ஆட்டோகிராப் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஜெயா தொலைக்காட்சியில் மீண்டும் புதிய அவதாரம் எடுத்துள்ளார் சுகாசினி மணிரத்னம். வழக்கம்போல பேட்டியாக மட்டும் இல்லாமல் பேட்டி காணப்படுபவரின் இளமை காலங்களை அவர்களின் நண்பர்களின் மூலம் கேட்டு தெரிந்து கொள்வது நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரஸ்யம்.
செவ்வாய்கிழமை இரவு நடிகர் கஞ்சா கருப்புடன் உரையாடினார் சுகாசினி. நகைச்சுவை நடிகர் என்று மட்டுமே அறியப்பட்டிருந்த கருப்பு சிறந்த மனிதாபிமானி என்று தெரிந்து கொள்ள முடிந்தது. அவரது உதவும் குணம் பற்றி அவருடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்கள் தெரிவித்தனர்.
கிராமத்தில் இருந்து வந்த தன்னை தமிழ்நாட்டுக்கே அடையாளம் காட்டிய இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரின் பெயரை தான் கட்டிய வீட்டிற்கு சூட்டியுள்ளதாக பேட்டியின் போது தெரிவித்தார் ஏற்றிவிட்ட ஏணிப்படியை எட்டி உதைக்கும் இந்த காலத்தில் அவரது செயல் வியப்பை ஏற்படுத்தியது.
சுஹாசினியிடம் பேசும்போது இன்னும் நான் ஊர்லதாங்க்கா இருக்கேன். உடம்பு மட்டும்தான் சென்னையில இருக்கு என்று தனது ஊர்ப்பாசத்தை கஞ்சா கருப்பு வெளிப்படுத்தியபோது சென்னையில் வசித்து வரும் வெளியூர்க்காரர்களின் உணர்வுகளைத் தொடுவதாக இருந்தது.
எளிமையும், பழையதை மறக்காத இந்த குணமும் கஞ்சா கருப்புவை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றால் மிகையாகாது.