதான் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் என ஒரு காமெடி நடிகர் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மம்முட்டி, "நான் உண்மையில் சூப்பர் ஸ்டாரே கிடையாது. சூப்பர் ஸ்டார்களால்தான் மலையாளத் திரையுலகம் உருப்படவில்லை என்று சிலர் கூறிவரும் நிலையில், என்னை சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்வதை விரும்பவில்லை," என்று கூறியுள்ளார்.
 

'கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' - சென்னை நீதிமன்றம் தடை


சென்னை: வாங்கிய கடனை திருப்பித் தராததால், கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம் படத்தை வெளியிட சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை வடபழனியைச் சேர்ந்த அய்யாத்துரை என்பவர், சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் கோபம்' என்ற படத்தை சம்பூர்ணம் இயக்குகிறார். அந்தப் படத்தில் அவரது மகள் புவனேஸ்வரி நடிக்கிறார். இந்த நிலையில், அந்த படத்துக்காக என்னிடம் 8.1.10 அன்று அவர்கள் ரூ.7.20 லட்சம் கடன் வாங்கினார்கள்.

எங்களுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, படத்தை வெளியிடுவதற்கு முன்பு கடனை அவர்கள் திருப்பித் தந்திருக்க வேண்டும். ஆனால் ஒப்பந்தப்படி அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த சினிமாப் படத்தை 11-ந் தேதி (நாளை) வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த 30.10.11 அன்று பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது. எனக்கு கடனை திருப்பித்தராமல் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்தால் பாதிக்கப்படுவேன். எனவே படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை 17-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி சரவணன் விசாரித்தார். அந்த படத்தை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். எனவே இந்தப் படம் இந்த வாரம் வெளியாகவில்லை.